“நீர்ப்பறவை” – அசத்தலான ஒளிப்பதிவு

January 3, 2013

grey நீர்ப்பறவை  அசத்தலான ஒளிப்பதிவு ந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும் படங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுவதுண்டு, அது போல ஒரு ஆச்சர்யம் தான் இந்த “நீர்ப்பறவை” படமும் ஆனால், ஒரு சின்ன திருத்தம். என்னை ஆச்சர்யப்படுத்தியது இந்தப் படத்தின், ஒளிப்பதிவு இயக்குனர் பாலசுப்ரமணியத்தின் அட்டகாசமான ஒளிப்பதிவு. கொஞ்சம் கூட மிகைப்படுத்தவில்லை.. படம் பார்த்து என் மனதில் பட்டதை அப்படியே இங்கே பகிர்கிறேன்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் “சீனு ராமசாமி” இயக்கிய படம் என்ற ஆர்வம் மட்டுமே இந்தப்படத்தை பார்க்கத் தூண்டியது. சிங்கப்பூரில் வெளியானதா என்று தெரியவில்லை… இங்கே ஒரு பெரிய தொல்லை, தமிழ் படங்கள் வெளியாகும் திரையரங்குகள் பற்றிய விவரங்களை இணையத்தில் தெரிவிக்க ஒரு சரியான தளம் கிடையாது. ஆங்கிலப் படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் வசதி அருமையாக இருக்கும்.

தமிழ்ப்படங்கள் வெளியிடும் Rex திரையரங்கம், காட்சி நேரம் பற்றி facebook ல் கூறுவார்கள், மற்றபடி செய்தித்தாள் வாங்கித்தான் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே, பலர் பல திரைப்படங்களை பார்க்காமல் தவற விட்டு இருக்கிறார்கள். நம் சென்னையிலே இணைய முன்பதிவு, வரும் படங்கள் பற்றிய அறிவிப்பு என்று கலக்குகிறார்கள் ஆனால், இங்கே அப்படி எதுவுமே இல்லை. இதன் காரணமாக படம் வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. வந்து சென்று இருந்தால் இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்காமல் தவறவிட்டதற்காக ரொம்ப வருத்தப்படுகிறேன்

grey நீர்ப்பறவை  அசத்தலான ஒளிப்பதிவு

இந்தப்படத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்து நாட்கள் ஆனாலும், ஏனோ படம் பார்க்க வேண்டும் என்றே தோன்றவில்லை. பலரும் விஷ்ணுவின் குடியைப் பற்றியே குறிப்பிட்டு எழுதி இருந்ததால் கூட இருக்கலாம் / நான் படித்த சில விமர்சனங்கள் அவ்வாறு நினைக்க தூண்டி இருக்கலாம். புத்தாண்டு, நண்பர் முத்துவுடன் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு இரவு “சரி! ஏதாவது படம் பார்க்கலாம்” என்று இதைப் போட்டேன். ஆரம்பத்தில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் தான் பார்த்தேன் ஆனால், போகப்போக படத்தின் ஒளிப்பதிவின் அழகில் என்னையே மறந்து விட்டேன்.

உண்மையாகவே மனசு விட்டு சொல்றேங்க.. இந்த மாதிரி, படம் முழுக்க ஒளிப்பதிவிற்காக எந்தப்படத்தையும் ரசித்தது இல்லை. ஒரு படத்தில் சில பாடலை, சில காட்சிகளை எடுத்த விதத்திற்காக ரசித்து இருப்பேன் ஆனால், இது போல படம் முழுக்க ரசித்தது இல்லை. அட! அட! என்ன வண்ணம், என்ன ஒரு கோணம்… பட்டாசாக இருந்தது.

“ரோஜா” படத்தில் “சின்ன சின்ன ஆசை”யில் வரும் துவக்க இசைக்கு காட்டப்படும் வயல்வெளி நம்மை அப்படியே காட்சியோடு ஒன்றிப்போகச் செய்யும். “அலைபாயுதே” படத்தில் மாதவன் ஷாலினியை தேடிச் செல்லும் போது தூரத்தில் ஒரு பாலத்தில் செல்லும் பேருந்தை காட்டும் போது அட! எவ்வளவு அழகு என்று நினைத்துள்ளேன். தனுஷ் நடித்த “பொல்லாதவன்” (வேல்ராஜ்), “எல்லாம் அவன் செயல்” என்ற RK படத்தின் ஒளிப்பதிவும் (ராஜ ரத்தினம்) வித்தியாசமாக இருக்கும். இது போல சில படங்களை குறிப்பிடலாம் ஆனால் மொத்தப் படத்தையும் என்னால் ரசிக்க முடிந்தது என்றால் அது சந்தேகமில்லாமல் “நீர்ப்பறவை” படம் தான்.

ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. இதற்காக ஸ்பெஷல் கருவியை பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை. நீங்கள் கவனித்து இருக்கலாம் நிழல் படம் எடுப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட காட்சியை, அதற்கான சூழல் அமையும் வரை காத்திருந்து எடுப்பார்கள். அது படத்தைப் பார்த்தாலே நமக்கு புரியும். இது போல படம் முழுக்க இருந்தால்… அது தான் இந்தப்படம்.

படத்தின் கதை, குடியைப் பற்றியும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடையும் துன்பத்தை பற்றியும் கூறுவதாகும். கதையைக் கேட்டால் உங்களுக்கு வழக்கமான டாக்குமெண்டரி படம் போலத் தோன்றலாம் ஆனால், படம் அப்படியில்லை. சில நேரங்களில் விஷ்ணு குடிப்பதைப் பார்த்தால் நமக்கே டாஸ்மாக்கில், அவருடன் இருப்பது போல இருக்கிறது ஆனால், அதையும் சரியாகக் கொண்டு சென்று இருந்தார்கள். இது போல ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக விஷ்ணுவையும் பாரட்ட வேண்டும். திரைக்கதை நன்றாகவே இருந்தது. குடியை விட்ட பிறகு ஒருவர் எப்படி மாறுகிறார் என்பதை அழகாக காட்டி இருக்கிறார்கள். ஒருவேளை படம் ரொம்ப மோசமாக இருந்து இருந்தாலும், நிச்சயம் ஒளிப்பதிவிற்காக பார்த்து இருப்பேன் ஆனால், படம் நன்றாகவே இருந்தது.

grey நீர்ப்பறவை  அசத்தலான ஒளிப்பதிவு

grey நீர்ப்பறவை  அசத்தலான ஒளிப்பதிவு

படத்தில் கடல் முக்கியப் பகுதி என்பதால், நீல வண்ணம் அதிகம். படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் இதற்காகவே அழகு படுத்தினார்களா! அல்லது இந்தக் கேமராவில் அனைத்து காட்சிகளும் / இடங்களும் அழகாக தெரிகிறதா!! என்று நானும் என் நண்பரும் குழம்பி விட்டோம். சில காட்சிகளை ரிவைண்ட் செய்து பார்த்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு காட்சியில் விஷ்ணுவும் இன்னொருவரும் சண்டைப் போடுவார்கள் அப்போது இருவரும் எதிர் எதிரே கடலில் தண்ணீர் தெறிக்க ஓடி வருவதை மேலே இருந்து காட்டியிருப்பார்கள்… அற்புதம்.

grey நீர்ப்பறவை  அசத்தலான ஒளிப்பதிவு

பொதுவாகவே நிழல் படங்கள் எடுக்கும் போது வெற்று பரப்பாக, எந்த ஒரு கட்டிடமும் இல்லாத இடத்தில், ஒரே ஒரு நபர் இருக்கும் போது, அவரை படம் எடுத்தால் சும்மா பட்டாசாக இருக்கும். இதில் இயல்பாகவே கடலை சார்ந்த படம் என்பதால், கடலும் கடற்கரையும் அதிகம் வருகிறது இதனால், யாரையாவது காட்டும் போது பின்னணியில் எவருமில்லாமல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடலோ அல்லது மணல் பரப்போ அல்லது அலைகள் மட்டுமே தெரிவது போல வந்தால் செமையா இருக்கிறது.

முதலில் இதுபோல காரணத்தால் தான் அழகாக இருக்கிறது என்று நினைத்தேன் ஆனால், அனைத்துக் காட்சிகளிலுமே (கடல் இல்லாமல் வீடுகள், சர்ச் மற்றும் சாலைகள் கூட) ஒளிப்பதிவு நம் கண்ணை விட்டு அகல மறுக்கிறது.

grey நீர்ப்பறவை  அசத்தலான ஒளிப்பதிவு

இதே இப்படி என்றால், உப்பளங்கள் சில காட்சிகளில் வரும். சும்மாவே கலக்குறாங்க! இதில் முழுதாகவே வெண்மையாக இருந்தால்…! சூப்பர். கேமராவை எங்கெல்லாம் வைத்தால் அழகாக இருக்குமோ அங்கே எல்லாம் வைத்து தூள் கிளப்பி இருக்கிறார் பாலசுப்ரமணியம். நான் நிச்சயம் இன்னொரு முறை ஒளிப்பதிவிற்க்காகவே பார்க்கப் போகிறேன்.

