Mail RSS Feed

இணையம் பற்றிய செய்திகள் [05-04-2012]

grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012]தொழில்நுட்பச் செய்திகளில் சிறு தாமதம் கூட அதை மிகப் பழைய செய்தி ஆக்கி விடும். நிமிடத்திற்கு நிமிடம் புதிதாக ஏதாவது வருகிறது மாறுகிறது. நான் கூற நினைத்த செய்திகள் ஏகப்பட்டது ஆனால் உடனே கூற முடியாததாலே பல செய்திகளை தற்போது கூற முடியாமல் போய் விட்டது காரணம் செய்தி பழையது ஆகி விட்டது. எனவே தற்போதைய!! செய்திகளை இதில் கூறுகிறேன்.

YouTube

இது பழைய செய்தி தான் ஆனாலும் இதன் ரசிகன் என்பதால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். YouTube பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை.. தற்போது தினமும் 4 பில்லியன் பார்வையாளர்களை பெற்றுக்கொண்டு இருக்கிறதாம். ஒரு வருடம் முன்பு 1 பில்லியன் என்றார்கள் தற்போது சம்பந்தமே இல்லாமல் அசுர வளர்ச்சியுடன் நிற்கிறது.

Google Drive

grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012]கூகுள் பற்றிக் கூறாமல் ஒரு இணையப் பதிவை எழுதி விடமுடியுமா என்ன! grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012] நான் முன்பே கூறிய படி விரைவில் கூகுள் டிரைவ் 5 GB இடத்துடன் அடுத்த இரண்டு வாரங்களில் வரப்போவதாக ஒரு வதந்தி உலவுகிறது. வரப்போவது உறுதியாகி விட்டது வரும் தேதியில் வேண்டும் என்றால் தாமதம் இருக்கலாம். நான் ஏற்கனவே Dropbox உடன் திருப்தியாக இருக்கிறேன் இருந்தாலும் தற்போது வரப்போவது தானைத் தலைவன் கூகுள் என்பதால் இதற்கு மாறிவிடுவேன் grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012] நாங்கெல்லாம் கூகுளின் டெர்ரர் ரசிகர்.

நான் கூகுள் டிரைவ் பற்றிய எழுதிய “வருகிறது கூகுள் டிரைவ் – [Cloud Computing]” பதிவு பலரிடம் பாராட்டுதல்களை எனக்குப் பெற்றுத் தந்தது. இதை எழுத ரொம்ப நேரம் கூட நான் செலவழிக்கவில்லை, அதிக நேரம் செலவழித்து கஷ்டப்பட்டு எழுதிய பல பதிவுகள் கண்டுகொள்ளப்படாமலே போய் இருக்கிறது இதுபோல எதிர்பார்க்காத சில இன்ஸ்டன்ட் ஹிட் ம் ஆகிறது. ஆறு வருடமாக எழுதியும் படிப்பவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. Image Credit http://www.talkandroid.com/

Google Play

கூகுள் தனது Android Market பெயரை Google Play என்று மாற்றியது பற்றி Android ரசிகர்கள் பலர் அறிந்து இருப்பீர்கள். இதனுடன் Google Music, Google [E]Books, Google Movies என்று அனைத்தையும் Google Play என்ற ஒரே குடையின் கீழே கொண்டு வந்து விட்டது. இதில் ஒரு சில சேவைகள் சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் எந்தெந்த சேவை நமக்கு அனுமதியோ அது மட்டுமே நமக்குத் தெரியும். எடுத்துக்காட்டாக Google Music இந்தியாவில் தெரியாது இது அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தற்போது வரும் Android அப்டேட்டில் தமிழ் ஃபான்ட் தெரிகிறது. முயற்சித்துப் பார்த்தீர்களா? ஆனால் இது அனைத்து பழைய மொபைல் மாடல்க்கும் கிடையாது. கூகுள் தலையில நல்லா நங்கு நங்குன்னு கொட்ட வேண்டும் போல இருக்கு. பின்ன என்னங்க! iPhone எல்லாம் எப்போதோ தமிழ் ஃபான்ட் கொண்டு வந்த நிலையில் அனைத்து வசதிகளையும் வைத்துக்கொண்டு இப்படி ஜவ்வு இழுப்பு இழுத்தா கொலவெறி ஆகுமா ஆகாதா! நீங்களே ஒரு நியாயத்த சொல்லுங்க! BTW நான் iPhone தான் பயன்படுத்துகிறேன்.

Lady Gaga

இவங்க பேரை தமிழ்ல எழுதினா எந்த மாதிரி வரும்னு உங்களுக்குத் தெரியும் என்பதால் இப்படியே இருக்கட்டும் grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012] facebook ல இவங்க தான் டாப் ரசிகர்களை வைத்து இருந்தாங்க ஆனால் தற்போது ரிஹானா தான் டாப் ல இருக்காங்க. தற்போது ட்விட்டரில் 20 மில்லியன் பின் தொடர்பவர்களைப் பெற்று சாதனை புரிந்து இருக்காங்க. இவங்க கிட்ட ரிஹானா எல்லாம் ட்விட்டர் ல கொஞ்சம் ஓரமாக தான் நிற்க வேண்டும் போல grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012]

அதென்னமோ ட்விட்டர் கூகுள் + facebook என்று அனைத்து இடங்களிலும் டாப் ல இருப்பது பெண்கள் தான். இந்த Lady Gaga பெயரை வைத்து ஒரு பதிவு அடுத்தது வரபோகிறது… Stay tuned! grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012]

Twitter

ட்விட்டர் March 21 தனது ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. facebook, கூகுள் + நீங்க எப்படியோ சண்டை போட்டுக்குங்க.. நாங்க உங்க சங்காத்தமே வேண்டாம்னு தனியா கலக்குறோம்னு தூள் கிளப்பிட்டு இருக்காங்க. ட்விட்டர் ஆச்சர்யம் என்னவென்றால் facebook, Google + இரண்டாலும் பாதிக்கப்படாமல் அல்லது ரொம்ப பாதிக்கப்படாமல் என் வழி தனி வழின்னு போயிட்டு இருக்கு grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012]

Pinterest

grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012]கூகுள் +, facebook எல்லாம் யார் பெரியவன் என்று சண்டை போட்டுக்கொண்டு இருக்க சத்தமே இல்லாம சைக்கிள் கேப்ல இந்த Pinterest தளம் லாரி ஓட்டிட்டு இருக்கு grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012] ஆமாங்க! தற்போதைய நிலைமைக்கு இது தான் இணைய உலகின் வேகமாக வளர்ச்சி பெறும் சமூகத்தளம். இதில் படங்களை பகிர்ந்து கொள்ளலாம் அருகில் உள்ள படம் அங்கே இருந்து எடுத்தது தான்.

அழகான படங்கள் ஏகப்பட்டது உள்ளது குறிப்பாக பெண்கள் விரும்பும் படங்கள் அதிகம். பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெண்கள் தான் இதில் அதிகளவில் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம் அதனால் [தான் அவங்க விருப்பப் படங்கள் அதிகம் இருக்கிறது ;-)] கண்டிப்பாக மாபெரும் வெற்றி தான் grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012] ஏன் கூறுகிறேன் என்றால் facebook ல் ஆண்களை விட பெண்களே அதிகம் அதனால் தான் டாப்ல இருக்கு ஆனால் கூகுள் + ல் ஆண்கள் தான் அதிகம். இதனால் பெண்களை எப்படி கவர்வது என்று கூகுள் மண்டை காய்ந்து போய் இருக்கிறது… பெண்கள் தான் இதிலேயே பழியாக இருக்கிறார்களாம் grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012] ஆண்களுக்கு இரண்டாம் இடம் தான்.

பெண்கள் கிட்ட facebook ஐ விட்டுட்டு கூகுள் + வாங்க என்று அழைத்தால் பெரிய பஞ்சாயத்து ஆகி விடுமாம்.. ஹி ஹி இது மட்டும் நம்ம சொந்த சரக்கு grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012]

Tumblr

grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012]என்னடா இது! கிரி இணையத்தை பற்றி பேசிட்டு இருக்கும் போது திடீர்னு டம்ளர் ஈயம் பித்தளை பேரிச்சம் பழம் னு பேச ஆரம்பிச்சுட்டாருன்னு பார்க்கறீங்களா! இது அந்த டம்ளர் இல்லை.. இது வேற grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012] கூகுள் Blogger, WordPress மாதிரி ஒரு வலைத்தளம் [Blog] தான் இந்த Tumblr. இதுவும் சத்தமில்லாமல் கூகுள் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது. இதன் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது. இதுவரை 20 பில்லியன் பதிவு போடப்பட்டு இருக்கிறதாம். உண்மையாகவே குறுகிய காலத்தில் பெரிய சாதனை.

இதனால் தான் கூகுள் நாளொரு புதுமையும் பொழுதொரு அறிவிப்புமாக Blogger ஐ டிங்கரிங் வேலை செய்து வருகிறது. உண்மையாகக் கூறினால் கூகுள் மற்ற சேவைகளில் காட்டும் ஆர்வத்தை விட Blogger க்கு காட்டும் ஆர்வம் ரொம்பக் குறைவு தான். சமீபமாகத் தான் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. Tumblr சந்தில் சிந்து பாடுவதால் தான் இந்த அதிரடி மாற்றங்கள். அருகில் உள்ள படம் Tumblr வலைத்தளம் ஒன்றில் எடுத்தப் படம்.

Chrome Browser

க்ரோம் உலவி ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் பாப்புலர் உலவியாகி இருக்கிறது March 18 அன்று. இந்த ஒரு நாள் மட்டும் IE ஐ தாண்டிப் போய் விட்டது. இன்னும் கொஞ்சம் மாதத்தில் IE க்கு சங்கூதி விடும் என்று நினைக்கிறேன். வெளியிடப்பட்ட நாளில் இருந்து டாப் கியர்ல க்ரோம் வண்டி பறக்குது grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012] F1 போட்டில போற கார் மாதிரி சும்மா சர்ர்னு போகுது. அது இதுன்னு எதையாவது பண்ணிட்டே இருக்காங்க.

ஏன்யா! உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று கேட்கும் அளவிற்கு எதையாவது செய்துட்டே இருக்காங்க. போகிற போக்கைப் பார்த்தால் இனி நம்ம மனசுல வெப் சைட் பெயரை நினைத்தாலே இதுல பிரவுஸ் ஆகி விடும் போல இருக்கு.. ஹி ஹி ரொம்ப ஓவரா இருக்கோ.. அட! நிஜமாகவே கலக்குறாங்க. இந்தியாவில் க்ரோம் தான் டாப் என்பது உங்களுக்கு தெரியுமா!

Google Vs facebook

grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012]இவங்க சண்டைக்கு நம்ம நாட்டாமை விஜயகுமாரை சொம்போட கூட்டிட்டு வந்து பஞ்சாயத்துப் பண்ணச் சொன்னாத்தான் சரியா வரும் போல grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012] இரண்டு பேரும் மாற்றி மாற்றி எதையாவது நோண்டிட்டே இருக்காங்க. உங்களுக்கு தெரிந்து இருக்கும் facebook comment box பற்றி, தெரியாதவர்கள் என்னுடைய பதிவின் கீழே பார்க்கலாம். இது facebook க்கு பெரிய வெற்றி. கூகுள் சும்மா இருக்குமா! இவர்களும் கூகுள் + உடன் இணைத்து ஒரு comment box தயாரிக்கப் போகிறார்களாம். நமக்குத் தான் எதை பயன்படுத்துவது என்று மண்டை காய்ந்து விடும் போல இருக்கு. கமெண்ட் போடுறவங்க “ங்கொய்யாலே இத்தனை comment box இருந்தால் எதுலையா கமெண்ட் போடுறதுன்னு” கடுப்புல போடாம போய்டப் போறாங்க grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012]

இந்த ரீடர் மின்னஞ்சல்ல பதிவைப் படிக்கிறவங்க இதைப் படிச்சுட்டு… “கிரி! நீங்க இன்னும் நாலு comment box வைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை..ஹி ஹி நாங்க தான் உங்க தளத்தை எட்டியே பார்க்க மாட்டோம்ல” னு மைன்ட் வாய்ஸ்ல நினைப்பதை இந்த கிரி கண்டுபிடிச்சுட்டான் Be Careful.

கொசுறு

Good Friday எப்படியும் வெள்ளிக்கிழமை வருவதால் வருடத்தில் மூன்று நாள் தொடர்ந்து உறுதியாக விடுமுறை கிடைத்து விடுகிறது. வாழ்க Good Friday. சரி! இதே மாதிரி Bad Monday என்று யாராவது வைத்து வருடத்தில் ஒருமுறை விடுமுறை விட்டால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் grey இணையம் பற்றிய செய்திகள் [05 04 2012] திங்கள் என்றாலே செம கடுப்பு ஆகுதுங்க!

{ 14 comments… add one }

 • ManiK April 5, 2012, 8:21 AM

  // Bad Monday என்று யாராவது வைத்து வருடத்தில் ஒருமுறை விடுமுறை விட்டால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் திங்கள் என்றாலே செம கடுப்பு ஆகுதுங்க! // சூப்பர் ஐடியா கிரி :)

 • balasubramanian April 5, 2012, 8:40 AM

  இணையம் பற்றிய செய்திகள் அனைத்துமே அருமை. கொசுறு…. நினைத்தாலே எவ்வளவு சுகமா இருக்கு…..

 • kamalakkannan April 5, 2012, 8:43 AM

  குட் friday ,ஈஸ்ட்டர் எனக்கு நன்கு நாட்கள் விடுமுறை ஐ ஜாலி :)

 • ponmalar April 5, 2012, 9:37 AM

  அனைத்து செய்திகளும் அருமை.

 • நட்புடன் ஜமால் April 5, 2012, 9:39 AM

  I was expecting info about கூகிள் tap :)

 • kalamaruduran April 5, 2012, 9:41 AM

  நல்ல கலவையாக எழுதியுள்ளீர்கள். அருமையான தகவல்.

 • மாணவன் April 5, 2012, 1:05 PM

  வழக்கம்போலவே இணையம் பற்றிய கலக்கலான செய்திகளுடன் , உங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் சுவாரசியமாகவும் எழுதியிருக்கீங்க…சூப்பர்!

 • manoj April 5, 2012, 1:40 PM

  கிரி , உங்களக்கு இதை பத்தி தெரிஞ்சுருக்கும் நு நெனைக்கிறேன் …

  http://www.youtube.com/watch?v=9c6W4CCU9M4

  I know you are fan of google ;)

 • Abarajithan April 6, 2012, 10:00 AM

  கூகுள் பத்தி சொல்லாம இணையப் பதிவு எழுத முடியாதுங்கறத்துக்காக இப்படியா? பதிவு முழுக்க கூகுள்தான்… எப்படியோ.. I love Google.

  //ரீடர் மின்னஞ்சல்ல பதிவைப் படிக்கிறவங்க இதைப் படிச்சுட்டு…//

  எப்படி சார் கண்டுபுடிக்கறீங்க…

 • Abarajithan April 6, 2012, 10:01 AM

  கூகுளின் ஏப்ரல் பூல்கள் பற்றி சொல்லலையே?

 • பாமரன் April 6, 2012, 11:14 AM

  கலக்குறீங்க கிரி. மிக உபயோகமான தகவல்கள்.

 • chinnamalai April 6, 2012, 6:27 PM

  நேற்று பதிவை பேருந்தில் சென்று கொண்டு இருக்கும் போது அரை குறையாக படித்தேன் இன்று அனைத்தையும் நன்றாக படித்து முடித்து விட்டேன் அனைத்தும் அருமை,கூகிள் FACEBOOK ஆலமரத்தின் அடியில் விஜயகுமார் தலைமையில் சோம்பு ஒன்னு கொடுத்து பஞ்சாயத்து நடத்தினால் மட்டும்மே இவர்கள் சண்டை ஒழியும்…

 • காயத்ரிநாகா April 6, 2012, 9:00 PM

  வங்கிகள், சனிக்கிழமை முழு நேரம் இயங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது.என்ன கொடுமை கிரி இது! உண்மையாலுமே எங்களுக்கு இது bad saturday தான்.. இருந்தாலும் மக்கள் நலுனுக்காக நாங்கள் எங்களை அர்ப்பணிப்போம்..ஹி..ஹி ..!!

 • கிரி April 9, 2012, 7:32 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @மனோஜ் பார்த்தேன் :-)

  @Abarajithan நீங்களே கூகுள் செய்தி அதிகம் என்று கூறி விட்டீர்கள்.. இனி நான் இதையும் (April Fool) எழுதினால் ரொம்பவே இருக்குமே :-)

Leave a Comment