மலையாளப்படங்கள் நான் பார்த்தது வெகு சொற்பமே! ஒரு மலையாளப் படம் பார்த்தேன் என்று facebook ல் போட்டால் உடனே என்ன கிரி! மலையாளப் படமா ம்ம்ம் நடத்து நடத்து என்கிறார்கள்
. வேறு யாரும் இது போல ஸ்டேடஸ் போட்டால் கூட நானும் அப்படித்தான் கிண்டல் செய்து இருப்பேன். எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்த படம் என்றால் தமிழில் டப் ஆகி வந்த சுரேஷ் கோபி படம் “கமிஷனர்”. இது வந்து எப்படியும் 20 வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். வேறு எந்தப்படமும் நான் பார்த்தது இல்லை / மறந்து விட்டேன்.
நான் பார்த்த படம் “Thattathin Marayathu”. ரொம்ப நல்ல படம், இது பற்றி பின்னர் கூறுகிறேன். இதற்கு facebook ல் கமெண்ட் போட்ட நண்பன் செல்வா, “கிரி! நீ இந்தப்படங்களும் பாரு நன்றாக இருக்கும்” என்று ஒரு பட்டியல் கொடுத்தான். அதில் எனக்கு பிடித்த த்ரில்லர் படம் இருக்க.. சரி அதைப் பார்ப்போம் என்று பார்த்து “Ee adutha Kaalathu (In Recent Times)” படத்திற்கு மிகப்பெரிய ரசிகனாகி, பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் “ஆத்தா வையும் சந்தைக்கு போகணும் காசு கொடு”ன்னு சொல்ற மாதிரி இந்தப்படத்தைப் பாருங்க.. சூப்பரா இருக்கு! என்று கூறிக்கொண்டு இருக்கிறேன்
.
அந்த அளவிற்கு இந்தப்படம் என்னை ரொம்பக் கவர்ந்து விட்டது. குறிப்பாக தெளிவான ஸ்கிரிப்ட், திரைக்கதை என்று தூள் கிளப்பி இருக்கிறார்கள். இந்தப்படத்தை இயக்கிய “அருண்குமார் அரவிந்தை” கை வலிக்கும் வரை குலுக்க வேண்டும் போல இருக்கிறது.. எப்படிப்பா! இப்படி எல்லாம் படம் எடுக்கறீங்க.. எப்படி அனைத்தையும் சிறப்பாக யோசித்து முடிவு செய்து இருக்கீங்க என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
இது ஓவர் பில்டப்பு என்று தான் நீங்க நினைப்பீங்க! ஆனால், படம் பார்த்தால் நான் கூறுவது எவ்வளவு உண்மை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள். பொதுவா ஒரு படம் பார்த்து நமக்கு முடிவில் சோகம், சந்தோசம், கோபம், வெறுப்பு, கடுப்பு என்று பல்வேறு மன நிலைகள் இருக்கும். இந்தப்படம் பார்த்து எனக்கு அப்படி ஒரு “திருப்தி”! இதை என்னோட மொபைலில் காபி செய்து போர் அடிக்கும் போதெல்லாம் பார்த்துட்டு இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
.
கிரி! த்ரில்லர் படம்னா ஒரு முறையிலேயே கதை தெரிந்து விட்டால், பிறகு திரும்ப எப்படி பார்க்க சுவாரசியம் இருக்கும்! என்று நீங்க நினைப்பது புரிகிறது. இது சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று இருந்தாலும் திரும்ப பார்த்தாலும் ரசிக்க முடியும் என்ற அளவில் இதற்கு திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்.
நீங்க இன்னும் கதை என்னவென்றே சொல்லவில்லையே! என்று தானே யோசிக்கறீங்க..
கதை இதில் பல பிரிவு உண்டு. பல கிளை கதைகள் ஆனால், அனைத்தும் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் (நிஜமாகவே!) இணையும் போது இயக்குனரை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியவில்லை. நமக்கு டென்ஷன் ஏற்றி, டென்ஷன் ஏற்றி குறைப்பார்கள். இது சும்மா பேய் படம் மாதிரி மொக்கையா பயமுறுத்துவது இல்லை. உண்மையாகவே வொர்த்தான டென்ஷன்
நம்ம பிரஷர் டாப்ல போகும் போது அப்படியே அதை சூப்பரா குறைப்பார்கள். Image credit - http://www.zonkerala.com
சில படங்கள்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் என்கிற பெயரில் சும்மா சும்மா பயமுறுத்துவார்கள்.. கடைசில பார்த்தால் சப்புன்னு இருக்கும்.. ஏன்டா! ஒண்ணுமில்லாத விசயத்துக்கெல்லாம் பயமுறுத்தி கடுப்படிக்கறீங்க என்று நமக்குத் தோன்றும். உதாரணமா ஒருத்தர் முதுகை காட்டியபடி உட்கார்ந்து இருப்பார் நமக்கு எதோ செமையா காட்டி பயமுறுத்தப் போகிறார்கள் என்று கேமரா போகும் போது, கூட அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தால், “வாங்க! டீ சாப்பிடுறீங்களா” என்று கேட்கிற ரேஞ்சுக்கு ஒருத்தர் உட்கார்ந்து இருப்பார். என்னன்னா! நம்மை டென்ஷன் பண்ணுறாங்களாம். இல்லைனா அமைதியா இருக்கும் நேரத்தில் திடீர்னு ஒரு பூனை கத்திட்டு போகும். இது மாதிரி வந்தா கடுப்பு தான் வரும் டென்ஷன் வராது ஆனால், இந்தப்படத்தில் இதை செமையா கையாண்டு இருக்கிறார்கள்.
எனக்கு இந்தப்படத்தில் புரியாத விஷயம்… ஏகப்பட்ட கதை பிரிவுகள் வருகிறது ஆனால், அத்தனையையும் எந்த வித குழப்பமும் இல்லாமல் எப்படி சரி செய்தார்கள் என்பது தான். ஸ்கிரிப்ட் ஸ்கிரிப்ட் என்று கூறுகிறார்களே! அது இது தான். ஒரு சிறந்த ஸ்கிரிப்ட் க்கு இது போல ஒரு படத்தைத் தான் உதாரணமாகக் கூற வேண்டும். எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத திரைக்கதை. இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் இத்தனை கிளைக்கதைகளும் ஒன்றுடன் ஒன்று ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டு இருக்கிறது அதோடு, எந்த வித நெருடலும் இல்லாமல் அழாகாக படமாக்கி இருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் ஒரு விஷயம் (ஒரு பிரிவு கதை) மட்டும் கூற விரும்புகிறேன் மற்றதை படம் பார்த்து தெரிந்துக்குங்க. கணவன் மனைவிக்குள் சண்டை இருக்கும்.. கணவன் மீது தான் அனைத்து தவறும் இருக்கும்… இதனால் அந்தப் பெண் மனதளவில் சோர்ந்து போய் இருப்பார். இந்த சமயத்தில் ஒருத்தன் இவரிடம் “அக்கா” என்று பழகி கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் நெருங்கி அவரை எப்படி பிக்கப் செய்ய முயற்சிக்கிறான், பின் அதை எப்படி தவறாக கையாள்கிறான் என்று வரும்.
இதில் நான் குறிப்பிட நினைத்தது, பெண்கள் இது போல நபர்களிடம் ரொம்ப உஷாராக இருக்க வேண்டும் காரணம், இது போல நபர்கள் ஏகப்பட்ட பேர் நம்மிடையே இருக்கிறார்கள். கொஞ்ச நேர சபலம் நம்மை வாழ்க்கை முழுவதும் சிக்கலில் விட்டு விடும். இந்த விஷயம் படத்தில் ஒரு பகுதியாக வருகிறது. இதில் நடித்த அனைவருமே அப்படியே அவர்கள் கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார்கள். கதாப்பாத்திர தேர்வு அருமை. படம் பார்க்கும் போது நமக்கு வரும் அத்தனை கேள்விக்கும் இதில் விடை இருப்பது இதன் சிறப்பு.
இந்தப்படத்தில் ஹீரோயிசம் எல்லாம் துளி கூட இல்லை, குறிப்பா இதுல கதாநாயகன் என்று எவருமே இல்லை. ஆச்சர்யமா இருக்குல்ல!
ஆனால், இது உண்மை. வில்லன் என்றும் யாரையும் குறிப்பிட முடியாது ஆனால், இவை எதுவுமில்லாமல் படத்தில் நம்மை கட்டிப்போடுவது இதனுடைய திரைக்கதை மட்டுமே, லாஜிக் இடறல்களும் இல்லை.
எனக்கு படம் பார்த்து பரம திருப்தி. இவ்வளவு திருப்தியாக படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிறது. குறைகள் இருந்தாலும் தேடித்தான் பார்க்க வேண்டும், எனக்கு தெரிந்து குறை என்று எதுவுமில்லை. இந்தப்படத்தை தமிழில் செய்தால் நன்றாக இருக்கும் ஆனால், இது போல வருமா! என்பது சந்தேகமே. இந்தப்படத்தை பார்க்க தாறுமாறாக உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்
.
Directed by Arun Kumar Aravind
Produced by Raju Malliath
Written by Murali Gopy
Starring Indrajith, Murali Gopy, Anoop Menon, Nishan, Mythili, Tanusree Ghosh
Music by Gopi Sunder
Lyrics Rafeeq Ahamed
Cinematography Shehnad Jalaal
Editing by Arun Kumar Aravind
Studio Ragam Movies
Release date(s) February 24, 2012 (Kerala)
Running time 130 minutes
Country India
Language Malayalam
கொசுறு 1
இந்தப்படமல்லாது நிறைய மலையாளப்படங்கள் சமீபமாக பார்த்து இருக்கிறேன். இந்தப்படங்கள் பற்றி பின்னர் கூறுகிறேன். இவ்வளவு நாள் எப்படி இவ்வளவு நல்ல படங்களை தவற விட்டோம் என்று என்னையே நொந்து கொண்டேன்.
கொசுறு 2
கமலின் விஸ்வரூபம் 25 ம் தேதி தள்ளிப்போவதாக கூறி இருக்கிறார்கள். முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லையாததால் DTH லும் தற்போது வெளியாகப்போவதில்லை என்று கூறுகிறார்கள். இணையத்தில் கமலை பலரும் கிண்டல் செய்யும் நிலைக்குத் தள்ளியது கமலின் முரட்டு பக்தன் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் “நாக் ரவி” என்பவர் தான். இவர் தான் ஏர்டெல்லில் 30 லட்சம் முன்பதிவுகள் நடந்ததாக கூறி 1000*30,00,000 = 300 கோடி என்று அளந்து விட்டு கிளப்பியது. இதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் இது வெறும் ஏர்டெல் கணக்கு மட்டுமே! இன்னும் மற்ற DTH காரர்களும் வந்தால் 500 கோடி வசூல் ஆகும் என்று facebook ல் ஒரு படத்தை ஷேர் செய்தார். இதை உண்மை என்று நம்பி கமல் ரசிகர்களும், கமலை விரும்புவர்களும் மற்றும் DTH முறையில் வெளியிடுவதில் ஆர்வம் உள்ளவர்களும் facebook ல் ஃபார்வர்ட் செய்தார்கள். முதலில் ஏர்டெல்லில் இருக்கும் (Active) இணைப்புகளே அவ்வளவு தான் இருக்கும். இதைக் கூட யோசிக்காமல் எப்படி 30,00,000 வரும் என்று அனைவரும் பரப்பி விட்டனர் என்று தெரியவில்லை.
தற்போது எதிர்பார்த்த முன்பதிவுகள் இல்லை என்று காரணம் கூறி இருக்கிறார்கள். 300 கோடி வசூல் ஆகி இருந்தால் கமல் ஏன் திரையரங்கு உரிமையாளர்களிடம் இறங்கி வரப்போகிறார்! தற்போது கமலை கிண்டலடிக்க பலருக்கு இந்த 300 கோடி விஷயம் வசதியாகப் போய் விட்டது. தனக்கு பிடித்த ஒருவரை ஆதரிப்பதாக நினைத்து அவருக்கு தர்மசங்கடமான நிலையைத் தான் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
நான் இது வரை விஸ்வரூபம் பற்றி எந்தக் கட்டுரையும் என்னுடைய தளத்தில் எழுதவில்லை. உண்மையில் எனக்கு இந்த திரையரங்க உரிமையாளர்கள் மீது கோபம் இருந்தது, காரணம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், இது வரை ரஜினி மூலம் சம்பாதித்ததை மறந்து குசேலன் தோல்வி சமயத்தில் படம் வெளியாகி மூன்று நாட்களே ஆன நிலையில், நஷ்ட ஈடு கேட்டு மிகக் கேவலமாக நடந்து கொண்டார்கள் (அப்போதும் இதே பன்னீர் செல்வம் தான்). இதனால் இவர்கள் மேல் எனக்கு எப்போதுமே பரிதாபம் வருவதில்லை. இதை வைத்தும் DTH பற்றியும் ஒரு கட்டுரை எழுதினேன் ஆனால், நான் ரஜினி ரசிகன் என்பதால் சாதாரணமாகக் கூறினால் கூட அது வேறு முறையில் புரிந்து கொள்ளப்படும் என்று, எழுதியதை டெலிட் செய்து விட்டேன். இனியும் எழுதுவதாக திட்டமில்லை.
தற்போது கூறக்காரணம், கமல் ரசிகன் என்ற பெயரில் அவரை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளிய இவரைப் போன்றவர்களைப் பற்றி கூறியே ஆக வேண்டும் என்று தோன்றியதால் மட்டுமே! “விஸ்வரூபம்” வரும் போது நிச்சயம் திரையரங்கில் பார்ப்பேன் சந்தேகமே இல்லை.
கமல் DTH லேயே தனது கவனத்தை செலுத்தியதால் “அலெக்ஸ் பாண்டியன்” அதிக திரையரங்குகளை கைப் பற்றி விட்டது. இதனால் நேரடியாக திரையரங்குகளில் வெளியிட தரமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே “விஸ்வரூபம்” தள்ளி வெளியிட வேண்டிய நிலை ஆகி விட்டது.
பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் “அலெக்ஸ் பாண்டியன்” (கார்த்தி), “சமர்” (விஷால்) மற்றும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா!” (சந்தானம், பவர் ஸ்டார்). இதில் அலெக்ஸ் பாண்டியன் தவிர்த்து மற்ற இரு படங்கள் சிக்கலில் உள்ளன. எனவே, படம் வெளிவரும் வரை உத்திரவாதமில்லை. கார்த்தி பட ட்ரைலர் பார்த்தால், “விஜய்” இடத்தை இவர் பிடித்துக்கொண்டாரோ! என்று தோன்றுகிறது. விஜய் தற்போது நல்ல படங்களாக நடித்து வருகிறார். கார்த்தி அலெக்ஸ் பாண்டியனில் பக்கா ஆந்திரா படம் போல சண்டை போடுகிறார், விஜய் போல கையை முறுக்குகிறார்…
என்ன ஆகப்போகுதோ! எப்படியும் நான் இவர் படத்தை எதிர்பார்க்கிறேன். படத்தை எதிர்பார்க்க இன்னொரு முக்கியக் காரணம் அனுஷ்கா!
.
சிங்கப்பூர் “வண்ணத்திரை” தொலைக்காட்சியில் இவரது “சிறுத்தை” படத்தை அடிக்கடி போட்டுக்கொண்டே இருப்பார்கள். பார்க்கும் ஒவ்வொரு முறையும் சலிப்பதே இல்லை. இந்தப்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நினைவே இல்லை. குறிப்பாக கார்த்தி, ரயில் நிலையத்தில் சண்டை போடும் போதும், அதிரடியாக வில்லன் வீட்டினுள் நுழைந்து வில்லன் மகனை தூக்கி வருவதும் (ரொம்ப நேரம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கும்), பரேடில் பேசும் போதும்…அடேங்கப்பா! பின்னி பெடலெடுக்கிறார். உண்மையில் இந்தக் காட்சிகள் பார்க்கும் போது எனக்கு உடல் சிலிர்த்து விடும். இவருக்கு எந்த வேடமும் அருமையாகப் பொருந்துகிறது. இந்தப்படத்திற்கு “அலெக்ஸ் பாண்டியன்” என்று பெயர் வைத்து இருக்கலாமோ என்று நினைத்தேன்
. சூர்யாக்கு “சிங்கம்” என்றால் கார்த்திக்கு சந்தேகமில்லாமல் “சிறுத்தை”. இவர் தன்னை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் (“சகுனி” போல மொக்கை படமாக இல்லாமல்) மிகச்சிறந்த இடத்தைப் பிடிக்கலாம்.


{ 16 comments… read them below or add one }
எனக்கு மலையாளம் தெரியாது……..இதனை தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார்களா?????????????
வினோத் சப்டைட்டில் உடன் பாருங்கள். மொழி மாற்றம் செய்யப்படவில்லை. மலையாளம் புரியவில்லை என்றாலும் படம் பார்த்தால் கதை புரியும். சப்டைட்டில் இல்லாமல் கூட பார்க்கலாம்.
நன்றி. நானும் தவறாது நல்ல மலையாள படங்களை பார்ப்பவன். சுரேஷ் கோபி நடித்த கமிஷனர் போல பல நல்ல படங்கள் உண்டு.
“கிரி! நீ இந்தப்படங்களும் பாரு நன்றாக இருக்கும்” என்று ஒரு பட்டியல் கொடுத்தான். ”
தயவு செய்து அந்த பட்டியல தர முடியுமா? மேலும் பல நல்ல படங்களை பார்க்க விருப்பம்
உண்மை – அப்படின்னு மம்முட்டி படம் அதுக்கப்புறம் சமீபத்துல உருமி – ஆகியவையே நியாபகத்தில் வைத்திருக்கும் படங்கள். பொதுவாக பதிவுலகில் பரிந்துரைக்கும் படங்களையே சமீபகாலமாக பார்த்து வருகிறேன். வேறு மொழிகளில் த்ரில்லர் மற்றும் ஹாரர் படங்களை தேடி தேடி பார்ப்பது என் வழக்கம். பரிந்துரைத்ததர்க்கு நன்றி பார்த்துவிடுகிறேன்.
பிகு: கொரியனில் – வெல்கம் டு டங்க்மாகொல் மற்றும் ஹலோ கோஸ்ட் பார்த்திருக்கிறீர்களா (ரெண்டும் யுடுபில் கிடைக்கும்) சற்றே நகைச்சுவை கலந்தவை.
மலையாள படம் பார்க்க முயற்சிக்கிறேன் கிரி
கார்த்தி படம் சிறுத்தை எனக்கு பிடித்த படம்
கார்த்திக்கின் படங்கள் பார்க்க எனக்கு பிடிக்கும் இருந்தும் சகுனி என்னை கவரவில்லை
பார்ப்போம் அலெக்ஸ் பாண்டியன் ?
“இதை வைத்தும் DTH பற்றியும் ஒரு கட்டுரை எழுதினேன் ஆனால், நான் ரஜினி ரசிகன் என்பதால் சாதாரணமாகக் கூறினால் கூட அது வேறு முறையில் புரிந்து கொள்ளப்படும்”
எதிர்ப்பு வரும் பகுதிகளை மட்டும் நீக்கிவிட்டு, அட்லீஸ்ட் DTH பத்தியாவது எழுதலாமே? DTH ரிலீஸ் பத்தி கொஞ்சம் எழுதுங்கள் கிரி. எனக்கு அதபத்தி ஒன்னும் புரியல.
நானும் இப்போதான் இந்த படங்களை பார்க்க பிளான் பண்ணி இருக்கேன்.
அந்த லிஸ்ட கொஞ்சம் ஷேர் பண்ணுங்க கிரி.
நன்றி கிரி !! நானும் Ee adutha kaalathu பார்க்க முயற்சிக்கறேன் !!
அதே போல நீங்க 22 female கோட்டயம் பார்த்து விமர்சனம் செய்ய வேண்டுகிறேன் !!
கிரி
Ustad Hotel என்றொரு மலையாள படம் போன வருடம் வெளிவந்தது மம்மூட்டியின் மகன் Dulher salman நடித்தது .மிகவும் நன்றாக இருக்கும் தவறாமல் பார்க்கவும் . திலகன் கடைசியில் நடித்து வந்த படம் .மிகவும் அருமையாக நடித்து இருப்பார் .
தல,
மம்மூட்டி படம் ஒன்னு பேரு “உண்மை” தமிழ் ல dubbing செஞ்சு ரிலீஸ் பண்ணாங்க
ராஜீவ் murder மாதிரி ஒரு கதை செம ட்விஸ்ட் இருக்கும்
கண்டிப்பா பாருங்க
இந்த படம் கண்டிப்பா பாக்கணும் தோணுது டவுன்லோட் லிங்க் தேடி பாக்குறேன்
“அந்த லிஸ்ட கொஞ்சம் ஷேர் பண்ணுங்க கிரி.”
- வழி மொழிகிறேன்
- அருண்
நன்றி கிரி நல்ல படத்தை அறிமுகபடுத்தியதற்கு.
அனைவரின் வருகைக்கும் நன்றி
@சுந்தராஜன், விஜய் & அருண்
Ee adutha kalathu
22 Female Kottaiyam
Ordinary
Indian Rupee
Thattathin Marayathu
Ustad hotel
Ividam swargamanu
Unnam
@ராஜ்குமார் நான் மேற்கூறிய படங்களை பாருங்கள் சூப்பரா இருக்கும்
@சரவணன் அலெக்ஸ் பாண்டியன் செம மொக்கையா இருக்காம்.
@கௌரி ஷங்கர் DTH பற்றி நிறைய பேர் எழுதிட்டாங்க.. நானும் எழுதினால் கடுப்பு தான் ஆவாங்க
@சிவா 22 Female Kottaiyam பார்த்துட்டேன். செம த்ரில்லர் படம். இது பற்றி நிச்சயம் எழுதுகிறேன்
@ARANANBU இந்தப்படம் இன்னும் பார்க்கலை.. லிஸ்ட் ல் உள்ளது.
@அருண் கண்டிப்பா பார்க்கிறேன்
Giri,
The last film (Malayam) was Mamooty’s one masala film .. the film was good. I do see malayalam films off late I am not watching enga thamizh padame pakkarthu illa. (Neerparavai … Naduvula konjam.. Kumki all are there ) but I never find time to watch. Malayalam films will be good.. they make realistic films for eg.Abu.. where the film is all about going to Haj and all very nice film. Normally when you say that you are watching Malayalam films pasanga kalaippanga.. parthudaa. overapoida poguthunnu.. athaan sollikarthu illa..
Kamesh
Giri
Noted the list will watch the films … (in the sense will search the net and pick them up)
Kamesh
நன்றி.நல்ல படங்களின் பட்டியல் கிடைத்தது. திட் கண்டுபிடித்து paarkkiren
சுந்தரராஜன் சே
Thanks for sharing about the movie , Na. We, all friends watched it and enjoyed. Nice narration and interaction among several characters in the story .