அஜித்

நீண்ட வருடங்களுக்குப்பிறகு அஜித்திற்கு ஒரு வெற்றிப்படம். சாதா வெற்றியாக இல்லாமல் “Back with BANG ” என்று வந்து இருக்கிறார் தல. ஏற்கனவே படம் பல விமர்சனங்கள் படித்து இருப்பீங்க அதனால் திரும்ப அதையே சொல்வதில் என்ன இருக்கிறது?

அதனால் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறேன் 🙂 அஜித்திற்கு தோல்விப்படங்கள் என்பது சகஜமான ஒன்று ரசிகர்களுக்குக் கூட. இந்தப்படம் கூட தோல்வி அடைந்து இருந்தால் சரி விடுங்க!

அடுத்த படத்துல பார்த்துக்கலாம் என்று மனதை தேற்றிக்கொள்ளும் அளவிற்கு அவரது ரசிகர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள்.

அஜித் வாழ்க்கையே ஒரு போராட்டம் மிகுந்தது தான். ரஜினி போல எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இந்த உச்ச நிலையை அடைந்து இருக்கிறார். பல சினிமா தொடர்புகள் இருப்பவர்களே இந்தக்காலத்தில் தங்கள் நிலையை தக்க வைத்துக்கொள்வது என்பது சிரமமாக உள்ளது.

அப்படி இருக்கும் போது அஜித் இவ்வளவு வருடம் தன் நிலையை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றே அதுவும் தொடர்ச்சியான வெற்றிகளைக் கொடுக்காமல்.

அஜித் பல ஏற்ற இறக்கங்களை தனது வாழ்க்கையில் கண்டு விட்டார் உடன் பல சர்ச்சைகளையும்.

இவருக்கு ஆசை, காதல்கோட்டை போன்ற படங்களின் அசுர வெற்றி பெரிய தலைக்கனத்தை கொடுத்து விட்டது.

இதனால் அந்த சமயங்களில் பலவித சர்ச்சைகளில் மாட்டினார் உடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹீரா மற்றும் வசுந்தரா தாஸ்.

அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று பேட்டி கொடுத்து ஊடகங்களுக்கு வாயை மெல்ல விஷயம் கொடுத்தார் இவரது கெட்ட நேரம் இவர் இதைப்போல கூறிய பிறகு வெற்றிப்படம் என்று தொடர்ச்சியாக அமையாமல் தோல்விப்படமாகவே அமைந்து விட்டது.

வரலாறு, பில்லா மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி வந்த படம். அஜித் ஒரு பைக் ரேசர் என்பது நாம் அனைவரும் அறிந்தது இதற்கு தீனி போடும் வகையில் ஒரு சில படங்களில் இவர் பைக் திறமையை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கு இடையில் ஒரு நிலையான மன நிலையில் இல்லாமல் திரைப்படமா ரேசா என்று குழப்பமாக இருந்தார்.

திடீரென்று கார் ரேசில் ஆர்வம் காட்டினார். இதனால் இவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள் காரணம் பாதியில் ஏதாவது இவருக்கு ஆகி விட்டால் என்ன செய்வது என்ற நியாயமான பயம் தான்.

அஜித்தும் அது பற்றி பெரிதாக கவலைப்படவில்லை வேண்டும் என்றால் வாங்க இல்லை என்றால் பரவாயில்லை என்கிற மனநிலையில் தான் இருந்தார்.

கார் ரேசில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்றாலும் அட! என்று நினைக்கும் அளவிற்கு தனது பங்களிப்பை கொடுத்து இருந்தார்.

அஜித்திற்கு விபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட போது இனி அவர் முன்பு போல திரையில் நடிக்க முடியுமா! என்றெல்லாம் பலர் சந்தேகித்தனர். இனி அஜித் அவ்வளவு தான் என்று அனைவரும் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டார்கள்.

அஜித் தொப்பை போட்டு இருப்பதற்கு அவரது உடலில் உள்ள பாதிப்புகளும் ஒரு முக்கியக் காரணம் ஆகும். இதே வேறு ஒருவர் அஜித் நிலையில் இருந்தால் நிச்சயம் என்றோ காணாமல் போய் இருப்பார்.

தன் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் இன்றும் இவ்வளவு பெரிய வெற்றி கொடுக்க முடிகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் அவரது தன்னம்பிக்கையும் எனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என்று தைரியமாகக் கூறியும் அவரை பின் தொடரும் ரசிகர்களும் மட்டுமே காரணம்.

அஜித் வாயால் கெட்டதே அதிகம் எங்கே சென்றாலும் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களைக் கூறி மாட்டிக்கொள்வார் அல்லது ஏதாவது இயக்குனருடன் சண்டை என்று ஊடகங்கள் மெல்ல ஏதாவது கொடுத்துக்கொண்டே இருப்பார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் இவரிடம் பல மாற்றங்கள். அதன் பிறகு ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையே நிறுத்தி விட்டார் மிக மிக அரிதாகவே இவரது பேட்டிகள் வந்தன. இதில் குறிப்பிடத்தக்க பேட்டி என்றால் விஜய் டிவி யில் கோபிநாத் எடுத்த பேட்டியைக் கூறலாம்.

இதன் பிறகு ரஜினியுடன் மிக நெருக்கமாகி விட்டார்.

ரஜினி இவருக்கு கொடுத்த “Living with the Himalayan Masters” புத்தகம் இவரிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது உண்மையோ பொய்யோ ஆனால் இதன் பிறகு அஜித் ரொம்ப பக்குவமாகி விட்டார் என்பது உண்மை.

அஜித் தன்னுடைய ரசிகர் மன்றத்தில் இருந்து கொண்டு ரசிகர்கள் அரசியல் கட்சிகளை ஆதரிப்பதில் உடன்பாடில்லாமல் இருந்தார் இதனால் எவ்வளோ முறை கூறிப்பார்த்தார் கண்டித்துப்பார்த்தார் ஆனால் ரசிகர்கள் அஜித்தின் எதிர்பார்ப்பிற்கு இணங்கி நடக்கவில்லை.

ரசிகர்கள் இதைப்போல நடந்து கொள்வது அஜித்திற்கு பிடிக்கவில்லை அதனால் மன்றத்தை கலைத்து விடுவேன் என்று மிரட்டிப் பார்த்தார்.

அஜித் ரசிகர்களும் (அனைவரும் அல்ல) அஜித்தை மற்ற நடிகர் போல நினைத்தார்களோ என்னவோ இவர் கூறியதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.

கடைசியில் பொறுக்க முடியாமல் மன்றத்தை கலைப்பதாக அதிரடியாக அறிவித்தார்.

இதற்கு பொது மக்கள் இடையே பலத்த ஆதரவு குறிப்பாக இளைஞர்களிடையே. இந்த நடவடிக்கையின் மூலம் அனைவரது மனதிலும் மேலும் உயர்ந்து விட்டார். இது தொடருமா என்பது அஜித் கையில் தான் உள்ளது.

அஜித் ஒரு சிறந்த நடிகர் என்று கூற முடியாது ஆனால் வித்யாசமாக ஏதாவது செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஓரளவு இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

இதற்கு உதாரணமாக வாலி, சிட்டிசன், வரலாறு படங்களைக் கூறலாம் இதில் சிட்டிசன் வெற்றிப்படம் இல்லை என்றாலும் பல்வேறு வேடங்களை முயற்சித்துப் பார்த்ததற்காக நிச்சயம் பாராட்டலாம்.

வரலாறு படத்தில் எந்த “மாஸ்” நடிகருமே முயற்சிக்க நினைக்காத ஒரு காதாப்பாத்திரத்தை செய்து இருந்தார். பில்லா படத்தில் ரஜினியின் மேனரிசம் துளி கூட இல்லாமல் நடித்து (நடந்து!) இருந்தார்.

ரஜினி கூட ஒரு முறை விழாவில் கூறி இருந்தார் கதாநாயகனாக நடிப்பது என்றால் எப்போதும் நீதி நேர்மை நியாயம் என்று ஒரே மாதிரி நடிக்க வேண்டும்.

அதே வில்லனாக நடிப்பது என்றால் நம்மால் இன்னும் பல வித்யாசமான முயற்சிகளை செய்யலாம் என்று தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி இருந்தார்.

அதே போல நடிப்பதற்கு எந்திரனில் வாய்ப்பு கிடைத்த போது அதை மிகச் சரியாக பயன்படுத்தி இருந்தார்.

இதே போல அஜித்தும் தானாக தேடிப்போய் பெற்ற வேடம் தான் மங்காத்தா விநாயக். இதைத்தான் படத்திலும் தன்னிலை விளக்கமாக “நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது” என்று கூறி இருந்தார்.

கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருப்பவர் ஏற்று நடிக்கும் வேடமல்ல என்று தெரிந்தும் நடித்து அதில் வெற்றியும் பெற்று விட்டார் அதிலும் குறிப்பாக தனது ஐம்பதாவது படத்தில். இது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆகி விட்டது.

மங்காத்தா பற்றி ஏற்கனவே பலர் கூறி விட்டார்கள் நான் புதிதாகக் கூற எதுவுமில்லை. 500 கோடியைக் கொள்ளை அடிப்பது நாலு பசங்க என்பதும் அதை விட ரொம்ப எளிதாக அதை இடம் மாற்றுவதும் நம்புகிற மாதிரி இல்லை.

த்ரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, லட்சுமிராய் என்று பலர் வந்து போகிறார்கள். பிரேம்ஜி போர் அடிக்க ஆரம்பித்து விட்டார். … சண்டைக்காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம். அஜித் இதில் ரொம்பக் கேசுவலாக நடித்து இருக்கிறார்.

காலையில் எழுந்து இனிமேல் தண்ணியே அடிக்கக் கூடாது என்று கூறுவது செம ரகளை. இது என் அறை நண்பர்களுடன் இருந்த நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தியது 🙂 .

அர்ஜுனுக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை என்றாலும் இதில் சீனியர் நடிகரான இவர் நடிக்க ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம் தான்.

இவ்வளவு நாட்களாக தோல்விப் படங்களால் அஜித் ஆட்டத்திலேயே இல்லை என்று இருந்த மற்ற நடிகர்களுக்கு இந்த மங்காத்தா வெற்றி கொஞ்சம்!! அதிர்ச்சியாகத்தான் இருந்து இருக்கும். நான் கூட அஜித் போட்டியில் இருந்து விலகி விட்டார் என்றே நினைத்து இருந்தேன்.

வாழ்த்துக்கள் அஜித்.

அஜித்தின் இந்த வெற்றி, ரசிகர்கள் கூட்டம் எல்லாம் ஏதோ ஒரு படத்தில் நடித்து வந்ததல்ல பல்வேறு சர்ச்சைகள், போராட்டங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், வேதனைகள் என்று பல நிலைகளை கடந்தே வந்துள்ளார்.

அதனால் தான் எவ்வளவு தோல்விப்படங்களைக் கொடுத்தாலும் ஒரு வெற்றிப்படம் கொடுக்கும் போது அனைவரையும் திரும்பிப் பார்க்கும்படி கொடுக்க முடிகிறது.

அஜித் மங்காத்தாவில் ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்று கூறுவார் அது போல ரசிகர்கள் ஓவர் வெற்றிக் கொண்டாட்டம் கூட… உங்கள் (ரசிகர்கள்) கொண்டாட்டம் தலயை சங்கடத்தில் ஆழ்த்தி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கொசுறு 1

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து தற்போது “3” என்கிற படத்தை தனுஷை வைத்து இயக்கப்போகிறார்.

முன்பு அமலா பால் நடிப்பதாக இருந்தது பிறகு அவருடைய கால்ஷீட், சம்பள பிரச்சனை காரணமாக விலகிவிட்டார். படத்தோட ஸ்டில் எல்லாம் இயல்பா நல்லாத்தான் இருக்கு படம் நல்லா இருக்குமா! 🙂 .

கொசுறு 2

இம்சையைக் கொடுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கும் குறுந்தகவல்களுக்கும் (SMS) வரும் செப்டம்பர் 27 ம் தேதி முதல் தடை வருகிறது ஒருவழியாக! இந்தத் தொல்லையை அனுபவித்து இராத எந்த ஒரு செல் வாடிக்கையாளரும் இருக்கவே முடியாது.

லோன் வேண்டுமா? டிவி ரிப்பேர் செய்ய வேண்டுமா? க்ரிடிட் கார்டு வேண்டுமா என்று நம்மை கொலைவெறி ஆக்கி விடுவார்கள்.

நாம் ஏதாவது முக்கியமான வேலையில் இருப்போம் அந்த சமயத்தில் வந்து சார் க்ரிடிட் கார்டு வாங்கிக்கறீங்களா! என்று கேட்டு நம்மை கடுப்பேத்துவார்கள்.

பாராளுமன்றத்திலேயே எதோ அமைச்சருக்கு இந்த அழைப்பு வந்து செம காமெடியாகி விட்டது.

நான் ஒரு முறை இந்தியா வந்து இறங்கி என்னுடைய செல்லை ஆன் செய்தவுடனே ஒரு குறுந்தகவல் வந்தது.. ஆஹா! ஏர்டெல் பொறுப்பா Welcome மெசேஜ் அனுப்பிட்டான் போல என்று பார்த்தால்..

“Do you want to learn tailoring within 1 week Pls contact *********” என்று வருகிறது செம காண்டாகி விட்டது. ஊரில் இருந்த கொஞ்ச நாளில் இவனுக தொல்லை பொறுக்கவே முடியவில்லை.

ஒரு நாளைக்கு குறைந்தது பத்து குறுந்தகவலாவது அனுப்பறாணுக. அது வேண்டுமா! இது வேண்டுமா! என்று சகிக்கவே முடியவில்லை.

ஒவ்வொருமுறையும் நண்பர்களிடம் இருந்து தான் வருகிறது என்று பார்த்தால் இவனுகளாத்தான் இருப்பானுக. இது பத்தாதுன்னு அழைப்புத் தொல்லை..ஸ்ஸ்ஸ்ஸ்.

தற்போது பல்வேறு தொழில்நுட்பப் பிரச்சனைகளைக் களைந்து ஒருவழியாக இந்தத் திட்டத்தை TRAI அமுல்படுத்தப் போகிறது. இதற்கு நீங்கள் “Do not call registry” ல் பதிவு செய்து இருக்க வேண்டும். இதில் “Fully Blocked” & “Partially Blocked” என்கிற இரு வசதி உள்ளது. Vodafone & Airtel

{ 34 comments… add one }
 • kamal rasigan September 6, 2011, 8:59 AM

  அஜித் என்று தலைப்பு ….இதில் ரஜினியை தான் அதிகமாக புகழ்ந்து இர்ருகீங்க கிரி ….

  உங்கள் ரஜினி ரசிகன் புத்தியை அடிகடி காட்டுறிங்க …….

 • ajithrajini September 6, 2011, 11:42 AM

  ஹாய் கிரி.,
  இ எச்பெச்ட் திஸ் ரெவிஎவ் லாங் பாசக் .. so justified… why you not accept Thala as a actor.. give some valid reasons???? In our cine industry after Rajini, Thala is the perfect human….

 • ajithrajini September 6, 2011, 11:49 AM

  இட்ஸ் நாட் வாயால் கெட்டது … we have to appreciate his boldness.. who have a guts to talk like that… TRYING is always better than keeping ideal… and you forget about the cine industry strike.. who have a guts to support the வோர்கேர்ஸ்(labours )?? Rajini? Kamal??? First voice from actor side is Thala.. for that he face lot of troubles and even he not bothered about it..

 • r.v.saravanan September 6, 2011, 12:07 PM

  கிரி நானும் பார்த்து விட்டேன் அஜித் நடிப்பு எனக்கு பிடிச்சிருந்தது

 • Mohamed Yasin September 6, 2011, 12:14 PM

  பதிவுக்கு நன்றி..

 • எப்பூடி ... September 6, 2011, 12:19 PM

  அமர்க்களம் திரைப்படத்தில் அஜித் பேசுவதுபோல சரண் ஒரு வசனம் எழுதியிருப்பார் “நான் பாத்து பாத்து வளர்த்த வீட்டு மரமில்ல; தானா வளர்ந்த காட்டு/தேக்கு மரம், வெட்ட நினைச்ச கோடரி சிக்கிக்கும்” இந்த வசனம் அஜித்திற்கு அப்படியே பொருந்தும். மங்காத்தா பாக்கல, ஆனா பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பார்த்தன், மகிழ்ச்சி.

  பழைய அஜித் முதிர்ச்சி இல்லாதவர், இப்போதைய அஜித் பக்குவப்பட்டவர், பழசை மறப்போம், புதியதை ஏற்றுக்கொள்வோம்.

 • ராமலக்ஷ்மி September 6, 2011, 1:13 PM

  விளம்பரக் குறுந்தகவல்களாகதான் இருக்குமென அசட்டை செய்வதில் முக்கிய தகவல்கள் உடனடியாகப் பார்க்கப்படாமல் மாட்டிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது.

  “Do not call registry”, முன்னரே ஏர்டெல், பிஎஸ் என் எல்(லாண்ட் லைனுக்கு) இரண்டிலுமே பதிந்தும் எந்தப் பிரயோசனமும் இல்லையே:(!

 • ராமலக்ஷ்மி September 6, 2011, 1:22 PM

  /“Partially Blocked”/ இந்த வசதி நன்றே. மறுபடி பதிந்துள்ளேன். எப்படி சேவை என்பதை இரண்டு நாட்கள் பொறுத்து [24 மணி நேர அவகாசம் கேட்கிறது. கொடுப்போம்:)!] கவனித்து விட்டு சொல்லுகிறேன்.

 • balasubramanian September 6, 2011, 6:57 PM

  பெரும்பாலான பத்திரிக்கைகள் அஜீத் பேசியதை மிகப்படுத்து எழுதின என்பதையும் மறுக்க முடியாது. இன்றும் பாருங்கள், அஜீத் பற்றி எழுதினால், அஜீத் சீற்றம், அஜீத் அதிரடி என்று தலைப்பு வைப்பார்கள். அஜீத் சொன்னது, அந்த வயதில் அப்படி இருந்தேன், அதே மாதிரி இந்த வயதில் இப்படி இருக்கிறேன். இது காலத்துக்குரிய மாற்றம் என்றார். அஜீத் வாழ்க்கையை மாற்றி அமைத்த இரண்டு சம்பவங்கள் ஒன்று அவரது திருமணம் மற்றொன்று சூப்பர் ஸ்டார் உடனான நட்பு. கலக்கல் நண்பரே…

 • Rajan September 6, 2011, 7:43 PM

  அஜித், பல புதிய இளைய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து – (இவருக்கு தோல்வி என்றாலும் அவர்களுக்கு ‘திருப்பு முனை’ ) ஆதரித்துள்ளார் என அறிந்திருக்கிறேன். அதை பற்றி நீங்கள் எதுவும் கூறவில்லையே?

 • muthu September 6, 2011, 9:38 PM

  நீங்க அஜித் இரசிகர படம் அவ்வளவாக நல்ல இல்ல. மானரிசம் ஓகே பட் வசனம் சரி இல்ல. வெங்கட் பிரபு டீம் ஓகே அதுல அஜித் நாட் ஓகே.

 • கிரி September 7, 2011, 7:20 AM

  @கமல் ரசிகன்

  அப்படி என்னங்க ரஜினிய புகழ்ந்து கூறிட்டேன்! அஜித் ரஜினி மீது மரியாதை வைத்து இருக்கிறார் என்பதால் அவரை உதாரணத்திற்கு எடுத்துக்கூறினேன். நான் கூறியதில் ஏதாவது சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதா? ரஜினியைப் பற்றி எழுதும் போது சில நேரங்களில் கமலை குறிப்பிடாமல் இருக்க முடியாது இருவரும் நெருங்கிய நண்பர்கள் அதனால் ரஜினி கஷ்டங்களை எழுதும் போது அந்த சமயத்தில் உதவிய கமலைப் பற்றி எழுதினால் அது கமலைப் புகழ்ந்தது என்று ஆகி விடுமா! எப்போதும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்காதீர்கள்.

  @அஜித் ரஜினி

  நீங்களே அவரை நல்ல மனிதர் என்று தான் முன்னிறுத்துகிறீர்கள் நல்ல நடிகர் என்று கூறவில்லையே. அஜித் நல்ல மனிதர் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்துமில்லை.

  வாயால் கெட்டது என்று கூறியது முந்தைய சமயத்தில் அதாவது அஜித் பக்குவமில்லாத சமயங்களில். பெப்சி விழாவில் பேசியதற்கு அல்ல. http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html இதுல போய்ப்பாருங்க நான் என்ன கூறி இருக்கிறேன் என்று.

  @ராமலக்ஷ்மி நீங்க செப்டம்பர் 27 க்கு பிறகு கவனித்து பாருங்க.. இப்ப கவனிப்பது பயனற்றது.

  @பாலா நீங்க கூறியது மிகச்சரி.

  @ராஜன் சார் இது அஜித் வாழ்க்கை வரலாறு இல்லை..மேலோட்டமாக சில விசயங்களை தொட்டு வந்த பதிவு. அஜித் தன்னோட வாழ்க்கை வரலாறையே எழுதினால் கூட சிலர் அஜித்! நீங்க இந்த விஷயம் பற்றி குறிப்பிடவில்லையே! என்று கூறுவார்கள் அப்படி இருக்க நான் எப்படி சார் அனைத்தையும் இந்த சின்ன பதிவில் கவர் செய்வது 🙂

  @முத்து நான் ரஜினி ரசிகன். எனக்கு மங்காத்தா படம் பிடித்து இருந்தது. இன்னொருமுறை வாய்ப்புக் கிடைத்தால் செல்வேன். ரசனைகள் பலவிதம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது ஒன்றும் தவறான விசயமில்லை. யாருடைய படமும் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லையே! 🙂

 • ajithrajini September 7, 2011, 6:44 PM

  Again I have to defend you mr giri..
  look if he is not a good actor , how he can be a ‘King of Opening’ after our Rajini??? Even after his continuous flops… the so called flop movies also gave profit to the producers and distributors… if it fails he returned his part of the salary to these guys… take our vijay , he too give continuous flops.. what happened .. u know right.. all his producers and distributors were against him.. tell me, this kind of issues happened in thala’s history??… in the time of cine industry strike, producers who gave advance to him , they threatened him to return the advance money within the short period of time.. especially mr dhanu .. that time some other financiers helped him to overcome the issue by giving money…. He too proven his acting skills in Amaravathi, kadhal kottai, Valli, Mugavaree, Citizen, Varalaru, Kireedam…

  Giri.. list out any perfect person in our generation???? What you mean by ‘Pakuvaam’ … if I start to write about this means it will not stop.. there is only one Budha & Vivekanandha … even Jesus was not recognize at His period generation… after all we are human beings.. if your view is pakkuvam means mine was GUTS… might be that too earn more fans for him.. who knows…

  Anyway nice to chat with u.. keep writing .. I’m reading your blog for last few months..

  Thanks & take care..

 • கிரி September 7, 2011, 8:09 PM

  அஜித் ரஜினி 🙂 இதற்கு நான் பதில் கூற முடியும் ஆனால் நீங்கள் சொல்வது போல முடிவு இல்லை. சில மாதங்களாக படிக்கிறேன்னு சொல்றீங்க! உங்க பெயருடனே பேசி இருக்கலாமே! இன்னும் கொஞ்சம் சந்தோசப்பட்டு இருப்பேன் 🙂

  அதேபோல மாற்று கருத்து இருந்தால் கூறுங்கள் அதை என்றும் வரவேற்கிறேன். மாற்றுகருத்துடன் என்னுடன் விவாதம் செய்து நண்பர்களாக தொடர்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சண்டை போட வந்தவர்களே நண்பர்களாகும் போது நீங்கள் நட்பாகத்தானே பேசுகிறீர்கள் அப்புறம் என்ன! 🙂 அடுத்த முறை உங்கள் பெயரோடு வாருங்கள்.

 • ajithrajini September 7, 2011, 8:54 PM

  ஹாய் கிரி..

  இதில் சண்டை போட என்ன இருக்கு.. Just our view of points..thats it .. Usually always I use this name & email id as an alternative purpose.. coz I don’t have patient to read all the spams .. I’m not mentioning you.. like u know right..

  I’m Satish.. now living in Jakarta.. my other id – jsf_i@yahoo.com

 • Rajesh Ganesan September 8, 2011, 10:24 AM

  இந்த ஒரு மட்டமான படத்தில் நடித்ததற்கு அஜித்துக்கு இவ்வளவு பெருமையும் புகழும். எல்லாம் நேரம்….

 • Rajesh Ganesan September 8, 2011, 10:27 AM

  நான் கமெண்ட் எழுதுவதை பார்த்துகொண்டிருந்த என் தாய் கூடவே இதையும் சேர்க்க சொன்னார். “சண்டை மிகவும் அதிகம். பாடல்கள் பரவாயில்லை…” 🙂

 • ajithrajini September 8, 2011, 2:50 PM
 • ராமலக்ஷ்மி September 9, 2011, 7:03 AM

  ஆம்:)! பதிவிலேயே சொல்லியுள்ளீர்கள். சரி.

 • rajesh.v September 10, 2011, 10:57 PM

  mr. giri,

  Ajith had recently said thalaivar is like a god to him. After reading this i started to respect ajith. Even though i did nt like mangatha , i told my friends mangatha was a nice movie because i dont want a person who treat rajini as a god to face failure.

  I think you are also written this review in the mindset i have

  rajesh.v

 • tamil cinema September 11, 2011, 2:31 AM

  இ லைக் தி நெவெர் say die ப்ரின்சிப்லே ஒப் ஒஉர் தல அஜித் குமார்… ஹி இஸ் தி மண்…

 • balu September 13, 2011, 7:48 PM

  இட்ஸ் எ குட் என்டேர்டைன்மென்ட் பிலிம் , அஜித் சார் படம் நல்ல தான் இருக்கு, எண்டு டைட்டில் சூப்பர் வெங்கட் பிரபு சார். அடுத்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அஜித் சார்.

 • பாமரன் September 17, 2011, 5:16 PM

  மங்காத்தா படம் பற்றிய எனது கருத்து ….. இங்கே அது தேவை இல்லை. ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. இந்த படத்தில் தான் முதன் முதலாக ஒரு பெரிய ஹீரோ வில்லனாக நடித்திருக்கிறார், இது ஒரு நல்ல தொடக்கம். அஜித் இமேஜ் எல்லாம் பார்க்காமல் நடித்திருக்கிறார் என்று ஒரே கும்மாங்குத்தா இருக்கு. கேபிள் சங்கர் கூட எழுதி இருந்தார்.

  30 வருஷத்துக்கு முன்னாலேயே கமல் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அதை செஞ்சுட்டார். அதுவும் பெண்களை ஏமாற்றி கொலை செய்யும் ஒரு சைக்கோ கதாபாத்திரம். கடைசியில் மனநிலை பாதிக்கப் பட்டவராக சிறையில் மொட்டை தலையுடன் வேறு இருப்பார். இதெல்லாம் அந்த காலத்தில் ஒரு பெரிய ஹீரோ செய்ய, நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். அப்பொழுதே கமல் தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகன். குருதி புனல் படத்தில் அர்ஜுனை guts உள்ள அதிகாரியாக சித்தரித்து இருப்பார்கள். ஆனால் தீவிரவாதியிடம் தோற்று போன ஒரு போலீஸ் அதிகாரியாக, இயலாமையில் புழுங்கி, கடைசியில் சித்திரவதை செய்யப்பட்டு, முகமெல்லாம் கோரமாக சிதைக்கப் பட்டு, தன்னை சுட சொல்லி இறந்து போகும் கதாபாத்திரத்தில் நடிக்க கமலை தவிர வேறு எந்த முன்னணி நடிகர் முனைந்திருப்பார்?

  இதை விட இன்னும் ஒன்று, சிவாஜி முன்னணி கதாநாயகனாக இருந்த காலத்தில் ஒரு படத்தில் காமுகனாகவே நடித்திருப்பார் (‘அந்த நாள்’ என்று ஞாபகம்). ஆலயமணி படத்தில் தன் நண்பன் மீதே பொறாமை படும் ஒரு குரூர புத்தி கொண்ட பாத்திரமாக நடித்திருப்பார்.

  ஆனா சந்திரமுகி, குசேலன் original ஐ எல்லாம் இங்கே ரஜினிக்காகவே எப்படி மாத்தினாங்கன்னு நாம எல்லாம் பார்த்தோம்.

  அதனால அஜித்தை பத்தி இந்த ஜல்லி எல்லாம் வரலாறை ஒரு தடவை திரும்பி பார்த்துட்டு அப்புறம் அடிக்கலாமே.

 • கிரி September 19, 2011, 4:35 PM

  வாங்க பாமரன் 🙂 எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆளைக்காணோம்.

  சரி! அது என்ன கமல் ரசிகர்கள் என்னை எப்போதும் இடக்கு மடக்காகவே புரிந்து கொள்கிறீர்கள் 🙂 இதில் நான் எங்கேயும் நீங்கள் குறிப்பிட்டது போல எழுதவில்லை அதாவது அஜித் தான் இதைப்போல செய்து இருக்கிறார் மற்றவர்கள் யாரும் செய்யவில்லை என்று.

  கமல் தற்போது இதைப்போல செய்து இருந்தாலும் நான் அஜித் க்கு கூறியது போலவே கூறி இருப்பேன் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

  அஜித்தை பாராட்டி இருக்கிறேனே தவிர அதற்காக மற்ற யாரையும் குறைவாக மதிப்பிடவில்லை.

  கமல் சிகப்பு ரோஜாக்கள் வந்த போது நான் ப்ளாகர் இல்லையே 🙂 ஹி ஹி இருந்து இருந்தால் கண்டிப்பாக பாராட்டி இருப்பேன். குருதிப்புனல் வந்த போது கூட.

  வரலாறை திரும்பி பார்க்க சொல்லி இருக்கீங்க.. பாருங்க அஜித் “வரலாறு” பற்றி எழுதி இருக்கிறேன் ஹி ஹி jus kidding 🙂

  பாமரன் இதுல மற்ற நடிகர்களை குறிப்பா கமலை பற்றி குறைத்து மதிப்பிட்டு எழுதி இருப்பதா ஒரு வரி ஒரே ஒரு வரியாவது காட்டுங்களேன் பார்க்கலாம்.

  நீங்க இப்படி எழுதியதைப் பார்த்து எனக்கே சந்தேகம் வந்து திரும்ப ஒருமுறை என் பதிவையே படித்துப் பார்த்தேன் என்றால் பாருங்கள் 🙂

  அப்புறம் அப்பப்ப வாங்க!

 • பாமரன் September 19, 2011, 10:05 PM

  கிரி, ரொம்ப நல்லா இருக்கேன். ப்ளாக் பக்கம் எல்லாம் உலாவ முடியாம நேர நெருக்கடி.

  அஜித்தை பற்றிய ஜல்லியோ, கமலை குறை கூறியோ நீங்கள் சொன்னதாக நான் குறிப்பிடவில்லை கிரி. அஜித்தை பற்றி (இப்போ) மங்காத்தா வந்த பிறகு பொதுவாக காணப் படுகிற சொம்பு பதிவுகள் பற்றி தான் நான் குறிப்பிட்டது. கமல் பற்றி சொன்னது ஒரு counter reference தானே ஒழிய உங்களுக்கான பதில் அல்ல.

  இப்போ இருக்கிற மங்காத்தா அலையில நான் அந்த படத்தை பத்தி என்னுடைய கருத்தா ஏதாவது சொன்னா என்னை பிரிச்சி மேஞ்சுடுவாங்க. அதனால தான் நான் அதை பத்தி எதுவும் சொல்லாம வேற விஷயத்தை பத்தி பதிவிட்டேன்.

  கமலின் வெறி பிடித்த ரசிகனா நான் இருந்தது உண்மை. ஆனா இப்போ அவர் மேல ஒரு ஒரு அபிமானம் தான் இருக்கு. காரணம் அவர் வெற்றிப் படம் தராததால இல்லே. ரஜினி ஒரு பிரத்யோக உயரத்துக்கு சென்றதை போல, கமலும் தனக்கே உரிய பன்முக திறமையும், புதிய முயற்சிகள் மூலமும் இந்திய அளவில் ஒரு ஸ்பீல் பெர்க், ஜேம்ஸ் காமரூன் போல மிகப் பிரமாண்டமான கலைஞராக உயர்வார் என்று ரொம்பவும் எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்பார்ப்பை எல்லாம் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார். இப்போ கூட விஸ்வரூபம், ஹாலிவுட் பாணியில் பிரமாண்டமா தயாராகுது அப்படீன்னு செய்தியை படிக்கறப்போ, மகிழ்ச்சியை விட, பெருமூச்சும், பயமும் கலந்த (சொதப்பிடக் கூடாதேன்னு) ஒரு எதிர்நோக்கு தான் இருக்கே ஒழிய, ரஜினியின் அடுத்த படம் அவர் ரசிகர்களுக்கு தருகின்ற கிளர்ச்சி கலந்த மகிழ்ச்சியான guaranteed எதிர்பார்ப்பு இல்லை.

  கமல் ரசிகர்கள் மன்னிக்கவும். இது கமல் மீது பற்று கொண்ட ஒருவனின் ஆதங்கம் தான்.

 • கிரி September 22, 2011, 7:28 AM

  சொம்பு பதிவுகள் ஹா ஹா 🙂

  இது சகஜம் தான் பாமரன். எந்த ஒரு படம் ஹிட் என்றாலும் அதைப் பற்றி இது போல வருவது சகஜம் தான். கமல் படமாக இருந்தாலும் இதே நிலை தான். தசாவதாரம் வந்த போது ஒருவாரம் அதைப்பற்றியே இருந்தது. இது தவிர்க்க முடியாதது.

  நீங்க கமல் பற்றி கூறியதில் நான் ஒரு கருத்து சொல்றேன். இயல்பாக நடிக்கும் மகாநதி கமலை தற்போது காணவில்லை. அவர் உடன் இருப்பவர்கள் கமலை உசுப்பேத்தி விட்டு அவருடைய இயல்பையே தொலைத்து விட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. எடுத்துக்காட்டாக மன்மதன் அம்பு படத்தில் அவருடைய மகாநதி அன்பே சிவம் போன்ற படங்களைப் போல இயல்பான நடிப்பை காண முடியவில்லை.

  இதில் தன்னுடைய புத்திசாலித்தனத்தை முன்னிறுத்த பேசுவதாகவே எனக்குப் பட்டது. இது எனக்கு தோன்றியது ..குறையாக கூறுவதாக நினைக்க வேண்டாம்.

  இது பற்றி உங்களைப் போல கமல் ரசிகரான நண்பர் ஜோவிடம் கூட கூறினேன். கமலை எல்லோரும் உலக நாயகன் என்று கூறி அவரை அவருடைய இயல்பான நடிப்பில் இருந்து பிரிக்கிறார்கள்.

  எடுத்துக்காட்டாக சிவாஜி ஒழுங்கா நடித்துட்டு இருந்தாரு ஆனா எல்லோரும் அவரோட நடிப்பை அளவுக்கு மீறி புகழ்ந்ததால் அவருடைய நடிப்பு மிகைப்பட்ட (over acting) நடிப்பாக மாறி விட்டது என்பது என் கருத்து.

  இது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன் ஆனால் நான் ரஜினி ரசிகன் என்பதால் அதை எல்லோரும் வேறு மாதிரி புரிந்து கொள்வார்களோ என்கிற யோசனையில் இன்னும் காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கிறேன்.

  தற்போது இதை ஓரளவு வெளிப்படுத்த உங்கள் கருத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டேன்.

 • vengatesh September 22, 2011, 8:58 AM

  திரு.கிரி அய்யா அவர்களே , உங்கள் விமர்சனத்தை படித்தேன் என் வாழ்க்கையில் நேர்மையான ஒரு சிலரை பற்றி படித்து இருக்கிறேன் ஆனால் புத்தகத்தில் படித்த அவர்களை நேரில் சந்தித்த போன்று ஒரு மனநிலை , உங்கள் விமர்சனம் அவ்வளவு நேர்மையாக இருந்தது நான் உங்களை போன்று எழுத தெரிந்தவன் அல்ல இருந்தாலும் என் ஆசை இதற்க்கு நீங்கள் அஜித் என்று தலைப்பு கொடுத்ததிற்கு பதில் ” ரஜினியை காப்பி அடிக்கும் அஜித்” என்று கொடுத்து இருந்தால் குங்குமம் வார இதழ் செய்தி போன்று பரபரப்பாக இருந்து இருக்கும். நான் ஒன்றே ஒன்று உங்களிடம் கேட்க்க வேண்டும் ” நீங்க நல்லவரா கெட்டவரா” இருந்தாலும் நான் ஒரு தலையின் ரசிகன் என்பதால் இந்த வரிகள் – திரு.கிரி அய்யா அவர்களே உங்களின் அஜித் என்ற மங்காத்தா விமர்சனத்திற்கு என்னுடைய கோட்டான கோடி நன்றிகள்…..
  தன்னடக்கம், தன்னம்பிக்கை, தனிவழி………

 • பாமரன் September 22, 2011, 12:23 PM

  கிரி
  கமல் பற்றிய உங்கள் கருத்து உண்மை தான். தசாவதாரமாவது வர்த்தக ரீதியை குறி வைத்து எடுக்கப்பட்ட படம். ஆனால் என்ன நினைத்து மன்மதன் அம்பை கமல் எடுத்தார் என்பது எனக்கு இன்று வரை புதிர் தான். படம் முழுதும் அவருக்கு ஒரு detachment இருந்தது போலவே ஒரு feeling.

  இன்னும் ஒன்று. கமலின் முந்தைய மிகப் பெரிய plus அதுவே இன்றைய minus அவருடைய உடல் வாகு. வேட்டையாடு விளையாடு படத்தில் தொந்தியும் தொப்பையுமாக, ஓடக் கூட சிரமப்படும் அவரை பார்க்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது. கமல் நினைத்தால் தன்னுடைய உடல் வாகை அட்டகாசமாக வைத்திருந்து இருக்கலாம். அப்படி இருந்தவர் தான் அவர்.

  கமலின் இயல்பு எப்படி அவரிடம் இன்று காணாமல் பொய் விட்டதோ, கிட்ட தட்ட அதே போல் தான் ரஜினியும். அதாவது அவர் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து விட்டதாலேயே அவர் ஒரு stereo type வலையில் மாட்டிக் கொண்டார் என்று தோன்றுகிறது. 90 க்கு முன் பார்த்த ரஜினியின் வேறு பரிமாணங்கள் இன்று காணாமலேயே போய் விட்டது.

  இந்த விஷயத்தில் அமிதாப் கலக்குகிறார்.

 • ராமலக்ஷ்மி September 28, 2011, 8:01 PM

  சரியாக நேற்றிலிருந்து எந்த எஸ்.எம்.எஸ் தொந்திரவும் இல்லை:)!

 • கிரி September 28, 2011, 8:34 PM

  @வெங்கட் ஏன் இப்படி அய்யா கொய்யா னு லொள்ளு பண்ணிட்டு இருக்கீங்க 🙂 சரி நீங்க என்னை பாராட்டுறீங்களா! இல்லை திட்டறீங்களா என்றே புரியலை.

  @பாமரன் நீங்கள் கூறுவது உண்மை ஆனால் இது ரொம்ப பழைய செய்தி ஆச்சே! ரஜினி இந்த வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். ரஜினியிடம் எனக்கு பிடித்தது மசாலா படங்களில் நடித்தாலும் இன்றும் காலத்திற்கேற்ப தன்னை அப்டேட் செய்து கொள்கிறார் அதனால் தான் இன்று வரை நிலைத்து இருக்கிறார்.

  எந்திரன் படம் ரஜினிக்கு அவருடைய நடிப்பு ஆர்வத்திற்கு தீனி போட்ட படம் இதன் பிறகு வித்தியாசமாக முயற்சிக்கலாம் என்று ஆசை வந்து ராணாவில் முயற்சிக்கிறார். இதிலும் மசாலா இருக்கும் இருப்பினும் இதை மற்ற ரஜினி படங்களோடு ஒப்பிட முடியாது காரணம் கதை களம் வேறு. வயது இருக்கும் போது இதைப்போல நடிக்க முயற்சிக்கவில்லை ஆர்வமில்லை தற்போது ஆர்வம் இருக்கிறது ஆசை இருக்கிறது ஆனால் வயது ஒத்துழைக்கவில்லை. எனக்கு இதில் வருத்தம் தான் என்ன செய்வது?

  அமிதாப் ரஜினி மாதிரி நடிக்க முடியாது நடித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதனால் அவர் அழகாக தனக்கு ஏற்ப மாறிக்கொண்டார். இது அவருக்கு சரியான முடிவு கூட.

  சூர்யா எல்லாம் பாருங்க வயதும் இருக்கிறது புதியதாகவும் முயற்சிக்கிறார் இதே போல தொடர்ந்தால் ஒரு நல்ல நிலைக்கு நிச்சயம் வருவார். இவர் கிட்ட எனக்கு பிடிச்சது மசாலாவும் பண்ணுறார் அதே சமயம் கேரக்டர் ரோலும் பண்றார். விக்ரம் கூட நல்ல நடிகர் தான் ஆனால் காலத்தை விரையம் செய்கிறார் ஒரு படத்திற்கு இரு வருடம் எடுக்கிறார் அதுவும் கந்தசாமி போல மசாலா படத்திற்கு. இதனால் ஓடுவது காலம் மட்டுமல்ல அவரது வயதும் தான். தெய்வத்திருமகள் படத்திலேயே இவரது வயது நன்கு தெரிந்தது. இனி அவர் முயற்சித்தாலும் சில கேரக்டர்களை செய்ய முடியாது.

  என்னமோ போங்க! 🙂

  @ராமலக்ஷ்மி வெற்றிகரமாகவா! 🙂 அப்பாடா!

 • ரெஜோலன் September 29, 2011, 11:37 AM

  பாமரன் . . . .

  உங்களது விரிந்து ஒரு பார்வை மிக நன்றாக உள்ளது. கமல் ரஜினி குறித்து பலருக்கு தெரியும், அவர்களது திறமை எல்லாம் நீரூபிக்கபட்டது. கமல் ஒரு நடிகராக புகழ் பெற்றவர் என்பதையும் . ரஜினி ஒரு ஹீரோ என்பதையும் பலரும் மறந்து விடுகிறார்கள் . . .

  (இனி இதுக்கும் விளக்கம் கொடுக்கணும்) . . .

  சினிமாவுக்குத்தேவையான சிறந்த நடிகரா இருக்கிறார் கமல். ஏன் அவரும் ஹீரோ ஆக முயற்சி செய்த சினிமாக்கள்தான் காக்கி சட்டை, சகலகலா வல்லவன் என்ற படங்கள் அப்படியே தொடர்ந்து விடாமல், தன் திறமை மீது நம்பிக்கை வைத்த கலைஞன் . . அதற்காக உங்கள் எதிர்பார்ப்பை எல்லாம் பொய்யாக்கி விட்டார் என்றால் எப்படி? . . .

  அவருக்கு தீனி போடும் சினிமாக்களை விட உங்களுக்காக தீனி போட அவர் முயன்றதுதான் அவரது வழி மாறிய கதை . . .

  ஆனால் தனக்கு நடிப்பும் தெரியும் என்பதை உணர்ந்த ரஜினி, ரசிகர்களுக்கு தீனியும் போட எடுத்த முடிவில் முழுமையாக இருந்ததனால் சந்திரமுகியின் மாற்றம் சரித்திரம் ஆனது. குசேலன் தோல்வி அடைந்தது (இப்பவும் சொல்றேன் அது ரஜினி படம் அல்ல) . .

  இறுதியாக ஒன்று ஆளவந்தான் – சரியான இயக்கமும் தயாரிப்பும் அமைந்திருந்தால் நீங்கள் மட்டுமல்ல இந்தியாவும் திரும்பி பார்க்க கூடிய படமாக அமைந்திருக்கும், இன்னும் சொல்லப்போனால் எந்திரனுக்கு முன்பாக உலகமே கொண்டாடிய தமிழ்படமாக இருந்திருக்கும் , என்ன செய்ய தவறு கமல் மீதுதானோ . . . இந்த ஒரு படம் ஒரு உதாரணம்தான் இதுபோல் என்னால் பல படங்களை சொல்ல முடியும் . .

 • பாமரன் September 29, 2011, 6:07 PM

  ரெஜோலன்

  உங்கள் பார்வையும் சரியாகத்தான் படுகிறது. ஒத்துக் கொள்கிறேன்.

  நீங்கள் சொன்னபடி ஆளவந்தானை நல்ல திரை கதை அமைத்து செய்து இருந்தால் அதனுடைய தொழில்நுட்பத்திற்கு இந்தியாவின் ஒரு trend setter படமாக அமைந்து இருக்கும். எந்திரன் கதையில் கூட ஆளவந்தானின் inspiration இருந்தது.

  நான் சொல்ல வந்தது கமல் சகலகலாவல்லவன், காக்கி சட்டை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ஹீரோவாக இருந்திருக்க வேண்டும் என்பதல்ல. ஜேம்ஸ் காமரூன் ஒரு அவதார் எடுத்து உலகை மிரள வைத்தார். அவதாரும் ஒரு வணிக ரீதியான படம் தான். தசாவதாரம், தொழில்நுட்பத்திலும் கமலின் நடிப்பு திறனிலும் மட்டுமே மிரள வைத்ததே தவிர, அந்த பத்து வேட பன்முக திறமையை இன்னும் ஒரு அழுத்தமான, அசர வைக்கும் கதையை கொண்டு படைத்திருக்கலாம் என்பது என் கருத்து. அப்படி ஒரு படைப்பை மீண்டும் யாரும் முயற்சி செய்ய யோசிக்கவேண்டும்.

  ஆனால் இந்த வணிக கட்டாயங்களும், சூட்சுமங்களும் நமக்கு புரிவது சிரமம் தான்.

 • மழை October 23, 2011, 11:16 PM

  ஹ்ம் அஜித் க்லக்குறீங்க கிரி:)

 • suriya October 29, 2012, 8:08 PM

  அஜித் என் லைப் ஸ்டைல் நீ என்ன சொன்னாலும் ஓகே.

Leave a Comment