BSNL
BSNL வாடிக்கையாளர்கள் விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதியை இணையத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் கொடுத்துள்ள ஆயிரக்கணக்கான எண்களில் இருந்து நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உண்மையிலேயே இது ரொம்ப அருமையான சேவை. எண்ணை பதிய விரும்புவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை (லிங்க்) க்ளிக் செய்து பயன்பெறலாம்.
http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/ch/gsm_choice.asp – Chennai Cirlce
http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/tn/gsm_choice.asp – Tamilnadu Circle
ஆந்திரா அரசுப்பேருந்து
ஆந்திராவில் தனியார் பேருந்துகளின் போட்டியை சமாளிக்க அரசுப் பேருந்துகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. தற்போது இதில் பயணம் செய்பவர்களுக்கு காலையில் இலவச பொங்கல் இட்லி வடை மதியம் சைவ பிரியாணி , சிக்கன் பிரியாணி, மீன் வறுவல் போன்றவை தருகிறார்கள் தண்ணீர் பாட்டிலுடன். இதை நாம் முன்பதிவு செய்யும் போதே என்ன வேண்டும் என்று குறிப்பிட்டு கொடுத்து விடலாமாம். இந்த சேவையை செய்த பிறகு 20 சதவீத வருவாய் கூடி இருக்கிறதாம். நம்ம ஊருல ஜெ 3000 புதிய பேருந்துகளை வாங்க கூறி இருக்கிறார். பேருந்து வாங்குவது பிரச்சனை இல்லை அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இது எந்தக் காலத்திலும் நடக்காது.
நீங்கள் யாராவது இது போல பேருந்தில் பயணித்தீர்களா?
இந்திய உணவு கழக (விரையக்) கிடங்கு
கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய உணவு கழக கிடங்குகளில் ஒரு லட்சம் டன் தானியங்கள் வீணாகியுள்ளனவாம். இது எலி, பறவை, கொக்கி போட்டு மூட்டை தூக்குவது மற்றும் ஈர பதத்தால் இது போல வீண் ஆகியதாம். நமது நாட்டில் எத்தனை பேர் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்கிறார்கள் இங்கே டன் டன்னாக வீண் செய்து கொண்டு இருக்கிறார்கள். வயித்தெரிச்சலாக உள்ளது. பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பில்லாத தனத்தால் எவ்வளவு சீர்கேடுகள்.
USB
USB என்றாவது சரியா போட்டு இருக்கீங்களா!
எப்போதும் எனக்கு ததிங்கினத்தோம் தான்
சென்னை மெட்ரோ ரயில்
சென்னையில் மெட்ரோ ரயில் வேலையின் அடுத்த கட்டமாக பாதாள சுரங்கம் தோண்டுவதற்கு சீனாவில் இருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. இதை செயல்படுத்துவதற்க்காக சீனாவில் இருந்து நிபுணர்கள் வரப்போகிறார்கள். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைய இன்னும் குறைந்தது நான்கில் இருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன். இது செயல்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு மிக வசதியாக இருக்கும் காரணம் இது அண்ணா சாலை உட்பட பல முக்கியமான சாலைகளை கடந்து செல்கிறது. தற்போது மெட்ரோ ரயில் அண்ணா சாலை தவிர்த்து மற்ற இடங்களில் தான் உள்ளது ஆனால் முக்கிய அலுவலகங்கள் அண்ணா சாலையை ஒட்டியே உள்ளன.
Online Dust bin
பழைய பொருட்கள், பால் பாக்கெட் கவர்கள், பழைய செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் கவர்கள், இரும்பு, அலுமனியம் கழிவுகள் போன்றவற்றை நம் வீட்டுக்கே வந்து பெற்று செல்கிறார்கள். இதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. இதற்கு நாம் இவர்களுடைய இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் கிளைகள் சென்னை அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் செயல்படுகிறது. இது எந்த அளவிற்கு சரியாக வரும் என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும் பயன்படுத்த நினைப்பவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். தகவல் நன்றி தட்ஸ்தமிழ்.
இணைய தளம் http://kuppathotti.com/
தனுஷ் சிம்பு
தனுஷ் கொலைவெறி டூ தாறுமாறாக ஹிட் ஆகி விட்டதால் அதற்கு போட்டியாக!! சிம்புவும் உலக சமாதானத்தை!!! வலியுறுத்தும் ஒரு பாடலை வெளியிட்டு இருக்கிறார். இனி கொஞ்ச வருசத்துக்கு கொலைவெறி டி புகழை அடித்துக்கொள்ள முடியாது. அந்தப்பாடல் எங்கேயோ போய் விட்டது.. தனுஷ் மம்மம் சிங் மற்றும் ஜப்பானிய பிரதமருடன் தேநீர் அருந்தும் லெவலுக்கு போய் விட்டது எனவே சிம்பு மனதை தேற்றிக்கொண்டு கொஞ்ச நாள் அமைதியாக இருப்பது நல்லது. இவருடைய காணொளியும் ஐந்து லட்சம் பார்வைகளை தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது.
பகவத் கீதை
ரஷ்யாவில் “பகவத் கீதை பயங்கரவாதத்தை தூண்டுவதாக உள்ளது அதனால் இதை மற்ற தடை செய்யப்பட்ட நூல்களோடு இதையும் சேர்க்க வேண்டும்” என்று ஆர்த்தோடாக்ஸ் சர்ச் ஒன்று வழக்கு தொடர்ந்து இருந்தது இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இது சரி எனவும் தவறு எனவும் விவாதங்கள் சென்றது வழக்கம் போல. இது குறித்து பாராளுமன்றத்தில் கடும் விவாதம் நடை பெற்று இதை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டன. இது குறித்து இந்தியா ரஷ்யாவுடன் பேசியது பின் ரஷ்யா இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து ஒட்டுமொத்த ரஷ்யாவினுடையது அல்ல என்று கூறி இருந்தார்கள். இந்நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. இது அறியாமையால் தூண்டுதலால் செய்யப்பட்டது இந்த மனு அபத்தமானது என்று கூறி உள்ளது.
காமிக்ஸ்
நான் சிறு வயதில் மிகத்தீவிரமான காமிக்ஸ் வாசகன். எங்கே சென்றாலும் என்னோட அப்பாவை தொல்லை செய்து பேருந்து நிலையத்தில் விற்கும் லயன், முத்து, ராணி காமிக்ஸ் என்று வாங்கித்தரக் கூறி படிப்பேன். இரண்டு மூட்டை நிறைய புத்தங்களை வைத்து இருந்தேன் பின் ஹாஸ்டல் வந்த பிறகு அதை பாதுகாக்க முடியாமல் போய் விட்டது. என் அப்பாவின் யோசனையால் சிலவற்றை பைண்டிங் செய்து வைத்து இருந்தேன் அதில் ஒன்று இரண்டு மட்டும் இன்னும் இருக்கிறது.
தற்போது முத்துக்காமிக்ஸ் அதி தீவிர ரசிகர் “முத்துவிசிறி” அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் நான் சில காட்சிகளைக் கூறி இந்தப் புத்தகம் உங்களிடம் உள்ளதா? என்று கேட்டேன். கொஞ்ச நேரத்தில் நீங்கள் கூறுவது தங்க வேட்டையா! என்று கேட்டு படம் அனுப்பி விட்டார். அசந்து விட்டேன்! இந்தப்புத்தகம் மீது நான் பைத்தியமாக இருந்தேன் குறைந்த பட்சம் 30 முறைக்கும் மேலே இதை படித்து இருப்பேன். ஆர்ச்சி என்றால் உடனே வாங்கி விடுவேன்.
சில காமிக்ஸ் புத்தகங்கள் அட்டை ஸ்கேன் கொடுக்க முடியுமா என்று கேட்டார். என்னிடம் தற்போது இல்லை நீங்கள் யாராவது இவரைப்போல காமிக்ஸ் ரசிகர் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் [contact at giriblog.com]. இவருக்கு உதவி செய்வோம். இவரது தளம் http://www.muthucomics.com இங்கே பல காமிக்ஸ் தகவல்களை வைத்து இருக்கிறார். இவரது தளத்தில் மற்ற காமிக்ஸ் ரசிகர்களின் தளங்களுக்கும் இணைப்பு இருக்கிறது. முத்து காமிக்ஸ் பதிப்பாசிரியர் தளம் http://lion-muthucomics.blogspot.com/
ஹி ஹி ஹி
உடனடி கொசுறு மற்றும் சுவாரசிய தகவல்களுக்கு என்னுடைய தளத்தின் facebook page https://www.facebook.com/giriblog ஐ பார்க்கவும்.
Related posts:
![USB USB கொசுறு செய்திகள் [30 12 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/12/USB.jpg)
![Password Cartoon Password Cartoon கொசுறு செய்திகள் [30 12 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/12/Password-Cartoon.gif)


{ 7 comments… read them below or add one }
காமிக்ஸ் வலைப்பூ பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி.
ஐந்தாம் தேதி தொடங்கும் சென்னை புத்தக காட்சியில் பல காமிக்ஸ் புத்தகங்களை வாங்கலாம். ஒரு புதிய புத்தகமும் வெளியிடப்படவிருக்கிறது.
USB போடுவதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது. USB படம் போட்ட பக்கம் மேல்புறமாக( ஹோரிசாண்டளாக போடும்போது) அல்லது உங்கள் பக்கமாக(வெர்டிகளாக போடும்போது) வருமாறு போட்டால் சரியாக போகும்.
கிரி சார், அந்த USB படத்தில் ஒரு தவறு.. அதில காட்டியிருக்கறமாதிரி போட்டாலே USB-ஐ Portல போட்றலாம்..
@முத்துவிசிறி சார், என்னோட பழைய கம்ப்யூட்டர்ல Port-ஐ தலைகீழா பிக்ஸ் பண்ணியிருந்தாங்க…
சென்னையில் எங்கு பார்த்தாலும் பாலம் பாலம்……….. இது வசதி என்பதை விட கொடுமையாக இருக்கிறது. எல்லாமே குறுக்கி குறுகலாக மாற்றி நரக வாழ்க்கையை சென்னை நகர மக்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் சொன்ன ரயில் சேவை என்றாலும் முக்கியமான தேவை சில பல அலுவலகங்களை சென்னையை விட்டு வெளியே மாற்றினால் தான் ஜன நெரிசல் குறையும். திருப்பூருக்குள் கால் வைத்து வீட்டு சந்தில் நடந்து வரும் அனுபவித்த காற்று சுகத்தை அங்கு எங்குமே அனுபவிக்க முடியல.
நல்ல தொகுப்பு சார்! BSNL தகவலுக்கு நன்றி! USB எனக்கும் அப்படி தான்! பகவத் கீதை பயங்கரவாதத்தை தூண்டுவதாக உள்ளதா? ஹ..ஹா. நன்றி Sir!
தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
“மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?”
சிம்புவை பார்க்க பாவமா இருக்கு, தன தந்தையை போல வயித்தெரிச்சலை உள்ளே வைத்திருக்க தெரியாத அப்பாவி; ஆனால் என்ன அப்பாபோல வயித்தெரிச்சலை கண்ட இடத்திலையும் கக்காம வேறு ரூபத்தில காட்டிராறு :p
தல எல்லா தகவலும் சூப்பர்….
ராணி காமிக்ஸ் பரம விசிறி தல நான்..
1. மாயாவி
2 . மந்திரவாதி mantrick
இப்படி சொல்லி கிட்டே போகலாம்… எங்க அப்பா நான் சம்பாத்திகுரது இதுலே போகுது நு சொல்லுவார் … எதுவும் download இருக்குமா தல அந்த புக்ஸ் எல்லாம் படிக்க?
-அருண்