சேட்டை – தண்ணீர் பஞ்சம் – திட்டுகள் – WhatsApp

ந்தப்படத்தில் இருக்கும் பெண் ஒரு பிரபலத்தின் மகள். யார் என்று கண்டுபிடியுங்கள்? எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.

முடியாதவர்களுக்கு சின்ன க்ளு, இந்த பிரபலம் தமிழர்களுக்காக உயிரைக் கொடுப்பவர்கள் பட்டியலில் முதலாக இருப்பவர் 🙂 . Image removed as requested

டந்த திங்கள் மற்றும் செவ்வாய் சீனப் புத்தாண்டு. அதனால் சிங்கப்பூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருக்கும், குறிப்பாக எந்த ஒரு Food Court ம் திறந்து இருக்காது. அறிவிக்கப்படாத பந்த் போல இருக்கும், இந்த முறை அப்படி இல்லை.

சாப்பிட லிட்டில் இந்தியா தான் செல்ல வேண்டி இருக்கும். சிங்கப்பூரில் அனைத்து சமுதாயத்தினருக்கும் இரண்டு நாட்கள் அரசு விடுமுறை வரும் அதில் சீனர்களுக்கு இந்த இரு நாள். சீனாவில் ஒரு வாரம் புத்தாண்டை கொண்டாடுவார்கள்.

ர்யா நடித்த “சேட்டை” விரைவில் வரப்போகிறது. இதில் உள்ள “நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா” என்ற குத்துப் பாடல் சூப்பர் ஆக இருக்கிறது ஆனால், பாடல் இரட்டை அர்த்தப் பாடலாக விவகாரமாக இருக்கிறது.

ஒஸ்தி வார்த்தை மட்டுமல்ல பாடலின் இசை கூட அது போல தான் சில இடங்களில் உள்ளது. இரண்டிற்கும் (ஒஸ்தி / சேட்டை) இசை தமன் தான்.

இதைப்பாடியவர் குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று தேடினால், அட்டக்கத்தி படத்தில் “ஆடி போனா ஆவணி” பாடலைப் பாடிய கானா பாலா.

அட்டக்கத்தி படம் பற்றிக் கூறியதும் கடந்த வாரம் திரும்பப் பார்த்த “ஆடுகளம்” நினைவிற்கு வருகிறது. இதில் டாப்சியை தனுஷ் உட்பட இருவர் காதலிப்பார்கள்!! [சண்டை கூட நடக்கும்] அந்த இன்னொரு நபர் அட்டக்கத்தி ஹீரோ தினேஷ் 🙂 . இது எப்படி இருக்கு!

சிங்கப்பூரில் கடந்த 5 நாட்களாக கடும் மழை. காற்று கூட அடிக்காமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எங்க ஊர்ல எல்லாம் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எங்கே பார்த்தாலும் கிராமத்தில் போர் போட்டுக்கொண்டு இருப்பதாக அம்மா கூறினார்கள்.

இங்க பெய்யுற ஒரு நாள் மழை எங்க ஊர்ல பெய்தால் கூட போதும். இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் மிகக் கொடுமையாக இருக்கும் என்று அனைவரும் கூறுகிறார்கள். தண்ணீர் அதிகமாக உள்ள எங்கள் ஊர் [கோபி] பக்கமே இந்த நிலை என்றால்…!

மல் படத்திற்கு விமர்சனம் எழுதினால் தான் பிரச்சனை என்று இனி எழுத மாட்டேன் என்று கூறினால் அதற்கு அதை விட அசிங்க அசிங்கமா கமெண்ட் மாடரேசன் போடுற அளவிற்கு திட்டறாங்க. என்ன கொடுமை சார் 🙂 .

ஒரு படம் புரியலன்னு சொன்னது ஒரு தப்பாயா! பேசாம கமல் பேட்டியையே விமர்சனம் என்று எடுத்துப்போட்டு இருந்தால் யாரும் புரியலைன்னு எதுவும் சொல்லாம இருந்து இருப்பாங்களோ! :-D.

Read: கமல் பட திரை விமர்சனத்திற்கு இனி “கதம் கதம்”

கிரி யார் சொன்னா என்ன? இது உங்க தளம்! நீங்க யாரையும் கையப் பிடிச்சு இழுத்து வந்த படிக்கக் கூறல அப்புறம் என்ன? இது போல கூறுபவர்களை புறந்தள்ளுங்கள் உங்கள் மனதில் பட்டதை எப்போதும் போல கூறுங்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.

உண்மையில் யாரும் கூறுவதற்காக நான் கமல் பட விமர்சனம் எழுதுவதை நிறுத்தவில்லை. எனக்கே திருப்தி இல்லாமல் இருந்தது, திருப்தி தராத எதையும் எழுதுவதில்லை. அதனால் தான் நீண்ட காலமாக மனதில் இருந்ததை தற்போது கூறி இருக்கிறேன், அவ்வளவு தான்.

வேறு எதையும் நிறுத்தும் எண்ணமும் இல்லை.

நீங்க ஏன் விமர்சனம் எழுதலைன்னு சொல்லறீங்க.. இனி வரும் படங்களுக்கு எழுதாமல் விட்டு விட வேண்டியது தானே! என்று கேட்டு இருந்தார்கள்.. நியாயம் தான் ஆனால், ஒவ்வொரு முறை படம் வரும் போதும் இதற்கு நான் விளக்கம் கொடுத்துட்டு இருக்கணும்.

இது வேண்டாத வேலை அதனால் தான் இதை எழுதினேன்.

என்ன திட்டினாலும் ஸ்பாம்க்கு போகிற மாதிரி ஃபில்டர் [காபி அல்ல] போட்டு விட்டேன். ஹி ஹி நமக்கு தெரியாத கெட்ட வார்த்தையா! புதுசா ஏதாவது வந்தா இன்று ஒரு தகவல் மாதிரி இன்று ஒரு கெட்ட வார்த்தையா தெரிந்துக்க வேண்டியது தான் 😉 .

கிரிக்குள்ள மோசமான இன்னொருத்தன் இருக்கான் :-). நான் இவங்க அளவுக்கு இறங்கி சண்டைப் போட்டால் என்னுடைய தளம் படிக்க சாக்கடை மாதிரி தான் இருக்கும், அதை நான் விரும்பவில்லை.

மற்றபடி எனக்கு இதற்காக ஆதரவு தெரிவித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி. என்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை. யாருக்காவும் நான் மாற்றிக்கொள்ளவில்லை இது என்னுடைய தனிப்பட்ட முடிவே. ஏனென்றால் நாங்க… இதைக் க்ளிக்குங்க 🙂 Click Play

ரியும் பனிக்காடு” என்ற புத்தகத்தைப் படித்துகொண்டு இருக்கிறேன். இந்த[உண்மை]க் கதையைத் தான் இயக்குனர் பாலா “பரதேசி” படமாக எடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவும் இந்தப்புத்தகத்தை நான் வாங்க ஒரு காரணம்.

விரைவில் இதன் “விமர்சனம்” எழுதுகிறேன். “பாலா” எல்லாம் இதுக்கு சண்டைக்கு வர மாட்டார்னு நினைக்கிறேன் ;-).

ந்த முறை ஊருக்கு போன போது எனக்கும் என் அப்பாவிற்கும் பஞ்சாயத்து ஆகி விட்டது. பயந்துடாதீங்க… சும்மா லுலுலாயிக்கு 🙂 . என்னோட அப்பா நான் சிறியவனாக இருக்கும் போது ஒண்ணுமே வாங்கித் தரலை.

ஒரே ஒரு துப்பாக்கி, அதுவும் நான் சண்டைப் போட்டு கேட்டதும் கோவை “லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ்” ல் வாங்கிக் கொடுத்தார்.. பார்த்தீங்களா இடத்தைக் கூட எவ்வளவு நினைவு வைத்து இருக்கேன் என்று .

இப்ப என்னடான்னா… என் பையன் வினய்க்கு அவன் கேட்காமையே அது இதுன்னு வாங்கிக் கொடுத்துட்டு இருக்காரு. “அப்பா! எனக்கு ஒண்ணுமே வாங்கித் தரல இவனுக்கு இவ்வளவு வாங்கித் தரீங்களே” என்று சண்டைக்குப் போயிட்டேன்.

உடனே அப்பா “அதெல்லாம் ஒண்ணுமில்ல… உனக்கும் தான் வாங்கிக் கொடுத்தேன்” என்று கொளுத்திப் போட்டாங்க.. கடைசியில என்னோட அம்மா, நாட்டாமை மாதிரி வந்து எனக்கு சப்போர்ட் பண்ணியதும்.. அமைதி ஆகிட்டாங்க. நீங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்க.. :-).

WhatsAppநீங்கள் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர் என்றால் WhatsApp என்ற Apps கேள்விப்பட்டு இருப்பீர்கள், இன்னும் கேள்விப்படவில்லை என்றால் இப்ப “பட்டுக்குங்க” 🙂 .

இணையத் தொடர்பு இருந்தால் போதும் உலகில் யாருக்கு வேண்டும் என்றாலும் இதே போல App வைத்து இருப்பவர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம். இது போல App நிறைய இருந்தாலும் இது தான் பிரபலம்.

நான் SMS அதிகம் பயன்படுத்துவதில்லை. இதை நான் எதற்குக் கூறினேன் என்றால், இப்ப மொபைல் நிறுவனங்கள் SMS க்கு பல திருட்டு வேலைகள் செய்து வசூல் செய்கின்றன.

எனவே நீங்கள் ஸ்மார்ட் ஃபோன் (இணையத்துடன்) வைத்து இருந்து உங்கள் நண்பர்களும் வைத்து இருந்தால் இதைப் பயன்படுத்துங்கள். ஐந்து பைசா கூட இவர்களுக்கு கொடுத்துடக் கூடாது. எவ்வளவு வசதி இருக்குதோ அத்தனையையும் பயன்படுத்தி இவர்களுக்கு வேட்டு வைக்கணும் என்பது தான் என் பாலிசி 🙂 .

இதில் குரூப் சாட் கூட உண்டு, 30 பேர் வரை இதில் இணைந்து சாட் பண்ணலாம். இதில் நீங்கள் படங்கள், வீடியோ மற்றும் ஆடியோ கூட அனுப்ப முடியும்.

என்னோட அக்கா பையன் இதை போன வாரம் நிறுவிட்டு எனக்கு, மாம்ஸ்! குட் மார்னிங், குட் ஈவ்னிங், குட் நைட் என்று கூறி, என்ன சாப்பிட்டீங்க? போன்ற மிக முக்கியமான கேள்விகள் கேட்டுட்டு இருக்கான்.

இது கூட பரவாயில்ல… எனக்கு சம்பந்தமே இல்லாத ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் பொன்மொழி எல்லாம் அனுப்பிட்டு இருக்கான் 🙂 . இந்தியாவில் SMS அதிகம் பயன்படுத்தப்படுவது “கடலை” “மொக்கை” போடுவதற்குத் தான் என்று “நாசா”வில் பல ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டு பிடித்து இருக்கிறார்களாம் 😀 .

{ 22 comments… add one }
 • பேரனுக்கு தான் முதலில்…

  இனிய பஞ்சாயத்து…

 • Ramesh February 14, 2013, 7:45 AM

  சத்யராஜ் பொண்ணு தான சார்..

 • salemdeva February 14, 2013, 11:52 AM

  சேலம் to பவானிக்கு கிரி பஸ் சர்வீஸ் ஒண்ணு இருக்கு….அந்த பஸ்ல ஒவ்வொரு ட்ரிப்லயும் இந்தப்பாட்ட போட்டு கெத்து காட்டுவாங்க….உங்க பில்ட்அப்ப பாத்தவுடன் எனக்கு அந்த ஞாபகம் வந்துருச்சு… 🙂

 • காத்த‌வ‌ராய‌ன் February 14, 2013, 11:59 AM

  பப்ளிசிட்டி பகுத்தறிவாளர்களில் ஒருவரும்
  தற்போது தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள படங்களில் தமிழ் புரட்சி செய்யும் புரட்சிதமிழ்னுமாகிய
  சத்தியராசு பொண்ணுதானுங்கண்ணா அது………………….

  //என் பையன் வினய்க்கு அவன் கேட்காமையே அது இதுன்னு வாங்கிக் கொடுத்துட்டு இருக்காரு//

  குடும்பசூழல், பொருளாதார போராட்டம் போன்றவற்றால் தன்னோட குழந்தைகளுக்கு காட்ட முடியாத அன்பை எல்லாம் சேர்த்து மொத்தமாக பேரப்பிள்ளைகளுக்கு கொடுப்பது முந்தைய தலைமுறையின் இயல்பு.

  இன்றைய தலைமுறை திருமணத்திற்கு முன்பே ஓரளவு செட்டில் ஆகிவிடுவதால் குழந்தைகளுக்கு அதிகம் செலவழித்து அன்பு செலுத்துகிறார்கள்.

 • Vijay February 14, 2013, 12:06 PM

  “..ரெண்டு காலு சிங்கம்டா கிரி….”

  பாஸ் நீங்க செம்ம காமெடி பாஸ் 🙂

  முடியலை !!!!!

 • அருண் பிரசங்கி February 14, 2013, 12:08 PM

  வணக்கம் கிரி..

  நலமா??

  அவங்க நடிகர் சத்யராஜ் பொண்ணு.. அப்பா ஜாடை 🙂

  சேட்டை பாடல் செம குத்து.. நீங்க சொன்ன மாதிரி ரொம்ப நெளிய வைக்குது வார்த்தைகள்.. 🙂

  மழை பற்றி நீங்க சொன்ன உடனே யானைகள் நியாபகம் தான் வருது.. யானைகள் இயற்கையின் மிக சிறந்த வாழ்வாதார விலங்கு.. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய இருப்பிடத்தை மாற்றும். அப்படி மாறி போற பாதைகளை தான் யானை வழி தடம் என்று சொல்வர்..

  அப்படி செல்லும் பொது காடுகளில் உள்ள மரங்களின் கொப்புகளை உடைக்கும்.. மரங்களையும் தான்.. அந்த மரத்தின் இலைகள் சில உயிரினங்களுக்கு உணவாக அமையும்..

  அது போக யானையின் சாணம் புதிதாக வளரும் மரங்களுக்கு ஊட்டச்சத்தாக அமைகிறது. இதன் மூலம் காடுகளில் உள்ள மரங்களின் வளரும் தன்மைக்கும் புதிப்பித்தல் முறைக்கும் யானை ஆதாரமாக இருக்கிறது. காடுகள் செழிப்பாக இருந்தால் மழை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லையே..

  அப்படிப்பட்ட காடுகளை அழித்து (யானை வழித்தடங்களை) பிளாட் போட்டு கல்லூரி, வீடுகள், பள்ளிகள் என்று கட்டுறோம் . தப்பை நம்ம மேல வச்சுக்கிட்டு யானைகள் அட்டகாசம் தாங்க முடியல என்று சொல்றோம்.. 🙂

  ரொம்ப மொக்கை போடுறேன்… போதும்… 🙂

  நாத்திகவாதிக்கும் எனக்கும் செட் ஆகாது.. சோ நோ கமெண்ட்.. 🙂

  பெற்றோருக்கு எப்பவுமே பேரக்குழந்தைகளிடம் தான் நெறைய அன்பும், மிக மிக குறைவான கண்டிப்பும் இருக்கும்.. இல்லையா? 🙂

  லாஸ்ட் பஞ்ச் செம.. நம்ம ஆளுங்க எப்பவுமே இப்படி தான்.. 🙂

  என்றும் உங்கள்,
  அருண் பிரசங்கி

 • Gowrishankar.P February 14, 2013, 12:10 PM

  “எளிதாகக் கண்டு பிடித்து விடலாம். முடியாதவர்களுக்கு சின்ன க்ளு, இந்த பிரபலம் தமிழர்களுக்காக உயிரைக் கொடுப்பவர்கள் பட்டியலில் முதலாக இருப்பவர்”

  அந்தளவுக்கு உலக ஞானமெல்லாம் நமக்கு இல்லீங்க தல, நீங்களே சொல்லிடுங்க.

 • ARAN February 14, 2013, 2:33 PM

  நண்பா கிரி
  இப்படியே விமர்சனம் பண்ண எதிர்ப்பு என்று யோசித்தால் உங்கள் நடுநிலைமை மீது உங்களுக்கே சந்தேகம் ஏற்பட்டு தலைவர் ரஜினி படங்களுக்கும் பெயரளவில் ஏதாவது குறை கண்டுபிடித்து சொல்ல வேண்டும் இல்லை என்றால் நம்ம நடுநிலைமை பற்றி கேள்விக்குறியாகிவிடும் என்றெல்லாம் யோசிக்க தோணும் .நீங்க பாட்டுக்கு போயிட்டே இருங்க மனதில் படுவதை நாகரீகமாக விமர்சிப்பதை கூட தாங்க முடியாதவர்கள் பலவீனமானவர்களே. “நாம எங்கே புடிக்கலன்னு சொன்னோம் புரிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு தான சொல்றோம் ” என்ன இப்படி வந்திருச்சு!!!!?
  ok ஒரு ரஜினி ரசிகராக தலைவரின் ஆருயிர் நண்பரின் வெற்றியை நாமும் மகிழ்வுடன் வரவேற்போம்.

 • ARAN February 14, 2013, 2:35 PM

  அப்புறம் நான் முன்பு சொன்ன ustad hotel இன்னும் பார்க்கலையா ? பார்த்துட்டு விமர்சனம் போடுங்க ரசனையான படம்.

 • ARAN February 14, 2013, 2:41 PM

  அப்புறம் இந்த அப்பாக்களே இப்படிதான் பேரன் பேத்திகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்பாங்க.ஆனாலும் அதை பார்க்கும்போது நமக்கு ஒரு ஆத்மா திருப்தி கிடைக்குமே அது கோடி கொடுத்தாலும் கிடைக்காது.நீங்க உங்க அப்பாக்கு மாதம் லட்சம் கூட தரலாம் ஆனாலும் உங்கள் தந்தை பேரனுக்கு தரும் பத்து ரூபாய் பொருள் விலை மதிப்பிலாதது.நன்றி.

 • Prabhu February 14, 2013, 6:05 PM

  WhatsApp ல உங்கள காணோமே. சூர்யா இருக்காரு. உங்கள காணோம். பிளாக் எதாவது பண்ணி வெச்சிருக்கீங்களா ? விடமாட்டேன்.

 • Ilavarasan February 14, 2013, 11:49 PM

  வணக்கம் கிரி அவர்களே,
  இளைய தலைவிதியின் அல்லக்கையின் மகள்தானே இது.மேலும் கொசுறுகளுக்காக நன்றி.

 • arun February 15, 2013, 7:52 AM

  கொசுறு எல்லாமே சூப்பர் தல
  வினய் பக்கம் வேணும் தல உங்க அப்பா கிட்ட உள்ளத வினய் பதிவா எடுத்துக்க முடியாது

  – அருண்

 • r.v.saravanan February 15, 2013, 2:48 PM

  நம் பெற்றோர்களுக்கு நம்மை விட நம் குழந்தைகள் (பேர குழந்தைகள்) மேல் ப்ரியம் ஜாஸ்தி

  “சேட்டை” விரைவில் வரப்போகிறது. இதில் உள்ள “நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா” என்ற குத்துப் பாடல் சூப்பர் ஆக இருக்கிறது

  அப்ப சேட்டை யை சட்டை பண்ணலாம் னு சொல்லுங்க

 • Rajkumar February 16, 2013, 11:35 AM

  வாட்ஸ்அப் முன்னமே தெரியும் கிரி அதுல உங்க லோகேஷனையும் இணைத்து மெசேஜ் செய்ய முடியும். ஆனா இது ஒரு வருடத்துக்குதான் ப்ரீ அப்படின்னு சொல்லுது. என்னோட இன்னும் 2 மாசத்துல எக்ஸ்பைரி ஆகும் – பார்ப்போம்.

  எங்கப்பாவும் எனக்கு ஒரு விளையாட்டு சாமானும் வாங்கி தரல. நானும் என் தம்பியும் தோள்மேல கைபோட்டு (ஸ்டார்ட் மியுசிக் – தென்மதுரை வைகை நதி தினம் பாடும்…ஸ்டாப் மூசிக்) முக்கால்ரூபா சர்பத்து குடிக்கசெல்வோம் (இப்போ 25 ரூபா) எங்கப்பா சளி புடிச்சிக்கும்ன்னு திருப்பி அனுப்பிடுவாரு – பணகஷ்டமும் ஒரு காரணம் தான். இப்போ நாங்க அவரு குழந்தை மாதிரி கேட்குரத்தை எல்லாம் வாங்கி தரோம்…

  நானும் கமல் ரசிகந்தேன்… அவரு டைமிங் சென்ஸ் உள்ள ஆளு. ரெண்டு மூணு தடவை காட்சி பிசராமல் பார்த்தாதான் கமல் படம் புரியும். நீங்க இப்படி ஒரு பதிவு போடும்போதே எனக்கு தெரியும் பதில் சொல்லி பதில் சொல்லியே வெருத்துடுவீங்கன்னு அதனாலதான் நான் அன்னைக்கு பின்னூட்டம் போடலை.. ஹி ஹி ஹி – தெரிஞ்சே தான் சொன்னீங்களான்னு தெரியல – ரஜனி படம் வரும்போது செமையா மாட்டபோறீங்க.

  ப்ரீயா உடுங்க கிரி.

 • Rajkumar February 16, 2013, 11:44 AM

  இப்போ தெரியுதா கிரி உங்க ப்ளாகோட “விஸ்வரூபம்” (அதாகப்பட்டது – உங்கள் பதிவை எத்தனைபேர் படிக்குறாங்க அப்படின்னு) கொஞ்சநாளுக்கு முன்னாடி கமெண்ட்ஸ் வரமாட்டேன்குதுன்னு வருத்தப்பட்டீங்க…. இப்ப வியாபார காந்தம் கமல் மாதிரி நெகடிவ் பப்ளிசிட்டி வந்துடுச்சி.. ஊரே ஒன்னு கூடிடுச்சி.. இனி கமெண்ட்ஸ் ஏரியாவுல புதிய தலைகளை பார்க்கலாமின்னு நினைக்குறேன். ச்சும்மா தமாசு..

 • RAVI February 16, 2013, 3:28 PM

  \\ “கடலை” “மொக்கை” போடுவதற்குத் தான் என்று “நாசா”வில்
  பல ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டு பிடித்து இருக்கிறார்களாம்//

  இதை கூடே நாசாவில் ஆராய்சி பண்றாங்களா?

 • Arjun Sridhar UR February 16, 2013, 3:32 PM

  என்னங்க் திரைப்படத்தைப்பற்றி விமர்சனம் எழுதினால் வம்பு என்று எதொ ஒரு வருடைய மகள் படம் போட்டு தப்பிச்சிட்சிங்களா.., நாங்க விட மாட்டோம் அதுக்கும் ஆப்பு வைக்க கிலம்பிட்டோம்.
  கிலம் பிட்டாங்கையா கிலம்பிட்டாங்க…. ?!!

 • கிரி February 20, 2013, 7:44 AM

  அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  @ரமேஷ் ஆமாம் 🙂

  @தேவா 🙂

  @காத்தவராயன் நீங்கள் கூறுவது பொதுப்படையாக சரி ஆனால் என் அப்பா அந்த சமயத்தில் அவ்வளவு சிரமத்தில் எல்லாம் இல்லை 🙂

  @விஜய் ஒருத்தன் கொஞ்சம் பில்டப் கொடுத்தால் பொறுக்காதே! 🙂

  @அருண் நீங்கள் யானை பற்றி கூறியது சுவாரசியமாகவே இருந்தது. இன்னும் கொஞ்சம் தகவல் இருந்தாலும் கூறலாம். கேட்க ஆர்வமாகவே இருக்கிறேன் :-).

  @கௌரிஷங்கர் இது வேற ஒரு பதில் கூறலாம் என்று இருந்தேன்.. ஏற்கனவே பல சண்டைகள் அதனால் ஹி ஹி.. நம்ம புரட்சி தமிழன் சத்யராஜ் தான்.

  @அரண் நடுநிலை எல்லாம் நான் கிடையாதுங்க.. நடுநிலை என்றாலே எனக்கு அலர்ஜி 🙂 ரஜினி படங்களிலும் குறைகள் இருக்கும் போது சொல்வதில் தவறில்லையே!

  Ustad Hotel தரவிறக்கம் செய்து விட்டேன்.. இன்னும் பார்க்கவில்லை. பார்த்தவுடன் எழுதுகிறேன்.

  @பிரபு எனக்கு அலுவலகத்தில் வேறு எண் கொடுத்ததால் மாற்றி விட்டேன்.

  @இளவரசன் 🙂

  @அருண் எதுவுமே அளவோடு எழுதினால் அதற்கும் மதிப்பு இருக்கும். இதே வேலையா எழுதிக்கொண்டு இருந்தால் படிக்கும் சிலருக்கு எரிச்சல் வரவே வாய்ப்பு 🙂

  @சரவணன் நான் பாட்டை மட்டுமே கூறினேன் 😉

  @ராஜ்குமார் நீங்கள் கூறுவது சரி தான் ஆனால் இது பெரிய பணமல்ல இது தரும் வசதிகளை ஒப்பிடும் போது. BTW இவர்கள் ஒரு நாள் இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதித்தார்கள் அந்த கேப் ல இதை செய்து இலவசமாக்கிட்டேன் 🙂

  உங்க அப்பா கதை I like it 🙂

  கமல் – நோ கமெண்ட்ஸ்

  விட்டுட்டேன் 🙂

  என்னிடம் சண்டை போட்டு நண்பர்கள் ஆன கமல் ரசிகர்கள் அதிகம் ராஜ்குமார் 🙂

  @ரவி நான் பொழுது போகாம சும்மா கொளுத்தி போட்டால் அதை உண்மை என்று நம்பி இப்படி அப்பாவியா கேட்குறீர்களே! 🙂

  @அர்ஜுன் இதே வேலையா இருப்பீங்க போல இருக்கே 🙂

  • அருண் பிரசங்கி February 28, 2013, 2:49 PM

   நன்றி கிரி…
   யானைகளை பற்றிய விஷயங்கள் எல்லாமே சுவாரசியம் தான் .. 🙂 அங்க அங்க படிச்சதை வச்சு சிலது சொல்றேன்.. 🙂
   * ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும் ஒரே அதிசய விலங்கு யானை..
   * நாய்களை விட நன்றி உள்ளவை..
   * கிட்டத்தட்ட அஞ்சு கிலோமீட்டர்-க்குள்ள தண்ணீர் எங்கே இருந்தாலும் கரெக்டா மோப்பம் பிடிச்சுடும்..
   * ஒரு நாளில் பதினாறு மணி நேரம் சாப்பிடுறதை மட்டுமே வழக்கமா வச்சு இருக்கும்..

   அப்புறம் நேரம் இருந்தா இந்த வீடியோ பாருங்க

   யானை குட்டி விளையாடுறது ஒரு குழந்தை விளையாடுற மாதிரி இருக்கும்.. 🙂

   http://www.youtube.com/watch?v=vNSxargsAWk

 • Arjun Sridhar UR February 21, 2013, 5:19 PM

  உங்களுடைய பிலாக்கை தவிர்த்து வேற்றெதர்க்கும் பின்னூட்டம் போட்டதாக நினைவில்லை. எனக்கு உங்கள் தல (கிறு(குறு) (குரும்)க்குத்தனமான கேள்விகேட்கும்)வாசகர்களை மற்றும் உங்களையும் கலாய்க பிடித்திருக்கிறது.

 • LeO March 8, 2013, 2:41 AM

  கிரி
  whatsapp ரொம்ப பிரபலம் தான்… இங்க பாருங்க சோசியல் அப்ப்ஸ் எவ்ளோ மொபைல் நெட்வொர்க் எ பாதிச்சிருக்கு நு http://www.bbc.co.uk/news/technology-17111044

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz