இணையம் பற்றிய செய்திகள் [20-12-2011]

Android

கூகுளின் Android வேகமாக வளர்ந்து வரும் மொபைல் இயங்கு தளம் ஆகும் இது வரை 200 மில்லியன் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம். மிகக்குறைந்த நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

தற்போது ஆப்பிளின் iOS க்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. விரைவில் முதல் இடத்தைப் பிடித்து விடும் என்று கூறி இருக்கிறார்கள். தினமும் 550000 சாதனங்களில் Android இயங்கு தளம் நிறுவப்படுகிறது.

Apple User Guide

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆப்பிளின் iOS இயங்கு தளத்தின் புதிய பதிப்பான iOS 5 பலரிடையே வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பதை இதை பயன்படுத்திக்கொண்டு இருப்பவர்கள் அறிவார்கள்.

இதை எப்படி பயன்படுத்துவது என்ற User Guide கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரும்புவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

iPhone   iPad   iPod

Google Music

ஆப்பிள் iTunes க்கு போட்டியாக கூகுள் Google Music என்ற வசதியை அறிமுகப்படுத்தி இருப்பதை பலரும் அறிந்து இருப்பீர்கள். தற்போது இது அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தும் படி உள்ளது விரைவில் அனைவருக்கும் இந்த வசதி கொடுக்கப்படும். இரண்டு பேருக்கும் சரியான போட்டி போல 🙂 .

Internet Speed

இணையம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது கடந்த பத்து வருடத்தில் அசுர வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இணையம் என்றாலே அதில் வேகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இணைய வேகத்தில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

இன்று வரை முன்னணியில் இருப்பது தென் கொரியா தான் அதன் பிறகு ஹாங்காங் ஜப்பான் என்று ஆசிய நாடுகளே முன்னணியில் உள்ளது. அமெரிக்காவில் கூகுள் 1 GB வேகத்தில் பைபர் இணைப்புகளை கொடுத்து வருகிறது.

இந்தியாவில் தற்போது தான் வேகத்தில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாமெல்லாம் குறைந்தது 30 வருடங்களாவது இதில் பின் தங்கி இருப்போம். சிங்கப்பூரில் பைபர் இணைப்பு கொடுத்து வருகிறார்கள்.

இணையத்தின் மீது எனக்கு ஆர்வம் என்பது என்னுடைய தளத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரிந்து இருக்கும். இந்த வசதி கொடுக்கப்பட்டவுடன் இதைப் பெற்று விட்டேன். தற்போது என் வீட்டில் இருப்பது 100 MBPS பைபர் இணைப்பு.

ஒரு நொடிக்கு இரண்டு MB தரவிறக்கம் (download) ஆகும். குறிப்பாக மைக்ரோசாப்ட் கூகுள் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்தால் மின்னல் வேகத்தில் தரவிறக்கம் ஆகும். 1 GB எல்லாம் 10 நிமிடத்தில் தரவிறக்கம் செய்து இருக்கிறேன்.

100 MBPS பைபர் சேவைக்கு மாதம் நமது இந்திய மதிப்பில் 2400 ருபாய் வசூலிக்கிறார்கள் (60 SGD). எந்தக்கட்டுப்பாடும் கிடையாது எந்த மறைமுகக் கட்டணமும் கிடையாது எத்தனை GB வேண்டும் என்றாலும் நீங்கள் தரவிறக்கம் (Download) செய்ய முடியும்.

வேகம் தாறுமாறாக இருக்கும் வாம்மா மின்னல்! மாதிரி 🙂 எதுவும் பிரச்சனை என்றால் உடனடியாக சரி செய்து விடுவார்கள், குறைந்த பட்சம் நமக்கு அப்டேட்டாவது கொடுப்பார்கள்.

நமது ஊரில் மோசமான சேவையை வழங்கி இதை விட மிக அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறார்கள் வாடிக்கையாளர் சேவையும் படு மோசமாக உள்ளது.

என்னதான் வளர்ச்சி பெற்றாலும் பழைய நினைவுகளை அசை போடுவது என்பது சுகமான ஒன்று. இந்தப்படத்தில் 180 MB யை தரவிறக்கம் செய்கின்ற போது 39 வருடம் காட்டுகிறது 🙂 Image Credit howtogeek.com

Twitter Mistake

ஹாலிவுட் நடிகர் Charlie Sheen இந்த வருடம் தான் ட்விட்டரில் இணைந்து இருந்தார் இணைந்த கொஞ்ச நாட்களிலேயே பலரை பின்தொடர்பவர்களாகப் பெற்று விட்டார்.

கொஞ்ச நாள் முன்பு இளம் பிரபல பாடகரான Justin Bieber க்கு தனிப்பட்ட முறையில் ஒரு பார்ட்டிக்கு அழைப்பு விட தன்னுடைய தொலைபேசி எண்ணை அவருக்கு அனுப்ப நினைத்து ட்விட்டரில் அவரை பின் தொடரும் 5 மில்லியன் பின்தொடர்பவர்களுக்கும் சேர்த்து அனுப்பி விட்டார் தவறுதலாக.

இதன் பிறகு என்ன ஆகி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும் 😉 .

Google Reader

இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் கூகுள் ரீடர் பற்றி அறியாமல் இருக்க மாட்டார்கள். தளத்திற்கு வராமலே ஒரே இடத்தில் அனைவருடைய தளங்களையும் எளிதாக படிக்க முடியும்.

ஒரு சிலர் தங்களுடைய தளத்திற்கு வாசகர்களை நேரடியாக வர வைக்கவும் ஹிட்ஸ் அதிகம் கிடைக்கவும் அலெக்சா மதிப்பில் உயரவும் ரீடரில் கொஞ்சம் மட்டும் தெரியும் படி அமைத்து இருப்பார்கள் மீதி படிக்க வேண்டும் என்றால் தளத்திற்கு வர வேண்டும் என்று அமைத்து இருப்பார்கள்.

இதைப்போல் தெரிவதை முழுதாக படிக்க பல வசதிகள் ஏற்கனவே உள்ளது அது போல உள்ள இன்னொரு வசதி பின்வரும் தளம் ஆகும் இதில் நமக்கு வேண்டிய தளத்தின் முகவரியைக் கொடுத்து அது தரும் முகவரியை நமது ரீடரில் இணைத்து விட்டால் நாம் அவர்கள் குறைத்து வெளியிட்டாலும் முழுதாக படிக்க முடியும்.

இதில் ஒரு குறை உள்ளது சில நேரங்களில் தாமதமாக நமக்கு வந்தடையும் மற்றபடி இது பயனுள்ளது. செல்ல வேண்டிய தளம் http://fulltextrssfeed.com/

facebook status update limit increased

facebook ஸ்டேடஸ் மெசேஜ் ல் நாம் முன்பு 5000 எழுத்துக்கள் வரை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம் அதற்கு மேல் facebook அனுமதிக்காது. தற்போது 5000 என்று இருந்ததை 63206 எழுத்துக்களாக உயர்த்தி உள்ளது, இதற்கு கூகுள் + ம் (100000) ஒரு காரணம்.

இனி ஸ்டேடஸ் மெசேஜ் ல் நீங்கள் 63206 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம். facebook இது வரை 160 420 500 5000 63206 என்று உயர்த்தி வந்து இருக்கிறது ஆனால், பிரபலமான ட்விட்டர் தான் முதலில் இருந்து கொடுத்துக்கொண்டு இருக்கும் அதிகபட்ச அளவான 140 எழுத்துக்களிலேயே தொடர்ந்து இருக்கிறது.

இதன் பிரபலத்திற்கு இதுவும் ஒரு மிக முக்கியக் காரணம்.

Google products shutdown

கூகுள் தன்னுடைய பல சேவைகளை நிறுத்தி வருகிறது. இதற்கு இரண்டு காரணம் ஒன்று பல சேவைகள் தோல்வி அடைந்து விட்டது மற்றொரு காரணம் முக்கிய சேவைகளில் கவனம் செலுத்தவும் ஊழியர்களின் உழைப்பை சரியான முறையில் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

பின்வரும் சேவைகளில் சில நிறுத்தப்பட்டு விட்டது சில நிறுத்தப்படப்போகிறது. கூகுள் தற்போது என்ன முடிவு செய்து இருக்கிறது என்னவென்றால் நிறைய சேவைகளை வைத்து அரைகுறையாக இருப்பதை விட குறைவான சேவை கொடுத்தாலும் பயனாளர்களுக்கு நிறைவான சேவை தர வேண்டும் என்பதே ஆகும்.

நல்ல விஷயம் தான்.

Google Buzz, Knol, Gears, Bookmarks Lists (Not Bookmark), Google Friend Connect, Wave.

Apple – Twitter

iOS 5 வெளி வந்த போது அதில் ட்விட்டர் ஐ இணைத்து இருந்தார்கள். இதன் பிறகு ட்விட்டரில் இணைபவர்கள் 25 % அதிகரித்து இருக்கிறார்களாம். Power of Apple 🙂

Google Chrome

கூகுள் க்ரோம் மீண்டும் ஒரு சாதனை செய்து இருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் தான் ஃபயர்பாக்சை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது.

தற்போது UK ல் IE யை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. US ல் இன்னும் IE யே முதல் இடம் வகிக்கிறது விரைவில் க்ரோம் அனைத்து இடங்களிலும் முதல் இடத்தைப் பிடிக்கப் போகிறது.

மூன்று வருடம் முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட உலவி (Browser) கிட்டத்தட்ட 16 வருடமாக முன்னணியில் இருக்கும் IE யை வீழ்த்துவது என்பது சாதாரண விசயமில்லை. கூகுளின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

க்ரோம் ன் தீவிர ரசிகன் என்ற முறையில் எனக்கு இது மிக மகிழ்வான செய்தி.

கொசுறு 1

கடந்த வார இறுதியில் சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில் “பாசமலர்” திரைப்படம் பார்த்தேன். ஏற்கனவே எப்போதோ பார்த்து இருந்தாலும் மறந்து இருந்தது. அண்ணன் தங்கை பாசத்தை இதை விட சிறப்பாக காண்பிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

எனக்கு என்னுடைய அக்கா அம்மா அப்பா இவர்கள் மீது அளவு கடந்த பாசம் இந்தப்படத்தைப் பார்க்கும் போது ஏனோ பல நினைவுகள் வந்து கண்ணீரே வந்து விட்டது.

நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு அருமை ஒரு பாடல் வரும் போது என்னோட பையன் அழைத்தான் என்று வெளியே சென்று வருவதற்குள் சிவாஜி அவர்கள் படையப்பா ரஜினி போல ஒரே பாடலில் பணக்காரனாகி விட்டார் 🙂 .

இதில் என்ன நடந்தது என்று தான் புரியவில்லை. மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்.

கொசுறு 2

இது சிங்கப்பூர் வாழ் மக்களுக்காக 🙂 சிங்கப்பூரில் டாக்சி கட்டணத்தை கடுமையாக உயர்த்தி விட்டார்கள். கிட்டத்தட்ட 16000 கார்களை வைத்துள்ள Comfort டாக்சி கட்டணத்தை உயர்த்தியதோடு பீக் நேரத்திற்கான கால அளவையும் மாற்றி விட்டது.

தற்போது முன்பதிவு செய்தால் 8 SGD ஆகும் முன்பு இதே 5.20 SGD ஆக இருந்தது. இன்றில் இருந்து SMRT யும் கட்டணத்தை உயர்த்தி விட்டது. எனக்கு கட்டண உயர்வைப் பற்றி கவலையே இல்லை!

அந்த அளவிற்கு தெனாவெட்டு ஆகி விட்டதா என்று டென்ஷன் ஆகி விடாதீர்கள் ஹி ஹி ஹி நான் டாக்சியை பயன்படுத்துவதே இல்லை விமான நிலையம் வர செல்ல மட்டுமே டாக்சி பயன்படுத்துவேன்.

அரசே அசத்தலான பொது போக்குவரத்து செய்து இருக்கும் போது இதெல்லாம் எனக்கு ரொம்ப ஓவர். டாக்ஸிக்காக மாதம் 1000 SGD ஒதுக்குகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்!!! 1000 SGD = 40000 INR தலை சுத்துதா! 😉 .

{ 12 comments… add one }
 • Arasu Selvam December 20, 2011, 10:12 AM

  Good article giri sir….

 • Ram December 20, 2011, 10:57 AM

  ஆனால் இன்னும் இந்திய மொழிகளுக்கான “இந்திக் பொன்ட் சப்போர்ட்” வரவில்லையே . அது ஒரு பெருங்குறையாகவே உள்ளது

  • Balachandran December 26, 2011, 6:08 PM

   android indic font support is there finally in ICS 4.0.3

 • நட்புடன் ஜமால் December 20, 2011, 1:01 PM

  asusual many infos

  Until now I am using “Google Friends Connect”, if they stop what will be the change

  awaiting your reply Giri 🙂

 • rajesh v December 20, 2011, 7:01 PM

  1000 SGD = 40000 INR

  ———————————————————-

  My two months salary. 🙁

 • மாணவன் December 21, 2011, 4:55 AM

  இணையம்பற்றிய தகவல்கள் புது புது தகவல்களுடன் வழக்கம்போலவே அசத்தல்!

 • Arun December 21, 2011, 6:33 AM

  நல்ல தகவல் தல .. கொசுறு சூப்பர்

  – அருண்

 • ponmalar December 21, 2011, 8:41 AM

  அனைத்து செய்திகளும் விறுவிறுப்பாக இருந்தன. பகிர்வுக்கு நன்றி.

 • கிரி December 21, 2011, 10:49 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ராம் உண்மையிலேயே இது மிகப்பெரிய குறை. கூகுள் வசம் அனைத்து வசதிகளும் உள்ளது இருந்தும் ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் தமிழ் இல்லை என்பதாலே பலரும் வர யோசிக்கிறார்கள் தமிழ் கொடுத்தால் இன்னும் பலர் Android வருவார்கள் என்பது நிச்சயம்.

  @ஜமால் கூகுள் Non Blogger தளங்களுக்கு மட்டுமே இதைச் செய்கிறது, உங்களுக்கு பிரச்சனை இல்லை (பின்னாளில் Blogger க்கும் நீக்க அதிக வாய்ப்புண்டு). மற்றவர்கள் இதற்கு பதிலாக Google + fan page வைத்துக்கொள்ள வேண்டும். Google Friends connect வரும் மார்ச் 1 2012 முதல் மூடு விழா காண்கிறது.

  @ராஜேஷ் உங்கள் சம்பளத்தை டாலருடன் ஒப்பிடாதீர்கள் குறைவாகவே தோன்றும் 🙂

 • பாமரன் December 21, 2011, 12:28 PM

  கிரி நானும் சிங்கப்பூருக்கு 2005 ல போய் இருந்தேன். நம்ம தோஸ்துங்க மூணு பேரு அங்கேயே இருக்காங்க. வசந்த்தம் டிவி அப்போவே ரொம்ப நல்ல நிகழ்ச்சி எல்லாம் ஒளி பரப்புவாங்க. எனக்கு அதுல ரொம்ப பிடிச்சிடு செய்திகள் தான். ஒரு பெண்மணி, (நல்ல தமிழ் பெயர், மறந்து போச்சு), ரொம்ப நல்ல உச்சரிப்போட வாசிப்பாங்க. செய்தியும் crisp & sharp ஆ இருக்கும். தமிழ் நாட்டு சானல்கள் எதுவும் அந்த லெவலுக்கு இல்லை. இப்போ ‘புதிய தலைமுறை’ செய்திகள் கொஞ்சம் புதுசா நல்லா இருக்கு.

  அதே போல நானும் அங்க இருந்த 15 நாள்ல, பெரும்பாலும் பஸ்ல தான் பயணம் போக விரும்புவேன்.

 • கிரி December 21, 2011, 1:37 PM

  பாமரன் நீங்க சொல்வது சரி தான். வசந்தம் ல செய்திகள் நல்லா சுவாரசியமா கொடுப்பாங்க. பல நாட்டு செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க உள்ளூர் செய்தி மட்டுமே அல்லாமல். புதியதலைமுறை பலரும் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்கள்.

  நான் சென்னையில் இருந்த போதே ஆட்டோவில் போகாதவன் சிங்கப்பூர் வந்தா டாக்சி ல போகப்போகிறேன் 🙂 செலவு செய்வேன் ஆனால் என்னவோ இது போன்றவற்றிக்கு செலவு செய்ய மனது ஏற்றுக்கொள்வதில்லை. அலுங்காம குலுங்காம சென்று வர பேருந்து ரயில் இருக்கும் போது என்னை பொறுத்தவரை டாக்சி அவசியமற்றதே.. அவசரமான தேவைகள் ஏற்படும் நேரம் தவிர. நான் இது வரை இந்த நான்கு வருடங்களில் மொத்தமே 5 முறை டாக்சியில் சென்று இருந்தாலே அதிகம் (விமான நிலையங்கள் தவிர்த்து)

 • கொச்சின் தேவதாஸ் July 17, 2013, 6:40 PM

  180mp க்கு 39 வருடம் என்று உள்ளதே இப்போது எவ்வளவு தரவிரக்கம் ஆகி உள்ளது?இன்னும் எத்துனை வருடம் பாக்கி உள்ளது?
  வாழ்க வளமுடன்
  கொச்சி தேவதாஸ்

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz