“இன்ஸ்டன்ட்” மரம் வளர்ப்பு!

Treeரசாங்கம் / பொறுப்பில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலையை தனி மனிதர்கள் ஆர்வமாக செய்து வருகிறார்கள்.

என்னதான் தனி மனிதர்கள் தங்களின் கடும் முயற்சியில் சாதிக்க முடிந்தாலும், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் பெரியளவில் சாதிக்க முடியாது.

லட்சத்தில் / கோடியில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம். Image Credit: http://rapgenius.com

இது போல கூறினாலும், புலம்பிக்கொண்டு மட்டும் இருக்காமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் கடமையை / பணியை விருப்பமாக செய்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவர்கள் தான் நம்மைப் போன்ற புலம்பல் காரர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறார்கள்.

Instant Tree plant Arjunanஇது போல ஒருவர் தான் அர்ஜுனன். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில் நமக்கு எல்லாமே உடனே நடக்க வேண்டும் என்று விருப்பம். எது செய்தாலும் உடனே விடை தெரிய வேண்டும், யாருக்கும் காத்திருக்க பொறுமையில்லை.

காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த விசயத்தையே புறக்கணித்து டாடா சொல்லி விடுகிறார்கள்.

இங்லிஷ்க்காரன் படத்தில் சத்யராஜ், “”கர்ப்பமான” பெண்ணையே திருமணம் செய்து கொண்டால் வேலை மிச்சம் பாருங்க” என்று கூறுவாரே! 🙂 அதே போல் ஆட்கள் பலர் இருக்கிறார்கள்.

இதனாலோ என்னவோ அர்ஜுனன் மரம் வளர்க்க ஆகும் காலத்தை எப்படி குறைத்து பயன் பெறுவது என்று யோசித்து ஒரு எளிமையான முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இது பற்றி தெரியாதவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால் ஒருத்தராவது முயற்சிக்க மாட்டார்களா! என்ற ஆதங்கத்தில் இதை பகிர்கிறேன். நான் இந்த முறை தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் போது எங்கள் வீட்டில் / தோட்டத்தில் இதை கண்டிப்பாக முயற்சித்துப் பார்க்கப் போகிறேன்.

முன் கூட்டியே இது பற்றி என் அப்பாவிடம் கூறி, இதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.

நன்றி கல்கி மற்றும் பாலஹனுமன்

Instant Tree plant1இப்போ ஃபாஸ்ட்ஃபுட் உலகம். ‘பனை வெச்சவன் பார்த்துட்டு சாவான்’ங்கிற மாதிரி காத்துக்கிட்டு இருக்க முடியாது.

எல்லாமே சீக்கிரமா கிடைக்கணும். மரமா இருந்தாலும் உடனே அனுபவிக்கணும்.

அதனாலதான் மரம் வளர்க்கிற யுக்தியிலும் ஃபாஸ்ட் ஐடியாவை நான் கடைப்பிடிக்கிறேன்னு” சொல்கிறார் செப்பறை வளபூமி பசுமை உலகம் அமைப்பை நடத்தும் அர்ச்சுனன்.

மணியாச்சி ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தவர் அர்ஜுனன். பால் குடித்த மகன் மூச்சு திணறி இறந்தபின் வாழ்வின் மீது வெறுப்பு ஏற்பட்டதாம்.

என்ன பாவம் செய்தேனோ? ஒருவேளை மகனோ, நானோ செத்து அடுத்த பிறவியில் பறவையா, விலங்கா பொறந்தா நாம தங்கறதுக்கு இடம் வேணுமே? இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டிடுறாங்களேன்னு கவலை வந்ததாம். அப்போ தோன்றியதுதான் மரம் வளர்ப்பு.

ஆனால், மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வர்றேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.

சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.

அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.

Instant Tree plant2ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.

அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.

ம்ம்… யாருக்கும் இந்த அருமை புரியலை,” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார் ஃபாஸ்ட் ட்ரீ அர்ச்சுனன்.

தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்

அலைபேசி : 97903 95796

www.chepparaivalaboomigreenworld.com

இதில் இவர் கூறிய “அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும். ம்ம்… யாருக்கும் இந்த அருமை புரியலை

படித்த போதே, அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று, மனம் கணக்குப் போட ஆரம்பித்து விட்டது :-). ரொம்ப அருமையான அதே சமயம் நடைமுறையில் சாத்தியமான ஒரு செயல்.

இதற்கு அர்ஜுனன் கூறியது போல அரசாங்கம் ஒத்துழைப்பு இல்லை என்றால், ஒரு வெங்காயச் செடி கூட நட முடியாது.

ஏங்க எல்லோரும் இப்படி மரத்தோட அருமை தெரியாம / புரியாம இருக்காங்க!! செம மன உளைச்சலாக இருக்கிறது. “ஜெ” கடந்த ஆட்சியில் ஒரு சிறப்பான அறிவிப்பு செய்தாங்க. அது, கண்டிப்பாக அனைவரும் “மழை நீர் சேகரிப்பு திட்டம்” செயல்படுத்த வேண்டும் என்று.

இதனால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் தாறுமாறாக உயர்ந்தது. நம்ம ஊர்ல தான் இது போல நல்லது செஞ்சா பிடிக்காதே! வழக்கம் போல இதற்கும் எதிர்ப்பு. ஓட்டு போய்டுமே என்ற பயத்தில் தேர்தல் சமயத்தில் இந்த உத்தரவை “ஜெ” வாபஸ் செய்தார்.

உருப்படியா இருந்த ஒரு உத்தரவும் டமால் ஆகி விட்டது.

இது போன்ற “மழை நீர் சேகரிப்பு” திட்டத்திற்கு தான் கிறுக்கனுக எதிர்ப்பு தெரிவிப்பாங்க ஆனால், இது போல நெடுஞ்சாலையில் மரம் வைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.

“ஜெ” மட்டும், நெடுஞ்சாலை முழுக்க மரம் வைத்தே ஆக வேண்டும் என்று ஒரு அதிரடி உத்தரவைப் போட்டால், பொறுப்பில் உள்ளவர்கள் அலறி அடிச்சுட்டு செய்ய மாட்டார்களா!

மரம் பட்டுப் போனால் பொறுப்பில் உள்ளவர்களுக்கு வேட்டு என்று கூடுதலா ஒரு அறிவிப்பையும் வெளியிட்டால், அவனவன் ஒழுங்கா வேலையைப் பார்க்க மாட்டானா!!

இப்படி எல்லாம் நடந்தால் நல்லா இருக்குமே என்று கற்பனையில் மட்டுமே நினைத்து சந்தோசப்பட முடிகிறது. என்னமோ போங்க!

save the planetஎந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான். பொறுப்பில் உள்ளவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்பதில் மட்டுமே முழுக் கவனமும் உள்ளது.

மக்களைப் பற்றி / வருங்காலத்தில் [வருங்காலம் எங்கே..! இப்பவே அப்படித்தான் இருக்கு] நாம் அனைவரும் எதிர்கொள்ளப் போகும் பிரச்னை பற்றி யாருக்கும் கவலையில்லை.

அடுத்த தலைமுறை நபர்கள் எல்லோரும் மரத்தைப் பார்த்தால்.. “அதோ பாருங்க! அங்கே ஒரு மரம்!” என்று கூற வேண்டிய நிலையில் தான் இருப்பார்கள். Image Credit: http://www.treesonearth.com/

என்னுடைய ஆதங்கம் எல்லாம், அனைத்து வசதிகளும் / வளங்களும் இருந்தும் பொறுப்பில் உள்ளவர்கள் அக்கறையின்மையால் / திறமையின்மையால் / புறக்கணிப்பால் இப்படி தமிழகம் படாதபாடு படுகிறதே என்பது தான்!

எனவே இதைப் படிக்கும் உங்களை நான் கேட்டுக்கொள்வது, அரசியல்வாதிகளை / அதிகாரிகளை திட்டும் முன்பு நாம் நம் அளவில் என்ன செய்தோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அவர்களை கை காட்டும் வழக்கமான சமாளிப்பு செயலை கை விட்டு, நம்மால் என்ன செய்ய முடியும் என்று முயன்று சிறு முயற்சி எடுத்தால் கூட போதும்.

ஒன்றுமில்லாமல் போவதற்கு சில விஷயங்களாவது நடக்கும். நம்மைப் போலவே நினைக்காமல் அர்ஜுனன் போன்றவர்கள் முயற்சி செய்வதால் தான், இது போன்ற விசயங்களுக்கு சிறு நம்பிக்கை கிடைத்து வருகிறது.

உங்கள் வீட்டில் இடம் இருந்தால், இது போல ஒரு மரமாவது வையுங்கள்.. அட! முடியாத பட்சத்துக்கு ஒரு செடியாவது வைங்க. மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

{ 23 comments… add one }
 • David May 31, 2013, 10:54 AM

  நல்ல ஒரு சேவை.

  நாம் அடுத்த தலைமுறைக்கு கண்டிபாக செய்ய வேண்திய கடமை நமக்கு உண்டு.

  நான் என் பங்குக்கு கடந்த ஒரு வருடம் இதுவரை 6 மரங்களை நட்டு உள்ளேன்.

  அனைவரும் வருடத்துக்கு 2 மரம் நட்டு வந்தால் நாம் நம் நாட்டையும் நம் சமுதாயத்தையும் காக்கலாம் மழை வரமும் பெறலாம்.

 • akila May 31, 2013, 3:02 PM

  மிக பயனுள்ள தகவல் கிரி..
  இனிமேலாவது மக்கள் மற்றும் அரசாங்கம் மரங்கள் நடுகிறார்களா பார்ப்போம்..(பாஸ்ட் foods போல..instant trees )

 • Chandrasekar May 31, 2013, 9:15 PM

  நான் என் பங்குக்கு 5 மரம் வைத்து வளர்த்து வருகிறேன்

 • Ilavarasan June 1, 2013, 1:00 AM

  வணக்கம் கிரி அவர்களே

  அருமையான பதிவு அவசியமான பதிவும்கூட என் மனதிலும் மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் குறித்து ஒரு பதிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அது உங்களின் பதிவு மூலம் பூர்த்தியாகியது

  நன்றி,.

 • Arun June 1, 2013, 3:11 AM

  ரொம்ப நல்ல கருத்து
  அர்ஜுனன் சார் கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  – அருண்

 • scssundar June 1, 2013, 8:20 AM

  hallo boss, feedly tamil vara villai adarkku enna seyuanum?

 • Mohamed Yasin June 1, 2013, 12:00 PM

  சிறு வயதில் 5 ஆம் பாட புத்தகத்தில் மரம் நடுவிழா என்ற ஒரு பாடம் இருக்கும். அதில் மரம் வளர்பதினால் உண்டாகும் நன்மையை பற்றியும், அவைகளின் அத்தியாவசத்தை பற்றியும் தெளிவாக கூறியிருப்பார்கள். சிறு வயதிலே மரம், செடி கொடிகளின் மீது ஏற்பட்ட காதலினால் இவைகளுடன் என்னுடைய அதிக அளவனான நேரத்தை கழித்தேன். அந்த வசந்த நாட்கள் மீண்டும் திரும்பாது. நான் இயற்கையின் காதலன். என்னுடைய கடந்த காலத்தை நான் இயற்கையுடன் செலவு செய்துள்ளேன்..
  உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் முதியவர் மரங்களின் மீது காட்டும் பரிவையும், பாசத்தையும் காண்பதர்காகவே அந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்பேன். மரங்களை வெறும் ஜெட பொருளாகவும், வியாபாரமாகவும் பார்க்கும் மனிதர்களுக்கு மத்தியில் அவைகளை ஒரு உயிராக பார்க்கும் அர்ஜுனனை நான் நேசிக்கிறேன்.. . நிஜத்தில் அர்ஜுனனை அந்த முதியவர் இடத்தில நான் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி..

 • Gowrishankar.P June 4, 2013, 11:25 AM

  நல்ல பயனுள்ள பதிவு. தகவலுக்கு நன்றி கிரி.

 • rajesh.v June 6, 2013, 5:40 AM

  நாட்டுக்கு தேவையான மனிதர் .

 • aruna June 9, 2013, 7:59 PM

  பூங்கொத்து!!

 • ஹுஸைனம்மா June 19, 2013, 11:04 AM

  நல்ல பதிவு.

  இந்த லிங்க் தப்பா இருக்கு, சரி பண்ணிடுங்க. க்ளிக் பண்ணா உங்க ப்ளாக்குக்கே திரும்ப வருது.

  http://www.chepparaivalaboomigreenworld.com

  • கிரி June 19, 2013, 11:48 AM

   சுட்டியமைக்கு நன்றி. சரி செய்து விட்டேன்

 • Ponmuhunthan June 29, 2013, 4:57 PM

  கிரி,

  திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வரைக்கும் ரோட்டின் ஒருகரையில் இருந்த மரம் அத்தனையும் வெட்டிவிட்டார்கள். கிட்ட தட்ட 60 கிமீ தூரத்திற்கு. ஒரு கிலோமீட்டருக்கு 50 மரம் என்றாலும் 3000 மரம் அம்பேல்.

 • priya July 8, 2013, 12:22 PM

  நானும் என் வீட்டில் 2 மரங்களை வைத்திருக்கிறான்.

 • Rajesh.S July 19, 2013, 3:36 PM

  திருநெல்வேலி வண்ணார்பேட்டை நெடுன்சாலைஇல் இருந்த நாவல் மரங்களை வெட்டி ஒன்று கூட இல்லாமல் ஆகீடனுங்க.

  மரம் இல்லாமல் மனிதன் இல்லை
  மனிதன் இல்லாமல் மரம் ஊண்டு
  மரம் வளருங்கள் இல்லை இல்லை காடு வளருங்கள்

 • வடுவூர் குமார் October 20, 2013, 9:03 PM

  கிரி, இந்த மழை நீர் சேகரிப்பு இன்னும் எடுத்த மாதிரி தெரியலையே?? அப்படி ஒரு அரசாணை பிறப்பித்தார்களா? சந்தேகமாக இருக்கு.

  மரம் நடுவது நல்லது தான் அதையும் சரியான பிளான் பண்ணி சாலையை மற்றும் நடைபாதையை விட்டுவிட்டு கொஞ்சம் தள்ளி நட்டால் பல ஆண்டுகளுக்கு அதன் மீது கைவைக்காமல் இருக்கலாம் அதோடு கிளை கழித்துவிடும் செலவை எப்படி ஈடு கட்டுவது போன்றவையும் யோசித்து செயல்படலாம்.அதே போல் மண் வளத்தை பாதிக்கும் கருவேல மரங்களை வெட்டிவிடலாம்.

 • ராம் October 27, 2013, 9:55 AM

  Typed with Panini Keypadமண்ணுக்கு போராடும் மக்களே மரம் நடடுவோம் மாதவம் செய்வோம் மறுபிரவிக்கு .புண்ணியம் தேடி காசிக்கும் வேண்டாம் கடவுளைத்தேடி கோவிலுக்கும் வேண்டாம் காசைத்தேடி தேடி கடைசியில் களங்கின்று கடமையை செய்யாத கையாலாகதவனாய் நோகவும் வேண்டாம் கண்று நட்டு கடமையை செய்தோமென்று தலைமுறைக்கு தண்ணீர் தந்த தனனிகரில்லா தானத்தை செய்தோமென மகிழ்வாயாக.

 • E. MANIKANDAN July 11, 2014, 4:39 PM

  எனக்கு மிகவும் பிடித்தது மரம் நடுவது. நான் இதுவரை நான்கு மரங்களை வளர்த்துள்ளேன். எனக்கு தெரிந்து ஓதிய மரம், நோசில்லி மரம் போன்ற சில மரங்கள் தான் கிளை வைத்தால் வளரும். இது போன்று மரங்களை பயிர் செய்து தருபவர்கள் யாராவது சென்னயில் உள்ளார்களா. இருந்தால் தொடர்பு கொள்ளவும்.

 • A.Manickavasagam September 5, 2015, 5:46 PM

  ஷ்ரீ ஸு வா

 • ஜோசப் May 15, 2016, 6:10 AM

  ஒவ்வொரு தலைவரின் பிறந்த நாளிலும் 66 இலட்சம் மரம், 67 இலட்சம் மரக் கன்றுகள் நடுவதாகச் சொல்லி இலட்சக்கணக்கில் செலவு செய்து விழா நடத்துகிறார்கள். அப்படி நட்டிருந்தால் இந்நேரம் தமிழ்நாடே அமேசான் காடாக மாறியிருக்கும். நம் அரசியல்வாதிகள் வாய்ச் சொல்லில் வீரர்கள். தி.மு.க. தேர்தல் தேர்தல் அறிக்கையில் 103 – ஆம் பக்கத்தில் 376 – வது அறிக்கையாக மரம் நடும் திட்டத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

 • ram subramanian August 17, 2016, 12:08 PM

  நல்ல து

 • SM Kumar February 27, 2017, 11:30 AM

  என்னக்கு Mr அர்ஜுனன் அவர்களின் போன் நம்பர் வென்னும், யாரிடமாவது இருத்தல் தயவுசேது பகிரவும்.

  நன்றி

 • Muthurajan August 12, 2017, 5:30 AM

  Very fraud person.He uses publicity for this for doing money.ask that person any question never he answered. U s no.9791426281

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz