இணையம் பற்றிய செய்திகள் [09-01-2012]

by கிரி on January 9, 2012

FedEx

கூரியர் சேவையில் உலகளவில் மிகப்பிரபலமான FedEx நிறுவன ஊழியர் ஒருவர் ஒரு வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய ஒரு மானிட்டரை தூக்கிப்போட்டுச் செல்லும் காட்சி கடந்த மாத இணையப்பரபரப்பாக இருந்தது. YouTube ல் லட்சக்கணக்கானோர் இதைப் பார்த்து கொதிப்படைந்து தங்கள் எதிர்ப்புகளை காட்டி இருந்தனர். இந்த காணொளியை வெளியிட்டவர் கூறும் போது “இவர் வரும் போது நான் வீட்டினில் தான் இருந்தேன் ஆனால் பொறுப்பில்லாமல் தூக்கிப்போட்டு விட்டு சென்று விட்டார் இதனால் என்னுடைய மானிட்டர் உடைந்து எனக்கு சிரமம் ஏற்பட்டது” என்று கூறி இருந்தார்.

YouTube மற்றும் மற்ற இணையத்தளங்களில் இதைப் போட்டு அனைவரும் காய்ச்சி எடுத்ததில் FedEx நிறுவன உயர் அதிகாரி இது குறித்து வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். இணையம் மட்டும் இல்லை என்றால் நினைத்துப்பாருங்க. வல்லவன் வகுத்ததே சட்டம் என்று ஆகி இருக்கும். இணையம் இருப்பதால் தான் பல தில்லுமுல்லுகள் எல்லாம் வெளிவருகின்றன இல்லை என்றால் ஊடகங்கள் என்ன சொல்கிறதோ அது மட்டுமே உண்மை என்று நம்ப வேண்டிய நிலையில் இருப்போம்.

 iPhone 5

iphone 5 image இணையம் பற்றிய செய்திகள் [09 01 2012]iPhone 4S வெளியாகி வெற்றிகரமாக விற்பனை ஆகி உள்ளது உடன் பேட்டரி குறித்த சர்ச்சைகளும் உள்ளன. iPhone 5 வரும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க iPhone 4S வெளிவந்து பலரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது தற்போது திரும்ப iPhone 5 பற்றிய செய்திகள் உலவ துவங்கி விட்டன. செய்திகள் உண்மையோ பொய்யோ ஆனால் இது பற்றி ஆர்வமாக கேட்க பெரும் கூட்டமே உள்ளது. இந்தப்படம் [8 Mega Pixel] iPhone 5 ல் எடுக்கப்பட்டதாக இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது. Image Credit  http://9to5mac.com

Firefox Google search

உலவிப் போட்டியில் மூன்றாம் இடத்தில் உள்ள ஃபயர்பாக்ஸ் நிறுவனம் தனது உலவியின் default தேடுதலுக்கு இன்னும் மூன்று வருடங்களுக்கு கூகுள் தேடுதலையே பயன்படுத்தப்போவதாக கூகுள் உடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதியை இந்நிறுவன வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் அதோடு இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Bing தேடுதலை விட கூகுள் உடன் இருப்பதையே விரும்புகிறது.

Google + Britney record

கூகுள் + மெதுவாக பிரபலமாகிக்கொண்டு வருகிறது. இந்த வருடக்கடைசியில் 400 மில்லியன் பயனாளர்கள் இருப்பார்கள் என்று கணித்து இருக்கிறார்கள். இதில் 1 மில்லியன் பின் தொடர்பவர்களைப் பெற்று பிரபல பின்னணி பாடகி பிரிட்னி சாதனை செய்து இருக்கிறார்.

Android

கடந்த இணையம் பற்றிய பதிவில் Android இயங்கு தளம் [OS] தினமும் 5,50,000 சாதனங்களில் நிறுவப்படுகிறது என்று கூறி இருந்தேன் நான் கூறிய அடுத்த சில நாட்களிலேயே அது 7,00,000 ஆக உயர்ந்து விட்டது. நான் எழுதும் இந்த நேரத்தில் இன்னும் இதன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம்.

SOPA Vs Godaddy

அமெரிக்காவில் இணையத்தளங்களுக்கு கட்டுப்பாடு [SOPA - Stop Online Piracy Act] விதிக்க புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தப்போகிறார்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு பொதுமக்கள் அனைவரிடமும் Google facebook Microsoft உட்பட. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி கதையாக Godaddy இணையத் தளம் இதற்கு ஆதரவு தெரிவிக்க கடுப்பான பலரும் Godaddy யில் பதிவு செய்து வைத்து இருந்த தங்கள் தளங்களை வேறு நிறுவனத்திற்கு மாற்றி விட்டார்கள் சும்மா இல்லை லட்சக்கணக்கில் இதை சற்றும் எதிர்பாராத Godaddy நிறுவனம் நமது அரசியல்வாதிகளைப் போல பல்டி அடித்து தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டது. இவ்வாறு விலகியவர்களில் உலகின் பிரபலமான Wikipedia தளமும் ஒன்று.

GoDaddy Elephant இணையம் பற்றிய செய்திகள் [09 01 2012]கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடிச்சாம் கதையாக ஏற்கனவே பிரச்சனையில் இருந்த Godaddy நிறுவனத்தின் CEO ஒரு யானையை சுட்டு பந்தாவாக போஸ் கொடுத்த படம் இணையத்தில் வெளியாக கடும் பிரச்சனை ஆகி விட்டது. PETA [People for the Ethical Treatment of Animals] இதனால் கடுப்பாகி தன்னுடைய இணைய தளத்தையும் இதில் விலக்கிக் கொண்டு மற்றவர்களையும் விலகி எதிர்ப்பைக் காட்டுமாறு கூறி உள்ளது. சனிப் பெயர்ச்சி Godaddy க்கு பலமாக மாறி உள்ளது போல icon wink இணையம் பற்றிய செய்திகள் [09 01 2012] Image Credit Mashable.com

Twitter Outage

புத்தாண்டின் போது தொலைபேசி SMS இணையம் மூலமாக வாழ்த்து கூறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அதுவும் சமீப காலங்களில் இது ஒரு வழக்கமாகி விட்டது. இந்த நேரங்களில் நாம் யாருடைய தொலைபேசிக்கு அழைத்தாலும் சரியாகப் போகாது. உலகின் முன்னணி சமூகத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் புத்தாண்டு அன்று கோடிக்கணக்கான பேர் ஒரே சமயத்தில் வாழ்த்துக்கூறியதால் சர்வர் 90 நிமிடங்களுக்கு செயலிழந்து விட்டது ஆனால் இன்னொரு சமூகத்தளமான faecbook இதை திறமையாக கையாண்டு விட்டது.

Chrome most popular browser in India

கூகுள் க்ரோம் தற்போது இந்தியாவில் மிகப்பிரலமான உலவியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் இவ்வளவு விரைவாக இந்த இடத்தை பிடித்தது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை. இதற்கு கூகுள் இந்தியாவில் செய்து வந்த விளம்பரங்களும் ஒரு காரணம். தற்போது அடுத்த சோதனை பதிப்பை வெளியிட்டு இருக்கிறது.

தரவிறக்கம் [Download] செய்ய http://www.google.com/landing/chrome/beta

“Just” did it icon smile இணையம் பற்றிய செய்திகள் [09 01 2012]

facebook ல் Nike நிறுவனம் பிரபலமாக இருந்தாலும் ட்விட்டரில் தற்போது தான் தன்னுடைய கணக்கை துவங்கி இருக்கிறது.

https://facebook.com/nike

https://twitter.com/nike

Yahoo New CEO

யாஹூ நிறுவனம் கடந்த வருடம் தனது CEO வான Carol Bartz ஐ வேலையை விட்டு தூக்கியது அதன் பிறகு தற்காலிக CEO தான் பணியாற்றி வந்தார் தற்போது Paypal பிரசிடன்ட் Scott Thompson ஐ புதிய யாஹூ CEO வாக அமர்த்தியுள்ளது. இவரது வருகைக்கு பின்னராவது யாஹூ வளர்ச்சிப்பாதையில் சென்றால் நல்லது.

Hack

உலகின் பிரபல பாடகரான Lady Gaga வின் ட்விட்டர் கணக்கை ஆட்டையைப் போட்டு விட்டார்கள் ஹேக் செய்ததோட இல்லாமல் அவரை பின்தொடரும் 17 மில்லியன் நபர்களுக்கும் உங்களுக்கு iPad 2 இலவசமாகத் தருகிறேன் என்று “கூறி” இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார்கள் அதற்கு முன் Macbook தருவதாகவும் அறிவிப்பு செய்து விட்டார்கள் icon smile இணையம் பற்றிய செய்திகள் [09 01 2012] பின் இவர்களிடம் இருந்து கணக்கு மீட்கப்பட்டதாக Lady Gaga அறிவித்தார். நம்ம கணக்கை யாரும் எதுவும் செய்யவில்லை என்பதால் நாம் பக்காவான கடவுச்சொல் [Password] வைத்து இருக்கிறோம் என்பது அர்த்தம் அல்ல நாம் அந்த அளவிற்கு பிரபலம் இல்லை அல்லது நம்மை யாரும் இன்னும் குறி வைக்கவில்லை என்று அர்த்தம் icon smile இணையம் பற்றிய செய்திகள் [09 01 2012] சொடுக்கும் போடும் நேரத்தில் நம் கணக்கை காலி செய்து விடுவார்கள்.

Read: ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?

கொசுறு

தங்கம் கன்னாபின்னாவென்று விலை ஏறி வருகிறது. கடந்த 86 வருடத்தில் எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பதை இதில் காணலாம். இந்தப்படத்தை கடந்த வாரமே என்னுடைய facebook தளத்தில் பகிர்ந்து விட்டேன். நண்பர் விஜய் “கிரி நீங்க இதைப் போல படங்களை விசயங்களை உங்கள் தளத்திலும் பகிர்ந்து கொள்ளலாமே இன்னும் அதிகப்பேர் பார்க்க வாய்ப்புள்ளது” என்று கேட்டு இருந்தார். உண்மையாகவே இது போல தகவல்களை இங்கே பகிர ஆசை தான் ஆனால் நான் அளவாகவே எழுதி வருகிறேன் இதனால் அனைத்தையும் இதில் கூற முடியாததால் சிறு தகவல்களை என்னுடைய facebook page ல் [https://facebook.com/giriblog] கூறி விடுகிறேன். இனி முடிந்தவரை இதிலும் கூற முயற்சிக்கிறேன். நான் முக்கி முக்கி எழுதும் பதிவுகளை விட இது போல தகவல்களுக்குத் தான் அதிகம் Like கிடைக்கிறது icon smile இணையம் பற்றிய செய்திகள் [09 01 2012] என்ன கொடுமை சார்!

History of GOLD இணையம் பற்றிய செய்திகள் [09 01 2012]

Related posts:

  1. இணையம் பற்றிய செய்திகள் [29-07-2011]
  2. இணையம் பற்றிய செய்திகள் [01-09-2011]
  3. இணையம் பற்றிய செய்திகள் [12-04-2011]
  4. இணையம் பற்றிய செய்திகள் [20-12-2011]
  5. இணையம் பற்றிய செய்திகள் [11-11-2010]

{ 5 comments… read them below or add one }

ilavarasan January 9, 2012 at 8:41 PM

அருமையான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.

Reply

மாணவன் January 10, 2012 at 4:54 AM

வழக்கம்போலவே இணைய செய்திகள் சூப்பர்….

Reply

Arun January 10, 2012 at 8:36 AM

நல்ல தகவல்கள் .. பகிர்வுக்கு நன்றி தல

- அருண்

Reply

Arun J prakash January 10, 2012 at 6:44 PM

நல்ல பயனுள்ள தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

Reply

Logan January 11, 2012 at 7:20 PM

நன்றி கிரி

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed