ஃபேஸ்புக்கில் Rs 8,50,000 பரிசு பெற்ற தமிழர் அருள்

IFமிழகத்தை சேர்ந்த “அருள் குமார்” என்பவர் ஃபேஸ்புக்கில் உள்ள தொழில்நுட்ப குறைபாடை கண்டுபிடித்ததற்காக அமெரிக்க டாலர் 12,500 பரிசு பெற்று இருக்கிறார்.

நமது ஊர் பணத்தில் Rs 8,50,000 [ 12500 x 68] வருகிறது, இவர் வாங்கிய தேதிக்கு. எலக்ட்ரானிக்ஸ் & கம்யுனிகேசன் ல் உள்ள இவருக்கு [Ethical] ஹேக்கிங்கில் அதிகம் நாட்டம் உண்டு. இவருக்கு வயது 21.

கூகுள் போலவே ஃபேஸ்புக்கும் தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டு கூறினால், அதற்கு வெகுமதி அளிக்கிறது. கூகுள் அவ்வப்போது இதற்காகவே போட்டி நடத்தும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு இது போல வெகுமதிகள் வழங்கப்படும்.

ஃபேஸ்புக்கில் Whitehat என்ற இடத்தில் உங்கள் [Bug] கண்டுபிடிப்புகளைக் கூறலாம். நமக்கு குறைந்த பட்சம் $500 கொடுப்பார்கள், அதிகபட்சம் நிர்ணயிக்கவில்லை.

ஹேக்கிங் என்பது இரண்டு வகையாக உண்டு. ஒன்று மற்றவர்களை சிரமப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரது கணக்கை ஆட்டையை போட்டு அவர்களுக்கு வேட்டு வைப்பது, மிரட்டி பணம் கேட்பது, ரகசிய தகவல்களை எடுத்து மிரட்டுவது அல்லது அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து ரசிப்பது.

இரண்டாவது, இதையே அதிகாரப்பூர்வ வேலையாக செய்வார்கள் அதாவது ஒரு நிறுவனத்தின் நெட்வொர்க்கில் எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது என்பதை கண்டறிவதற்காகவே ஹேக்கிங்கில் திறமையாக உள்ள நபர்களை அமர்த்துவார்கள்.

இவர்களது வேலை பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை அடைப்பது தான். இதற்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. எனவே இது குறித்து ஆர்வமாக படிப்பவர்கள் தற்போது அதிகமாகி வருகிறார்கள்.

ஃபேஸ்புக் & கூகுள் போன்ற நிறுவனங்களில் இது போல கண்டுபிடிக்க செயல்படுபவர்கள் Freelancer என்று அழைக்கப்படும், செய்த வேலைக்கு மட்டும் பணம் பெறுபவர்கள்.

இவர்களுக்கு மாத சம்பளம் கிடையாது. நாகேஷ் அவர்கள் சொல்வது போல பிழைக்கு ஏற்ற பரிசு வாங்கலாம் :-).

ஒரு சில நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கே இது போல நபர்களை வேலைக்கு வைத்து இருப்பார்கள்.

அவர்கள் வேலையே இதை நோண்டிட்டு இருப்பது தான்.

புரியும்படி சொல்வது என்றால், “அயன்” படத்தில் சூர்யா அவரது மூளையை பயன்படுத்தி பல திருட்டு வேலை செய்வார்.. அதை அதிகாரி பொன் வண்ணன் நல்ல விசயத்திற்கு பயன்படுத்த அவரை பணிக்கு அமர்த்தி, இவரை வைத்து எங்கெங்க தவறு நடக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள பயன்படுத்துவார்.

இதே தான் அதுவும்.

கொஞ்ச நாள் முன்பு பாலஸ்தீனத்தை சார்ந்த Khalil Shreateh என்பவர் தான் கண்டு பிடித்த ஒரு குறைபாடை ஃபேஸ்புக் உரிமையாளர் “ப்ரதர்” மார்க் கணக்கிலேயே Timeline ல் போட்டுக் காட்ட, செம சிக்கலாகி விட்டது.

இதனால் காண்டான ஃபேஸ்புக் இவரது கணக்கை முடக்கி பின் திரும்ப கொடுத்து அதோடு கடைசியாக வெகுமதியையும் கொடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

Whitehat ல் இவர் Bug கூறிய போது இது Bug இல்லை என்று கூறியதால், கடுப்பாகி Mark கணக்கிலேயே [Time line] போட்டு விட்டார் :-).

Hack

இது போல செய்யாமல், அருள் தான் கண்டுபிடித்ததை முறையாக தெரிவித்ததால் பாராட்டுடன் வெகுமதியையும் பெற்று விட்டார். இவர் கூறிய பிரச்சனை அவர்களுக்கு சரியாக புரியாததால் பின் காணொளி மூலம் விளக்கி அனுப்பி இருக்கிறார்.

இதன் பிறகு உடனடியாக இந்த குறைபாட்டை சரி செய்து இருக்கிறார்கள். அதோட இது மாதிரி இனி வருபவர்கள் காணொளி மூலம் விளக்கினால் மிக எளிதாக இருக்கும் என்றும் கூறி இருக்கிறார்கள்.

அருள் பின் வரும் குறைபாட்டை கண்டு பிடித்ததாகக் கூறி இருக்கிறார்.

1) We can remove any photo from verified real users & Pages such as Mark Zuckerberg, Eminem, Rihanna and so on.

2) We can remove any Shared & Tagged photos.

3) We can remove any User’s photo from his Status & Photo album.

4) We can remove any photo from a Page, Group and so on.

5) We can remove Photo from Suggested Post & also from Comments.

Delete any Photo from Facebook by Exploiting Support Dashboard from Arul Kumar.V on Vimeo.

அருள் குமாருக்கு பாராட்டுகள் :-).

அருள் குமாரின் தள முகவரி – http://arulxtronix.blogspot.in

கொசுறு 1

1. தடுமாறிக் கொண்டு இருந்த நோக்கியாவை மைக்ரோசாப்ட் $7.2 பில்லியனுக்கு வாங்கப்போகிறது.

2. கூகுள் தனது அடுத்த ஆண்ட்ராயிடு இயங்கு தள புதிய பதிப்பிற்கு “Kit Kat” என்று பெயர் வைத்துள்ளது.

3. கூகுள் க்ரோம் உலவிக்கு [Browser] ஐந்து வயதாகிறது.

4. ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 10 தனது அடுத்த மொபைல் மாடலான 5S ஐ வெளியிடுகிறது. இதன் உடன் 5C என்ற பட்ஜெட் மொபைலும் வெளியிடப்போவதாக வதந்தி உலவுகிறது. இது உண்மை என்றால் இந்தியாவில் ஆப்பிள் மிகப்பெரிய சந்தையைப் பிடிக்கும்.

5. கூகுள்+ தனது Hangout Chat [Video Chat] வசதியை HD தரத்தில் கொண்டு வரப்போகிறது.

6. Skype க்கு வயது 10 ஆகிறது. இதை மைக்ரோசாப்ட் கொஞ்ச மாதங்கள் முன்பு வாங்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

7. Yahoo! தனது லோகோவை மாற்றி இருக்கிறது.

yahoo

8. சாம்சங், குழந்தைகளுக்கான Galaxy Tab ஐ அறிமுகப்படுத்தப் போகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் கட்டுப்பாடுகளை செய்யலாம்.

கொசுறு 2

இதுவும் ஒரு ஹேக்கிங் செய்தி தான் ஆனால், இது Physical ஹேக்கிங் ஹி ஹி :-). ஒருவன் எர்ணாகுளத்தில் ஒரு வீட்டில் திருடிவிட்டு, திருடிய வீட்டிலேயே திண்ணையில் படுத்து தூங்கி விட்டானாம். திருடப்பட்ட வீட்டில் இருந்தவர்கள் வெளியூருக்கு சென்று இருந்தார்கள்.

காலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள், யார்ரா இது! வீட்டுல தூங்கிட்டு இருக்கிறது என்று தட்டி எழுப்பி கேட்டு இருக்கிறார்கள்.

நம்மாளுக்கு அப்பத்தான் “ரொம்ப” தூங்கி விட்டோம் என்று புரிந்து எஸ்கேப் ஆகப் பார்க்க, துரத்திப் பிடித்து செம மாத்து மாத்தி கேட்ட போது “நிறைய வீட்டில் திருடி டயர்ட் ஆகி விட்டது அதனால், கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்” என்று கூறி பேதி கிளப்பினானாம் 😀 .

பக்கத்து வீட்டுக்காரங்க செம்ம காண்டாகி, கழுத்து மேலே இரண்டு போடு போட்டு கொண்டு போய் காவல்துறை வசம் ஒப்படைத்து விட்டார்களாம். இனி காவல்துறை இருக்கிற அனைத்து வழக்கையும் இவன் மீதே போட்டு சிக்குனாண்டா ஒரு அடிமை என்று கடமையை ஆற்றி விடுவார்கள் 🙂 .

{ 11 comments… add one }
 • மிக குறுகிய காலத்தில் நம் மாணவர்கள் மென்பொருள் துறையில் பெற்ற அறிவும் வளர்ச்சியும் பிரமிக்கக்கூடியதாக இருந்தாலும் நம் நாடு இவர்களை முறைப்படி பயன்படுத்துவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கும் போது தான் வருத்தமாக உள்ளது.

 • Gowrishankar.P September 6, 2013, 11:57 AM

  நல்ல பதிவு. அதிலும் “அருள் குமார்” பற்றிய செய்தி சூப்பர்.

 • Rama September 6, 2013, 1:32 PM

  அருமையான ஒரு பதிவு!
  திறமை உள்ளவர்களை உங்கள் பதிவு மூலமாக தெரிய வைத்ததில்
  மிக்க மகிழ்ச்சி! தொடருங்கள்!

 • மு.முத்துக்குமார் September 6, 2013, 2:04 PM

  தகவலுக்கு நன்றி தல.

 • காமக்கிழத்தன் September 6, 2013, 5:58 PM

  மகிழ்ச்சி தரும் செய்தி.

 • Mohamed Yasin September 7, 2013, 12:22 PM

  வாழ்த்துகள் அருள். புதிய தொழில் நுட்ப செய்திகள் தந்தமைக்கு நன்றி கிரி. ஒரு சின்ன சம்பவம் உங்களுடன் பகிர ஆசைப்படுறன்.

  சிக்குனாண்டா ஒரு அடிமை
  ==========================
  நான் 2007 ம் ஆண்டில் திண்டுக்கல்லில் JRஅக்கௌண்டன்ட் வேலை பார்த்த போது எங்களுடைய அலுவலகத்தில் சுமார் பணம் 6 / 7 லட்சம் பணம் காணமல் போகி விட்டது. அதற்காக அலுவலக ஊழியர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். காலை 10 மணிக்கு சென்ற எங்களை விசாரித்த நேரம் இரவு 11.45 pm . ஸ்டஷன் செல்வது முதல் முறை என்பதால் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஓவ்வொருவராக விசாரித்து விட்டு என் முறை வந்ததும், SIகேட்ட முதல் கேள்வி சொந்த ஊர். நான் சொன்னேன் கடலூர். அடுத்த கேள்வி : கடலூர் காரனுக்கு திண்டுகல்ளில் என்ன வேலை??? சார் அங்க வேலை கெடைக்கில அதான் இங்க வந்தேன்.. வேலைக்கு சேர்ந்து எவ்வளவு நாள் ஆகுது? ஒரு மாசம். மீண்டும் SI சொன்ன பதில் (ஒரு மாசம் வேலை செஞ்சதுக்கே 7 லட்சம்’ னா ஒரு வருஷம் வேலை பார்த்தனா கம்பெனி’ ய இழுத்து முடிடுவியா???) “முடிவே பண்ணிடங்கனு நெனச்சி” நான் பதறி போய் சார் எனக்கு இதுக்கும் சம்மந்தம் இல்ல என்று சொன்னேன். உடனே SI , ஏட்ட கூப்பிட்டு என் பாக்கெட்ட செக் பண்ண சொன்னார் (பாக்கெட்ட இருந்தது வெறும் பத்து ரூவா) காண்டாகி போன SI மீதி பணம் எங்கட வச்சியிருக்க???? நான் மீண்டும் சார், எனக்கு இதுக்கும் சம்மந்தம் இல்ல என்று சொன்னேன்அதுக்கு SI அதை நான் முடிவு பண்ணிக்கிறேன், இப்ப வெளியில போய் உட்கார்னு சொன்னனர். உடனே ஏட்டு ஒருவர் தம்பி கம்ப்யூட்டர் ல type பண்ணுவாயனு கேட்டார். நான் தெரிந்தாலும் தெரியலன்னு சொன்னா பழைய கேசையும் நம்ம மேல போடுவார்களே நெனச்சி நான் “தெரியும்” சொன்னேன். அடுத்த நிமிஷம், 5/10 வருசத்துக்கு முன்னாடி அப்டேட் பண்ண வேண்டிய DATA வ கொடுத்து அப்டேட் பண்ண சொன்னாங்க… ஒரு நாள் விசாரனைக்கு ஒரு வாரம் அப்டேட் பண்ணி கொடுத்தேன்…

 • gnanasekaran September 7, 2013, 12:25 PM

  நல்ல செய்தி. அன்பருக்கு வாழ்த்துக்கள்

 • கிரி September 10, 2013, 7:25 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @யாசின் உங்க அனுபவம் கொஞ்சம் பீதியா தான் இருக்கு. இது போல நான் மாட்டியதில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் அடி வேணா வாங்கி இருக்கேன் 🙂 🙂

 • கிரி September 10, 2013, 8:21 PM

  யாசின் அப்டேட் பண்ணிட்டேன்..ஓகே வா 🙂

 • Arun September 11, 2013, 2:27 AM

  வாழ்த்துகள் அருள்.

  யாசின் அவர்களின் அனுபவம் வித்தியாசமானது தான்

  பதிவுக்கு நன்றி தல

  – அருண்

 • gomathiramalingam August 20, 2014, 10:32 AM

  அருள் குமாருக்கு வாழ்த்துக்கள் மற்றும் மிக அருமையான பதிவு.இது போன்ற பதிவு ஏதாவது புதுமை செய்ய வேண்டும் போன்ற உற்சாகத்தை தருகிறது.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz