இத்தாலியில் சமீபத்தில் ஒரு சொகுசு கப்பல் பாறையில் மோதி கவிழ்ந்து அதில் 11 பேர் இறந்து விட்டார்கள் மற்றும் 21 பேரை காணவில்லை (அவர்களும் இறந்து இருக்க வேண்டும்). இது பற்றி நீங்கள் படித்து இருப்பீர்கள்.
இந்த விபத்து நடந்த போது கப்பல் கேப்டன் Francesco Schettino பயணிகளை காப்பாற்ற முயற்சிக்காமல் முதல் ஆளாக இவர் ஒரு படகில் தப்பித்து கரைக்கு வந்து விட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த கடலோர படையினர் விரைந்து வந்து கப்பலில் சிக்கி உள்ளவர்களை மீட்க உதவினர் அப்போது கடற்படை அதிகாரி Gregorio De Falco கப்பலை தொடர்பு கொண்டு கேப்டனை விசாரிக்க அவர்கள் அங்கே இல்லை என்பதை அறிந்து அங்கே உள்ள மற்ற பணியாளரிடம் கப்பல் கேப்டனின் தொலைபேசி எண்ணை பெற்று அதில் தொடர்பு கொண்டு பேசிய போது தான் கப்பல் கேப்டன் தப்பித்து கரைக்கு வந்தது தெரிய வந்தது.
இதனால் கடுப்பான Gregorio De Falco கப்பல் கேப்டனை கடுமையாக திட்டி “இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்து கொண்டுள்ளீர்களே! பயணிகள் அங்கே தவிக்கும் போது நீங்கள் எப்படி இங்கே வரலாம்” என்று திட்டியவுடன் கேப்டன் “சாரி இது ராங் நம்பர்” என்று கூறி தப்பிக்க முயல ஆனால் விடாது கருப்பாக மறுபடியும் போட்டு சாத்து சாத்துன்னு சாத்தி “நீ மட்டும் இப்ப கப்பலுக்கு வரல உன்னை தொலைத்து விடுவேன்” என்று கூறி இருக்கிறார். இவர்கள் பேசிய உரையாடல் வெளியே கசிய பெரும் பரபரப்பு ஆகி விட்டது.
டைட்டானிக் கப்பல் கவிழ்ந்த போது அதில் இருந்து தப்பித்து வெளியே வராமல் (தப்பிக்க வாய்ப்பிருந்தும்) கப்பல் கேப்டன் ஸ்மித் அதிலேயே இறந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
கேப்டனை பின்னர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள் ஆனால் Gregorio De Falco கூறிய Get back on board, damn it! என்று கூறியது மிகப்பெரிய ஹிட் ஆகி விட்டது. இணையத்தில் இதை வைத்து facebook தளம் ஆரம்பிக்கப்பட்டு அது சக்கை போடு போடுகிறது.
இந்த வாசகத்தை டி ஷர்ட் ல் வைத்து ஒரு நிறுவனம் விற்பனை செய்ய அது மிகப்பெரிய ஹிட் ஆகி விட்டது. இதற்கு பல்வேறு நாட்டில் இருந்தும் ஆர்டர்கள் குவிகின்றனவாம். பலர் இறந்த நிகழ்வை வைத்து இப்படி காசாக்குகிறீர்களே! என்று திட்டுகளும் வந்தன அதற்கு அந்நிறுவன அதிகாரி “நாங்கள் Gregorio De Falco வை ஹீரோ போலத்தான் பார்க்கிறோம். நெருக்கடியான நேரத்தில் தன் பொறுப்பை மறந்து விலகி ஓடிய கேப்டனை Gregorio De Falco சரியான முறையில் கையாண்டு இருக்கிறார் அது எங்களை மிகவும் கவர்ந்தது அதுமட்டுமல்லாமல் தற்போது இத்தாலி நெருக்கடியான சூழலில் உள்ளது தங்களுடைய பொறுப்புகளை உணராமல் தப்பிக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த வாசகம் பொருந்தும்” என்று கூறி இருக்கிறார்.
இணையத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயம் ரவுண்டு கட்டி அடிக்கும் தற்போது இது!
டி ஷர்ட் தலைப்பு நாகரீகமாக இருந்தாலும் உண்மையில் Gregorio De Falco கூறியது Vada a bordo, cazzo அதாவது Get on board, d**k (ஆணுறுப்பு) ஆனால் இத்தாலியில் இதையே அப்படியே டி ஷர்ட்டில் வைத்து விட்டார்கள்
நம்ம ஊருக்கும் விரைவில் வந்து விடும்
கொசுறு
கிரிக்கெட் ல நம்மை திணறத் திணற அடித்து துவைக்கிறார்கள். நம்ம ஆளுங்களும் அசராம அடி வாங்கறாங்க.. மகா கேவலமாக இருக்கு. நேற்று எதோ நமக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கோலி 100 அடித்தார். பேட்டியில் ஆஸியில் எல்லோரும் திட்டிட்டே இருக்காங்க வீரர்களும் திட்டுறாங்க பார்வையாளர்களும் திட்டறாங்க இதனால் எங்கள் கவனத்தை சிதறடிக்கிறார்கள், நாங்க விளையாடத்தான் வந்தோம் திட்டு வாங்க இல்ல என்று பொங்கி இருக்கிறார். அதானே நாம தான் திட்டலாம் நமக்கு தான் ஃபுல் ரைட்ஸ் இருக்கு அவங்க எப்படி திட்டலாம்
ஆனாங்க கொஞ்சம் கூட சூடு சொரணை வெட்கம் மானமே இல்லாமல் இந்த அளவிற்கு கேவலமா அடி வாங்கக் கூடாதுங்க. கொஞ்சம் கூட எதிர்ப்புக் காட்டாமல் இப்படியா ஒரேயடியா சரணடைவது… என்னமோ போங்க! Vada a bordo, cazzo
Related posts:


{ 4 comments… read them below or add one }
// கொஞ்சம் கூட எதிர்ப்புக் காட்டாமல் இப்படியா ஒரேயடியா சரணடைவது… என்னமோ போங்க! Vada a bordo, cazzo //.
குசும்பு கிரி.
வணக்கம் கிரி அவர்களே,
இந்திய கிரிக்கெட்டைப் பற்றி நினைத்தாலே வயிறு பற்றி எரிகிறது.இவங்க வெளிநாட்டு தொடருக்கெல்லாம் ஒத்துவரமாட்டாங்க.
100 முறை யோசித்தாலும் காரணம் புரியவில்லை நமது அணியின் தோல்விக்கு!!!! மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும் பட்ட அவமானம், அவமானம் தானே!!!! இன்னும் சில மாதங்களில் ஒய்வு பெற இருந்த ஆஸ்திரேலியா அணி வீரர்களை ஆண்டு கணக்கில் விளையாட வைத்ததற்கு, நிச்சயம் நமது அணிக்கு நன்றி பாராட்டுவர்கள்!!!
கிரிக்கெட் மேட்டர் ரொம்ப வருத்தமா இருக்கு தல
இப்படி அசிங்கமா போச்சே
- அருண்