விஸ்வரூபம் [2013]

Kamal Hassan Viswaroopam Wallpapersல்வேறு சர்ச்சைகளை கடந்து ஒரு வழியா படம் சிங்கப்பூரில் கடந்த வியாழன் அன்று வெளியாகி விட்டது. .

எந்திரன் படத்திற்குக் கூட என்னை இத்தனை பேர் விமர்சனம் எழுதக்கூறவில்லை 15 பேருக்கு மேல கேட்டுட்டாங்க.

 நான் ரஜினி ரசிகன் என்பதால் இருக்கும் ஆப்போசிட் அட்ராக்ஸன் கூட காரணமாக இருக்கலாம்.

இதன் பிறகு நீங்கள் தொடர்வதும் தொடராமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.

“விஸ்வரூபத்தை புரிந்து கொள்ள கொஞ்சம் பொது அறிவும் உலக ஞானமும் வேண்டும்” என்று கமல் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அது உண்மை தான் என்று விஸ்வரூபம் பார்த்த பிறகு தான் புரிந்து கொண்டேன், அவர் சும்மா பேச்சுக்கு கூறவில்லை நிஜமாகத்தான் கூறி இருக்கிறார் என்று.

இதோட கமல், படம் பார்க்கும் அனைவருக்கும் அமெரிக்க ஆங்கிலமும் தெரிந்து இருக்க வேண்டும் என்று கூறாமல் விட்டு விட்டார் என்று நினைக்கிறேன். இது பற்றி பின்னர் கூறுகிறேன்.

படத் துவக்கத்தில் பிராமண நபராக பெண்மை தனத்துடன் வரும் கமல், முஸ்லிம் என்று அறியும் பொழுதில் இருந்து படம் வேகம் பெறுகிறது. இவர் ஏன் இப்படி இருந்தார் என்பதன் தொடர்ச்சியாக படத்தின் மீதியை அமைத்து இருக்கிறார்கள்.

பெண் போல சாயலில் நடித்து கலக்கி இருக்கிறார், உண்மையாகவே, ஓடி வரும் போதும், நடன அசைவின் போதும் தூள். இதனுடன் இன்னொன்றையும் கூற விரும்புகிறேன் அந்த நேரத்தில் கமல் கூட நடனம் பழகும் பொண்ணுக ஒவொருவரும் ஹீரோயின் மாதிரி அவ்வளவு சூப்பர் 😉 .

கமல் பெண் போல சாயலில் நடித்து தன்னுடைய உண்மை முகத்தைக் காட்டும் தருணம் ரொம்ப நன்றாக உள்ளது, சண்டையில் இன்னும் கொஞ்சம் வேகம் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.

கமலின் மனைவியாக வரும் பூஜா குமார்… அடேங்கப்பா! 😉 இவருக்கு பிராமண பாஷை நன்றாக பொருந்துகிறது. இவர் கதாப்பாத்திரம் காமெடியுடன் கொஞ்சம் சீரியஸ். ஆண்ட்ரியா கமலுடன் அமெரிக்காவில் ஒட்டிக்கொண்டு வருகிறார், முக்கிய கதாப்பாத்திரமாக அல்ல.

முஸ்லிம்கள் சர்ச்சையே தற்போது தான் ஓய்ந்து இருக்கிறது இதில் பிராமணப் பெண் சிக்கன் சாப்பிடுவதாக வருகிறது. இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தக் காட்சி வலிந்து திணிக்கப்பட்டுள்ளது, இது இல்லை என்றால் படத்திற்கு எந்த பாதிப்புமில்லை.

படத்தில் வரும் ஆப்கானிஸ்தான் காட்சிகள் ரொம்ப அருமையாக காட்சிப் படுத்தப்பட்டு இருக்கிறது. ஹாலிவுட் படம் அளவுக்கு இல்லை என்றாலும் (குறிப்பா சண்டைக் காட்சிகள்) அதை தொடும் முயற்சியில் கமல் முயற்சித்து இருப்பதை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

வழக்கமான தமிழ் படங்களில் வரும் சண்டைகளில் எதிரிகள் சுடும் போது குண்டே படாதே! அது போல இதிலும் சில சண்டைக் கட்சிகள் உண்டு.

தீவிரவாதி ஓமர் ஆக ராகுல் போஸ் நடித்துள்ளார். இந்தக் கதப்பாத்திரத்திற்கு, இவருக்கு பதில் வேறு யாரையும் போட்டு இருக்கலாம். ஓமர் ஒரு பயங்கரமான தீவிரவாதி, அப்படி இருப்பவரை பார்த்தாலே ஒரு பயம் வரவேண்டாமா!

பின்லாடன் மாதிரி கட்டளை பிறப்பிப்பவராக மட்டும் இருந்தால் பரவாயில்லை. இவர் என்னமோ பயங்கரவாதிகளுக்கு கணினி பற்றி சொல்லிக்கொடுக்கும் கணினி நிபுணர் போல இருக்கிறார்.

இதற்கு, கொசுறு கதாப்பாத்திரத்தில் வரும் நாசரை விட்டு இருந்தாலே பட்டையைக் கிளப்பி இருப்பார்

ஆப்கானிஸ்தான் காட்சிகள் குறிப்பாக தீவிரவாதிகளுக்கு பயிற்சி தரும் காட்சிகள் எல்லாம் ரொம்ப நன்றாக உள்ளது. இதுவரை வேறு படங்களில் இது போல பார்த்த நினைவு இல்லை. செட்டிங்க்ஸ் ம் அருமை.

குறிப்பாக ஒருவரை தூக்கிலிடும் காட்சிகள் பட்டாசாக இருக்கிறது. (ஒருவரை தூக்கில் போடுவது சந்தோசமா! என்று சண்டைக்கு வந்து விடாதீர்கள், காட்சியமைப்பைக் கூறினேன்)

கமலுக்கு நம்மை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருப்பது உண்மை தான்.

அதற்காக அவருக்கு இருக்கும் உலக ஞானம், பொது அறிவு, அமெரிக்க ஆங்கில அறிவு அனைத்து தமிழர்களுக்கும் இருக்கும் என்று நினைத்தது அவருக்கு இருக்கும் அதீத நம்பிக்கை.

ஆங்கிலப் பகுதிகளுக்கு தமிழ் சப்டைட்டில் போடாமல் இருப்பது என்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர் (ஆங்கில சப்டைட்டில் கூட சில இடங்களில் இல்லை).

நான் அந்த அளவிற்கு எல்லாம் ஆங்கிலப் புலி இல்லைங்க… நிறைய வசனம் எனக்கு புரியவே இல்லை. ஒரு சில அரபி வசனங்களுக்கே சப்டைட்டில் இல்லை.

படம் விறுவிறுப்பாக எல்லாம் செல்லவில்லை.. மெதுவாகத் தான் உள்ளது. சில காட்சிகள் தவிர்த்து பரபரப்பாக எதுவுமில்லை. ஒரு முக்கிய தீவிரவாதி அமெரிக்காவில் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்.

நம்ம கமல் FBI அதிகாரியையே அசால்ட்டாக தாக்கி மடக்குகிறார். கடைசியில் ஒரு நியுக்ளியர் குண்டை செயல் இழக்க வைப்பதை என்னமோ தீபாவளி அணுகுண்டு திரியை அணைத்து விடுவது போல சப்புன்னு காட்டி இருக்கிறார்கள்.

ஒமரின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது இரும முயற்சிப்பார் ஓமர் முறைத்தவுடன் துணியை வாயில் பொத்திக்கொண்டு இருமுவார், நுணுக்கமான காட்சி. அங்கே உள்ள பெண்கள் நிலையை இது காட்டியிருக்கும்.

அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள் என்று ஓமர் கூறுவதாக வசனம் வருகிறது. கமல் இது கொஞ்சம் ஓவராக இல்லையா! இது வரை நடந்த சண்டைகளை பார்த்த பிறகுமா இப்படி ஒரு வசனம் வைத்தீர்கள்!

எத்தனை பெண்களை வன்புணர்வு செய்து இருக்கிறார்கள் / குழந்தைகளை கொன்று இருக்கிறார்கள் என்று நீங்கள் செய்திகளில் படித்ததே இல்லையா!

கமல் முஸ்லிம் பாத்திரத்தில் சரியாக இருந்தாலும் அந்தக் கூட்டத்தில் பொருந்ததாதவராகவே இருக்கிறார். அதற்கு அவரது ஒப்பனை காரணமல்ல, அவருடைய பார்வையா அல்லது… அது என்னவென்று கூறத் தெரியவில்லை.

உதாரணமா இந்தியன் படத்தில் நேதாஜி கூட கமல் இருப்பது போல வருமே அது மாதிரி. தீவிரவாத பயிற்சி எடுக்கும் காட்சிகளில் சரியாக இருக்கிறார்.

படம் “மேக்கிங்” என்ற வகையில் அசத்தலாக இருக்கிறது, இனி இது போல எடுக்கப்படும் படங்களுக்கு இது முன்னோடி போலத்தான் உள்ளது ஆனால், மற்ற எந்த வகையிலும் இது என்னை திருப்தி செய்யவில்லை.

இந்தப்படம் கமல் கூறியது போல உலக ஞானமும் பொது அறிவும் மற்றும் சொல்லாமல் விட்ட அமெரிக்க ஆங்கிலம் புரிந்தவர்களுக்கும் மட்டும் தான். படம் சாதாரண மக்களுக்கு புரிவது ரொம்பக் கஷ்டம், எனக்கும் சரியா புரியல அப்ப நானும் இந்த பிரிவில் தான் வருவேன்.

இதைப் படிக்கும் அனைவருக்கும், இது வரை நீங்கள் படம் பார்க்கவில்லை என்றால் இதை ஒரு விமர்சனமாக / அளவுகோளாக கருத வேண்டாம். ஏனென்றால் நிறையப் பேர் பயங்கரமாக பாராட்டி இருக்கிறார்கள். படத்தை வானளாவ புகழ்ந்து இருக்கிறார்கள்.

எனவே, அவர்கள் அதிக ஞானமும், அறிவும் உடையவர்களாகத் தான் நிச்சயம் இருக்க வேண்டும் அதனால், நான் கூறியது தவறாக இருக்க வாய்ப்பு அதிகம். எனக்கு “துப்பாக்கி” போல படங்கள் தான் சரி. இவர்களுக்கும் எனக்குமான தூரம் ரொம்ப அதிகம் இருக்கிறது.

நான் கமலிடம் மகாநதி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அன்பே சிவம் போன்ற இயல்பான படங்களையே எதிர்பார்க்கிறேன். மும்பை எக்ஸ்பிரஸ், ஹே ராம், ஆளவந்தான், தசாவதாரம் மற்றும் விஸ்வரூபம் போன்ற படங்களை அல்ல.

அப்படியே இது போல படங்கள் எடுத்து தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினால் தயவு செய்து அனைவருக்கும் புரிகிற மாதிரி படம் எடுங்கள்.

கமல்! பைசா செலவில்லாமல் “விஸ்வரூபம்” படத்திற்கு கோடிக்கணக்கில் இலவச விளம்பரம் செய்த / ஹைப் ஏற்படுத்திய முஸ்லிம் அமைப்புகளுக்கு மறக்காமல் நன்றி கூறி விடுங்கள்.

Directed by Kamal Haasan
Produced by Chandra Haasan, Kamal Haasan
Written by Kamal Haasan, Atul Tiwari
Starring Kamal Haasan, Pooja Kumar, Andrea Jeremiah, Rahul Bose, Jaideep Ahlawat
Music by Shankar-Ehsaan-Loy
Cinematography Sanu Varghese
Editing by Mahesh Narayanan
Studio Raaj Kamal Films International
Distributed by PVP Films, Balaji Motion Pictures
Release date(s) 25 January 2013 (Worldwide except Tamil Nadu
1 February 2013 (Hindi version)
Running time 147 minutes
Country India
Language Tamil, Hindi

கொசுறு 1

தற்போது சில காட்சிகளை நீக்கிய / மியூட் செய்த பிறகு, வெளியிட்டுக் கொள்ளலாம் என்று சமாதானம் ஆகி இருக்கிறார்கள். இதை 23 ம் தேதியே செய்து இருந்தால் எவ்வளவு பிரச்சனை சரி ஆகி இருக்கும்…! அவசியமில்லாமல் பலருக்கு மனக் கஷ்டம் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள்.

என்னமோ போங்க! முஸ்லிம் அமைப்புகள் “இது ஒரு கற்பனைக் கதை” என்று படம் துவங்கும் முன் எழுத்தில் போடக் கூறி இருக்கிறார்கள். இதனால் மக்கள் யாரும் இது உண்மையில் நடக்கிறது என்று நம்ப மாட்டார்களாம்.

இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்!! இதெல்லாம் “அலெக்ஸ் பாண்டியன்” படத்திற்கு கூட போடும் சாதாரண வழக்கமான ஒரு செயல். இதை எல்லாம் யார் கண்டுக்கப் போறாங்க!!

கொசுறு 2

அடுத்த பதிவு சர்ச்சையான பதிவு Stay Tuned!

{ 25 comments… add one }
 • Prabhu February 3, 2013, 10:07 AM

  இந்த படமும் புரியலையா.. கமல் படம் எடுக்கறதுக்கு பேசாம எல்லாத்துக்கும் கோச்சிங் கிளாஸ் எடுக்க போலாம்

 • நன்பேண்டா February 3, 2013, 10:52 AM

  பகிர்வுக்கு நன்றி.
  நமது பதிவர்கள் புகழ்ந்த அளவுக்கு படம் ஒன்றும் நன்றாக இல்லை. ஆனால் ஆஹா ஓஹோ என பதிவர்கள் புகழ்ந்ததின் காரணம் முஸ்லீம்களின் மேல் உள்ள வெறுப்பாக இருக்கும் என நினைகின்றேன்.

 • காத்த‌வ‌ராய‌ன் February 3, 2013, 11:09 AM

  பெங்களூரில் ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருந்தாலும், நேற்று இரவுக்காட்சிதான் பார்க்க முடிந்தது. பயங்கர கூட்டம், சிலர் தமிழ்நாட்டில் இருந்து பார்க்க வந்திருந்தனர்.

  முஸ்லீம் போராட்டம்:
  தடை செய்யும் அளவிற்கு பெரிய அளவில் அதுவும் இல்லை. சில வசனங்களை முடே செய்தாலே போதும் [குறிப்பாக மதுரை, கோவை].

  கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டு ப.சிதம்பரம் அடுத்த பிரதமராக தகுதியானவர் என்று கமல் பேசியதால், பிரதமர் கனவில் இருக்கும் ஜெயலலிதாவின் பழிவாங்கல் உணர்ச்சிக்கு முஸ்லிம்கள் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டு உள்ளனர். ஒரே கல்லில் பலமாங்காய் அடித்து விட்டு ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி எப்படி நடிக்கிறார், பழம்பெரும் நடிகை ஆச்சே! ஆனால் ஒன்று பிரதமர் என்ன ஜெயலலிதா ஒரு கவுன்சிலராகக் கூட இருக்க தகுதியற்றவர் என்பது என் கருத்து.

  விஸ்வரூபம்:
  1. படத்தின் மேக்கிங் நன்றாக இருந்தது.
  2. படத்தின் முதல் சண்டைக் காட்சி அருமை.
  3. திரைக்கதையில் பல பொத்தல்கள். ஆப்கான் – அமெரிக்கா காட்சிகளை சரியாக இணைக்கவில்லை. இரண்டும் தனித்தனியாக ஒட்டாமல் உள்ளது.
  4. ஆப்கானில் இருந்து கமல் ஏன் வெளியேறினார்? நண்பர்களாக இருந்த உமரும் கமலும் ஏன் எதிரிகளானர்கள்? [ஒரு காட்சியில் காரில் செல்லும் போது சலீமிடம் உமர் கூறுவார், ” கமல் நமக்கு எதிரி, உனக்கு முழுக்கதையும் தெரியாது” என்று.] அமெரிக்கர்களுக்கே தெரியாமல் இந்திய “ரா” ஏன் அமெரிக்காவை காப்பாற்ற வேண்டும்?
  5. நீங்கள் கூறியது போல் பல இடங்களில் சப்-டைட்டில், வசனப்பிரச்சனை இருந்தது. ஹெட்போனில் கேட்டால்தான் பல இடங்களில் வசனம் புரியும்.
  6. இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை.

  +++++++++++++++++++++
  கமல் அறிவாளிதான். படத்தின் கதை திரைக்கதையை அனுபவம் உள்ளவர்களிடம் விவாதிப்பதில் அவருக்கு என்ன தயக்கம் என்றுதான் புரியவில்லை. விவாதத்தில்தான் இத்தகைய குறைகள் எல்லாம் களையப்படும்.

 • salemdeva February 3, 2013, 1:54 PM

  //Stay Tuned!// எவ்ளோ நேரம் வெயிட் பண்ணனும்..?! 🙂
  பதிவுல நீங்க ஒரு ரஜினி ரசிகர்ன்னு காட்டிட்டீங்க…!! 😉

 • Rajan February 3, 2013, 6:53 PM

  //நான் கமலிடம் மகாநதி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அன்பே சிவம் போன்ற இயல்பான படங்களையே எதிர்பார்க்கிறேன்.// –

  நெசம்தான்..நானும் கூட அதான் நினைக்கறேன்…

 • mahesh February 3, 2013, 8:04 PM

  you have just proven that you are biased when writing review for Kamal film . நானும் ரஜினி ரசிகன் தான். ஆனால் படங்களை நடு நிலையோடு பார்ப்பேன்.

  //இதன் பிறகு நீங்கள் தொடர்வதும் தொடராமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.//

  இதை சாக்காக கூற வேண்டாம்.

 • prabhu sg February 3, 2013, 8:19 PM

  ok .

  உங்கள்ளுக்கு சிவாஜி மாதிரி படங்கள் தான் சரி.

  எந்திரன் போன்ற படத்தில் வரும் neural schema , silicon red chip ,destruction program , இது எல்லாம் பாமரன்னுக்கு புரியுது !!!!

  இது உங்களிடம் இருந்து எதிர் பார்த்ததுதான் !!!

 • ilavarasan February 3, 2013, 10:34 PM

  வணக்கம் கிரி அவர்களே,
  நானும் விஸ்வரூபத்தை காண ஆவலாகவே இருக்கிறேன்.மேலும் உங்களின் பாரபட்சமற்ற விமர்சனமும் அருமை.
  நன்றி

 • வருண் February 3, 2013, 10:45 PM

  நல்ல விமர்சனம், கிரி. நிறைகளையும் குறைகளையும் சொல்லி இருக்கீங்க. மேலும் இஸ்லாமியரை பாதிக்கிறாப்பிலே வசனம் எதுவும் இல்லைனும் நீங்க “மற்றவர்கள்” போல் எதுவும் சொல்லாமல் விட்டது, பாராட்டுக்குரியது. 🙂

  ஆனால் நீங்க என்னதான் நடுநிலைமையா எழுதினாலும் இது ஒரு ரஜினி ரசிகர் விமர்சனம்ணுதான் பார்க்கப்படும்! 🙂

 • john February 3, 2013, 10:51 PM

  “”ஒரே கல்லில் பலமாங்காய் அடித்து விட்டு ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி எப்படி நடிக்கிறார், பழம்பெரும் நடிகை ஆச்சே! ஆனால் ஒன்று பிரதமர் என்ன ஜெயலலிதா ஒரு கவுன்சிலராகக் கூட இருக்க தகுதியற்றவர் என்பது என் கருத்து.””

  சரியாய் சொன்னிங்க

 • arun February 4, 2013, 6:00 AM

  தல
  எனக்கும் படம் புடிக்கல + புரியல
  சொன்னா திட்டுறாங்க அதான் விட்டுட்டேன்
  100 சதவீதம் ஒத்து போறேன் உங்க வரிகள் உடன்

  ரஜினி ரசிகன் ந இருக்குறத நாள ஒருத்தரும் நம்ப மாட்டேங்குறான் படம் எனக்கு புடிக்கல நு சொன்னா

  கொசுறு 2 waiting

  – அருண்

 • Lenin M February 4, 2013, 6:04 AM

  ‘அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள் என்று ஓமர் கூறுவதாக வசனம் வருகிறது. கமல் இது கொஞ்சம் ஓவராக இல்லையா! இது வரை நடந்த சண்டைகளை பார்த்த பிறகுமா இப்படி ஒரு வசனம் வைத்தீர்கள்! எத்தனை பெண்களை வன்புணர்வு செய்து இருக்கிறார்கள் / குழந்தைகளை கொன்று இருக்கிறார்கள் என்று நீங்கள் செய்திகளில் படித்ததே இல்லையா!’

  கிரி நீங்க படம் சரியாய் கவனிகலைன்னு நெனைக்கிறேன் . படத்துலே கமல் அப்படி சொன்ன உடனே அமெரிக்க காரன் ஓமர் வீட்ல குண்டு போட்டுடுவான்.

 • Lenin M February 4, 2013, 6:40 AM

  ‘அடுத்த பதிவு சர்ச்சையான பதிவு Stay Tuned!’

  waiting

 • Gowrishankar.P February 4, 2013, 12:29 PM

  “ஆங்கிலப் பகுதிகளுக்கு தமிழ் சப்டைட்டில் போடாமல் இருப்பது என்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர் (ஆங்கில சப்டைட்டில் கூட சில இடங்களில் இல்லை)”
  – இல்லையே,நான் பாத்தப்போ எல்லா இடத்துலயும் சப்டைட்டில் போட்டாங்களே. பெங்களூர்-ல பார்தேன்.

  “கூட நடனம் பழகும் பொண்ணுக ஒவொருவரும் ஹீரோயின் மாதிரி அவ்வளவு சூப்பர்”
  – ஹிஹிஹி, நானும் அதேதான் என் friend-u கிட்ட சொன்னேன் 🙂

  “வழக்கமான தமிழ் படங்களில் வரும் சண்டைகளில் எதிரிகள் சுடும் போது குண்டே படாதே”
  – தமிழ் படத்துல மட்டும் இல்ல, பல ஆங்கில படங்கள்லயும் அப்படிதான்.

 • saranya February 4, 2013, 4:35 PM

  all are saying that viswaroop hindi broke the records did by endhiran in its first weekend. please give us clear picture

 • கிரி February 4, 2013, 7:32 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @சேலம் தேவா மகேஷ் பிரபு மோகன் உங்களுக்கு விரைவில் விரிவாக பதில் கூறுகிறேன்.

  @காத்தவராயன் நீங்கள் கூறியதில் முழு உடன்பாடு. இங்கேயும் செம கூட்டம். டிக்கெட் வாங்க பெரிய வரிசை.

  @வருண் 🙂

  @அருண் 🙂

  @லெனின் அது கமல் கூறுவதல்ல ஒமர் கூறுவது. நீங்கள் கூறுவது சரி என்றாலும் உங்கள் கூற்றுப்படி ஓமர் வாழ்க்கையில் தற்போது தான் முதல் முறையாக பெண்களையும் குழந்தைகளையும் அமெரிக்க படையினர் கொல்வதை பார்ப்பதாக அர்த்தம் வருகிறது. இது சாத்தியம் என்று கருதுகிறீர்களா!

  @கௌரிஷங்கர் சப்டைட்டில் இருந்தது ஆனால் அனைத்து இடங்களுக்கும் சப்டைட்டில் இல்லை.

  நடனம் பொண்ணுக .. சேம் சேம் 😉

  ஆமாம் தமிழ் படம் மட்டுமல்ல ஆங்கிலப் படங்களிலும் தான். அடுத்த முறை எழுதும் போது மைண்ட் ல வைத்துக்கிறேன் 🙂

  @சரண்யா எதுக்குங்க வம்பு! அப்புறம் நான் ஏதாவது கூற அதுக்கு ஒரு பஞ்சாயத்து நடக்கும். அப்புறம் நீங்க தான் நாட்டாமை ஆகணும் 🙂 🙂 தேவையா! 🙂

 • வருண் February 5, 2013, 12:59 AM

  கிரி: உங்களுக்காக நான் பதில் சொல்றேன்.

  சரண்யா: ஒரு படம் வெற்றியடைவதை யாருமே தடுக்க முடியாது! விஸ்வரூப் ஹிந்தியில் 1000 பிரிண்ட்கள் வெளிவந்துள்ளது! 7.65 கோடிகள் இது வரை கலக்சன்

  எந்திரன் 800 பிரிண்ட் வெளிவந்தது. 7.5 கோடிகள் வசூல் ஆனது. ஆக விஸ்வரூபம் 5% போல அதிக வசூல் செய்துள்ளது. எந்திரன் இரண்டாவது வாரமும் ஓரளவுக்கு நல்லாப் போச்சு. விஸ்வரூபம் அதை விட நல்லாப் போகலாம்.

  இதுதான் இன்றைய நிலை!

  யு எஸ், மலேசியா, யு கே போன்ற நாடுகளில் எந்திரன் பெற்ற வெற்றி விஸ்வரூபம் பெறவில்லை!

  மையக்கிழக்கு நாடுகளில் எந்திரன் பிரச்சினை இல்லாமல் ஓடுச்சு. விஸ்வரூபம் ரிலீஸே ஆகல.

  தெலுகுல ஹைதராபாத்ல இன்னைக்கு 14 திரயரங்குலதான் விஸ்வரூபம் ஓடுது. எந்திரன் மிகப்பெரிய அளவில் ஓடிக்கொண்டு இருந்துச்சு!

  கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் எந்திரன ரெக்கார்டை விஸ்வரூபம் வீழ்த்த முடியாது என்பதே உண்மை. ஆனால் எந்திரன் 140 கோடி செலவில் எடுத்த படம். வ்ஸ்வரூபம் 90 கோடினு சொல்றாங்க.

 • கிரி February 5, 2013, 7:47 AM

  நன்றி வருண் 🙂

  வருண் இன்னும் மலேசியாவில் விஸ்வரூபம் வெளியாகவில்லை.

  @சரண்யா விஸ்வரூபம் முதல் நாளில் 1.89 கோடி வசூலித்து இருக்கிறது. இது எந்திரன் படத்தின் முதல் நாள் வசூலை விட கொஞ்சம் குறைவு. இதற்கு தான் சண்டை நடந்து கொண்டுள்ளது 🙂 மற்றபடி வருண் மேலே கூறி இருப்பது சரி தான்.

 • Raj Kumar February 5, 2013, 9:58 AM

  கிரி, நடுநிலையோடு எழுதி இருக்கீங்க…

  //அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள் என்று ஓமர் கூறுவதாக வசனம் வருகிறது. கமல் இது கொஞ்சம் ஓவராக இல்லையா! இது வரை நடந்த சண்டைகளை பார்த்த பிறகுமா இப்படி ஒரு வசனம் வைத்தீர்கள்! எத்தனை பெண்களை வன்புணர்வு செய்து இருக்கிறார்கள் / குழந்தைகளை கொன்று இருக்கிறார்கள் என்று நீங்கள் செய்திகளில் படித்ததே இல்லையா!///

  அந்த காட்சி முடிந்தவுடன், அதாவது ஓமர் அப்படி சொல்லி முடித்தவுடன், அமெரிக்கன் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஒன்றை ஓமர் வீட்டின் மேல் எரிந்து விடுவார்…

  படத்தின் நிறைய கேள்விக்கான பதிலை அடுத்த பாகத்தில் எதிர்பார்க்கலாம்..

  நாசரை யார் கொன்றார்..??
  கடைசி கிளிபிங்க்ஸில் ஓமர் ஏன் கமலை சுட்டான், கமலை ஏன் அமெரிக்க படை காப்பற்றியது..??

  அடுத்து என்ன எந்திரன் vs விஸ்வரூபம் ஸ்பெஷலா..??? 🙂

 • வருண் February 5, 2013, 9:16 PM

  கிரி: மலேசியாவில் ரெண்டு நாள் ஓடியது. அதுக்கப்புறம் பெட்டிக்குள்ளே தூக்கிப் போட்டு வச்சிருக்காங்க. மறுபடியும் வெளியே வரும்.

  இந்தியில்,

  முதல் நாளில், எந்திரனைவிட கொஞ்சம் குறைவாக வசூல ஆனது. வீக் எண்ட் கலக்சனில் எந்திரனை விட கொஞ்சம் மேலே போச்சு 25 லட்சம் போலே. திங்கள் வசூல் எந்திரன் போலவே 1.25 கோடிகள். ஆக எந்திரனுக்கு சமமாக இதுவரை போயிட்டு இருக்கு. இந்த வாரக்கடைசியில் எப்படிப் போகுதுனு பார்க்கணும். ரெண்டு புதுப்படங்கள் வெளி வருது.

  யூ கேல எந்திரன் முதல் வார வசூல் £284,600 விஸ்வரூபம் இரண்டு வார வசூல்
  £ 2,22,693. (முதல் வாரம் ரொம்ப கம்மி 94 ,000 ரெண்டாவது வாரம் ஓரளவுக்கு காப்பாத்தி 74,000 இருக்கு)

  யு எஸ்ஸிலும் இதே நிலைமைதான்.

  சும்மா எந்திரனை ப்ரேக் பண்ணிடிச்சுனு சொல்லப்படாது. ப்ரேக் பண்ணினால் நாங்க ஏற்றுக்கத் தயாராத்தான் இருக்கோம். 🙂

 • கிரி February 6, 2013, 6:50 AM

  @ராஜ்குமார் நீங்கள் கூறியதையே தான் லெனினும் கூறி இருக்கிறார் அதற்கு, பதில் கூறி இருக்கிறேன் பாருங்க.

  இது கூட கமல் எப்படி அல்கொய்தா ல சேர்ந்தாரு..அங்கே இருந்து எப்படி பிரிந்து வந்தாரு என்று எனக்கு புரியாத விஷயங்கள் பல.

  இல்லை நீங்கள் நினைப்பதற்கு சம்பந்தமே இல்லை.

  @வருண்

  அடுத்த வார இறுதியில் அனைத்தும் தெரிந்து விடும்.

  “சும்மா எந்திரனை ப்ரேக் பண்ணிடிச்சுனு சொல்லப்படாது. ப்ரேக் பண்ணினால் நாங்க ஏற்றுக்கத் தயாராத்தான் இருக்கோம்.”

  அதே அதே! 🙂

 • Srinivas February 8, 2013, 12:03 AM

  இதே தான் என்னுடைய கருத்தும்…. அட்டகாசமான விமர்சனம்….
  நான் தலைவர் ரசிகன் தான்… ஆனால் இந்த படத்தை இவ்வளவு ஹைப் கொடுக்காமல் இருந்திருந்தால் நான் நன்றாக ரசித்திருப்பேன் என நினைக்கிறன் ,,,

 • kolangi February 9, 2013, 9:14 AM

  hi,
  na innaikuthan viswaroopam parka porean… Nan ithu varaikum kealvi padathu… Positive comments only… Neega than +ve and -ve mix panni koduthu irukinga… KAMAL sir tamil cinema vai adutha stage iku vuyartha ninaikalavillai…vuyarthi vittar… Neega sonnathu pola tamilargal silar ULAGA ARIVU , POTHU ARIVU and AMERICAN English teriyamal irukalam …anal intha padam athi thoondum oru thoondukolaga irukum enpathil thuliyum iyam illai….
  Tharpothu kuda enthiran vs viswaroobam compare panni than peasuringa aparam eppadi unga kita irunthu +ve command varum…
  Thayavu seithu ithu pontru thelivatra parvaiyil vimarsanam eluthu vathai kuraithu kolungal…
  “Kulanthaiyai killi vidu thotilai yadathirgal”…. Nan kamal rasigan entru enna veandam… Nan thiraimaikalai mattum rasipavan…
  Ungal vimarsanam therai arangirku selbavarkalai kuda… Poga vitalmal seiyalam… Amm eppaluthum EAZHUTHUKALUGU uyir ullathi maranthu vitathigal….
  ….UNGAL NANBAN….

 • சிவா February 11, 2013, 12:03 PM

  கிரி, விமர்சனம் அனுபவித்து எழுதி இருக்கீங்க. ஆனா, சிலவிசயங்கள் உங்களூக்கு புரியவெக்கனும்ன்னு ஆசை படுறேன்! உமர் “அமெரிக்கவீரர்கள் பெண்கள்,குழந்தைகளை கொல்லமாட்டாங்க” என்றுமட்டும் சொல்லவில்லை. “அவங்களுக்கு நாம வெச்சுருக்கிற யுஎஸ் வீரர்கள் உயிரோட வேணும், அதனால அவங்க பெண்கள்,குழந்தைகளை கொல்லமாட்டாங்க”( சமீபத்தில்தான் ஆப்கனின் ஒரு வீட்டில் தீவிரவாதிகளை சுடுகிறேன் என்கிற சாக்கில் மன உளைச்சலில் பெண்கள், குழந்தைகளை கொன்ற அமெரிக்க வீரர் ஒருவருக்கு மனித உரிமை ஆணையம் எடுத்த கடும் முயற்சியால் ராணுவதண்டனை அளிக்கபட்டுள்ளது.) ஆனால் நீங்கள் சொல்வதுபோல சப்டைட்டில் இல்லாமல் இப்படி பல வசனங்கள் வருவதால் இந்த குழப்பங்கள் ஏற்படலாம்! விஸ்வரூபம் 2ல் இந்த பிரச்சனைகள் இல்லாமல் கமல் செய்யவேண்டும்! தீடிரென பிபி கமல் வீட்டை முற்றுகையிட ஏதேனும் காரணங்கள் இருக்கும், அதுவும் 2ம்பாகத்தில் விளக்கபடலாம்.

 • Arjun Sridhar UR February 13, 2013, 11:04 AM

  கிரி அண்ணே,
  http://kalaiy.blogspot.in/2013/02/blog-post_12.html
  இதை கொஞ்சம் படிக்கவும்

Leave a Comment