பாட்ஷா தி மாஸ்

December 12, 2011

grey பாட்ஷா தி மாஸ் ருவருக்கு ரசிகர் ஆகிறோம் என்றால் அவரிடம் உள்ள எதோ ஒரு விஷயம் நம்மை வசீகரித்து இருக்க வேண்டும் அதனாலே அவரை நமக்கு பிடித்துப் போகிறது. பெரும்பாலும் அனைவரும் ரசிகர்கள் ஆவது நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்குத் தான். இவர்களே நம்மை அதிகம் ஈர்க்கிறார்கள். நான் 1995 ம் வருடம் வரை யாருக்கும் ரசிகரில்லை ஆனால் 1995 ல் வந்த “பாட்ஷா” திரைப்படம் என்னை ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகன் ஆகி விட்டது.

பாட்ஷா படம் வெளியான போது இந்த அளவிற்கு பெரும் வெற்றி பெறும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். என் பள்ளி நண்பர்கள் சிலர் பாட்ஷா படம் பார்த்து நன்றாக இல்லை என்று கூறி இருந்தார்கள். பொதுவாகவே அனைவருக்கும் ஒரு படம் நன்றாக இல்லை என்று நாம் சந்திக்கும் நபர்கள் கூறி விட்டால் அந்தப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்காது. உண்மையாகவே படம் நன்றாக இருந்தால் கூட சுமாராகவே இருப்பதைப் போல தோன்றும்.

எனக்கு சண்டைப் படங்கள் மற்றும் டான் படங்கள் [அப்பவே :-)] பிடிக்கும் என்பதால் சரி சென்று பார்ப்போம் என்று ஒரு சனி மாலை கிளம்பினேன். அப்போது நான் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தேன் ஒவ்வொரு சனி மாலையும் Free Night என்று விடுவார்கள் மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை. இந்த இடைப்பட்ட நேரத்தில் எங்கே வேண்டும் என்றாலும் செல்லலாம் பெரும்பாலும் படம் அல்லது ஹோட்டல் செல்வார்கள். சரி நாம பாட்ஷா செல்லலாம் என்று முடிவு செய்து சென்றேன். படம் பார்க்கப்போகும் போது சாதாரணமாக சென்றவன் வெளியே வரும் போது ரஜினி ரசிகனாக வந்தேன் grey பாட்ஷா தி மாஸ்

இதன் பிறகு அடுத்த சனியும் இதே படம். விடுமுறை விட்ட பிறகு ஈரோடு அபிராமி திரையரங்கில் இரண்டு முறை என்று இருக்கிற அனைத்து திரையரங்கிலும் பார்த்து விட்டேன். இன்று வரை நான் அதிக முறை பார்த்த திரைப்படங்களில் பாட்ஷாவே முன்னணியில் உள்ளது. இப்போது வரை பாட்ஷாவை 24 முறை பார்த்துள்ளேன்.

ரஜினியைத் தவிர வேறு யாராலும் இந்தக் கதாப்பாத்திரத்தை செய்யவே முடியாது. இதை என்னால் உறுதியாகக் கூற முடியும். எவ்வளவு சிறந்த நடிகராக இருந்தாலும் இந்தக்கதாப்பாத்திரத்தை செய்யவே முடியாது. ரஜினி என்றால் ஆக்ரோஷம், அதிரடி தான். இவருக்கு இந்தக்கதாப்பாத்திரம் 100 க்கு 200 சதவீதம் அருமையாக பொருந்தியது.

படத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காட்சி பிடிக்கும் யுவராணிக்கு கல்லூரியில் இடம் கேட்கப்போவது, கிட்டியை அவரது அலுவலகத்தில் சென்று சந்திக்கப்போவது, இடைவேளை சண்டைக்காட்சி, மும்பை டான், ரஜினியும் ரகுவரனும் சந்திக்கும் இடம் என்று படம் முழுக்க கூறிக்கொண்டே போகலாம். எனக்கு எதையும் குறிப்பிட்டுக் கூற முடியவில்லை அனைத்துமே ஒவ்வொரு வகையில் சிறப்பாக காட்சி அமைக்கப்பட்ட இடங்கள்.

யுவராணிக்கு கல்லூரியில் இடம் வாங்கப்போகும் இடத்தில் தான் ரஜினியின் பின்புலம் நமக்குத் தெரியவரும். எனக்கு படத்தில் உள்ள அனைத்து வசனங்களும் அத்துப்படி என்றாலும் சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

“ஐயா! என் பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேரு இருக்கு” இதன் பிறகு யுவராணி அவர் கிட்ட என்ன சொன்னீங்க என்று கேட்க “உண்மையைச் சொன்னேன்” என்பது இன்று வரை ரசிகர்களிடம் பிரபலம். யாராவது இதைப்போல சூழ்நிலையில் இருந்தால் கிண்டலாக “உண்மையைச் சொன்னேன்” என்று கூறுவது வழக்கம்.

இந்தப்படத்தில் என்னைப்பொறுத்தவரை 4 ஹீரோக்கள். ஒன்று ரஜினி இரண்டு ரகுவரன் மூன்று தேவா நான்கு சுரேஷ் கிருஷ்ணா. இதில் தேவா ரஜினி வரும் பின்னணி இசைக்கு “டெர்மினேட்டர்” படத்தில் இருந்து சுட்டுப்போட்டு இருந்தாலும் ஒரிஜினல் இசையை விட இது நாஸ்தியாக இருக்கும். ரஜினியின் தம்பி ரஜினியை கிட்டி அழைப்பதாகக் கூறியதால் DIG அலுவலகம் செல்வார் அந்தக்காட்சியில் ரஜினி நடந்து வரும் ஸ்டைல் ம் அதற்கு தேவா கொடுத்து இருக்கும் பின்னணி இசையும் படம் பார்ப்பவர்களை உடலை சிலிர்க்க செய்யும். நான் இது வரை பார்த்த ஒவ்வொரு முறையும் இந்தக்காட்சியில் உடல் ஜிவ் என்று ஆகி விடும் grey பாட்ஷா தி மாஸ்

grey பாட்ஷா தி மாஸ் இதோடு இடைவேளைக் காட்சியில் யுவராணியை ஆனந்தராஜ் தள்ளி விட அந்த சமயத்தில் அவரை ரஜினி பிடித்துகொண்டு திரும்பும் காட்சியும் அவரை அடிக்க ஒருவர் வேகமாக ஓடி வர… அவரை ரஜினி அடித்தவுடன் அங்கே உள்ள மின்சாரக் கம்பத்தில் மோதி விழும் போது கொடுக்கப்படும் பின்னணி இசையும் தாறுமாறாக இருக்கும்.. இதை எழுதும் போதே எனக்கு உடல் சிலிர்க்கிறது grey பாட்ஷா தி மாஸ் ரஜினி அடித்தவுடன் பின்னணியில் ஒரு ரயில் செல்வது போல ஓசை வரும் அட! அட!! கலக்கல் போங்க. ரஜினி தி மாஸ் என்பதை நிரூபிக்க இந்த ஒரு காட்சி போதும். தேவாவை எத்தனை பாராட்டினாலும் தகும் இந்தக்காட்சிக்கு இதை விட யாரும் சிறப்பாக பின்னணி இசை கொடுத்து விட முடியாது என்றே நினைக்கிறேன்.

இந்த இடத்தில் ரஜினி கூறும் “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” வசனமும் காட்சி அமைப்பும் ஒளிப்பதிவும் இசையும் அடி தூள் தான். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சிகள். ஒரு சில படத்தில் எல்லாம் சண்டைக்காட்சிகள் வந்தால் கொட்டாவி தான் வரும். எப்படா அடித்து முடித்து நிறுத்துவாங்க என்று இருக்கும் ஆனால் இந்தச்சண்டை மிக மிக பரபரப்பாக ரசித்துப் பார்க்கும் படி இருக்கும். இதை அற்புதமாக அமைத்த சண்டைப் பயிற்சியாளர் ராஜா இன்னும் படங்களுக்கு அமைக்கிறாரா? நான் அதிகம் கண்டதில்லை.

இதில் ஆனந்தராஜ் பற்றியும் குறிப்பிட வேண்டும். “யாருயா! இந்த இந்திரனுக்கு எதிரா அரெஸ்ட் வாரன்ட் கொடுத்த ஆம்பிளை” என்பதும் வெளியே வந்து ரஜினி வீட்டுக்கு வந்து ரஜினியின் தம்பியை நக்கலடித்து விட்டு சத்யப் ப்ரியாவை “வணக்கமோய்” என்று கலாயிப்பதும் கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவாக செய்து இருப்பார்.

ஒரு காட்சியில் ரஜினியை கட்டி வைத்து அடிக்கும் போது எடிட்டிங்கில் தவறு செய்து இருப்பார்கள். ரஜினி அடி வாங்கிய பிறகு ரத்தம் பனியனில் இருக்கும் திரும்ப காட்டும் போது இல்லாமல் இருக்கும் அடுத்த காட்சியில் திரும்ப இருக்கும். இதை எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. அடுத்த முறை நீங்கள் பாட்ஷா பார்க்கும் படி வந்தால் இந்தக்காட்சியை கவனித்துப் பாருங்கள்.

ரகுவரன் எப்படி ரஜினியின் பல படங்களில் வந்தாரோ அதே போல ஜனகராஜ். இது வரை காமெடி நடிகராகவே அறியப்பட்ட இவரை இதில் சீரியஸ் நடிகராக காட்டி அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. கொஞ்சம் ஏமாந்தாலும் அவர் கதாப்பாத்திரம் காமெடியாகப் போய் விட வாய்ப்பு இருந்தது இருப்பினும் திரைக்கதையின் மூலம் அதை சரி செய்து இருந்தார்கள். இன்னைக்கு ஆயுத பூஜைல அண்ணன் ஆட்டோ ஸ்டேன்ட் ல பட்ட கிளப்பிட்டு இருப்பாரு! என்று ஆரம்பித்து படம் முழுவதும் ரஜினியுடன் வருவார்.

grey பாட்ஷா தி மாஸ் படத்தின் அடுத்த ஹீரோ வில்லன் ரகுவரன். பாட்ஷா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுக்கு ரஜினி ஒரு காரணம் என்றால் அவருக்கு சரியான போட்டியை கொடுத்து இருப்பவர் சந்தேகமில்லாமல் ரகுவரன் தான். ரகுவரன் இல்லை என்றால் படம் இந்த அளவு வெற்றி பெற்று இருக்குமா என்பது எனக்கு சந்தேகமே!

ரகுவரன் ஆரம்பமே அசத்தலாக இருக்கும். விநாயகர் கோவிலில் வைத்த குண்டை பாட்ஷா எடுத்து விட்டார் என்று கூறியதைகேட்டு அருகில் இருந்த ஆளை சுட்டு விட்டு Bad News என்பார். பின் ஜனகராஜ் ஃபோன் செய்து பாட்ஷா பாய் வீட்டில் இருந்து குருமூர்த்தி பேசுறேன் பாட்ஷா பாய் இன்னைக்கே உங்களை சந்திக்கனும்கிறார் இடத்தை நீங்களே ஃபிக்ஸ் பண்ணுங்க என்பார்.. “சொல்றேன்” என்று கூறி விட்டு Good News என்பார்.

இவர்கள் சந்திக்கும் இடமான Gate way of India பின்னணியில் ரகுவரன் விஜயகுமாரிடம் “ரங்கசாமி உன் புள்ளை ஏன் இன்னும் வரல பயந்துட்டானா” என்று கேட்பதும். ரஜினி வந்தவுடன் “என்ன மாணிக் நல்லா இருக்கியா” என்றதும் “டேய் டேய் டேய் பாட்ஷா… மாணிக் பாட்ஷா” என்று ரஜினி கூறியதைக் கேட்டு “ஆங்! எஸ் எஸ் மாணிக் பாட்ஷா!… நீ நம்ப ரங்கசாமி புள்ளையாச்சே ஏதாவது உதவி தேவையா தம்பி” என்று கேட்பது சரி நக்கலாக இருக்கும் grey பாட்ஷா தி மாஸ்

ஏழு நாள்ல என்னைய முடிக்கிறியா! எண்ணி ஏழே செகண்ட் ல உன்னை நான் முடிக்கிறேன்.. என்ன புரியலையா கொஞ்சம் பாரு! என்பதும் அதற்கு ரஜினி சிரித்துக்கொண்டே கொஞ்சம் அங்கே பாரு கண்ணா! என்பதும் அதைக் கண்டு ரகுவரன் செம கடுப்பாவதும் கலக்கலான காட்சி அமைப்பு. இந்த இடத்தில் ரஜினி கூறும் “டேய் டேய் டேய் நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான் கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்” என்று கூறுவது அதகளம். இந்த வசனம் இப்போதும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு வசனமாக இருக்கிறது. நண்பர்களிடையே இது அடிக்கடி உலா வருவதுண்டு.

இறுதியில் ரகுவரன் ரஜினி செய்த வேலையால் போலீஸ் இடம் மாட்டிக்கொள்ளும் போது ரஜினி ரகுவரனுக்கு ஃபோன் செய்து “உன்னை பற்றி எதோ பேப்பர் ல வந்து இருக்காமே” என்று கூறியவுடன் ரகுவரன் பார்த்து விட்டு “பாட்ஷாஷாஷாஷா” என்று கத்தி முன்னாடி இருக்கும் மேசை விளக்கை எட்டி உதைப்பார். “ஒண்ணு தெரிஞ்சுக்கோ! கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறையக் கொடுப்பான் ஆனா கடைசியில கை விட்டு விடுவான்.. பார்த்தியா! உன்னைக் கை விட்டுட்டான்” என்று கூறுவது செம டைமிங்கா இருக்கும்.

ரகுவரன் பற்றி கூறுவதென்றால் தனியாக இன்னொரு விமர்சனம் எழுதணும் grey பாட்ஷா தி மாஸ் ரகுவரன் சார் உங்களை நாங்க ரொம்ப மிஸ் பண்ணுறோம். எந்திரனில் வில்லனாக நீங்கள் நடித்து இருந்தால் இன்னும் மாபெரும் வெற்றியாக படம் அமைந்து இருக்கும். உங்கள் இடத்தை எவராலும் நிரப்பவே முடியாது. நீங்கள் இல்லாதது ரஜினி ரசிகர்களுக்கு மாபெரும் இழப்பு.

ரஜினியின் பெரும்பாலான படங்களில் ரகுவரன் வில்லனாக வருவார். அவர் உடல் நிலை சரியில்லாத போது சிவாஜியில் நடிக்க முடியவில்லை என்றாலும் ரஜினியின் வேண்டுகோளுக்கிணங்க சிறு காட்சியில் மருத்துவராக வந்து இருப்பார். இதுவே ரஜினியுடன் நடித்த கடைசிப் படம் grey பாட்ஷா தி மாஸ்

பாட்ஷா படத்தில் பின்னணியில் நெகடிவ் ல் ரஜினியின் மும்பைக் காட்சிகளை இணைக்கச்சொன்னது தயாரிப்பாளர் R.M வீரப்பன் அவர்கள் இதை ஒரு விழாவில் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் கூறினார். ரசிகர்கள் பின்னணி என்னவென்றே தெரியாமல் இடைவேளை வரை இருப்பது பரபரப்பாக இருக்காது எனவே இதை இணைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினாராம். இவர் எந்த நேரத்தில் கூறினாரோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம் ஆகி விட்டது. இப்பக் கூட நினைத்துப்பார்த்தால் சரியான சமயத்தில் கூறப்பட்ட அற்புதமான யோசனை என்று தோன்றுகிறது. இந்த நெகடிவ் ல் காட்டப்படும் காட்சிகளின் போது ரசிகர்கள் ஆராவாரம் வார்த்தையால் விவரிக்க முடியாது.

பாடல்கள் (வைரமுத்து), ஒளிப்பதிவு (P.S பிரகாஷ்), வசனம் (பாலகுமாரன்), சண்டைக்காட்சிகள் (ராஜா), பின்னணி இசை (தேவா சபேஷ் – முரளி), நடனம் (தருண் குமார்), எடிட்டிங் (கணேஷ் குமார்) இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் பாட்ஷா மும்பை பகுதி காட்சிகளையும் ரஜினி டான் ஆன பிறகு அவருடைய காட்சிகளையும் விவரிக்க ரொம்ப ஆசை குறிப்பா அவரோட அசத்தாலான டான் உடை (உடைகள் சாய்) முதற்கொண்டு ஆனால் இதுவே ரொம்ப பெரிதாகப் போய் விட்டது. இந்தப்படத்தை Home Theater ல் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை. தற்போது பாட்ஷா Blue Ray டிஸ்க்கில் வெளிவந்துள்ளது. இதுல பார்த்தால் சரவெடியாக இருக்கும்.

grey பாட்ஷா தி மாஸ் பாட்ஷா படம் ரஜினி வாழ்க்கையையே புரட்டிப்போட்ட படம். இந்த படம் வெளிவந்த பிறகு ரஜினி உச்சத்தை தொட்டு விட்டார். இது வரை தொலைக்காட்சியில் அதிகம் போடப்பட்ட படங்கள் என்றால் அது நிச்சயம் பாட்ஷாவாகத்தான் இருக்கும். அடுத்தது ராஜாதி ராஜா படம் ராஜ் தொலைக்காட்சியில் என்று நினைக்கிறேன். பாட்ஷா படம் பார்த்து அவரது நடிப்புக்கு ரசிகன் ஆனாலும் அதன் பிறகு ரஜினி என்கிற மனிதருக்கும் ரசிகன் ஆகி விட்டேன். பதிவுலகம் வந்த போது நடந்த ரஜினி பற்றிய சண்டையில் grey பாட்ஷா தி மாஸ் பல ரணகளமான பதிவுகள் எல்லாம் எழுதி கடும் சண்டை போட்டு இருந்தாலும் தற்போது இவை குறைந்து விட்டது. இது வரை ரஜினி பற்றி ஏகப்பட்ட இடுகைகள் எழுதி இருந்தாலும் பின் வரும் இரண்டு இடுகைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பப் பிடித்தவை.

தலைவர் ரஜினி

ரஜினிக்கு “ரசிகனாக” இருப்பதில் என்ன தவறு?

படங்களில் மட்டுமல்ல பிறந்த தேதிகளில் கூட ரஜினியும் ரகுவரனும் நெருங்கியே இருக்கிறார்கள். ரகுவரன் அவர்களுக்கு நேற்று டிசம்பர் 11 பிறந்த நாள் இன்று அவரது நெருங்கிய நண்பரான ரஜினிக்கு பிறந்த நாள். நினைவில் குடிகொண்டு இருக்கும் ரகுவரன் அவர்களுக்கும் எங்கள் இனிய சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கும் அனைத்து ரஜினி ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கொசுறு

சிங்கப்பூர் ரஜினி ரசிகர்கள் அங்குள்ள முதியோர் இல்லத்தில் வயதானவர்களுடன் ரஜினி பிறந்த நாளை நேற்று ஞாயிறு கொண்டாடினார்கள். நான் கிளம்பும் போது அப்பா நானும் வரேன் என்று என் மகன் கூறியதால் சரி என்று அவனையும் அழைத்துச்சென்றேன். அப்பா! எப்ப ரஜினி மாமா வருவாரு! Happy birthday சொல்லணும் என்று ஆரம்பித்து விட்டான். ஆத்தா வையும் சந்தைக்கு போகணும் காசு கொடுங்கிற மாதிரி அணத்த ஆரம்பித்து விட்டான். டேய்! ரஜினி மாமா எல்லாம் வர மாட்டாரு Happy birth day மட்டும் சொல்லு என்று சொன்னால் வரவங்க கிட்ட எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தான். கடைசியில் அங்கே ஒரு வயதானவருடன் இவனும் சேர்ந்து ரஜினி சார்பாக கேக் வெட்டினான். வீட்டுக்கு வந்து என் மனைவிடம் அம்மா! நான் ரஜினி மாமா வரதுக்குள்ள கேக் வெட்டி சாப்பிட்டு விட்டேன் என்று கூறுகிறான் grey பாட்ஷா தி மாஸ் குழந்தைகள் எப்போதும் ரசனைக்குரியவர்களே! grey பாட்ஷா தி மாஸ்

அங்கு எடுத்த படங்களில் நான்கை மட்டும் பகிர்ந்து இருக்கிறேன். இந்தப்படங்களில் நான் இல்லை. படங்கள் நன்றி மகேஷ்.

grey பாட்ஷா தி மாஸ்

grey பாட்ஷா தி மாஸ்

grey பாட்ஷா தி மாஸ் grey பாட்ஷா தி மாஸ்

{ 27 comments… read them below or add one }

ragini December 12, 2011 at 9:11 AM

// ரஜினி என்றால் ஆக்ரோஷம், அதிரடி தான். //

அப்போ காமிடிய விட்டுடிங்க லே கிரி …
ஹ ஹ ஹ ….

இந்த போஸ்ட் எ படிச்சதுல irrutnhu செம காமிடி போங்க ….

Reply

kmkannan December 12, 2011 at 10:20 AM

போலி பிம்பங்களுக்கு தமிழன் கொடுக்கும் மரியாதை அளபறியது. தமிழ்நாடு இன்னும் நூறு வருஷத்துக்கு முன்னேறாது. ரஜினி, சூர்யா, கமல் ன்னு பாலபிஷேகம் பண்ணிக்கிட்டு கேவலபடுதுங்க.

Reply

காயத்ரிநாகா December 26, 2011 at 12:13 AM

ஹலோ கண்ணன் நானும் ரஜினி ரசிகர்தான் தான்!!!!!!!!!! நான் என்ன கெட்டு போய் விட்டேன்! தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் உதவி மேலாளராக இருக்கிறேன்.எனது குடும்பத்தை நல்ல முறையில் பாதுகாக்கிறேன்.. உங்களது உறவுகளை பிடிப்பதற்கு ஏதேனும் காரணம் சொல்ல முடியுமா ?.ரஜினியை அளவுக்கு மீறி பிடித்திருக்கிறது,..என்னையறியாமல் நானே தேடிக் கொள்ளும் சந்தோசம் அது…!!இதில் என்ன தவறு இருக்கிறது..? இதற்கும் நாடு முன்னேறுவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை..கிரியின் தளத்தில் வரும் ரசிகர்கள் அனைவருமே உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று இருப்பவர்கள் அல்ல.அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..! எல்லையில் நின்று போர் புரிந்து கொண்டிருக்கும் நீங்கள் இந்த பதிவை எல்லாம் எதற்கு படித்துக் கொண்டு உங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை..!!உண்மையை சொல்லப் போனால் ரஜினி ரசிகரான எனக்கு ரஜினி பிறந்த நாளில் பின்னூட்டம் இடக்கூட நேரமில்லை..அந்த அளவுக்கு வேலைப்பளு அதிகம்.. பாலாபிஷேகம் செய்பவர்களை தேடித் பிடித்து வெட்டுங்கள்..முதல் ஆளாக சந்தோசப்படுவது நாங்களாத்தான் இருப்போம் …!!சும்மா பேசக் கூடாது…!!

Reply

எப்பூடி ... December 12, 2011 at 11:36 AM

பாட்ஷாவை பற்றி எவளவு முடியுமோ அவளவையும் எழுதிவிட்டீர்கள்; தமிழ் சினிமாவில் ரஜினி கொடுத்த பாட்ஷாவை பலரும் வேறு கலரில் முயற்சி செய்துவிட்டார்கள், ஆனால் ரஜினி பாட்ஷாவின் ஒரு சீனை கூட தன அடுத்தடுத்த திரைப்படங்களில் பயன்படுத்தவில்லை, இதுதான் ரஜினியின் வெற்றி ரகசியம்!!!!

Reply

raju December 12, 2011 at 11:42 AM

தமிழ் சினிமா வை மொத்தமா கெடுத்தது இந்த ரஜினி தான்.கமல்ஹாசன் உடைய அன்பேசிவம் முனாடி இந்த படம் எல்லாம் கால் தூசு .

Reply

Mohamed Yasin December 12, 2011 at 11:55 AM

பதிவுக்கு நன்றி… ஆனால் 24 முறை ஒரு படம் பாக்க தனி தில்லு வேணும்… கிரி அந்த விசியத்துல கில்லிதான்…. @ கண்ணன் யாருக்கும் ரசிகனா இருப்பது தவறில்லையே… நான் கூட டிராவிட்ன் தீவிர ரசிகன் தான்…

Reply

Arun December 12, 2011 at 12:34 PM

அழகு கிரி
இந்த பதிவு

உங்க பையன் நல்லா துரு துரு நு இருக்காரு.. சூப்பர் தல

- அருண்

Reply

Narasimma Prasad December 12, 2011 at 1:35 PM

‘ரஜினி’ என்பது ஒரு வகையான மந்திரச் சொல். அந்த மந்திரம் நம்மைப் போன்ற பல பேருக்கு இன்று மட்டுமல்ல, என்றும் அந்த ‘மந்திரம்’ நம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பகிர்வுக்கு நன்றி பாஸ்.

Reply

ஜோதிஜி December 12, 2011 at 2:25 PM

அங்கு எடுத்த படங்களில் நான்கை மட்டும் பகிர்ந்து இருக்கிறேன். இந்தப்படங்களில் நான் இல்லை.

ஏமாற்றம்.

Reply

புதுகை அப்துல்லா December 12, 2011 at 3:43 PM

உண்மைத்தமிழன் எழுதிக் குடுத்தாரா?!? :)))

Reply

கிரி December 12, 2011 at 4:58 PM

ஹி ஹி ஹி அதுனால தான் இரண்டாவது கமெண்ட் போட்டவர் டென்ஷன் ஆகிட்டாரு போல :-D

Reply

ராஜ் December 12, 2011 at 4:37 PM

என் பேர் கிரி எனக்கு சிங்கப்பூர்ல இன்னொரு பேர் இருக்கு …………………….

நோ கமெண்ட்ஸ் ஆன் ரஜினி :)

Reply

Arun J prakash December 12, 2011 at 5:22 PM

தலைவரை பற்றிய சம கலக்கல் பதிவு.

///இதை எழுதும் போதே எனக்கு உடல் சிலிர்க்கிறது…..///
அப்போ உங்க பதிவு மொத்தத்தையும் படித்த எங்களக்கு எப்படி இருந்து இருக்கும்……….

Reply

rams December 12, 2011 at 6:03 PM

கேட்கப்போவது, கிட்டியை( அது கிட்டி இல்லை சேது விநாயகம் )

Reply

r.v.saravanan December 12, 2011 at 9:14 PM

உங்கள் பையனை பார்த்தேன் மகிழ்ச்சி நீங்கள் ஏன் இல்லை கிரி

Reply

r.v.saravanan December 12, 2011 at 9:17 PM

நீங்க இருக்கும் படம் ஏன் வெளியிடவில்லை கிரி

பாட்ஷா படம் எனக்கு மிகவும் பிடித்த படம்

Reply

Srinivas December 13, 2011 at 7:55 AM

அட்டகாசம்!!! அருமை !!! எனக்கு பாட்ஷா தான் மிகவும் பிடித்த படமாய் இருந்தது… ஆனால் சிவாஜி வந்த பிறகு , சிவாஜி மிகவும் பிடித்து போனது …

இப்போது தலைவர் படங்களில் டாப் மூன்று
சிவாஜி – தலைவர வித வித மா காட்டுறதுல ஷங்கர் செம சூப்பர் :) தலைவர் தி பாஸ்
தளபதி – தளபதி முதலில் தியேட்டரில் பார்த்த படம்,…கடைசி நான்கு வருடங்களில் திரும்ப திரும்ப பார்த்து, இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டது :)
பாட்ஷா – 2007 வரை முதல் இடத்தில இருந்த பாட்ஷா 2011 இல் மூன்றாம் இடம் சென்றாலும், 2011 இல் அண்ணா தியேட்டரில் சென்று பார்த்தது கொலைவெறி மாஸ்

- ஸ்ரீநிவாஸ்

Reply

தனபாலன் December 13, 2011 at 10:04 AM

அறியாத பல தகவல்கள். அருமை!
படங்களும் அருமை உங்கள் பையனைப் போல!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
“இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?”

Reply

ராமலக்ஷ்மி December 13, 2011 at 2:20 PM

கொசுறு நல்ல விஷயம். கேக் கட் செய்யத் தயாராக நிற்கும் லிட்டில் ஸ்டாரின் ஸ்டைலான போஸ் சூப்பர்:)!

Reply

Rajesh December 15, 2011 at 4:51 AM

எனக்கு என்னமோ உங்களை போல ரசிகர்களின் அன்பு தான் அவரை நூறு வயது வரை வாழவைக்கும் என தோன்றுகிறது. ஏன் விருப்பமும் அதுவே!!!

Reply

surya December 16, 2011 at 8:54 AM

ரஜினி மாதிரி நீங்களும் வாழ்க்கைல பெரிய ஆளா வந்தா ரொம்ப சந்தோசம் ! எதற்க்கு ரசிகனா இருக்கணும் எதற்க்கு யாரோ ஒரு நடிகனை பற்றி எழுதி நேரத்தை வீணாக்கணும். வாழ்க தமிழ் இனம்.

Reply

rajesh v December 16, 2011 at 9:38 PM

இப்போது வரை பாட்ஷாவை 24 முறை பார்த்துள்ளேன்.

—————————————————————————————————————-
mr. giri,

i saw the following movies more than one time.

chandramukhi — 3 times
shivaji — 3 times
kuselan — 3 times
endhiran—5 times

Eventhough i am a rajini fan, the film i saw many times was kamalhasan’s INDIAN. I saw that movie nearly ten times.

2. unga paiyan romba supera irukkan giri

RAJESH. V

Reply

காத்த‌வ‌ராய‌ன் December 17, 2011 at 2:20 AM

// இந்த படம் வெளிவந்த பிறகு ரஜினி உச்சத்தை தொட்டு விட்டார்.//

தவறு கிரி.

நீங்கள் ரஜினி என்னும் உச்சத்தை தொட்ட படமாக இது இருக்கலாம்.

80களில் நீங்கள் ரஜினி ரசிகனாக இருந்ததில்லை அதனால்தான் இவ்வாறு கூறுகிறீர்கள். முழுப்பக்க விளம்பரங்கள் என்ன! பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்ன!

அரசியல் சார்ந்த நிலைப்பாட்டைக்கூட “மனிதனில்” இருந்தே படத்தில் தொடர்ந்து வலியுறுத்த தொடங்கிவிட்டார். அதற்கு முன்பு “தனிக்காட்டு ராஜா” – “நல்லவனுக்கு நல்லவன்” போன்றவற்றிலும் லேசான அரசியல் வாடை இருக்கும்

எஸ்.பி.எம், தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் ரஜினியை இயக்கிய காலத்திலேயே உச்சத்தை தொட்டுவிட்டார்.

உன்மையிலேயே ரஜினியை அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக ஆக்கியது “பில்லா”தான்.

Reply

balaji December 17, 2011 at 10:49 AM

ஹலோ கிரி,
நான் எந்த அளவுக்கு இடைவேளை பகுதிய பார்த்து சிலிர்த்தேனோ அதே அளவுக்கு நீங்களும்…
சண்டை பயிற்சியாளர் ராஜா சூப்பர் ஸ்டார் + சுரேஷ் கிருஷ்ணா படங்கள் எல்லாத்திலயும் இருக்கார் (Except BABA)
a very good article about BAASHAA.
(இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழ் படிச்சிடிங்களா ?)

Reply

கிரி December 17, 2011 at 11:20 AM

அனைவரின் வருகைக்கும் நன்றி

@ராகினி ராகினி ரொம்ப சந்தோசம் ஆனதுல மகிழ்ச்சி :-)

@KM கண்ணன் இதை எல்லாம் படித்து நீங்க ஏன் உங்க நேரத்தை விரயம் செய்கிறீங்க.. தலைப்பிலேயே தெரியவில்லையா என்ன இருக்கிறது என்று!

@ராஜா ரைட்டு :-)

@ராம்ஸ் நீங்க பதிவை சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன்.

@ஸ்ரீநிவாஸ் எனக்கு பாட்ஷா தான் :-)

@அருண் ராமலக்ஷ்மி நன்றி

@சூர்யா உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு http://www.giriblog.com/2009/12/what-is-wrong-in-become-rajini-fan.html எழுதி இருக்கிறேன். நேரத்தை வீண் செய்ததா யார் உங்களுக்கு கூறியது? இது என்னுடைய பொழுது போக்கு வேலைக்கு பிறகு கிடைக்கும் நேரங்களில் எனக்கு இளைபாறுதல் தருவது.

உங்க சந்தோசம் வீண் போகவில்லை. ரஜினி அளவிற்கு பெரியாள் இல்லை என்றாலும் நானும் ஒரு நல்ல நிலையிலேயே இருக்கிறேன். கவலை வேண்டாம்.

@ராஜேஷ் எனக்கும் இந்தியன் ரொம்ப பிடித்த படம் இருப்பினும் பாட்ஷா தான் முதல் :-)

@காத்தவராயன் நான் கூறியது திரைப்படத்தில் அல்ல பொது வாழ்க்கையில். திரைப்படத்தில் பில்லா என்பது அனைவரும் அறிந்தது தானே.

@பாலாஜி புத்தகம் படித்து விட்டேன். ரொம்ப நன்றாக இருந்தது.

Reply

ilavarasan December 17, 2011 at 3:42 PM

வணக்கம் கிரி அவர்களே
அருமையான பதிவு இந்த பதிவை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
நன்றி

Reply

காயத்ரிநாகா December 25, 2011 at 11:35 PM

தலைவர் பற்றிய பதிவை அதுவும் அவரது பிறந்த நாளிலேயே அவரது மெகா ஹிட் படமான பாட்ஷாவைப் பற்றி எழுதியது மிகவும் மகிழ்ச்சி கிரி..கிரி சிவா படத்தில் இடம் பெற்ற ‘அட மாப்பிள்ளை சும்மா முறைக்காதீங்க’என்ற பாடலை மட்டும் நான் ஆயிரம் முறைக்கும் மேல் பார்த்திருப்பேன்..!! நிச்சயம் பாருங்கள் கிரி அந்த பாடலை எனக்காக ஒரு முறை.. spb யின் கணீர் குரல் , இளையராஜாவின் அட்டகாசமான மியூசிக் இருந்தாலும் ரஜினியால்தான் அந்த பாடல் மாபெரும் வெற்றி பெற்றது என்பது மிகப் பெரிய உண்மை அடேயப்பா தலைவரின் ஸ்டைல்தான் என்ன அந்த பாடலில்..நிச்சயம் எவராலும் முடியாது… ராஜாதி ராஜா படத்தில் இடம் பெற்றுள்ள ‘எங்கிட்ட மோதாதே ‘ தலைவரின் ஸ்டைலை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது கிரி..தலைவர் எப்பொழுதுமே சிறப்பு தான் கிரி.. தலைவர் வாழ்க பல்லாண்டு…!!

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed