எட்டாவது ஆண்டில் கிரி Blog

8th anniversary

ன்றுடன் Blog எழுதத் துவங்கி ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாவது ஆண்டு துவங்குகிறது. முதலில் Yahoo!வில் எழுதத் துவங்கி Blogger வந்து தற்போது WordPress ல் நிலை கொண்டுள்ளேன் 🙂 . Image Credit – www.behance.net

பொழுதுபோக்காக எழுதத் துவங்கி இருந்தாலும், இதுவரை எழுதியதில் நிறைய கற்றுக்கொண்டேன். தற்போது எழுதுவதை விட இன்னும் கூடுதலாக எழுதலாம் ஆனால், எப்போதுமே அளவோடு இருக்கும் வரை தான் எதற்குமே மதிப்பு.

அதிகம் எழுதினால் அதில் ஒரு வெறுப்பு / சலிப்பு வந்து விடும், எழுதும் எனக்கும், படிக்கும் உங்களுக்கும்.

படிப்பவர்களிடையே பல கருத்து வேறுபாடுகள், ஏகப்பட்ட சண்டைகள் வந்துள்ளது. கோபப்பட்டு வராமல் இருந்து இருக்கிறார்கள். கமெண்ட் போடவில்லை என்றாலும், தொடர்ந்து படிக்கிறார்கள் என்று உள்ளுணர்வு கூறுகிறது.

என் எழுத்துக்களை பிடிக்கவில்லை என்றாலும், தவிர்க்க முடியாதவனாக இருப்பதாகத் தான் நினைக்கிறேன்.

உலகத்தில் 100 % நல்லவர் என்று எவரும் இல்லை / அனைவருக்கும் பிடித்த மாதிரி எவராலும் எழுதவும் முடியாது! அதில் நானும் விதிவிலக்கல்ல. கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான், இதெல்லாம் இருந்தால் தான் ஒரு சுவாரசியம் இருக்கும்.

எப்போதும் நமக்கு பிடித்த மாதிரியே இருந்தால் [அப்படி இருக்க வாய்ப்பில்லை] அதில் என்ன ஒரு சுவாரசியம் இருக்கப் போகிறது! ஒரு பதிவில் சண்டை வந்தால், அது அதற்கு மட்டும் தான், அதற்காக அதை மனதில் வைத்து அடுத்த விசயத்திற்கும் அதையே நான் பேச மாட்டேன்.

எனவே, No hard feelings Pls. என்னுடன் சண்டைப் போட்டு இருந்து, “ஒருவேளை” நீங்கள் இதைப் படித்தால், உங்களுக்கு கூறியதாக எடுத்துக்கொள்ளுங்கள்.

GiriBlog first postஅரசியல், இசை, சமூகம், விளையாட்டு, திரைப்படம், தொழில்நுட்பம், பயணம், பொதுத் தகவல்கள், தொலைக்காட்சி, ஆன்மிகம், நிழல் படங்கள், நகைச்சுவை என்று அனைத்திலும் எனக்கு ஆர்வம் இருப்பதால், கஷ்டப்பட்டு எழுத வேண்டிய அவசியமில்லாமல், விருப்பமாக எழுத முடிகிறது.

எனக்கு வரவே வராத ஒரு விஷயம் கதையும் கவிதையும் தான். கதையாவது படிக்கப் பிடிக்கும் எழுத வராது [அப்படியும் ஒன்றை எழுதி சொதப்பினேன் 🙂 ] ஆனால், கவிதை சுத்தமாக வரவில்லை / பிடிக்கவுமில்லை. இதெல்லாம் இயல்பாக வருவது.

முன்பை விட தற்போது என்னுடைய Blog facebook page ல் பின் தொடர்பவர்களுடன் அதிகம் Interact செய்ய முடிவது மகிழ்ச்சி. Blog ல் கூற முடியாத / நேரமில்லாத விசயங்களை இங்கே பகிர முடிவது ஒரு வசதி.

எனவே, எனக்கு ரொம்பப் பிடித்த இடங்களில் Page ம் ஒன்று. முன்பு வறட்சியாக இருந்த பகுதி தற்போது வண்ணமயமாக உள்ளது 🙂 . எனக்கு நிழல் படங்கள் ரொம்பப் பிடிக்கும். சிறந்த படங்களை இங்கே பகிர வாய்ப்பு கிடைக்கிறது.

ஏதாவது முக்கிய செய்தி / தகவல் என்றால் உடனடியாக அனைவருக்கும் தெரிவிக்க / பகிர முடிகிறது.

எழுத ஆரம்பித்து 7 வருடம் முடிந்து விட்டது என்று நினைத்தால், கொஞ்சம் மலைப்பாகத் தான் இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் எழுதுவது பல்வேறு காரணங்களால் குறைந்தாலும், நிச்சயம் எழுதுவதை நிறுத்த மாட்டேன் என்று நினைக்கிறேன். எழுதாமல் என்னாலும் இருப்பது கடினம். படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆவதும், எழுத உற்சாகம் அளிக்கிறது.

அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. தொடர்ந்து இணைந்து இருங்கள்.

{ 36 comments… add one }
  • மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…

  • thomasruban August 16, 2013, 9:03 AM

    தொடர நல்வாழ்த்துகள்:)))))))))))))

  • ராமலக்ஷ்மி August 16, 2013, 9:14 AM

    மகிழ்ச்சி கிரி. தொடர நல்வாழ்த்துகள்!

  • வெற்றிவேல் August 16, 2013, 10:48 AM

    வாழ்த்துகள்… தொடர்ந்து எழுதுங்கள்…

  • avahaf August 16, 2013, 11:20 AM

    நிரம்ப சந்தோசமாக உள்ளது. தொடரட்டும் உங்கள் மகத்தான பயணம்.

  • துளசி கோபால் August 16, 2013, 11:20 AM

    மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    நல்லா இருங்க.

  • Gayathrinaga August 16, 2013, 12:32 PM

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கிரி!

  • r.v.saravanan August 16, 2013, 12:57 PM

    எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் கிரி

  • viyapathy August 16, 2013, 1:14 PM

    மென்மேலும் வளரவும் தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்

  • tulsi August 16, 2013, 2:18 PM

    glad to hear that keep going

  • Veyilaan August 16, 2013, 2:26 PM

    வாழ்த்துக்கள் கிரி!

  • Vijay August 16, 2013, 3:28 PM

    வாழ்த்துக்கள் கிரி!!!

  • உடன்பிறப்பு August 16, 2013, 6:05 PM

    முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல, இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல என்று உங்க தலைவர் பாடினாரு. நீங்க முதல் எட்டிலேயே நிறைய கத்துக்கிட்டேன் என்று சொல்றீங்க. அப்போ உங்களுக்கு டபுள் ப்ரமோஷன் தான். மூன்றாம் எட்டில் காலடி வைத்ததற்கு வாழ்த்துக்கள்

  • Gowrishankar.P August 16, 2013, 7:23 PM

    வாழ்த்துக்கள் கிரி.

  • muthu August 17, 2013, 12:04 AM

    வாழ்த்துகள் னா.

  • KAMESH August 17, 2013, 12:10 AM

    I did wish in FB but could not find my comment there.. anyway.. mere commenting does not fill up what I have about YOU in my mind.. congrats my friend keep expressing your views the way you have been doing all these times: my best wishes to your: off all your blogs: your mom talking as if she is talking from SS house to console a child stands out.. always in my memory… Keep going Dear ALL THE BEST

  • Suresh Palani August 17, 2013, 1:42 AM

    வாழ்த்துக்கள் நண்பா!!!

  • Arun August 17, 2013, 3:37 AM

    வாழ்த்துக்கள் தல
    இன்னும் நெறைய எழுதணும் நீங்க
    எப்பவும் போல நடுநிலை மாறாம

    – அருண்

  • Logan August 17, 2013, 7:32 AM

    வாழ்த்துக்கள் கிரி.

  • மாணவன் August 17, 2013, 8:54 AM

    டெக்னிக்கல் அப்டேட் மற்றும் சிங்கை சார்ந்த செய்திகளை கிரி பிளாக் மூலம் நிறைய கற்று/தெரிந்துகொள்ள முடிகிறது. எட்டாவது ஆண்டிற்கு வாழ்த்துகள்… தொடர்ந்து கலக்குங்க…!

  • akila August 17, 2013, 9:47 AM

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி கிரி..உங்கள் பதிவுகளின் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது..உங்கள் எழுத்துப் பணி ( மற்றும் பாணி) என்றும் என்றென்றும் தொடர வேண்டும். 🙂

  • kamalakkannan August 17, 2013, 12:00 PM

    வாழ்த்துக்கள் கிரி.

  • Mohamed Yasin August 17, 2013, 1:14 PM

    தல… முதல் முதலில் உங்கள் தளத்தை எப்படி கண்டு பிடித்தேன் என்று தெரியவில்லை. ஆனால் படிக்க ஆரம்பித்த முதல் கட்டுரையிலிருந்து “ஏதோ ஒரு நெகிழ்வு” (“நம்ம பக்கத்து வீட்டு பையன்ட இவன்”) என்பது போல் உள்ளுக்குள்ள இருந்துச்சி… அதனுடைய தாக்கம் தான் இந்த பதிவு வரை வாசிக்க வைத்துள்ளது. இறைவனின் அருளால் எதிர்காலத்திலும் இது தொடரும்… தங்களின் பணி இன்னும் மேன்மை அடைய என்றும் பிராத்தனைகளுடன் கூடிய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி கிரி…

  • Breeze August 17, 2013, 1:51 PM

    வாழ்த்துக்கள் கிரி. நான் பொதுவாக பின்னோட்டம் இடுவதில்லை ஆனால் உங்களது வலைப்பூவை தொடர்ந்து படித்து வருகிறன். வெகு நாட்களுக்கு முன்பு, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தேன் ஆனால் ஏதோ காரணத்தால் அனுப்ப வில்லை. அந்த கடித்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் You’re simply amazing.

  • Ambrose August 17, 2013, 7:43 PM

    வாழ்த்துகள் கிரி.

  • ANaND August 17, 2013, 11:28 PM

    மென்மேலும் வளரவும் ..தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்..அண்ணா

  • ramesh August 18, 2013, 4:37 AM

    அன்பான வாழ்த்துக்கள்.தொடர்ந்து வாசிக்கிறேன்.சிட்ன்யிளிருந்து ரமேஷ் .

  • தினபதிவு August 18, 2013, 4:21 PM

    வாழ்த்துகள்… தொடர்ந்து எழுதுங்கள்…

  • K Siva August 20, 2013, 11:53 AM

    வாழ்த்துக்கள் !!! keep up the good work !!!

  • ManiK August 20, 2013, 12:53 PM

    வாழ்த்துக்கள் கிரி!!

  • Rajkumar August 20, 2013, 1:08 PM

    வாழ்த்துக்கள் கிரி

  • புதுகை அப்துல்லா August 20, 2013, 4:50 PM

    ஆரம்பகால வாசகனின் வாழ்த்துகள் 🙂

  • Senthil Kumar August 21, 2013, 1:24 PM

    வாழ்த்துக்கள் கிரி சார்..!!

    தொடர்ந்து எழுதுங்கள்..!!

  • rajesh .v August 23, 2013, 8:46 PM

    ,

  • Lenin M August 24, 2013, 7:33 AM

    வாழ்த்துக்கள் கிரி

  • Karthik Somalinga September 3, 2013, 9:54 PM

    வாழ்த்துக்கள் 🙂

Leave a Comment