இது எப்படி சாத்தியமாகிறது?

by கிரி on February 20, 2012

கடந்த சில நாட்களாக facebook மற்றும் கூகுள் + ல் ரவுண்டு கட்டி அடிக்கும் படமாக இது உள்ளது. இந்த நெகடிவ் படத்தின் பெண்ணின் மூக்கின் மீதுள்ள மூன்று புள்ளிகளை 20 அல்லது 30 நொடிகள் பார்க்கவும் பின் வெள்ளையான பகுதியை (உங்கள் கணினி அல்லது சுவர்) பகுதியைப் பார்த்தால் நெகடிவ் ல் உள்ள படம் உங்களுக்கு வண்ணத்தில் தெரியும். நீங்கள் தற்போது பார்த்துக்கொண்டு இருக்கும் இந்தப்பக்கத்திலேயே இடது வலது பக்கம் இதைக் காண முடியும். இது எப்படி சாத்தியமாகிறது என்று புரியவில்லை icon smile இது எப்படி சாத்தியமாகிறது? நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் ஆச்சர்யம் அடைவீர்கள்.

Proccess a negative இது எப்படி சாத்தியமாகிறது?

கொசுறு 1 இது ஒரு பிரபல நடிகை icon smile இது எப்படி சாத்தியமாகிறது?

கொசுறு 2

Flash Mob பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால்… எந்த வித அறிவிப்புமில்லாமல் திடீரென்று குழுவாக பொது இடத்தில் ஆடுவதாகும். இது தற்போது உலகம் முழுவதும் பிரபலம் ஆகி வருகிறது. இது போல குழுவாக இல்லாமல் தனியாக ஒருவர் ஆஸ்திரேலியா கடற்கரையில் ஆடும் ஆட்டமே இது. இதை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய ரசனைக்கு ஏற்ப எண்ணங்கள் தோன்றலாம்… என்னடா இவன்! கிறுக்கன் மாதிரி ஆடிட்டு இருக்கானே! என்று நினைக்கலாம், கலாச்சார சீர்கேடா நினைக்கலாம், மச்சான்! வாழ்க்கையை என்ஜாய் பண்ணுறாண்டா என்று ஸ்போர்ட்டிவாக நினைக்கலாம்,10 நொடி கூட பார்க்க முடியவில்லை என்று கூறலாம். ஒரு விஷயம் ஆனால் பார்வைகள் பல விதம். இதில் நீங்கள் எந்த விதம்? icon smile இது எப்படி சாத்தியமாகிறது? நான் மூன்றாவது ரகம் icon wink இது எப்படி சாத்தியமாகிறது?

கொசுறு 3

sachin இது எப்படி சாத்தியமாகிறது?சச்சின் நிலைமை இந்த அளவிற்கு மோசமாகப் போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இவ்வளவு தூரமா தன்னம்பிக்கையை இழப்பார்! போகிற போக்கைப் பார்த்தால் 100 அடிக்காமலே கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க வேண்டிய நிலை வரும் போல் உள்ளது. எவ்வளவு சாதனைகள் இதற்கு முன்பு செய்து இருந்தாலும் விடைபெறும் போது என்ன நிலை என்றே அனைவராலும் கவனிக்கப்படுகிறது… இதைப்போல சமயங்களில் உறுதியான முடிவை எடுத்து இழந்த தன்னம்பிக்கையை மீட்டு தன்னை மீண்டும் உலகிற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு உள்ளது ஏற்கனவே பல முறை தன்னை நிரூபித்து இருந்தாலும். ஏற்கனவே பலர் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்கள் இது தொடர்ந்தால்… நினைக்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது icon sad இது எப்படி சாத்தியமாகிறது? சச்சின் Back with BANG காக வாங்க.. நாங்களும் எத்தனை நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.

Related posts:

  1. ஆண்கள் பெண்கள் எப்படி நடக்க வேண்டும்!
  2. ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?

{ 6 comments… read them below or add one }

R.Gopi February 20, 2012 at 9:47 AM

1). தீபிகா படுகோனே

௨) வீடியோ பார்த்து விட்டு சொல்கிறேன்

3) சச்சின் போல் அனைவருக்கும் ஒரு BAD பட்ச வரும்… ரிக்கி பாண்டிங்குக்கும் வந்தது… அதிலிருந்து மீண்டு வந்த அவர், இந்தியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரில் ஒரு இரட்டை சதம், ஒரு சதம் உள்ளிட்டவற்றை அடித்து இழந்த ஆட்டத்தை திரும்பப் பெற்றார்… ஆனாலும், ஒரு நாள் போட்டித் தொடரில் சச்சின் போலவே ரன் குவிக்க முடியாமல் திணறுகிறார் (5 போட்டிகளிலுமே ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி உள்ளார்)…

சச்சின் தன் தவறுகளை களைந்து, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால், மீண்டும் அவர் ஃபார்முக்கு வந்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம்… இதே தான் சேவாக்குக்கும்…

Reply

Vinod February 20, 2012 at 10:22 AM

நெகடிவ் படத்தின் விளக்கம் – http://en.wikipedia.org/wiki/Afterimage

Reply

பாமரன் February 20, 2012 at 3:17 PM

சச்சினுடைய பிரச்சினை அவரது சாதனைகளே. இந்தியா தவிர மற்ற நாட்டில் எல்லாம் ஒரு விளையாட்டு வீரரின் output அந்த அணிக்கான பலமாக முதலில் பார்க்கப் படுகிறது, அதன் பின்பு தான் individual record ஆக அதற்க்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. ப்ராட்மான், ரிச்சர்ட்ஸ், வார்னே, லாரா, முரளிதரன் இப்படி எல்லோருடைய சாதனைகளும் அப்படி தான். அவர்கள் தங்கள் சுய சாதனை பற்றிய சிந்தனை இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு சிறப்பாக ஆடிக்கொண்டே இருந்தார்கள், சாதனைகள் by-product ஆக தொடர்ந்துக் கொண்டே இருந்தது. அவர்கள் தங்கள் சாதனைகளுக்கு எந்த குறிப்பிட்ட இலக்கையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. நம்ம கும்ப்ளேவும் அப்படி தான்.

ஆனால் இந்தியாவில் வீரர் களத்தில் இறங்கும் முன்பே அவரது சாதனையை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கிவிடுகிறோம். ஊடகங்கள் வேறு அதற்க்கு நன்றாக உடுக்கை அடிக்கிறார்கள். அணியின் வெற்றி பற்றிய சிந்தனை நமக்கு இரண்டாம் பட்சமாகி விடுகிறது. இது கவாஸ்கர் காலத்தில் ஆரம்பித்தது. இந்த எதிர்பார்ப்பு தான் அந்த விளையாட்டு வீரருக்கு அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது. அதனால் தான் அனுபவம் வாய்ந்த சச்சினுக்கும் அவரது 99 சதங்களை காட்டிலும் 100 ஆவது சதம் மிகுந்த அழுத்தத்தை அளிக்கிறது. கவாஸ்கர் 50 சதம், கபில் தேவ் 500 விக்கட் என்று கடைசி காலத்தில் தங்களுக்கு சுய இலக்கு வைத்து ஆடி இருந்தால், அழுத்தம் ஏற்பட்டு தேய்ந்து போன ரெகார்ட் ஆகி பரிதாபமாக வெளியேறி இருப்பார்கள்.

தன்னுடைய ஸ்கோரை பற்றி எதிர்பார்ப்போ, சிந்தனையோ இல்லாமல், அணியின் ஸ்கோரை உயர்த்துவது பற்றி சிந்தித்து ஆடினாலே போதும், சச்சினின் 100 ஆவது சதம் வெகு அருகில்.

இத்தனை நாள், எத்தனை சாதனைகள், அவருக்கு தெரியாததா?

Reply

எப்பூடி ... February 20, 2012 at 11:02 PM

இதே போல ரஜினியுடைய புகைப்படம் சில காலத்துக்கு முன்னர் FB யில் சுற்றியது……..

சச்சின் – நோ கொமன்ஸ்…

Reply

rajesh v February 21, 2012 at 9:25 PM

நானும் மூன்றாவது ரகம் தான். yevana pathiyum kavalai padama nammalukku yenna pudikudho adhan giri pannanum without disturbing others.

rajesh.v

Reply

கிரி February 29, 2012 at 7:01 PM

அனைவரின் வருகைக்கும் நன்றி

@ராஜேஷ் யாராவது இது பற்றி கூறுவார்கள் என்று பார்த்தேன் நீங்கள் மட்டுமே கூறியுள்ளீர்கள் :-) கோபி எஸ் ஆகிட்டாரு :-)

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed