மௌனகுரு

by கிரி on December 26, 2011

Mounguru மௌனகுரு கலைஞரின் பேரன் அருள்நிதி வம்சம் படத்திற்குப் பிறகு நடித்து இருக்கும் படம் “மௌனகுரு”. நான் இதுவரை வம்சம் பார்க்கவில்லை ஆனால் தற்போது பார்க்க தோன்றுகிறது icon smile மௌனகுரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்த பந்தா எல்லாம் இல்லாமல் பன்ச் வசனங்கள் பில்டப்புகள் எதுவுமில்லாமல் சிறப்பாக நடித்து இருக்கிறார். அட நிஜமாத்தான்! நம்புங்க.

காவல் துறையில் உள்ள நால்வர் செய்யும் தவறால் அப்பாவியான ஒருவர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதை க்ரைம் த்ரில்லராக கொடுத்துள்ளார்கள். இதில் பாதிக்கப்படுபவராக அருள்நிதியும் காவல் துறை அதிகாரியாக ஜான் விஜய் நடித்து இருக்கிறார். இவர் ஓரம்போ படத்தில் காமெடி கலந்த வில்லன் ரோல் செய்து இருப்பார் இதில் காமெடியாக பார்த்து மௌனகுருவில் வில்லனாக முதலில் பார்க்க சிரமமாக இருந்தது பின்னர் அவருடைய நடிப்பால் அதை மாற்றி விட்டார்.

அருள்நிதி பார்க்க ஒரு சாயலில் ஜெயம் ரவி போல இருக்கிறார். எப்படியும் உயரத்தில் ஆறடிக்கு மேல இருப்பார் போல icon smile மௌனகுரு படத்தில் இவருக்கு அதிகமாக வசனங்கள் இல்லை மிகக் குறைவாகவே பேசுகிறார் அதோடு கொஞ்சம் சிடு சிடுன்னு மௌனம் பேசியதே சூர்யா போல. இரண்டு படத்திலும் மௌனம் வருகிறது icon smile மௌனகுரு கதாநாயகி இனியாவுடன் இவர் பேசுவது ரசிக்கும் படி இருக்கும். அருள்நிதி பின்னாடியே நின்று இனியா பேசிக்கொண்டு இருக்கும் போது கொஞ்சம் முன்னாடி வாங்க! திரும்பி பேசி கழுத்து வலிக்கிறது என்று ஆரம்பித்து வெகு சகஜமாக சினிமாத்தனம் இல்லாமல் நடித்து காட்சியோடு நம்மை ஒன்றைச் செய்து விட்டார்.

Iniya மௌனகுரு இனியாக்கு நடிக்க வாய்ப்பே இல்லை இருந்தாலும் அவர் வரும் காட்சிகளில் சிறப்பாக செய்து இருக்கிறார். பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருக்கிறார். வாகை சூடவா படத்தில் பார்த்து இருந்தாலும் அதை விட இதில் ரொம்ப அழகாக இருக்கிறார் (எனக்கு). இந்தப்படம் பார்த்ததில் இருந்து இனியாக்கு ரசிகன் ஆகிட்டேன் icon smile மௌனகுரு

படத்திற்கு பலம் இயல்பான காட்சிகளே! யாருக்கும் எந்த வித மேக்கப்பும் இல்லை இனியா மட்டும் விதிவிலக்கு. கல்லூரியில் லூசு மாதிரி ஃப்ரொபசர்களாக காட்டாமல் வழக்கமாக எப்படி இருப்பர்களோ அது போல காட்டி இருக்கிறார்கள், மாணவர்களும் எதோ ஃபேஷன் ஷோ க்கு போறவன் மாதிரி காட்டாமல் வழக்கமாக மாணவர்கள் என்ன உடை அணிவார்களோ அதோடு நிறுத்தி இருக்கிறார்கள் இனியாக்கு கூட நடுத்தர குடும்ப பெண் உடை தான். வழக்கமாக இருப்பதை நாம் ஆச்சர்யமாக கூறும் அளவிற்கு நம் தமிழ்ப் படங்கள் கொண்டு வந்து நிறுத்தி விட்டது வருத்தமாகத் தான் இருக்கிறது. இயல்பான படங்களையே வித்யாசமான படம் என்று கூற வேண்டிய நிலையில் இருக்கும் போது இது பெரிய விஷயம் இல்லை.

ஜான் விஜய் தவிர அவருடன் கேடி வேலை செய்யும் மற்ற அதிகாரிகளும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். அதிலும் தாங்கள் மாட்டிக்கொள்ளப்போகப் போகிறோம் என்கிற பயத்தில் தவறை மறைக்க ஒரு தவறு அதை மறைக்க ஒரு தவறு என்று தொடர்வது நன்றாகக் காட்டப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள சிரமங்கள் காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்குள் உள்ள பயங்களும் பிரச்சனைகளும் நன்றாக காட்டப்பட்டு இருக்கின்றன.

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் மற்றவர் தவறு செய்யும் போது உடன் இருந்து விட்டால் கூட சில நேரங்களில் நமக்கு சிக்கலாகி விடும். எனக்கு இது போல நடந்து இருக்கிறது. ஒரு விஷயத்தை தவறை நான் பார்த்து அதை வெளியேயும் சொல்ல முடியாமல் சொல்லாமல் இருந்ததற்காக பிரச்சனையும் ஆகி ரொம்ப தர்மசங்கடமாகி விட்டது. ஏன்டா! அந்த இடத்தில் இருந்து தொலைத்தோம் என்று ஆகி விட்டது. அது போல இதிலும் ஒரு சில காட்சிகள் வரும். போலீஸ் விஷயம் என்பதால் பயந்து இருவர் ஒதுங்கினாலும் விஷயத்தை கேட்டதற்காக அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

விசாரணைக்காக வரும் நேர்மையான அதிகாரியாக உமா ரியாஸ். படம் முழுவதும் கர்ப்பிணியாக வருகிறார் அதோடவே விசாரணை என்று அசத்தி இருக்கிறார். எனக்கு இவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் கலக்கப் போவது யாரு ல் இருந்து இவருக்கு விசிறியாகி விட்டேன். இவர் சிரிப்பை அதில் கவனித்து இருக்கிறீர்களா! மனம் விட்டு சிரிப்பார் [சிலருக்கு பயமாகவும் இருக்கும் icon smile மௌனகுரு ]. இதில் ஆர்பாட்டம் எதுவும் இல்லாமல் வந்து செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல வாய்ப்பு “அன்பே சிவம்” படத்திற்குப் பிறகு.

Mouna guru 150x150 மௌனகுரு தாங்கள் தப்பிக்க மனநிலை பாதிக்கப்பட்டவராக அருள் நிதியை காட்ட இவர்கள் முயல “நான் என்ன தப்பு செய்தேன் என்னை ஏன் இப்படி பண்ணுறீங்க! ஒருத்தன் ஒருவாட்டி மனநிலை பாதிக்கப்பட்டதா மனநிலை மருத்துவமனைக்கு போய் வந்தா சமூகம் அதன் பிறகு அவனை எப்படி பார்க்கும் தெரியுமா! என்று பொறுமி சாதாரணமானவனின் நிலையை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார்.

படம் பார்க்கும் முன்பு இசை யார் என்று தெரியாது ஆனால் பாடலும் பின்னணி இசையும் அருமையாக இருந்தது அதன் பிறகே பார்த்தேன் அது தமன். தமன் ஈரம் படத்திலேயே பின்னணி இசை அசத்தி இருப்பார் இந்த க்ரைம் த்ரில்லரிலும் சும்மா சொல்லக்கூடாதுங்க பல இடங்களில் அட! போட வைக்கிறார்.

படம் முழுவதையும் இயல்பாக கொண்டு சென்று கடைசியில் எப்படி முடிக்கிறார்கள் என்கிற ஆர்வம் இருந்தது முழுவதும் திருப்தி அளிக்கவில்லை என்றாலும் மோசமில்லை. முடிந்த வரை க்ளைமாக்சை சிறப்பாக தர முயன்று இருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் சாந்தகுமார் முதல் படத்திலேயே தன்னை சிறப்பாக நிரூபித்து இருக்கிறார்.

இயல்பான படங்களை ரசிப்பவர்கள் நிச்சயம் தவற விடக்கூடாத படம் மற்றவர்களுக்கு இது போர் அடிக்கலாம்.

கொசுறு 1

டிக்கெட் வாங்கி திரையரங்கம் சென்ற பிறகு உள்ளே பார்த்தால் நான் தான் முதல். அதன் பிறகு ஒருவர் வந்தார் அவ்வளோ தான் ஆஹா! மொத்தமா இரண்டு பேர் தான் பார்க்கப்போகிறோமா என்று இருந்தால் கொஞ்ச நேரத்தில் மூன்று பேர் வந்தார்கள் மொத்தம் ஐந்து பேர் தான் படம் முழுவதும்.

படம் முடிந்து வெளியே வரும் போது மூவரில் ஒருவர் “மச்சான் என்னடா படம் இது! மொக்கையா இருக்கு” இன்னொருவர் “டேய்! இதை எவன்டா நல்லா இருக்குனு சொன்னவன் அவனை முதல்ல சாத்தனும்டா! அடுத்தவர் “இல்ல மாமா…. விகடன்ல 44 மார்க் போட்டு இருந்தான்.. ஆமான்டா! இவனுக கலைஞர் பேரன் படம் என்பதால் காசு வாங்கிட்டு இப்படி போட்டு இருப்பானுக!”… கிர்ர்ர்ர் இது நான். செம கடுப்பாகிட்டேன். என்னருகே இருந்த இன்னொருவர் ஏங்க! படம் நல்லாத்தானே இருக்கு ஏன் நல்லா இல்லைன்னு சொல்றீங்க.. விஜய் மாதிரி யாரும் நடித்து இருந்தா கூட்டம் இருக்கும் அதனால தான் கூட்டமில்லை நானும் ஆனந்த விகடன் பார்த்து தான் வந்தேன் என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார்.

நம்ம ஆளுங்க விட்டா ஒன்னுக்கு வரலைனா கூட அதுக்கும் கலைஞர் தான் காரணம் என்று கூறுவார்கள் போல. கலைஞர் மீது விமர்சனம் இருக்கலாம் எனக்கு கூட பல விசயங்களில் உண்டு அதற்காக நல்ல விசயங்களில் கூட இது போல குறை கண்டு பிடிப்பவர்களை என்ன வென்று கூறுவது. படம் மொக்கையாக உளியின் ஓசை அப்புறம் இன்னொரு எதோ படம் வந்ததே அது போல இருந்தால் கூட பரவாயில்லை இது மிக மிக இயல்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது இதற்கு விகடன் மார்க் போட்டதற்கு காரணம் கலைஞராம்!

கொசுறு 2

மௌனகுரு 3 மணிக்கு படம் 5 30 க்கு முடிந்து வெளியே வந்து பார்த்தால் 6 மணிக்கு அதே திரையரங்கில் போராளி. சரி இதையும் பார்த்து விடுவோம் என்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால் மௌனகுரு படத்திற்கு டிக்கெட் கிழித்தவரே இருந்தார் நான் திரும்ப கொடுத்தவுடன் என்னடா இவன் போன காட்சிக்கு தானே வந்தான் மறுபடியும் வந்து இருக்கிறானே என்று யோசித்துக்கொண்டே (கூட்டம் இல்லாததால் என்னை மறந்து இருக்க வாய்ப்பில்லை) என்னிடம் டிக்கெட் வாங்கினார். நான் “அப்படி எல்லாம் பார்க்கப்படாது” என்று கூறி விட்டு icon smile மௌனகுரு உள்ளே போயிட்டேன். நாங்கெல்லாம் ஒரே நாளில் நாலு காட்சியும் பார்க்கிற ஆளுங்க எங்களுக்கேவா! icon smile மௌனகுரு உள்ளே நல்ல வேளை இருவர் இருந்தனர் அதன் பிறகு ஒருவர் வந்தார் அவ்வளோ தான். மொத்தம் நான்கு பேர். படம் ஓகே ரொம்ப சூப்பர் எல்லாம் இல்லை. இரண்டு படத்திலும் ஒரு ஒற்றுமை இரண்டிலும் மன நல மருத்துவமனை வரும். பயப்படாதீங்க! எனக்கு எதுவும் ஆகல icon smile மௌனகுரு


feed icon16x16 மௌனகுரு Subscribe in a reader

Related posts:

  1. மனதை வருடும் “மைனா” – திரைவிமர்சனம்
  2. எந்திரன் திரைவிமர்சனம்
  3. தெய்வத்திருமகள்
  4. நான் மகான் அல்ல – திரைவிமர்சனம்
  5. அழகர்சாமியின் குதிரை

{ 16 comments… read them below or add one }

எப்பூடி ... December 26, 2011 at 1:54 PM

‘பசங்க’ பாண்டியராஜ் இயக்கிய வம்சம் எனக்கு பிடித்த திரைப்படம், அதில் இவரது நடிப்பை பலர் எக்ஸ்பிரஷன் இல்லை என்று குறை கூறினார்; எனக்கு பிடித்திருந்தது; (எக்ஸ்பிரஷன் பெயரில் ஓவர் அக்டிங் தொல்லை இல்லை :p

இப்ப ‘மௌனகுரு’ எனக்கு எதிர்பார்ப்பில இருக்கிற திரைப்படம்; ஒரிஜினல் DVD க்கு வெய்ட்டிங் (இங்கு எங்கும் ஓடவில்லை) நீண்ட நாளாக காத்திருக்கும் ‘முரண்’ ஒரிஜினலே இங்கு இன்னமும் வரவில்லை :-)

வம்சத்திற்கும் மௌனகுருவிற்க்கும் இடையில் ‘உதயன்’ என்கிற ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் இந்த தம்பி நடித்திருந்தார் :-) ஆக்ஷன் படம்தான், ஓகே ரகம்.

போராளி பார்க்கணும் என்கிற எண்ணம் ஏற்ப்படல :p

கலைஞர் பற்றிய கூற்று உண்மை!!!

Reply

r.v.saravanan December 26, 2011 at 3:24 PM

நாங்கெல்லாம் ஒரே நாளில் நாலு காட்சியும் பார்க்கிற ஆளுங்க எங்களுக்கேவா!

அதானே கிரி நானும் உங்களை போல் same blood

கிரி நான் நேற்று காலை ராஜபாட்டை படமும் நேற்று மதியம் மௌன குரு படமும் சென்றேன்

மௌனகுரு படம் என்னை அசத்தியது இந்த படத்தை பற்றி என் தளத்தில் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன் படம் படு யதார்த்தம்

Reply

தனபாலன் December 26, 2011 at 7:22 PM

பார்க்கவில்லை நண்பரே! விமர்சனத்தை விட கொசுறு அருமை!

Reply

rajesh v December 26, 2011 at 10:43 PM

Mr.கிரி,

I saw the movie already in pvr, chennai. As usual, our taste are same (But, ungal mayakam yenna vimarsanam parthu, andha padathukku poi ungalai nainaithu “teeth grind” panniyadhu veru vishayam).
I like the movie very much. But, no one is interested in this movie. When i went to pvr, only last three rows were full. Today, some of my friends planned to watch “rajapattai”. I recommend them mouna guru. But, they ignored my recommendation. I think luck and timing didnt favour the director inspite of his hard work. There is no chance of late pick up also.

Reply

rajesh v December 26, 2011 at 10:45 PM

வாகை சூடவா படத்தில் பார்த்து இருந்தாலும் அதை விட இதில் ரொம்ப அழகாக இருக்கிறார் (எனக்கு).

————————————————————————————————-
எனக்கு இல்லை , நமக்கு . :D

Reply

கிரி December 27, 2011 at 8:50 AM

@ஜீவதர்ஷன் நான் ஆரண்யகாண்டம் DVD க்காக காத்திருக்கிறேன் :-)

@சரவணன் கண்டிப்பா எழுதுங்க.

@தனபாலன் :-)

@ராஜேஷ் ஹா ஹா மயக்கம் என்ன உங்களை ரொம்ப டென்ஷன் பண்ணி விட்டது போல.. எனக்கு ரொம்பப் பிடித்தது. நான் இரண்டு முறை பார்த்தேன்.

மௌனகுரு மெதுவாக செல்லும் படம் என்றாலும் சிறப்பான திரைக்கதை. நல்ல படம் வரவில்லை என்றால் புலம்புறாங்க.. எடுத்தால் யாரும் பார்க்க மாட்டேங்குறாங்க! மசாலா படத்தை அதிகம் விரும்புறாங்க… இது போல இருந்தால் எப்படி நல்ல படம் வரும்?

இனியாக்கு ரசிகர் எண்ணிக்கை அதிகமாகும் போல இருக்கே! ;-)

என்னோட Blog facebook fan page ல இணைந்தது நீங்களா!

Reply

Arun December 27, 2011 at 9:29 AM

மௌனகுரு படம் எனக்கு ரொம்ப புடிச்சது கிரி

“இனியாக்கு ரசிகர் எண்ணிக்கை அதிகமாகும் போல இருக்கே!”
இன்னும் ஒன்னு கூடியாச்சு .. என்ன சொன்னேன் :)

-அருண்

Reply

r.v.saravanan December 27, 2011 at 11:40 AM

வாகை சூடவா படத்தில் பார்த்து இருந்தாலும் அதை விட இதில் ரொம்ப அழகாக இருக்கிறார் (எனக்கு).

————————————————————————————————-
எனக்கு இல்லை , நமக்கு .

இனியாக்கு ரசிகர் எண்ணிக்கை அதிகமாகும் போல இருக்கே!

எஸ் நானும் அதில் ஒருவன் ஹா ஹா

Reply

Mohamed Yasin December 27, 2011 at 2:58 PM

கலைஞர் பற்றி சொன்னது…. ராம் படத்துல போலிஸ் ஸ்டேஷன் சீன்ல கஞ்ஜா கருப்பு காமிடிய நினைவு படுத்துசி….. எல்லாத்துக்கும் கலைஞர், கலைஞர்….

Reply

rajesh v December 27, 2011 at 6:39 PM

என்னோட Blog facebook fan page ல இணைந்தது நீங்களா!

———————————————————————————————–
yes giri,

Myself with red t-shirt and i am carrying my daughter DIYA RAJESH

Reply

ராஜ் December 27, 2011 at 10:12 PM

அண்ணே !

வம்சத்துக்கு அடுத்து பஞ்ச் டயலாக் பேசி பஞ்சரான படம் கூட ஒண்ணு பண்ணி இருக்காப்ல :)

Reply

r.v.saravanan December 28, 2011 at 7:37 PM

கிரி என் தளத்தில் மௌன குரு பற்றி பகிர்ந்திருக்கிறேன்

http://kudanthaiyur.blogspot.com/2011/12/blog-post_27.html

Reply

மென்பொருள் பிரபு December 29, 2011 at 5:21 AM

//விமர்சனத்தை விட கொசுறு அருமை!//

அதே.. அதே!

Reply

மென்பொருள் பிரபு December 29, 2011 at 5:23 AM

//நல்ல படம் வரவில்லை என்றால் புலம்புறாங்க.. எடுத்தால் யாரும் பார்க்க மாட்டேங்குறாங்க!//

ஆஹா..நெத்தியடி.!

Reply

கிரி December 30, 2011 at 10:24 AM

@அருண் சரவணன் யாசின் :-)

@ராஜேஷ் உங்க பொண்ணு ரொம்ப அழகு :-)

@ராஜ் எப்படி நடித்தாலும் பஞ்சர் பண்ணுவதை குறிக்கோளா அனைவரும் வைத்து இருக்காங்க போல ;-)

@பிரபு நன்றி :-)

Reply

Kamesh January 12, 2012 at 8:33 PM

கிரி,

நீங்க சொன்நீங்கன்னுதன் தான் டவுன்லோட் பண்ணேன்… படம் ஒகே தான்..

Iniya was good.. yeah one more to the list. Rajapattai.. konjam lightaa.. kadi.

Kamesh

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed