பட்டையக்கிளப்பும் க்ரோம்

by கிரி on October 11, 2011

க்ரோம் உலவி சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறிக்கொண்டு இருக்கிறது. 2008 இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ரோம் ஆரம்பத்தில் 8 % உடன் துவங்கி தனது புதிய வசதி, வேகம், பாதுகாப்பு, எளிமை போன்றவற்றால் அனைவரையும் கவர்ந்து தற்போது 23.6 % சதவீதம் மார்க்கெட் ஷேரைப் பெற்று இருக்கிறது ஃபயர்பாக்ஸ் ஐ பிடிக்க இன்னும் 3 % மட்டுமே உள்ளது இந்த வருட இறுதியின் போது ஃபயர்பாக்ஸ் ஐ மிஞ்சி விடும் என்று கூறப்படுகிறது.

இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை ஆகும். இணைய உலவியில் முதல் இடத்தை IE யும் அடுத்த இடத்தை ஃபயர்பாக்ஸ் ம் பெற்றுள்ளன. IE முன்னணியில் இருக்க முக்கியக்காரணம் விண்டோஸ் OS உடன் இணைந்து வருவதாலே ஆகும் அதோடு பல கார்பரேட் நிறுவனங்களில் IE பயன்படுத்த மட்டுமே அனுமதி அதோடு இன்னும் பலருக்கு IE தவிர்த்து வேறு ஒரு உலவி இருப்பதே தெரியாது.

ஃபயர்பாக்ஸ் IE க்கு பிறகு அனைவராலும் விரும்பப்படும் ஒரு உலவியாகும். தற்போது க்ரோம் வரவால் கடும் போட்டியை எதிர் கொண்டு வருகிறது. க்ரோம் போட்டியை சமாளிக்க பல புதிய பதிப்புகளை சமீபமாக வெளியிட்டு வருகிறது.

Chrome பட்டையக்கிளப்பும் க்ரோம்

க்ரோம் கூகுள் தயாரிப்பு என்பதால் அதனோடு இணைந்து பல வசதிகளை தருவதும் இதன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஆகும். இதில் தேவையற்ற பகுதிகளை நீக்கி மிகவும் லைட் வெய்ட்டாக கொடுத்து இருப்பது இதன் மிக முக்கியச் சிறப்பு. க்ரோம் இதைப்போல செய்த பிறகு IE ஃபயர்பாக்ஸ் உலவிகளும் தங்கள் உலவிகளில் இதைப் போல மாற்றி அமைத்து இருக்கின்றன. பாதுகாப்பு விசயத்தில் க்ரோம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது பாதுகாப்பு விசயத்தில் தற்போது முதல் இடத்தில் உள்ளது. க்ரோம் உலவியை ஹேக் செய்ய போட்டிகளை எல்லாம் கூகுள் வைத்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் உலவியை பயன்படுத்துபவர்களில் க்ரோம் இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது.

பயன்படுத்திக்கொண்டு இருக்கும் போது திடீரென்று க்ராஷ் ஆகி விடுவதும் அதிகளவில் மெமரி மற்றும் இடத்தை எடுத்துக்கொள்வதும் குறைபாடாக உள்ளது. இது பற்றி பலர் புகார் கூறி இருக்கிறார்கள். எனக்கும் இது போல நேர்ந்தது உண்டு ஆனால் எப்போதாவது என்பதால் இது என்னை பெரிதளவில் பாதிக்கவில்லை.

முன்பு பெரும்பாலான வங்கிகள் தளம் க்ரோம் உலவியை சப்போர்ட் செய்யாமல் இருந்தது தற்போது இது மாற்றப்பட்டுள்ளது இருப்பினும் இன்னும் சில தளங்கள் IE அல்லது ஃபயர்பாக்ஸ் மட்டுமே சப்போர்ட் செய்கிறது. இதைப்போல தருணங்களில் மட்டுமே IE பயன்படுத்துகிறேன் மற்றபடி என்னுடைய விருப்ப உலவி க்ரோம் தான். க்ரோம் இல்லாமல் வேறு ஒரு உலவியை தற்போதைய நிலைமைக்கு என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை அந்த அளவிற்கு அதன் மீது காதலாக இருக்கிறேன்.

Browser பட்டையக்கிளப்பும் க்ரோம்

சமீப மாதங்களில் என்னுடைய தளத்தினை படிப்பவர்கள் பயன்படுத்திய உலவியில் க்ரோம் முதன் முறையாக முதல் இடத்தை பிடித்து இருக்கிறது icon smile பட்டையக்கிளப்பும் க்ரோம்

இதனுடன் என்னுடைய தளத்தைப் பற்றிய சில தகவல்கள் (கடந்த சில மாதங்களில் எடுக்கப்பட்டது)

Search பட்டையக்கிளப்பும் க்ரோம்

கூகுள் தேடுதல் மூலம் என் தளத்திற்கு வந்தவர்களில் முதல் இடத்தைப் பிடிப்பது “காந்தி” பற்றிய இடுகையாகும் (போஸ்ட்). எனக்கு இது மிக ஆச்சர்யம் அளிக்கும் விசயமாகும் காரணம் இப்பெல்லாம் யாருங்க காந்தியைப் பற்றி நினைக்கிறார்கள் என்று நினைத்து இருந்தேன் ஆனால் இந்தப்பதிவு எழுதி பல வருடங்கள் ஆகி விட்டது இன்னும் இதற்கு பலர் வந்து கொண்டு இருக்கிறார்கள் இன்னும் கூட இதற்கு கமெண்ட் வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் பலர் காந்தியை மறக்காமல் தேடிக்கொண்டு இருப்பது மிகவும் சந்தோசமளிக்கும் விசயமாகும்.

இதெல்லாம் சரி ஆனால் என்னோட தளத்தின் பெயரை தேடி வருபவர்கள் அடுத்த இரண்டு இடத்தில் இருப்பது எனக்கு மேற்கூறியதை விட ஆச்சர்யமளிக்கிறது icon smile பட்டையக்கிளப்பும் க்ரோம் என்னோட தளத்தை இத்தனை பேர் சமீப மாதங்களில் தேடி இருக்கிறார்களா! என்று வியப்பாக உள்ளது.

Source பட்டையக்கிளப்பும் க்ரோம்

இது யார் யார் எங்கே இருந்து என் தளத்திற்கு வந்து இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல். இதில் முதல் இடம் வகிப்பது கூகுள் தேடுதல் தான். நான் வோர்ட்பிரஸ்க்கு மாறிய பிறகு கூகுள் தேடுதலில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இதன் பிறகு இன்ட்லி தளம் அடுத்தது நேரடியாக என் தளத்திற்கு வந்தவர்கள்.

நீங்கள் கூகுள் க்ரோம் தரவிறக்கம் (Download) செய்ய விரும்பினால் இங்கே செல்லவும்.

கொசுறு 1

Steve with his wife 300x204 பட்டையக்கிளப்பும் க்ரோம் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமான பிறகு அவர் பற்றிய செய்திகளுக்கு பஞ்சமில்லை. இணையத்தில் அவரைப்பற்றி புது புது செய்திகள், படங்கள் என்று சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படம் ஸ்டீவ் தன்னுடைய கடைசி மேடைப்பேச்சை முடித்துக்கொண்டு இறங்கி தன் மனைவியின் தோளில் சாய்ந்த போது எடுக்கப்பட்ட படம் இதன் பிறகு அவர் எங்கும் கலந்து கொள்ளவில்லை. அனைவரையும் கவர்ந்த படமாக இது மாறியுள்ளது.

கொசுறு 2

விரைவில் இந்தியா முழுவதும் மொபைலுக்கு ரோமிங் முறை ரத்தாகிறது. இந்த வசதியை பல வருடங்களாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இதனால் கட்டணங்கள் லோக்கல் கால் முறையில் வசூலிக்கப்படும் ஆனால் கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி எல்லாம் எப்போதோ வந்து இருக்க வேண்டியது! ம்ஹீம்

கொசுறு 3

Popcorn பட்டையக்கிளப்பும் க்ரோம் என்னுடைய இடுகையை (post) விட நான் எழுதும் கொசுறு பகுதிகளே அதிகம் விரும்பிப்படிக்கப்படுகிறது. கஷ்டப்பட்டு முக்கி முக்கி பெரிய கட்டுரை எழுதி இருப்பேன் அதற்கு யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் ஆனால் இந்த கொசுறுக்கு தான் அதிகம் கமெண்ட்ஸ் வரும். இதை நான் முதன் முதலில் மார்ச் 2008 ல் இருந்து எழுதுகிறேன் அந்த சமயத்தில் குறைவாகத் தான் எழுதினேன். அதன் பிறகு இதற்கு வரவேற்பு அதிகம் இருந்ததால் பெரும்பாலும் அனைத்துப் இடுகைகளிலும் எழுதுகிறேன்.

இதை எழுத இன்னொரு காரணமும் உண்டு நான் அதிகம் எழுதுவதில்லை மாதம் எட்டு அல்லது பத்து இடுகைகள் எழுதுவேன் அவ்வளவு தான் கடந்த இரண்டு வருடங்களில் மாதம் பத்து இடுகைகளை தாண்டியதில்லை இதற்கு இரண்டு காரணம் ஒன்று அதிகம் எழுதினால் படிப்பவர்களுக்கு சலிப்பாகி விடும் இன்னொன்று ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காக உப்புச்சப்பில்லாத விசயமெல்லாம் எழுத வேண்டும் அதனால் இடைப்பட்ட நாளில் நடக்கும் செய்திகளை இடுகையாக (post) போடாமல் வேறு ஒரு இடுகை எழுதும் போது கொசுறாக இணைத்து விடுகிறேன். சில நேரங்களில் கொசுறுகளே (1 ,2 ,3 ,4 ) ஒரு இடுகை அளவிற்கு இருக்கும் அது வேற விஷயம் icon biggrin பட்டையக்கிளப்பும் க்ரோம்

எனவே இந்த கொசுறு பகுதியையே ஒரு இடுகையாக (post) எழுதினால் என்ன? என்று யோசிக்கிறேன். இடுகையாக எழுதுவதற்கு வரவேற்பு இருந்தால் தொடர்ந்து எழுதுவேன் இல்லை என்றால் விட்டு விடுவேன் எப்படி இருந்தாலும் வழக்கமாக எழுதும் கொசுறு உண்டு. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கூறவும் குறிப்பாக மின்னஞ்சல்  மற்றும் ரீடரில் மட்டும் படித்துக்கொண்டு என் தளத்திற்கு எட்டியே பார்க்காதவர்கள் icon wink பட்டையக்கிளப்பும் க்ரோம்

feed icon16x16 பட்டையக்கிளப்பும் க்ரோம் Subscribe in a reader

Related posts:

  1. க்ரோம் இயங்குதளம் கலக்குமா! புஸ்வானம் ஆகுமா!
  2. க்ரோம் உலவியின் பயனுள்ள நீட்சிகள்
  3. பட்டையக்கிளப்பும் காஞ்சனா
  4. இணையம் பற்றிய செய்திகள் [20-09-2010]
  5. இணையம் பற்றிய செய்திகள் [15-12-2010]

{ 21 comments… read them below or add one }

Jayakumar October 11, 2011 at 8:58 AM

எனக்கு கூகிள் chrome தமிழ் fonts சரியாக இல்லை. அனால் firefox சரியாக தருகிறது. என்ன காரணம். முக்கியமாக இன்ட்லி தளம்.

Reply

அப்துல் பாஸித் October 11, 2011 at 10:00 AM

என்னுடைய விருப்ப உலவி ஃபயர்பாக்ஸ் தான். ஃபயர்பாக்ஸ் இல்லாமல் வேறு ஒரு உலவியை தற்போதைய நிலைமைக்கு என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை அந்த அளவிற்கு அதன் மீது காதலாக இருக்கிறேன். :-)

என் தளத்திற்கு வரும் வாசகர்களில் ஃபயர்பாக்ஸ் தான் முதலிடம்.

//நான் வோர்ட்பிரஸ்க்கு மாறிய பிறகு கூகுள் தேடுதலில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. //

ஆம், ப்ளாக்கர் தளத்தை விட வோர்ட்பிரஸ் தளத்தில் SEO விஷயங்கள் Default ஆக உள்ளன. அதனால் தான் அதிகமானோர் வோர்ட்பிரஸ் தளத்தையே பயன்படுத்துகின்றனர்.

//இந்த கொசுறு பகுதியையே ஒரு இடுகையாக (post) எழுதினால் என்ன? //

வரவேற்கிறேன்!

Reply

கோவி.கண்ணன் October 11, 2011 at 10:39 AM

நானும் குரோம் தான் பயன்படுத்துகிறேன், ப்ரிண்ட் ப்ர்வியூ நல்லா செய்து இருக்காங்க

Reply

r.v.saravanan October 11, 2011 at 1:09 PM

இந்த கொசுறு பகுதியையே ஒரு இடுகையாக (post) எழுதினால் என்ன? என்று யோசிக்கிறேன். இடுகையாக எழுதுவதற்கு வரவேற்பு இருந்தால் தொடர்ந்து எழுதுவேன்

கண்டிப்பாக எழுதுங்கள் கிரி படிக்க சுவாரஸ்யமாக உள்ளது

Reply

manoj October 11, 2011 at 2:05 PM

என்னை பொறுத்த வரையில், கொசுறு பகுதி ஒரு கட்டுரை எழுதிய திருப்தி தருவது இல்லை.. ஒரு கட்டுரை எழுதினால் அதில் சாதக பாதகங்கள் என்ன … அதில் உங்கள் கருது என்ன என்பதை விரிவாக எழுதலாம். கொசுறு அப்படி இல்லை … ஆனால் கொசுறு சுவாரசியமானது என்பதற்கு மாற்று கருத்து இல்லை .. பொரியல், கூட்டு, அப்பளம் நன்றாக இருப்பதனால் , அதையே புல் meals ஆக எடுத்துக்க முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து…

Reply

Srinivasan October 11, 2011 at 7:01 PM

அன்புள்ள கிரி,

க்ரோம் பற்றி நீங்கள் கூறுவது உண்மை தான். நான் ஃபயர்ஃபாக்ஸ் பக்கம் போய் ரொம்ப நாளாகி விட்டது.

>>நான் அதிகம் எழுதுவதில்லை
அதனால் என்ன ? கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது :-)

நானும் மனோஜ் கட்சி தான்…
கொசுறு எப்போதுமே அலாதி தான் :-)

நீங்கள் கூறுவது போல், சில சமயம் கொசுறே ஒரு இடுகை அளவிற்கு இருக்கும் என்று தோன்றினால் அதை ஒரு தனி இடுகையாக ஆக்கி விடுங்கள்.

Reply

மாணவன் October 12, 2011 at 5:54 AM

ஆரம்பத்தில் ஃபயர்பாக்ஸ் உலவிதான் பயன்படுத்திக்கொண்டுதான் இருந்தேன் குரோமின் சிறப்பம்சங்கள் தெரியவர குரோம் உலவிக்கு மாறினேன் இப்பலாம் க்ரோம்தான்… உங்களைப்போன்றே குரோம் மீது ஈர்ப்பு அதிகரித்துவிட்டது.

Reply

மாணவன் October 12, 2011 at 5:58 AM

//என்னுடைய இடுகையை (post) விட நான் எழுதும் கொசுறு பகுதிகளே அதிகம் விரும்பிப்படிக்கப்படுகிறது.///

உண்மைதான் அண்ணே கொசுறுகளை அதிகம் விரும்பி படிப்பதில் ஆர்வம் உடையவர்களில் நானும் ஒருவன்…

//எனவே இந்த கொசுறு பகுதியையே ஒரு இடுகையாக (post) எழுதினால் என்ன? என்று யோசிக்கிறேன். இடுகையாக எழுதுவதற்கு வரவேற்பு இருந்தால் தொடர்ந்து எழுதுவேன் இல்லை என்றால் விட்டு விடுவேன் எப்படி இருந்தாலும் வழக்கமாக எழுதும் கொசுறு உண்டு. //

கொசுறுகளை இடுகையாக எழுதும் முயற்சியை வரவேற்கிறேன்… இருந்தாலும் வழக்கமாக எழுதும் கொசுறு உண்டு. அப்ப ஓகே… :-)

Reply

ராமலக்ஷ்மி October 12, 2011 at 2:11 PM

நீங்கள் பரிந்துரைத்ததிலிருந்து நானும் க்ரோம்தான்.

//கஷ்டப்பட்டு முக்கி முக்கி பெரிய கட்டுரை எழுதி இருப்பேன் அதற்கு யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்//

:) )! உண்மைதான். சிலநேரம் சினிமா போல் என் சுவாரஸ்யத்துக்கு அப்பாற்பட்ட தலைப்புகளாயினும் கொசுறைத் தேடி வருவதுண்டு. தனிப்பதிவாகவும் வழங்கலாம். பலநேரங்களில் ஒரு பதிவாக சொல்ல முடியாத எண்ணங்கள் எப்போதுமே சொல்ல முடியாமல் போய் விடுகின்றன. சின்ன விஷயமானாலும் ஒரு சிலருக்கேனும் பயனாகியிருக்குமே என பின்னால் ஒரு வருத்தம் வரும்.

Reply

ராமலக்ஷ்மி October 12, 2011 at 2:13 PM

கடைசியில் சொன்னது என்னைப் பற்றி:)!. அந்த வகையில் உங்கள் கொசுறு கான்செப்ட் எனக்குப் பிடித்துள்ளது. அதுபோல தனிப்பதிவாகவே ஒரு பகிர்வு ஆரம்பிக்க எண்ணமுள்ளது.

Reply

raj October 12, 2011 at 7:00 PM

அண்ணே !!! நீங்க கொசுறா எழுதினாலும் நாங்க படிப்போம் !!! அதனால தைரியமா எழுதுங்க !!

Reply

rajesh.v October 12, 2011 at 11:51 PM

சமீப மாதங்களில் என்னுடைய தளத்தினை படிப்பவர்கள் பயன்படுத்திய உலவியில் க்ரோம் முதன் முறையாக முதல் இடத்தை பிடித்து இருக்கிறது

————————————————————————————
me too one among them

Reply

rajesh.v October 12, 2011 at 11:53 PM

kosuru, mega, mini, micro, giga

giri yeppadi yeludhinalum virumbi padikum vasagargalil oruvan nan.

rajesh.v

Reply

காயத்ரிநாகா October 16, 2011 at 10:30 AM

Hai Giri,
I have been selected for the post of assistant manager in Pallavan Grama Bank (A scheduled bank fully owned by govt.of India & Tamilnadu,sponsored by Indian bank)..I am very happy to share this with you and our blog readers..Thank you…

Reply

tamil cinema October 18, 2011 at 5:11 AM

நன் ச்ரோமே ப்ரௌசெர் உஸ் பண்ணிருக்கேன் இட் இஸ் நாட் அச குட் அச firefox இட் இஸ் பிரோம் google சோ இஸ் தி ரிசே பட் நாட் அச குட் அச firefox by ஆல் means

Reply

Maya November 2, 2011 at 10:09 AM

Good article.

Can u help me? i have two hard drives. One is sata and another one is IDE. i want 2 connect ide to sata. without deleting the data content of IDE i searched in google but cant understand. Pls help me

Reply

Abarajithan November 6, 2011 at 3:02 PM

உண்மைதான்.. இந்தியாவில் முதல் இடத்தை பிடித்தேவிட்டது க்ரோம். இலங்கையிலும் இரண்டாமிடம். எக்ஸ்ப்ளாரர் இந்தியாவிலும் இலங்கையிலும் மூன்றாம் இடம்தான் என்பதைக் கவனிக்கவும்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தான் எக்ஸ்ப்ளோரர் முதல் இடத்தில் (வீழ்ந்து கொண்டு) இருக்கிறது. அவ்வளவிற்கு அங்கே முட்டாள்கள் இருக்கிறார்கள்.. :)

Reply

Abarajithan November 6, 2011 at 3:04 PM

Check out the China stats also.. The whole population seems to be uneducated.

Reply

Abarajithan November 6, 2011 at 3:07 PM

மொபைல் பிரவுசரிலும் முதலிடம் பிடிக்கப்போகிறது Android.. Lets see

Reply

கிரி November 7, 2011 at 7:49 AM

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கொசுறு இடுகையாக எழுதுகிறேன்.. படித்துட்டு எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க :-)

அப்புறம் க்ரோம் தான் டாப்பு ;-)

@மாயா உங்கள் கேள்வி சரியாகப் புரியவில்லை.” i want 2 connect ide to sata.”

Reply

avudaiappan December 13, 2011 at 10:32 PM

தீநரி
உண்மையாக
நன்று
என்வோடே
firefox

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed