கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29-02-12] கடைசி நாள்

by கிரி on February 28, 2012

Google கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள்மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இருப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகுள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங்களுக்கு தகவலை அறிவித்து இருக்கும் நீங்களும் வழக்கம் போல ஓகே கொடுத்து போய் இருப்பீர்கள் icon smile கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள் நாம என்னைக்கு இதை எல்லாம் படித்து இருக்கிறோம். கணக்கு துவங்கும் போது ஒரு பெரிய Agreement வரும் 99 % மக்கள் அதை படிக்காமலே Accept செய்து விடுவோம். இது போல ஒன்றில் தான் ஒரு சிலர் நமக்கு வேட்டு வைத்து விடுகிறார்கள்.

நீங்கள் கூகுள் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் சமீபத்தில் நீங்கள் நிச்சயம் இதை கவனிக்காமல் இருந்து இருக்க முடியாது. தன்னுடைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது அதாவது தன்னுடைய சேவைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரப்போவதாகவும் இதை மார்ச் 1 முதல் செயல்படுத்தப்போவதாகவும் கூகுள் அறிவித்து இருந்தது.

இதில் ஒரு முக்கியமான விஷயம் Google Web History ஆகும். இது தான் தற்போது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Google Web History என்றால் என்ன?

நீங்கள் எந்த உலவியை (Browser) பயன்படுத்தினாலும் நீங்கள் எந்தெந்த தளங்கள் சென்றீர்கள் என்பது பற்றிய தகவல்கள் உலவியின் History யில் சேமிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் வைத்து இருக்கும் settings ஐ பொறுத்து. யாராவது விஷயம் தெரிந்தவர் என்றால் இதை நோண்டினால் நீங்கள் எந்தெந்த தளம் சென்றீர்கள் இணையத்தில் என்னென்ன பார்த்தீர்கள் என்று எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.

இதையே கூகுள் எப்படி செய்கிறது என்றால்…கூகுள் சேவைகளில் நாம் என்னென்ன தளம் போகிறோம் எதை தேடுகிறோம் நம்முடைய விருப்பங்கள் என்னென்ன என்பது அனைத்தையும் சேமித்துக்கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் தளத்தில் உங்கள் பயனர் கணக்கு கொடுத்து உள்ளே சென்று இருக்கும் போது கூகுள் தேடுதலில் என்னென்ன செய்கிறீர்களோ அனைத்தும் சேமிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். நீங்கள் How to remove the google web history என்று தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் பின் அந்தப் பக்கத்தை மூடி விட்டு புதிய பக்கத்தில் திரும்ப இதே வரியை தட்டச்சு செய்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே இதை தட்டச்சு செய்து இருந்ததால் அதுவே ஏற்கனவே நீங்கள் தட்டச்சு செய்த பழைய வரியைக் காட்டும். இது போல பல சேவைகளில் நீங்கள் செய்தது எல்லாம் சேமிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்.

இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஏதாவது விவகாரமா தேடி இருந்தால் அதுவும் இதில் இருக்கும். மொத்தத்தில் உங்கள் ஜாதகமே இதைப் பார்த்தால் தெரியும். நாளை உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து ஆட்டையப்போட்டு இதில் போய்ப் பார்த்தால் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி விடும். எதை எதை தேடினீர்கள் என்று புட்டு புட்டு வைத்து விடும். கூகுளும் உங்கள் தேடுதலை அடிப்படையாக வைத்து செய்திகளை விளம்பரங்களை அனுப்பிக்கொண்டு இருக்கும்.

இதை எல்லாம் நீக்க நாளையே (29 Feb 2012) கடைசி நாள் அதனால் மறக்காமல் ஒத்திப்போடாமல் உடனே செய்து விடுங்கள். மார்ச் 1 க்கு பிறகு முடியாது. கூகுள் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து விடும்.

இதை எப்படி நீக்குவது?

https://www.google.com/history/ தளம் செல்லுங்கள் உங்கள் பயனர் கணக்கு கடவுச்சொல்லை (Password) கொடுத்தவுடன் பின்வரும் படம் போல வரும் இதில் நீங்கள் “Remove all web history” என்பதை க்ளிக் செய்தால் அனைத்து History யும் நீக்கி விடும் அதோடு இனி இது போல சேமிக்காது Pause செய்து விடும் உங்களுக்கு தேவை என்றால் On செய்து கொள்ளலாம் ஆனால் On (Resume) செய்ய வேண்டாம். கூகுள் தொடர்ந்து உங்கள் தகவல்களை எடுக்க முடியும் ஆனால் அனானிமஸ் ஆகத்தான் எடுக்க முடியும் உங்களையுடைய தகவல்கள் என்று கூற முடியாது.

Web History கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள்

இதை செய்ய 2 நிமிடம் கூட ஆகாது வழக்கம் போல சோம்பேறித்தனப்பட்டு மறந்து விடாதீர்கள். நீங்கள் பல்வேறு கூகுள் கணக்குகளை வைத்து இருந்தால் அனைத்திற்கும் இது போல தனித்தனியாக செய்ய வேண்டும்.

நாளை தான் கூறலாம் என்று நினைத்தேன் இது பற்றி தெரியாதவர்கள் கடைசி நாளில் கவனிக்காமல் இருந்து விட வாய்ப்புண்டு என்பதால் இன்றே கூறி விட்டேன். என்னுடைய தளத்தை படிப்பவர்களுக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி icon smile கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள் உங்கள் நண்பர்களிடமும் இந்த செய்தி பற்றி தெரிவித்து அவர்களையும் எச்சரிக்கை செய்து விடவும்.

ஆங்கிலத்தளங்கள் இது பற்றி அதிகம் எழுதிக்கொண்டு இருக்கின்றன தமிழில் ஏன் முக்கியத்தளங்கள் இது பற்றி அமைதி காக்கின்றன என்று புரியவில்லை.

கொசுறு

iPhone 5 கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள்உலகளவில் ஸ்மார்ட் ஃபோனில் சக்கைப் போடு போடும் iPhone தனது அடுத்த மாடலை வெளியிடப்போகிறது. புதிய மாடல் வரப்போகிறது என்றால் அது பற்றிய செய்திகள் இணையத்தில் இறக்கை கட்டி பறக்கும் அதிலும் iPhone க்கு சொல்லவே தேவையில்லை. கடந்த முறை iPhone 5 புதிய வடிவமைப்புடன் வரப்போகிறது என்று ஆவலுடன் இருந்த அனைவருக்கும் முந்தைய மாடலான iPhone 4 போல வடிவமைப்புடன் iPhone 4S என்று வெளியிட்டதால் அனைவரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர் இருந்தாலும் இதுவும் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது. தற்போது iPhone 5 விரைவில் வரப்போகிறது அது பற்றிய கற்பனைப் படமாக இணையத்தில் உலவும் படமே இது. Image Credit – Mashable.com

Related posts:

  1. அசத்தலான கூகுள் + முன்னோட்டம்
  2. கூகுள் ப்ளஸ் ஃபேன் பேஜ்
  3. வருகிறது கூகுள் டிரைவ் – [Cloud Computing]
  4. அசத்தலான கூகுள் க்ரோம் இந்திய விளம்பரம்
  5. இணையம் பற்றிய செய்திகள் [09-01-2012]

{ 42 comments… read them below or add one }

Arasu Selvam February 28, 2012 at 7:34 AM

Usefull article sir… Good job…. I can’t believe iPhone 5 new model…. That is extreme rumor…

Reply

கோவி.கண்ணன் February 28, 2012 at 7:59 AM

Your search history is currently empty.
:)

Reply

Abarajithan February 28, 2012 at 8:09 AM

ஆனால் சார், அவ்வாறு டெலிட் செய்துவிட்டால், google suggestions போன்ற சில சேவைகளை பயன்படுத்த முடியாமல் போய்விடுமே?

அதைவிட, தேவையான நேரம் மாத்திரம், (சேமிக்கப்படக்கூடாத தேடல்களைச் செய்யும்போது) வெப் ஹிஸ்டரி-யை pause செய்து வைக்கலாமே..

Reply

கிரி February 28, 2012 at 9:57 AM

Abarajithan நீங்கள் கூறுவது சரி தான் ஆனால் ஒவ்வொருமுறையும் இது போல மாற்றிக்கொண்டு இருப்பது சிரமம். நாம் அவசரமாக ஏதாவது தேடும் நேரத்தில் இதை செய்ய நமக்கு பொறுமை இருக்காது.

Reply

Abarajithan February 28, 2012 at 9:22 PM

அப்படிப்பட்ட நேரத்துல நான் incognito window யூஸ் பண்றேன். வெப் ஹிஸ்டரி ஒரு டைரி போல எனக்கு உபயோகமா இருக்கு. எந்தெந்த நாட்கள்ல அதிகம் இணையம் பாவித்தேன், தேடல் முடிவுகள்ள நான் முன்னமே பார்த்துவிட்ட பக்கங்கள் என்னென்ன போன்ற பல வசதிகள் இருக்கு. எப்படியோ நான் டெலிட் பண்ணல…

எப்படியோ தகவலுக்கும் விழிப்புணர்விற்கும் நன்றி சார்.

-Abarajithan

Reply

sathees February 28, 2012 at 8:22 AM

இன்னும் சில மாதங்களில் கல்யாணம்.. ரெம்ப உபயோகமான தகவல்.
ரெம்ப தேங்க்ஸ் பாஸ்..

Reply

balasubramanian February 28, 2012 at 8:47 AM

மிக்க நன்றி நண்பரே… தக்க நேரத்தில் சரியான தகவல் கொடுத்திருக்கிறீர்கள். செய்து விட்டேன்.

Reply

முரளிகண்ணன் February 28, 2012 at 9:33 AM

மிக உபயோகமாக இருந்தது கிரி. நன்றி.

Reply

ராஜ் February 28, 2012 at 9:42 AM

நன்றி அண்ணே :)

Reply

Muthuselvan February 28, 2012 at 9:42 AM

நன்றி,, நன்றி

Reply

Azhagesan February 28, 2012 at 9:51 AM

ஹாய் கிரி, தயவு செய்து இது ஏன் என்று விளக்கவும். Pause செய்வது நல்லது தானே?

//அதோடு இனி இது போல சேமிக்காது Pause செய்து விடும் உங்களுக்கு தேவை என்றால் On செய்து கொள்ளலாம் ஆனால் செய்ய வேண்டாம்//

- அழகேசன்.

Reply

கிரி February 28, 2012 at 9:54 AM

நீங்க மாற்றி புரிந்து கொண்டீர்களா! :-) நான் இன்னும் தெளிவாக இதில் மாற்றி விடுகிறேன்..

நான் கூறியது ON செய்ய வேண்டாம் என்று தான்.

Reply

Ranjith February 28, 2012 at 9:55 AM

ரொம்ப ரொம்ப நன்றி சார் , தக்க நேரத்தில் பதிவு இட்டு எங்களை எல்லாம் காப்பற்றி விட்டிர்கள் ,,,

Reply

R.Gopi February 28, 2012 at 10:14 AM

கிரி

அருமையான போஸ்ட் தல….

உங்கள் பதிவை படித்து உடனே நீங்கள் சொன்னதை செய்து விட்டேன்….

Reply

Vino February 28, 2012 at 10:24 AM

ஆஹா அருமையான சேவை. அதான் நீங்க ரெம்ப நல்ல்ல்லவர்ர்னு பேசிக்கிறாய்ங்களா!!

Reply

எப்பூடி ... February 28, 2012 at 10:34 AM

Done Done :-)

Reply

Muthukumar February 28, 2012 at 10:42 AM

நீங்கள் கூறியது போல, நான் இந்த மாதிரி அக்ரிமென்ட், டெக்னிக்கல் மாற்றம் சம்பந்தப்பட்ட மெயில்களை எல்லாம் படிப்பது கூட கிடையாது… :)

மிக்க நன்றி கிரி. வெப் ஹிஸ்டரியை pause செய்து விட்டேன். :)

Reply

ராமலக்ஷ்மி February 28, 2012 at 10:46 AM

ஆயிற்று:)! நன்றி கிரி.

Reply

dinesh February 28, 2012 at 11:32 AM

nan https://www.google.com/history/ page’ah open panna turn web history on nu varuthu. wat to do

Reply

MurugesanSubbiah February 28, 2012 at 5:50 PM

“நோ தேங்க்ஸ்” நு கிளிக் பண்ணிடுங்க ..

Reply

கிரி February 28, 2012 at 6:18 PM

முருகேசன் சுப்பையா கூறியபடி No Thanks க்ளிக் செய்து விடுங்கள்.

Reply

akbar February 28, 2012 at 12:00 PM

நல்ல பகிர்வு . நன்றி நண்பரே !

Reply

இந்திரா February 28, 2012 at 12:34 PM

பண்ணிட்டேன். உபயோகமான தகவலுக்கு நன்றிகள்..

Reply

Rajkumar February 28, 2012 at 12:45 PM

மிக்க நன்றி.. எதேச்சையாக என் கருத்தை பார்க்கவந்தேன் (3d) மிகவும் பயனுள்ள தகவல்.

Reply

rajeswaran February 28, 2012 at 4:24 PM

தேங்க்ஸ் பிரதர், இதைபோன்ற நல்ல தகவல்களை அடிக்கடி எழுதுங்கள். வாழ்க வளமுடன்.

Reply

தனபாலன் February 28, 2012 at 6:38 PM

தக்க நேரத்தில் சரியான தகவல் ! மிக்க நன்றி. !

Reply

காயத்ரிநாகா February 28, 2012 at 7:00 PM

தேங்க்ஸ் கிரி..

Reply

நட்புடன் ஜமால் February 28, 2012 at 7:02 PM

வழமை போல், நல்ல உபயோகத்தகவல், விவகாரமா ஒன்றும் தேடுவதில்லை, இருப்பினும் நமது பிரைவசியை நாம் ஏன் விட்டுகொடுப்பானே!

நன்றி கிரி.

Reply

varun February 28, 2012 at 8:29 PM

என்னுடைய வெப் ஹிஸ்டரி எப்போவுமே “ஆ ப்” ஆகித்தான் இருந்து இருக்கு. இப்போ ஆண் பண்ணவா நு கேக்குது . நோ தேங்க்ஸ் சொல்லியாச்சு ! :)

Reply

prem February 28, 2012 at 9:34 PM

நல்ல உபயோகமான தகவல்

Reply

puduvaisiva February 29, 2012 at 1:04 AM

நல்ல தகவல் நன்றி கிரி

Reply

vikki February 29, 2012 at 6:53 AM

நன்றி மாப்ள!

Reply

senthilnathan February 29, 2012 at 9:50 AM

நல்ல தகவல்…………

Reply

priyamudan prabu February 29, 2012 at 10:44 AM

Your search history is currently empty.

Reply

Poornima February 29, 2012 at 12:33 PM

உபயோகமான தகவல். நன்றி

Reply

KALAMARUDURAN February 29, 2012 at 1:47 PM

உங்கள் பதிவை இங்கே http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post_29.ஹ்த்ம்ல் படித்தேன் உங்களுக்கு ஒரு லிங்க் கூட குடுக்கவில்லை நீங்கள் பார்த்தீர்களா?
நான் உங்கள் பதிவை தொடர்ந்து படிக்கின்றேன் ஆனா இதுவரை பின்னூட்டம் போட்டது இல்லை

Reply

கிரி February 29, 2012 at 7:52 PM

Kalamaruduran இது போல பதிவுகளை எடுத்து போடறாங்க.. நான் எதுவும் சொல்வதில். இவர் இறுதியில் மின்னஞ்சலில் வந்தது என்று கூறி இருக்கிறார் அதனால் என்னுடைய முகவரி தெரியாமல் இருக்கலாம். என்னுடைய தளத்தை மின்னஞ்சலில் தொடர்பவர்கள் யாராவது அனுப்பி இருக்கலாம்.

Reply

திருவாரூர் சரவணன் February 29, 2012 at 4:19 PM

என்னுடைய ஒரு ID யில் ரிமூவ் ஆல் ஹிஸ்ட் ரின்னு கேட்டுச்சு. செஞ்சாச்சு.

ஆனா இன்னொரு IDயில் இது வரை வெப் ஹிஸ்ட் ரி ஆன் பண்ணாம இருந்துருக்கு. இதுக்கு என்ன காரணமா இருக்கும் சார்?

Reply

கிரி February 29, 2012 at 7:49 PM

சரவணன் பலருக்கு இது போல உள்ளது.. காரணம் தெரியவில்லை ஆனால் பிரச்சனை எதுவும் இல்லை எனவே கவலைப்பட வேண்டாம்.

Reply

jp March 1, 2012 at 12:33 PM

Don’t post false information. Google is going to use ur history to improve your search and to refine the search for future use.

Reply

Arun March 2, 2012 at 3:22 AM

நன்றி தல
நீக்கியாச்சு

- அருண்

Reply

Madhan March 5, 2012 at 2:05 AM

குட் போஸ்ட்…தேங்க்ஸ்….

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed