கோச்சடையான் – முதல் பார்வை

by கிரி on February 5, 2012

பல பிரச்சனைகளை தாண்டி மீண்டு(ம்) வந்துள்ள ரஜினியின் “கோச்சடையான்” வெற்றி பெற ஒரு ரசிகனாக வாழ்த்துக்கள்.

Kochadayaan 1 கோச்சடையான்   முதல் பார்வை

Kochadaiyaan 2 கோச்சடையான்   முதல் பார்வை

Related posts:

  1. கோச்சடையான் ராணா சுல்தான்

{ 12 comments… read them below or add one }

Arun February 5, 2012 at 10:55 PM

செம ஸ்டில்
கலக்கல் லா இருக்குல தல?

- அருண்

Reply

எப்பூடி ... February 5, 2012 at 11:00 PM

பாக்கிறதுக்கு செமையா இருக்கு; as usual Thalavai Rocks; ஆனாலும் ஏதோ சஞ்சலம்……….

Reply

பாமரன் February 7, 2012 at 3:17 PM

கிரி, எப்படி இருக்கீங்க? கொஞ்சம் படிப்புல ஆழ்ந்துட்டதால ரொம்ப வலை மேய முடியல.

கோச்சடையான் ஸ்டில் அசத்தல் தான். ரொம்பவே ரசித்தேன். Credit to the designer.

இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லன்னாலும், ஒரு டவுட்டு? 10 ரூபாய் போட்டு 50 ரூபாய் வசூல் பாக்குறது அதிக லாபமா, இல்லை 80 ரூபாய் போட்டு 100 ரூபாய் வசூல் பாக்குறது அதிக லாபமா?

இல்லே ஒரு பதிவுல ‘நண்பன்’ படத்துக்கு கவுண்ட்டர் குடுக்கறதா நினைச்சுக்கிட்டு ஏதோ, திரைபட வர்த்தக சபையே 80 வருட தமிழ் படங்களின் டாப் 5 படங்களின் அதிகாரபூர்வ வசூல் விவரத்தை வெளியிட்ட மாதிரி ஒரே ‘கரகாட்டமா’ இருக்கு. முதல் ரெண்டு இடமா எந்த படத்தை ‘அவங்க’ ‘போட்டுக்கிட்டு’ இருப்பாங்கன்னு அடுத்த மாசம் பொறக்கப் போற குழந்தைகூட சொல்லும். வேற என்ன எந்திரன் and சிவாஜி. மூணாவது இடம் தசாவதாரம்னு சொல்லி இருக்காங்க. எனக்கு அதுல ஒன்னும் வருத்தம் இல்லை. தசாவதாரம் தோல்வி படம்னு கூட சொல்லிட்டு போகட்டுமே, கவலை இல்லை. 4 ஆவது மங்காத்தாவாம், 5 ஆவது ஏழாம் அறிவாம். விஜயை தலையில தட்டணும்னு நோக்கம், ஆனா போற போக்குல கமலுக்கு கொஞ்சம் ‘வஞ்சப் புகழ்ச்சி’ சொரியல்.

தசாவதாரம் பத்தி அவங்க போட்டு இருக்கறதை முதல்ல படிங்க…..

//இதுகுறித்து கலைப்புலி சேகரனிடம் கேட்டபோது, “வசூல் விவரங்கள் துல்லியமாக எனக்குத் தெரியாது. அந்தப் படத்துக்கான வசூல் குறித்து பெரிதாகச் சொல்கிறார்கள். ஆனால் அது எந்த நாட்டில் என்று தெரியவில்லை. இந்தியாவில் சுமார்தான். இந்தியில் டப் செய்யப்பட்ட போது மிக மோசமாக விமர்சனங்கள் வந்தன. ஆனால் இதற்குப் பிறகு வந்த சூர்யாவின் அயன் படம் பெரிய அளவில் கலெக்ஷன் பார்த்தது…” என்றார்.//

இவங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லை பாருங்க. அயன் படம் தசாவதாரத்தை விட பெரிய அளவுல கலெக்ஷன் பார்த்ததாம் ஆனா தசாவதாரத்துக்கு முன்னாடி அது லிஸ்ட்ல இல்ல. அதை விட காமெடி டாப் 5 லிஸ்ட்ல அந்த படமே இல்ல.

இவங்க சொல்ற மாதிரி தசாவதாரம் வசூலே துல்லியமா தெரியாத போது எந்த அடிப்படையில அது 3 ஆவது இடத்தில் இருக்குறதா போடறாங்க? எவ்வளவு பெரிய டகால்டி பாருங்க.

அவங்க சைட்டுல இதை எல்லாம் கேக்கவே முடியாது. நியாயமான கேள்வியா இருந்தா வெளியிடவே மாட்டாங்க, அப்படியே வெளியிட்டாலும் பின்னூட்டத்துல ‘பக்தர்கள்’ எல்லாம் வந்து குடும்பத்தையே இழுத்து பின்னி எடுப்பாங்க. அதுக்கு மேல பதிவரே வந்து “மரியாதையை காப்பாத்திக்கோங்கன்னு” ஜனநாயக ரீதியல வந்து ‘அன்பா’ மிரட்டுவாரு.

இவங்க அலப்பரைய பார்த்தா, ஏதோ போயஸ் கார்டன்ல ரஜினியோட ஆப்பீஸ்ல இருந்து வர்ற அதிகார பூர்வ ரஜினி வெப்சைட் மாதிரி டெர்ரர் கும்மியா இருக்கும். ரஜினியோ இல்லை அவங்களை சேர்ந்தவங்களோ இவங்களை இது வரைக்கும் சீண்டியதா தெரியலை. ரஜினி புகழ் பாடுரோம்னு இவனுங்க பண்ற காமெடி குழந்தைதனமா இருக்கும். போர் அடிச்சா இவங்க சைட்டுக்கு போய் இவங்க போடுற பதிவு அதை விட அதுக்கு போடுற பின்னூட்டங்களை படிச்சா நல்லா காமெடியா இருக்கும்.

இதை எல்லாம் கேக்கவே மாட்டீங்களா? அட்லீஸ்ட் இந்த மாதிரி பதிவுகளை வச்சு ஒரு காமெடி பதிவாவது போடலாமே?

Reply

Kamesh February 8, 2012 at 5:42 PM

உங்களின் இந்த பதிவை ரசித்தேன் நண்பரே.. நீங்கள் எந்த வலை தளத்தை சொல்றீங்கன்னு புரியுது… ஆனா ஒன்னு கிரி கேக்கணுமே.

காமேஷ்
பின்குறிப்பு… நான் ஒரு பக்க ரஜினி ரசிகன்

Reply

rajesh v February 7, 2012 at 7:13 PM

before chandramukhi fans like me are in vague mood. we doubt whether the film would succeed in box office or not. Fortunately the film was huge hit and broke all previous records.

Now i am in same mood only. i cant surely guess the result of the film. Most of the rajini fans watch rajini movies three to five times.soundary should make us to watch the movie atleast for two times. then only the film will be a mega hit.

rajesh.v

Reply

கிரி February 8, 2012 at 7:19 AM

@அருண் :-)

@ஜீவதர்ஷன் எனக்கும் பயமுண்டு

@பாமரன் வாங்க வாங்க! ரொம்ப நாளா ஆளைக்காணோமே என்று பார்த்தேன் :-) நிறையப் பேர் துவக்கத்தில் ஆர்வமா கமெண்ட் போடுவாங்க கொஞ்ச நாள்ல காணாம போய்டுவாங்க.. சரி நீங்களும் போயிட்டீங்க போல என்று நினைத்தேன். மேலே இருக்காரே அருண் ..அவர் அசராம நாலு வருசமா வராரு :-)

நீங்க கூறிய பத்து ருபாய் விசயத்தில் நானும் இது போல நினைத்ததுண்டு! ரஜினி எதுக்கு இது போல எவ்வளோ செலவு உள்ள படங்களில் நடிக்கணும் சந்திரமுகி மாதிரி பட்ஜெட் படமே போதுமே என்று நினைத்ததுண்டு.

ஆனால் இது எல்லாம் போக இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு இது எனக்கு தாமதமாகத்தான் புரிந்தது.

இது போல் லோ பட்ஜெட் படங்கள் செய்தால் பணம் கிடைக்கும் ஆனால் நம்மால் அடுத்த கட்டத்திற்குப் போக முடியாது.. அதாவது ஒரு எந்திரன் போன்ற படமோ அல்லது புதிய முயற்சியாக 3 D படமோ கிடைக்காது. ரஜினி எந்திரன் படம் நடித்த பிறகு அவருக்கு பல அனுபவங்கள் படத்தின் விரிவாக்கம் அதாவது மற்ற நாடுகளில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் வியாபார எல்லாம் விரிவடைந்து இருக்கிறது.

தற்போது சிவாஜிக்குப் பிறகே தமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை ரஜினி படம் என்ற அளவில் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம் உண்மையாகவே இது தான் நிஜம். இதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதற்கான காரணத்தையும் கூறுங்கள் ஒருவேளை நான் தவறாக கூறி இருந்தால் மாற்றிக்கொள்வேன்.

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் லாபம் மட்டுமே குறிக்கோள் என்றால் லோ பட்ஜெட் படங்களே ரஜினி கமல் போன்றவர்கள் செய்யலாம் தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் இது போல முயற்சிகள் அவசியம் தேவை என்று தான் கூறுவேன். கமலே தற்போது விஸ்வரூபம் படத்தை நூறு கோடிக்கு மேல் செலவு செய்து எடுத்துக்கொண்டு இருக்கிறார் அவருடைய அடுத்த படமும் ஜாக்கி சான் உடன் இணைந்து என்று கூறுகிறார்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் ஜாக்கி சான் கமலுடன் இணைந்து நடித்தால் தமிழ் படம் பற்றி தெரியாதவர்கள் கூட இன்னும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது அல்லவா!

இதில் உள்ள ஒரு பெரிய ரிஸ்க் “முதலீடு” படம் வெற்றி அடைந்து விட்டால் பிரச்சனையில்லை ஆனால் தோல்வி அடைந்து விட்டால் அதன் அடி மரண அடியாக இருக்கும். ரிஸ்க் இல்லாம வாழ்க்கையில்லை :-) ரிஸ்க் எடுக்க பயப்படுகிறவர்கள் எப்போதும் வாழ்வில் முன்னேற முடியாது அதே நிலையில் தான் இருப்பார்கள்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்கள் நான் சிங்கப்பூர் வந்ததே ஒரு பெரிய ரிஸ்க் தான் காரணம் எனக்கு ஏகப்பட்ட கமிட்மென்ட் இருந்தது சிங்கப்பூர் வேலை எனக்கு நிரந்தரம் இல்லை ஒரு வருடம் தான் உறுதி என்ற அளவில் தான் வந்தேன் ஒருவேளை அதற்கு முன்னாடியோ அல்லது ஒருவருடம் கழித்து என்னை வீட்டிற்கு அனுப்பி இருந்தால் என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை எனக்கு அந்த நேரத்தில் வேறு வேலை கிடைக்கவேண்டும் கடன் அடைக்க வேண்டும்…. தற்போது அனைத்தும் சுமூகமாக முடிந்து விட்டது. இதற்கு ஒரே காரணம் நான் எடுத்த ரிஸ்க். இதை எடுக்கவில்லை என்றால் நான் இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் சிரமப்பட்டுக்கொண்டே தான் இருந்து இருப்பேன் அதுவும் முடிவு தெரியாமல்.

எனவே அதிக பட்ஜெட்டில் எடுப்பதில் பல நன்மைகள் உண்டு அந்த பட்ஜெட் அதற்கு வொர்த் ஆக இருக்க வேண்டும்..மொக்கை கதைக்கு நூறு கோடி செலவழித்து நான் முயற்சித்தேன் என்று கூறினால் அது அவர்களுடைய தவறு.

இவ்வளவு கூறினாலும் எனக்கு கோச்சடையான் மீது முழு நம்பிக்கை இல்லை. வெற்றி பெற்றால் சந்தோசம் என்ற அளவிலே தான் இருக்கிறேன்.. மக்கள் ரசிக்கவில்லை என்றால் என்ன சொல்வது.. அடுத்த ஒன்றை முயற்சிக்க வேண்டியது தான். நஷ்டம் ஏற்பட்டால் ரஜினி ஓரளவு தயாரிப்பாளரை காப்பாற்றுவார் என்று நம்பிக்கை உண்டு.

மற்றபடி நீங்க கூறிய மற்ற “நண்பன்” கருத்துகளுக்கு நோ கமெண்ட்ஸ் :-)

என்னுடைய பதிவை விட பின்னூட்டம் தான் பெரிதாக இருக்கிறது :-D

@ராஜேஷ் ரசிகர்கள் மட்டுமே பார்த்தாலும் படம் ஓடாது.. பொதுமக்களும் அவசியம். பாபாவை மனதில் நிறுத்துங்கள் ;-) நேரம் கிடைத்தால் என்னுடைய ரஜினி பட FDFS பதிவை படித்துப் பாருங்கள் அதில் சந்திரமுகி பற்றி நீங்கள் நினைத்தை ஒட்டி எழுதி இருப்பேன்.

Reply

பாமரன் February 8, 2012 at 9:31 AM

கிரி, தமிழ் படங்கள் உலக அளவில் சென்று சேர்ந்ததற்கு ரஜினி ஒரு மிகப் பெரிய காரணம் என்பதில் எனக்கு துளியும் மாற்றுக் கருத்து இல்லை. அதே போல் ரஜினி, கமலின் பெரிய பட்ஜெட் படத்திற்கான பின் புலத்தை பற்றிய உங்கள் கருத்தும் எனக்கு உடன்பாடே. நிறுவனங்கள் கூட அப்படி தான் வளர்கின்றன. ரிஸ்க் தான் வளர்ச்சிக்கான முதல் படி.

நான் சொல்ல வந்தது, ரஜினி தான் டாப்பு, மற்றவர்களுக்கு ஆப்பு என்னும் சுக சொரியலுக்காக, “80 வருட திரையுலக வரலாறு, வசூல் கணக்கு, டாப் 5 லிஸ்ட், திரையுலகை சேர்ந்தவர்களின் கருத்து” என்றெல்லாம் ஜல்லி அடித்து, முரண்பாடுகள், பொய்கள், புரிந்துக் கொள்ளப்படாத ROI (Return on Investment) கணக்குகள் இவற்றை எல்லாம் போட்டு சிலர் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ போல தங்களை காட்டிக் கொள்வது தான் சகிக்க முடியவில்லை.

Reply

rajesh v February 8, 2012 at 6:32 PM

@ராஜேஷ் ரசிகர்கள் மட்டுமே பார்த்தாலும் படம் ஓடாது.. பொதுமக்களும் அவசியம். பாபாவை மனதில் நிறுத்துங்கள்

———————————————————————————————————————
Mr. giri,

Fans stopped watching baba after one time. second time many fans rushed to the theater not to see the movie but to sell the tickets reserved by them already. ladies didnt like the rajinis look in the movie. that is the huge setback for that movie. so ladies also didnt go to watch the movie (almost all the married ladies are rajini fans. for ex-my mom, ladies staff in my office)

in my view tamil people consist of nearly 70 percent of rajini fans. so i didnt differentiate tamil people and rajini fans. Rajini fans = tamilians and tamilians = rajini fans. thats why i told soundarya should make us to watch the movie atleast two times.

rajesh.v

—————————————————————————————————-
ungal FDFS padhivai padithen. i had already read that. Yethana thadavai padithalum salikadha super post.

Reply

RajniRasigan February 10, 2012 at 8:09 AM

@பாமரன்
நீங்கள் கூறும் கணக்கு 10 ரூபாய் 50 ரூபாய்க்கு வேண்டுமென்றால் சரியாக தோன்றலாம். அனால் அதை கோடிகளில் சொல்லி பாருங்கள் உண்மைபுரியும். 5000 போட்டு 50000 எடுப்பவன் 10 மடங்கு லாபம் பார்க்கிறான் என்பது உண்மைதான். அதற்காக 1 கோடி போட்டு 2 கோடி எடுப்பவன் குறைந்த லாபம்தான் பார்க்கிறான் என்று சொல்ல முடியாது.

நீங்கள் என்னதான் சொன்னாலும் வசூலில் முதலில் இருப்பவர் ரஜினிதான் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

இது நீங்கள் சொன்ன அந்த 10 ரூபாய் கணக்குக்காகதானே தவிர நீங்கள் சொன்ன அந்த வெப் சைட்டிற்கு வக்காலத்து வாங்க அல்ல. சொல்லபோனால் எனக்கும் அந்த வலைதளத்தின் மீது ஒரு நல்ல அபிப்ராயம் இல்லை தீவிர ரஜினி ரசிகனாகவே இருந்தாலும்.

Reply

RajniRasigan February 10, 2012 at 8:14 AM

and வேறொரு வலைதளத்தை பற்றி மற்றவர் தளத்தில் விவாதிப்பது நாகரிகமனதாக இல்லை (என் பார்வையில்). நீங்கள் விவாதிக்க விரும்பினால் உங்களுடைய தளத்திலோ அல்லது உங்களுடைய சமூக வலைதளங்களில் விவாதிக்கலாம்.

Reply

rajesh v February 10, 2012 at 8:55 AM

yes rajni rasigan,

it may cause embarrassing situation for the owner of this blog.

rajesh.v

Reply

பாமரன் February 10, 2012 at 10:10 AM

@ ரஜினிரசிகன்

நான் சொல்ல வந்ததை நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டு இருக்கிறீர்கள். நான் சொன்ன பத்து ருபாய் கணக்கை மீண்டும் படித்து பார்க்கவும். என் உதாரணத்தின்படி நான் அதிக லாபம் என்று குறிப்பிட்டு இருப்பது 40 ரூபாய் நிகர லாபம் பெரிதா அல்லது 20 ரூபாய் நிகர லாபம் பெரிதா என்பது தான்.

ரஜினி தான் வசூலில் முதலிடம் என்பதை நான் மறுக்கவே இல்லையே. நிதர்சனம் அது தான் என்னும்போது வீம்புக்காக அதை மறுப்பது பைத்தியக்காரத்தனம்.

அயன் மற்றும் தசாவதாரத்தை ஒப்பிட்டு அவர்கள் வெளியிட்ட வசூல் கருத்து முரண்பாடு தானே? அதை தான் நான் குறிப்பிட்டேன்.

நீங்கள் சொல்வது போல் மற்றவர்களின் வலை தளத்தை பற்றி வேறு இடத்தில் விமர்சிப்பது நாகரீகம் இல்லை தான். ஆனால் நாகரீகம் என்றால் என்ன விலை என்பது போல், ரஜினியை போற்றுகிறோம் என்ற பெயரில் மற்ற நடிகர்களை வெளிப்படையாகவே மட்டம் தட்டும் கேவலமான விஷயத்தை அந்த வலை தளம் செய்யும் போது, எங்காவது ஒரு வெளியில் அதை இடித்துரைத்தே ஆக வேண்டும். நாகரீகம் என்பது தனிப்பட்ட நபர் சார்ந்தது மட்டும் அல்லவே.

நான் இப்படி சொல்வதால் கமலுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்காதீர்கள். கமல் மீதும் அவர் படங்களை சார்ந்து எனக்கு நிறைய வருத்தங்கள் உண்டு (அவர் தனிப்பட்ட வாழ்க்கையின் மீதல்ல).

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed