சிங்கப்பூர் போதுங்க!

சிங்கப்பூரில் உள்ள எங்கள் அலுவலகத்தில் உள்ள சர்வர் அறை AC யை மாத சர்வீஸ் செய்ய ஒரு நிறுவனத்துடன் ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளோம்.

மாதம் ஒருமுறை அனைத்தும் சரியாக உள்ளதா! என்று சோதனை செய்து செல்வார்கள்.

இவ்வாறு வரும் ஊழியர்களிடம் எப்போதும் நான் சகஜமாக பழகுவேன்.

இதில் மூவர் அவ்வப்போது மாறி விட்டாலும், வரும் எவராக இருந்தாலும் உடனே நன்கு பழகி விடுவார்கள்.

சீன நிறுவனம் என்றாலும் அதில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பணி புரிகிறார்கள்.

இதில் ஒருவர் கடந்த இரு மாதங்களுக்கு முன், அவரது சொந்த ஊரான சென்னைக்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட விடுமுறையில் சென்று வந்தார். இவர் சிங்கப்பூரில் கடந்த 12 வருடங்களாகப் பணி புரிந்து வருகிறார்.

ஒவ்வொரு மாதம் வரும் போதும் ஊருக்கு சென்றீர்களா? குழந்தைகள் எப்படி உள்ளார்கள்? என்று விசாரிக்கத் தவற மாட்டார்.

இந்த முறை வந்த போது, தனக்கு வரும் ஜூன் மாதத்தோடு விசா முடிவடைவதாகவும், தான் நீட்டிக்கப் போவதில்லை என்றும், ஊருக்கே நிரந்தரமாகச் செல்லப் போவதாகவும், “சிங்கப்பூர் போதுங்க!” என்று கூறினார்.

பொதுவாக இது போல நான் கேட்டதில்லை அதனால், இயல்பாகவே இருக்கும் ஆர்வத்தில் “ஏன் செல்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய காரணங்கள் பின் வருமாறு.

12 வருடங்கள் இங்கே இருந்து விட்டேன். தற்போது விடுமுறையில் சென்றதில், மனைவி இரண்டாவது முறையாக கருத்தரித்து இருக்கிறார். இவரை பார்க்க ஆள் வேண்டும்.

என்னுடைய பெற்றோர்களோ அல்லது அவருடைய பெற்றோர்களோ பார்த்துக்கொள்ளலாம் என்றாலும், எனக்கும் ஊரிலேயே இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இங்கே இருந்து சம்பாதித்ததில் சென்னை புறநகரில் வீடு கட்டி இருக்கிறேன். எங்களுக்கு சொந்த வீடு இருக்கிறது மற்றும் மற்ற இரு வீடுகளை வாடகைக்கு விட்டு இருக்கிறேன்.

அதில் மாதம் 8 ஆயிரம் வருகிறது. இந்த விடுமுறையில் சென்ற போது விலைவாசி / சென்னை வந்தால் எப்படி செலவுகளை சமாளிப்பது போன்ற விசயங்களை விரிவாகத் தெரிந்து கொண்டேன்.

சிங்கப்பூரில் இருந்தால், அவர்கள் தங்களுடைய தேவைகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கு செலவு இருந்து கொண்டே இருக்கிறது. புதிதாக ஏதாவது வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதற்கு ஒரு முடிவே இல்லாமல் இருக்கிறது. இது போல இருந்தால் நான் எப்படித் தான் ஊருக்குப் போவது? எனக்கும் ஊரில் இருக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.

இங்கே என்னைப் போன்ற பெரும்பாலனவர்கள், ஊருக்குச் சென்றால் என்ன செய்வது என்று தெரியாமலே இங்கேயே தொடர்ந்து இருக்கிறார்கள். அதோடு இங்குள்ள சொகுசும் அவர்களுக்கு நன்கு பழகி விடுகிறது.

ஊரில் இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் தொந்தரவு, உறவினர்கள் கேள்வி, அதோடு சம்பளமும் குறைவாகக் கிடைக்கும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், இங்கே இருந்து தொலைபேசியிலேயே பேசி சமாளிக்கலாம்.

அதே ஊரில் இருந்தால், அனைத்தையும் நேரிலேயே எதிர் கொள்ள வேண்டும். இங்கே இருந்தால் வேலை இருந்தாலும், முடிந்த பிறகு கேள்வி கேட்க ஆளில்லை நம் விருப்பம் போல இருக்கலாம்.

எனவே இங்குள்ளவர்கள் ஊருக்குச் செல்ல யோசிக்கிறார்கள். ஊருக்குச் சென்றால் சரியான வேலை கிடைக்காது, சிரமப்பட வேண்டும் என்று பயப்படுகிறார்கள். இதனால் இங்கேயே தங்கள் பணியை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தேவைகளை குறைத்தாலே நம்மால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. எனவே, இது வரை சம்பாதித்தது போதும் என்று முடிவு செய்து விட்டேன். இனி குடும்பத்துடன் இருக்கவே விருப்பப்படுகிறேன்.

வாடகை 8 ஆயிரம் வருகிறது, சொந்த வீடுள்ளதால் வீட்டு வாடகை இல்லை. எப்படியும் நான் ஊருக்குச் சென்று சும்மா இருக்கப் போவதில்லை ஏதாவது இது போல AC மெக்கானிக் வேலை செய்யப் போகிறேன் எனவே, இது என் வாழ்க்கைத் தேவைக்குப் போதும்” என்று கூறினார்.

உண்மையில் இவர் கூறுவதை கேட்கவே எனக்கு ஆசையாக இருந்தது. எவ்வளவு அழகான, நடைமுறை உண்மையை பிரதிபலிக்கும் பேச்சு.

குறிப்பு: வெளிநாட்டில் IT பணியில் இருந்து ஊருக்கு வந்தவர்கள் பெரும்பாலும் கொஞ்ச நாள் வெளிநாட்டுப் பெருமை, அங்குள்ள பணிச் சூழல், சொகுசு, மற்ற பொது வசதி பற்றிப் பெருமை பேசுவதை கவனித்து இருப்பீர்கள் அதோடு கடுப்பும் ஆகி இருப்பீர்கள்.

இது IT துறையில் உள்ளவர்கள் மட்டும் செய்வதல்ல, எந்த ஒரு வேலையில் இருந்து வருபவரும் செய்வதே. இங்கே கட்டடப் பணியில் இருப்பவர்கள் கூட நம் ஊரில் வந்து வேலை செய்ய வேண்டி வந்தால், சிங்கப்பூரில் வேலை செய்தது போல வராது என்று பெருமை பேசுவார்கள்.

அது உண்மையும் கூட. பல சொகுசுகளை அனுபவித்து திடீர் என்று மாறும் போது அதைக் கண்டு அவர்கள் வெளிப்படுத்தும் “ஆதங்கம்” அதிகமாகச் சென்று “பந்தா” என்பது போல ஆகி விடுகிறது. இது பற்றி வேறு ஒரு பதிவில் விளக்கமாகக் கூறுகிறேன்.

கொசுறுவாக கூறக் கூடிய விசயமல்ல இது.

 இது இன்னொரு நண்பன் அனுபவம்

இது என்னுடைய IT துறையில் இருக்கும் நண்பன் கூறியது.

இங்கு போதுமான அளவிற்கு சம்பாதித்து விட்டேன். IT துறை அல்லாது மரம் வளர்ப்பு, விவசாயம் போன்ற துறைகளில் எனக்கு ஆர்வம் அதிகம்.

எனவே, என்னுடைய நிறுவனத்தையும் கவனித்துக்கொண்டு [இவருக்கு சென்னையில் ஒரு IT நிறுவனம் உள்ளது] உடன் எனக்குப் பிடித்த மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்தப் போகிறேன்.

அதோடு, குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். எனவே, அவர்கள் நம் இந்திய சூழலில் வளருவதையே விரும்புகிறேன்.

அடுத்த 10 வருடங்களில் IT துறை அல்லாத மற்ற துறையில் முழுவதுமாக இறங்கும் அளவிற்கு என்னை தயார் படுத்துவதே என்னுடைய தற்போதைய நோக்கம்” என்று கூறினார்.

இவர் வரும் 2013 ஏப்ரல் மாதத்தோடு நிரந்தரமாக இந்தியா செல்கிறார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் சரியான தருணம் இது. இவர் சிங்கப்பூரில் கடந்த ஆறு வருடங்களாக இருக்கிறார்.

இவருக்கு, இயற்கை வேளாண்மை, தமிழர்கள் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றில் ரொம்ப ஈடுபாடு. பேசுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அது குறித்து மேலும் தகவல்களை சேகரித்து / பார்வையிட்டு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

தன்னுடைய குழந்தைகள் ஆங்கிலம் மட்டுமே அறிந்து, தமிழ் தெரியாமல் போய் விடக் கூடாது என்று தன்னுடைய குழந்தைகள் வளர்ப்பில் கூட இதை கவனமாக செய்து வருகிறார்.

வீட்டில் பேசும் போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் காரணம், தற்போது இங்குள்ள [சிங்கப்பூர்] குழந்தைகள் பெரும்பாலும் தமிழ் பேசாமல் ஆங்கிலம் மட்டுமே பேசுகின்றன.

நம் ஊரிலும் இப்படித்தான் என்றாலும், இங்குள்ள அளவிற்கு மோசமல்ல.

இதில் நான் கூறிய இருவருமே தொடர்ந்து சிங்கப்பூரிலேயே இருக்க வாய்ப்புகள் உள்ளவர்கள் ஆனால், அவற்றைத் தொடராமல் இந்தியா செல்கிறார்கள். இருவருமே ஒவ்வொரு எல்லையில் தங்கள் பணியில் இருப்பவர்கள். ஒருவர் AC மெக்கானிக்,  இன்னொருவர் IT துறை.

பொதுவா நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதை இங்கே பதிவாக எழுதுவதில்லை. பதிவர்களிடம் நான் அளவாக பேசுவதற்கான காரணமும் இது தான்.

நாம் தனிப்பட்ட முறையில் கூறும் கருத்துக்களைக் கூட “ஆஹா! பதிவு எழுத ஒரு மேட்டர் கிடைத்தது” என்று எழுதி நம்மை சங்கடத்திற்கு ஆளாக்கி விடுகிறார்கள். இதை எழுதும் போது இருவரிடமும் அனுமதி பெற்றே எழுதினேன்.

என்னுடைய IT நண்பனிடம் இது பற்றி எழுத அனுமதி கேட்ட பொழுது, “இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அனைவரிடமும் பகிரப்பட வேண்டும்” என்று கூறியது அவருக்கு உண்மையில் இதில் இருந்த இருந்த ஆர்வத்தைக் காட்டியது.

நான் இவர்கள் இருவர் கூறியதின் கலவையே! நான் என்னுடைய கடனைக் கட்டவே சிங்கப்பூர் வந்தேன் அதோடு, அனைவருக்கும் இருக்கும் இயல்பான வெளிநாட்டு ஆர்வம்.

வெளிநாட்டிலேயே  நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமல்ல. இது தற்போது எடுத்த முடிவல்ல, நான் இங்கு வரும் முன்பே எடுத்தது. நான் இங்கு வந்து 5 வருடம் 5 மாதங்கள் ஆகி விட்டது.

ஒரு சிலர் “இந்தியா பிடிக்கவில்லை, குற்றங்கள், ஊழல்கள் அதிகம், இங்குள்ள வசதிகள் எனக்கு பிடித்துள்ளது. நான் குடியுரிமை [Citizenship] பெற்று அதே நாட்டிலேயே இருக்கப் போகிறேன்” என்று கூறுகிறார்கள்.

அது அவர்களுடைய தனிப்பட்ட எண்ணங்கள் / விருப்பங்கள். எனவே, இதில் தவறாக நினைக்க எதுவுமில்லை. நாம் இப்படி இருக்க நினைப்பதால் அனைவருமே நம்மைப் போலவே நினைக்க வேண்டும் என்பது சரியான ஒன்று அல்ல.

எங்களுக்கு கடன் அதிகளவில் இருந்தது. நான் இங்கே வந்ததே முக்கியமாகக் கடனைக் கட்டத்தான். கடனைக் கட்டி விட்டேன். நாங்கள் வாங்கிய இடத்தில் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம்.

அதற்குண்டான கடனை நாங்கள் இதற்காகவே முன்பே திட்டமிட்டு வாங்கிய இடத்தை விற்றும், என்னுடைய சம்பளத்தைக் கொண்டும், அடுத்த வருட நடுவில் கட்டி விடுவேன் என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு எனக்கு இங்கே இருக்க வேண்டிய மிகப்பெரிய தேவை இல்லை. எனக்குண்டான அடிப்படைப் பிரச்சனைகள் / தேவைகள் முடிந்து, ஓரளவு சேமித்த பிறகும், தொடர்ந்து நான் வெளிநாட்டிலேயே இருந்தால், அது சொகுசு / ஆடம்பரத் தேவைக்காக மட்டுமே இருக்க முடியும்.

நம்முடைய ஆசைகளுக்கு முற்றுப் புள்ளி என்பதே கிடையாது!

அவ்வாறு இருந்தால், நான் மேலும் சேமிக்க முடியும் என்றாலும், அதற்கான தேவைகள், மேலே அவர் கூறியது போல, வந்து கொண்டே தான் இருக்கும்.

இன்னொரு இடம் வாங்க வேண்டும், அது வாங்க வேண்டும் இது வாங்க வேண்டும் என்று, நம்முடைய ஆசைக்கு என்றும் எல்லையே கிடையாது.

நம்முடைய தேவைகளை குறைத்துக்கொண்டாலே நமக்கான சிரமும் குறைகிறது, அதற்காக அனைத்தையும் துறந்தும் இருக்க முடியாது.

கட்டுப்பாடான ஆசைகள் நமக்கு / நம் குடும்பத்திற்கு நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

நான் அடுத்த வருட [2014] இறுதியில் இந்தியாவே திரும்பி விடலாம் என்று கடந்த வருடமே [2012] முடிவு செய்து விட்டேன்.

ஆனால், ஒருவேளை இடையிலேயே செல்ல வேண்டி இருந்தாலும் இருக்கலாம் / அடுத்த வருட இறுதியில் செல்லும் போது சரியான வேலை / மாற்றல் கிடைக்க வேண்டும் / குடும்ப சூழ்நிலை காரணமாக இன்னும் ஒரு வருடம் கூடுதல் ஆகலாம்.

எதுவும் நாம் நினைத்தது போல நடப்பதில்லையே. “நடக்கும் நடக்காது” என்பது வேறு விஷயம் ஆனால், நாம் திட்டமிட்டு வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு, அதைத் தான் தற்போதும் செய்து இருக்கிறேன்.

இவர்கள் இருவரும் என்னுடைய முடிவை இன்னும் உறுதியாக்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை. என் நண்பன் கூறியது போல, எனக்கும் IT துறை சாராத பல்வேறு விருப்பங்கள் உண்டு இருப்பினும், நம் விருப்பங்களை விட “நிதர்சனம்” என்ற ஒன்றுள்ளதே!

பிற்சேர்க்கை : Bye Bye சிங்கப்பூர்

{ 41 comments… add one }
 • iK way February 28, 2013, 9:19 AM

  நிதர்சனம்.
  கிரி,
  இந்த ஒரு வார்த்தையில் சொல்ல வந்த எல்லாவற்றையும் அடக்கி சொல்லிவிட்டீர்கள்.
  சொல்வது அத்தனையும் உண்மைதான். அதனை உணர / தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.

  எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள். ஏதோ என்னால் முடிந்தது.

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

 • gnanasekaran February 28, 2013, 9:33 AM

  உண்மைதான் தாய்நாடு சென்று தாங்கள் உயர்வுக்கு வாழ்த்துகள்

 • SRIKANTH February 28, 2013, 9:49 AM

  அன்பு நண்பன் கிரி
  உண்மையில் பலரும் கடனை அடைக்கவு அல்லது வீடு கட்டவோ தான் வெளி நாட்டு வேலைக்கு வருகிறார்கள் …….இதில் பொதுவான ஒரு கருத்தை கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதே உண்மை !

 • Prabhushankar February 28, 2013, 10:20 AM

  கிரி இந்த செய்தியை கடவுள் உங்களின் மூலமாக எனக்கு காட்டுவதாகவே எண்ணுகிறேன். ஏனெனில் கடந்த ஒருவருடமாக நானும் இதே மனநிலையில்தான் உள்ளேன். ஊருக்கு போய்விட வேண்டும் என்ற ஆதங்கம், ஆனால் வசதிகள் போய்விடுமே என்ற தயக்கம். அங்கு இருக்கும் பிரச்சனைகளை சாமாளிக்க வேண்டுமே என்ற பயம், இந்த மன நிலையில் சிக்கி இருக்கும் எனக்கு இந்த கட்டுரை என் கண்ணில் படுகிறது. நன்றி.

 • Rajarajeswari jaghamani February 28, 2013, 11:04 AM

  “நிதர்சனம்” -சிந்திக்கதூண்டும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

 • முத்துக்குமார் February 28, 2013, 11:27 AM

  இன்னும் அது வாங்கலாம் இது வாங்கலாம் என்று கட்டுப்பாடில்லாமல் ஆசைப்படுவதும் நிதர்சனம்தான். 🙂

  அமெரிக்கா சென்ற என்னுடைய IT நண்பர்கள் பலரும் இன்னும் இந்தியா திரும்ப மனசில்லாமல் அங்கேயே இருக்கிறார்கள். சொகுசு வாழ்க்கையை மனம் விரும்புகிறது என்றாலும், அவர்களின் தயக்கத்துக்கு முக்கிய காரணம் தினம் தினம் டிராபிக்கில் மாட்டியும், எங்கும் குப்பை எதிலும் குப்பை என்ற நிலையினாலும், தண்ணி-கரண்டுக்கு ஏங்கியும் அல்லாடுவதால்தான். மக்களிடம் சுய ஒழுக்கம் இல்லாததால் பொது இடங்களில் ஏற்படும் எரிச்சலும் மற்றொரு காரணம்.

  ஆனால் இதையெலாம் தாண்டி நம் ஊருக்கு எப்போது போவோம் என்ற ஏக்கம் இருக்க ஒரே காரணம் நம் சொந்தங்களும் நண்பர்களும் அங்கே இருப்பதால்தான். சில மாத இடைவெளியில் நம் ஊருக்கு போனாலும், நம் மனம் அடையும் உற்சாகத்துக்கும் சந்தோசத்துக்கும் அளவே இல்லை. திரும்பி சிங்கப்பூர் வரும்போது அங்கிருந்து கிளம்பவே மனம் வராது.

  எனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. எனக்கு இன்னும் 2-3 வருடங்களில் IT துறையை விட்டு என் கிராமத்துக்கே போய் விட வேண்டும் அல்லது வீட்டிலிருந்தே வேலை செய்ய வாய்ப்பும் அதற்கேற்ற நெட் வசதியும் வந்தால் கிராமத்திலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று பிளான் (இதுக்கு தமிழ் வார்த்தை என்னங்க?) செய்துள்ளேன் (என் மனைவிதான் வருமானத்துக்கு என்ன செய்வது என்று சண்டை போடுகிறார் :)). நமக்கு நம்ம ஊர், நம்ம மண் போல வேற சொர்க்கம் உண்டா?

 • வாழ்க்கைக்கு தேவையான மூன்று முத்துக்களில், முக்கியமானதை… திருப்தி அடைந்த இரு நல்உள்ளங்களை கண்டேன்…

  தங்களின் எண்ணங்களும் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்…

 • Mohamed Yasin February 28, 2013, 12:47 PM

  தங்களின் கட்டுரை கொஞ்சம் மன ஆறுதலாகவும் அதே சமயம் ஒரு படிப்பினையாகவும் உள்ளது. நானும் 5 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டில் தான் வேலை பார்த்து வருகிறேன். முதலில் இங்கு வந்ததே குடும்ப தேவைகளை நிவர்த்தி செய்யவேண்டி தான். அதற்கு பின் எனது திருமணம், வீடு வாங்க இடம்.. என தேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே செல்கிறது. பிறந்ததிலிருந்தே வாடகை வீட்டில் வசித்த என் தாயின் விருப்பத்திகிற்காக அவருக்காக ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் கனவு. தேவைகளின் காரணங்களினால் என்னால் தற்போது எனது ஆசை,கனவு அனைத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. சில நேரங்களில் வருத்தமாக தான் இருக்கும். பகிர்வுக்கு நன்றி கிரி.

 • துளசி கோபால் February 28, 2013, 2:03 PM

  கிரி,

  நல்ல முடிவு. அதுவும் குழந்தைகள் ரொம்பச்சின்ன வகுப்பில் படிக்கும்போதே போனால்தான் உண்டு. அப்போதுதான் அவர்களுக்கும் புது இடம் புதுப் பள்ளிக்கூடம் , புது நண்பர்கள் இப்படி செட்டில் ஆக சுலபமாக இருக்கும்.

  எங்களைப்போல் 32 வருசமா வெளியே இருந்துட்டு இப்பப்போய் அங்கே இருப்பது சிரமம். சமீபத்தில் பரிசோதனையாக ரெண்டரை வருசம் போய் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன்.

  எப்படி இருந்தாலும் உங்கள் கனவு நிறைவேற மனம் நிறைந்த இனிய ஆசிகள்.

 • snkm February 28, 2013, 2:34 PM

  வாழ்த்துக்கள். இந்தியா வந்தாலும் இணையத்தில் இணைந்திருங்கள்.
  வாழ்க பாரதம்!

 • Roshan February 28, 2013, 2:42 PM

  GIRI , THE COMMENT இங்கு தேவை இல்லாதது தான் . இருந்தாலும் உங்களுடைய முந்தைய பதிவில் HARRIS என்பவர் ENTHIRAN VS VR முதல் வார COLLECTION ஐ COMPARE பண்ணி ஒரு கமெண்ட் எழுதி இருந்தார் . அதற்க்கு நீங்கள் 4 வாரம் வரை பொறுக்க சொன்னீர்கள் . ஆனால் 3 வார COLLCTION REPORT எப்படி என்பதை அவர் அறிவாரா அல்லது அறிந்த பின்பு டாஸ்மாக் போய்விட்டாரா என்பதை அறிய ஆவலாக உள்ளது .

  VR

  Week : 3
  Total collections in Chennai : Rs. 10,56,25,049
  Verdict: Grand Opening
  No. Shows in Chennai (Weekend): 348
  Average Theatre Occupancy (Weekend): 80%
  Collection in Chennai (Weekend): Rs. 91,00,380
  No. Shows in Chennai (Weekdays): 640
  Average Theatre Occupancy (Weekdays): 55%
  Collection in Chennai (Weekdays): Rs. 1,43,79,332

  எந்திரன்

  Cast: Rajinikanth, Aishwarya Rai, Karunas, Santhanam.
  Direction: Shankar
  Music: AR Rahman
  Production: Sun Pictures Trailer

  Review

  Gallery

  Shankar’s sci-fi action adventure profiles Rajini’s negative shades, quite unseen in Tamil cinema for a very long time. Rajini never looked this young and complements Aishwarya Rai’s bewitching charm.

  Trade Talk:
  With the advance booking period dying down, Endhiran is now a staple fodder for second-time audience.

  Public Talk:
  Kilimanjaro gets a whole new definition and techno-pop is brought to Tamil cinema with ‘Irumbile Oru Irudhayam’.

  No. Weeks Completed: 2
  No. Shows in Chennai over this weekend: 732
  Average Theatre Occupancy over this weekend: 93%
  Collection over this weekend in Chennai:Rs.1,67,07,787
  Total collections in Chennai: Rs. 9.86 Crore

  Verdict: Blockbuster

  Cast: Rajinikanth, Aishwarya Rai, Karunas, Santhanam.
  Direction: Shankar
  Music: AR Rahman
  Production: Sun Pictures Trailer

  Review

  Gallery

  Endhiran is Shankar’s version of science fiction, where Robots acquire feelings and start stalking pretty women to establish families with human beings. The world class movie is executed impeccably with the help of the best of technicians from Hollywood and India alike.

  Trade Talk:
  Still going strong in all the screened centers with weekends registering full houses.

  Public Talk:
  There’s a sudden lull, what with the public and media having exhausted all news updates on the movie.

  No. Weeks Completed: 3
  No. Shows in Chennai over this weekend: 499
  Average Theatre Occupancy over this weekend: 89%
  Collection over this weekend in Chennai:Rs.1,11,00,523
  Total collections in Chennai: Rs. 12.72 Crore

  Verdict: Blockbuster

 • மாயாண்டி February 28, 2013, 4:09 PM

  சொர்கமே என்றாலும்
  அது நம் ஊரைப் போல வருமா?
  அட என் நாடு என்றாலும்….
  அது நம் நாட்டுக்கீடாகுமா?
  பல தேசம் முழுதும்… பேசும் மொழிகள்
  தமிழ் போல் இனித்திடுமா?

 • PKandaswamy February 28, 2013, 6:43 PM

  உண்மையை ரசித்தேன்.

  தேவைகளைக் குறைத்தால் – மில்லியன் டாலர் கேள்வி

 • வடுவூர் குமார் February 28, 2013, 7:15 PM

  கிரி
  வாழ்வில் ஒரு நிறைவு வந்துவிட்டால் இந்தமாதிரி நினைவு வருவது இயற்கையே.

 • Ilavarasan February 28, 2013, 8:01 PM

  வணக்கம் கிரி அவர்களே,
  உங்களின் இந்த பதிவை படிக்கும்போது என் மனதின் ஒரு பகுதியை மீண்டும் படித்தது போல் தோன்றியது.

  நன்றி.

 • Dheepak February 28, 2013, 8:19 PM

  கிரி அவர்களுக்கு வணக்கம். தங்கள் பதிவுகளை தவறாமல் படிக்கும் உங்கள் ரசிகன் நான். காரணம் அதில் உள்ள நடை, கன்டென்ட் மற்றும் கோணம். இவை எல்லாமே வெகுஜனத்துடன் (இணையதளம் படிப்பவர்கள்) பெரும்பாலும் பொருந்துவதால் தான்.

  இந்த பக்கத்தில் உள்ள விஷயதில் என் பதிவையும் தெரிவிக்க விரும்புகிறேன். நானும் ஒரு வருடம் அயல்நாட்டில் என் குடும்பத்தை விட்டு பணிபுரிந்தேன். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை அனால் ஒரு சிறு கொசுறு. அங்கு குடும்பத்தை விடு பணி செய்த போது , இது போல நிறைய வலைதளங்களிலும் வேலை விஷயங்களிலும் கவனமும் நேரமும் செலுத்தலாம். அனால் இங்கு வந்த பின் இது பெருமளவும் குறையும். எனக்கு பரவாயில்லை. ஆனால் வேலை நேரம் தவிர முழுதும் இனைய வழியாக இவ்ளவு விஷயம் படித்து , புதிய சிந்தனைகள், தகவல்கள் , விமர்சனகள் எழுதும் கிரிக்கு இங்கு வந்த பின் நிறைய time management பண்ண வேண்டி இருக்கும். உஷார். உங்கள் ரசிகனாகவே இந்த தகவல்.

 • Vijay February 28, 2013, 9:53 PM

  I fully agree with your statement. After 19 years in spore, with 11,000 dollar / month, I am back to home and started my own business.

 • SSK February 28, 2013, 11:43 PM

  இங்கேயே இருக்க வாழ்க்கை வசதி தவிர வேறென்ன உண்டு..? என்னை பொறுத்த வரை
  – அடுத்த மனிதருக்கு இரங்கும் மனமுள்ள மக்கள் ,
  – அக்கறை உள்ள அரசு.,
  – சாதி போற்றும் இழி குணம் உள்ள மக்கள் இல்லாத நாடு
  – மத வெறி இல்லா நாடு
  – கல்வி / திறமைக்கே முதலிடம் தரும் நாடு
  – சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் நாடு
  – பொது ஒழுங்கு அதிகம் உள்ள நாடு
  – ஊழல் இல்லா நாடு
  – தமிழ் மொழி போற்றும் நாடு
  ..இன்னும் பல..

  ஊர் பெருமை எல்லாம் வெட்டி பேச்சு. .
  மேலே சொன்னவைகள் எந்த காலத்திலும் இந்தியாவில் அமைய வழி இல்லை என்றே நினைக்கிறேன்.

  தமிழை கொல்லும் அரசியல், தமிழனை ஆதரிக்காத இந்தியா ….
  நம்மூர்,கிராமம், அமைதி என்பதெல்லாம் வெறும் கனவு .. நினைக்க நன்றாக இருக்கும்
  உங்கள் தாழ்த்த பட்டும், இழிவு படுத்த பட்டும் உள்ள சாதி பின்னணி கொண்டிருந்தால் ஊர் போவதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது

  தமிழ் மொழியை போற்றும் சிங்கையில் இருந்தவாரே வாழ்வில் உயரலாம் .
  வாய்ப்பு இருந்தால் இங்கேயே இருப்பதே சரி என்று தோன்றுகிறது
  இவ்வளவும் பேசியது என் அறிவு….
  இருந்தும் எனக்கும் ஊர் என்ற ஏக்கம் பிடித்து தின்கிறது …இது என் உணர்வு

  வாழ அறிவு தேவையா , உணர்வு தேவையா?

 • arun March 1, 2013, 5:00 AM

  செம பதிவு தல
  கலக்கல் ரகம்

  – அருண்

 • Surya March 1, 2013, 6:01 AM

  SSK கமெண்ட் சரியானதே. நான் ஆஸ்திரேலியாவில் குடும்பத்தோடு வாழ்கிறேன். என் மனம் ஊருக்கு போக துடித்தாலும், என் பிள்ளைகள் எதிர்காலத்தை கருதிக் கொண்டு இங்கேயே இருக்க தோன்றுகிறது. ஏனென்றால் இந்தியாவில் நாளுக்கு நாள் சாதாரண மக்கள் வாழ்க்கை தரம் மோசமாகி கொண்டுதான் இருக்கிறது. எவளவு காழு கொடுத்தாலும் சுத்தமான காற்று, குடிநீர், மின்சாரம், தரமான மருத்துவம், படிப்பு கிடைபதில்லை. பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு இல்லாத நாடு. எதிலும் ஏமாற்று, லஞ்சம், தரக்குறைவான சர்வீஸ். இதில் எதை நம்பி ஊருக்கு திரும்பி செல்வது??

 • jeevansubbu March 1, 2013, 9:41 AM

  நல்லா பிழைக்கனும்னாதான் வெளிநாடும் , கான்வென்ட் படிப்பும் தேவை ..
  நல்லா வாழனும்னா நம்ம நாடே , நம்ம கிராமமே , நமது அரசாங்க பள்ளியே போதும் ..

  நல்லதொரு முடிவு .. இந்தியாவிற்கு வரவேற்கிறோம் …….!

 • Gowrishankar.P March 1, 2013, 1:59 PM

  SSK மற்றும் Surya, உங்க ரெண்டு பேருக்கும் “சிங்கப்பூர் தமிழன்”-னுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. நீங்க எல்லாரும் இந்திய-ல இல்லாமையே இந்திய இப்படிதான் இருக்கும் என்று தப்பான கண்ணோட்டம் வைத்துலீர்கள். நீங்கள் better stay wherever you are now. நீங்கள் இந்திய வந்தாலும் நிம்மதியா இருக்கமாடீங்க.

  “எவளவு காழு கொடுத்தாலும் சுத்தமான காற்று, குடிநீர், மின்சாரம், தரமான மருத்துவம், படிப்பு கிடைபதில்லை”
  – அன்பே சிவம் படத்துல கமல் மாதவனுக்கு சொல்ற பதில்தான் உங்களுக்கும், “காசு கொடுத்தா என்னவேணா வாங்கிக்கலாம்னு நெனைக்கிற உங்கள மாதிரி ஆளுங்க இருக்கிற வரைக்கும் that will be India for you”.

 • rajesh v March 1, 2013, 2:19 PM

  ரொம்ப எளிமையான , நிறைவான padhivu… 🙂 🙂

 • Ravi Xavier March 1, 2013, 3:29 PM

  \\சிங்கப்பூரில் இருந்தால், அவர்கள் தங்களுடைய தேவைகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கு செலவு இருந்து கொண்டே இருக்கிறது. புதிதாக ஏதாவது வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்…\தேவைகளை குறைத்தாலே நம்மால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. எனவே, இது வரை சம்பாதித்தது போதும் என்று முடிவு செய்து விட்டேன். இனி குடும்பத்துடன் இருக்கவே விருப்பப்படுகிறேன்/.//

  \\ நம் விருப்பங்களை விட “நிதர்சனம்” என்ற ஒன்றுள்ளதே!//

  நிதர்சனமான உண்மைகளை, அருமையாக விளக்கிய கட்டுரை நன்றி.

 • SSK March 3, 2013, 3:26 PM

  கௌரிசங்கர்,
  காசை பற்றி நான் குறிப்பிடவில்லை வேறு காரணகளை சொன்னேன்.
  நான் சொன்னவை சரி இல்லை என்றால், எவைகள் ஊரில் சிறப்பாக உள்ளன என்று கூறினால் நன்று
  தங்களுக்கு தெரியுமா, நீங்கள் சொன்ன கமலஹாசன் கூட வேறுஎங்கோ ஓட போவதாக சொன்னார்…

 • Gowrishankar.P March 4, 2013, 1:36 PM

  SSK நீங்க சிங்கபூரை பற்றி சொன்னது எல்லாம் கரெக்டா இருக்கலாம். ஆனால் அது ஒரு autocratic நாடு. இந்திய போல demacratic கிடையாது. நாளைக்கு, நீங்கலாம் இந்தியால இருந்து வந்திருகிறீங்க, உங்க சிங்கப்பூர் PR cancel, திரும்பி இந்தியாக்கே போங்கன்னு சொன்ன என்ன பண்ணுவீங்க? இல்ல அவங்க அப்படி சொல்ல மாட்டங்கன்னு உங்களால சொல்லமுடியுமா?
  ஆனா இந்தியா என் சொந்த நாடு. எவனும் என்ன, நீ நாட்டைவிட்டு போன்னு சொல்லமுடியாது.
  இங்க என்னதான் ஊழல் இருந்தாலும், நாளைக்கு அது மாறும்னு நம்பிக்கை இருக்கு. அதுக்கு US, UK-னு Examples இருக்கு. ஆனா சிங்கப்பூர் மாதிரியான autocratic நாடு ஊழல மாடுசுன அவ்ளோதான். எழுந்திரிக்கவே முடியாத ரேஞ்சுக்கு போயிடும். அதுக்கு கிரேக், ரோம், முகலாயர்கள் , latest-டா ரஷ்யா போன்ற பல examples இருக்கு. அவ்ளோ ஏன் பாஸ், இன்னும் 20 வருசத்துல பாருங்க, அடடா நாம அப்போவே இந்திய போயுருக்கலாமேனு நீங்க ஆதங்க படத்தான் போறீங்க. உப்போவே வேணா நாம எழுதி வச்சுக்கலாம். இன்னும் 20 வருஷம் என்பது நம்ம காலத்துக்குள்ள தான் இருக்கு. நாம்ப எல்லோரும் உசுரோடதான் இருப்போம்.
  எதுக்கு US இப்படி வரிஞ்சு கட்டிட்டு இந்தியா கூட நட்பா இருக்க ட்ரை பண்ணுதுன்னு நினைக்கிறீங்க?

  சூர்யா “பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு இல்லாத நாடு”-னு நீங்க எதவச்சு சொல்றீங்க? தயவு செய்து, இந்த மாதிரி statement போடறதுக்கு முன்னாடி நாலு எடத்துல நல்லா விசாரிங்க.
  ஒரு சின்ன கணக்கு. 1 lahk பெண்கள்ல, Rape index படி, இந்தியால 1.8 பெண்கள் Rape பன்னபட்றாங்க. இதே, நீங்க சூப்பெர்னு சொல்ற, சிங்கபூர்ல 2.7, UK 28, US-ல கேக்கவே வேண்டாம். அஞ்சுல ஒரு பெண் Rape பன்னபட்றாங்க. இந்தியாக்கு கீழ ஜப்பான், ஹாங்காங் மாதிரி சில நாடுகளே இருக்கு.
  உப்போ சொல்லுங்க சூர்யா, இந்தியா பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு இல்லாத நாடா?

  பாஸ் அதான் சொல்றேனே “நீங்க எல்லாரும் இந்திய-ல இல்லாமையே, இந்திய இப்படிதான் இருக்கும் என்று தப்பான கண்ணோட்டம் வைத்துலீர்கள்”.

  ஆனா உங்கள நான் தப்பு சொல்லமாட்டேன். உங்களுக்கு இந்தியா ஒரு சூபெர் நாடு ஆயிடாதனு ஒரு ஏக்கம். ஆனா நல்லா நியாபகம் வச்சுக்குங்க. இந்தியா இப்பொகூட பல நாட்ட விட நல்ல நாடாத்தான் இருக்கு. இது பல நாடுகளால இருட்டடிப்பு செய்யப்படுது. முக்கியமா China-னால. சீனால வெளி ஆளுங்களுக்கு தெரியாதே பல மோசமான problems இருக்கு. அதல்லாம் அவங்கனால வெளியுல சொல்லமுடியாது. இந்தியால இதுதான் பெரிய problem. free press. கெட்ட செய்திகளுக்கு கிடைக்கிற response அண்ட் rating, நல்ல செய்திகளுக்கு கிடைக்காது. அதுனால இந்தியன் பிரஸ், Delhi Rape கேஸ் மாதிரி கெட்ட செய்திகளுக்குதான் முக்கியத்துவம் தர்றாங்க. இத மத்த வெளிநாட்டு நியூஸ் காரங்க use பண்ணிக்கறாங்க. அதுனலையே இந்தியான problems மட்டும்தான்னு எண்ணம் வந்துருது.

 • Gowrishankar.P March 4, 2013, 1:44 PM

  “நீங்கள் சொன்ன கமலஹாசன் கூட வேறுஎங்கோ ஓட போவதாக சொன்னார்”

  ஹஹஹ, அதெல்லாமா நீங்க சிரிஎஸ்ஸ எடுத்துகிறீங்க 🙂

 • Surya March 5, 2013, 11:58 AM

  Dear Gowri Shankar, I am writing this in English so it’s easier to type. If we start discussing which is the best country – then there would be no end to this debate as there is no perfect country. But we choose our place of living based on our life’s priorites.

  Chennai like any other city in India is more than 50% immigrant population. Our parents & even most of us would choose Chennai over some remote villages in TN due to availability of various amneties for our families incluidng good schools, medical facilities, job opportunities etc., though we blame Chennai for it’s mechanical life, never care attitude to other people, cost of living, pollution etc., But still we feel at home in Chennai. But why are we not feeling at home in a foreign country while we have the same complaints like mechanical life, cost of living etc., It’s because our mind is unable to adopt to a foreign country and we still think taht we don’t belong here. The 2 people that the author described would have stayed in Singaproe if they had opporutnites to have tehri family or better stress free life. But they missed something and hence they decided to move which is not their fault.

  Also we as Humans – always strive to improve our life’s for better – Else we wouldn’t have moved from oil lamp to electric bulbs OR ships to aeroplanes for transport. That is the same reason why we moved to foreign country to provide better life for our children. According to you vision – India might economically prosper & be number 1 economy in next 20 years. But note that the economoic prospoerity will not diseminate the benefits to all levels of citizens. Only the rich, tax evading Business men, politicians would prosper while the middle & lower class would only get very few benefits from the economic growth – as all the rich people still need a dreaming middle class to buy their products from Cable TV to fridge to travelling in their planes. Again regardless of the Indian economic growth benefits, we still cannot buy clean air or water or unadulterated medicines/food and it would get worser & worser unless properly managed by the government which is a dream.

  And most of the Indians studying in Engineering or working in IT companies – if given a chance – they aspire to move to foreign country for a better life. Since I already had that opportunity, I don’t want to move my children to India to be part of that rat race .

  Having said that you have chosen to live in India and we have chose to live aborad. Both has it’s pros & cons and nothing is perfect. Our priorites lead to our destiny and not necessary that we both need to agree to same priorites in life.

  Not sure where you got the satistics abour rape %. It would be good if you can share us the URL of the statistics page.

 • Roshan March 5, 2013, 12:34 PM

  FOR UR REFERENCE THIS IS FOURTH WEEK COLLECTION AS PER BEH வூட்ஸ்

  Cast: Rajinikanth, Aishwarya Rai, Karunas, Santhanam.
  Direction: Shankar
  Music: AR Rahman
  Production: Sun Pictures Trailer

  Review

  Gallery

  The most expensive Indian film ever hasn’t disappointed the target audience. The pitfalls in the script are tactfully camouflaged with first-class graphics, hummable music and of course the superstar Rajinikanth.

  Trade Talk:
  The much anticipated magnum-opus of the year is still raking in moolah. We do not know yet whether Diwali will dampen the collections or not.

  Public Talk:
  The talk seems to be settling down, but SUN TV is not to be deterred; now showing full song clippings of Endhiran.

  No. Weeks Completed: 4
  No. Shows in Chennai over this weekend: 434
  Average Theatre Occupancy over this weekend: 78%
  Collection over this weekend in Chennai:Rs.90,62,982
  Total collections in Chennai: Rs. 14.75 Crore

  Verdict: Blockbuster

  Week : 4
  Total collections in Chennai : Rs. 11,32,23,798
  Verdict: Blockbuster
  No. Shows in Chennai (Weekend): 204
  Average Theatre Occupancy (Weekend): 60%
  Collection in Chennai (Weekend): Rs. 40,33,845
  No. Shows in Chennai (Weekdays): 252
  Average Theatre Occupancy (Weekdays): 40%
  Collection in Chennai (Weekdays): Rs. 35,64,904
  CAST AND CREW
  1 of 3

  Production: Raaj Kamal Films International
  Cast: Andrea Jeremiah, Jaideep Ahlawat, Kamal Haasan, Nassar, Pooja Kumar, Rahul Bose, Shekar Kapur
  Direction: Kamal Haasan
  Screenplay: Kamal Haasan
  Story: Kamal Haasan
  Music: Shankar-Ehsaan-Loy
  Background score: Shankar-Ehsaan-Loy
  Cinematography: Sanu Varghese
  Dialogues: Kamal Haasan
  Editing: Mahesh Narayanan
  Singers: Benny Dayal, Kamal Haasan, Shankar Mahadevan, Suraj Jagan
  PRO: Nikhil Murugan
  • Vishwaroopam Review
  • Vishwaroopam Trailer
  • Vishwaroopam Music Review
  • Vishwaroopam Preview
  Kamal’s Vishwaroopam was victimized and stood testimony for the status of freedom of expression in the world’s largest democracy. Otherwise, it’s a tautly written, brilliantly performed and composed movie with one of the finest actors in Indian cinema.
  Trade Talk
  Most likely to be a blockbuster, Vishwaroopam seems to have broken all predictions despite its inordinate delay in releasing after the ruckus. Multiplex audiences are giving the much desired weekend push in collections.
  Public Talk
  Pooja Kumar and Andrea spread some cheer in the otherwise grim action thriller.

  VR didnt collectd as much as இந்திரன்.
  Enthiran third week collection is more than VR fourth week collection

  VR released exactly after 2 years 4 months and 7 டயஸ்

  still unable To beat enthiran collection .

  where is HARRIS DAVID

 • Gowrishankar.P March 5, 2013, 12:59 PM

  சூர்யா, நீங்க உங்க விருப்பபடி எங்கவேணா வாழலாம். உங்களுக்கான காரணம் உங்களுக்கு, எங்களுக்கான காரணம் எங்களுக்கு. நீங்க ஏன் இந்தியால இல்ல, வெளிநாட்டுல வாழ்றீங்கனு நா கேக்கல.
  நான் ஏன் கொஞ்சம் உணர்சிவசப்பட்டேனா, உங்க கமெண்ட்-ல இருந்த சில தப்பான points.
  உங்க reply-லையே சில wrong points இருக்கு.

  “But note that the economoic prospoerity will not diseminate the benefits to all levels of citizens. Only the rich, tax evading Business men, politicians would prosper while the middle & lower class would only get very few benefits from the economic growth”
  – இது முற்றிலும் தவறான கருத்து. economic in-equality நம் நாடுல 90-களில் இருந்ததைவிட இப்போ கம்மிய இருக்கு. அதுக்கு மிக முக்கியமான காரணம் பெருகிவரும் midddle-class. உங்களுக்கு தெரியுமா உலகத்திலேயே மிடில் கிளாஸ் அதிகமா இருக்கிற நாடு இப்போதைக்கு இந்தியாதான். ஒரு சின்ன comparision. சீனா இந்தியாவைவிட பெரிய நாடு. நம்பளவிட எல்லா விதத்திலும் ரொம்ப முன்னேரிட்டங்க. உலகத்திலயே biggest exporter, largest GDP. fastest Growing, challenging US in Defence, etc. மக்கள் தொகைளையும் அவங்கதான் no.1. அவங்கள compare பண்ணின இந்தியா 2 படி கீழ இருக்கு (மக்கள் தொகைல 1 படிதான் கீழ இருக்கோம் 🙂 ). ஆனா middle class population-ல நாம்பதான் no.1. நம்ப மிடில் கிளாஸ் மக்கள் தொகை france total மக்கள் தொகையைவிட அதிகம். இது என்ன காட்டுதுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன். economic inequality சார்ட்ல இந்தியா respectable position-ல இருக்கு (above average). நீங்க சொல்ற சிங்கபூர், US எல்லாம் நமக்கு கீழ இருக்கு (But australia is above us). லிங்க் – http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_income_equality
  இதுல நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா இது எல்லாம் நம்ப economic development-நாலதான்.
  “But note that the economoic prospoerity will not diseminate the benefits to all levels of citizens ”
  – இது மிக மிக தவறான கருத்து.

  “Not sure where you got the satistics abour rape %. It would be good if you can share us the URL of the statistics page ”
  – இதுக்கு நான் லிங்க் தரபோறது இல்ல. Please do your own research. But you can start from wikipedia.

 • Gowrishankar.P March 5, 2013, 1:23 PM

  “Again regardless of the Indian economic growth benefits, we still cannot buy clean air or water or unadulterated medicines/food and it would get worser & worser unless properly managed by the government which is a dream”
  – இதுவும் மிக தவறான கருத்து. “unadulterated medicines/food” கிடைக்காம இருந்ததுக்கு முக்கிய காரணம் மக்களின் அறியாமை மற்றும் படிப்பறிவும் இல்லாமை. இது இப்போ நிறையா மாறிட்டு வருது. இதுக்கும் மெயின் காரணம் மிடில் கிளாஸ். மிடில் and upper மிடில் கிளாஸ் இப்போ நிறையா கேவி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. அறியாமை விலகிட்டு வருது, காரணம் படிப்பறிவு, காரணம் middle class can / is getting better education Opportunities.

 • Arjun Sridhar UR March 9, 2013, 11:39 AM

  இந்தியா தான் சிறந்த நாடு. ஆனால் நான் இந்தியாவில் இருக்கும் பொது பட்ட சிறமம் எழுத்துகளால் கூரிமாலாது.

  ஒரு எற்றுமதி இரக்குமதி அனுமதி பெற 7 மாதம் போராடி வாங்கினேன் லஞ்சம் கொடுக்காமல்.
  கொடுத்திருத்ந்தால் எனக்கு இரண்டு வாரத்தில் கிடைத்திருக்கும்.
  நான் சுயமாக செய்த பானத்தை கிங் இன்ஸ்திடியுட்(தமிழ் நாடு அரசு) கிண்டியில் பரிசோதித்து அது முற்றிலும் தரமானது என்று சான்ரிதல் கொடுத்தும் அரசாங்கதின் அனுமதி பெற முடியவில்லை அதற்க்கு எகப்பட்ட லஞ்சம் கேட்குறார்கள்.

  நான் மாற்றுதிரனாலி என்ன எவ்வலவு கேவலப்பதுத்த முடியுமோ அவ்வலவு கேவலப்பதினார்கள். பாவம் இந்தியாவில் உள்ள என்னைப்போன்றோர் நிலை இன்னும் படு மோசமாக உள்ளது.
  அவர்களுக்காகவாவது நான் எதாவது செய்ய வேண்டும். நான் மொத்தம் அய்ந்து 5 பள்ளிகள் ஊனம் ஒரு காரனமாக மாற்றப்பட்டுள்ளேன் என் பள்ளிப்படிப்பே எட்டாவது வரைத்தான் மிதி எல்லாம் விட்டிலிருத்தபடிதான் இப்போ M.Sc Information Technology 2005 வில் முடித்தேன்.
  இருத்தாலும். மதிக்கும் மனிதர்கள் கொஞ்சம் இருக்கின்றனர். இது போல் வெளி நாடுகளில் இல்லை.
  என்னை போன்றேர்களுக்கு வசதி ஒரு குறைவே. இருந்தாலும் இது என் நாடு. இது என் மக்கா. இந்த பித்து தெலிய மாட்டைங்குது.
  அடித்து பிடுங்கும் சமுதாயம்(அரசியல் பலம் பினாமி) இருக்கிறது. அதையும் எதிர்கொள்ள தேவை இல்லாத அரசியல் பலம் வேண்டி இனைந்துள்ளேன்.
  when rape is in evitable lie back and enjoy it. fit for living என்ற தத்துவத்தின் படி இந்திய வாழ்கை சூழழுக்கு எற்றார் போல் வாழ கற்றுக்கொண்டேன்.
  சாட்திக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இருந்தாலும் அது இந்தியாவில் என்னைப்போன்றோர்களுக்கு இப்பொழுது சாத்தியமாகாது.
  இருந்தாலும் நான் என் நாட்டில் ஒரு நிறுவனம் அரம்பிக்க ஆசைதான் அதர்கான லஞ்ச முதலீட்டை சம்பாரிக்க வேண்டும். அதர்க்கு பிறகு தான் நிறுவனமுலிடு.

  2 – 6 மணிணேரம் மின்சாரம் இல்லாதது ஒரு குறையே அதலால் மும்பைக்கு மாறலாம் என்று நினைக்கிறேன்.

  சொர்கமே என்றாலும் நம் நாடு போல வருமா…

  காதல் என்பது மிகவும் பழமையானது அதைப் பண்ண பண்ண புதுமையாகுது… இது தான் இந்தியா..

 • K Siva March 13, 2013, 3:00 PM

  அருமையான பதிப்பு.!! நானும் அதே மன நிலையில் உள்ளேன் !! உங்க நண்பர்களை பார்த்து இது பற்றி ஆலோசிக்க ஆசை !! முடியுமா ?

 • கிரி March 22, 2013, 7:29 AM

  அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  @முத்து “இன்னும் அது வாங்கலாம் இது வாங்கலாம் என்று கட்டுப்பாடில்லாமல் ஆசைப்படுவதும் நிதர்சனம்தான்.”

  இது நிதர்சனம் கிடையாது. இது நமது அதிகப்படியான ஆசைகள். நிதர்சனம் என்பது நமக்கு வேறு வழியில்லாமல் நாம் விருப்பப்படவில்லை என்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தால் அதன் பெயர் நிதர்சனம். எடுத்துக்காட்டாக உங்களுக்கு உங்கள் ஊரில் இருக்க பிடிக்கிறது ஆனால் வேலை சிங்கப்பூரில் உள்ளது மற்றும் பணம் சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனும் போது நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் இதை ஏற்றுக்கொண்டு இருப்பது தான் நிதர்சனம்.

  @யாசின் உணர முடிகிறது.

  @துளசி கோபால் உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி

  @ரோஷன் 🙂

  @வடுவூர் குமார் எனக்கு நிறைவு வரவில்லை.. சலித்து விட்டது.

  @தீபக் நீங்கள் கூறுவது சரி தான். ஊருக்கு வந்தால் இது போல எழுத முடியாது மற்ற வேலைகள் அதிகம் இருக்கும் ஆனால் என்ன செய்வது?

  @விஜய் வாழ்த்துக்கள்

  @SSK நீங்கள் கூறுவது எதார்த்தம் எனக்கு புரிந்து கொள்ள முடிகிறது இருந்தும் எனக்கு தொடர பிடிக்கவில்லை.

  @சூர்யா நீங்கள் ஆஸி யில் இருப்பது பற்றி கூறுவதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காக இந்தியாவை மட்டப்படுத்த வேண்டாம். நமக்கு பிரச்சனை வராத வரை எந்த இடமும் நல்ல இடம் தான் ஆஸியையும் சேர்த்தே கூறுகிறேன்.

  @சிவா ஒருத்தர் திரும்ப சர்வீஸ் வந்தால் தான் பார்ப்பேன். இன்னொரு நண்பர் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை. எதுவும் தகவல் வேண்டும் என்றால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் கேட்டு சொல்கிறேன்.

 • Arjun Sridhar UR March 22, 2013, 10:02 AM

  நீங்கள் கூறுவது போல் சிங்கபூரில் உள்ளவருக்கு வேண்டுமானால் தேரியும். அதுவே அதிகமாக சம்பளம் வாங்குவோவருக்கு தேரியாது நான் வேலை சேய்த போது மேனேஜருக்கு சம்பலம் 12,000 சிங்கப்பூர் வெள்ளி வாங்கி கொண்டிருக்கிறவருக்கு தெரியாது. அவர்கள் சிங்கப்பூரிலோ இந்தியாவிலோ செட்டில்/குடிஅமர நினைக்கவில்லை. ஆஸ்திரேலியாவிலோ, நியுஸியிலோ, கனடாவிலோ தான் குடிஅமர நினைக்கின்றன. ஏன்னேன்றால் இந்தியாவில் அப்படி ஒன்றும் எளிதல்ல ஒரு நிறுவனத்தை தொடங்குவதோ இயல்பான வாழ்கை வாழ்வதர்கோ உகந்த இடம் இல்லை.

  ஒவ்வொரு நாளும் நான் பட்ட வேதனையை எழுத்தில் வடிக்க இயலாது. நாங்கள் இருக்கும் விட்டு சந்து சிரியது அதில் ஆட்டோகாரர்களும் கார்காரர்களும் போடும் அட்டகாசம் அளவே இல்லை.
  எங்கள் வீட்டிலும் சான்ரோ கார் இருக்கிறது நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. நான் பல முறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தான் வழியில் உள்ள தடை ஏற்படுதும் வாகனங்களை களையா முடிந்த்தது. அதுவும் ஒருவருடைய கார்/மகிழுந்து கச்சிகார்கரர்களுடையது அதை அப்புறப்படுத்த என் நண்பர் பத்திரிக்கை ரிப்போட்டரின் உதவி தேவைப்பட்டது. அது மட்டுமில்லாமல் அவர் கச்சி முக்கிய உறுப்பினருக்கு கொடுத்த அழுத்தத்தில் பயனாக என்னயான்னு கேட்டவர் என்ன தம்பினு மரியாதை வந்தது. நாங்களும் செல்வாக்கானவர் என்பது தெரிந்தவுடன் காவல் துறையே அடக்கி வாசிக்கின்றனர். எனக்கு சம்பாரிக்கவேண்டும் என்பது முக்கியமல்ல நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே முக்கியம். ஏன்னேன்ரால் மூன்று தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடும் சொத்து இருந்தாலும் எனக்கு அதில் உடன் பாடு இல்லை. எல்லாம் அப்பா சொத்து. நான் சம்பாரிக்கவேண்டும் என்று ஆவல். எதையும் எதிர்கொள்ளும் மனோனிலை வேண்டும் சாதிக்கவேண்டும், ஒரு சில சமையம் நாம் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்குரோமோன்னு தோனும்.. இருந்தாலும் தனித்து நின்று சாதிப்பது பேறுமை தானே.

  மற்றவர்(முக்கியமாக அரசாங்க அதிகாரிகள், கச்சி உறுப்பினர், மற்றும் பல..) ஏளனப்பேச்சுக்கும் ஏச்சிக்கும், (ஒரு புலுவை நடத்துவது போல்) ஆளானவன் என்ற முறையில் இந்தியா எனக்கு பிடிக்கவே இல்லை.

  நீங்கள் கூறுபவர்கள் சம்பலம் கரர்களுக்கேல்லாம் சுமார் 500 வெள்ளியில் இருந்து 2500 க்குள்தான் இருக்கும். அவர்களால் எதையும் வளந்த நாடுகளில் சாதிக்க முடியாது. கடைசி வரை முன்னேறவும் முடியாது அதன் எமாற்றமே ஊருக்கு திரும்புவது.

  எனக்கும் இந்தியாவுக்கு போக பிடிக்கும் ஏன்னேன்றால் அங்குதான் சித்தர்கள் தரிசனம் கிடைத்தது ஆனால் அமைதியாக வாழ எதாவது மலைக்கிராமம் தான் சிறந்தது.

  இனிது இனிது ஏகாம்தம் இனிது….
  ஏகாம்தம் = தனிமையில் உன்னை நீ அறிய இருப்பது

  என்னுடைய பின்னுட்டத்திற்க்கு எந்த பதிலும் உங்களிடம் இருந்து இல்லை ஏனேன்றால் இதுதான் நிதர்சனமான உண்மை.

  என் வண்டியைப்பார்க்க… ஒரு கார்போகும் அளவிற்க்கு இடம் வேண்டும்… இதுவும் ஒரு மாற்று சிந்தனையே
  http://www.facebook.com/arjunsridharur

 • கிரி March 25, 2013, 7:43 AM

  அர்ஜுன் உங்களுக்கு இந்தியா பிடிக்க வேண்டும் என்று நான் எங்கேயும் கூறவில்லையே. கட்டுரையில் கூட எங்கே இருப்பதும் அவரவர் விருப்பம் என்று தான் கூறி இருக்கிறேன்.

  எதுவுமே பொதுப்படையாகக் கூறி விட முடியாது.. அதே போல அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் கூற முடியாது. ஒருவருக்கு ஒரு இடம் பிடிப்பதும் பிடிக்காமல் போவது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது. உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் வருத்தமாகத் தான் உள்ளது. தனிப்பட்ட ஒருவரின் கருத்தை வைத்து ஒட்டுமொத்தமாக ஒரு விஷயத்தை தீர்மானிக்க முடியாது.

  நான் 500 SGD சம்பளம் வாங்குபவர் பற்றி மட்டும் கூறவில்லை. நீங்கள் சரியாகப் படித்தீர்களா என்று தெரியவில்லை. உடன் IT யில் உள்ளவரையும் கூறி இருக்கிறேன்.. வரப்போவதாக கூறும் நானும் IT யில் தான் உள்ளேன். இங்கே இருந்தால் எனக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதும் எனக்குத் தெரியும்.

  உங்களுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும். உங்களுக்கு பிடித்த நாட்டில் இருங்கள் என்று கூறுவதைத் தவிர வேறு என்ன கூற முடியும். சூழ்நிலைகளே ஒரு மனிதனின் முடிவை தீர்மானிக்கின்றன. உங்களின் பிரச்சனைகள் அதன் வலி எனக்குத் தெரியாது.. புரிந்து கொள்ள மட்டுமே முடியும்.

  எனவே நீங்கள் எங்கு இருந்தால் சந்தோசமாக இருப்பீர்களோ அங்கே இருங்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. நாம் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருந்தாலே போதுமானது எங்கே இருக்கிறோம் என்பது முக்கியமல்ல.

  நான் யாரையும் இந்தியா வந்து இருங்க என்று கூறவில்லை. வருவதும் வராமல் போவதும் அவரவர் விருப்பம். என்னுடைய கருத்து நான் ஊருக்கு அடுத்த வருட இறுதியில் செல்ல வேண்டும் என்பது.

 • Arjun Sridhar UR March 25, 2013, 10:45 AM

  இந்தியா பிடிக்கவில்லை என்று என்றுமே சொல்லவில்லை சொல்லவும் மாட்டேன். இந்திய அரசாங்க, அரசியல், சட்ட இயந்திரம் பிடிக்கவில்லை என்றுதான் சொல்கிறேன். ஊர் பிடிக்கும் சில மக்களின் நடத்தை பிடிக்கவில்லை. வெளி நாடுகளில் ஊனம் ஒரு குறையே இல்லை. அவர்கள் இன்னும் இரண்டு மடங்கு மதிக்கின்றனர் (மதித்தலில் பரிதாபம் கிடையாது). இந்தியாவைப்போல 100ற்றுக்கு 90% மக்கள்(100ற்றுக்கு 1% மாணவர்கள்) கேவலமாகவும், ஏலனமாகவும் தான் பார்கின்ரனர். ஆனால் இதுபோல் வெளி நாடுகளில் பார்த்தது இல்லை இது நாள் வரை.

  இந்தியா பிடிக்கவில்லை என்று என்றுமே சொல்லவில்லை சொல்லவும் மாட்டேன்.
  இந்திய அரசாங்க, அரசியல், சட்ட இயந்திரம் பிடிக்கவில்லை என்றுதான் சொல்கிறேன். ஊர் பிடிக்கும் சில மக்களின் நடத்தை பிடிக்கவில்லை. அப்படி இல்லை என்றால் ஏன் மும்பை பற்றி எழுத/நினைக்க வேண்டும். மானிலத்திர்க்கு மானிலம் சட்டம் வேறுபடும் மாக்களின் மனமும் தான். வெளி நாடுகளில் ஊனம் ஒரு குறையே இல்லை. அவர்கள் இன்னும் இரண்டு மடங்கு மதிக்கின்றனர் (மதித்தலில் பரிதாபம் கிடையாது). இந்தியாவைப்போல 100ற்றுக்கு 90% மக்கள்(100ற்றுக்கு 3% மாணவர்கள்) கேவலமாகவும், ஏலனமாகவும் தான் பார்கின்ரனர். ஆனால் இதுபோல் வெளி நாடுகளில் பார்த்தது இல்லை இது நாள் வரை.

  முட்டை இட்ட கோழிக்கு தான் அதன் வலி தேரியும்.

  டாடா பாகிஸ்தானை எதிர்தார் ஆனால் நம் அரசியல்வாதி பாகிஸ்தானை ஆதரித்து டாடாவுக்கே டாடா காண்பிக்கப்பார்கின்றனர். நம் நாட்டிலும் நாலு நல்லவர் இருக்கத்தான் செய்கின்றனர்.

 • sagunthala June 3, 2013, 10:58 PM

  எனக்கு சிங்கபூரே வரணும்னு ரொம்ப ஆசை.சின்ன வயதிலிருந்தே,i am completed diploma in computer science and எங்க(90%) .now i am studying BE (CSE ) திர்த்யியர்(78%) .please help me .job refer pani solluga .

 • sagunthala June 3, 2013, 11:00 PM

  டெல் மீ அன்ய்திங்.

 • thangaraj August 25, 2013, 5:35 PM

  sir ennaku oru jobi iruntha solunga diploma civil engineering 10 yr exp
  mail.id:gold.leo48@gmail.com

 • Muniyasamy March 26, 2014, 1:04 PM

  சூப்பர் நான் அங்க வந்து வொர்க் பண்ணனும் ஆசை BE (ECE )முடித்து விட்டேன் ப்ளீஸ் ஹெல்ப் மீ

Leave a Comment