தமிழ் திரையுலகின் இரு அறிவாளிகள்!

மிழ் திரையுலகிலேயே இரண்டு அறிவாளிகள், திறமைசாலிகள் தான். ஒன்று தங்கர் பச்சான் மற்றொன்று சந்தேகமில்லாமல் மிஸ்கின். இதில் தங்கர் பச்சானை பற்றித்தான் இந்தப் பதிவு.

தங்கர் பச்சானுக்கு இருக்கும் பெரிய குறை இவர் படத்துல யாரும் நடிக்க வர மாட்டேங்குறாங்க! என்பது தான்.

அதோடு, இவரது திறமையை யாரும் (தமிழ் திரையுலகமும் தமிழ் மக்களும்) மதிப்பதில்லை என்பது. மக்களின் ரசனை சரியில்லை, மசாலாப் படங்களை தான் விரும்புகிறார்கள்.

தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் யாரும் தன்னுடைய படைப்பை வாங்க முன்வருவது இல்லை. இப்படி இருந்தால் எப்படி தமிழ் திரையுலகம் முன்னேறும் என்று பொங்கி இருக்கிறார்.

Read: கமர்சியல் திரைப்படங்களே ஏன் மக்களை அதிகம் கவர்கின்றன? [November 2010]

நான் இவர் பற்றி எழுத இது காரணமல்ல.. காரணமே வேறு! 🙂 இவர் இளையராஜாவிடம் தனது படத்திற்கு இலவசமாக / குறைந்த கட்டணத்தில் இசையமைக்க அழைத்ததாகவும் அதற்கு இளையராஜா மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி படித்தேன்.

ஒருவேளை வேறு காரணமாகக் கூட இருக்கலாம் பத்திரிக்கைகள் கொஞ்சம் மிகைப்படுத்தி இருக்கலாம், இளையராஜா மீது உள்ள பக்தியினால். சரி! எது எப்படியோ இளையராஜா இசையமைக்கவில்லை என்று கூறியது உண்மை.

அதற்கான காரணம் என்னவாக வேண்டும் என்றாலும் இருந்து விட்டுப் போகட்டும், அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். குறை கூற யாருக்கும் உரிமை கிடையாது.

இப்ப பிரச்சனை என்னவென்றால் தங்கர்பச்சான் மேடைகளில் இளையராஜாவை மறைமுகமாக தாக்கி வருகிறார். தமிழ்நாட்டில் இருக்கிற இசையமைப்பாளர்கள் எல்லாம் வேஸ்ட் என்கிற ரீதியில் பேசி வருகிறார்.

இதோட விட்டாரா!.. “வடா தோசா” இந்திய இசையமைப்பாளரை (அதாவது வட மாநில இசையமைப்பாளர்) அழைத்து வந்து தன்னுடைய “அம்மாவின் கைப்பேசி” படத்திற்கு இசையமைக்க வைத்துள்ளார்.

இது தப்பு இல்ல ஆனால், இங்கே இருக்கிறவங்க இசையமைப்பது எல்லாம் இசையா! இவர் (வட மாநில இசையமைப்பாளர்) அமைத்து இருக்கிற இசையை கேளுங்க நாலு நாள் உங்களால தூங்க முடியாது [இது மட்டும் என்னுடைய சேர்ப்பு :-)] என்று கூறி வருகிறார்.

இதை விட மெகா ஜோக் ஒன்று கூறி இருக்கிறார், ரோஹித் குல்கர்ணி பின்னணி இசையை கேட்ட பிறகே இவருக்கு பின்னணி இசை என்றால் என்னவென்றே தெரிந்ததாம், பாடல் என்றால் அது இவருடையது தான். யப்பா! முடியலடா சாமி.

“இங்குள்ளவர்களுக்கு பின்னணி இசை என்றால் என்னவென்றே தெரியவில்லை, என்னைப் பொறுத்தவரை இது தான் எனக்கு முதல் படம்” என்று, காரக்குழம்பை காதுல ஊத்துன மாதிரி ஒரு டென்ஷன் மேட்டரை கூறி இருக்கிறார்.

“அழகி” என்ற இவரது படத்திற்கு இளையராஜா தான் இசை என்பதும் அந்தப் படத்தின் பாடல்கள் எவ்வளவு தூரம் மக்களை கவர்ந்ததும் என்பதும் நான் கூறித் தெரிய வேண்டியதில்லை.

அதில் ஒரு காட்சியில் “ஒளியிலே தெரிவது தேவதையா!” பாடலும், யார் பொறுப்பு என்று குழம்பும் நேரத்தில் “உங்குத்தமா (உன் குத்தமா) எங்குத்தமா (என் குத்தமா)” என்று ஆரம்பிக்கும் பாடலையும் எவரும் மறக்க முடியுமா.

அதிலும் “உங்குத்தமா (உன் குத்தமா) எங்குத்தமா (என் குத்தமா)” பாடல் வரும் நேரத்தில் அந்தக் காட்சிக்கு இசை எவ்வளவு வலு கொடுத்தது என்று மனசாட்சி உள்ள எவருக்கும் புரியும். தங்கருக்கு இதெல்லாம் பாடலாக, பின்னணி இசையாக தெரியாமல் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நட்புடன் இருந்த ஒருத்தரை பிடிக்காமல் போக பல காரணங்கள் இருக்கலாம், அதற்காக அவர் அந்த சமயத்தில் செய்த உதவிகள் அவருடைய திறமைகள் எல்லாம் எதுவுமே இல்லை, சும்மா டம்மி பீஸ் என்று ஆகி விடுமா!!

எனக்கும் இளையராஜா மீது பல கருத்து வேறுபாடுகள் உண்டு, அவரது திறமை மீது எந்த சந்தேகமும் எனக்கில்லை.

சமீபமாக ஒரு சில படங்கள் சுமாராக இசையமைத்து இருக்கலாம் ஆனால், அவர் இசையமைத்து வெற்றி பெற்ற படங்கள் என்றும் அவர் பெயரைக் கூறும், இதை யாராலும் மறுக்க முடியாது.

இளையராஜா இசைக்காக காத்திருந்து தனது படத்திற்கு இசையமைக்க முயற்சித்தவர் தங்கர் ஆனால், தற்போது எதோ காரணத்தால் இளையராஜா இசையமைக்க மறுத்தவுடன் இவருக்கு இளையராஜா இசை ஒன்றுமில்லாமல் போய் விட்டது.

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், நாகரீகம் தெரியாமல் பேசும் தங்கருக்கு தமிழ் மக்களையும் திரையுலகினரையும் குறை கூற என்ன தகுதி இருக்கிறது?

இதன் பிறகும் இளையராஜாவை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை, குறைந்த பட்சம் இதைப்போல பொது இடங்களில் குறை கூறாமல் இருக்கலாம் அல்லவா! எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என்று குதிக்கிறார்.

தற்போது ஒரு “வடா தோசா இந்தியர்” முன்னால் நம்மவர்களுக்கு இசையமைக்கவே தெரியவில்லை என்று கூறுவது தான் தமிழர் பண்பாடா! நமக்கு என்றால் தக்காளி சட்னி இவருக்கு என்றால் ரத்தமா!

தங்கர் பச்சான் திறமையான இயக்குனர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இவருடைய “அழகி”, “சொல்ல மறந்த கதை” போன்ற படங்கள் மிகச்சிறந்த படங்கள்.

அதிலும் “சொல்ல மறந்த கதை” வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பவரின் பிரச்னையை ரொம்ப அழகாக விளக்கி இருக்கும். இது போன்ற படங்களை எடுத்து நாலு பேர் பாராட்டி விட்டாலே நாம் தான் திரையுலக வீரர் என்று திரிவது எந்த வகையில் நியாயம்.

100 படம் எடுத்த பாலச்சந்தர் எல்லாம் எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள். தங்கர் பச்சான் தன்னிடம் உள்ள குறைகளை சரி செய்தாலே அவருக்கு மற்றவர்கள் என்ன கூற வருகிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியும்.

முதலில் பொது இடங்களில் எப்படி பேச வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்று தங்கர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: நான் இளையராஜாவின் ரசிகன் அல்ல ஆனால், அவரது திறமையை என்றும் மதிப்பவன். இதைக் கூற அவரது ரசிகனாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனசாட்சி உள்ள எவரும் இதைக் கூறலாம்.

மிஸ்கின்

இவரும் தங்கர் போலத்தான், திறமையானவர் ஆனால், வாய் காது வரை. மேடையில் இவரிடம் யாரும் மறந்தும் மைக்கை கொடுத்து விடக்கூடாது. என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் ஏகத்துக்கும் பேசிட்டு இருப்பார்.

ஊருல இருக்கிறவன் எல்லோரையும் திட்டி விடுவார். யாருக்கும் படம் எடுக்கத் தெரியவில்லை என்பார் ஆனால், இவர் சுட்டு படம் எடுக்கும் விசயத்தைப் பற்றி மட்டும் கேட்டால், அது என்னுடைய சொந்தக் கற்பனை!! என்பார்.

நான் ரூம் போட்டு குப்புற படுத்து, மல்லாக்க படுத்து என் மூளையை கசக்கி யோசித்து எடுத்த படம் என்று கூசாமல் அவுத்து விடுவார்.

இவர் படத்தில் நடிக்கும் நடிகர்களை வாடா போடா என்று மிகவும் “மரியாதையாக” பேசுவார், மேடைகளில் கூட. இதற்கு பயந்தே பலர் இவரிடம் சிக்குவதில்லை. இவரைப் பொறுத்தவரை இவர் படத்தில் நடித்தால், அந்த நடிகர் இவரது அடிமை போலத்தான்.

சிக்குனாண்டா ஒரு அடிமை! என்று ஓவராக உரிமை எடுத்துக்கொண்டு நொக்கி எடுத்து விடுகிறார்.

இரண்டு படங்கள் சிறப்பாக எடுத்து விட்டதாலே உடனே நாம் தான் தலைச் சிறந்த இயக்குனர் என்று நினைத்து ஆடிக்கொண்டு இருப்பதும் உலகத்திற்கு அறிவுரை சொல்வதும் தான் இவர்களை போன்றவர்களின் பிரச்சனை.

இவங்க இரண்டு பேருக்கும் நாக்குல “சனி” கபடி ஆடுது போல இருக்கு :-).

நிறை குடம் தழும்பாது குறை குடம் கூத்தாடும். பழமொழி எல்லாம் சரியாத்தான் சொல்லி வைத்துட்டு போய் இருக்காங்க :-).

கொசுறு 1

கார்த்தி நடிப்பில் வெளிவரும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு இருக்கிறார்கள். அக்மார்க் மசாலாப் படமாக இருக்கிறது. கார்த்தியின் சகுனிப் படத்திற்கும் இதே போல எதிர்பார்ப்பு இருந்தது, படம் புஸ்ஸுன்னு போய் விட்டது.

இந்தப்படம் எப்படி இருக்கப் போகுதோ! காட்சிகளைப் பார்த்தால் விஜய் படம் போல அப்படியே இருக்கிறது. விஜய்க்கு அண்ணன் தம்பி இருவரிடமும் இருந்தும் இடி 🙂 . விஜய் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது.

ஒருவேளை கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் ஹிட் ஆகி விட்டால், அவ்வளோ தான். அப்புறம் கார்த்தியை கையில் பிடிக்க முடியாது. சூர்யாவாவது மாஸ் கிளாஸ் என்று போகிறார். கார்த்தி மாஸ் தான் என்று முடிவே செய்து களத்தில் இறங்கியது போல தெரிகிறது.

எனக்கென்னவோ சூர்யாவை விட கார்த்தி தான் விஜய்க்கு குடைச்சல் கொடுப்பவராக வருவார் போல உள்ளது காரணம், கார்த்தி அனைத்து கதாப்பாத்திரத்திற்கும் பொருந்தி வருகிறார், குறிப்பாக போலீஸ் உட்பட 🙂 . இளையதளபதி சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கிறார்.

கொசுறு 2

சன் டிவியில் இருந்த போது ஆடாத ஆட்டம் ஆடிய சக்சேனா, சன் டிவி பிரச்சனைக்குப் பிறகு தற்போது படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார். தொலைக்காட்சியும் விரைவில் துவங்க உள்ளார்.

எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் என்னை ஆதரியுங்கள் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார். இவர் வாங்கி வெளியிட்ட “சாருலதா” படம் பப்படம் ஆகி விட்டது.

எப்படி இருந்த சாக்சேனா இப்படி ஆகிட்டாரே! இவர் பாவமாக!! பேசிய போது வேளச்சேரியிலோ அல்லது அந்தப் பக்கம் எதோ ஒரு இடத்தில் இவருடன் ஒரு பையனுக்கு பிரச்சனையாகி அங்கே எல்லாவற்றையும் இவரது ஆட்கள் அடித்து நொறுக்கியது நினைவிற்கு வந்து போகிறது.

வாழ்க்கை ஒரு வட்டம் 🙂 .

கொசுறு 3

இந்தியாவின் ஒரு சிறிய பகுதிதான் தமிழகம். இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்புகளுக்கு இந்த சிறிய பிரதேசம் சவாலாக அமையாது. தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமே தகவல் தருகிறோம்.

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை சிறப்பு படை அணியை சார்ந்த 45 உயர் அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா செல்ல உள்ளனர். முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்.

– சிங்கள ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியா (நன்றி விகடன்)

நம்மை இதுக்கு மேல் கேவலப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன் ஆனால், இத்தனைக்கும் காரணம் நமது கையாலாகாத அரசியல்வாதிகள் என்பதால் அனைத்தையும் இறுகக்கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

நம்ம ஆளுங்க பதவிக்கு என்றால் தானே மத்திய அரசை மிரட்டுகிறார்கள், தமிழர்களுக்கு என்றால் கடிதம் தானே! டேய் சூனா பானா! விட்ரா விட்ரா! எத்தனையோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா!

கொசுறு 4

ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா மற்றும் விஷால் நால்வரும் சுந்தர் C படத்துல நடிக்கப் போகிறார்களாம். இது மாதிரி ஹிந்தி படங்களில் தான் காணலாம், தற்போது நம்ம நடிகர்களும் ஈகோ வை ஏறக்கட்டி வைத்து விட்டு இது போல நடிக்க முயல்வது நல்ல விஷயம்.

இவங்க நான்கு பேருமே தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்கள் என்று நினைக்கிறேன் அதிலும், ஜீவா ஆர்யா விஷால் மூவருமே ரகளைப் பார்ட்டிகளாக இருக்க வேண்டும். திரைக்கு பின்னால் எப்படியோ! நமக்கென்ன தெரியும் 🙂 , எல்லாம் இணையத்தளங்களில் படிப்பது தான்.

கொசுறு 5

நடந்து கொண்டு இருக்கும் காவிரிப் பிரச்சனை பற்றி அறிந்து இருப்பீர்கள். இதில் தமிழகத்திற்கு தண்ணீர் விட்டதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெங்களூருக்கு வரும் தண்ணீரை தடுத்து விட்டார்களாம்!!! கொஞ்சம் பாதிப்புடன் பின் சரி செய்து விட்டார்கள்.

இவங்க ஒரு மார்க்கமாகத் தான் இருக்கிறார்கள். இவங்க ஊருக்கு இவங்களே தடை! என்ன கொடுமை சார். அவங்க ஊர் மக்களையே இந்தப் பாடு படுத்தறாங்களே! நம்ம ஆளுங்க சிக்குனா மவனே! சட்னி தான். ரொம்ப டெர்ரரான ஆளுங்களாகத் தான் இருக்காங்க.

{ 15 comments… add one }
 • Prabhu October 5, 2012, 9:33 AM

  மிஸ்கின் நினச்சாலே டென்ஷன் ஆகுது. அவனும் அவன் மண்டையும். ஒரு தடவ லேடீஸ் காலேஜ் culturals க்கு போய் அசிங்கமா பேசி எல்லா பொண்ணுகளையும் முகம் சுளிக்க வெச்ச sadist

 • எப்பூடி... October 5, 2012, 10:11 AM

  //மக்களின் ரசனை சரியில்லை, மசாலாப் படங்களை தான் விரும்புகிறார்கள்.// இந்த டாப்பிக்கை வைத்து ஒரு பதிவு போடணும்னு இருக்கன்; சேரன், பச்சான், சில கமல் ரசிகர்களுக்காக, கூடிய விரைவில் 🙂

  இந்த இரண்டுபேரும் தங்களை பெரிய இதுவாக தாமே நினைத்துத்தான் இந்த அலப்பறை பண்றாங்க குறை குடங்கள்!!

  கார்த்தி… கார்த்தி… கார்த்தி….. – தீபாவளிக்கு என்னோட ஹீரோ கார்த்தி :-))

 • r.v.saravanan October 5, 2012, 2:33 PM

  சில பேருக்கு வாய் தான் எதிரியே அது தங்கர் பச்சானுக்கு நிறைய என்று நினைக்கிறேன்

  எனக்கும் கார்த்தி படங்களின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது கிரி

  சக்சேனா அப்படி படம் தயாரிச்சு சேனல் ஆரம்பிச்சு நாட்டிலே ஒன்னும் நல்லது நடக்க போறதில்லே

  கொசுறு செய்திகள் நன்றாக இருக்கிறது வாரம் ஒரு முறை என்று செய்திகளை தனியாகவே பதிவிடுங்கள்

 • கோபிநாத் October 5, 2012, 2:48 PM

  \ “உங்குத்தமா (உன் குத்தமா) எங்குத்தமா (என் குத்தமா)” \\
  இன்றைய நிலைக்கு அன்றைக்கே தானே பாட்டு எழுதிவிட்டார் போல…

 • வருண் October 5, 2012, 8:07 PM

  ****கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், நாகரீகம் தெரியாமல் பேசும் தங்கருக்கு தமிழ் மக்களையும் திரையுலகினரையும் குறை கூற என்ன தகுதி இருக்கிறது? ***

  என்ன சொல்றது? தனக்குத் திறமை இருக்கு ஆனால் தன்னால உயரப் பறக்க முடியவில்லை என்கிற அவலநிலையில்ஏற்படுகிற தீரா மனவுளைச்சலில் இருப்பதால், அவரால் நியாயமாக பேசமுடியவில்லை, நன்றி மறக்கிறார், உளறுகிறார்.. அப்படினு சொல்லலாம்.., நியாயப்படுத்தலாம். 🙂

 • இந்த இருவருக்கும் மட்டுமல்ல… கொஞ்சம் உயர்ந்தாலே இப்படி ஆகி விடுவதுண்டு… நிலைப்பது கொஞ்சம் சிரமம் தான்…

  கார்த்திக் – எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளது…

  கொசுறுகள் – நன்றி…

 • raja October 6, 2012, 12:21 PM

  கார்த்தியை பற்றிய விசயத்தில்கூட இளையதளபதியை பற்றி சொல்லியிருக்கிறீர்கள் … இதுதான் தளபதியின் வெற்றி போலும் …

 • மொக்கராசு மாமா October 6, 2012, 2:48 PM
 • Mohamed Yasin October 6, 2012, 9:05 PM

  அழகி படத்தின் இசை காலத்தால் அழியா ஒரு பொக்கிஷம்… தங்கரின் கருத்து கண்டிக்க வேண்டிய ஒன்று!!! கிரி… அழகி படம் எங்க ஊருக்கு அருகில் (5 KM ) எடுக்கபட்ட படம்..

 • காத்த‌வ‌ராய‌ன் October 6, 2012, 11:09 PM

  VRS கொடுத்து பன்ருட்டிக்கு அனுப்ப வேண்டிய பார்ட்டி தங்கர்பச்சான்.
  (பாவம் பாக்யராஜ் பையன் இவரிடம் மாட்டிக்கொண்டார்)

  முதல் காப்பி அடிப்படையில் எடுக்கப்பட்ட “சொல்ல மறந்த கதை” படத்தின் போது, நீங்கள் அறிமுகப்படுத்தியவருக்கு நீங்களே சம்பளம் பேசி நீங்களே கொடுத்துவிடுங்கள் என்று பஞ்சு அருணாச்சலத்திடம் கூறி இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்காமல் விட்டு விட்டார். அதனால்தான் தென்றல் படத்தின் போது இந்த சினிமா வியாபாரியை வீட்டுக்குள் கூட வரவிடாமல் விரட்டியடித்துவிட்டதாகவும் படித்ததுண்டு.

  என் கதையை வைத்து எடுத்த சொல்ல மறந்த கதையில் இப்போதெல்லாம் டைட்டிலில் கூட என் பெயர் போடுவதில்லை என்று நாஞ்சில் நாடான் கூட ஒரு முறை மிகவும் வருத்தப்பட்டு கூறியிருந்தார்.

  —————xxxxx——————xxxxx—————–

  காவிரி:

  சென்னைக்கு தண்ணீர் தந்தால் வீராணம் வறண்டு போகும் என யோசிக்கும் பா.ம.க தமிழனும் வாழ்க

  2003 – இல் ரயில் மூலம் காவிரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்த ஈரோட்டு தமிழனும் வாழ்க

  வெள்ளம் ஏற்படும் போது தாயுள்ளத்தோடு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க மறுத்த கன்னட சகோதரனும் வாழ்க

  இன்று வறட்சியின் போது அதே தாயுள்ளத்தோடு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கும் கன்னட சகோதரனும் வாழ்க

  பெங்களூருக்கு செல்லும் தண்ணீரை அடைத்த மண்டியா மனிதனும் வாழ்க

  வாழ்த்துவதை தவிர மனித ஜென்மத்தால் வேறென்ன செய்ய முடியும்.

  இன்னும் 10/20 வருஷத்துல விவசாயம் செய்ய யாரும் இருக்கப் போவதில்லை; அதுவரை நடக்கும் இத்தகைய அதிரடி (அடிதடி) திருவிழாக்களை காண கண் கோடிவேண்டும்.

  வருங்கால சந்ததிகள் பாவம் செயதவர்கள் இதை எல்லாம் பார்க்க கொடுப்பினை இல்லாதவர்கள். அவர்கள் பார்த்து ரசிக்கப்போவது எல்லாம், மேட்டூர் அணையை ரிலையன்ஸூம், மைசூர் அணையை வால்மார்ட்டும் 999 வருட குத்தகைக்கு எடுத்து செய்யப்போகும் விவசாயத்தை………

  பார்ப்போம் – ரசிப்போம்

 • arun October 8, 2012, 1:52 AM

  கொசுறு எல்லாமே நல்லா இருக்கு தல
  தங்கர் – அவர் எப்பவுமே அப்படி தான

  – அருண்

 • Lenin M October 8, 2012, 5:42 AM

  கிரி,தகேன் 2 விமர்சனம் எப்போ?

 • கிரி October 8, 2012, 7:12 PM

  @பிரபு கவுண்டர் தான் இவரை கவனிக்க சரியான ஆளு 🙂

  @ஜீவதர்ஷன் கார்த்தி இன் ஃபுல் ஃபார்ம்

  @சரவணன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி. முயற்சிக்கிறேன். இதை வாரா வாரம் செய்தால் இதற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும், அதனாலே இது போன்று செய்வதில்லை.

  @கோபி 🙂

  @வருண் இவங்க எல்லாம் கொஞ்சம் மற்றவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தாலே போதும்.

  @தனபாலன் 🙂

  @ராஜா உங்க தளபதி னா சும்மாவா! 🙂

  @மொக்கராசு பார்க்க ஆளுங்க இருக்கும் வரை இவர்களும் இது போல எடுத்துட்டே இருப்பாங்க போல.

  @யாசின் சூப்பர் 🙂

  @காத்தவராயன் 🙂 🙂

  இவரு இவ்வளவு வேலை செய்துட்டு அடுத்தவனை திட்டிட்டு இருக்காரு.. என்னத்தை சொல்றது.

  உங்க 999 குத்தகை மேட்டர் நிஜமாக நிறையவே வாய்ப்பு இருக்கு.. நிஜமாகவே.

  @அருண் நீங்க சொன்னா சரி 🙂

  @லெனின் குட்டி விமர்சனமாக எழுதுகிறேன். ஓகே வா 🙂

 • arun October 8, 2012, 11:59 PM

  @லெனின் குட்டி விமர்சனமாக எழுதுகிறேன்

  thala
  yenaku detailed vimarasanam venume.. athai vechu than mudivu pannanum:)

  – arun

 • கிரி October 9, 2012, 6:35 AM

  அருண் ஏற்கனவே இருக்கும் கதை தான். புதிதாக எழுத எதுவுமில்லை.. படிச்சுப் பாருங்க.. உங்களுக்கு இதுவே போதும் என்று நினைக்கிறேன்.

Leave a Comment