3D படங்கள் எனக்கு அறிமுகம் ஆனது ஆனந்த விகடனில் தான். 90 களில் என்று நினைக்கிறேன் அப்போது பின் அட்டைப் படத்தில் வாராவாரம் 3D படம் வெளியிடுவார்கள். இதற்காகவே இவர்களின் விற்பனை வெகுவாக அதிகரித்தது. புத்தகத்தை வாங்கி அவனவன் பல கோணத்தில் பார்த்து சாலையிலேயே காமெடி பண்ணிட்டு இருப்பானுக! பார்க்கவே செம சிரிப்பாக இருக்கும்.
எனக்கும் இதில் படத்தைக் கண்டு பிடிக்க ஒரு நாளே ஆனது. கண்ணை அப்படி வைத்து இப்படி வைத்து கண் வலி வந்தது தான் மிச்சம். அப்புறம் எப்படியோ அந்த டெக்னிக்கை கண்டு பிடித்து விட்டேன்
இதில் என்ன சிறப்பு என்றால் ஒரு முறை இதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிந்து கொண்டால் அதன் பிறகு எந்த படமாக இருந்தாலும் வெகு சுலபமாக ஐந்து நொடியில் கண்டறிந்து விடலாம்.
இதை எல்லாம் பாதுகாப்பாக எடுத்து வைத்து இருந்தேன் பின் வழக்கம் போல எங்கே வைத்தேன் என்று மறந்து விட்டேன். தற்போது இவை இருக்கிறதா என்றும் தெரியவில்லை
விகடன் திரும்ப ஒருமுறை இதை ஒரு ரவுண்டு விடலாம்.. பொக்கிஷம் மாதிரி. மக்களும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இந்தப்படத்தை பார்த்தவுடன் என்ன என்று கண்டுபிடித்து விட்டேன். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இதில் உள்ளதை காணும் போது மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கும். அட! எப்படி எல்லாம் வடிவமைக்கறாங்க என்று ஆச்சர்யமாக இருக்கும். எங்கள் வீட்டில் ஒரு அழகான 3D படத்தை சுவரில் ஃபிரேம் செய்து மாட்டி வைக்க வேண்டும் என்று விருப்பம்… வீட்டுக்கு வருகிறவர்களை எல்லாம் இதைக் கண்டுபிடிக்கக் கூறி திணறடிக்க வைக்க வேண்டும் என்று ஒரு அல்ப ஆசை
இந்தப்படத்தில் என்ன உள்ளது என்பதற்கு ஒரு சிறு க்ளு நம் முகத்தில் உள்ள ஒரு உறுப்பு
Image Credit : Singapore Pizza Hut
கொசுறு 1
சச்சின் நிலைமை இப்படி பரிதாபமாக போய் விட்டதே! பான்ட்டிங்கை வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பினார்கள் ஆளாளுக்கு சச்சினை நொங்கு எடுக்கிறார்கள். மிக நெருக்கடியான நிலையில் இருக்கிறார். இதை இவரே தேடிக்கொண்டது தான் அதனால் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
கொசுறு 2
அநியாங்க அநியாயம்! இரண்டு வாரமா ஒரு படத்துக்கும் போகலை
தோனி மெரினா காதலில் சொதப்புவது எப்படி? னு ஒரு படமும் பார்க்க முடியவில்லை. இந்த வாரம் ஏதாவது ஒரு படமாவது பார்த்துட வேண்டியது தான். மூன்றுமே பார்க்கும் பட்டியலில் தான் உள்ளது ஆனால் இங்க (சிங்கப்பூர்) எந்த படம் ஓடுகிறது என்று தெரியவில்லை.
கொசுறு 3
எங்க வீட்டுல சன் டிவி மட்டும் தான் இருக்கு அதனால் திருமதி செல்வம், தங்கம், தென்றல் மற்றும் செல்லமே போன்ற காலத்தால் அழிக்க முடியாத சீரியல் காவியங்களை பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளேன். திருமதி செல்வம் இயக்குனருக்கு என்ன பிரச்சனையோ நல்லவங்களை எல்லாம் சம்பந்தமே இல்லாமல் வில்லனாக்கிட்டாரு மவனே! இதை நாங்க இன்னும் நாலு வருசத்துக்கு இழுக்கப் போகிறோம் அதனால அப்படி எல்லாம் உங்களை அவ்வளவு சீக்கிரம் தப்பிக்க விட மாட்டோம் சாவுங்கடா! என்று படுத்தி எடுத்துட்டு இருக்காரு.
தங்கம் இரண்டு கெட்டான், தென்றல் யப்பா சாமி! உலகத்துலேயே அந்தப் பெண்ணுக்குத் தான் பிரச்சனை போல (பேரு மறந்துட்டேன்) காட்டிட்டு இருந்தாங்க.. எங்க பக்கத்து வீட்டு பாட்டியே இதைப் பார்த்து டென்ஷன் ஆகிட்டாங்கன்னா பார்த்துக்குங்க
இயக்குனர் மட்டும் இந்தப் பக்கம் வந்தா அவருக்கு சங்கு தான். இன்னொருத்தியோட புருஷனை கரக்ட் பண்ணுறது னு இதுல தான் அப்படின்னா செல்லமே ல ஒட்டு மொத்த சீரியலே அப்படித் தான் இருக்கு. அடுத்தவன் பொண்டாட்டியை கரக்ட் பண்ணுறது புருஷனை கரக்ட் பண்ணுறது.. ங்கொய்யாலே டேய்! என்ன கருமாந்தரத்தடா எடுத்து தொலையறீங்க!
கடைசியா “ஆண் பாவம் ஆண் பாவம் உண்மையிலயே ஆண்கள் பாவம்” என்று பாடுவதை காத்து குளிர கேட்டு விட்டு சீரியலை பார்க்காமல் தூங்கிட வேண்டியது தான்
விரைவில் என்னுடைய கனவுல இந்த சீரியல் இயக்குனர்களுக்கு கீழே நாட்டு வெடிகுண்டு நாலு வைக்கிற மாதிரி கனவு வரப்போகிறது என்று நினைக்கிறேன்
கொசுறு 4
சமீபமாக பல தளங்களில் இது போல் ஒவ்வொரு வார்த்தைக்கு இடையேயும் வருகிறது. படிக்கவே கடுப்பாக இருக்கிறது. திடீரென்று இது போல ஏன் ஆனது என்று தெரியவில்லை. இதை சரி செய்ய ஒரு வழி இருக்கிறது தட்டச்சு செய்ததை நோட் பேடில் காபி செய்து பின் அதை திரும்ப காபி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்தால் இது போல ஆகாது. என்னுடைய தளத்தில் பாருங்கள் இது போல இல்லாமல் படிக்க எளிதாக இருக்கும். எனக்கு இது போல செய்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை (முதலில் இருந்தே நான் இப்படித் தான் செய்கிறேன்) உங்களுக்கு இவ்வாறு செய்தால் சரியாகிறதா பாருங்கள்.
Related posts:


{ 10 comments… read them below or add one }
//இந்தப்படத்தில் என்ன உள்ளது என்பதற்கு ஒரு சிறு க்ளு நம் முகத்தில் உள்ள ஒரு உறுப்பு //
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை
கண்…………..
தொன்னூறுகளில் அண்ணன் வீட்டுக்கு இப்படி மூணு டி படங்கள் உள்ள வாழ்த்து அட்டைகளை அனுப்பி இருந்தேன், வீட்டுக்கு வர்ற மக்கள்ஸ் எல்லாம் ஓடும்படி பண்ணிட்டார்:-)))
பெரிய புத்தகமாவும் இப்படிப் படங்கள் மட்டும் வந்துருக்கு, என்னிடம் ரெண்டு புத்தகங்கள் இருக்கு. இதேபோல வேர் ஈஸ் வாலி எனக்கு ரொம்பப்பிடிக்கும்:-)
கிரி,
அது என்ன படமோ, கண்டிப்பா எனக்கு தெரியல.. கண்ணு அப்படின்னு சொல்றாங்க எப்படின்னு தான் தெரியல… இங்கேயும் சன் டி வீ தான்.. ஆனா ஒரு ஆறுதல்.. நம்ம மெட்ராஸ்ல என்ன டைம் ஒலிபரப்பு ஆகுதோ அதே டிமேனு சொல்லிட்டு ஒரு மணி நேரம் பின் தங்கி போட்ரனுங்கோ.. எப்படியும் நான் பாக்கறது இல்ல.. வீட்ல தான்..
While I used to have my dinner sometimes I am forced to fee thirumathi selvam.. antha latha rao enn thookittangannu theriyala.. pakkarathukku latchanama ore figure athuvum ippa illa.. antha pakkame porathu illa.. ( he he)
Kamesh
எந்த ஆங்கிள்ள தலைகீழா நின்னு பாத்தாலும் எனக்கு எதுவுமே தெரியல:p
விகடனில் வரும்போது இதைப் பார்க்கும் விதம் தெரிந்திருந்தது. இப்போ மறந்து போச்சு:)! கண்ணாடி போட்டு பார்த்தாலும் மேல் வரிசையில் இருக்கும் கண் வடிவங்கள்தான் தெரியுது.
கட்டங்களைத் தவிர்க்க html பக்கத்தில் தட்டச்சலாமே.
பிடிச்சாலும் பிடிக்காவிட்டாலும், எல்லா சீரியலும் விடாமப் பாக்கிறீங்கன்னு சொல்லுங்க:))!
திரிடீ நமது கண்
3d படத்தில் உள்ளது கண் (அதில் பாப்பா வில் பிஸ்ஸாவை வெட்டியதுபோல ஒரு முக்கோண சைசில் முடிவடையாமல் இருக்கிறது கண்ணின் பாப்பா). இந்த 3d கிராஸ் ஐ வெர்ஷனை சேர்ந்தது. யுடுபிள் எப்படி பார்க்கவேண்டும் என்று சொன்னாலும். ஒரு எளிதான வழி. கிராஸ் ஐயில் பார்க்கும்போது நடு பகுதி தவிர படத்தின் எல்லா பகுதியையும் பேக் கிரவுண்டாக எண்ணிக்கொண்டு நடுபகுதியை பார்த்தால் விளங்கும். (வெளங்குதா ?) சுவராஸ்யம் வேண்டுமெனில் மெதுவாக தலையை பரதநாட்டிய ஸ்டைலில் ஆட்டி பார்த்தால் பேக் கிரௌண்ட் மட்டுமே ஆடும் தவிர நடுவில் உள்ள புதிர் படம் ஆடாது.
இந்த படத்தில் கண் தெரிகிறது…. அதுவும் பளிச்சென்று ”3டி”யில்…
சூப்பர் புகைப்படம்…….
நன்றி, 1990களின் நினைவலைகள் மீண்டும், do you have any more ? please add
கண்களின் அருகே படத்தை கொண்டுசென்று படத்தை உற்று பார்த்தபடி பின்னகர்த்த வேண்டும் about 8 cm you can see it.
@சூர்யா அரிஹர செல்வன் ஜோ விவசாயி காமேஷ் ஜீவதர்ஷன் இப்படி எல்லாம் சொல்லப்படாது.. கஷ்டப்பட்டாவது கண்டு பிடிக்க வேண்டும்
கரு விழிகளை மூக்கு நுனி பக்கம் பார்க்கும் படி சேர்த்து கொண்டு வந்து பார்த்தால் பல முயற்சிகளுக்கு பிறகு நிச்சயம் தெரியும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
@ஹாஜா மொஹைதீன், உமாகாந்த் நன்றி
@கோவி கண்ணன் நீங்க தான் கில்லாடி கண்ணன் என்று தெரியுமே!
@துளசி கோபால் இரண்டு புத்தகமாமாமாமா! வயித்தெரிச்சலை கிளப்புறீங்களே! கிர்ர்ர்ர்
@காமேஷ் நீங்க தான் நமக்கு சரியான ஆளு ஹி ஹி
@ராமலக்ஷ்மி எல்லா சீரியலும் பார்க்க மாட்டேன் அதே போல அழுகை இருந்தாலும் பார்க்க மாட்டேன். சுவாரசியமாக இருந்தால் மட்டுமே பார்ப்பேன். அப்புறம் என்னங்க பண்ணுறது.. இருப்பது இந்த ஒரு சேனல் தான் வேற வழி இல்ல..forced to watch . பொழுது போக எதையாவது பார்க்க வேண்டும் அதனால பார்க்கிறேன். K TV இருந்தால் இதை எட்டியே பார்க்க மாட்டேன்.
@அருண் உங்களுக்கு அடுத்த வாட்டி 4D வைக்கிறேன்
@ராஜ்குமார் நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க.. ஆனா பலரும் பல்டி போட்டு பார்த்துட்டாங்க ஒன்றும் வொர்க் அவுட் ஆகல
@கோபி யுரேகாவா
@mangeshcar வேறு படம் இல்லை .. ஊரில் இருந்து எடுத்து வரலாம் என்று இருக்கிறேன்.