பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை காலங்களில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ் திரையுலகில் கட்டுப்பாடு உள்ளது. கட்டுப்பாடு மட்டும் உள்ளது ஆனால் யாரும் பின்பற்றுவது இல்லை தற்போது மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.
பெரிய நடிகர்கள் படம் பண்டிகை காலங்களில் மட்டும் வெளியானால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு மற்ற நாட்களில் வெளியிட பிரச்சனையில்லை திரையரங்கு கிடைக்கும், பெரிய நடிகர்கள் தனது அடுத்த படத்திற்கு பிடித்து வைத்துக்கொள்ள முடியாது என்பதும் இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவது தவிர்க்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்கிறார்கள்.
“பெரிய நடிகர்கள்” என்று அவர்களது சம்பளம் சந்தை மதிப்பு ஆகியவற்றை வைத்து முடிவு செய்கிறார்கள் அதாவது இவர்களே ஒருவரை தேவையில்லாமல் “பெரிய நடிகர்” என்று உருவாக்கம் செய்து சம்பளத்தை ஏற்ற வழிவகை செய்து விடுகிறார்கள். பிறகு பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று அழுகிறார்கள்.
இந்த பெரிய நடிகர்கள் லிஸ்ட்டில் சிம்பு தனுஷ் கூட இருக்கிறார்கள். இதனால் பிப் 3 வெளியாகவிருந்த ஐஸ்வர்யா தனுஷ் படமான “3″ ஐ ஏப்ரல் மாதம் தள்ளி வைத்து விட்டார்கள் தனுஷ் “பெரிய நடிகர்”!!! என்பதால். தற்போது இரண்டு மாதத்திற்கு அவசியமில்லாமல் இந்தப்படம் பணம் முடங்கி இருக்கும். இதனால் ஏற்படும் நஷ்டம் எந்தக்கணக்கில் வரும் என்று தெரியவில்லை. கார்த்தி நடித்த “சகுனி” படமும் இந்த மாதம் வெளியாகி இருக்க வேண்டியது ஏப்ரல் மாதம் சென்று விட்டது இதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. இவரும் “பெரிய நடிகர்” என்பது தான் காரணமாக இணையத்தளங்களில் கூறப்பட்டுள்ளது.
யோவ் என்னங்கய்யா! மூன்று ஹிட் படம் கொடுத்தால் அவரும் பெரிய நடிகரா! அப்ப யாரு தான் சின்ன நடிகர்…விட்டால் குழந்தை நட்சத்திரங்கள் மட்டும் தான் சின்ன நடிகர் என்று கூறுவார்கள் போல இருக்கு. போகிற போக்கைப் பார்த்தால் நம்ம பவர் ஸ்டாரும் நானும் “பெரிய நடிகர்” தான் என்று கோதாவுல குதிக்கப் போகிறார் என்று நினைக்கிறேன். இவர் வேற சிவப்பா சுகாசினி சொன்ன மாதிரி “அழ்கா” இருக்காரு
“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் இரண்டு மணிவண்ணன்களும் ஹை! நான் தான் விஸ்வநாதன் என்று குதிக்கிற மாதிரி இனி எல்லோரும் ஹை! இனி நானும் “பெரிய நடிகர்” என்று கூறுவார்கள் போல இருக்கு.
“நண்பன்” படம் ஓடிக்கொண்டு இருக்கும் போது “3″ மற்றும் “சகுனி” வெளியானால் நண்பன் வசூல் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் SA சந்திரசேகர் செய்த வேலை தான் என்று பலரும் கருதுகிறார்கள். இது போல நிலை மறுபடியும் வரும் அப்போது என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். எப்படி இருந்தாலும் நாளை வெளியாகும் பாண்டிராஜ் “மெரினா” படமும் 10 ம் தேதி வெளியாகப்போகும் “அட்டகத்தி” படமும் எதிர்பார்ப்பில் உள்ள படங்களாக உள்ளது. ஒன்று சென்னை மெரினாவைச் சுற்றி அடுத்தது சென்னை புறநகரைப் பற்றி எடுக்கப்பட்ட படங்களாகும். இவை இல்லாமல் பல முக்கியப் படங்கள் வர உள்ளன.
ஒரு பேச்சுக்கு சூர்யா “மாற்றான்” ஏப்ரல் 14 வெளியிட திட்டமிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் எதோ ஒரு காரணத்தால் படம் வெளியாக தாமதமாகி விடுகிறது இதற்காக இனி அடுத்த பண்டிகை வரை வைத்துக்கொண்டு இருக்க முடியுமா? அந்த இடைப்பட்ட நாட்களுக்கான வட்டி என்ன ஆவது? தயாரிப்பாளருக்கு பணத்தை முடக்கி வைத்தால் நஷ்டம் ஆகாதா? தற்போது எதிர்பாராத விதமாக தயாரிப்பாளர்கள் பெப்சி பிரச்சனை வந்து பல படப்பிடிப்புகள் நின்று விட்டன இது போல காலங்களில் எப்படி திட்டமிட்ட படி ஒருவர் வெளியிட முடியும்.
எந்த நாளில் வெளியிட்டாலும் படம் நன்றாக இருந்தால் தான் ஓடப்போகிறது இல்லை என்றால் பெட்டியில் தான் தூங்கப்போகிறது இதில் பெரிய நடிகர் படம் என்ன சின்ன நடிகர் படம் என்ன?
“மௌனகுரு” படம் வெளியான போது வரவேற்பு இல்லை திரையரங்கு கிடைக்கவில்லை ஆனால் அனைவரும் படம் நன்றாக உள்ளது என்று கூறியதால் பின் மெதுவாக பிக்கப் ஆகி பின் நல்ல வசூல் பார்த்தது. கடந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆபிசில் கூட இருந்தது பலருக்கு ஆச்சர்யமாக இருந்து இருக்கும். எனவே எந்தப்படமும் நன்றாக இருந்தால் தான் ஓடும். “எங்கேயும் எப்போதும்” போன்ற படங்கள் எந்த நாளில் வெளிவந்தாலும் வெற்றிகரமாகத்தான் ஓடி இருக்கும் காரணம் அனைவரும் அறிந்தது.
இவர்களின் இந்த விளங்காத கட்டுப்பாடு நீண்ட நாளைக்கு நிலைக்காது.
கொசுறு 1
கேப்டன் படத்தில் மட்டுமல்ல, தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமல்ல எங்கேயும் ஒரே மாதிரி தான் போல
நேற்று சட்டசபையில் நடந்த வாக்குவாதத்தில் தான் இப்படி நாக்கை கடித்து மிரட்டிக்கொண்டு இருக்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரனும், ஸ்டாலின் அருகில் இருக்கும் துரைமுருகனும் (அவர் தானே!) கொஞ்சம் மிரண்டு தான் பார்க்கிறார்கள். தொடையைத் தட்டி பேசினாரா என்று தெரியவில்லை ஹி ஹி ஹி
கொசுறு 2
facebook ல் நமது நண்பர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதைக் காண facebook அறிமுகப்படுத்தி இருக்கும் வசதி வலது புறத்தில் உள்ள Ticker. இதை தற்போது வேண்டாம் என்று கருதினால் மறைக்க facebook வசதி செய்து இருக்கிறது அதில் உள்ள அம்புக்குறியை அழுத்துவதன் மூலம் மறைக்க முடியும்.
Related posts:

{ 5 comments… read them below or add one }
கொசுறு 1
திரைப்பட ஷூட்டிங்னு நினைத்திருப்பார், பாவம்:)!
இந்த சட்டம் எல்லாம் ஒத்து வராது. பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே நாளில் வெளிவந்தால் வசூல் பிரிந்து விடும் என்று எல்லோருக்கும் தெரியும். SAC அவர்கள் உண்மையிலேயே பெரிய காமெடியன்தான்.
இவரு பேசவே இல்லைன்னு வருத்தப்பட்டோம, பேசாமலேயே இருந்திருக்கலானு தேமுதிக தொண்டர்கள் நினைத்திருப்பார்கள்
சினிமா ஒரு பொழுது போக்கு தொழில் என்பதை தாண்டி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன,
இன்றைய சினிமா பொழுது போக்கை தவிர திரைக்கு பின் மற்ற அனைத்து வகையான தேவைகளையும் தீர்த்து வைக்கும் ஒரு கட்ட பஞ்சாயத்தாகத்தான் நடக்கிறது.
இதில் பல நேரம் நல்ல கதை, படம், படைப்பாளிகள் இத்துறையின் பெரிய பண முதலைகளுக்கு இரையாகி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
எஸ்.ஏ. சந்திரசேகர் மாதிரி ஒரு அப்பா எங்களுக்கும் இருந்த்திருந்தா நாங்களும் next superstar கள்தான்
என்னா ஒரு பிளானிங் :p ஆனாலும் கடையில டீ குடிக்க யாரும் இல்லாதது டீ ஆத்திக்கிட்டிருக்கிற SAC க்கு A for ஆப்பு B for பல்ப்புத்தான்; SAC ஒரு D for டுபாகூர்
3 படத்தில எனக்கு 1% கூட நம்பிக்கை இல்லை; டிரெயிலர் மகா சொதப்பல்; 99% ஐஸ்வர்யாக்கு பதிவுலகில அபிசேகம் நிச்சயமின்னே தோணுது (ரஜினி எதிரிகள் வரிந்து கட்டிகிட்டு காத்திருப்பாங்க
)
சகுனி சந்தானம் கார்த்தி காமடி செமையா இருக்குமின்னு தோணுது (காரணம் ட்ரெயிலர்தான்)
கேப்டன் – என்னா வில்லத்தனம் :p
நல்ல அலசல் ! கொசுறு 1 அசிங்கம்,அவமானம் !, கொசுறு 2 அருமை ! நன்றி சார் !