2011 ல் என்னைக் கவர்ந்த திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் சில சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அனைத்தையும் விரிவாகக் கூறாமல் சுருக்கமாக கூறுகிறேன் இல்லை என்றால் இரண்டு இடுகைக்கு மேல் எழுத வேண்டும்
திரைப்படங்கள்
இந்த வருடம் எனக்கு பிடித்த படங்கள் அதிகம் வந்து இருக்கிறது என்றே நினைக்கிறேன்.
ஆடுகளம்
இந்த வருடத்தின் சிறந்த படமாக ஆடுகளம் தான் எனக்குப் பிடித்து இருக்கிறது. மதுரை ஸ்லேங் தெரியாமலே கற்றுக்கொண்டு அற்புதமாக நடித்து இருப்பார் தனுஷ். இந்த படம் விமர்சனம் எழுத முடியவில்லை ஆனால் எழுத வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாக இருக்கிறது. தேசிய விருதிற்கு முழுத் தகுதியானவரே!
இதன் பிறகு மௌனகுரு, எங்கேயும் எப்போதும், வானம், மயக்கம் என்ன, மங்காத்தா, கோ, பயணம், காஞ்சனா, யுத்தம் செய் போன்ற படங்கள் ரொம்பப் பிடித்த படங்களாக உள்ளன. இதில் உள்ள படங்களை திரும்ப பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன்.
இதில் நான் பார்க்க விரும்பும் படம் “ஆரண்ய காண்டம்” சிங்கப்பூர் திரையரங்கில் இந்தப்படம் வெளியாகவில்லை DVD யிலும் இந்தப்படம் வெளியாகவில்லை. இது எனக்கு பெரிய ஏமாற்றம். இணையத்தில் தரம் சரியில்லை.
எதிர்பார்ப்பை ஏமாற்றிய படங்களாக ஏழாம் அறிவும், அவன் இவன் படமும் உள்ளது.
பலரும் தாறுமாறாக விமர்சித்த நடுநிசி நாய்கள் வித்யாசமான முயற்சிக்காக என்னைக் கவர்ந்து இருந்தது. தெய்வத் திருமகள் படம் நன்றாக இருந்தாலும் அது I am sam படத்தின் அட்டைக் காப்பி என்பதால் அதன் மீதான மதிப்புக் குறைந்து விட்டது.
பாடல்கள்
இந்த வருடத்தில் ஒரு ஆச்சர்யமான விஷயம் உள்ளது. பொதுவாக ஒரு படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆவது என்பது எப்போதாவது தான் நடக்கும் இந்த வருடம் பல படங்களில் நடந்துள்ளது
எங்கேயும் எப்போதும், ஆடுகளம், எங்கேயும் காதல், கோ, வேலாயுதம், மயக்கம் என்ன, மங்காத்தா, வானம் படங்களில் அனைத்துப் பாடல்களும் ஹிட். எப்போதுமே விஜய் படத்தில் பாடல்கள் ஹிட் ஆகும் ஆனால் காவலனில் அது சொதப்பி விட்டது.
படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தனுஷ் எழுதிப் பாடிய “கொலவெறி” பாடல் உலகளவில் பிரபல பாடலாகி விட்டது. இந்த ஒரு பாடல் மூலம் தனுஷ் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகி விட்டார்.
இந்த வருடத்தின் மிகப்பெரிய காமெடியனாக பவர் ஸ்டார் உருவாகியுள்ளார். தன்னைப் பற்றி வரும் எந்தக் கிண்டல்களையும் கண்டு கொள்ளாமல் அனைவரையும் இம்சித்து வருகிறார்
இவருடைய அடுத்த படம் ஆனந்த தொல்லை பட ட்ரைலர்.
இந்த வருடம் நடிகர்களைப் பொறுத்தவரை அஜித், விஜய், தனுஷ் ஆகியோருக்கு சந்தோசமான ஆண்டாக சென்றுள்ளது. நடிகையைப் பொறுத்தவரை மயக்கம் என்ன ரிச்சாவின் நடிப்பு என்னை ரொம்பக் கவர்ந்தது.
சம்பவங்கள்
எந்த வருடமும் இல்லாத வருடமாக அரசியலில் பல்வேறு முக்கியமான சம்பவங்கள் நடைபெற்றன. தேர்தலில் கலைஞர் மெகா தோல்வி அடைந்தார், 2G பிரச்சனை பூதாகரமானது இதனால் ராசா கனிமொழி கைதாகினர். கூடங்குளம், முல்லைப் பெரியார் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தன குறிப்பாக முல்லைபெரியார் பிரச்னைக்கு மக்கள் லட்சகணக்கில் திரண்டு அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். ஜெ சசி பிரிந்தனர் (எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை), அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு பெரிய அளவில் ஆதரவு கிட்டியது அதன் பிறகு பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அன்னாவின் சில பொறுப்பற்ற பேச்சுக்களால் அவர் மீதான மதிப்பு பலருக்கு குறைந்து விட்டது. சமீபத்தில் நடந்த போராட்டத்தில் மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. மக்கள் ஆதரவு மேலும்தொடருமா என்பது அன்னா குழுவினர் நடந்து கொள்வதிலே உள்ளது.
நீண்ட வருடத்திற்குப் பிறகு தமிழகத்தில் நன்கு மழை பெய்தது ஆனாலும் மின்சாரப்பிரச்சனை இன்னும் தீர்ந்த பாடில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றம் செய்ய ஜெ உத்தரவிட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உலகளவில் லண்டன் கலவரங்கள், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ், பிலிப்பைன்ஸ் புயல், கடாஃபி இறந்தது, ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி, நியுசிலாந்து நிலநடுக்கம், சூடான் எகிப்து லிபியா போராட்டங்கள் இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றி பெற்றது ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
கிரி Blog
என்னுடைய தளத்தைப் பொறுத்தவரை எனக்கு இந்த ஆண்டு எந்தவித சர்ச்சையும் இல்லாமல் சென்றது
சென்ற வருட இறுதியில் எழுதிய கமல் பற்றி இடுகை பல விவாதங்களுக்கு உள்ளானது நேரமில்லாததால் இந்த ஆண்டு துவக்கத்தில் “இதுவும் கடந்து போகும்!” ல் பதில் கொடுத்து இருந்தேன். இது தவிர பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஆகவில்லை அல்லது என்னை எதுவும் பெரிதாக பாதிக்கவில்லை.
தொழில்நுட்ப பதிவுகள் எழுதுவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம் அதனால் இதற்கு என்று தனியாக தளம் துவங்க வேண்டும் என்று துவங்கியது தான் http://www.geek.giriblog.com/. இதில் நேரம் கிடைக்கும் போது எழுதி வருகிறேன் குறிப்பாக தொழில்நுட்பப் படங்களையும் காணொளிகளையுமே இணைத்து வருகிறேன்.
இந்த வருடம் 100 க்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதி இருந்தாலும் எனக்கு மன நிறைவு கொடுத்த இடுகைகளாக பின்வருவன உள்ளன. ஒவ்வொன்றையுமே சிறப்பாக எழுத வேண்டும் என்று நினைத்துத் தான் எழுதுகிறேன் இருப்பினும் சில அதில் உள்ள சம்பவங்கள் உள்ளடக்கம் ஆகியவற்றைப் பொறுத்து முக்கியத்துவம் பெறுகின்றன.
லஞ்சம் கொடுத்தவன் ஊழல் பற்றிப் பேசக்கூடாதா?
விலை உயர்வு பிரச்னைக்குத் தீர்வாகாது
தலைவர் ரஜினி (இந்த இடுகை பலரிடையே பாராட்டைப் பெற்றது)
தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்!
ட்விட்டரில் என்னுடைய கணக்கில் இருந்த என்னுடைய தளத்தை என்னுடைய தளத்திற்கு என்று தனியாக ஒரு ட்விட்டர் (https://twitter.com/giriblog) கணக்கு துவங்கி கடந்த வாரம் அதற்கு மாற்றி விட்டேன் (ஏற்கனவே உள்ளவர்கள் இதில் மாறிக்கொள்ளவும் பழைய கணக்கில் தகவல்கள் அப்டேட் செய்யப்படாது).
facebook page ல் (https://www.facebook.com/giriblog) மூன்றாயிரம் பேருக்கு மேல் இணைந்ததை ரொம்பப் பெருமையாக கருதுகிறேன். இடுகை தினமும் எழுதுவதில்லை என்பதால் அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
உற்சாகம் கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. 2012 ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
Related posts:


{ 7 comments… read them below or add one }
//இதில் நான் பார்க்க விரும்பும் படம் “ஆரண்ய காண்டம்” சிங்கப்பூர் திரையரங்கில் இந்தப்படம் வெளியாகவில்லை DVD யிலும் இந்தப்படம் வெளியாகவில்லை. இது எனக்கு பெரிய ஏமாற்றம். இணையத்தில் தரம் சரியில்லை.///
Me too waiting for the DVD same…
கடைசி இரண்டு மாதங்களில் வெளிவந்த பல அல்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. (3, வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், நண்பன், ராஜபாட்டை)
தங்களுக்கு பிடித்த திரைப்படங்களில் அனைத்துமே எனக்கு பிடித்தவைதான் (மௌனகுரு & நடுநிசினைகள் பார்க்கவில்லை)
பவர் ஸ்டாரை பலர் காமடியாக்க; அவர் இப்போ அதையே பிளஸ் ஆக்கி நல்லாவே பப்ளிசிட்டி தேடிறார்; வேணும்னா பாருங்க ஆனந்த தொல்லைக்கு கணிசமான ஓப்பினிங் கிடைக்கும் :p
என் பார்வையில் 2011 சிறந்த வித்தியாசமான படம் எங்கேயும் எப்போதும், எனக்கு பிடித்த பாடல் மயக்கம் என்ன ( நான் சொன்னது மழை வந்துச்சா)..விளையாட்டை பொறுத்த வரை இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றி & இங்கிலாந்தில் (4 : 0) நம் தோல்வியையும் குறிபபிடலாமே!!! மேலும் ராகுல் திராவிட்க்கு சிறந்த ஆண்டு!!!!
பகிர்வுக்கு நன்றி!!!
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
புத்தாண்டு வாழ்த்துகள் தல
- அருண்
சென்ற ஆண்டைப் போலவே புத்தாண்டும் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துகள்! தொடருங்கள்!
ஒரு வார சிங்கப்பூர் பயணத்திற்கு தயாராகி வருகிறேன். உங்கள் வலை தளத்தில் சிங்கப்பூர் பற்றி படித்தது மிக உதவியாக இருக்கும். பதிவிற்கு நன்றி.
புத்தாண்டு நல் வாழ்த்து மற்றும் பொங்கல் வாழ்த்து!