“ரஜினி” பேசியது தவறா?

Rajiniசேவை வரி பற்றி ரஜினி கூறிய கருத்துக்கு வழக்கம் போல பலரும் திட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ரஜினி கூறியதில் என்ன தவறு என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை. திட்டுபவர்கள் எல்லாமே, “கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் தானே! பணம் கட்டட்டுமே!!” என்று தான் கூறுகிறார்கள்.

அதாவது இவ்வாறு கூறுபவர்கள் அனைவரின் எண்ணமும், பணம் நிறைய வைத்து இருக்கிறார்கள் பணத்தை வரியாகக் கட்டட்டுமே! ஏழைகளுக்கு பயன்படுட்டுமே அந்தப்பணம் என்று கூறுகிறார்கள்.

நல்ல விஷயம் தான். ஏழைகளுக்கும் ஒரு விஷயம் பயன்படுகிறது என்றால் அது வரவேற்க்ககூடிய விஷயம் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால், இருப்பதையே சரியாக செய்யாத போது மீண்டும் மீண்டும் வரியை கூட்டுவதால் என்ன பயன்?

இதுவரை போட்ட வரிகளை ஒழுங்காக வசூலித்து இருக்கிறார்களா? இந்தியாவில் வரியை (வேறு வழியில்லாமல்) ஒழுங்காக கட்டும் ஒரே இளிச்சவாய ஜீவன் மாத சம்பளக்காரர்கள் மட்டும் தான், அது கூட நிறுவனமே சம்பளம் கொடுக்கும் போதே பிடித்து விட்டு கொடுப்பதால் தான்.

வேறு எவருமே வரியை ஒழுங்காக கட்டுவதில்லை (விதி விலக்குகள் தவிர்த்து). அனைத்து நிறுவனங்களும் பொய் கணக்குக் காட்டி, பொய் நட்டம் காட்டி அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள்.

பெரிய வணிக நிறுவனங்கள், சிறு வணிகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நகைக்கடை அதிபர்கள், நடிகர்கள் தங்கள் வரியை ஒழுங்காக கட்டி இருந்தால் நமக்கு போடும் 30 சதவீத வரியையே இன்னும் குறைக்க முடியும்.

காரணம், அனைவரும் ஒழுங்காக வரி கட்டினால் வரும் பணம் அவ்வளவு இருக்கும் (“முதல்வன்” பட காட்சியை ஒரு முறை நினைவூட்டுங்கள்).

இதை புரிந்து கொள்ளாமல் ரஜினியை எதிர்க்கிறேன் பேர்வழி என்று, என்ன கூறினாலும் தையா தக்கான்னு குதிக்க வேண்டியது. அடிப்படை பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக வரியை உயர்த்துவதாலோ, விலையை உயர்த்துவதாலோ எந்த பலனும் இல்லை.

சேவை வரியை போட்டால் உடனே எல்லோரும் கட்டி விடுவார்களா! இதை எப்படி கருப்பு பணத்தில் வாங்கலாம் என்று தான் யோசிப்பார்கள். உனக்கு விதிக்கும் வரிக்கு எப்படியெல்லாம் தப்பிக்கிறது என்று யோசனை பண்ணும் போது, அவர்கள் யோசிக்க மாட்டார்களா!

தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு போன்ற சலுகைகளை நீக்க வேண்டும் என்றால், அது நியாயமான ஒன்று. இதை வைத்து எத்தனை பேர் கொள்ளை அடித்தார்கள். “சிவாஜி” படத்திற்கு கூட, அது பெயர்ச்சொல் என்ற ஓட்டையில் சலுகை வழங்கப்பட்டது.

இது போன்ற வரிச் சலுகைகளே தவறான ஒன்று. நமக்காவது சம்பளம் தெளிவாக இருக்கும், LIC வீட்டுக்கடன் என்று முக்கி முக்கி தான் சமாளிக்க வேண்டும். இவர்களுக்கு அந்தப் பிரச்சனையே இல்லை, எளிதாக ஏமாற்ற முடியும்.

எந்த இயற்கை வளமும் இல்லாத சிங்கப்பூரில், இங்கே உள்ள சிறு இடத்தை வைத்துக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களை இங்கே தொழில் துவங்க அனுமதித்து, இருக்கும் வசதிகளை மேம்படுத்தி, சுற்றுலாவை ஊக்கப்படுத்தி அதன் மூலம் வருமானத்தைப் பெருக்கி, அளவில்லா அடிப்படை வசதிகளை மக்களுக்கு கொடுத்து 7 சதவீதம் வரி தான் வசூலிக்கிறார்கள்.

காரணம், இங்கே வரி ஒழுங்காக கட்டப்படுகிறது ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதே சவூதி போன்ற நாடுகளில் வரியே இல்லை, இது கூட அங்கே எண்ணெய் வளம் இருப்பதால் அவர்களால் வரி விதிக்காமல் இருக்க முடிகிறது என்று கூற வாய்ப்பு ஆனால், சிங்கப்பூரில் அது போல எந்த இயற்கை வளமும் கிடையாது இருந்தும் அவர்கள் 7 சதவீத வரி தான் விதிக்கிறார்கள்.

நம் அரசாங்கம் 30 சதவீத வரியை பெற்றும் ஒழுங்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை.

சிங்கப்பூருடன் நம் நாட்டை ஒப்பிட முடியாது என்பதை அறிவேன், காரணம் வரி செலுத்த முடியாத அளவிற்கு ஏழை மக்கள் மிகுந்த நாடு. இதை ஒரு சிறு உதாரணத்திற்கு தான் கூறினேன்.

இதை எளிதாக புரிய வைக்க நம் தமிழகத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பேருந்துக் கட்டணத்தை சமீபத்தில் கடுமையாக உயர்த்தினார்கள்.

10 வருடமாக உயர்த்தவில்லை அதனால் உயர்த்தி இருக்கிறார்கள் என்று கூறலாம் ஆனால், அரசு பேருந்தில் போலியாக சலுகைகளை அனுபவிப்பவர்களையும், அதில் நடக்கும் ஊழல்களையும், உதிரி பாகங்கள் வாங்குவதில் நடக்கும் தில்லு முள்ளுகளையும் கண்டறிந்து அதை சரி செய்தால் நமக்கு பேருந்து கட்டண உயர்வே அவசியமில்லை.

இந்த அடிப்படை பிரச்சனைகளை சரி செய்யாமல் பயணச்சீட்டின் விலையை உயர்த்திக்கொண்டு இருந்தால் அதனால் மக்களின் சிரமம் தான் கூடுமே தவிர குறையாது. அரசின் பளு கொஞ்ச நாள் சரியானது போல இருக்கும் திரும்ப நட்ட கணக்கு தான் காட்டுவார்கள்.

முதலில் பிரச்சனைக்கான அடிப்படை காரணத்தை தான் சரி செய்ய வேண்டுமே தவிர கூடுதல் வரியோ / கட்டணமோ பிரச்சனையை தீர்க்காது, மேலும் அதை எப்படி கட்டாமல் தவிர்க்கலாம் என்று தான் கணக்கு போடுவார்கள்.

இதை தான் ரஜினி கூறினார். இதில் அப்படி என்னய்யா குற்றத்தை கண்டுபிடித்தீங்க!

நான் ரஜினி கூறியதால் இதைக் கூறவில்லை இது பற்றிய என்னுடைய கருத்தை எப்போதே தெரிவித்து விட்டேன், பின்வரும் பதிவில்.

Read: விலை உயர்வு பிரச்னைக்குத் தீர்வாகாது [November 2011]

இவ்வளவு பேசுறீங்களே! என்ன சொன்னீங்க.. கோடி கோடியாக சம்பாதிக்கறாங்களே வரியை (30% + 12%) கொடுக்கட்டுமே என்பது தானே…!

சரி! உங்களுக்கு அவர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் அதனால் கொடுக்கட்டும் என்கிறீர்கள்.. உங்களுக்கு கீழே இருப்பவர்களுக்கு நீங்கள் லட்சம் லட்சமாக சம்பாதிப்பதை பார்க்கும் போது உங்களுக்கு வரியைப் போட்டு ஏழைகளுக்கு உதவலாமே என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா!

வரியை தவிர்க்க என்னவெல்லாம் தில்லு முள்ளு நாம பண்ணுறோம்!

எதில் எல்லாம் ஓட்டை இருக்கோ அதை எல்லாம் பயன்படுத்தி எப்படி வரி கட்டுவதை குறைப்பது என்று தானே பார்க்கிறோம்.

ஏழைகள் மீது கரிசனம் உள்ள நீங்க எதுக்குயா இது மாதிரி பண்ணுறீங்க… வரியை ஏமாற்றாமல் முழுவதும் கட்டி மக்கள் நலனுக்கு / வளர்ச்சிக்கு உதவ வேண்டியது தானே!

இந்த வரிப்பணம் முழுக்க ஏழைகளுக்கு தான் பயன்படுத்துகிறார்கள் என்று நம்புகிற அளவிற்கு அப்பாவியா நீங்கள்.

அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகவும், இலவசம் கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்கவும், லட்சம் லட்சமாக செலவழித்து விழாவை கொண்டாடவும், அரசியல்வாதிகள் சலுகைகளை அனுபவிப்பதற்கும் பயன்படும் பணம் எது என்று உங்களுக்கு தெரியாதா!

மக்கள் வரிப்பணத்தை மக்களுக்காகவே முழுமையாக பயன்படுத்தி இருந்தால் இந்நேரம் நாமெல்லாம் அடிப்படை தேவை பிரச்சனைகளுக்காக இவ்வளவு சிரமப்பட்டு இருக்க மாட்டோம்.

ஏழைகளுக்கு பயன்படுத்தும் பணத்தில் எத்தனை கொள்ளை! ஊழல்!! உண்மையான ஏழை பலனை அடைவது மிகக் குறைவே! தகுதியற்றவர்கள் தான் பயனடைந்து வருகிறார்கள்.

இது போல நிகழாமல் இருக்க, வசூலிக்கப்படும் வரி நியாயமானதாக இருக்க வேண்டும். ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களிடம் வசூலிக்கப்படும் வரி முழுமையாக மக்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

பிரச்சனையின் மூலத்தை விட்டு விட்டு, வரியை உயர்த்து வரியை உயர்த்து என்று பொய் வேஷம் போடுவதால் எந்த பலனும் இல்லை. பட்ஜெட் ல நமக்கு வரி அதிகம் செய்யட்டும்.. அப்புறம் பாருங்க.. அவனவன் புலம்பி தள்ளுவான்.

சார்! நீங்க இரண்டு நாளைக்கு முன்னாடி அதிக வரி விதித்து ஏழைகள் பயன்பெறட்டும் என்று கூறினீர்களே! என்று கேட்டால்.. யோவ்! அது நடிகர்களுக்குயா எனக்கில்ல! என்று தான் வரும். ஏழைகள் மீதான கரிசனம் காணாமல் போய் விடும், இந்த குபீர் கரிசனவாதிகளுக்கு.

ஏழைகள் மீது கரிசனம் உள்ளது போல பேசுவது எல்லாம் நடிப்பு.. அவன் அதிகம் சம்பாதிக்கிறானே! என்ற வயித்தெரிச்சல் தான் உண்மை. ஏழைகள் மீது அன்பு இருந்தால் உன்னை யார் தடுத்தா, தாரளமாக உதவி செய்.

நீ கோடி கோடியாக சம்பாதிக்கும் இவர்களைப் பார்த்து நினைப்பதைப் போலத்தான், உனக்கு கீழே உள்ளவன் உன்னைப் பார்த்து நினைப்பான் என்பதை மறந்து விடாதே! ஏழைக்கு, உண்மையா இதுவரை உன்னோட வாழ்க்கையில் நீ என்ன செய்து இருக்கேன்னு!

உன் மனசாட்சியை கேட்டுப்பார்! அடுத்தவன் மட்டும் ஏழைக்கு உதவவேண்டும் என்று எதிர்பார்க்காதே! உனக்கு கோடி எப்படி அவர்கள் அதிகம் சம்பாதிப்பது போல தோன்றுகிறதோ! அது போல நீ லட்சம் சம்பாதிப்பது உனக்கு கீழ் உள்ளவர்களுக்கு அதிகமாகத் தெரியும்.

ஒருத்தர் சொல்லுற விஷயத்தை மட்டும் கவனிங்க… அது சரியா தவறா என்று! ரஜினி சொல்லிட்டாரா… ஓகே…! உடனே facebook ல நக்கலா ஒரு ஸ்டேடஸ் போடு! திட்டி இரண்டு பதிவைப் போடுன்னு கிளம்பாதீங்க.

பிரச்சனையின் மூலத்தை கண்டறிந்து அதை தான் சரி செய்ய வேண்டுமே தவிர! இது போல வரியை கூட்டிக்கொண்டு போவதாலோ, விலையை உயர்த்துவதாலோ எந்தப்பயனும் இல்லை, மாறாக நமக்குத் தான் சிரமம்.

உதாரணத்திற்கு இந்திய அரசு நாளை, 30 % வரியை 35 % என்று உயர்த்தினால் வழக்கம்போல இளிச்சவாயன்களான மாத சம்பளக்காரர்களும் மற்றும் சிலரும் தான் முழுதாக கட்டுவார்கள், மற்றவர்கள் வழக்கம் போல ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள்.

இப்பச் சொல்லுங்க யார் பாதிப்படைவார்கள்!! இது நடிகர்களுக்கு மட்டும் கூறவில்லை, நமக்கும் பின்னாளில் அதிகப்படுத்தப் போகும் வரிக்கும் சேர்த்துத் தான் கூறி இருக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் எளிதாகக் கூறுகிறேன். நான் மேற்கூறியதை எல்லாம் விட்டு விடுங்க.. ரஜினி ஒரு நடிகன், திரையுலகப் போராட்டம் அனைத்தையும் மறந்துடுங்க. இப்ப ரஜினி கூறியதில் மையக்கருத்தை மட்டும் கூறுகிறேன்.. டென்ஷன் ஆகாம பொறுமையா கேளுங்க!

“வரியை உயர்த்துவதால் அனைவருக்கும் சிரமமே! அதனால் வரி வசூலிக்கும் முறையை இன்னும் கடுமையாக்குங்கள். வரியை ஒழுங்காக கட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்.

இதனால் புதிய வரி போட வேண்டிய தேவையே இருக்காது” இது தான் ரஜினி கூறியதின் மையக்கருத்து. இவர் கூறியது திரையுலகினருக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.

வருமானவரி தவிர நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கும் வரி போட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

இதே விஷயத்தை ஒரு நடிகன் எனப்படும் “ரஜினி” கூறாமல், ஒரு சாதாரண பொதுஜனம் கூறி இருந்தால் தற்போது கூப்பாடு போடும் அனைவரும் “ஆமாம்! இவர் கூறுவது சரி தான்” என்று ஏற்று இருப்பீர்கள் ஆனால், கூறியது நடிகன் அதுவும் கோடி கோடியாக சம்பாதிக்கும் கன்னட நடிகன்.

இது போதாதா இதை எதிர்த்து நிற்க.

இது மட்டும் தான் நான் கூற நினைத்தது ஆனால், பதிவர் “டாக்டர் ப்ருனோ” அவர்கள் இது குறித்து விளக்கி இருக்கிறார். இதைப் பார்த்தால் நாளைக்கு நமக்கும் இதே போல சேவை வரி வர வாய்ப்பு இருப்பதாகவே உள்ளது.

அப்போது, இப்ப பரதநாட்டியம் ஆடினவங்க எல்லாம் எங்கே போய் முகத்தை வைப்பீங்க. இவர் விளக்கி இருப்பதைப் பார்த்தால் நான் மேலே கூறியது ஒன்றுமே இல்லை என்பது போல இருக்கிறது.

நன்றி டாக்டர் ப்ருனோ

1. சேவை பெறுவதில் இரு நிலைகள் உள்ளன

Contract of services

Contract for services

An employee-employer contract is a contract of service

A contractor-client contract is a contract for services

Click Here – https://plus.google.com/103532248719081060544/posts/hDAGbbNJSju

2. வீடு கட்டும் தொழிலாளிகளுக்கு அளிக்கும் கூலியில் பத்து சதம் அரசிற்கு வரியாக கட்ட வேண்டும் என்றால், உங்களில் எத்தனை பேர் அதற்கு சம்மதிப்பீர்கள்?

Click Here – https://plus.google.com/103532248719081060544/posts/KJDp4QydFsV

3. உங்கள் வாகன ஓட்டுனருக்கு நீங்கள் அளிக்கும் சம்பளத்தில் 12 சதம் அரசிற்கு வரியாக கட்ட வேண்டும் என்றால், உங்களில் எத்தனை பேர் அதற்கு சம்மதிப்பீர்கள்?

Click Here – https://plus.google.com/103532248719081060544/posts/AvSeFs2zhue

4. வருமான வரி தவிர நீங்கள் வாங்கும் சம்பளத்தில் 12 சதம் வரி கட்ட வேண்டும் என்றால், உங்களில் எத்தனை பேர் ஆதரிப்பீர்கள்?

Click Here – https://plus.google.com/103532248719081060544/posts/Chi7pbLBS15

நமக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னின்னு நினைக்கிற ஒவ்வொருவருக்கும் என்றாவது ஒரு நாள் ஆப்பு வரத்தான் போகுது.

அப்ப வடை போச்சே! னு திருட்டு முழி முழித்துட்டு இருப்பீங்க.

அப்ப எவனாவது வந்து உங்க கிட்ட “சார் / மேடம்! உங்க சேவை வரி, ஏழைகள் நலனுக்குத் தானே போகுது ஏன் வருத்தப்படுறீங்க?” என்று கேட்டால் உங்கள் வாயில் இருந்து வரும் வார்த்தை என்னவாக இருக்கும் தெரியுமா! “அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்” DOT

{ 24 comments… add one }
 • வினோத் சேலம் January 11, 2013, 12:01 PM

  அருமையான விளக்கம்……..நன்றி கிரி…..

 • naga January 11, 2013, 12:06 PM

  சரியாய் சொல்லி உள்ளீர்கள் கிரி.

 • balasubramanian January 11, 2013, 1:20 PM

  என்னுடைய கருத்தும் இதுதான் நண்பரே. ரஜினி பேசியது என்பதற்காக அதை எதிர்க்கவேண்டும் என்று இதை செய்கிறார்கள். இதே சதவீத வரியை இவர்களது வருமானத்தில் கட்டவேண்டும் என்று சொன்னால் வாயை மூடிக்கொள்வார்களா? பயனுள்ள பதிவு. நன்றி நண்பரே

 • r.v.saravanan January 11, 2013, 3:12 PM

  இந்த வரிப்பணம் முழுக்க அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகவும், இலவசம் கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்கவும், லட்சம் லட்சமாக செலவழித்து விழாவை கொண்டாடவும், அரசியல்வாதிகள் சலுகைகளை அனுபவிப்பதற்கும் பயன்படுகிறது என்பதில் மாற்று கருத்தில்லை

  ரஜினி சார் எது சொன்னாலும் ஏற்க மாட்டோம் என்று சொல்பவர்கள் கிழக்கே சூரியன் உதிக்கிறது என்று ரஜினி சொன்னால் கூட இல்லை மேற்கே தான் உதிக்கிறது என்று கூட வாதம் செய்வார்கள்

 • M Arunachalam January 11, 2013, 3:15 PM

  கிரி, நல்ல பதிவு. ரஜினியை எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பவர்களுக்கு நல்ல பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

  தலைவர் பேசி இருப்பதை பார்த்தால், அவர் சேவை வரியை பற்றி பேசாமல், பொதுவாக வரிகளை உயர்த்துவதை பற்றியும், அதனால் ஏற்படும் கருப்பு பணம் போன்ற பின்விளைவுகளையும், வரி கட்டாதவர்களுக்கு தண்டனை கடுமயாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் பற்றி மட்டும் பேசி இருக்கிறார். தலைவர் கூறிய இந்த கருத்துக்கள் அனைத்துமே நிதி அமைச்சர் ப. சி. அவர்களின் கருத்தும் ஆகும். அவர்தான் தொன்னூறுகளில் வருமான வரி அளவை குறைத்தவர். அவருக்கு இவை அனைத்தும் தெரிந்தவையே.

  இந்த உண்ணாவிரதம் இருந்த காரணம் சேவை வரியில் திரைப்பட துறையை சேர்ந்தவர்களை கடந்த ஆண்டு பட்ஜெட் மூலம் சேர்த்துவிட்டதை எதிர்த்தும், அவர்களை அதிலிருந்த விலக்க கோரியுமே. இன்றைய இந்தியாவில் அதிகமாக வருமானம் கொடுக்கும் துறை சேவை துறை ஆகும் (70%); அதற்கு அடுத்து தொழில் துறையும் (20%+), பின்பு கடைசியாக விவசாய துறையும் (< 10%) வருகின்றன. ஆனால், சேவை வரி மூலம் கிடைக்கும் வரி மிகவும் குறைவு – கலால் மற்றும் சுங்க வரியுடன் ஒப்பிடும்போது. இதற்கு காரணம்,சேவை துறையில் இருக்கும் அனைவரும் வரி கட்டுவதில்லை என்பதே. அதற்காகவேதான், சென்ற ஆண்டு பட்ஜெட்டில் நெகடிவ் லிஸ்ட் முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, இந்த லிஸ்டில் இல்லாத அனைத்தும், சேவையாக கருதப்படும்; அதனை புரிவோர், சேவை வரி கட்ட வேண்டும். அதன்படியே, சினிமா துறையை சேர்ந்தவர்களும் சேவை வரிக்குள் கொண்டுவரப்பட்டனர். ஏன், அனைத்து சேவை துறையினருமே இப்போது சேவை வரி கட்டி ஆக வேண்டும். எனவே, இதில் சினிமா காரர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருவதும், எதிர்பார்ப்பதும் மிகவும் தவறு. இதே போல் ஒவ்வொரு சேவை துறையை சேர்ந்தவர்களும் மறியல் செய்தால் அரசாங்கம் எப்படி நடக்கும்? எனவே, இந்த மாதிரி போராட்டங்களுக்கு ஆதரவு தரவே கூடாது என்பது என்னுடைய கருத்து.

  நன்றி.

  அருண்

 • Mohan January 11, 2013, 5:59 PM

  ரஜினியை விடுங்கள். 50 சதம் வரியை யாரால் கட்ட முடியும் ? என் மனதில் இருந்ததை எழுதி இருக்கிறீர்கள். இந்த அரசாங்கம் உருப்படுமா ? தேவை அற்ற இலவசங்களை கொடுக்கவும் , கொள்ளை அடிக்கவும் தான் இந்த கொள்கை

 • கிரி January 11, 2013, 6:57 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @சுந்தராஜன், விஜய் & அருண்

  Ee adutha kalathu
  22 Female Kottaiyam
  Ordinary
  Indian Rupee
  Thattathin Marayathu
  Ustad hotel
  Ividam swargamanu
  Unnam

  @ராஜ்குமார் நான் மேற்கூறிய படங்களை பாருங்கள் சூப்பரா இருக்கும்

  @சரவணன் அலெக்ஸ் பாண்டியன் செம மொக்கையா இருக்காம்.

  @கௌரி ஷங்கர் DTH பற்றி நிறைய பேர் எழுதிட்டாங்க.. நானும் எழுதினால் கடுப்பு தான் ஆவாங்க 🙂

  @சிவா 22 Female Kottaiyam பார்த்துட்டேன். செம த்ரில்லர் படம். இது பற்றி நிச்சயம் எழுதுகிறேன்

  @ARANANBU இந்தப்படம் இன்னும் பார்க்கலை.. லிஸ்ட் ல் உள்ளது.

  @அருண் கண்டிப்பா பார்க்கிறேன்

 • வருண் January 11, 2013, 9:17 PM

  வணக்கம் கிரி!

  கிரி, யு எஸ், கண்டாவில் எல்லாம் ரொம்ப சம்பாரிக்கிறவங்க 35-50% வரி கட்டணும்! இப்போ ரஜினி எதுக்காக இங்கே கலந்துகொண்டார்? எதுக்கு கண்ட நடிகனுக்கும் இவர் வக்காலத்து வாங்கணும்?

  வரியை அதிகமாக்கினால் கறுப்புப் பணம் அதிகமாகும் என்பது உண்மையாக இருந்தாலும் ரஜினி சொல்லியிருக்கக் கூடாது!

  ஏழை எளியவர்கள் எந்த நாட்டிலுமே அதிகமாக வரி கட்டுவது இல்லை. வியாபாரிகள் எல்லா நாட்டிலும் ஏமாத்துறாங்க. சினிமா தயாரிப்பாளர், நடிகர் நடிகைகளும்தான். ரஜினி சொல்றதைப் பார்த்தால் எல்லா நடிகரும் சரியாக வரி கட்டிவிடுவதுபோலவும், யோக்கியர்கள் போலவும் இருக்கு. அது உண்மையா?

  இவர் எதுக்கு விஜய் சூர்யா சத்யராஜ்க்கெல்லாம் வக்காலத்து? அவர்கள் எல்லாரும் சரியாக வரி கட்டுறாங்கனு இவருக்கு எப்படித் தெரியும்?

 • கிரி January 11, 2013, 9:47 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @அருண் தகவலுக்கு நன்றி.

  @வருண் வணக்கம் 🙂

  “கிரி, யு எஸ், கண்டாவில் எல்லாம் ரொம்ப சம்பாரிக்கிறவங்க 35-50% வரி கட்டணும்! ”

  நானும் படித்து இருக்கிறேன் வருண். பணக்காரர்கள் அதிக வரி கட்ட வேண்டும் என்று ஒபாமா / யாரோ பரிந்துரைத்தது என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. ஆனால் அங்கே அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்படுகின்றன. பொதுமக்களை இங்கு போல ஏமாற்ற முடியாது என்று கருதுகிறேன். மக்களிடம் வாங்கும் வரிக்கு கொஞ்சமாவது மனசாட்சியுடன் வசதி செய்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  “இப்போ ரஜினி எதுக்காக இங்கே கலந்துகொண்டார்? எதுக்கு கண்ட நடிகனுக்கும் இவர் வக்காலத்து வாங்கணும்?”

  வருண் கொஞ்சம் பொறுமையா யோசித்துப் பாருங்க.. ரஜினி மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை என்றால் என்னென்ன பேச்சு பேசி இருப்பார்கள். ரஜினியாக இருப்பது ரொம்ப சிரமம் வருண். பேசினாலும் தவறு பேசாவிட்டாலும் தவறு.. வந்தாலும் தவறு வராவிட்டாலும் தவறு. இவர் குறிப்பா யாருக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவருடைய கருத்தைக் கூறினார் உடனே கிளம்பி விட்டார் இருந்தா இன்னும் குடைவாங்க என்று.

  “வரியை அதிகமாக்கினால் கறுப்புப் பணம் அதிகமாகும் என்பது உண்மையாக இருந்தாலும் ரஜினி சொல்லியிருக்கக் கூடாது!”

  வருண் உண்மையை கூறுவதில் தவறில்லை, நடைமுறையை தான் கூறினார். இதுபோல கூறாமல் இருந்தாலும் அனைவரும் இதைத் தான் கூறி திட்டுவார்கள்.

  “ஏழை எளியவர்கள் எந்த நாட்டிலுமே அதிகமாக வரி கட்டுவது இல்லை. வியாபாரிகள் எல்லா நாட்டிலும் ஏமாத்துறாங்க. சினிமா தயாரிப்பாளர், நடிகர் நடிகைகளும்தான்”

  வருண் US ல ஏமாற்றலாம் ஆனால் இந்தியா போல அநியாயமாக இருக்காது என்று நினைக்கிறேன். இது யூகம் தான்.. இப்படி தான் ஒரு முறை கூறி தினமலர் படித்து US பற்றி பேசாதீங்கன்னு சண்டைக்கு வந்துட்டாங்க.. 🙂 எதுக்கு வம்பு .

  “ரஜினி சொல்றதைப் பார்த்தால் எல்லா நடிகரும் சரியாக வரி கட்டிவிடுவதுபோலவும், யோக்கியர்கள் போலவும் இருக்கு. அது உண்மையா?”

  எனக்கு தெரிந்து கமல் மட்டுமே சரியாக வரி கட்டுவதாக வருமான வரித்துறையினர் இவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தியதாக நினைவு. மற்றபடி எந்த நடிகரும் ஒழுங்காக வரி கட்டுவதில்லை. இது ஊருக்கே தெரிந்த ஒன்று. ரஜினி அனைத்து நடிகர்களும் சரியாக வரி கட்டுவதாக கூறவில்லை, கூறவும் முடியாது. இது பற்றி என்னுடைய கட்டுரையிலேயே கூறி இருக்கிறேன். இவர்கள் இல்லாமல் பல துறையினர் ஏமாற்றுவதாக. நடிகர்கள் சரியாக வரி கட்டுவதாக யார் கூறினாலும் நம்ப மாட்டார்கள் வருமான வரிதுரையினரே கூறினால் தான் உண்டு.

  “இவர் எதுக்கு விஜய் சூர்யா சத்யராஜ்க்கெல்லாம் வக்காலத்து? அவர்கள் எல்லாரும் சரியாக வரி கட்டுறாங்கனு இவருக்கு எப்படித் தெரியும்?”

  இவர் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. பொதுப்படையாக கூறினார். இவர்களுக்கு வக்காலத்து வாங்கினால் நிச்சயம் தவறு தான். அதில் சந்தேகமே இல்லை.

 • வருண் January 11, 2013, 9:55 PM

  ***எனக்கு தெரிந்து கமல் மட்டுமே சரியாக வரி கட்டுவதாக வருமான வரித்துறையினர் இவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தியதாக நினைவு. மற்றபடி எந்த நடிகரும் ஒழுங்காக வரி கட்டுவதில்லை. இது ஊருக்கே தெரிந்த ஒன்று. ரஜினி அனைத்து நடிகர்களும் சரியாக வரி கட்டுவதாக கூறவில்லை, கூறவும் முடியாது.***

  நீங்க சொல்றதைப் பார்த்தால் ரஜினி ஒழுங்காக வருமான வரி கட்டுவதில்லைனு சொல்வதுபோல இருக்கு! I

  நீங்களே சொன்னாலும் நான் இந்தக் கதையை நம்புதாக இல்லை! நான் கேள்விப் பட்டது வேறு!

 • கிரி January 11, 2013, 10:00 PM

  ரஜினியும் சரியாக வருமான வரி கட்டுவதாக ஒரு முறை யாரோ கூறி இருந்தார்கள். செய்தித்தாளில் கூட வந்தது என்று நினைக்கிறேன். இதை நான் கூறாமல் இருந்ததற்கு காரணம் ரஜினி கட்டினார் என்று கூறினால் பழைய பல்லவியையே என்னிடம் பாடுவார்கள். அதனால் தான் கூறவில்லை. நான் கூறியும் பயனில்லை. ரஜினி என்றாலே… ஒரு முடிவோட சிலர் இருக்கிறார்கள் அதனால் தான் கூறவில்லை. மற்றபடி நீங்கள் நினைப்பது சரியாக இருக்க வாய்ப்புள்ளது.

 • avbalaji January 11, 2013, 11:31 PM

  என் மனதில் இருப்பதை எழுதிருக்கிங்க கிரி. சினிமாலே எல்லாரும் நல்ல சம்பதிகிறது இல்ல, ஒரு சிலர் மட்டும்தான். இப்போ நல்லா சம்பதிக்க்ரவங்க எல்லாம் இந்த மாதிரி பிரச்சனை வரும் பொது ஒதுங்கிட்டா,கஷ்டபட்ருங்களுக்கு யாரு குரல் கொடுக்கிறது. எனக்கு தெரிஞ்சு ரஜினி இதுக்கு வந்தது அவருக்காக இருக்காது.

  ஆனா ரொம்ப அருமையான விஷயத்த 4 வர்திலே சொல்லிட்டு போனாரு!

 • arun January 12, 2013, 12:38 AM

  தல,
  முதல்ல நெறைய விஷயம் இது சம்மந்தமா தெரிஞ்சு கிட்டேன்
  அதுக்கு உங்களுக்கும், ப்ருனோ சார் கு நன்றி
  ரஜினி ரொம்ப பொதுவா தான் பேசி இருக்கார் ஆனாலும் இது பிரெச்சனை ஆயிடுச்சு
  சத்யராஜ் எல்லாம் படு சூப்பர் பேச்சு ஆனா யாரும் கண்டுக்கல
  ரஜினி நா சும்மா பதிவுலகம் பத்திக்கும் போல முக்கியமான காரணம் அவர் நெறைய சம்பாத்திகுறார் இது தான் அடிப்படை.. என் பணத்துக்கு நான் கேள்வி கேக்க மாட்டேனா, அப்படி தான் நு யாரும் யோசிக்கல

  எங்கயோ படிச்சது “AT the end everyone is doing business one way or the Other ”

  – அருண்

 • தமிழ்ச்செல்வன் January 12, 2013, 8:35 AM

  ரஜினி எப்போது சரியாக பேசியிருக்கிறார்….

 • R.Gopi January 12, 2013, 10:10 AM

  கிரி….

  ரஜினி எது சொன்னாலும் நொட்டை, நொள்ளை சொல்ல ஒரு பெரிய கூட்டமே இங்க இருக்கு….

  டிடிஹெச்ல தியேட்டர்க்கு ஒரு நாள் முன்னாடியே படம் காட்டுவேன்னு சொன்னீங்க… அதை நம்பி படம் பார்க்க பணம் கட்டினோம், இப்போ டிடிஹெச்ல முதல்ல காட்ட மாட்டோம்னு சொல்றீங்க… அதனால கட்டின பணம் திரும்ப தாங்கன்னு சொன்னா, அந்த ஆளை எல்லாம் கமல் தாசர்களும் சேர்ந்து கன்னாபின்னான்னு திட்டறாய்ங்க….

  இது தான்யா ஒலகம்….
  என்ன ஊருடா இது…. நாம தந்த பணத்தை திரும்ப கேட்டது தப்பாய்யா?

 • reader January 12, 2013, 5:16 PM

  நடிகர் தான் அளிக்கும் சேவைக்கான (1 கோடி என்று வைத்துகொள்வோம்) 12% வரியை தயாரிப்பாளரிடம் வசூலித்துக் கட்டிவிடவேண்டும். அதாவது நடிப்பிற்கான காண்டிராக்டை 1 கோடி + 12% சேவை வரி == ரூ 1.12 கோடி என்று கைச்சாற்றிட வேண்டும். அவர் ஒன்றும் தன்னுடைய பாக்கட்டிலிருந்து சேவை வரியைச் செலுத்துவதில்லை. இது ஒரு டாக்டரோ, வக்கீலோ, ஆடிட்டரோ, ரெஸ்டாரண்டோ பொது மக்களாகிய நம்மிடம் பில்லில் 12% சேவை வரியைச் சேர்த்து வாங்குவது போலத்தான்.

  பிறகு நடிகர் தனது வருமானமான 1 கோடிக்கு தனி நபர் வருமான வரி (@ ~32%) கட்டவேண்டும்.

  இன்று எத்தனை நடிகர்கள் உண்மையாக ரூ 1 கோடியை வெள்ளையில் வாங்குகிறார்கள்?

  தயாரிப்பாளர்களுக்கு இது படத்தயாரிப்பில் 12% அதிக செலவு. அது அவர்களின் கவலை.

  அதாவது (a)தங்கள் பொருளின் விற்பனை விலையை தகுந்தாற்போல் அதிகரிக்க வேண்டும் அல்லது (b) நடிகரின் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லவேண்டும்.

  தயாரிப்பாளர்களை அடிமைகள் போல் நடிகர்கள் நடத்தும் இன்றைய நடைமுறையில் ஆப்ஷன் (b) என்பது தயாரிப்பாளர்களுக்கு (ஆப்பு)ஷன். ஆகவே நடக்கவே நடக்காது.

  சரி. இது தயாரிப்பாளருக்கு இரட்டை வரி விதிப்பா?. இல்லை தன் படக் கம்பெனியில் தயாரிப்புச் செலவுக் கணக்காக (12%) சேவை வரியைச் சேர்த்து எழுதுவார். படத்தை விற்ற வகையில் வரும் லாபத்துக்கு மட்டுமே வருமான வரி கட்டுவார் (அதாவது படக்கம்பெனி). அவர்களும் கருப்புக் கணக்கு எழுதும் போது கூடுதல் சேவை வரிச் செலவு ரூ 1.2 லட்சம் (ரூ 12 லட்சத்திற்கு பதிலாக) அவர்கள் தயாரிப்புச் செலவில் ஏறும்.

  நடிகர்களின் கவலை வேறு மாதிரியானது. அவர்களில் வெகு சிலரே 1 கோடிக்கு தனி நபர் வருமான வரி (@ ~32% == ரூ ~32 லட்சம்) கட்டுகிறார்கள். பெரும்பாலானோர் 1 கோடியில் ரூ 90 லட்சத்தை கருப்பில் வாங்குவோர் (என்று வைத்துக் கொண்டால்) ரூ 10 லட்சத்துக்கே வரி ( @ ~21% == ரூ ~2.1 லட்சம்) கட்டுவார்.

  இப்போது தயாரிப்பாளர் 1 கோடிக்கு சேவை வரி கட்டினால் இவர்களும் 1 கோடிக்கு வருமானத்தைக் கணக்குக் காட்டி, அதற்கான தனி நபர் வருமான வரியைக் கட்டவேண்டும்.

  இல்லை கருப்பிலேயே தொடர்ந்து வாங்கினாலும் ரூ 1.2 லட்சத்திற்கான சேவை வரியை தயாரிப்பாளரிடம் வாங்கியே அரசுக்குக் கட்டுவார்கள்.

  வெள்ளையாகக் காட்டப்படும் பணத்திற்கு கூடுதலாக சுமார் ரூ 30 லட்சம் வரி கட்ட வேண்டும்.

  இதுதான் அவர்களுக்குக் கசக்கிறது.

  என்னவோ இதுவரைக்கும் தாங்கள் சத்தியவான்களாக இருப்பது போலவும், சேவை வரி வருவதனால்தான் பணத்தை கருப்பில் வாங்குவதற்கு நிர்பந்திக்கப்படுவது போலவும் பம்மாத்துக் காட்டுகிறார்கள்.

  மேலும் ரூ. 10 லட்சத்திற்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்குத்தான் சேவை வரி விதிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

  பார்க்க.
  http://www.servicetax.gov.in/st-edu-guide.pdf

 • reader January 12, 2013, 5:25 PM

  குறிப்பு: பட உலகு 10.3% சேவை வரியைச் செலுத்த வேண்டும்.

 • bala January 14, 2013, 2:26 PM

  Mr. Reader, u noticed correct points. Apart from Cine field any one get their salary in crores. i’m not jealous. Some one may tell about daily labours like lights man, driver whoever getting low income in cine field. But this law will not crush poor employees. finally its not implemented in Tamilnadu only, its all over india.

 • kosaksi pasapugal January 14, 2013, 2:55 PM

  ஹையகோ ..,என்னை மறந்துடீங்க கிரி ,நானும் பவர் ஸ்டார் பாசரையில கொஞ்சம் பிச்சியா இருந்துடேன் ,சரி விடுங்க ..,பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  இப்படிக்கு
  பவர் ஸ்டார் அடிமை கொசக்சி பசபுகள்
  அகில உலக பவர் ஸ்டார் பாசறை

 • kosaksi pasapugal January 14, 2013, 2:56 PM

  எங்க தலைவர் படம் சிங்கை ல எப்படி ??? அடிச்சி தூள் கிளபுதா

 • arun January 17, 2013, 1:11 AM

  அலெக்ஸ் பாண்டியன், சமர் பாத்துட்டேன்
  சமர் புடிச்சு இருக்கு ஒரு டைம் பாக்கலாம் தல

  Playboy பெருமூச்சு தான் வருது
  Technical details கு நன்றி

  மலையாள படம் விமர்சனம் waiting

  – அருண்

 • Arjun Sridhar UR February 12, 2013, 2:22 PM

  “சிங்கப்பூரில் அது போல எந்த இயற்கை வளமும் கிடையாது இருந்தும் அவர்கள் 7 சதவீத வரி தான் விதிக்கிறார்கள்.”

  உங்களுக்கு சிங்கப்புர் வரி பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
  ஒரு வேளிநாட்டு ஊழியர் (சீனம் அல்லாதவர்). மாதம் 500 வேள்ளி அரசாங்கத்திற்க்கு கட்டவேண்டும் ஆனால் அவருக்கு மாத சம்பலம் 500 வெள்ளி ஆனால் கையில் கொடுப்பது 400 வெள்ளி மட்டுமே. அதவது பரவா இல்லை 5000 வெள்ளி டெபாசிட் செய்ய வேண்டும்(மருத்துவச்செலவுக்கென்று). இது திரும்பி கிடைக்குமா கிடைக்கதா என்று கூட தெரியாது.. இது சாதாரனமானவர்களுக்கு.

  (இதற்க்கும் சாட்சி வேண்டுமேன்றால் நான் உங்களுக்கு நகள் அனுப்ப கடமை பட்டிருக்கிறேன்). அவர்களுக்காவது இருக்க இடம் செய்து கொடுப்பதுண்டு. ஆனால் இருக்க இடம் இல்லாதவர் எங்குபோவர் உதாரனத்திற்கு 4000 வேள்ளி சம்பலம் என்றால் அதில் பாதியை கரந்துவிடுகிறார்கள் மீதியை வீட்டு வாடகை விடுபவர் கரந்துவிடுகின்றனர். இதில் தமிழர்களுக்கு விடுகிடைக்காது அதைவிட 5 வயது குழந்தை இருந்தால் கிடைக்கவே கிடைக்காது. இதுதான் சிங்கப்பூர் தர்மமா ?.

  கிரி இன்னும் புரியவில்லை என்ரால் என் சம்பல கணக்கை (Payslip)உங்களுக்கு அனுப்புகிரேன்… இவ்வளவு கூவுவதர்கு காரணம் என்னால் அதிகம் நடக்க முடியாது(செயர்க்கை கால் அனிந்து தான் நடந்தாகவேண்டும்) அதலால் பிலசர்(Car) செலவை நான் தான் எற்க வேண்டும். அதுக்காவாவது வரியை குறைத்திர்கலாமே. நான் ஒன்றும் தர்மம் கேட்கவில்லை என் பணத்தை என்னிடம்தா என்றுதான் கேட்கிறேன் அதுவும் நியாமான முறையில் வரிவிதித்தால் நல்லது.
  இது என் சொந்த கருத்து நொந்த கருத்து…வேளியிடுவதும் இடாததும் உங்கள் கருத்து.

 • கிரி February 12, 2013, 3:21 PM

  அர்ஜுன் நான் எதுக்குங்க உங்க கருத்தை வெளியிடாம இருக்கப் போகிறேன்.. அப்படி என்ன தப்பா சொல்லிட்டீங்க.. உண்மையா சொல்லனும்னா என்னோட Blog ல கமெண்ட் மாடரேசன் கிடையாது. சமீபத்தில் தான் சிலர் “அன்பா” கமெண்ட் போட்டதால் இதை வைக்க வேண்டியதாகி விட்டது 🙂

  மற்றபடி நீங்கள் கூறுவது போல என்னில் தவறும் இருக்கலாம். நான் மறுக்கவில்லை. தகவலுக்கு நன்றி. நான் கூற வந்தது.. வரி வாங்கினாலும் அரசாங்கம் அடிப்படை வசதிகளை செய்து தருகிறது என்பதை தான். இது நம்மை போன்ற மக்களை கருத்தில் கொள்ளள வேண்டியதில்லை. நான் இந்திய மக்களை பற்றி மட்டும் பேசும் போது இங்கேயும் (குடி உரிமை பெற்ற மக்கள்) அதையே கருத்தில் கொள்ள வேண்டும்.

 • Arjun Sridhar UR February 12, 2013, 4:50 PM

  “மற்றபடி நீங்கள் கூறுவது போல என்னில் தவறும் இருக்கலாம். நான் மறுக்கவில்லை”

  உங்கள் தவறு ஒன்றும் இல்லை.

  நான் யாருடைய ரசிகனும் இல்லை விரோதியும் இல்லை. நல்லவற்றை யார் சொன்னாலும் செவிசாய்கவேண்டும் இது குழந்தையாக இருந்தாலும்(இதில் ஜாதி,மதம்,இனம், எந்த நாட்டினாக கூட இருக்கலாம்) கூட.. எல்லோறிடமும் நூறு குறைகள் என்றால் நூறு நிறைகள். அதனால் என்னால் யாரையும் என் ரசிகனாக்வும் இல்லை விரோதியாகவும் எற்றுக்கொள்ள முடியவில்லை. நான் நினைப்பவர் போகர் போன்றவர்கள் அவரும் இருந்தாரா இருக்கிறார என்றும் தேரியவில்லை ஆனால் தனிமையில்(ஏகாந்தத்தில்) இருக்கும் போது உணரும் போது இருப்பாறோ என்று நினைக்கிறேன்.

  உங்கள்(அல்லது ரஜினியின்) கருத்து மிக முக்கியமானது இது மட்டும் இருதியான உறுதி. இதை நான் எதிற்கவில்லை. ஆதரிக்கிறேன்.
  மற்றவர்கள் இந்த கருத்தை குறை கூறினால் அவர்கள் இன்னும் அனுபவபடவில்லை என்றுதான் அர்தம். அனுபவப்பட்டால் அவர்கள் மறுப்பு தெரிவிக்கமாட்டனர். 🙂 மறுப்பு தெரிவிப்பவர்கள் ஆப்பை தெடிப்போய் அதன் மேல் நடு மத்தியில் அமர்பவர்(உக்கார்பவர்).
  இது தான் என் கருத்து.
  என் கருத்து அவ்வளவுதான்

Leave a Comment