எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன்

June 18, 2012

சினி மசாலா எழுதி ரொம்ப நாளாச்சு! grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன் கோலிவுட்டை ஒரு ரவுண்டு வருவோம்

எந்திரன்

grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன் எல்லாமே ஹாட்டான செய்தி என்றாலும் தலைவர் படத்தில் இருந்து ஆரம்பிப்போம் grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன் ஜப்பானில் எந்திரன் படத்திற்கு அமோக வரவேற்ப்பு. இதற்கு முக்கியக்காரணம் எந்திரன் ஒரு ரோபோ சப்ஜெக்ட். பொதுவாகவே ஜப்பானியர்களுக்கு ரோபோ விசயங்களில் ஆர்வம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அதோட அங்கே பலருக்கு ரஜினி முத்து படத்தின் மூலம் தெரிந்த நபராகி விட்டார். ஜப்பானில் ரஜினிக்கு உள்ள வரவேற்பு பற்றி செய்திகளில் படித்து இருப்பீர்கள் நான் புதிதாகக் கூற எதுவுமில்லை. நம்ம ஊர் ரசிகர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்று அதகளப் படுத்தி இருக்கிறார்கள். ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தச் செய்தி படித்தவுடன் திரும்ப ஒரு முறை எந்திரன் படம் பார்த்தேன். டாப் ஐந்து ரஜினி படங்கள் என்றால் எந்திரன் நிச்சயம் என்னுடைய லிஸ்டில் இருக்கும்.

இந்தப்படத்தை இவ்வளவு தாமதமாக ஏன் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. எந்திரன் படம் வெளியான போது ஜப்பானில் உள்ள ரசிகர் ஒருவர் சிங்கப்பூர் வந்து பார்த்துச் சென்றது இங்கே உள்ள உள்ளூர் பத்திரிக்கைகளில் வெளிவந்தது. கோச்சடையானை எப்படி வரவேற்ப்பார்கள் என்ற ஆர்வம் உள்ளது.

Image Credit - RBSI – Rajini Biggest Superstar Of India

விஸ்வரூபம்

grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன்

கமல் எந்தப் படத்திற்கும் இந்த அளவிற்கு மார்கெடிங் செய்து இருப்பாரா! என்று நினைக்கும் அளவிற்கு விஸ்வரூபத்திற்கு மார்கெடிங் செய்து வருகிறார். அதுவும் தற்போது facebook ல் வந்த பிறகு அடிக்கடி படம் வெளியிட்டு வருகிறார். முன்பு விஸ்வரூபம் படத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், தற்போது படம் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தை ட்ரைலர் மற்றும் வெளியிட்ட சில படங்கள் தூண்டி இருக்கிறது. அதோட ஹாலிவுட்டில் படம் இயக்கப்போவதாக அறிவித்து இருப்பது, இந்தியா முழுக்க பரபரப்பான செய்தி ஆகி இருக்கிறது. படத்தின் பட்ஜெட் 120 கோடி, கமல் சம்பளம் 45 கோடியாம்.

ஹிந்தியில் சமீபமாக எந்த ஒரு ஹிட்டும் கொடுக்கவில்லை. ஹேராம், அபய் (ஆளவந்தான்) சரியாகப் போகவில்லை எனவே விஸ்வரூபம் படத்தை மிகப்பெரிய வெற்றியாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்தப்படம் வெற்றி பெற்றால் கமலுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும்.

Image Credit – Kamal facebook fan page

பில்லா 2 Vs சகுனி

grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன்

இப்ப எல்லாவற்றையும் விட ஹாட்டான விசயமாக ஓடிக்கொண்டு இருக்கும் விஷயம் பில்லா 2, சகுனி படங்கள் தான். சகுனி பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அஜித் படத்தின் விற்பனையை விட கார்த்தி சகுனி படத்தின் விற்பனை அதிகம் என்று கொளுத்திப் போட்டார். பின் அதில் இருந்து மாற்றி மாற்றி சண்டைப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். தற்போது அஜித் பில்லா 2 வெளியாகும் அதே நாள் சகுனியும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். இது கூட விசயமல்ல அதற்கு வெளியிட்டு இருக்கும் விளம்பரம் தான் அஜித் ரசிகர்களை கடுப்பேத்தியுள்ளது. இணையத்தில் அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை ரொம்ப பிரபலம். மாற்றி மாற்றி கலாயித்துக்கொண்டு இருப்பார்கள். தற்போது அஜித்தை கலாயித்து இந்தப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். தற்போது அஜித் பில்லா 2 க்கு A சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் படம் வெளியாவது ஒரு வாரம் தாமதமாகும் என்கிறார்கள்.

கார்த்தி பற்றி இன்னொன்று கூறவேண்டும் இவருக்கு காமெடி இயல்பாக வருகிறது. பேசும் போது நம்ம நண்பன் ஒருத்தன் பேசுவது போல உள்ளது, இயல்பான வசன நடை, உடல் மொழி இவருக்கு கூடுதல் பலம். விஷால் கூட இதே போல தான் வந்த புதில் புயலாக மூன்று படத்தில் வந்தார் அதன் பிறகு தற்போது ஹிட் கொடுத்து பல காலம் ஆன நிலையில் இருக்கிறார். கார்த்தியும் இந்த லிஸ்டில் வராமல் இருப்பது அவர் தேர்வு செய்யும் படங்களில் தான் இருக்கிறது.

துப்பாக்கி Vs மாற்றான்

grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன்

விஜய் துப்பாக்கி படம் விரைவில் வரப்போகிறது. இப்பவே இந்தப்படத்தை அக்க்ஷை குமாரை வைத்து ரீமேக் செய்யப்போவதாக கூறப்படுகிறது. முருகதாஸ் இயக்கம் என்பதால் துப்பாக்கி படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக விஜய் வருகிறார். துப்பாக்கி வரும் அதே சமயம் சூர்யா படம் மாற்றான் வரப்போகிறதா சொல்லப்படுகிறது. ஏற்கனவே இணையத்தில் விஜய் சூர்யா ரசிகர்கள் ரணகளமாக அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். படம் வெளிவரும் சமயம் சண்டை உச்சத்தில் இருக்கும். விற்பனையில் விஜய் துப்பாக்கியை விட சூர்யா மாற்றான் அதிகம் போகும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

அண்ணன் சூர்யா, விஜயை டார்கெட் பண்ணினால், தம்பி கார்த்தி, அஜித்தை டார்கெட் பண்ணுகிறார் போல இருக்கு grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன் ஒரு முடிவோட தான் இருக்காங்க. அஜித் விஜய் இருவருக்கும் இல்லாத ஒரு விஷயம், சூர்யா கார்த்திக்கு ஆந்திராவில் இருக்கும் வரவேற்பு. பார்ப்போம் நான்கு படங்களில் எந்தப்படம் டாப்புல போகப்போகிறது என்று.

Image Credit – Vikatan

கவுதம் மேனன்

grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன்

grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன்

ஷங்கர் போல கவுதம் மேனனும் தயாரிப்பாளராக பல படங்களை எடுத்து வருகிறார். அதில் தற்போது “கற்றது தமிழ்” இயக்குனர் நடித்த “தங்க மீன்கள்” படம் விரைவில் வரப்போகிறது. ஜெய் நடிக்கும் “தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்” துவங்கப்பட்டு இருக்கிறது. கவுதம் படங்களின் தலைப்பு அழகான தமிழில் இருக்கும், இவைகளும் விதிவிலக்கல்ல. ஆனால் தமிழ்செல்வனில் “ச்” காணோம்! “கற்றது தமிழ்” பலருக்கு பிடிக்கவில்லை குறிப்பாக கணினித் துறையில் இருப்பவர்களுக்கு. எனக்கு ரொம்பப் பிடித்த படங்களில் ஒன்று.

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

பழைய சினிமா செய்திகளை, சம்பவங்களை தெரிந்து கொள்ள விரும்பினால் “தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்” facebook fan page ஐ Like செய்யுங்கள். இதில் பல்வேறு செய்திகளை சுவாரசியமாக தினமும் கொடுக்கிறார்கள். திரைச்செய்திகளை நீங்கள் ரசிப்பவர் எனில் குறிப்பாக முந்தைய செய்திகள், நீங்கள் தவறாமல் இதில் இணைந்து இருக்க வேண்டும்.

கப்பர் சிங்

grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன்

ஹிந்தியில் மெஹா ஹிட் அடித்த டபாங் தமிழில் ப்ளாப்பான ஒஸ்தி தெலுங்கில் கப்பர் சிங்காக தாறுமாறான வெற்றி பெற்று இருக்கிறது. இதில் என்ன ஒரு பெரிய விஷயம் என்றால் பவன் கல்யான் ஹிட் கொடுத்து பத்து வருடங்கள் ஆகிறது இதன் இயக்குனர் இதற்கு முன் எடுத்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி. கதாநாயகி ஸ்ருதி ஒருபடம் கூட ஹிட் கொடுக்கலை. இப்படி மூன்று பெரும் இணைந்து மெகா மெகா ஹிட் கொடுத்து இருக்கிறார்கள். பெரிய விஷயம் தானே! அனைத்து சாதனைகளையும் இது முறியடித்து விட்டதாம். இந்தப்படம் வரும் வரை முதல் இடத்தில் இருந்த மகதீரா (தமிழில் மாவீரன்) சமீபத்தில் தான் 1000 நாளை கடந்து இருந்தது.

ரவுடி ரத்தோர்

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன படத்தை தமிழில் சிறுத்தையாக எடுத்து வெற்றி பெற்றார்கள். இதை இந்தியில் பிரபுதேவா அக்ஷை குமாரை வைத்து “ரவுடி ரத்தோர்” என்ற பெயரில் எடுத்து அது தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. இந்தப்படம் வெளியான போது ஹிந்தி வடா தோசா விமர்சகர்கள் படத்தைப் பற்றி படு கேவலமாக விமர்சித்து இருந்தார்கள். படத்தின் கதையும் அப்படித்தான் என்பது வேறு விஷயம். இதே ஹிந்தி இயக்குனர் என்றால் ஒன்றும் கூறி இருக்க மாட்டார்கள், தென்னிந்திய இயக்குனர் என்பதால் இந்த பாரபட்சம். இவங்க என்ன சொன்னாலும் படம் சூப்பர் ஹிட் ஆகி 100 கோடிக்கு மேல் வசூலித்து விட்டது. தற்போது பிரபுதேவா 100 கோடி வசூல் செய்த படங்களை இயக்கிய இயக்குனர் க்ளப்பில் இணைந்து விட்டார்.

கொசுறு grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன்

grey எந்திரன் விஸ்வரூபம் பில்லா சகுனி துப்பாக்கி மாற்றான் கவுதம் மேனன்

{ 16 comments… read them below or add one }

காயத்ரிநாகா June 18, 2012 at 7:56 AM

காலை வணக்கம்!! கற்றது தமிழ் மிகச் சிறந்த படம்..தமிழ் படித்தவனுக்கு நேரும் அவலநிலையை மிகக் சிறப்பாக எடுத்துக் காட்டிய படம்…தமிழ்,தமிழ் என்று கூவும் அரசியல்வாதிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்…!

Reply

tulsi June 18, 2012 at 9:56 AM

same blood (அப்பரைசல் போட்டோ) …..

Reply

Mohamed Yasin June 18, 2012 at 11:05 AM

பகிர்வுக்கு நன்றி கிரி..

Reply

Rajkumar June 18, 2012 at 12:29 PM

ரஜினியை எனக்கும் பிடிக்கும் ஆனால் அவரது பழைய படங்களைத்தான் – ஆனால் தற்போது அவருக்காக கதைகள் உருவாகின்றன. சவுந்தர்யா மீது நம்பிக்கை இல்லை வேறு யாராவது கோச்சடையானை உருவாக்கினால் நல்லா இருக்கும். பாபா பட விநியோகத்தின்போது தலைவர் சம்சாரம் பண்ணாத அழிச்சாட்டியமா.

விஸ்வரூபம் – இவர் மீது எப்போதும் தனி அபிப்பிராயம். இவருக்கு உள்ள கெட்ட பழக்கம் 10-15 வருடம் கழிச்சு வரவேண்டிய படத்தை எல்லாம் இப்பவே செஞ்சுடுவார்.

சூர்யா கார்த்தி – போற வேகம் சரியில்ல நிதானம் தேவை. கற்றது தமிழ் ரொம்ப பிடிச்ச படம் “2500 வருஷத்துக்கு மேலாக இருக்குற தமிழைவிட 25 வருஷமா இருக்குற கம்பியுடர் பொட்டி” ரொம்ப ரசிச்ச வார்த்தைகள்.

ரவுடி ரத்தோர் – படு போர் மொக்கை – அக்ஷைக்கு வயதானது அப்பட்டமாய் தெரிகிறது. போன வருஷம் சிறுத்தை பார்த்தேன் (எதுக்கு பார்த்தேன் என்று அப்புறம் சொல்கிறேன் வரலாறு ரொம்ப முக்கியம்) நாலு மாசத்து முன்னர் தெலுங்கு விக்ரமார்க்குடு பார்த்தேன் – போன வாரம் வீர மதகரி (கன்னடா) பார்த்தேன் இன்னும் பெங்காலி “லயன் இஸ் பேக் பாக்கி” – கம்பேர் பண்ணும்போது சிருத்தைதான் ஆக்ரோஷம். இவளவு பார்த்தும் ஜிந்தாக் தக் சிக்காவுக்கு இன்னும் அர்த்தம் புரியல

Reply

தனபாலன் June 18, 2012 at 2:12 PM
Dinesh June 18, 2012 at 5:48 PM

மொத்தம் இரண்டு மணி நேரம் இந்த பேஸ்புக் பக்கத்தில் செலவிட்டேன். படிக்க படிக்க சுவாரசியம்… அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி

Reply

rajesh v June 18, 2012 at 10:36 PM

“கற்றது தமிழ்” பலருக்கு பிடிக்கவில்லை குறிப்பாக கணினித் துறையில் இருப்பவர்களுக்கு.

————————————————————————————–
கணினித் துறையில் இல்லாத எனக்கும் இந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை. பல்லு இருக்குறவன் பக்கோடா sappaduran . எனக்கு, ஏதோ gandula டைரக்டர் படம் எடுத்த மாதிரி இருந்துச்சு. அந்த படம் கூட்டிட்டு போனதால, என் friendukku punishment கொடுத்தேன். அது என்னனு உங்களுக்கே தெரியும். :ப

Reply

எப்பூடி... June 18, 2012 at 11:41 PM

எந்திரன் – புரட்சிகளுக்கு கமர்சியல் குப்பை, தமிழ் சினிமாவிற்கு பெருமை, இந்திய சினிமாவிற்கு உச்சம் !!!

விஸ்வரூபம் – எதிர்பார்ப்பை தூண்டவில்லை; காரணம் இயக்குனராக கூட இருக்காம்!!! :p

சகுனி @ மாற்றான் – அண்ணன் விஜய்க்கு, தம்பி அஜித்துக்கு செக் வைக்கிறார்கள் (அண்ணன், தம்பி இருவருமே ஏற்க்கனவே வைத்த செக்கில் சிக்கியது என்னவோ விஜய்தான்) :p

தமிழ்செல்வன் – சில நேரங்களில் ‘ச்’ வராமல் போகவும் சந்தர்ப்பம் உண்டு; முன்னர் ‘வாழ்த்துக்கள்’ என தலைப்பிட்ட சீமான் திரைப்படம் பின்னர் ‘த்’ வராது என தமிழ் அறிஞர்கள் சொல்லியதால் ‘வாழ்த்துகள்’ என பெயரிடப்பட்டது

Reply

கோபிநாத் June 19, 2012 at 12:02 AM

தல இதை பார்த்திங்களா http://www.youtube.com/watch?v=வ்ழ்யாப௨வ்றா

நானும் வெயிட்டிங் ;)))

Reply

arun June 19, 2012 at 2:34 AM

எந்திரன் – செம சந்தோசம்

கொசுறு நல்லா இருக்கு கிரி

- அருண்

Reply

chinnamalai June 19, 2012 at 2:38 PM

அனைத்தும் அருமையாய் இருந்தது சூப்பர்ஸ்டார் ஜப்பான் ஜொலிக்கிறது ரொம்ப சந்தோசம் பில்லா-சகுனி என்ன ஆகபோகுதோ…விஸ்பரூபம் எதிர்பார்ப்பில் உள்ளேன்…

Reply

r.v.saravanan June 19, 2012 at 8:50 PM

எதிர்பார்ப்பில் உள்ள படங்கள் அனைத்தையும் ஒரு ரவுண்டு கட்டியிருக்கீங்க
கிரி

பார்க்கலாம் எந்த படங்கள் நம்மை கவரும் என்று

Reply

R.Gopi June 20, 2012 at 8:36 AM

கிரி….

எந்திரன் இப்போது 2 வருடங்களுக்கு பிறகாவது ஜப்பானில் ரிலீஸ் ஆனதில் சந்தோஷம்… அதுவும் பெரிய வெற்றி அடைந்திருப்பதில் டபுள் சந்தோஷம்… ஏனெனில், இன்னமும் அங்கே சிவாஜி (2007) படம் ரிலீஸ் ஆகவில்லை….

சஞ்சய் வாத்வா (இந்த பெயர் தான் என்று நினைக்கிறேன்) என்ற ஒரு நபர் தான் ரஜினியின் படங்களை ஜப்பான் மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றார் எனவும் அவர் ஒரு அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதால், சிவாஜி ரிலீஸ் ஆகவில்லை என்றும் படித்த ஞாபகம்….

Reply

கிரி June 22, 2012 at 7:05 AM

அனைவரின் வருகைக்கும் நன்றி

@ராஜ்குமார் சவுந்தர்யா என்ன பண்ணப் போறாங்களோ! பீதியாகத்தான் இருக்கு. பாபா நேரத்துல தலைவர் மனைவி ரொம்பவே பண்ணிட்டாங்க. அனைத்து மொழியிலும் பார்த்து அசத்திய ராஜ்குமார் வாழ்க வாழ்க :-)

@ராஜேஷ் உங்களுக்கு பிடித்த படத்தை எடுக்கணும் என்றால் தனியா ரூம் போட்டு யோசித்தால் தான் முடியும் போல இருக்கு :-)

@ஜீவதர்ஷன் இப்ப இரண்டு பெரும் எக்கச்சக்கமாக செக் வைக்கிறார்கள். விஜய் கொஞ்சம் திணறித்தான் போய் இருக்காரு. தமிழ்ச்செல்வன் இதற்கு யாராவது தீர்வு சொல்லுங்கப்பா! :-)

@கோபி இதைப் பாருங்க என்று கொடுத்து இருக்கீங்க.. அது பிம்பிளிக்கி பிளாக்கி னு சொல்லுது :-) முழுசா கொடுங்க.

@R கோபி சிவாஜி படம் வெளியானால் சூப்பராக இருக்கும். அவர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். செம மசாலா படம் முத்து மாதிரியே.

Reply

gowthaman July 5, 2012 at 6:21 PM

சகுனி பிளாப் ஆன விஷயம் ஊருக்கே தெரியும் .தல கூட போட்டி போடதகுதி இல்லாத ஜென்மத்த பற்றி இனி நெட்ல விவாதிக்காதிங்க.ப்ளீஸ்

.

Reply

keerthivasan September 12, 2012 at 7:49 AM

ராஜ் குமார் அவர்களே, கொஞ்சம் யோசித்து எழுத வேண்டும். கமல் 15 வருடம் கழித்து வர வேண்டிய படங்கள் கொடுத்தால் அதை கமல் ரசிகன் தவிர எவன் பார்ப்பான்? common man கதா பாத்திரங்கள் தான் மனதில் நிற்கும், ஏனென்றால் அது தான் நடப்பதை இயல்பாக சொல்லும் யுக்தி. 15 வருஷம் கழித்து நீங்கள் எப்படி இருப்பிர்கள் என்பதை சொல்ல நீங்கள், நான், மற்றும் கமல் எல்லோரும் ஞானிகள் அல்ல, கமல் ஒரு வெத்து வெட்டி, உங்களை நன்கு ematrukigran நீங்கள் மற்றும் கமல் ரசிகர்கள் ஜால்ரா thatavadhai நிறுத்தி விட்டு யோசித்தால் அவன் காணாமல் சென்று விடுவான்.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed