சிங்கப்பூர் செய்திகள் – PR – PEP – கடன் வசதி – விபத்து

சிங்கப்பூரில் எடுக்கப்படும் பர்சனல் கடனுக்கு வட்டி மிக மிகக் குறைவு. எனவே இது வரை இது பற்றி [சிங்கப்பூரில் உள்ளவர்கள்] தெரியாதவர்கள் இருந்தால், இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நான் எங்கள் ஊரில் இருந்த கடனுக்கு, இங்கே கடன் வாங்கித் தான் பெரும்பாலானவற்றைக் கட்டினேன்.

இதில் உங்கள் சம்பளத்திற்கு ஏற்றவாறு கடனைப் பெறலாம்.

எனக்கு இது போல ஒரு வசதி உள்ளது என்பதே நான் இங்கு வந்து இரண்டு வருடம் கழித்த பிறகு தான் தெரிய வந்தது.

DBS வங்கியில், உதாரணமாக 4 லட்சம் [Approx 10000 SGD, INR*43] கடன் பெற்று, உங்களால் அதை ஆறு மாதத்தில் கட்ட முடிந்தால், உங்களுக்கு மொத்த வட்டியே 8 ஆயிரம் மட்டுமே வரும், 6 மாதம் கடந்தால் வட்டி அதிகமாகி விடும், எனவே கவனமாக இருக்க வேண்டும்.

இதே நம் ஊரில் என்றால் குறைந்தது 2 வட்டி போட்டால் கூட [4 * 2= 8] மாதமே 8 ஆயிரம் வரும். ஆறு மதத்திற்கு 6 * 8= 48K.

இதற்கு Cashline என்ற கணக்கு துவங்க வேண்டும், ஆண்டு சந்தா சில சமயங்களில் வசூலிப்பார்கள். ஒரு சிலருக்கு இது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கும். எனக்கு இந்த ஆண்டு “ஆண்டு சந்தா” 80 SGD வசூலித்தார்கள்.

நமக்கு இது போல கட்டணம் விதித்தால் “சரி! வேறு வழியில்லை, கட்டிவிடுவோம்!” என்று கட்டி விடாதீர்கள். வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பி அந்தக் கட்டணத்தை தள்ளுபடி செய்யக் கூறினீர்கள் என்றால் தள்ளுபடி செய்து விடுவார்கள்.

இதற்கு உங்கள் கணக்கு சரி வர பராமரிக்கப்பட்டு இருந்தால் போதுமானது.

நான் அவர்களுக்கு [DBS] மின்னஞ்சல் செய்து என்னுடைய கணக்கின் சரியான நிலையைக் கூறி, தள்ளுபடி செய்யக் கூறிய பிறகு, அவர்களும் பதில் பேசாமல் தள்ளுபடி செய்து விட்டார்கள்.

எனவே, நாம் கேட்டுப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. சிங்கப்பூரில் பெரும்பாலும் இது போல கேட்டால் தள்ளுபடி செய்து விடுவார்கள். எனவே கேட்டு என்ன ஆகப் போகிறது என்று கேட்காமல் இருக்காதீர்கள். இது நம் ஊருக்குக் கூட பொருந்தும்.

கடனட்டை மூலமாகவும் கடன் பெறலாம் ஆனால், நீங்கள் கடனட்டையை வழக்கமான தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது, உங்கள் கடனை முழுவதும் கட்டும் வரை.

இல்லை என்றால் நீங்கள் தற்போது வாங்கிப் பயன்படுத்தும் பொருள் / சேவைக்கும் சேர்த்து வட்டி போட்டு விடுவார்கள்.

எனவே கடனட்டை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றால் மட்டும் இதில் வாங்கலாம் அல்லது வேறு வங்கியின் கடனட்டை பெற்று அதைப் பயன்படுத்தலாம் உங்களுடைய வழக்கமான தேவைகளுக்கு.

சிங்கப்பூரில் தற்போது PR [Permanent Resident] போன்றவற்றை வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிதாக வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகள் கடுமை ஆக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே PR ஆக இருந்தவர்களில் பலருக்கு கூட புதுப்பிப்பு செய்யப்படவில்லை. PR போலவே உள்ள ஒரு வசதி PEP [Personalized Employment Pass] ஆகும்.

இதில் PR போல ஐந்து வருடங்கள் [Validity] உள்ளது ஆனால், CPF [Central Provident Fund] கிடையாது மற்றும் சொத்துக்கள் வாங்க முடியாது.

முன்பு இதைப் [PEP] பெற வருட சம்பளம் 36000 SGD ஆக இருந்தது தற்போது, அதை 144000 SGD ஆக உயர்த்தி விட்டார்கள், அதோடு ஐந்து வருடத்தில் இருந்து மூன்று வருடமாக குறைத்து விட்டதாகக் கூறினார்கள் [திருத்தம் இருந்தால் கூறலாம்].

எனவே வருடம் 144000 SGD என்பது பலருக்கு சாத்தியமே இல்லாதது. எனவே இது மாதம் 12000 SGD வாங்குபவர்களாலே பெற முடியும். எனவே இனி இதில் விசா பெறுபவர்கள் குறைந்து விடுவார்கள்.

சிங்கப்பூர் குடியுரிமை [Citzenship] பெற்றவர்கள் மற்ற நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு காரணமாக விலைவாசி, வாடகை உயர்வு, வீடுகளின் விலை மதிப்பு உயர்வு, கலாச்சார பிரச்சனைகள் ஆகியவை கூறப்படுகிறது.

இது அரசுக்கு ஒரு தலைவலியாக உள்ளது. கீழ் மட்ட வேலைகளை செய்ய இங்குள்ளவர்கள் தயாராக இல்லை ஆனால், மற்றவர்களும் வரக் கூடாது என்று நினைக்கிறார்கள். இது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை தான்.

இதை அரசு இது வரை சரியாக கையாண்டு வருவதாகவே நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் பிரச்சனை கூடலாம் என்றே கருதுகிறேன்.

இவர்கள் கோபத்தில் நியாயம் உள்ளது என்பதே என்னுடைய தனிப்பட்டக் கருத்து. சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டினரின் பங்கும் பெருமளவில் உள்ளது என்பதும் மறுக்க முடியாது. இது பற்றி தனியாகவே எழுதலாம் ஆனால், “சில” காரணங்களால் வேண்டாம் என்று எழுதவில்லை :-).

Francisசில வாரங்களுக்கு முன் பள்ளியில் இருந்து குழந்தைகள் வெளியே வரும் போது விதிமுறைகளைப் பின்பற்றாமல் வந்த லாரி மோதி, அதே இடத்தில் இரு குழந்தைகள் இறந்து விட்டார்கள்.

இதில் மிகப்பெரிய சோகம் இரு குழந்தைகளுமே ஒரே குடும்பம்.

இது போல சம்பவங்கள் சிங்கப்பூரில் எப்போவாவது தான் நடக்கும் என்பதால், சிங்கப்பூர் முழுவதும் இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டது.

ரொம்பக் கொடுமை இது.

இதற்கு அந்த ஓட்டுனர் [56] தன் தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்புக்கேட்டார்.

இந்தக் குழந்தைகளின் தந்தை “ஓட்டுனர் விபத்து செய்து உடனே ஓடி விடவில்லை [Hit and Run] எனவே நான் அவரை மன்னிக்கிறேன், என்னுடைய கிறித்துவ மதம் மன்னிக்கவே கூறுகிறது” என்று கூறி விட்டார்.

இவர் மன்னித்தாலும் சட்டம் அதன் கடமையைச் செய்யும். இதற்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை.

இந்த இரு குழந்தைகள் இறுதி ஊர்வலத்தில் திரளான சிங்கப்பூர் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இது பற்றிய படங்களை இங்கே காணலாம். எனக்கும் இரு குழந்தைகள் உண்டு என்ற வகையில் இந்த செய்தி ரொம்பவே என்னை காயப்படுத்தியது.

“எங்களுக்கும் அந்த ஓட்டுனருக்கும் இதன் பிறகு மிகவும் சிரமமான நிலை தான், அடுத்ததை பார்த்துப் போக வேண்டியது தான்” என்று பெருந்தன்மையாக கூறி இருக்கிறார்.

Dragon danceசீனப்புத்தாண்டு கடந்த வாரம் முடிந்தது அதையொட்டி எங்கள் அலுவலகத்தில் வருடாவருடம் வைக்கும் சீன விருந்து வைத்தார்கள்.

வழக்கம் போல மறந்து அசைவம் தேர்வு செய்து விட்டேன்.. எனக்கு மீனில் மீன் ஃப்ரை தவிர வேறு எதுவும் பிடிக்காது.

இதில் ஃப்ரை தவிர மற்ற எல்லாமே இருந்தது.

இதில் பல வகையான உணவுகளை கலந்து மேலே தூக்கிப் போட வேண்டும் [Chopsticks உதவியுடன்].

எவ்வளவு உயரமாக போடுகிறோமோ அவ்வளோ நல்லது 🙂 . பின் அதை அனைவரும் சாப்பிட வேண்டும் [மேசை பெரியதாக பெரிய தட்டுடன் இதற்கான வடிவமைப்பில் இருக்கும்].

இதே போல சீனப்புத்தாண்டு முடிந்தவுடன் ஒவ்வொரு நிறுவனமும் / கடைகளும் தங்கள் கடையின் முன் / உள்ளே டிராகன் டான்ஸ் ஆட வைப்பார்கள். இதன் மூலம் நல்லது நடக்கும், கெட்ட விஷயங்கள் அகலும் என்பது அவர்கள் நம்பிக்கை.

நாங்கள் சாப்பிட சென்று இருந்த ஹோட்டல் உள்ளே இருந்த காம்ப்ளெக்ஸ் ல் இது போல டிராகன் டான்ஸ் ஆடிக் கொண்டு இருந்தார்கள். நாங்கள் செல்லும் போது ஏறக்குறைய முடிந்து விட்டது, வருத்தமாக இருந்தது.

அங்கு எடுத்த ஒரு நிமிடக் காட்சிகளை பார்க்க விரும்பினால் இங்கே செல்லுங்கள். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இது போல அடிக்கடி காண முடியும்.

ங்கள் அலுவலகத்திற்கு AC சர்வீஸ் செய்ய ஒரு தமிழர் வருவார். அவர் ஜூன் மாதம் நிரந்தரமாக, இந்தியா கிளம்பப் போவதாகக் கூறினார். அதோடு, அவர் கூறிய சில காரணங்கள் / தகவல்கள் என்னை ரொம்பக் கவர்ந்தது.

இது பற்றி தனிப் பதிவாக எழுதுகிறேன் காரணம், எனக்கும் இதில் தொடர்பு இருக்கிறது.

கொசுறு 1

Balachandran

                                                             No comments

Image Credit – The Hindu –  More details

கொசுறு 2

Vallinamதமிழ்ப் படங்களில் வரும் திகில் / பேய் படங்கள் பெரும்பாலும் காமெடியாகவே இருக்கும். எடுப்பவர்களும் ஒரு தரத்துடன் எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லையா என்று தெரியவில்லை.

நிறைய பேய் படங்கள் வந்தாலும் இது வரை வந்த படங்களில் என்னைக் கவர்ந்தது முதலில் “உருவம்” மோகன் நடித்தது. சிறு வயதில் இது பார்த்து இரண்டு நாள் பயந்து போய் இருக்கிறேன்.

தற்போது பார்த்தால் காமெடியாக தெரியலாம். இதன் பிறகு ரசித்த படங்கள் என்றால், மாதவன் நடித்த “யாவரும் நலம்”, ஆதி நடித்து அறிவழகன் இயக்கிய “ஈரம்” படம்.

தற்போது “பீட்சா”. இந்த மூன்று படங்களைப் பற்றி சிறு குறிப்பு கொடுத்தாலே எனக்கு பெரும் குறிப்பு ஆகி விடும் என்பதால் இதோடு நிப்பாட்டுகிறேன் 🙂 .

“ஈரம்” படம் இயக்குனர் அறிவழகன் [இயக்குனர் “அறிவழகன்”, தன்னுடைய நண்பர் என்று, பதிவர் / நண்பர் / அரசியல்வாதி “அப்துல்லா”, எதோ ஒரு பதிவில் என்னிடம் கூறியதாக நினைவு] தற்போது நகுலை வைத்து “வல்லினம்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இது “பேஸ்கட் பால்” விளையாட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. “ஈரம்” படத்தில் திரைக்கதை அசத்தலாக இருக்கும். கடந்த வாரம் கூட இந்தப் படம் பார்த்தேன். இதே போல இந்தப்படமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இதன் தயாரிப்பாளர் “ஆஸ்கார் ரவிச்சந்திரன்”.

கொசுறு 3

இந்த வாரம் வெளியாகப் போகும் “ஆதிபகவன்” படம் செல்லப்போகிறேன். இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட படம். என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா! என்று பார்க்க வேண்டும்.

ரொம்ப எதிர்பார்ப்பு வைத்து பார்த்த சமீப படங்கள் பெரும்பாலானவை [துப்பாக்கி தவிர] ஏமாற்றி விட்டன… பார்ப்போம்!

{ 18 comments… add one }
 • கோவி.கண்ணன் February 20, 2013, 10:05 AM

  //நமக்கு இது போல கட்டணம் விதித்தால் “சரி! வேறு வழியில்லை, கட்டிவிடுவோம்!” என்று கட்டி விடாதீர்கள். வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பி அந்தக் கட்டணத்தை தள்ளுபடி செய்யக் கூறினீர்கள் என்றால் தள்ளுபடி செய்து விடுவார்கள். இதற்கு உங்கள் கணக்கு சரி வர பராமரிக்கப்பட்டு இருந்தால் போதுமானது.//

  ஆண்டுக்கான உறுப்பினர் கட்டணம் நான் கட்டிவிட்டு, கட்டிவிட்டேன், எனக்கு திரும்ப வேணும் என்று கேட்டேன், அக்வண்டில் போட்டுவிட்டார்கள்.

 • Vijay February 20, 2013, 1:16 PM

  // சிங்கப்பூரில் எடுக்கப்படும் பர்சனல் கடனுக்கு வட்டி மிக மிகக் குறைவு //
  கில்லாடி, எனக்கு ஒரு வேலை வாங்கிகுடுங்க சிங்கப்பூர்ல 🙂

 • prakash February 20, 2013, 2:24 PM

  am in Spass in last 4 years – can i get loan ?

 • Swami February 20, 2013, 3:12 PM

  தெளிவான நடையுடன் பயனுள்ள செய்திகள் !!! முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

 • r.v.saravanan February 20, 2013, 4:31 PM

  ஈரம் படம் இன்னும் பார்க்கவில்லை கிரி பார்க்க வேண்டும் நீங்கள் சொல்வதை பார்க்கும் போது வல்லினம் மேல் எதிர்பார்ப்பு கூடுகிறது

 • Gowrishankar.P February 20, 2013, 4:32 PM

  பாஸ் “கொசுறு 1”, எனக்கு கொஞ்சம் புரியல. explain பண்ணிடுங்களேன்.

 • rajesh v February 20, 2013, 9:53 PM

  இந்தக் குழந்தைகளின் தந்தை “ஓட்டுனர் விபத்து செய்து உடனே ஓடி விடவில்லை [Hit and Run] எனவே நான் அவரை மன்னிக்கிறேன், என்னுடைய கிறித்துவ மதம் மன்னிக்கவே கூறுகிறது” என்று கூறி விட்டார். இவர் மன்னித்தாலும் சட்டம் அதன் கடமையைச் செய்யும்.

  ——————————————————————————–
  சட்டம் மட்டுமே தண்டனை தர வேண்டும். மனிதர்கள் கூடாது.

 • khan February 21, 2013, 7:32 AM

  nandraga irunthadu.aadithbhahan ticketai kandippaga photo pidithu post seiyavum.

 • ANaND February 21, 2013, 10:30 AM

  Wow…. 6 masathukku. Verum 8000 thana… Super

 • ராமலக்ஷ்மி February 21, 2013, 12:14 PM

  விபத்து வருத்தம் அளிக்கிறது. பெருந்தன்மையுடன் மன்னித்த தந்தை நெகிழ வைக்கிறார். பள்ளி zone -ல் தனிக்கவனத்துடன் செல்ல வேண்டுமெனும் பொறுப்பு ஓட்டுநர்களுக்கு ஏற்படட்டும்.

 • arun February 22, 2013, 1:03 AM

  சிங்கப்பூர் பற்றி நிறைய விஷயங்கள்
  தகவலுக்கு நன்றி தல

  – அருண்

 • Singapore Tamilan February 23, 2013, 9:34 AM

  //
  சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டினரின் பங்கும் பெருமளவில் உள்ளது என்பதும் மறுக்க முடியாது.
  //

  This is a mistake. The Singapore government ( PAP) benefitted from it and still benefitting. Not the average citizen. The average citizen don’t benefit from high GDP and strong currency. Every single thing in this country unaffordable. A house itself is a struggle to get. Looking for a job is a nightmare for a citizen. We have to compete with so many immigrants from all over. We have to compete with Malaysians, PRC (China), Indian Nationals, Filipinos, Myanmar, Indonesians, Vietnamese and all the western people. Basically its Singaporeans vs Rest of the World. On the contrary the immigrants gains alot.

  The government have billions of dollars in their reserves.The ministers pay themselves high salaries, in fact much higher than ministers around the world. The current Singapore government is obsessed with GDP and Sing dollar value. Instead of running a country like a country, they are running this country like a company. Sing dollar value should be always higher for them so that it can lure thousands of immgrants like yourself to this country. A 1000 dollar is a 1000 dollar to a singaporean but the same 1000 dollar is siginificantly different amount for you in Indian rupees. Like you mentioned (*43) INR. I hear myself a guy from Tamil Nadu who works here says when he goes back to india, he walks like a tourist. So much of money. Immigrants who claimed they have contribute to Singapore economy growth, at the same time will never have the dignity to admit they have contributed enough to their own pockets. No one contributes for free, especially Indian Nationals.

  When my ancestors arrived here, Singapore was under British rule then japanese rule for few years, then back to british rule then Malaysia rule and then finally independence. Before 1965, there was no such thing as Singapore Dollar and HDB flats. After independence Singapore was left on its own, and who ever lived here, the local born chinese, malays and indians(Tamils) all of them started from the scratch to build this nation. We are 3 different races whom put our differences aside and live together and built this nation and come to this point of our lives. We celebrate each other festivals and try out dishes and foods prepared by other races. In a nutshell, We integrate.

  Does indian nationals even know what Nation Building and integration means?
  How chaotic India has been since independence,

  North Indians and South Indians don’t like each other. ( Aryan and Dravidan Issues)
  Tamil nadu people and Karnatak people cannot get along with one another. (Water issues)
  Maharasthra is only for Maharashtrians. (Son of soil issues)
  And there are telangana issues, caste issues, bribe issues and Brahminan, Dravidan, DMK, politician scams and scandals after scandals after scandals, i can just keep going forever…. Each scandals can out do and out wit one another. Latest achievement, New Delhi has a new name, Rape Capital.

  One thing i noticed about indian nationals in Singapore is that they will stick together with their own group. (Eg, North Indian groups and South Indians group) They will sing praises about India to sky high, about their culture, about their history like as if India is a paradise on earth. But however most of them clearly have no intention returning back to india at all. Its not they are only here to work, they want to stay put. They bring their whole family( in-laws included) into this tiny island and overcrowd this country. (The country is so crowded that now they start building roads and shopping malls underground)

  Look here–>http://sg.finance.yahoo.com/news/land-scarce-singapore-looks-underground-071439887.html

  Please instead of contributing to Singapore’s Economy, its time for indian nationals to work and contribute to your Mother India’s economy. Last year, india currency fell again to a new low and I realised most indian nationals in Singapore was pleased. Thats what they want isn’t it? The bigger the gap between the Sing dollar and Indian rupee, the more reasons they have to come here.

  No point claiming to be patriotic about Bharath and Bharatha Mata when each one of you are desperate to move into economically strong countries like Singapore, England, USA, Australia and Canada. Even if there is a job in indonesia or myanmar or thailand, would any indian nationals go there to work? Of course you people won’t go because of the weak currency.

  Every immigrant in Singapore are here to tap on the strong currency of Singapore, nothing else.

  Mr Giri one question for you, if Sing dollar 1000 * 1.5 or 2 INR rate, will you still work in Singapore?

  P.S.
  No party has ruled a country forever. Thats what history has informed us. Things will change in this country.

  Thank you.

 • கிரி February 24, 2013, 1:22 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @கோவிக்கண்ணன் நானும் அதே!

  @பிரகாஷ் உங்க மாத சம்பளம் 3500 SGD ஆக இருக்க வேண்டும்.

  @கௌரி ஷங்கர் நிசமாவே புரியலையா! அதிலேயே லிங்க் இருக்கு பாருங்க.. படிங்க புரியும்.

  @சிங்கப்பூர் தமிழன்

  உங்கள் விரிவான கருத்திற்கு நன்றி. உங்களின் ஆதங்கமும் புரிகிறது.

  நான் கூறியதை வைத்து நீங்கள் கூறியதிற்கு நான் ஓரளவு அதிலேயே பதிலும் கூறி இருக்கிறேன். இது பற்றி நான் உங்களுடன் விவாதிக்கலாம். நல்ல ஒரு தலைப்பு கூட ஆனால், நான் இது பிழைக்க வந்த நாடு. நான் ஏதாவது கூற அது தேவையில்லாத சிக்கலில் என்னை விட்டு விடும். ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். நான் சிங்கப்பூரை என்னுடைய சொந்த நாடாக நினைத்து தான் இது வரை இருந்து இருக்கிறேன், இனி இருக்கும் வரையும் இருப்பேன். என்னுடைய நேர்மையை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை நீங்கள் உட்பட. மற்றவர்கள் நடந்து கொள்வதற்கு நான் பொறுபேற்க முடியாது.

  INR மதிப்பு குறைந்தால் இருப்பீர்களா? என்று கேட்டு இருந்தீர்கள். நான் மட்டுமல்ல எந்த வெளி நாட்டினரும் இருக்க மாட்டார்கள், சிங்கப்பூரில் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும். இது தான் நிதர்சனம்.

  அதோடு இந்தியாவில் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள பகைமையைப் பற்றிக் கூறினீர்கள். இது ஒரு மிகப்பெரிய சப்ஜெக்ட் ஜஸ்ட் லைக் தட் பதில் கூறக்கூடிய விசயமல்ல.

  நீங்கள் எல்லோரும் இந்தியாவே செல்ல வேண்டியது தானே என்று கேட்டு இருந்தீர்கள். நானும் அனைவரைப் போல சம்பாதிக்கவே வந்தேன் ஆனால் பலரைப் போல இங்கேயே தொடர்ந்து இருப்பது என்னுடைய எண்ணமல்ல. அதனால் தான் நான் PR கூட முயற்சிக்கவில்லை ஐந்து 1/2 வருடங்களாக இருந்தும். இது போல ஊருக்கு செல்ல நினைக்கும் சிலர் பற்றி விரைவில் எழுத நினைத்துள்ளேன். Its just a coincidence.

 • Gowrishankar.P February 25, 2013, 4:25 PM

  “அதிலேயே லிங்க் இருக்கு பாருங்க.. படிங்க புரியும்.”

  அந்த லிங்க பாக்காமலேயே விட்ருக்கலாம். மனசு கஷ்டமா இருக்கு.

 • Gowrishankar.P February 25, 2013, 4:55 PM

  “Does indian nationals even know what Nation Building and integration means?
  How chaotic India has been since independence”

  If you want to let ur angry known to others, that is absolutely fine and no problem for anybody. but you should stop ur comment upto ur country. You have no rights to tell or comment about our country. We have our problems and prides. What do u know abt my country.
  Please don’t pass any comment like the above about my country, for which, I am sure, u have absolutely no idea expect the international and Indian media releases u read about.
  U can comment abt the Indian who have come there and u might have know about them. But restrict u comment to them, don’t comment abt a country which u don’t know.

 • Gowrishankar.P February 25, 2013, 4:57 PM

  my mistake. the above reply is for “Singapore Tamilan”

 • முத்துக்குமார் February 27, 2013, 2:20 PM

  சிங்கப்பூர் தமிழன், சிங்கப்பூரில் வெளிநாட்டவரின் ஆதிக்கமும் அதனால் சிங்கப்பூரருக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய உங்களின் கருத்தை மதிக்கிறேன். ஆனால், நீங்கள் இந்தியாவைப் / இந்தியர்களைப் பற்றி பேசும் முன் யோசித்திருக்க வேண்டும். இந்தியாவை நீங்கள் கண்டபடி விமர்சித்திருக்கிறீர்கள், இந்தியாவை விமர்சிக்கும் உரிமை இந்தியர்களுக்கு மட்டுமே இருக்கிறது. திருப்பி நாங்கள் சிங்கப்பூரை / சிங்கப்பூரர்களை விமர்சிக்க எவ்வளவு நேரம் ஆகும், அது எங்களுக்கு தேவை இல்லாத வேலை என்பது எங்களுக்கு தெரிந்திருக்கிறது.

  என்னதான் வெளிநாட்டில் சுகமாய் வாழ்ந்தாலும், இந்தியாவில் (சொந்த நாட்டில்) கால் வைக்கும் போதுதான் மனம் முழு நிம்மதியை அனுபவிக்கிறது. அவரவருக்கு அவர்கள் தாய்நாடு சொர்க்கம்தான், இல்லை என்பீர்களா?

 • முத்துக்குமார் February 27, 2013, 2:36 PM

  //When my ancestors arrived here//
  அப்புடிப் போடு… ஆக, சுத்த சிங்கப்பூரான் என்று இங்கு யாருமே இல்லை. நீங்கள் ஒரு 100 வருடம் முன்னாடியே சிங்கப்பூருக்கு வந்துவிட்டீர்கள், அதனால் இன்று வருபவனைப் பிடிக்கவில்லை. நல்லது, ஆக நீங்களே முதல் ஆளாய் சிங்கப்பூரை விட்டு வெளியேறி உங்களின் முந்தைய தாய்நாடான இந்தியாவுக்கே வந்துவிடுங்களேன், மற்றவர்களுக்கு உதாரணமாகவாவது இருக்கட்டும். எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வருமானத்துக்கே வழியில்லாத ஒரு நாட்டு பிரஜையாக இருக்க வேண்டும்?

Leave a Comment