லாபம் நட்டிக்கு நட்டம் ரஜினிக்கு !!

April 20, 2012

grey லாபம் நட்டிக்கு நட்டம் ரஜினிக்கு !!மீண்டும் “3″ பட விவகாரம்.. ஆனால் இப்போது வேறுவகை பரபரப்பில். முன்பு பாராட்டாக வாங்கிக்கொண்டு இருந்த “3″ தற்போது பாட்டாக வாங்கிக்கொண்டு இருக்கிறது. ஒரே ஒரு பாடல் ஹிட் ஆகியதால் வரம்பு மீறி இந்தப் படம் பேசப்பட்டது, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உச்சக்கட்டமாக தனுஷ், ஸ்ருதி போன்றோர் பிரதமருடன் விருந்து!! சாப்பிடும் அளவிற்கு. இதில் பிரதமர் பற்றியே ஒரு கட்டுரை எழுதலாம் என்றாலும் அவர் பற்றிய கருத்து இந்தப் பதிவிற்கு தேவையில்லாதது.

எப்போதுமே அதிகளவு சந்தோசத்தை அடையும் பொழுது அதற்க்குண்டான எதிர் விளைவுகளும் வந்து சேரும் வாய்ப்புள்ளது என்பது பலர் அறிந்தது. “3″ அநியாயத்திற்கு புகழப்பட்ட போதே நினைத்தேன் இந்தப்படம் ப்ளாப் ஆனால் எல்லோரும் போட்டு சாத்தப்போறாங்க என்று! அதே போல அனைவரும் போட்டு கும்மி எடுத்து விட்டார்கள். பாராட்டை எப்படி சந்தோசமாக வாங்கிக்கொண்டார்களோ அதே போல இதையும் வாங்க வேண்டியது தான் வேறு வழி இல்லை.

படம் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியவுடன் படத்திற்கான விலையும் கண்டபடி உயர்ந்தது. தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா ஏலம் போட்டு படத்தை விற்கப்போவதாக எல்லாம் செய்திகள் வந்தன.. அது உண்மையா என்பது எனக்குத் தெரியாது. கஸ்தூரி ராஜா கொலவெறி பாட்டுப் புகழை நன்கு பயன்படுத்திக்கொண்டார் இதை தவறாகக் கூற முடியாது ஆனால் அளவுக்கு மீறி ஆசைப் பட்டது தவறு என்பது என் கருத்து.

இது ஒரு புறம் என்றாலும் படம் வெற்றி பெற்றால் பணத்தை அள்ளி விடலாம் என்று படம் வாங்க நினைக்கும் அனைவருக்கும் ஆசை. ஆசையே பிரச்சனைகளுக்குக் காரணம்.. இதில் ஆசை என்பதை பேராசை என்று மாற்றம் செய்து கொள்ளலாம். திரைத்துறை வியாபாரம் என்பதே சூதாட்டம் தான். இயக்குனர் விக்ரமன் அவர்கள் கூறியது போல் காலையில் பிச்சைக்காரன் மாலையில் கோடீஸ்வரன்.

grey லாபம் நட்டிக்கு நட்டம் ரஜினிக்கு !!இதனால் தான் எப்படியாவது அதிர்ஷ்டத்தில் நாம் எடுக்கும் / வாங்கும் படம் வெற்றி அடைந்து பணம் வந்து விடாதா! என்று அனைவரும் பந்தயம் கட்டுகிறார்கள். இதில் ஒருவர் தான் ஆந்திரா நட்டி குமார். ஆந்திராவில் “3″ படம் அட்டர் ப்ளாப் ஆகி விட்டது. இவர் நான்கு கோடிக்கு வாங்கி இருந்தார்.. “ஏன்யா! தனுசுக்கு 10 லட்சம் தான் ஆந்திராவில் மதிப்பு இருக்கிறது அப்படி இருக்கையில் நீ எதுக்கு 4 கோடி கொடுத்து வாங்குறே!” என்று அவருடைய நண்பர்கள் கேட்டார்களாம் அதற்கு “எனக்கு பிரச்சனை என்றால் ரஜினி காப்பாற்றுவார் அதனால் எனக்கு பயமில்லை” என்று கூறினாராம்.

இது எப்படி இருக்கு பாருங்க! ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் சொல்வது போல “டிஃபன் சாப்பிடுவது ஒருத்தன் டிப்ஸ் வைக்கிறது இன்னொருத்தனா!” இந்த ஆளு பணம் கொடுத்து வாங்குறாரு… இவர் லாபம் நஷ்டம் அடைகிறாரு இதுல ரஜினி எங்க வந்தாரு? இப்ப ஒருவேளை இந்தப் படம் செம ஹிட் ஆகி 8 கோடி வசூல் ஆகி இருந்தா (ஒரு பேச்சுக்கு தாங்க!) ரஜினிக்கு இதுல பணம் கொடுப்பாரா..அதெப்படி கொடுப்பாரு.. இப்ப இவங்களுக்கு லாபம் வந்தா ரஜினிக்கு ஏதும் தர மாட்டாங்க.. ஆனால் நஷ்டம் வந்தால் ரஜினி கொடுக்கணுமாம்!

என்னங்கய்யா நியாயம்? ரஜினியா இவரை 4 கோடி கொடுத்து வாங்கச் சொன்னாரு.. அப்படி கூறி இருந்தால் இவர் கேட்பது நியாயம். இந்தப்படத்திற்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இயக்குனர் அவருடைய மகள் என்பதைத் தவிர. தயாரிப்பாளர் முழுமையும் தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா தான். பணப் பட்டுவாடா செய்தது முழுக்க இவர் தான்.

இதே பிரச்சனை தான் குசேலன் படத்திற்கும் வந்தது. ரஜினி படம் முழுவதும் வருகிறார் இது ரஜினி படம் என்று இயக்குனர் வாசு விளம்பரப்படுத்தினார். அப்போதும் ரஜினி “நான் 25 சதவீதம் தான் வருகிறேன். பசுபதி தான் கதாநாயகன்” என்று கூறினார். படத்தை 60 + கோடிக்கு விற்ற போது “இந்தப்படம் அந்த அளவிற்கு வொர்த் இல்லை இவ்வளவு பணம் வாங்காதீர்கள்” என்று கூறினார்.. யாரும் கேட்கவில்லை. “இந்தப்படம் அதிக திரையரங்கில் வெளியிடக்கூடிய படமல்ல” என்றார் அதிக திரையரங்கில் வெளியிட்டார்கள்.

இதில் ரஜினியின் தவறு என்ன? ஆனால் நடந்தது என்ன எல்லோரும் ரஜினியைப் போட்டு நொக்கி எடுத்தார்கள். இதே வேறு ஒருவர் என்றால் எனக்கும் இந்தப் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்று எஸ்கேப் ஆகி இருப்பார்கள் அதோடு அப்போது நடந்த டார்ச்சரில் உயிரோடு இருந்து இருப்பார்களா என்பதே சந்தேகம்.

இதைவிடக் கொடுமையாக நடந்தது திரையரங்க உரிமையாளர்கள் செய்தது. ரஜினி படங்களால் இது வரை ஒவ்வொருவரும் எத்தனை லட்சம்.. ஏன் கோடி கூட லாபம் சம்பாதித்து இருப்பார்கள். அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல் உடனே ரஜினியை படு கேவலமாக பேசி போராட்டம் செய்தார்கள். இவர்கள் பேராசைக்கு ரஜினி பொறுப்பா! ரஜினியா வந்து வாங்குங்க வாங்குங்க என்று கூறினார்.. இவர்களா லாபம் கிடைக்கும் நல்லா காசு பார்க்கலாம் என்று வாங்கினார்கள். இவர்களும் என்ன குசேலன் வெற்றி அடைந்து லாபம் பெற்று இருந்தால் ரஜினிக்கா கொடுத்து இருக்கப்போகிறார்கள்?

இதற்கெல்லாம் ரஜினியைத்தான் தவறு கூற வேண்டும். அப்பவே மற்றவர்களைப் போல லாபம் வந்தால் எனக்கு கொடுக்கிறீர்களா? நான் எதுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று இந்த நன்றியில்லாதவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் விட்டு இருந்தால் இன்று இந்த நட்டி குமார் போன்றவர்கள் வந்து இப்படியெல்லாம் கூறிக்கொண்டிருப்பார்களா?

ஆந்திராவில் 10 லட்சம் மதிப்பு கூட இல்லாத ஒருவருக்கு (இதை நட்டி குமார்தான் கூறினார்) 4 கோடி கொடுத்து வாங்கத் துணிகிறார் என்றால் இவருக்கு எவ்வளவு பேராசை இருக்க முடியும்! இவர் ரஜினி உதவ வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? 10 லட்சம் எங்கே இருக்கிறது 4 கோடி எங்கே இருக்கிறது? நட்டி குமார் நட்ட குமார் ஆனதுக்கு அவரே தான் பொறுப்பு.

முந்தைய பிரச்சனைகளின் அனுபவமோ என்னவோ இந்த முறை ரஜினி தனக்கும் “3″ பட வியாபாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விட்டார். ஆரம்பத்திலேயே கூறியதால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிட்டார் என்றே கூற வேண்டும்.

எனக்கு ஒரு பெரிய சந்தேகம்.. யாரும் எதுவும் கூறாமலேயே இது போல கொடுக்கிறார் கொடுக்கப்போகிறார் என்று பத்திரிக்கைகளில் யார் கிளப்பி விடுவது? ரஜினி என்றில்லை பல திரைத்துறை அல்லாத நபர்களையும் இது போல ஏதாவது கூறி கிளப்பி விடுகிறார்கள் அப்புறம் அதற்கு மறுப்பு விட வேண்டியதாக இருக்கிறது. இதே வேலையா இருப்பாங்க போல இருக்கு. கொஞ்ச நாள் முன்பு கமல் எப்பவோ கொடுத்த பேட்டியை ஒரு பிரபல பத்திரிகை தற்போது கூறியது போல போட்டு பரபரப்பை கிளப்பியது நினைவிருக்கலாம்.

கொசுறு 1

மருத்துவரிடம் வந்த ஒருவர் கேட்டார்: “டாக்டர், எனக்குத் தினமும் தூக்கத்தில் அபூர்வ கனவு ஒன்று வருகிறது. அதில் குரங்குகள் கால்பந்து ஆடுகின்றன. என்ன செய்யலாம்?”

அவரைப் பரிசோதித்து மருந்து எழுதிக் கொடுத்த மருத்துவர், “இதை ஒரு மாதத்துக்கு, தினமும் இரவு படுக்கப் போகும்போது சாப்பிடுங்கள்!” என்றார்.

“நன்றி டாக்டர்… நாளை முதல் சாப்பிட ஆரம்பிக்கலாமா?”

“ஏன்! இன்று என்ன ஆயிற்று?’-வியப்புடன் கேட்டார் மருத்துவர்.

“இன்று குரங்கு கால் பந்தாட்டத்தின் இறுதிப்போட்டி. அதனால்தான்…” என்றார் வந்தவர்!

Source

கொசுறு 2

grey லாபம் நட்டிக்கு நட்டம் ரஜினிக்கு !!தர்ம அடி புகழ் க்றிஸ் கெய்ல் ஒரு ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்தது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதில் அவர் அடித்த பந்து ஒன்று பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு 11 வயது சிறுமியின் மூக்கில் அடித்து அடிபட்டு விட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமியை க்றிஸ் கெய்ல் சென்று பார்த்து நலம் விசாரித்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார் அதோட சிக்ஸ் அடித்தற்காக அவருக்கு கொடுத்த பதக்கத்தையும் அந்த சிறுமிக்கு கொடுத்து இருக்கிறார். க்றிஸ் ம் உயரம், அவர் அடித்த பந்தும் போனது உயரம் அவரது மனதும் உயரம் தான் grey லாபம் நட்டிக்கு நட்டம் ரஜினிக்கு !! ஆளு தான் கருப்பா இருக்காரு மனசு வெள்ளையா இருக்கு grey லாபம் நட்டிக்கு நட்டம் ரஜினிக்கு !!

கொசுறு 3

சிங்கப்பூர் MRT க்கு யாரோ சூனியம் வைத்துட்டாங்க போல ரொம்ப நாளா பிரச்சனையிலே உள்ளது. கொஞ்ச நாள் முன்னாடி தான் ஒரு வாரத்துல ஐந்து முறை பழுது ஏற்பட்டு பெரிய பிரச்சனை ஆனது. இதனால் பலரும் (சிங்கப்பூர் குடிமக்கள்) கொதித்தெழுந்து விட்டார்கள். எப்படி இது போல மோசமான சேவையைத் தரலாம் என்று! உடனே இதை தேசிய பேரிடராக அறிவித்து பல விசாரணைகளை அரசாங்கம் முடுக்கி விட்டது இதனால் ஒரு பெண் உயர் அதிகாரி இதற்கு பொறுப்பேற்று தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார். பிறகு கொஞ்ச நாள் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த வாரம் மறுபடியும் பழுது ஏற்பட்டு ரயில்கள் தாமதம் ஆகி விட்டது. எனக்கு பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

எனக்கு இது ஒரு பெரிய விசயமில்லை. பஞ்சத்துல அடிபட்டவனுக்கு கொடுத்த பிரியாணில கல்லு இருந்தா ஓரமா தூக்கிப்போட்டு விட்டு சாப்பிடுவதில்லையா! அது மாதிரி எனக்கெல்லாம் இவர்கள் தரும் வசதியே மிக அதிகம். இதுல நான் என்ன குறை காண முடியும்? நமக்குத் தான் இப்படி ஆனால் இங்கேயே இருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய விசயம் எனவே அவர்களை தவறாகவும் நினைக்க முடியாது. எனக்கு என்னன்னா சிங்கப்பூர்ல போய் இந்த மாதிரி ஆகுதா! என்ற வருத்தம் தான். நம்ம ஆளுங்க வந்து ஒழுங்கா இருந்த சிங்கப்பூரை காலி செய்துட்டாங்களோ! grey லாபம் நட்டிக்கு நட்டம் ரஜினிக்கு !!

{ 15 comments… read them below or add one }

காயத்ரிநாகா April 20, 2012 at 8:01 AM

அப்ப, 3 படம் தோல்விப் படமா?

Reply

கிரி April 20, 2012 at 8:11 AM

ஆந்திராவில் தோல்விப்படம். தமிழக நிலை என்னவென்று தெரியவில்லை.

Reply

rajesh v April 21, 2012 at 9:10 PM

தமிழ் ல கூட தோல்வி படம்தான். பாத்தவன் பூரா மொக்கைனு சொல்றாங்க. கண்டிப்பா இந்த படம் average list la kooda varadhu. may be first five days bumber opening might have reduced the losses for the exhibitors.

adhukku appuram OK OK yendra sunami vandhutta dhala indha padatha yarum pakka virumbala.

Reply

ManiK April 20, 2012 at 8:26 AM

// பஞ்சத்துல அடிபட்டவனுக்கு கொடுத்த பிரியாணில கல்லு இருந்தா ஓரமா தூக்கிபோட்டு விட்டு சாப்பிடுவதில்லையா! // எடுத்துகாட்டு கலக்கல் கிரி :)

Reply

Prasad April 20, 2012 at 9:16 AM

நண்பர் கிரி அவர்களே உங்கள் வலைபதிவின் தீவிர வாசகன் மற்றும் ரசிகன் நான் நீங்கள் எழுதும் விதம் ஒரு சாமானியனின் தொனியில் இருபது மிகவும் அருமை
ஆனால் உங்களை காண்டக்ட் செய்ய முற்பட்டபோது காண்டக்ட் பக்கதில் error 404 வருகிறது !!!!!!

Reply

எப்பூடி... April 20, 2012 at 1:17 PM

இந்த விடயத்தில் ரஜினியை குறைசொல்லி யாரவது பிரபலங்கள் கண்டன பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்!! காமடி போஸ்ட் படிச்சு ரொம்பநாளாச்சு :-)

நட்டிக்குமாரு – தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க!!!

பஞ்சுக்கே கே பஞ்சு :-) – நல்லவானா இருக்கிறது தப்பில்லை, ரொம்ப நல்லவா இருக்கிறதுதான் பிராப்ளம்; எனக்கென்னமோ அதுதான் சில விடயங்களுக்கு தடைக்கல்லோன்னு தோணுது!! (என்னோட தனிப்பட்ட எண்ணம்)

கெயில் – போலேசுக்கு gun எடுக்கிற கெயில் ரியல் லைப்ல Fun எடுக்கிற கேரக்டர், அவர் டுவிட்டர் பார்த்தால் புரியும், மனிதர் செய்ததில் எனக்கு ஆச்சரியம் இல்லை!!

Reply

ilavarasan April 20, 2012 at 2:43 PM

good article
thankyou

Reply

Mohamed Yasin April 21, 2012 at 11:01 AM

பகிர்வுக்கு நன்றி கிரி!!!

Reply

Babu April 21, 2012 at 4:28 PM

Good news

Reply

rajesh v April 21, 2012 at 9:15 PM

கொசுறு 2 and கொசுறு 3 அருமை :)

Reply

கிரி April 24, 2012 at 7:11 PM

அனைவரின் வருகைக்கும் நன்றி

@பிரசாத் உங்கள் பாராட்டிற்கு நன்றி. இது போல நான் எழுத முயற்சிப்பதில்லை.. எனக்கு எழுதவே அப்படித்தான் வருகிறது.

நீங்கள் கூறிய பிறகு கவனித்தேன்.. சரி செய்து விடுகிறேன். நீங்கள் என்னை contact [at ] giriblog.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

@ஜீவதர்ஷன் ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது :-)

Reply

arun April 24, 2012 at 11:27 PM

கிரி தல,
அழகான பதிவு
தனுஷ் கொஞ்சும் திமுரு வந்த மாதிரி தெரியுது அவரோட interview எல்லாம் பாக்கும் போது…

கோச்சடையன் தான் ரொம்ப பயமா இருக்கு
நல்ல வரும் நு தோணுது

- அருண்

Reply

Rekha April 25, 2012 at 4:10 PM

I think you are taking very much personnel about Rajinikanth.He is just a normal person.

Reply

கிரி April 26, 2012 at 7:22 AM

@அருண் தனுஷுக்கு கொஞ்சமல்ல நிறையாவே

@Rekha I’m not denying that.. he is a normal person only but I like him more than a normal person.

Reply

reader May 6, 2012 at 4:47 PM

பொதுவா நல்ல தமிழ் டப்பிங் படங்கள ஆந்திராவில் வாங்கி வெளியிடுபவர் சுரேஷ் கொண்டேட்டி. குறைஞ்ச வெலைக்கு வாங்கி நிறைஞ்ச லாபம் அடைவார். அவர் கம்முனு இருக்கும்போது இந்தாளு இவ்ளோ வெல குடுத்து வாங்கிட்டு குய்யோ முறையோன்னு கத்தறாரு. நட்டி குமார், ரொம்ப கரெக்டான பேரு!

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed