அலெக்ஸ் பாண்டியன் – KLTA – சமர் – ஜாவா எச்சரிக்கை – அடோப் இலவசம்

Alex-Pandianனி படத்தின் விமர்சனத்தை மேலோட்டமாவது படித்து விட்டுத் தான் படத்திற்கு செல்ல வேண்டும் என்ற அறிவுரையை எனக்கு “அலெக்ஸ் பாண்டியன்” வழங்கி இருக்கிறது.

விமர்சனம் படிக்காமல் படத்திற்கு செல்வதில் இப்படி ஒரு அவஸ்தை இருப்பதை, இந்த முறை தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

நண்பர் முத்துவும் நானும் வெள்ளிக்கிழமை செல்லலாம் என்று இருந்து, வேலை காரணமாக தாமதமாகி விடும் என்று செல்ல முடியவில்லை. திரையரங்கு பக்கம் செல்வதால் முன்பதிவு செய்து விட்டேன் என்று கூறினார்.

அடடா! வடை போச்சே! மாதிரி ஆகிட்டேன் காரணம், அப்போது தான் பலரும் படம் மொக்கை போய்டாதீங்க என்று கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தார்கள். சரி என்ன பண்ணுறது! என்று அடுத்த நாள் சென்றோம்.

செம மழை (சிங்கப்பூரில்).. பேருந்து நிறுத்தத்தை விட்டு நகரவே முடியவில்லை. என்னடா இது வம்பா போச்சு! என்று வேறு வழியில்லாமல் குடை வாங்கி செல்ல வேண்டியதாகி விட்டது.

ஏதாவது நல்ல படமாக இருந்தால் கூட பரவாயில்லை.. இந்தப்படத்திற்கு இப்படி போக வேண்டியதாக ஆகி விட்டதே என்று மனசே கேட்கலை. டிக்கெட் விலை வேறு 13 டாலர்.

திரையரங்கில் எங்கள் அருகில் இருந்த பொண்ணுக கார்த்தியின் அதி தீவிர ரசிகர்கள் போல, கார்த்தி அறிமுகத்தின் போது செம கத்தல். அடேங்கப்பா! என்னா சவுண்டு! நாம மட்டும் சும்மா இருப்பமா.. 🙂 அனுஷ்கா வந்தவுடன் விசிலை விட்டு தூள் கிளப்பியாச்சு 🙂 .

படத்தை பற்றி ஏற்கனவே படித்து நொந்து இருப்பீங்க அந்தக் கொடுமைய நானும் செய்யறதா இல்ல. ஒரே ஒரு விஷயம் கார்த்திக்கு.. தயவு செய்து இது போல படு திராபையான படத்தில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்..

அதிலும் குறிப்பாக படு மோசமான இரட்டை அர்த்தக் காமெடிகளில்!!! நீண்ட மாதங்களுக்கு / வருடங்களுக்குப் பிறகு இப்படி இரட்டை அர்த்தக் காமெடியை பார்க்க வேண்டிய நிலை!

அனுஷ்கா எப்பேர்ப்பட்ட ஃபிகர்!! அவரை அநியாயமாக டம்மி பீசாக்கி விட்டார்கள். ஆந்திராவில் இவரை வைத்து பெரிய பட்ஜெட்டில் படமாக எடுக்கப்போகிறார்கள். அந்த அளவிற்கு வொர்த்தான திறமையான ஃபிகரை இப்படி வீணடித்து விட்டார்களே! என்று மனசே கேட்கலை.

தயவு செய்து படத்திற்கு போய்டாதீங்க.. உங்கள் பணம் வீண்.

கார்த்திக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அவருக்கு அனைவரின் சார்பாக வாழ்த்துகள்!

power-starண்ணா லட்டு தின்ன ஆசையா! படம் தான் இப்போதைக்கு ஹிட் போல.

பவர் ஸ்டார் நிஜமாலுமே “பவர் ஃபுல் ஸ்டார்” ஆகி விட்டார் என்று இந்தப்படம் வெளிவந்த பிறகு புரிகிறது.

இணையம் முழுவதும் இவர் பற்றியே பேச்சு.

பவர் ஸ்டார், ஒருவருக்கு மிக நன்றிக் கடன் பட்டு இருக்கிறார் அவர் தான் நீயா நானா “கோபிநாத்” 🙂 .

இவர் பவர் ஸ்டாரை கேவலப்படுத்துவதாக நினைத்து தன்னை தானே அசிங்கப்படுத்திக்கொண்ட பிறகு பவர் ஸ்டாருக்கு பல இடங்களிலும் ரசிகர்கள் அதிகரித்தார்கள்.

தன்னுடைய பொறுமையான செயல்களினால் பலரின் மனதில் இடம் பிடித்து விட்டார். முதலில் காமெடி பீஸ் ஆக இருந்து, பின்பு பவர் ஸ்டாராக பிரபலமாகி தற்போது பலருக்கும் பிடித்த நடிகர்!! ஆகி விட்டார்.

இவருடைய அலட்டல் நம்மை கடுப்படிக்காமல் இருப்பதே இவரது பலம் என்று நினைக்கிறேன். பவர் ஸ்டாருக்கு இணையம் முழுவதும் பெருகி வரும் ஆதரவு, ஓவர் டோஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது. Image Credit viruvirupu.com

இவர் இது போல கதாப்பாத்திரத்தில் நடித்தால் மேலும் பெயர் பெற முடியும் ஆனால், ஹீரோ என்ற ஆசையில் திரும்ப வருவாராயின் நஷ்டம் இவருக்குத் தான். ஷங்கரின் “ஐ” படம் வெளிவந்தால் இவரை கையில் பிடிக்க முடியாது போல இருக்கு 🙂 .

இவர் பிரபலத்தைப் பார்த்து பிரபல நடிகர்களே ஆச்சர்யப்பட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். சந்தானமே திரையரங்கில் தன்னை விட இவருக்கு கை தட்டல் கிடைப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி இருப்பார் என்று கருதுகிறேன் 🙂 .

மர் படம் கலவையான முடிவுகளை தந்து இருக்கிறது. இந்தப்படம் நான் எப்படியும் பார்க்கப்போவதால் இது பற்றிய செய்திகள் எதையும் படிக்கவில்லை இன்னொரு முக்கியக் காரணம் படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று கூறினார்கள்.

Playboy founder marriagePlayboy புத்தகம் பற்றி கேள்விப்படாமல் இருந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

தெரியாதவர்களுக்கு, இது ஒரு ஆண்களுக்கான அடல்ட் பத்திரிக்கை, 1953 ம் ஆண்டு Hugh Hefner என்பவரால் துவங்கப்பட்டது.

இதன் நிறுவனர் Hugh Hefner, தற்போது தனது 86 !!! வயதில் அடுத்த திருமணம் செய்து இருக்கிறார், நிஜமாகவே Playboy!! தான் போல 😉 .

இந்தப் பத்திரிகையில் தங்களுடைய படம் ஒரு முறையாவது வந்து விடாதா ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். இதில் பெண்களின் நிர்வாணப் படங்களே அதிகம்.

பத்திரிக்கை ஆண்களுக்காக இருந்தாலும் அதில் நிறைந்து இருப்பது என்னவோ பெண்கள் தான் 🙂 . உலகிலேயே பிரபலமான brand களில் இதுவும் (Playboy) ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாத்தா ஏன் தான் இப்படி செய்து எங்களைப் போன்றவர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொள்கிறாரோ! சங்கு ஊதற வயசுல இப்படி ஃபிகரோட பீப்பி ஊதிட்டு இருக்காரே! 😀 Image credit – mypaper.com.sg

பிரபலமான அடோப் நிறுவனம். தனது மென்பொருட்கள் சிலவற்றை இலவசமாக கொடுத்து இருக்கிறது. நீங்கள் விருப்பப்பட்டால் உடனே செட்டப் ஃபைலையும், அதனுடைய Serial Key யையும் தரவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.

http://www.adobe.com/downloads/cs2_downloads/index.html. இது குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே! Windows மற்றும் Mac இயங்கு தளம் (OS) இரண்டிற்கும் உள்ளது.

ஜிமெயில் தன்னுடைய மின்னஞ்சல் சேவையை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி படத்துடன் விளக்கம் கொடுத்து இருக்கிறது. இது பழைய தகவல் என்றாலும் புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கனவே பயன்படுத்துபவர்களுக்கும் இதில் உள்ள ஒரு சில வசதிகள் தெரியாமல் கூட இருக்கலாம் எனவே அவர்களுக்கும் உதவியாக இருக்கும். இங்கே சென்று இவற்றைக் காணலாம்.

சமீபமாக யாஹூ! மின்னஞ்சலில் ஸ்பாம் மின்னஞ்சல்கள் குறைந்தது போல உள்ளது. யாரும் கவனித்தீர்களா? அதனுடைய வேகத்தையும் அதிகரித்து இருக்கிறார்கள்.

நான் இதைப் பயன்படுத்துவது இல்லை என்றாலும் எப்போதாவது சென்று பார்ப்பேன். நாங்க ஜிமெயில் ரசிகர்! 🙂 .

நேற்று அதிகாலையில் java வில் ஒரு பாதுகாப்பு குறைப்பாட்டை கண்டு பிடித்து இருக்கிறார்கள். இதன் மூலம் ஹேக்கர்கள் எளிதாக நமது கணினியை அவர்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முடியுமாம்! இது குறித்து பலர் கூறி விட்டார்கள்.

கடந்த திங்கள் கிழமையே, என்னுடைய Blog facebook page மற்றும் Google + Page ல் தெரிவித்து இருந்தேன்.

இது வரை உங்களுக்கு தெரியவில்லை என்றால் உடனடியாக உங்கள் கணினியில் உள்ள java வை நீக்கி விட்டு புதிய பதிப்பை java.com ல் இருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்.

இது போல விசயங்களில் சோம்பேறித்தனம் வேண்டாம்.

சித்தி” ராதிகா விரைவில் தனது செல்லமே! தொடரை முடித்து அடுத்து “வாணி ராணி” என்னும் புதிய தொடரை ஆரம்பிக்கப் போகிறாராம். நான், சன் டிவியையே Unsubscribe செய்து விட்டேன், இவங்க சங்காத்தமே வேண்டாம் என்று.

சிங்கப்பூரில், தீபாவளி கிறிஸ்துமஸ் ரம்ஜான் சீனப் புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் இங்குள்ள கேபிள் நிறுவனத்தில் ஐந்து நாட்கள் இலவசமாக அனைத்து சேனல்களையும் கொடுப்பார்கள், நாம் பணம் காட்டியிராத சேனல்களையும் இலவசமாக பார்த்து மகிழலாம்.

இப்படி இலவசமாக கொடுத்தும் நான் சன் டிவி, சன் மியூசிக் பார்க்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சன் மியூசிக் எல்லாம் எப்படித் தான் பார்க்கிறார்களோ! விளம்பரமா போட்டு சாவடிக்குறாங்க, இல்லைனா பேசியே கொல்றாங்க.

நான் கொஞ்ச நேரம் பார்த்து டென்ஷன் ஆனது தான் மிச்சம்.

உலகத்திலேயே பணம் கொடுத்து விளம்பரம் பார்ப்பவர்கள், நம்மவர்களாகத்தான் தான் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

22-Female-Kottayam-movieலையாளப்படங்களின் அடுத்த விமர்சனமாக “22 Female Kottayam” படத்தின் விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன்.

பழிவாங்கும் கதை என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதற்கான உளவியல் காரணம் என்னவென்று தெரியவில்லை.

இந்தப்படம் ஒரு பெண்ணின் பழிவாங்கல். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் வகையைச் சார்ந்த படம்.

இதனுடைய திரைக்கதையும் ரொம்ப சிறப்பாக இருக்கும். மலையாளத்தில் எடுக்கப்படும் இது போல படங்களைப் பார்க்கும் போது நாம் ரொம்ப பின் தங்கியிருப்பது போல தெரிகிறது.

இதில் வரும் காட்சியமைப்புகள், நம்ம தமிழ் படங்களில் இன்னும் வராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. நாம் ஒரு வகையில் முன்னேற்றம் என்றால், இவர்கள் வேறு வகையில் கலக்குகிறார்கள்.

இந்தப்படத்தில் பழி வாங்கல் என்றால், ஆக்ரோசமாக அடி தடி வெட்டு குத்து என்றில்லை ரொம்ப அமைதியாக ஆனால், சும்மா நச்சுனு! இந்தப்படத்தை இரு முறை பார்த்து விட்டேன். இது பற்றிய திரைவிமர்சனம் விரைவில்.  Stay Tuned!

{ 17 comments… add one }
 • r.v.saravanan January 15, 2013, 9:09 AM

  அனுஷ்கா வந்தவுடன் விசிலை விட்டு தூள் கிளப்பியாச்சு

  ஹா….ஹா ரசிகர் னா அப்படி தான் இருக்கணும்

  நீயா நானா “கோபிநாத்” இவர் பவர் ஸ்டாரை கேவலப்படுத்துவதாக நினைத்து தன்னை தானே அசிங்கப்படுத்திக்கொண்ட பிறகு

  தன்னுடைய பொறுமையான செயல்களினால் பலரின் மனதில் இடம் பிடித்து விட்டார். முதலில் காமெடி பீஸ் ஆக இருந்து, பின்பு பவர் ஸ்டாராக பிரபலமாகி தற்போது பலருக்கும் பிடித்த நடிகர்!! ஆகி விட்டார்.

  எஸ் கிரி

 • Rajkumar January 15, 2013, 12:32 PM

  விமர்சனத்த பார்த்த பிறகு படம் பார்த்ததால் ப்ரைனுக்கு ரொம்ப சேதாரமில்ல. ரெண்டரை மணிநேர படத்தை ஒரு மணி நேரத்திற்குள்ளாக பார்த்துவிட்டோம்.

  பவருன்னா சும்மாவா.. இவரோட உண்மையான பேரே பல பேருக்கு தெரியாது. பணம் கொடுத்து பில்டப் செய்யுரார்னே வச்சிக்கலாம் – எத்தனை பேருக்கு தான் கொடுக்க முடியும். ஆனா இப்போ தியேட்டரில் கை தட்டுபவர்கள் பணமா வாங்கிஇருக்கிறார்கள் ? இவர் பிரபலம் அடைவதற்கு இணையத்தில் உலவி வந்த போட்டோஷாப் படங்களும் தான் முக்கிய காரணம். பாலிடால் குடிச்சவனும் பவரை எதிர்த்தவனும் உயிரோட இருந்ததா பயாலஜியே இல்ல.

  ப்ளேபாய் பத்திரிகை (ரொம்ப ரகசியமா டவுன்லோட் பண்ணி) பார்த்திருக்கிறேன். அது அவ்ளோ பெரிய போர்ன் புத்தகம் இல்ல. பல விளம்பரங்கள் – கட்டுரைகள் (ஒரு பத்து பக்கங்கள் மட்டும் பிகர் படங்கள்) உள்ள நல்ல புத்தகம் கூட.

  அடோப் தவகல்களுக்கு நன்றி டவுன்லோட் ஆரம்பித்துள்ளேன். யாகூ ஜிமெயில் நீங்க சொல்வது கரக்ட்.

  நான் – என் தம்பி கல்யாணம் முடிந்த பிறகு வந்த இரு மருமகள்களும் போழுதன்னைக்கும் இந்த தமிழ் மியுசிக் சேனல்கள் (புது பாடல்கள்) தான் பார்ப்பார்கள். நாங்கள் வந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி நகைச்சுவை சேனல்களுக்கு மாற்றுவோம். அப்படி என்னங்க இருக்கு..

  விமர்சனத்துக்கு – ஐ யம் வெய்ட்டிங்

 • govi January 15, 2013, 12:42 PM

  அருமையான விமர்சனம்.. நல்ல தகவல்கள்.. பவர் கலகிட்டிருக்காறு..

 • Vijay January 15, 2013, 4:35 PM

  அந்த மலையாளம் படங்கள் லிஸ்ட் எப்போ போடுவீங்க கிரி? 🙂

 • kolanginathan January 15, 2013, 5:15 PM

  yes …,gobi panniya thavaruiku ipa feel pannuvaru… Enna irunthalum oru nabarai media vachi asinga paduthunathu thappu than. but power star kobabatamal answer pannunathu romba periya vishayam…

 • mahesh January 15, 2013, 5:34 PM

  மிக நன்றி கிரி adobe பற்றி தகவல் தந்தமைக்கு.

 • RAJESH V January 15, 2013, 6:30 PM

  இது போல படங்களைப் பார்க்கும் போது நாம் ரொம்ப பின் தங்கியிருப்பது போல தெரிகிறது. இதில் வரும் காட்சியமைப்புகள், நம்ம தமிழ் படங்களில் இன்னும் வராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

  ——————————————————————————
  மலையாளி population மட்டும் நம்மள மாதிரி 7 கோடி இருந்துச்சுனா இன்னும் சூப்பர் படமெல்லாம் எடுபங்க கிரி. They have some limitations.

 • RAJESH V January 15, 2013, 6:45 PM

  அனுஷ்கா வந்தவுடன் விசிலை விட்டு தூள் கிளப்பியாச்சு

  ———————————————————————————-

  கிரி,

  விசில் அடிக்குறது எல்லோருக்கும் வருமா?

 • கோபிநாத் January 16, 2013, 12:23 AM

  http://en.wikipedia.org/wiki/Diamond_Necklace_(film) – ஹூரோ பாசிலோட மகன் (22 Female கோட்டயம் படத்தில் வருபவர் தான்)

  http://en.wikipedia.org/wiki/Run_Babby_Run – லாலோடனோடது…போன வருஷத்துல இவரோட நல்ல படமும்ன்னனு தகவல்

  http://en.wikipedia.org/wiki/Ustad_Hotel -மம்மூக்கா மகன் தான் ஹூரோ…ஆனா நிஜய ஹூரோ திலகன் தான்…பாருங்க..செம படம் 😉

 • reader January 16, 2013, 12:41 AM

  இந்தப் படங்களையும் பாருங்க.

  1. டயமண்ட் நெக்லஸ்
  2. தட்டத்தின் மறையத்து
  3. உஸ்தாத் ஹோட்டல்

 • ரவி சேவியர் January 16, 2013, 10:58 AM

  மிக்க நன்றி கிரி, அலெக்ஸ் பாண்டியன் படம் பார்க்கலாம் என்றிருந்தேன் நல்ல வேளை தப்பித்தேன், சமர் பார்க்க நினைத்திருக்கிறேன். ம்லையாளப் பட லின்க் (யூடுயூப்) கொருக்கவும்.

 • Mohamed Yasin January 16, 2013, 1:52 PM

  கிரி, பகிர்வுக்கு நன்றி..

 • arun January 17, 2013, 1:12 AM

  அலெக்ஸ் பாண்டியன், சமர் பாத்துட்டேன்
  சமர் புடிச்சு இருக்கு ஒரு டைம் பாக்கலாம் தல

  Playboy பெருமூச்சு தான் வருது
  Technical details கு நன்றி

  மலையாள படம் விமர்சனம் waiting

  – அருண்

 • hari ram January 19, 2013, 6:35 PM

  இன்று கண்ணா லட்டு திங்க ஆசையா படம் பார்த்தேன், பாலா அவர்கள் தான் ஒளிப்பதிவு, கோவில் கோபுரம் பின்னணியில் இருந்து சூரியன் உதிக்கும் காட்சி. அப்பா ! புல்லரித்து விட்டது. சிறுவனாக இருந்த போது , தஞ்சை கோவிலில் இதை போன்ற அஸ்தமனம் பார்த்தேன். வானத்தில் சூரியன் வரையும் வண்ண கோலங்களை மீண்டும் திரையில் இன்று பார்த்தேன். பாலா சார் வெல் டன். வானம் எனக்கொரு போதிமரம் என்றார் புலவர். அவரின் புலமையை நீங்கள் உருவக படுத்தி விட்டீர்கள் திரையில்.

 • Gowrishankar.P January 21, 2013, 3:17 PM

  “இது வரை உங்களுக்கு தெரியவில்லை என்றால் உடனடியாக உங்கள் கணினியில் உள்ள java வை நீக்கி விட்டு புதிய பதிப்பை java.com ல் இருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்”

  “update” செய்தால் போதுமா, இல்ல fulla-லா uninstall பண்ணி நியூ install செய்யனுமா?

 • SRIKANTH January 22, 2013, 12:45 PM

  ஹாய் கிரி
  வழக்கம் போல் உங்கள் பதிவு சூப்பர்
  அலெக்ஸ் பாண்டியன் – நான் தப்பிச்சிட்டேன்

 • கிரி January 31, 2013, 7:38 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ராஜ்குமார் ஊருக்கு போய் விளம்பரக் கொடுமையால் நான் தொலைக்காட்சியே பார்க்கவில்லை.

  @விஜய் நான் சென்ற பதிவிலேயே பின்னூட்டத்தில் கொடுத்து விட்டேன் 🙂

  @ராஜேஷ் பின்ன என்ன எல்லோரும் வாயிக்குள்ள விசில் வைத்துட்டா அடிக்குறாங்க 🙂 பழகிக்க வேண்டியது தான்

  @கோபி தகவலுக்கு நன்றி

  @ரீடர் இதில் கடைசி இரண்டு தரவிறக்கம் செய்து வைத்து இருக்கிறேன்.

  @ரவி சேவியர் நான் எல்லாமே டொரண்ட் ல தான் தரவிறக்கம் செய்கிறேன்.

  @கௌரிஷங்கர் மின்னஞ்சலில் கூறி விட்டேன்.

  மற்றவர்களுக்கு, நீங்கள் அப்டேட் ம் செய்யலாம் நீக்கி செய்ய வேண்டிய அவசியமில்லை. பலர் எப்படி அப்டேட் பண்ணுவது என்று தெரியாமல் இருந்ததால் இந்த முறையை கூறினேன்.

Leave a Comment