2013 புத்தாண்டை மன நிறைவுடன் துவங்குங்கள்

Murugan Vinayagarடந்த வருடம் பார்த்த திரைப் படங்கள், சம்பவங்கள் என்று வருடத்தின் இறுதியில் எழுதலாம் என்று இருந்தேன் ஆனால், செய்தித் தளங்கள், பதிவர்கள் என்று பலரும் பலமுறை திரும்பி பார்த்து விட்டதால்…

இனி நாமும் திருப்பினால் கழுத்து சுளுக்கு ஏற்பட்டு விடும் என்கிற நல்ல எண்ணத்திலும் 😀 அது மட்டுமில்லாமல் சும்மா ஒன்றையே அனைவரும் எத்தனை முறை தான் வேறு வேறு வார்த்தைகளில் படிப்பார்கள் அதனால், கொடுமைப் படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டேன் 🙂 .

நான் எழுதியதில் பல குறிப்பிட நினைத்தேன் மீண்டும் மேற்கூறிய காரணங்களால் அதை தவிர்த்து விட்டேன் இருப்பினும், எனக்கு ரொம்பப் பிடித்த ரொம்ப விருப்பட்டு எழுதிய பதிவு ஒரு நாளில் ஒரு லட்சம் – கதையல்ல நிஜம்!

இது வரை எழுதிய பதிவுகளில் மிகுந்த மன நிறைவை தந்த பதிவுகளில் இது நிச்சயம் உண்டு.

Vinodhiniபுத்தாண்டு, பலரும் கோவில், மசூதி, சர்ச் என்று கடவுளை வணங்கி வர முடிவு செய்து இருப்பீர்கள்.

இதை விட முக்கியமான விஷயம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவுவது. இது பற்றி http://www.helpvinodhini.com/ இந்தத் தளத்தில் சென்று படிக்கலாம்.

பொதுவாகவே தமிழ்நாட்டில் எந்தப் பிரச்சனை என்றாலும் வீதியில் இறங்கி போராட மாட்டார்கள். எளிதான!! முறையில் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புக் கிடைத்தால் மட்டுமே அதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

எடுத்துக்காட்டாக தேர்தல். இதே போல உதவுவதில் நம்மை அடித்துக்க ஆள் கிடையாது. உதாரணமாக கார்கில் போர் நடந்த போது, தமிழகத்தில் இருந்து தான் அதிக நிதி திரட்டப்பட்டு மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டது.

டெல்லியில் நடந்த போராட்டம் போல தமிழகத்தில் நடப்பதில்லை நடப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவே அப்படியே நடந்தாலும் அதை நீர்த்துப்போகச் செய்ய நிறைய இருக்கிறார்கள் ஆனால், உதவி என்று வந்தால் தமிழக மக்கள் வள்ளலாகவே இருந்து இருக்கிறார்கள், இருப்பார்கள்.

இந்த வகையில் தமிழனாக எனக்கு பெருமையே. இந்தப் பெண் நிலை பற்றி கேள்விப்பட்டு நாட்கள் சில ஆனாலும், பணம் அனுப்புவது குறித்து கொஞ்சம் ஒத்திப்போட்டே வந்தேன், காரணம் இதை நம்ம கணக்கில் முதலில் பதிய வேண்டும் என்ற சோம்பேறித்தனம் தான்.

இதில் Paypal முறை பார்த்த போது அட! இது ரொம்ப எளிதாச்சே என்று உடனே அனுப்பி விட்டேன். ஒரு நிமிடம் மட்டுமே இதற்கு ஆனது. வங்கி மூலம் அனுப்பவும் இந்த லின்க்கிலேயே தகவல்கள் உள்ளது.

புத்தாண்டிற்கு நீங்கள் கோவிலுக்கு போவதை விட சிறந்தது இந்தப்பெண்ணுக்கு உதவுவது. இதற்கு சில க்ளிக்குகள் மட்டுமே! எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, கொடுக்க நினைக்கும் மனது மட்டுமே. உங்கள் வருடத்தின் முதல் நாளை ஒரு நல்ல விசயத்தோடு துவங்க ஒரு சிறந்த வாய்ப்பு.

வ்வொரு புது வருடமும் சிலர் ஏதாவது புது உறுதி எடுப்பார்கள், இதை செய்ய மாட்டேன் அதை செய்ய மாட்டேன் / இதை துவங்கப்போகிறேன் என்று.

சில விசயங்களுக்கு நான் பத்து வருடம் முன்பு உறுதி எடுத்தேன், பின் அதை பின்பற்றியும் வருகிறேன் (அதில் ஒன்று கோபத்தை குறைப்பது).

அதன் பிறகு அது போல உறுதி எடுக்க வேண்டிய தேவை எதுவும் வரவில்லை / எடுக்கத் தோன்றவில்லை. இந்த வருடம் எனக்கு தோன்றியிருக்கிறது.

Phoneஅது இந்த ஸ்மார்ட் ஃபோன் வந்த பிறகு அதை கண்டபடி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன். எப்போது பார்த்தாலும் அதையே நோண்டிட்டு இருக்கிறேன்.

சும்மா இருக்கும் நேரம் அதை பயன்படுத்திக்கொண்டு இருப்பதில் தவறில்லை ஆனால், மற்றவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது, நடந்து கொண்டு இருக்கும் போது என்று கட்டுப்பாடில்லாமல் செல்கிறது.

எனக்கு இது தவறு என்று புரிந்தாலும் அதில் அடிக்ட் ஆனது போலத் தான் இருக்கிறது. இது நல்ல விசயமில்லை.

ஒன்று, மற்றவர்களை அவமானப்படுத்துகிறோம் அடுத்தது, நம்முடைய பாதுகாப்பு. இவை இரண்டுமே ரொம்ப முக்கியம்.

நாம் பயன்படுத்தும் ஒரு விஷயம் நம்முடைய கட்டுப்பாட்டை மீறி செல்வது என்பது சரியான ஒன்றல்ல.

எனவே இன்று முதல் Idle ஆக இருக்கும் நேரம் தவிர வேறு எந்த சமயத்திலும் ஃபோனை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன்.

வாகனம் ஓட்டும் போது, ஃபோன் பயன்படுத்துவதில்லை என்பதை துவக்கத்தில் இருந்தே பின்பற்றி வருகிறேன், அதே போல எதிர் முனையில் வாகனம் ஒட்டிக்கொண்டு பேசுபவர்களுடனும் பேசுவதில்லை. இதனுடன் சேர்த்து மேற்க்கூறியதையும் பின்பற்ற முடிவு செய்து விட்டேன்.

Disclaimer: This photo is not mine, I got this from the net.தொடர்ந்து என்னுடைய எழுத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. உங்களுடைய ஆதரவு தான் தொடர்ந்து எழுத உற்சாகம் கொடுக்கிறது.

ஆறு வருடத்திற்கு மேல் எழுதி வந்தாலும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் அந்த சமயத்தில் கமெண்ட் ல் இருப்பார்கள்.

சிறிது மாதங்களில் அமைதியாகி விடுவார்கள் பின் ஒரு சிலர் வருவார்கள் பின் அமைதியாகி விடுவார்கள்.

பின் திரும்ப சிலர் வருவார்கள்.. இது தான் தொடருகிறது ஆனால், ஐந்து வருடத்திற்கும் மேலாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், அப்போது போலவே இப்போதும் எனக்கு உற்சாகம் கொடுக்கும் அருணை என்னால் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.

அருண்! எத்தனை பேர் வந்து சென்றாலும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி கூறாமல் நான் முடிக்கவே முடியாது. உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி 🙂 .

அனைவருக்கும் இந்த புத்தாண்டு நல்ல செய்திகளையும், ஊக்கத்தையும் கொண்டு வரட்டும். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

{ 24 comments… add one }
 • rajesh v January 1, 2013, 1:27 AM

  🙂 🙂

 • Joe January 1, 2013, 2:11 AM

  Happy new year

 • ராமலக்ஷ்மி January 1, 2013, 7:20 AM

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் Giri Blog வாசகர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

 • r.v.saravanan January 1, 2013, 7:35 AM

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரி

 • மாணவன் January 1, 2013, 8:17 AM

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!

 • Thomas Ruban January 1, 2013, 9:50 AM

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

 • ஜோ January 1, 2013, 10:28 AM

  புத்தாண்டு வாழ்த்துகள்

 • இதெல்லாம் அநியாயம் அக்கிரமம்.. முதல் இடுகையில் இருந்து இன்றுவரை விடாமல் படித்துவரும் என் பெயர் இல்லை # இந்த பஞ்சாயத்துல எனக்கு மரியாதை இல்லை :))

  • rajesh v January 1, 2013, 4:42 PM

   என்ன கிரி இப்படி பண்ணிடீங்க ???? நீண்ட நாள் வாசகருக்கு நீங்க தரும் மரியாதை இதுதானா?????

 • kamalakkannan January 1, 2013, 4:43 PM

  I have transferred some money to her treatment

 • வினோத் சேலம் January 1, 2013, 5:17 PM

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.

 • Prakash K January 1, 2013, 6:25 PM

  நன்றி. 🙂
  எழுதிக்கொண்டே இருங்க.

 • maduraitamilguy January 2, 2013, 12:38 AM

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

  அன்புடன்
  மதுரைத்தமிழன்

 • arun January 2, 2013, 7:34 AM

  Thala,
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  – arun

 • Mohamed Yasin January 2, 2013, 11:07 AM

  பகிர்வுக்கு நன்றி கிரி… புதிய ஆண்டில் பல புதிய சிந்தனைகளுடன் மென் மேலும் பல பகிர்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள இறைவன் தங்களுக்கும், குடும்ப நபர்களுக்கும் நல்ல உடல் ஆரோகியத்தையும், வலிமையும் இறைவன் அளிப்பனாக.. தளர்வான சூழ்நிலையில் சில நேரங்களில் தங்களது சில கட்டுரைகள் எனக்கு மன ஆறுதலாக இருந்துள்ளது.. அதற்கு நன்றி…

 • Gowrishankar.P January 2, 2013, 12:42 PM

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கிரி

  “அது இந்த ஸ்மார்ட் ஃபோன் வந்த பிறகு அதை கண்டபடி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன். எப்போது பார்த்தாலும் அதையே நோண்டிட்டு இருக்கிறேன்.”

  வாங்கின புதுசுக்கு அப்படித்தான் இருக்கும். அத பத்தி முழுசா தெரிசுடுசுனா இந்த பிரிச்சனை சரியாயிடும். எனக்கும் அப்படித்தான் ஆச்சு. அப்படி நொண்டி பாக்க தொனலீனா, அப்புறம் அது என்ன ஸ்மார்ட் போன் 🙂

 • Rajkumar January 2, 2013, 8:08 PM

  // வாங்கின புதுசுக்கு அப்படித்தான் இருக்கும். அத பத்தி முழுசா தெரிசுடுசுனா இந்த பிரிச்சனை சரியாயிடும். எனக்கும் அப்படித்தான் ஆச்சு. அப்படி நொண்டி பாக்க தொனலீனா, அப்புறம் அது என்ன ஸ்மார்ட் போன் :)//
  நூத்துல ஒரு வார்த்த…. என்னோட galaxy note ம் இந்த நிலமையில தான் இருக்கு. தாவணி கனவுகள் பாரதிராஜா மாதிரி இன்னும் பெட்டரா எதிர்பாக்குறேன் – ஆனா என்னன்னுதான் புரியல.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 • கிரி January 3, 2013, 7:21 AM

  அனைவரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

  @அப்துல்லா நீங்க சரியா படிக்கலைன்னு நினைக்கிறன் 🙂 நான் கமெண்ட் போட்டு ஊக்கம் கொடுத்தவர் என்று கூறி இருக்கிறேன். நீங்க படிக்கறீங்க என்று எனக்கு எப்படி தெரியும்? இது போல அப்பப்ப கமெண்ட் போட்டால் தான்.. சரி! நீங்க படிக்கறீங்க போல என்று தெரிய வரும்.

  எப்போதுமே கமெண்ட் தான் ஒருவருக்கு பூஸ்ட். அந்த வகையில் அருண் என்னுடைய 90 % பதிவுகளுக்கு கமெண்ட் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தி இருக்காரு. நீங்க இது போல வருடத்திற்கு ஒன்று / இரண்டு முறை வருவீர்கள். நான், நீங்க படிப்பதில்லை என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்… நீங்க வேற இப்ப கட்சில பிசி ஆகிட்டீங்க. உங்களுக்கு உடன்பிறப்பே பரவாயில்லை.. எப்போவாவது வராரு 🙂 90 % இல்லைனாலும்.. அவ்வப்போது வந்தால் ஓகே, ராஜேஷ் மாதிரி 😉

  @ராஜேஷ் நீங்க பேசாமா V ராஜேஷ் க்கு பதிலா உங்க பேரை “வித்வான் ராஜேஷ்” னு மாற்றி வைத்துக்குங்க..நல்லா வாசிக்கறீங்க 🙂 🙂

  @கமலக்கண்ணன் ரொம்ப நன்றி 🙂

  @கௌரி சங்கர் & ராஜ்குமார் நான் ஸ்மார்ட் ஃபோன் வாங்கி மூன்று வருடம் ஆகிறது 🙂 அப்ப நான் சொன்னது சரியா 😉

  • RAJESH V January 3, 2013, 10:58 PM

   😛 😀

 • ஒவ்வொரு இடுகைக்கும் வந்துகொண்டுதான் இருக்கிறேன். நேரமின்மையால் பின்னூட்டமளிக்காது சென்றுவிடுகிறேன். அவசியம் தேவைப்படும் சமயங்களில் மட்டுமே பின்னூட்டமிடுகிறேன்…இந்த இடுகைக்கு பின்னூட்டமிட்டது போல 🙂

 • Gowrishankar.P January 3, 2013, 3:39 PM

  “நான் ஸ்மார்ட் ஃபோன் வாங்கி மூன்று வருடம் ஆகிறது அப்ப நான் சொன்னது சரியா”

  ரொம்ப சரி 🙂

  “எனவே இன்று முதல் Idle ஆக இருக்கும் நேரம் தவிர வேறு எந்த சமயத்திலும் ஃபோனை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன்”

  இந்த முடிவ நீங்க போன வருசமே எடுத்துருக்கணும் 🙂

 • கிரி January 8, 2013, 8:46 PM

  @அப்துல்லா உங்களுக்கு அப்ப வருடத்திற்கு இரண்டு முறை தான் அவசியம் ஏற்படுகிறது போல 😉

  @கௌரிஷங்கர் நான் கடந்த 10 மாதமாகத் தான் அதிகமாக பயன்படுத்துகிறேன். 🙂 கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து விட்டது அதனால் தான் இந்த முடிவு.

 • முத்துக்குமார் January 14, 2013, 8:38 AM

  //எனவே இன்று முதல் Idle ஆக இருக்கும் நேரம் தவிர வேறு எந்த சமயத்திலும் ஃபோனை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன்.//

  ஆஹா… இதை நான் கண்ணா பின்னாவென்று வரவேற்கிறேன்.

 • pareja gratis March 7, 2013, 1:18 AM

  Desearia, poder decir acerca de mi Estoy encantado de estar aquí ser parte por
  este sitio.
  Yo realmente tengo esperanza poder ser participativo .
  ..

Leave a Comment