என்னுடைய விமர்சனத்தில் பொதுவாக ஒளிப்பதிவு சிறப்பாக / சுமாராக இருந்தது, இல்லை என்றால் கும்கி போல சில படங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக பாராட்டி இருக்கிறேன் ஆனால், எந்த ஒரு படத்திற்கும் ஒளிப்பதிவை இப்படி விளக்கியதில்லை, கூறத் தோன்றியதில்லை (எனக்கு அதை டெக்னிக்கலாக விளக்கத் தெரியவில்லை என்பதே உண்மை). இது படத்தின் விமர்சனமல்ல ஒளிப்பதிவின் விமர்சனம். ஒரு படத்தின் ஒளிப்பதிவிற்க்காக விமர்சனம் எழுதியதும் எனக்கு இதுவே முதல் முறை.

நான் சிறந்த நிழல் படங்கள் எடுப்பவனல்ல, ஓரளவிற்கு எடுப்பேன் ஆனால், நல்ல ரசனைக்காரன். அழகான படங்களை ரசிக்க ரொம்பப் பிடிக்கும் அதனால், இந்தப் படத்தின் ஒளிப்பதிவை நான் ரசித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நான் இணையத்தில் ரசித்த படங்களை இங்கே சேமித்து வைத்து இருக்கிறேன். இதில் உள்ள படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவை. நேரமிருந்தால் பார்க்கவும்.

ஒரு இயக்குனரின் படம் பார்த்து, அவர் படம் நமக்கு பிடித்து இருந்தால் விக்கியில் சென்று, அவர் இதற்கு முன் என்னென்ன படங்கள் இயக்கி இருக்கிறார் என்று தேடுவோம். நான் பல ஆங்கில மற்றும் கொரியன் படங்களுக்கு இவ்வாறு தேடி, பின் அவரின் முந்தைய படங்களை பார்த்து இருக்கிறேன். அது போல இது வரை கேள்விப்பட்டு இராத ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன், இதுவரை எந்தெந்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் என்ற இயல்பான ஆவலில் சென்று பார்த்தேன். இதில் பின்வரும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

grey நீர்ப்பறவை  அசத்தலான ஒளிப்பதிவு

இந்தப்படங்களில் “பிதாமகன்”, “தம்பி”, “ஜெயம் கொண்டான்” படங்களின் ஒளிப்பதிவு ரொம்ப நன்றாக இருக்கும். எனக்கென்னவோ இயக்குனர்கள் இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இது போல சிலரே இவரது திறமையை முழுதாக வெளிக்கொண்டு வந்து இருக்கிறார்கள். Image Credit Wikipedia.

உங்களில் யாருக்காவது ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் அவர்களைத் தெரிந்தால், அவரை இங்கே ஒருத்தன் மனதார பாராட்டி இருக்கிறான் என்று கூறி விடுங்கள் :-). இவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால், நேரில் பாராட்ட வேண்டும் என்று ஆசை. இந்தப்படத்தின் ஒளிப்பதிவிற்கு விருது கிடைத்தால் ரொம்ப சந்தோசப்படுவேன்.

நான் உதாரணத்திற்கு தான் சில திரைப்படங்களை கூறினேன், கூறாத திரைப்படங்கள் நிறைய உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்பான ஒளிப்பதிவு திரைப்படங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பின் குறிப்பு: ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். எனக்குப் பிடித்த இந்தப் படத்தின் ஒளிப்பதிவு உங்களுக்கு எந்த மாற்றத்தையும், உங்கள் மனதில் ஏற்படுத்தாமல் இருக்கலாம். எனவே படம் பார்த்து நான் கூறிய அளவிற்கு இல்லை என்று நீங்கள் கருதினால் பொருத்தருள்க :-). இந்தப் படத்தை தயாரித்த “உதயநிதி ஸ்டாலின்” அவர்களுக்கு ஒரு நன்றி.

உங்கள் பகுதி திரையரங்கில் இந்தப்படம் இன்னும் இருக்கிறது! என்றால் முடிந்த வரை சென்று பார்த்து வாருங்கள். படம் இல்லை என்றால் நல்ல ப்ரின்ட்டில் பெரிய திரை தொலைக்காட்சியில் பார்க்க முயற்சி செய்யுங்கள், அதுவும் முடியவில்லை என்றால் நண்பர் வீட்டிலாவது பாருங்கள், அப்போது தான் உங்களால் முழுதாக ரசிக்க முடியும்.

கொசுறு

இந்தப்படத்தின் ஒளிப்பதிவு பற்றிக் கூறினேன். இதோடு இந்தப் படம் சம்பந்தப்பட்ட இன்னொரு விசயத்தையும் கூற விரும்புகிறேன். இந்தப்படத்தின் மையக்கருத்து குடியால் அழியும் ஒருவனின் வாழ்க்கை பற்றியது. சமீபமாக இந்தியாவில் நடந்த குற்றங்கள் கிட்டத்தட்ட 80 % ல் குடி சம்பந்தப்பட்டு இருக்கிறது. குடித்து, நிலை தவறித் தான் பலரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். டெல்லி சம்பவம் என்றாலும், தூத்துக்குடி சம்பவம் என்றாலும் சம்பந்தப்பட்டு இருப்பது குடி தான். குடியால் குடும்பங்கள் பல சீரழிந்து விட்டன என்பது தினமும் செய்தித்தாள்களில் படித்தாலே தெரிகிறது இருந்தும், குடியின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது இன்னும் மோசமடைந்து பள்ளி மாணவர்கள் குடிக்கும் அளவிற்கு இது வளர்ந்து இருக்கிறது. இது நிச்சயம் சமூகத்திற்கு நல்ல விஷயம் அல்ல.

“ஜெ”, பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று கூறி இருக்கிறார். உண்மையில் இவருக்கு மக்கள் மீது அக்கறை உள்ளது என்றால் வருமானத்திற்காக தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி வரும் குடியை தான் முதலில் தடை செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் எல்லாம் வெறும் கண் துடைப்பே! நானே எப்பவாது பீர் அடிக்கக் கூடிய ஆள் தான் என்பதால் எனக்கும் அறிவுரை கூற தகுதி இல்லை ஆனால், இது போன்ற கட்டுப்பாடில்லாத நபர்களை, சம்பவங்களை பார்க்கும் போது இதைப் பற்றி கூறாமல் இருக்க முடியவில்லை. நண்பர் கூட “கிரி! நீங்க குடி பற்றி எழுதுங்க” என்று கூறிய போது மனசாட்சி உறுத்தியதால் “நான் எப்படிங்க இதை எழுதுவது, இதைக் கூற வேறு மாதிரி வாய்ப்புக் கிடைக்கும், அந்த சமயத்தில் கூறி விடுகிறேன்” என்று கூறி இருந்தேன். இந்தப்படத்தைப் பற்றி எழுதும் போது இதில் குடி பற்றி வருவதால் அதோடு சேர்த்து இதையும் கூறி விட்டேன்.

நீங்கள் இரண்டு பேரிடம் ரொம்ப கவனமாகப் பேச வேண்டும் / நடந்து கொள்ள வேண்டும். ஒன்று குடிகாரன் இன்னொன்று பைத்தியகாரன். இவர்கள் இருவருமே தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள். நான் சென்னையில் இருந்த போது ஒரு குடிகாரனிடம் வாக்குவாதம் செய்து, செவுள்ள ஒரு அரை வாங்கி இருக்கிறேன். பைத்தியக்காரனிடம் மாட்டியதில்லை. எனவே நீங்கள் ஒருவரிடம் பேசும் போது அவன்/ள் குடித்து இருப்பதாக தெரிய வந்தால் அதோடு “முற்றும்” போட்டு விட்டு நடையக் கட்டுவது தான் புத்திசாலித்தனம். இவர்களிடம் பேசினால் நாம் தான் அவமானப்பட வேண்டி வரும்.

“ஜெ” அரசு தனது சாதனைகளைக் கூறி, இந்த பாராளுமன்றத் தேர்தலில் 40 இடத்திலும் வெற்றி!!! பெறப்போவதாக கூறி இருக்கிறார். இந்த சாதனையோடு!! (எந்த சாதனை என்று தெரியவில்லை) தமிழக மக்களை மேலும் மேலும் குடிகாரர்கள் ஆக்கிய பெருமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அரசு வருமானத்தை பெருக்க நல்ல வழிகளை தான் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, இது போல குடும்பங்களை அழிக்கும் குடியை தேர்ந்தெடுக்கக் கூடாது. இதைப் பற்றிக் கூற ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது… கூறி (புலம்பி) என்ன பயன்!

தற்போது நன்றாக இருக்கும் போது சிகரெட், தண்ணி எதுவுமே தவறாகத் தோன்றாது. யார் அறிவுரை கூறினாலும் மதிக்கத் தோன்றாது. நாளை உடலும், உள்ளமும் ஓய்ந்து இருக்கும் நேரத்தில், இதனால் உடலில் பாதிப்புகள் வரும் போது தான் நாம் எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறோம் என்றே புரியும் ஆனால், அது காலம் கடந்த புரிதலாக இருக்கும். சிகரெட் குடியால் பாதிக்கப்பட்ட ரஜினி, சமீபத்தில் இது குறித்து தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தம்மு, தண்ணியை விட்டு விடுங்க, உங்களுக்காக இல்லை என்றாலும், உங்களின் குடும்பத்தினருக்காகவாவது. இதைக் கூறி எனக்கு சலித்து விட்டது / கூறவும் வெறுப்பாக இருக்கிறது. என்ன செய்ய… மனசு கேட்கல… அதனால் திரும்பக் கூறுகிறேன்.

மொத்தமாக படுக்கையில் படுத்து, “இனி குடித்தாலோ, புகைத்தாலோ உனக்கு சங்கு தான்” என்று மருத்துவர் கூறும் போது தான் (வேறு வழியில்லாமல்) திருந்துவேன் என்று அடம் பிடிப்பீர்கள் என்றால்…  இனிக் கூற எதுவுமில்லை.

{ 21 comments… read them below or add one }

Vijay January 3, 2013 at 9:27 AM

“மொத்தமாக படுக்கையில் படுத்து, “இனி குடித்தாலோ, புகைத்தாலோ உனக்கு சங்கு தான்” என்று மருத்துவர் கூறும் போது தான் (வேறு வழியில்லாமல்) திருந்துவேன் என்று அடம் பிடிப்பீர்கள் என்றால்… இனிக் கூற எதுவுமில்லை”

இந்த நிலைமையில் தான் என் ஊரில் ஒருவர் திருந்தி இருக்கிறார். நாம் சொன்னால் யார் கில்லாடி கேட்பாங்க. எல்லாருக்கும் அந்த நேரம் வரும்போது தான் தெரியும்.

Reply

mala balu January 3, 2013 at 3:09 PM

கிரி அவர்களுக்கு,
வணக்கம். தங்களின் விமர்சனம் ரசித்து படித்தேன்…காரணம் பாலசுப்ரமணியம் என் கணவர் & ஒளிப்பதிவில் எனக்கு இருக்கும் ஆர்வம். என் கணவரும் விமர்சனத்தை படித்தார். நன்றி.

Reply

Rajkumar January 3, 2013 at 3:13 PM

நீர்பரவை இன்னும் பாக்கலீங்க.. அத அதற்க்கு காரணம் டிவியில் காட்டப்படும் ஓவர் விளம்பரம்.

அப்புறம் அந்த தண்ணி சமாச்சாரம் : வக்கீலிடம் பணிபுரிந்த சமயம் ஒரு வழக்கு விஷயமாக சேரியில் குடியிருக்கும் ஒரு பெண்ணை சந்ததிக்க சென்றேன் – ஊட்டுக்கு வெளியில தாங்க நின்னு பேசிக்கிட்டு இருந்தேன் எங்கிருந்தோ வந்த அந்த பெண்ணின் கணவர் என்னை அறைந்து சந்தேகப்படும்படி பேசினார். நான் அழுது கொண்டே திரும்பிவிட்டேன். இந்த விஷயந்த உணர்ந்த வக்கீல் வண்டியை எடுத்துக்கொண்டு அந்த சேரி தலைவரிடம் சென்று பஞ்சாயத்தை கூட்டிவிட்டார் நான் பரவாயில்லை என்று சொல்லியும் – அந்தாளு எப்பவுமே இப்படித்தான் என்று அந்த நபருக்கு இருபது கசையடி வழங்கப்பட்டது.

மருத்துவ கல்லூரிகளில் இன்ஸ்பெக்ஷன் வரும்போது வேறு இடத்திலிருந்து மருத்துவர்களை கொண்டுவந்து நடிப்பதற்காக சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் (கொட்டுவது) அமர்த்துவது வழக்கம். அப்படி ஒரு சமயம் அவர்களை சரியான நேரத்திற்கு காலேஜுக்கு அனுப்ப (ரொம்ப தொல்லைங்க) அவர்களுடன் தங்கவேண்டியிருக்கும். பாண்டிச்சேரி என்பதற்காகவே மிகுந்த எதிர்பார்ப்போடு வருவார்கள் அவர்கள் சரக்கு போடக்கூடாது என்று உத்தரவிருந்தாலும் தண்ணி போட்டு விட்டு அவர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியாது. இதுல கொஞ்சம் பேரு நான் யார் தெரியுமா என்று தண்ணி போட்டுவிட்டு உதார் விடுபவர்கள் அதிகம். டாக்டர்கள் எப்படி உருவாகிறார்கள் என்று பார்த்ததினால் தான் என்னவோ அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்ற கருத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

Reply

kolanginathan January 3, 2013 at 10:00 PM

KALLUKADAI MARIYAL iku THANTHAI PERIYAR eatharku thannudaiya 500 thennai marangalai vettinar… avar kanavil kuda ninaithu irukamattar TAMILaga arasae sarayakadai thirakkum endru ….pavam TASMAC yal innum ethanai kudumbam kasdapada pogutho theriyavillai…

Reply

RAJESH V January 3, 2013 at 11:06 PM

நான் சென்னையில் இருந்த போது ஒரு குடிகாரனிடம் வாக்குவாதம் செய்து, செவுள்ள ஒரு அரை வாங்கி இருக்கிறேன்.

———————————————————————————–

My blood is boiling giri…..

Reply

RAJESH V January 3, 2013 at 11:12 PM

கிரி,

எனக்கு விஷ்ணு வோட படம் பாக்குறதுல அவ்வளவா interest இல்ல. என்னன்னு தெரியல பட், நீங்க olipadhivu பற்றி sonnadhala torrent download panni pakkuren…….

Reply

arun January 4, 2013 at 2:12 AM

நீர் பறவை இன்னும் பார்கல
பாக்கணும் நு interest இல்லை நீங்க இவ்வளவு சொல்லுறீங்க சோ ஒரு டைம் பாத்துட்டு சொல்லுறேன் தல

ஜெயா என்ன நினைச்சு சாதனை நு சொன்னாரோ தெரில 2023 vision வெச்சு சொல்லுறாங்க போல :)
10,000 US டாலர் மாத வருமானம் 2023 vision வந்தா – இப்படி வேற சொல்லி இருக்காங்க கேள்வி பட்டேன். வடிவேலு ஸ்டைல் ல ஷாக் ஆயிட்டேன்

கனவுக்கு ஏது எல்லை நு நினைச்சுட்டாங்க போல நினைக்குறது தப்பு இல்லை அதுக்கு டாகுமென்ட் அடிச்சா மட்டும் பத்தாது.. எம் மக்களின் வாழ்வாதாரம் தெரியாம, அதை புரிஞ்சுக முயற்சி செய்யாம 2023 என்ன 2100 வந்தாலும் இவங்க மாதிரி ஆட்கள் நாள மாற்றம் வராது

சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி சிஸ்டம் நு blame பண்ண விரும்பல.. செம escapism அவரோட அந்த statement .அவரோட recent speech ல அரசியல் வாதிகள் குறை சொல்லாதீங்க நு சொல்லி இருக்கார்..
நல்ல நடிகர் ஆனா நல்ல தலைவன் கு இது அழகு இல்லை நு நான் நினைக்கிறன்.. நல்ல தலைவன் சிஸ்டம் மட்டுமே blame பண்ண மாட்டார்.. என்னமோ தெரில என்னால ரஜினி யா ஒரு நல்லவரா பாக்க முடியுது நல்ல நடிகனா ரசிக முடியுது ஆனா என் மக்களின் தலைவன் நா பாக்க முடியல

ஏன்னா நிறைய விஷயங்கள் அவர் காலம் கடந்து தான் யோசிக்கிறார். ஏதோ சொல்ல வந்து ஏதோ பேசிடுறேன் சூப்பர் ஸ்டார் போல :)
நீங்க ரஜினி குடி பழக்கம் பத்தி சொன்னதால அவரோட இன்னும் ஒரு விஷயம் ஞாபகம் வந்துடுச்சு
- அருண்

Reply

RAJESH V January 4, 2013 at 7:15 PM

சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி சிஸ்டம் நு blame பண்ண விரும்பல.. செம escapism அவரோட அந்த statement .அவரோட recent speech ல அரசியல் வாதிகள் குறை சொல்லாதீங்க நு சொல்லி இருக்கார்..
நல்ல நடிகர் ஆனா நல்ல தலைவன் கு இது அழகு இல்லை நு நான் நினைக்கிறன்.. நல்ல தலைவன் சிஸ்டம் மட்டுமே blame பண்ண மாட்டார்.. என்னமோ தெரில என்னால ரஜினி யா ஒரு நல்லவரா பாக்க முடியுது நல்ல நடிகனா ரசிக முடியுது ஆனா என் மக்களின் தலைவன் நா பாக்க முடியல

———————————————————————————————————–
superah sonneenga arun…….rajinikitta irundhu neraya vishayam kathukalam. but, avaru oru thalaivara shine aguradhu romba kashtamdhan…..yarukkum kashtam kodukka koodadhu, yaraiyum kayappadutha koodathunu ninaikuravanga thalaivar aguradhu romba kashtam.

Reply

Gowrishankar.P January 4, 2013 at 1:33 PM

அடடே! படத்த தியேட்டர்ல பாக்க மிஸ்பண்ணிட்டனே. சரிவிடுங்க எப்படியும் சன் டிவில போடுடுவாங்க, அப்போ பாத்துக்கலாம் (என்ன விளம்பரம் போட்டு கொல்லுவாங்க :) )

Reply

rathnavel natarajan January 5, 2013 at 8:23 PM

அருமையான பதிவு.
நன்றி.

Reply

காத்த‌வ‌ராய‌ன் January 5, 2013 at 8:45 PM

பாலசுப்ரமணியத்தின் “குட்டி” ஒளிப்பதிவும் நன்றாகவே இருந்தது. சன் டிவியின் ஆரம்பகால பிரபல தொகுப்பாளர் மாலா இவரது மனைவி.

கலர் படங்களில்………..
பாலுமகேந்திரா – மூன்றாம் பிறையில் சூரிய கதிர்கள் மரங்களை தாண்டி விழுவதை பார்த்த போது , பிரமித்து போனேன். அப்புறம் மாண்டேஜ் சாங்கில் வரும் க்ளோஸ்ப் அருமையாக இருக்கும், அதாவது ஹீரோவும், ஹீரோயினும் வெகு இயல்பாக பேசிக் கொள்வது போல படமாக்குவார் (கடைசியாக வந்த அது ஒரு கனாக்காலம் -அந்த நாள் பாடலிலும் கூட). உன் கண்ணில் நீர் வழிந்தால் – கண்ணில் என்ன கார்காலம், ரஜினியும் மாதவியும் வெகுஇயல்பாக பேசுவதை பார்க்கும் போது, அட அது நம்ம ரஜினிதானா என்று சந்தேகம் வரும்.

அசோக்குமார் – ஜானி போன்ற ஆரம்ப காலம் முதல் ஜீன்ஸ் வரை அருமையாக செய்திருப்பார். ஹீரோயின்களை மிக அழகாக காட்டுவார். “தென்றலே என்னைத்தொடு” – ஒவ்வொரு பாடல் காட்சியையும் மிக எளிமையாக ஸ்ரீதரின் வரையறைக்கு உட்பட்டு அழகியலாக படமாக்கியிருப்பார், இந்தப்படம் போல வேறு எந்த படத்திலும் ஜெயஸ்ரீ இவ்வளவு அழகாக தெரிய மாட்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த படத்தின் நான்கு பாடல்களை மனம் தேடும் ( ஏம்மா, என்னாங்க தவிர்த்து).
இயக்குனராக இவர் செய்தது எல்லாம் “உவ்வே” சமாச்சாரங்கள்.

பி.சி.ஸ்ரீராம் – அஜித் ஷாலினியை திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நேரம் “அலைபாயுதே” ரிலீஸ், அதை பார்த்துவிட்டு நண்பன் ஒருவன் அஜித்தை கொலைவெறியுடன் தேடிக்கொண்டிருந்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நிறம் பாடலில் “சிகப்பு’ – ஷாலினி…………
சமீபத்தில் “யாவரும் நலம்” அந்த லிப்ட் ஷாட் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஷங்கரின் “ஐ” படத்தில் எனக்கு இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு பி.சிதான். கோபுர வாசலிலே படத்தில் இவரிடம் உதவியாளராக இருந்த அனைவரும் இந்தியாவின் இன்றைய Most wanted ஒளி ஓவியர்கள்.

இவர்கள் மூவரும் போட்ட பாதையில்தான் 80-களில் இருந்து இன்று வரை தமிழ் சினிமா ஒளிபாய்ச்சுகிறது.

சொல்ல மறந்துட்டேனே…….
உன்மையான ஒளி ஓவியர் “தங்கரின்” மோகமுள் (சொல்லாயோ-பெண், கமலம் பாதகமலம்), பாரதி (நிற்பதுவே) போன்றவையும் குறிப்பிடத்தகுந்த படங்களே!

Reply

காத்த‌வ‌ராய‌ன் January 5, 2013 at 8:51 PM

கிரி, sorry அது மலரே மலரே (உ.க.நீ.வ) பாடல்

Reply

ARANANBU January 6, 2013 at 2:17 AM

கிரி
நீர்பறவை பார்த்தவுடன் உங்கள் விமர்சனம் இந்நேரத்தில் தேடி படித்தேன. ஏன் எனில் எனக்கு படமும் மிகவும் பிடித்து இருந்தது.குறிப்பாக இப்படி ஒரு ரோலில் துணிச்சலாக நடித்த விஷ்ணு ,G V பிரகாஷ் இசை மற்றும் பின்னணி இசை பற பற பாடல் மற்றும் மறக்க இயலாத திரு.பாலசுப்ரமணியன் அவர்களின் அற்புதமான ஒளிப்பதிவு.கண்டிப்பாக தேசியவிருது இந்த வருடம் கிடைக்க வேண்டுகிறேன்.படம் முழுவதும் கடலில் மணலில் நடந்த உணர்வு.இந்த அதிகாலை பின்னூட்டம் என் உணர்வின் வெளிப்பாடு.HATS OFF TO YOU BAALASUBRAMANIYAN SIR. அற்புத படைப்பிற்கு சீனு ராமசாமி அவர்களுக்கும் ,இப்படத்தை வெளியிட்ட உதயநிதி அவர்களுக்கும் என் பரவச பாராட்டுக்கள்.

Reply

ARANANBU January 6, 2013 at 2:28 AM

சுனைனா நடிப்பும் அருமை குறிப்பிட மறந்துவிட்டேன்.சுனைனா தமிழ் பேச பழகிவிட்டால் தேசிய விருது வாங்கும் வாய்ப்பு அருகில் உண்டு.ஒரு கிருத்துவ பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.

Reply

ARANANBU January 6, 2013 at 11:41 AM

இசை N.R.Raghunanthan என்று அறிந்தேன் தவறாக குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும் . N.R.Raghunanthan சார் உங்கள் இசை நீண்ட நாட்களுக்குப்பின் என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டியது.நன்றி

Reply

hari ram January 7, 2013 at 6:12 AM

தற் செய்யலாக மாலா பாலா -வின் காதல் படிகட்டுகள் (விகடன் பதிப்பகம் )போன வாரம் படித்தேன். சொல்வனம் சுகா வின் location ப்ளாக்-கில் பாலா-வின் பகுதியும் அப்படி அமைந்ததே. காத்தவராயன் முந்தி விட்டார். வழிமொழிகிறேன், காத்தவராயன் அவர்களுடன் ஒளிப்பதிவாளர் பற்றிய குறிப்புகளுக்கு மட்டும்.

Reply

hari ram January 7, 2013 at 6:21 AM
karun balu January 7, 2013 at 1:54 PM

திஸ் நீர்பரவை பிலிம் இச் பாண்டச்டிக் .திஸ் இச் பெட்டெர் தன் கும்கி.திஸ் இச் வெரி ஹர்ட் டு சூட் இன் வாட்டர் அண்ட் லேன்ட் பட் இன் கும்கி தேரே இச் ஒன்லி கிரீன் லேன்ட் சோ இட் இச் எஅசி.

Reply

கிரி January 8, 2013 at 8:43 PM

அனைவரின் வருகைக்கும் நன்றி

@மாலா பாலு நன்றி. இன்னும் சிறப்பான படங்களை தர என் அன்பான வாழ்த்துகள்.

@ராஜ்குமார் அதற்கு தயாரிப்பு ரெட் ஜெயண்ட் காரணமாக இருக்கும்.

எல்லோருக்குள்ளும் ஒரு சோகக் கதை இருக்கும் போல :-)

@ராஜேஷ் பாருங்க.. நன்றாக இருக்கும்.

@அருண் நோ கமெண்ட்ஸ்

@கௌரிஷங்கர் :-)

@காத்தவராயன் தகவல்களுக்கு நன்றி. சன் டிவியில் நான் இவர்களை பார்த்தேனா என்று தெரியவில்லை.

ஜெயஸ்ரீ யை எனக்கு ரொம்ப பிடிக்கும் :-)

@ARANANBU சுனைனா நடிப்பு உண்மையில் மிக சிறப்பு நீங்க சொன்னது போல.

@ஹரிராம் நன்றி

Reply

hari ram January 19, 2013 at 6:26 PM

இன்று கண்ணா லட்டு திங்க ஆசையா படம் பார்த்தேன், பாலா அவர்கள் தான் ஒளிப்பதிவு, கோவில் கோபுரம் பின்னணியில் இருந்து சூரியன் உதிக்கும் காட்சி. அப்பா ! புல்லரித்து விட்டது. சிறுவனாக இருந்த பொது , தஞ்சை கோவிலில் இதை போன்ற அஸ்தமனம் பார்த்தேன். வானத்தில் சூரியன் வரையும் வண்ண கோலங்களை மீண்டும் திரையில் இன்று பார்த்தேன். பாலா சார் வெல் டன். வானம் எனக்கொரு போதிமரம் என்றார் புலவர். அவரின் புலமையை நீங்கள் உருவக படுத்தி விட்டீர்கள் திரையில்.

Reply

Senthilkumar February 13, 2013 at 2:02 PM

நான் புகைப்பதை நிறுத்தி 5 வருடம் முடியபோகிறது

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed