மலேசியா – ராமதாஸ் – சீனா – பெப்சி உமா – மழை

Batu Caves, Malaysiaலேசியாவில் இந்த முறை தேர்தலில் கடும் போட்டி இருந்தது. நம்ம ஊர் தேர்தல் மாதிரி படு மோசமாக நடந்து கொண்டார்கள்.

எதிர்க் கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது ஆனால், வழக்கம் போல ஆளுங்கட்சியே வெற்றி பெற்றது ஆனால், குறைந்த வித்தியாச ஓட்டில்.

மலேசியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இவர்களே ஆட்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு முடிந்தவுடன் விரலில் இருந்த மை எளிதாக அழிந்து விட்டது என்று ஏகப்பட்ட பேர் புகார் கூறினார்கள்.

நிறையப் பேர் உடனே மையை அழித்து படம் எடுத்து அதை ஃபேஸ்புக் கில் போட்டு இருந்தார்கள்.

இது பற்றி புகார் கூறியதற்கு, அந்த ஊர் தேர்தல் அதிகாரி ஒரு செமையான பதில் கொடுத்து அனைவரின் கடுப்பையும் சம்பாதித்துக் கொண்டார் 🙂 .

தேர்தலில் நம்ம ஊரில் நடப்பது போலவே மலேசியாவிலும் பல தில்லுமுள்ளுகள் நடை பெற்றன. தேர்தல் நேரத்திலும், தற்போதும் ரேசிசம் பிரச்சனையும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது எங்கே சென்று முடியுமோ! Image Credit : http://3rdeyelens.blogspot.sg

ஜெ” அறிவிக்கும் அறிவிப்புகளைக் கேட்டாலே தற்போதெல்லாம் வெறுப்பாக வருகிறது. வெறும் அறிவிப்பு மட்டுமே வந்து கொண்டு இருக்கிறது.

இது வரை இவரது இந்த ஆட்சியில் குறைகள் கூறப்பட்டாலும் சொல்லிக்கொள்ளும்படி / பாராட்டும்படி உள்ள ஒரே திட்டம் “அம்மா உணவகம்” மட்டுமே.

செய்திகளில் “ஜெ” ஏதாவது திட்டம் என்று அறிவித்தாலே அதைப் படிக்கக் கூட தற்போது பிடிப்பதில்லை, எப்படியும் ஒன்றும் நடக்காது என்று தெரியும் எதற்கு படித்து ஏமாற வேண்டும் என்று தோன்றுகிறது.

மின்சாரப் பிரச்னைக்கு இன்று வரை உருப்படியான தீர்வு இல்லை! தண்ணீர் பிரச்னைக்கு நடவடிக்கைகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடக்கிறது. இது மாதிரி வரிசையாகக் கூற நிறைய இருக்கிறது ஆனால், கூற சலிப்பாக இருக்கிறது.

இதன் காரணமாகவே இதைப் பற்றி எல்லாம் கட்டுரைகள் எழுதுவதில்லை. இருந்தும் மனசு கேட்காமல் இப்படி சிறு அளவில் புலம்பினால் தான் ஆறுதலாக இருக்கிறது.

ஜெ என்ன தான் பண்ணுறாங்க!!! “ஜெ” இல்லைனா “கலைஞர்” இப்படியே போகுது… யார் வந்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதே ஊழல், விலைவாசி உயர்வு, மந்தமான நடவடிக்கை, வரிப் பணம் வீணடிப்பு, கொள்ளை என்று இதே பாட்டு தான்.

ச்சே! நமக்கு விடிவுகாலமே கிடையாதா!!

கூடங்குளத்திற்கு உச்ச நீதிமன்றம் தடையில்லை என்று கூறி விட்டது. என்னைப் பொருத்தவரை, அணு உலை மின்சாரத்தில் உடன்பாடில்லை. பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு நியாயம் பேசுபவர்கள் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம்.

அங்குள்ளவர்களுக்கு தான் அதன் பயம் புரியும். எப்படி இவர்கள் போராட்டம் செய்தாலும் அணு உலை செயல்படப்போவது உறுதி தான். இனி அதை யாராலும் தடுக்க முடியாது.

டிகை ஹன்சிகா “ஒரு கோடி” ருபாய் அளவிற்கு, கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி இருப்பதாக செய்திகளில் படித்தேன். இது உண்மை என்றால் என்னுடைய மன மார்ந்த பாராட்டுகள்.

Treesராமதாஸ் கைதுக்குப் பிறகு பா ம க வினர் செய்த கலவரத்தால் 500 பேருந்து தாக்கப்பட்டது என்ற செய்தியை விட 160 மரங்கள் வெட்டப்பட்டன என்ற செய்தியைப் படித்த போது மனதிற்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது.

நாம் பயணம் செய்யும் போது தான் சாலை ஓர மரங்கள் அருமை தெரியும். அனல் காற்று குறைந்து, இந்த மரங்களின் குளிர்ச்சியான காற்று நம் மீது படும் போதும் நிழலில் வண்டி ஓட்டுவதும் அவ்வளவு சுகமான விஷயம்.

இது போல ஒரு மரம் வளர 15 / 20 வருடங்கள் ஆகும் ஆனால், சில நிமிடங்களில் வெட்டப்பட்டு சாலையில் போடப்பட்டு விட்டன. இது பா ம க செய்து இருந்தாலும் / விடுதலை சிறுத்தைகள் செய்து இருந்தாலும் மிக மோசமான செயல் என்பதில் சந்தேகமில்லை.

இந்தக் கொடுமை எல்லாம் சகித்துப் பழகிக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. Image Credit : http://ncf-india.org

Pepsi Umaங்க தங்கத் தலைவி, தானைத் தலைவி எவர் கிரீன் “பெப்சி உமா” 🙂 ஜெயா தொலைக்காட்சியில் “ஆல்பம்” நிகழ்ச்சியில் வருகிறாராமே! தட்ஸ்தமிழ் ல படித்தேன்.

கண்டிப்பாக பார்த்துட வேண்டியது தான். வியாழன் இரவு 8.30 பெப்சி உங்கள் சாய்ஸ் க்காக காத்திருந்த காலம் உண்டு… ம்ம்ம். எனக்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் / நடத்தியவர்களிலேயே பிடித்த ஒரே நபர் “உமா” மட்டும் தான்.

இவரது நிகழ்ச்சியை மட்டும் தான் நீண்ட வருடங்கள் தொடர்ந்து பார்த்து இருக்கிறேன். அலட்டல் இல்லாம கடுப்படிக்காம ரொம்ப நல்லா நிகழ்ச்சி நடத்துவாங்க.

எனக்கு இன்னமும், எந்திரன் படம் வெளியான போது சன் டிவியில் ரஜினியை விஜய் சாரதி பேட்டி எடுத்த நேரத்தில், உமா எடுத்து இருந்தால் சூப்பராக இருந்து இருக்குமே! என்று நினைப்பேன். ஒரு நல்ல வாய்ப்பை விஜய் சாரதி வீணடித்து விட்டார்.

சீனா ஆக்கிரமிப்பு பற்றிய செய்தியாகப் படித்து இருப்பீர்கள். தற்போது சீனா திடீர் என்று பின் வாங்கி விட்டது. தன்னுடைய படைகளை திரும்ப பெற்றுக்கொண்டது. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் கூறுகிறார்கள்.

தற்போது எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டை சார்ந்தே உள்ளது. அதிலும் இந்தியாவை பல நாடுகள் நுகர்வு விசயத்தில் பெருமளவு நம்பியுள்ளன காரணம், இங்கே உள்ள தேவை, மக்கள் தொகையின் அளவு.

பல நாடுகளின் முக்கிய விற்பனை மையமாக இந்தியா உள்ளது. எனவே இந்தியாவுடன் பிரச்சனை செய்தால், இந்தியா நினைத்தால் அந்த நாடுகளுக்கு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி கொடுக்க முடியும் [நமக்கும் பாதிப்புள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை].

அதாவது, அவர்கள் நாட்டில் இருந்து வரும் பொருட்களுக்கு தடை விதித்தால் அது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் குறிப்பாக சீனா போன்ற நாடுகளுக்கு.

நம்மால் வேறு ஒரு நாட்டில் அதே பொருளைப் பெற்று சமாளிக்க முடியும் ஆனால், நமக்கும் சிரமம் என்பதும் உண்மை தான்.

எனவே சீனா, இந்தியா மீது போர் தொடுக்கும் என்பதெல்லாம் சாத்தியமில்லாத செயல் என்பதே என் கருத்து. நமக்கும் இது பொருந்தும்.

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் “நீர்ப்பறவை” இயக்குனர் சீனு ராமசாமியுடன் [“தென் மேற்கு பருவக்காற்று” படத்திற்காக தேசிய விருது வாங்கியவர்] ஒளிப்பதிவாளர் “பால சுப்ரமணியமும்” வந்தார். அந்தப் படம் எடுக்கப்பட்ட சில நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

இன்னும் கொஞ்சம் தகவல் கூறி இருந்தால் சந்தோசப்பட்டு இருப்பேன். ஒளிப்பதிவிற்க்காகவே நான் பார்த்த ஒரே படம் “நீர்ப்பறவை”. படமும் நன்றாக இருந்தது.

Read: “நீர்ப்பறவை” – அசத்தலான ஒளிப்பதிவு

IPL ல RCB கெயில் புனே வாரியர்சை பஞ்சர் ஆக்கி 175* எடுத்தார்.. RCB யை கொத்துக்கறி போட்டு 101* [38 பந்து] அடித்து [சேசிங்] கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் “டேவிட் மில்லர்” கிடுகிடுக்க வைத்து விட்டார்.

என்னது சென்னை சூப்பர் கிங்க்ஸ் Vs மும்பை இந்தியன் பற்றியா… ஹி ஹி சரி சரி விடுங்க! கிரிக்கெட் என்றால் சில அடிகள் விழத்தானே செய்யும்! 😉

நேரம்” என்ற படம் விரைவில் வரப்போகிறது. இது தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் [May 17] வெளியாகிறது. இதில் கதாநாயகனாக வரும் நிவின் தான் மலையாளத்தின் சூப்பர் ஹிட் காதல் படமான “Thattathin Marayathu” படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.

இவரது நடிப்பு ரொம்ப இயல்பாக நன்றாக இருந்தது. இந்தப்படத்தில் எப்படி உள்ளது என்று இந்த காணொளி பார்த்துக் கூறுங்கள் 🙂

பேஸ்புக்கிற்கு இந்தியாவிலும் பிரேசிலும் தான் பயனாளர்கள் அதிகமாக உள்ளார்களாம். ஆர்குட் பிரபலமாக இருந்த போதும், இந்த இரு நாடுகளே முன்னணியில் இருந்தன. தற்போது ஃபேஸ்புக் கதையும் அதே!

நான் வலைப்பதிவு எழுதுவதை குறைத்துக் கொண்டு வருவதைப் போல, ஃபேஸ்புக் பயன்படுத்துவதையும் குறைக்க வேண்டும்.

எதற்கும் அடிமையாகி விடக்கூடாது என்ற எண்ணம் தான் வேறு எதுவும் இல்லை… ஆனால், தொலைபேசி / இணையம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

இணையத்தை நம்பியே என் சார்ந்த பல விஷயங்கள் உள்ளது. பல தகவல்களுக்கு / துரித வேலைகளுக்கு இணையம் / தொலைபேசி தான், வேறு வழியில்லை.

சிங்கப்பூர்ல காற்றே அடிக்காமல் மழை பின்னி எடுக்குது! நம்ம ஊர்ல காற்றே, பெய்யுற கொஞ்ச மழையையும் கொண்டு சென்று விடுகிறது, அதோடு இருக்கிற கொஞ்ச நஞ்ச மரத்தையும் வேரோடு பிடிங்கி விடுகிறது.

நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க… [அப்ப சொல்லாதீங்கன்னு சொல்லிடாதீங்க 🙂 ] சிங்கப்பூர்ல காற்றே அடிக்காமல் 6 மணி நேரம் எல்லாம் சர்வசாதாரணமாக மழை பெய்யும். இங்க பெய்யுற மழை நம்ம ஊர்ல பெய்தால் எப்படி இருக்கும்!!

எழுத ஆரம்பித்தால் இது தான் பிரச்சனை.. வந்துட்டே இருக்கும். நெக்ஸ்ட் மீட் பண்றேன் :-).

{ 12 comments… add one }
 • akila May 8, 2013, 10:21 AM

  * நம்ம ஊரை போல தேர்தல் தில்லுமுல்லு மலேசியாலயுமா?
  * ஜெ வோட சில திட்டங்கள் நல்லாத்தான் இருக்கும்..ஆனால் ஒழுங்கா ஊர் போய் சேராது..
  * ராமதாஸ் ஆளுங்க மரத்த வெட்டினதோட இல்லாம ரெண்டு லாரி டிரைவர்களோட உயிர் போக காரணமா இருந்திருக்காங்க..அவங்கள நம்பி இருக்குற family நிலைமை ரொம்ப பரிதாபம் தான்..
  * கிரி நீங்களும் உமா fanna உமா வாய்ஸ் ரொம்ப நல்லாருக்கும்..
  * சீனா பத்தி ஒரு விஷயம்- இங்க உள்ளுக்குள்ள இருக்குற மக்களுக்கு நம்ப border issues எதுவும் தெரியாம இருக்கிறது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு..politics வேற முகமாவும் மக்கள் வேற முகமாவும் தான் இருக்காங்க..

 • akila May 8, 2013, 10:29 AM

  “ஜெ” இல்லைனா “கலைஞர்” இப்படியே போகுது… யார் வந்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதே ஊழல், விலைவாசி உயர்வு, மந்தமான நடவடிக்கை, வரிப் பணம் வீணடிப்பு, கொள்ளை என்று இதே பாட்டு தான். ச்சே! நமக்கு விடிவுகாலமே கிடையாதா!!

  உங்கள போல ஆட்கள் அரசியலுக்கு வந்தால் தான் விடிவு காலம் வரும்.. 🙂

 • rajesh v May 8, 2013, 11:53 AM

  வாவ்……

  கல்யாண விருந்து மாதிரி இருந்தது உங்க பதிவு.

  ராஜேஷ் v

 • Gowrishankar.P May 8, 2013, 12:42 PM

  “தேர்தலில் நம்ம ஊரில் நடப்பது போலவே மலேசியாவிலும் பல தில்லுமுள்ளுகள் நடை பெற்றன”

  பாஸ், நம்ப ஊர் இல்ல, மலேசியா இல்ல, எந்த ஊரா இருந்தாலும் தேர்தல்னா அரசியல், அரசியல்னா தில்லுமுல்லு. இதுதானே பாஸ் உலக வழக்கம்.

 • ANaND May 8, 2013, 1:47 PM

  இது மாதிரி வரிசையாகக் கூற நிறைய இருக்கிறது ஆனால், கூற சலிப்பாக இருக்கிறது. ///

  அண்ணா, உங்களுக்கு பரவாஇல்ல salipputhaan வருது எனக்கு இவனுங்கள நெனச்சா தலைவலி வந்துடும் , அப்பறம் நம்ம ஒடம்ப நாம தாண்டா பாத்துக்கணும்னு இப்போலாம் டென்சன் ஆகறதில்ல

  நீங்களும் உங்க ஒடம்ப பாத்துக்குங்க அண்ணே

  நாங்களும் கொஞ்ச நாள் கட்டுனா பெப்சி உமாவதான் கட்டுவோம்னு திரிஞ்சோம்.. ஹீ ஹீ

  சிங்கப்பூர்ல காற்றே அடிக்காமல் 6 மணி நேரம் எல்லாம் சர்வசாதாரணமாக மழை பெய்யும்///

  சொல்லாதிங்க அண்ணே ,ஸ்டமக் பர்ன் ஆகுதுல்ல

 • Arun May 9, 2013, 3:11 AM

  தல பதிவு தகவல் எல்லாமே நல்லா இருக்கு
  கோச்சடையான் லேட்டஸ்ட் stills பத்தி கமெண்ட் வேணுமே தல

  – அருண்

 • Ananth May 9, 2013, 1:09 PM

  விஜய் சாரதி கிடைத்த நல்ல வாய்ப்பை வீனடித்கார். கடுப்பாக இருந்தது. கேள்வி கேட்பவர் நன்கு தயார் செய்து கொண்டு வர வேண்டாமா. பல தருணங்களில் இப்படித்தான் மொக்கை போட்டிருக்கிறார் . அவர் நீங்கள் கேட்ட பாடலுக்கு மட்டும் தான் லாயக்கு. அவமானம் சன் டிவி நிர்வாகத்தினருக்கு .

 • sadha May 9, 2013, 2:51 PM

  மரங்களின் குளிர்ச்சியான காற்று நம் மீது படும் போதும் நிழலில் வண்டி ஓட்டுவதும் அவ்வளவு சுகமான விஷயம்

 • கிரி May 10, 2013, 8:59 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @அகிலா நான் உமாவின் தீவிர ரசிகர். எத்தனை பேருக்கு தான் ரசிகர்னு கேட்கறீங்களா 🙂

  சீனா ல இது பற்றி பேசுனாங்களா.. அவனுக சங்கி மங்கினு மாண்டரின் ல பேசுவானுக. உங்களுக்கு புரியாத மாதிரி 🙂 அவனுக ஆங்கிலம் பேசினாலே ஒன்றும் புரியாது இதுல…. 🙂

  @ஆனந்த் 🙂

  @அருண் படம் எனக்கு திருப்தியா இல்ல. படம் வெளியான பிறகு தான் ஒரு ஐடியா க்கு வர முடியும். எதிர்பார்ப்பு இல்லாம இருங்க. அது தான் நல்லது 🙂

  @ஆனந்த் சன் டிவி யோட நெருக்கடியும் ஒரு காரணமா இருக்கலாம். விஜய் டிவி என்றால் சுதந்திரமாக பேட்டி எடுக்க முடியும். இங்கே 1000 கட்டுப்பாடு இருக்கும்..

 • srikanth May 10, 2013, 1:43 PM

  சாப்பாடு சாப்பிட வந்தவனுக்கு பிரியாணி பரிமாறினா எப்படி இருக்கும் ………அதே மாதிரி இந்த பதிவ படிக்க வந்தவனுக்கு நெறைய விஷயங்கள் சொல்லி அசத்திடீங்க கிரி !

 • எனக்கு ஒரு டவுட்டு கிரி அண்ணா சிங்கப்பூர் செய்தியையும் தமிழ்நாட்டு செய்தியையும் ஒண்ணா போடுறிங்க எப்படினா உங்களால முடியுது … அப்புறம் நீங்க எங்கதான் இருக்கீங்க சிங்கபூர் அல்லது தமிழ்நாடு என்ற சந்தேகம் பதிவை படிக்கும் போது அடிக்கடி வந்து போகுது

 • கிரி May 15, 2013, 7:00 AM

  @ஸ்ரீகாந்த் நன்றி

  @கார்த்திகேயன் நான் இருப்பது சிங்கப்பூர் தான். செய்திகள் தொடர்ந்து படிக்கிறேன்.. அது தான் காரணம், வேறு ஒன்றுமில்லை.

Leave a Comment