சினி மசாலா மிக்ஸ் [22-12-2011]

by கிரி on December 22, 2011

திரைச்செய்திகள் எழுதி ரொம்ப நாள் (மாதம்) ஆச்சு! அதனால ஜாலியா ஒரு ரவுண்டு வருவோம் icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011] சென்ற வருடம் பதிவிட்டேன் அதன் பிறகு தற்போது தான்…

Power Star

Lathika 213x300 சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]சென்ற முறை சூப்பர் ஸ்டாருடன் துவங்கினால் இந்த முறை பவர் ஸ்டாருடன் துவங்குவோம் icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011] போகிற போக்கைப் பார்த்தால் பவர் ஸ்டார் அகில உலக ஸ்டார் ஆகி விடுவார் போல இருக்கு ஹி ஹி கொஞ்சம் (ரொம்பவே) ஓவரா இருக்கோ! இவர் பண்ணுற அட்டூழியத்தைப் பார்த்து பலரும் கதி கலங்கி போய் இருக்கிறார்கள். இவருடைய லத்திகா படத்தை 300 நாள் பக்கம் ஓட்டிட்டார்!!! வெற்றிகரமாக. பேட்டியில் எனக்கு சரியான போட்டி ரஜினிகாந்த் தான் மற்றவர்களோடு ஒப்பிட்டு என்னை அசிங்கப்படுத்தாதீர்கள் என்று கூறி பலருக்கும் பேதி கிளப்பி இருக்கிறார்.

சென்னையில் நடக்கும் உலகத்திரைப்பட விழாவில் இவருடன் புகைப்படம் எடுக்க ஒரே அடிதடியாம். எல்லோரும் இவரை காமெடி பீசாக நினைத்து இணையத்தில் வறுத்துக்கொண்டு இருக்க இவரோ தன்னை பிரபல ஸ்டாராக நினைத்து நாளுக்கு நாள் இவரது அட்டகாசத்தை அதிகம் செய்து கொண்டே இருக்கிறார். ஏம்பா! திரையுலகில் இந்த கொடுமையை தட்டிக்கேட்க யாருமே இல்லையா. இவருடைய அடுத்தப் படம் பேரு “ஆனந்தத் தொல்லை”!!! சரியாத்தான் வைத்து இருக்காரு icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]

கொசுறு: இவரோட லத்திகா படம் பேரு இவரோட பொண்ணு பேராம்.. இப்படி தன்னோட பேரை நாஸ்தி செய்ததற்கு பவர் ஸ்டார் மேல அவரோட பொண்ணு கோபமாகி பேசவே மாட்டேங்குறாராம். இதை பவர் ஸ்டாரே கூறினார்! இது எப்படி இருக்கு icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]

நண்பன்

Nanban 191x300 சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]ஷங்கர் படம் ஒன்று இவ்வளவு விரைவாக அதிக பரபரப்பு இல்லாமல் முடிந்து இருப்பது எனக்கு தெரிந்து இதுவே முதல் முறை. ஹிந்திப் படமான 3 இடியட்சை தமிழில் ரீமேக் செய்கிறார்கள் ஷங்கர் படம் என்பதால் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. 3 இடியட்ஸ் பார்த்த போதே இதை தமிழில் எடுத்தால் நன்றாக இருக்கும் ஆனால் மூன்று ஹீரோக்கள் எப்படி சேர்ந்து நடிப்பார்கள் தமிழில் என்று நினைத்து இருந்தேன் ஆனால் சமீபமாக ஹிந்திப் படங்கள் போல தமிழிலும் பலர் இணைந்து நடித்து வருவது நல்ல ஆரோக்கியமான சூழலாகத் தெரிகிறது. படம் பொங்கலுக்கு வெளியாகப்போகிறது, பாடல்களை கோவையில் வெளியிடப்போகிறார்களாம்.

Read: அனைவரும் பார்க்கவேண்டிய படம் “3 Idiots” (Hindi)

ஆரண்ய காண்டம்

இந்த ஆண்டு வெளியாகிய படங்களில் நான் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கும் படம் ஆரண்ய காண்டம் ஆனால் சிங்கப்பூரில் இந்தப்படம் வெளியாகவில்லை. DVD அனுமதியும் இல்லாததால் DVD யும் கிடைக்கவில்லை இணையத்திலும் பிரிண்ட் சரி இல்லை. விரைவில் எப்படியாவது பார்க்க வேண்டும். இந்தப்படத்தை சென்னை உலகத் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்காமல் போனதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள் இதுவும் படத்தைப் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது. இந்தப்படத்தின் இயக்குனர் பற்றிய ஆச்சர்யமான விஷயம் இதுவரை இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லையாம். உங்களால் நம்ப முடிகிறதா! icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]

விஸ்வரூபம்

கமல் தன்னோட அடுத்த மெகாப் படமான “விஸ்வரூபம்” படத்தை விரைவாக எடுத்து வருகிறாராம். தசாவதாரம் படத்தை விட இது பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். இதை இயக்குவதும் தயாரிப்பதும் கமல் தான் என்று அறிவீர்களே தானே! முன்பு அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காமல் இருந்ததாம் தற்போது கிடைத்ததால் படக்குழுவினர் 73 பேரோட படப்பிடிப்பு நடத்திக்கொண்டு இருக்கிறாராம். ஒருத்தருக்கு US போய் வரவே செம செலவாகும் இதுல இத்தனை பேர் சென்று வந்தால்!! உண்மையிலேயே மெகா பட்ஜெட் தான் போல் இருக்கு. திரைப்படங்கள் படப்பிடிப்பு செலவுகள் பற்றி எல்லாம் நாம் கணக்கு போட்டால் மயக்கம் வந்துடும் என்று நினைக்கிறேன். தற்போது தமிழ்ப் படங்களின் வசூல் எல்லைகள் விரிவாகி உள்ளதால் இது சாத்தியமாகிறது.

தனுஷ்கான்

TATA and Dhanush 300x262 சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]தனுஷ் ஹிந்திப் படம் இயக்கப்போகிறார் என்று செய்திகளில் வர ஆரம்பித்தது அந்த நேரம் பார்த்து கொலவெறி டி தாறுமாறாக உலகளவில் (நிஜமாத்தாங்க) ஹிட் ஆகி விட நம்ம ஆளு மும்பைலேயே செட்டில் ஆகிட்டாரு போல அமிதாப்புக்காக கொலவெறி டி ரீமிக்ஸ் டெடிகேட் பண்ணுறேங்கராறு, அபிஷேக் கூட டிஸ்கசன் என்று சொல்றாங்க, Zee டிவி ல ஹிந்தி வாலாக்கள் கூட கமான் கமான் னு கொலவெறி டி ஆடிட்டு இருக்காரு, பாலிவுட் பார்ட்டிகளில் கலந்துக்கறாரு, ஹ்ரிதிக் ஹீரோ னு!! செய்தி வருது.. அட! இதெல்லாம் கூட தாங்கிக்கலாம் இப்ப ரத்தன் டாடா கூட நின்னு போஸ் கொடுத்து இருக்காரு..இவர் கிட்ட என்ன பேசினாருன்னு அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். பெரும்பாலும் பாலிவுட் பக்கம் தான் இப்ப சுற்றிக்கொண்டு இருக்கிறார் பெயரையும் தனுஷ்கான் என்று மாற்றாம இருந்தா சரி icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011] Image Credit vikatan.com

விஜய் Vs சூர்யா

Surya 204x300 சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]விஜய் தொலைக்காட்சியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஷோ செய்ய விஜய் ஒப்புக்கொண்டு இருந்தாராம் தற்போது அதை செய்யப்போவது சூர்யா. ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் என்று கிசுகிசுக்கிறார்கள்.. இவருக்கு ஒரு கோடி! பரிசுத்தொகை ஒரு கோடி!! அப்ப விளம்பரம் மூலம் வருமானம் எவ்வளோ இருக்கும்… லைட்டா கிறுகிறுன்னு இருக்கு.

இந்த செய்தி வெளிவந்த பிறகு விஜய் சூர்யா ரசிகர்கள் சண்டை மேலும் தீவிரமாகி இருக்கிறது. இணையத்தில் தற்போதைய ஹாட் விஜய் அஜித் ரசிகர்கள் சண்டையல்ல விஜய் சூர்யா ரசிகர்கள் சண்டை தான் icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011] சூர்யா தற்போது வேகமாக வளர்ந்து வரும் (அவரோட உயரத்தில் அல்ல) ஹீரோ என்பதால் விஜய்க்கு கடும் சவாலாகவே அனைத்து விசயங்களிலும் உள்ளார். சூர்யாக்கு உயரம் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது.

ரஜினி ஷங்கருடன் அடுத்த படம்?

தலைவரோட கோச்சடையான் படம் பற்றிய அறிவிப்பு தற்போது தான் வந்தது அதற்குள் தலைவர் ஷங்கருடன் இணைந்து அடுத்த படம் செய்யப்போகிறார் என்று பரபரப்பாக உள்ளது. கோச்சடையானுக்கு இல்லாத ஆர்வம் இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக அளவில் உள்ளது காரணம் முன்னது அனிமேசன் படம் பின்னது வழக்கமான மசாலாப் படம். முதல்வன் மாதிரி ஒரு படம் வந்தால் பட்டாசாக இருக்கும் icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011] தலைவா! மாசம் ஒரு பட அறிவிப்பு வந்துட்டு இருக்கு ஏதாவது ஒண்ணுல நடித்து சீக்கிரம் வெளியிடுங்க icon wink சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]

ஸ்னேகா

பிரசன்னா ஸ்னேகாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து இருக்கிறார் ஆனால் ஸ்னேகா இன்னும் எப்போது என்று உறுதிப் படுத்தவில்லை. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டு விடுவார் என்று இணையத்தில் செய்திகள் உலவிக்கொண்டு இருக்கின்றன. சென்ற வருடம் சினி மசாலா மிக்ஸ் எழுதிய போது நண்பர் லோகன் “ஸ்னேகா பிரியாமணி ரீமாசென் பற்றி எழுதுங்க கிரி” என்று கூறினார். இனிமேல் தாமதம் செய்தால் ஸ்னேகாவிற்கு குழந்தையே பிறந்து விடும் என்பதால் இப்போதே அவரைப் பற்றி எழுதி விட்டேன்.. சாரி லோகன் ரொம்ப!!! தாமதம் ஆகிடுச்சு icon biggrin சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]

கொசுறு: சினேகா கோச்சடையான் படத்துல தலைவருக்கு தங்கச்சியா நடிக்கறாங்க இதற்காக சேட்டன் படத்துல நடிக்காம வந்துட்டாங்களாம் இதனால் சேட்டனுக செம்ம டென்ஷனில் இருக்காங்க.

ரோஜா நகை திருட்டு

நடிகை ரோஜா ஆந்திராவில் ரயிலில் இரவில் பயணம் செய்யும் போது தூங்கிக் கொண்டு இருந்த சமயத்தில் அவருடைய வைரக் காதணி, ரூபி மற்றும் வைரக் கற்கள் பதித்த 5 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை யாரோ ஆட்டையைப் போட்டு விட்டார்களாம். வீட்டிற்குப் போன பிறகு தான் கவனித்து காவல்த் துறையில் புகார் செய்து இருக்கிறார். இவ்வளவு விலை மதிப்புள்ள பொருளை இப்படி அஜாக்கிரதையாகவா வைத்து இருப்பாங்க.. அரசியலுக்கு சென்றதுக்குப் பிறகு பணம் நிறைய சேர்ந்து இருக்கும் அதனால தான் கவனக்குறைவா இருந்து இருப்பாரு போல. நல்ல வேளை ரோஜாவையே தூக்கிட்டுப் போகாம இருந்தாங்களே! இப்ப ரோஜாவை தூக்குறது ரொம்பக் கஷ்டம் அதனால் அவரைப் விட்டுட்டுப் போய் இருப்பாங்க என்று நினைக்கிறேன் icon wink சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]

மாவிகா icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]

Malavika 294x300 சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]கடந்த முறை போல இந்த முறையும் தலைவி மாளாவிகா பற்றி செய்தி.. ஹி ஹி கொஞ்சம் பொறுத்துக்குங்க. மாளவிகா வீட்டுக்காரர் மேல செம கடுப்புல இருக்கேன்.. பின்ன என்னங்க! தலைவியை நடிக்கவிடாம பண்ணிட்டு இருக்காரு. நானும் எத்தனை நாள் தான் மாளவிகா நடிக்க வருவாங்க என்று காத்து இருப்பது. சீரியல் ல நடிக்கப்போறாங்க என்று கூறினாங்க ஒன்றும் சத்தத்தையே காணோம். சீரியல் ல வந்தால் தவறாம பார்க்க தயாராக இருக்கேன் icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011] நம்ம கஷ்டம் எல்லாம் மாளவிகா வீட்டுக்காரருக்கு புரியுதா! யாராவது அவருக்கு எடுத்துச் சொல்லுங்களேன் icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]

ஜீவா Vs சிம்பு

ஜீவா “முகமூடி” என்ற சூப்பர் ஹீரோ கதையில் மிஸ்கின் இயக்கத்தில் நடிக்கிறார் இதற்கான விழாவில் பேசும் போது “மிஸ்கின் என்னை அஞ்சாதே படத்திற்கே நரேன் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்க அழைத்தார் ஆனால் அப்போது எனக்கு மீசை கூட சரியாக முளைக்கவில்லை (இப்ப மட்டுமே நிறையா இருக்கா என்ன?) அதனால் இதற்கு நான் பொருத்தமாக இருக்க மாட்டேன் சின்ன பையன் போல இருப்பேன் அதனால் பின்னாளில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன்” என்று கூறி இருந்தார் அதாவது சிம்புவை வாரி இருந்ததாக இணையத்தில் செய்திகள் அடிப்பட்டன. சிம்பு ஒஸ்தியில் காவல் துறை அதிகாரி வேடத்தில் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் விற்பவர் போல இருக்கிறாராம் icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]

STR – TR

STR பற்றி பேசினதும் TR நினைவுக்கு வந்து விட்டார். ஒஸ்தி படம் பற்றிய சன் டிவி சிறப்பு நிகச்சியில் TR செய்த அலப்பரையை யாராவது பார்க்காமல் இருக்கிறீர்களா! மனுஷன் அந்த ஷோவையே நாஸ்தி செய்து விட்டார். அந்த நிகழ்ச்சி பெரும்பகுதி தன்னுடைய சுய புராணம் பற்றியே பேசி சிம்புவை கொலை வெறி ஆக்கி விட்டார். இந்த தரணியும் சும்மா இல்லாம ஏற்றி விட இவர் ஓடிஸா பாட்டுக்கு!!! எல்லாம் இசை அமைத்துப் பாடி பார்ப்பவர்களை கிடுகிடுக்க வைத்து விட்டார். VTV கணேஷ் பலி ஆடு மாதிரி உட்கார்ந்து இருந்தாரு பாவம். TR வாட்ச்சை கழட்டியதுமே எனக்கு புரிந்து விட்டது மவனே! இன்னைக்கு ரணகளம் தாண்டி என்று icon biggrin சினி மசாலா மிக்ஸ் [22 12 2011] சிம்பு முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே! பாவம் நொந்து போய் இருப்பார்… “அடப்பாவி அப்பா! என்னோட படத்தை ப்ரொமோட் செய்யலாம்னு வந்தா காரியத்தையே கெடுத்து விட்டியே!” என்று பொறுமி இருப்பார் ஹி ஹி ஹி எல்லோரும் சொல்ற மாதிரி TR செய்வது தன்னம்பிக்கை அல்ல சுயதம்பட்டம்.

இந்தக் காணொளியைப் பாருங்க அப்புறம் நீங்களே முடிவு செய்துக்குங்க! TR சார் நீங்க மனுசனே இல்லை…. தெய்வம்னு சொல்ல வந்தேன் icon smile சினி மசாலா மிக்ஸ் [22 12 2011] TR ரசிகப் பெருமக்களே! இதைப்பார்த்து குறிப்பா 9:14 TO 9:50 உங்களுக்கு வயிற்று வலி வந்தால் நான் பொறுப்பல்ல icon wink சினி மசாலா மிக்ஸ் [22 12 2011]

feed icon16x16 சினி மசாலா மிக்ஸ் [22 12 2011] Subscribe in a reader

Related posts:

  1. பயணக்குறிப்புகள் [07-11-2011]
  2. பயணக்குறிப்புகள் [09-02-2011]
  3. இணையம் பற்றிய செய்திகள் [01-09-2011]
  4. இணையம் பற்றிய செய்திகள் [12-04-2011]
  5. இணையம் பற்றிய செய்திகள் [29-07-2011]

{ 23 comments… read them below or add one }

Arun December 22, 2011 at 8:13 AM

சூப்பர் கிரி ரொம்ப நல்ல இருக்கு பதிவு
அப்புறம் நானும் மாளவிகா கணவருக்கு கண்டனம் சொல்லிடுறேன் :)
ஆஹா தெரிஞ்சுடுச்சா .. same blood

- அருண்

Reply

arjun December 22, 2011 at 9:41 AM

நம்ம பவர் ஸ்டாரும், TR ம்ம் சேருந்து ஒரு படத்தில நடிச்ச எப்படி இருக்கும்?

Reply

tyagarajan December 22, 2011 at 10:12 AM

அமெரிக்க விசா கிடைக்காததால் ஜோர்டானில் விஸ்வரூபம் படப்பிடிப்பு நடந்ததாக சமீபத்தில் எங்கேயோ படித்தேன். சரியா??

Reply

பாமரன் December 22, 2011 at 11:25 AM

கிரி, இந்த T.R ஐ……….(நற…நற) நினைச்சாலே கடுப்பாகுது பாஸ். இப்படியும் கொஞ்சம் கூட வெக்கம், விவஸ்த்தை, maturity, இல்லாம ஒரு பிரபலம் இருப்பாங்களான்னு ஆச்சர்யமா இருக்கு. பவர் ஸ்டார் இவரை பார்த்து தான் இந்த அலப்பறை பண்றாருன்னு நினைக்கிறேன். பக்கத்துல இருக்கறவங்களை பத்தி கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்காம தன்னை மட்டுமே முன்னிலை படுத்தி, இவர் பேசும் பேச்சு அசிங்கம். இதுல வாயில, கையில மியூசிக் வேற. சரியான “பிம்பிளிக்கோ பிலாக்கிங்க” இவரு. பேசாம காமெடி சானல்ல இவரு பேசறதை எல்லாம் கூட ஒரு ஸ்லாட்ல போடலாம். TRP rating எங்கேயோ போயிடும்.

தன்னோட தலை முடி கூட ஒரிஜினல் தெரியுமா அப்படீன்னு ஒரு டிவி பேட்டியில பீத்திக்கிராறு. தலை முடி இருக்கறதும், உதிர்வதும் நம்ம கையிலா இருக்கு? ஆனா உடம்பை ஸ்லிம்மா வச்சுக்கறது நம்ம கையில தானே இருக்கு. ரஜினிக்கும், சத்யராஜுக்கும் கூட தான் முடி கொட்டிடுச்சி, ஆனா இந்த வயசுலேயும் உடம்பை எவ்வளவு நல்ல ஷேப்ல வச்சு இருக்காங்க. இந்த ஆளு பீப்பாய் மாதிரி உடம்பை வச்சுக்கிட்டு, பட்டன் பிதுங்கி போற மாதிரி டைட்டா சட்டை போட்டுக்கிட்டு, அரை குண்டியில ஜீன்சை மாட்டிகிட்டு, பண்ற அட்டகாசம் இருக்கே…. குமட்டுதுங்க. அந்த அரிசி மூட்டை உடம்பை பத்தி ஏன் பீத்திக்க மாடேங்குராறு இவரு?

ஒரு வேளை இந்த ஆளு கொஞ்சம் லட்சணமா இருந்திருந்தா, அடக்கமா இருந்து இருப்பாருன்னு தோணுது. ஏன்னா இவர் பேசறத பார்த்தா, தன்னுடைய Inferiority Complex ஐ மறைக்கத்தான், தான் பெரிய அப்பாடக்கருன்னு கூரை மேல ஏறி கூவிக்கிட்டே இருக்காருன்னு தோணுது (வேற யாரும் இந்த ஆளை பத்தி பேசுறது இல்லை அப்படீன்றதும் ஒரு காரணமா இருக்கலாம்).

T.R , சிம்பு எல்லாம் தமிழ் திரையுலக சாபம்.

Reply

மாணவன் December 22, 2011 at 11:32 AM

சினி மசாலா மிக்ஸ் கலக்கல்!

Reply

Rajesh Ganesan December 22, 2011 at 12:56 PM

நல்ல பதிவு கிரி. பாமரனின் கமெண்டும் ரசித்தேன்!!

Reply

எப்பூடி ... December 22, 2011 at 1:57 PM

விஜய் டிவியில் விஜய்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று பேச்சு உலாவியபோது குதூகலித்த வாயால் வடை சுடுபவர்கள் இப்போது சூர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை அறிந்தவுடன், சூர்யா மாக்கட் வீழ்ந்துவிட்டதால் சின்னத்திரை ஒதுங்கியுள்ளார் என்று தம் மனதை தேற்றிக் கொள்கிறார்கள்.

விஜய்க்கு ஒரு நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் அளவிற்கு கப்பாசிட்டி இருக்கும் என்று எனக்கு தோணவில்லை!

ரஜினி இடத்திற்காக நாக்கை தொங்கப்போட்ட வாயால் வடை சுடுவோர், இப்பெல்லாம் அஜித்தைவிட சூர்யாவை சமாளிக்க முடியாமல் சூர்யாவை கேவலப்படுத்தும் முழு முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். திரைப்பட ரீதியில் சூர்யாவிடம் விஜய் அண்மைக்காலங்களில் மூக்குடைபட்டதால் இவர்களது ஒரே நின்மதி சூர்யாவின் உயரம் (குள்ளன்)

சூர்யா,தனுஸ்,கார்த்தி படங்களுடன் தொடர்ந்து போட்டிட்யிட்டு பல்ப்பு வாங்கும் விஜய்க்கு அவரது வாயால் வடை சுடுபவர்கள் கொடுக்கும் பில்டப்தான் செம காமடி :p

Reply

r.v.saravanan December 22, 2011 at 3:21 PM

கிரி ராஜேந்தர் நிகழ்ச்சியை டிவி இல் பார்த்து நீங்க சொல்வது போல் வயிறு வலி கண்டது தான் மிச்சம்

Reply

ரசிகன்டா December 22, 2011 at 7:27 PM

தலைவா! மாசம் ஒரு பட அறிவிப்பு வந்துட்டு இருக்கு ஏதாவது ஒண்ணுல ஒழுங்கா நடித்து சீக்கிரம் வெளியிடுங்க….’ஒழுங்கா’ என்பதை தயவு செய்து நீக்கி விடுங்கள் கிரி..

Reply

ananth December 23, 2011 at 3:43 AM

கிரி , மாளவிக பத்தி நீங்க எழுதறது உங்க வீட்ல தெரியுமா?

Reply

கிரி December 23, 2011 at 7:20 AM

அனைவரின் வருகைக்கும் நன்றி

@அருண் ஆஹா! அருண் மாட்டிக்கிட்டாரு :-)

@அர்ஜுன் ஏன் இந்த கொலைவெறி? :-)

@தியாகராஜன் உண்மை தான் ஆனால் திரும்ப US விசா கிடைத்ததால் இங்கே சென்றதாக கூறி இருந்தார்கள்.

@பாமரன் ஹி ஹி பட்டன் மேட்டர் சூப்பர் :-) நீங்க பேசாம ஒரு ப்ளாக் எழுதலாம் (ஏற்கனவே எழுதிட்டு ஏதும் இருக்கீங்களா) ஒவ்வொரு போஸ்ட் க்கும் நீங்க ஏனோ தானோ என்று கமெண்ட் போடாமல் உங்க பார்வை என்பதை சரியாக கூறுகிறீர்கள். இதைத் தான் நான் அனைவரிடமும் எதிர்பார்க்கிறேன். பாராட்டி வரும் கமெண்ட்ஸ் ஐ விட விவாதமாகவும் விமர்சனமாக வரும் கமெண்ட்டுகளையே விரும்புகிறேன். அந்த வகையில் உங்க கமெண்ட் ரொம்ப பிடிக்கும் அது என்னைத் திட்டி இருந்தாலும் கலாயித்து இருந்தாலும் :-) உங்களைப் போலவே எப்பூடி (ஜீவதர்ஷன்) ஜோதிஜி காத்தவராயன் போன்ற நண்பர்களும் தங்கள் கருத்தை விரிவாக கூறுவார்கள். டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் சலிப்பையே தருகிறது ஆனால் தற்போது என்னுடைய தளத்தில் டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் வெகுவாக குறைந்து விட்டது அதை நான் ஊக்குவிக்காததால்.

@ஜீவதர்ஷன் இப்ப விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஆயுதம் சூர்யா “குள்ளன்” என்பது. எங்கே பார்த்தாலும் இதையே முன்னிலை படுத்துகிறார்கள். எனக்கு இது வரை சூர்யா குள்ளம் என்ற உணர்வு தோன்றியதே இல்லை தற்போது விஜய் சூர்யா பிரச்சனை வந்த பிறகு தான் இதையே நான் உணருகிறேன் :-)

@ரசிகன்டா ரைட்டு :-)

@ஆனந்த் ரொம்ப நன்றாகத் தெரியும் :-)

Reply

Logan December 23, 2011 at 7:46 AM

நன்றி கிரி

Reply

பாமரன் December 23, 2011 at 2:52 PM

கிரி உங்க Compliments க்கு ரொம்ப நன்றி. உங்கள் பதிவுகள் வெறும் உட்டாலக்கடியாக இல்லாமல், விஷயப் பூர்வமாக இருப்பதாலும், பின்னூட்டத்திற்கான உங்கள் ஜனநாயக மாண்புகள் சிறந்ததாக இருப்பதாலும், எனக்கும் sincere ஆக பின்னூட்டம் பதிவிட தோன்றுகிறது. வேறு சில (ஒரு) website இல் சிறிதளவு மாற்று கருத்து எழுதினால் கூட, பின்னூட்டர்களுடன் சேர்ந்து, பதிவர்களும் மிகவும் தரம் தாழ்ந்து தனிமனித தாக்குதல்கள் தொடங்கிவிடுகிறார்கள். அந்த கலாசாரத்தை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் வருத்தப் படமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். அது ஒரு ரஜினி ஆதரவு வலை தளம்.

நம்முள் சில மாறுப்பட்ட ரசனைகள், கருத்துக்கள் இருப்பினும், உங்கள் Website நிச்சயம் ஒரு தரமான website.

நானும் (ஒரு சின்ன லெவல்) பதிவர் தான். கொஞ்ச நாள் போகட்டும், அது ஒரு தரத்திற்கு வந்தவுடன் உங்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கிறேன். அதுவரை கற்றுக் கொள்கிறேன்.

தொடர்வோம் நம் நல உறவை. அனைவரும் சேர்ந்து பதிவு பரிமாற்ற கலாச்சாரத்தை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்வோம்.

Reply

காயத்ரிநாகா December 23, 2011 at 6:56 PM

TR சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது ஊரறிந்த உண்மை.. அவர்தான் உலகிலே சிறந்தவர் (ஒரு வகையில் திறமையானவர்தானே ) என்று அவர் நினைத்துக் கொண்டு அப்படி பேசுகிறார்..அவர் தெரிவிக்கும் கருத்துகளுக்கு எதிர்ப்பு கூறலாம் அல்லது அவர் பங்கேற்கும் நிகழ்சிகளை புறக்கணிக்கலாம் அல்லது அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் புறந்தள்ளலாம் ..அதை எல்லாம் விடுத்து விட்டு அவரின் உருவத்தை பற்றி விமர்சிப்பது சரியாக படவில்லையே!அப்புறம் அவரின் செயலுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.. ஆக்கப்பூர்வமான விசயங்கள் நிறைய இருக்கிறதே உரையாட… பாமரன் என்றால் அப்பாவி,வெகுளி என்றல்லவோ பொருள்..உங்கள் பெயர் முரணாக இருக்கிறது உங்கள் பின்னூட்டத்துடன் ஒப்பிடும் போது.. தவறாக ஏதேனும் கூறியிருந்தால் மன்னிக்கவும்.. மனதில் பட்டது..!
காயத்ரிநாகா

Reply

rajesh v December 23, 2011 at 9:39 PM

தலைவி மாளாவிகா

—————————————————————————–
i too like malavika very much and i am a fan of her. i was very sad she didnt click in tamil cinema field. But, she got fans like you and me who remembers her always.

After malavikas marriage, trisha is occupying that place. (i guess you are thinking about my contrast taste. hi hi hi :p)

Reply

rajesh v December 23, 2011 at 9:42 PM

டெம்ப்ளேட் கமெண்ட்ஸ்

—————————————————
கிரி, what is the meaning of the above

Reply

தனபாலன் December 23, 2011 at 10:17 PM

மிகவும் அருமை! நல்ல அலசல்! பல்சுவை தகவல்கள்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
“உங்களின் மந்திரச் சொல் என்ன?”

Reply

Barney December 24, 2011 at 12:42 AM

கிரி, நீங்கள் இன்னும் ஆரண்ய காண்டம் பார்க்காமல் இருப்பது மிகவும் வருத்தற்குரியது. 52 censor வேட்டுகளுக்கு பிறகே படத்தை திரையிட அனுமதித்தார்கள். அதற்கே படம் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் முழு படத்தையும் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இன்றும் உண்டு. முழு பட DVD எங்கையாவது கிடைக்காதா என்று தேடிக்கொண்டு இருக்கிறேன்.

Reply

கிரி December 24, 2011 at 9:02 AM

@பாமரன் என்னுடைய தளத்தில் ஆபாசமான மற்றும் தனிமனித தாக்குதல்களுக்கு இடமளிப்பதில்லை அதனால் புதிதாக வருபவர்கள் தவிர மற்றவர்கள் நாகரீகமாகவே விவாதம் செய்கிறார்கள். புதிதாக வந்தவர்கள் சண்டையிட்டாலும் பின் சமாதமாகி நண்பர்கள் ஆகி விடுகின்றனர்.

@காயத்ரிநாகா பாமரன் கூறியது மற்றவர்களை பற்றி கிண்டலடிக்கும் (முடி பற்றி) அவர் தன்னை பற்றி யோசித்தாரா! என்பதை தான். அவர் என்னுடைய பிந்தைய பதிவுகளில் ஆக்கபூர்வமாகவே விவாதித்து வந்து இருக்கிறார் அனைத்து நேரங்களிலும் இது போலவே இருப்பது என்பது சாத்தியமில்லாதது. பாமரன் என்பது அவரது புனைப்பெயர் அதற்காக பாமரத் தனமாகவே பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான ஒன்று. பெயருக்கும் கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

@ராஜேஷ் மாளவிகா த்ரிஷா :-)

டெம்ப்ளேட் கமெண்ட் என்பது எப்போதும் ஒரே மாதிரி புகழ்ந்து கமெண்ட் போடுவது அருமை, சிறப்பான பதிவு வாழ்த்துகள். என்று போட்டு தன்னுடைய தளத்திற்கும் வந்து ஏதாவது கூறுங்கள் என்பதை மறைமுகமாக செய்வது. கமெண்ட் என்பது தங்களுடைய கருத்தை கூறவே! சும்மா வந்து எதையோ கமெண்ட் போடணும் நானும் இருக்கிறேன் என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. உண்மையாகவே இப்படி கூறுபவர்களைப் பற்றி என்னால் இவ்வளவு நாள் அனுபவத்தில் புரிந்து கொள்ள முடிகிறது அவர்கள் பற்றி பிரச்சனை இல்லை.

@Berney ஆரண்ய காண்டம் பார்க்க வேண்டும் என்பது என்பது என்னுடைய விருப்பம். எனக்கு இதைப்போல படங்கள் ரொம்பப் பிடிக்கும். புதுப்பேட்டை போன்ற படங்கள் என்னால் மறக்கவே முடியாத படங்கள். DVD அனுமதி இன்னும் தயாரிப்பாளர் வழங்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

Reply

பாமரன் December 24, 2011 at 12:36 PM

காயத்ரிநாகா

T.R இன் உருவத்தை கிண்டல் செய்தது தவறு தான். மன்னிக்க வேண்டுகிறேன். T.R இடமும் மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் என்னுடைய கருத்தை தான் கிரி சொல்லி இருக்கிறார். நான் சொல்ல வந்தது, தன் கட்டுப்பாட்டில் இல்லாத தலை முடியின் ஸ்திரத் தன்மையை பற்றி சுய தம்பட்டம் அடித்துக் கொள்பவர், தன் முயற்ச்சியால் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய உடல் அமைப்பை நல்ல ஷேப்பில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், இவருடைய தலை முடி தற்பெருமை அகங்காரம் தானே என்பது தான்.

உங்கள் கருத்தில் தவறில்லை. நன்றி.

அப்புறம் கிரி, இன்று எனக்கு ஒரு விஷயத்தில் தோல்வி. மனசு சரி இல்லை. ஆனால் மனசு சரி இல்லாமல் போகும் போது தான் உலகில் உள்ள எல்லா மனிதர்களும் ஒரு வகையில் என்னை விட சிறந்தவர்கள் தான் என்று புரிகிறது. மற்றவர்களை என்னை விட உயர்ந்த இடத்தில் வைத்து பார்கத் தோன்றுகிறது. இது நிச்சயம் sarcastic statement அல்ல. நான் உணர்ந்த ஒரு உண்மையின் ஒரு confirmation. ஏதோ உங்களை என் உற்ற நண்பர் போல நினைக்கத் தோன்றுவதால் சொல்லத் தோன்றியது.

Reply

Lazur stalin January 9, 2012 at 2:03 PM

எப்படி சார் இந்த சிம்பு பொருமையா உட்க்கர்ந்து இருந்தார் , ஒருவேல அவரும் அவங்க அப்பா மதிரியா? ஒனுமே புரியல, சிம்பு மேல வைத்திருந்த மதிப்பு எல்லாம் காற்றில் பறந்து போச்சு

Reply

ponmalar February 20, 2012 at 1:55 AM

ஆரண்ய காண்டம் இந்த பிரிண்ட் எப்படி என்று பாருங்கள்.
http://www.tamiltorrents.net/forums/79480-tc-rip-aaranya-kaandam-2011-xvid-500mb-mgr-lollo.html

Reply

கிரி February 20, 2012 at 7:43 AM

@பொன்மலர் இதை ஏற்கனவே தரவிறக்கம் செய்து விட்டேன்.. படமே இருட்டு இதில் ரொம்ப இருட்டாக இருக்கிறது :-) நான் தேடிய வரையில் இருப்பதிலே இது தான் கொஞ்சம் சுமாராக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பெட்டராக எதுவும் கிடைக்குமா என்று தரவிறக்கம் செய்ததை பார்க்காமல் இருக்கிறேன் :-)

நன்றி

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed