கொஞ்ச மாதத்திற்கு முன்பு சம்பந்தமில்லாமல் ஓபரா உலவி கூகுள் க்ரோம் உலவியை நக்கல் அடித்து இருந்தது தற்போது இது மைக்ரோசாப்ட் முறை
ஆனால் மைக்ரோசாப்ட் நக்கலடிக்க காரணமிருக்கிறது. கூகுள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு யாஹூ, ஹாட்மெயில், AOL எல்லாம் பழசு எங்க ஜிமெயில்க்கு மாறுங்க என்று கூறி கூகுள் Email Intervention என்ற முறையில் ஒரு வசதியை ஏற்ப்படுத்தி இருந்தது. இதனால் காண்டான மைக்ரோசாப்ட் “ஜிமெயில் மேன்” என்ற காணொளியை வெளியிட்டு ஜிமெயில் ஐ வாரி இருக்கிறது
உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் அதாவது Google Apps என்ற வசதி பற்றி. இது எதற்கு என்றால் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு மின்னஞ்சல் சேவையை வழங்கி வரும் சில நேரங்களில் சர்வர் பிரச்சனை, இடப்பிரச்சனை, மின்னஞ்சல் செல்லவில்லை மற்ற வெளி மின்னஞ்சல்களை பெறுவதில் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே இந்தத்தொல்லையில் இருந்து தப்பிக்க கூகுள் வழங்கும் ஒரு வசதி தான் Google Apps.
இந்தசேவை என்னவென்றால் நாம் வருடத்திற்கு அல்லது ஒப்பந்தப்படி நாம் பணம் கட்டிவிட்டால் நம்முடைய நிறுவன மெயில் சேவை முழுவதையும் இவர்கள் பொறுப்பில் ஏற்றுக்கொள்வார்கள். நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. பெரும்பாலும் நிறுவனங்களில் மின்னஞ்சல் அளவு 500 -1 GB கொடுப்பார்கள் அதுவே சில நேரங்களில் பிரச்சனை ஆகும் ஆனால் கூகுள் இதில் ஒவ்வொருவருக்கும் 25 GB வரை கொடுக்கிறது. இதன் மூலம் நாம் அடிக்கடி நமது மின்னஞ்சல்களை Archive செய்ய வேண்டிய அவசியமில்லை. இது மட்டுமல்லாமல் நமது மொபைல் மற்றும் பல்வேறு சாதனங்களில் இதை கான்ஃபிகர் செய்வது எளிது. வேகமும் நன்கு இருக்கும். மின்னஞ்சல் சேவை போக பல்வேறு மற்ற வசதிகளையும் வழங்கி வருகிறது. வழக்கமான ஜிமெயில் போலவே இருக்கும் ஆனால் கூடுதல் வசதிகளுடன்.
இதை பல்வேறு தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அரசு நிறுவனங்கள் கூட பல பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் கூகுள் க்கு பெருமளவில் லாபம் கிடைக்கிறது.
Google Apps க்கு போட்டியாக மைக்ரோசாப்ட் துவங்கி இருப்பது தான் மைக்ரோசாப்ட் 365 ஆகும். ஏற்கனவே வலுவான Microsoft Office வசதி மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வசதிகளை மைக்ரோசாப்ட் கொண்டு இருப்பதால் கூகுள்க்கு ஆப்பு வைக்க தயாராகி வருகிறது.
உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் கூகுள் நமது மின்னஞ்சல்களில் உள்ளே Key words ஐ தானியங்கியாக படித்து அந்த வார்த்தைகளுக்கு தகுந்த மாதிரி விளம்பரங்களை மின்னஞ்சல் பக்கத்தில் வெளியிடும். எடுத்துக்காட்டாக நமது மின்னஞ்சலில் கேன்சர் என்ற வார்த்தை இருந்தால் அது கேன்சர் பற்றிய விளம்பரங்களை வெளியிடும். இதற்கு முன்பு இருந்தே பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது அதாவது கூகுள் எப்படி எங்கள் அனுமதி இல்லாமல் மின்னஞ்சல்களை படிக்கலாம் என்று.
இது பற்றி கூகுள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை தொடர்ந்து அப்படியே தான் செய்து கொண்டு இருக்கிறது ஏனென்றால் இது தான் முக்கிய வருவாய். இதைப்போல செய்தாலும் இதை வைத்து பிளாக் மெயில் செய்வதோ அல்லது வேறு தவறான வேலைகளில் ஈடுபடுவதோ கிடையாது விளம்பரத்திற்க்காக அதில் உள்ள சில வார்த்தைகளை மட்டும் தானியங்கியாக படிக்கிறது அங்கு பணி புரிபவர்கள் யாரும் படிப்பதில்லை. எப்படி இருப்பினும் இது ஒரு பாதுகாப்பு குறைபாடு தான். இதை மனதில் வைத்துத்தான் மைக்ரோசாப்ட் ஜிமெயில் ஐ நக்கலடித்து இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.
நம்மைப்போல இலவசமாக பயன்படுத்துபவர்கள் இதை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் பணம் கட்டி Google Apps போல பயன்படுத்துபவர்கள் ஏற்றுக்கொள்வார்களா! இதற்கு பதில் அளிக்கும் வகையில் Google Apps பயன்படுத்துபவர்கள் வேண்டும் என்றால் விளம்பரங்களை Disable/Enable செய்ய வசதி ஏற்ப்படுத்தி தந்துள்ளது. இந்த வசதி மைக்ரோசாப்ட் கிளப்பிய பிரச்சனையால் வந்ததே ஆகும். அனைத்தும் நன்மைக்கே!
என்ன தான் இதைப்போல எல்லாம் கூறி மைக்ரோசாப்ட் குட்டிக்கரணம் அடித்தாலும் ஜிமெயில் பயனாளர்கள் அதிகம் ஆகிக்கொண்டே செல்கிறார்கள் மைக்ரோசாப்ட் க்கு குறைந்து கொண்டே வருகிறது
ஜிமெயில் ன் தீவிர ரசிகன் நான் என்னைப்பொறுத்தவரை ஜிமெயில் தரும் சேவையில் பாதி கூட மற்ற மின்னஞ்சல் நிறுவனங்கள் தரவில்லை. ஜிமெயில் ல் இருந்து தற்போதைய நிலைமைக்கு வேறு எந்த மின்னஞ்சல் நிறுவனமும் மாறுவதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை அந்த அளவிற்கு அதனோடு ஒன்றி விட்டேன்.
எனக்கு தெரிந்து கூகுள் இது வரை யாரையும் கிண்டலடித்தது இல்லை எப்போதும் “கூகுள் வழி தனி வழி”யாகத் தான் செயல்படுகிறது. இந்த மின்னஞ்சல் விளம்பரம் கூட நாகரீகமான முறையிலே தான் இருந்தது அதுவுமில்லாமல் கூகுள் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. ஜிமெயில் முன்பு மற்ற மின்னஞ்சல்கள் எந்த விதத்திலும் போட்டி போட முடியாது. நீண்ட காலமாக யாஹூ, ஹாட்மெயில் என்று பயன்படுத்திக்கொண்டு இருப்பதால் அதை தொடர்ந்து பயன்படுத்தலாமே தவிர ஒரு முறை ஜிமெயில் வந்து பயன்படுத்திப் பழகி விட்டால் திரும்ப செல்லவே முடியாது. இவ்வளவுக்கும் ஜிமெயில் 7+ GB இடம் தருகிறது ஹாட்மெயில் 25 GB இடம் தருகிறது.
நீங்கள் இதுவரை ஜிமெயில் பயன்படுத்தவில்லை என்றால் உடனே எங்க கட்சிக்கு வரும்படி பரிந்துரைக்கிறேன்
இது குறித்த உங்கள் கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
கொசுறு 1
இந்தியாக்கு சுக்கிர திசை முடிந்து சனி திசை துவங்கி விட்டது போல இங்கிலாந்தில் தர்ம அடி வாங்கிக்கொண்டு இருக்கிறது. டிராவிட் மட்டுமே நம்ம மானத்தை ரொம்ப மோசமாகாமல் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். இதுக்கு மேல புலம்புனா டென்ஷன் ஆகி இந்திய அணியை கண்டபடி திட்டி விடுவேன் என்பதால் இதோடு நிப்பாட்டிக்கிறேன்
தோற்பது தவறு இல்லை அதைப் போராடி தோற்றால். இப்படி ஒட்டுமொத்தமாக சரணடைந்தால் தான் எரிச்சலாக வருகிறது.
கொசுறு 2
சரி தோற்ற போட்டியைப் பார்த்து டென்ஷன் ஆவதை விட வெற்றிபெற்ற பழைய போட்டியைப் பார்ப்பது ரொம்ப சுகமான அனுபவம் ஹி ஹி பழைய போட்டியாக இருந்தாலும் தற்போதைய டென்ஷன் போட்டியை பார்ப்பதை விட ஜாலியான விஷயம். தற்போது நண்பர் பாலா தன்னுடைய கிரிக்கெட் அனுபவங்களை பதிவாக எழுதி வருகிறார். கொஞ்சமாக எழுத ஆரம்பித்து பின் ரசிகர்கள் பலத்த ஆதரவால் டிராவிட் மாதிரி நின்று விளையாடிக்கொண்டு இருக்கிறார் மொக்கை போடாமல்
முதலில் கொஞ்சம் படிக்கவில்லை பின் என்னடா இவரு எழுதிட்டே இருக்காரே அப்படி என்ன தான் தான் எழுதறாருன்னு படித்தேன் ரொம்ப சுவாராசியமாக இருந்தது முக்கியமா படிக்க ரொம்ப எளிமையா இருந்தது. நீங்களும் படித்துப்பாருங்க.
கொசுறு 3
இதுவும் ஒரு கிரிக்கெட் ரசிகர் விஷயம் தான். கற்பனையாக பலருடைய பேட்டிகள் வருவது சகஜம் தான் அதில் சில நம்மை ரொம்பக்கவரும் சில போர் அடிக்கும். தினேஷ் என்ற நண்பர் தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் பற்றி எழுதி வருகிறார் அதில் ஜெய் என்பவர் சச்சின் ரஜினி கற்பனைப் பேட்டியை எழுதி இருக்கிறார். நிஜப்பேட்டி மாதிரியே இருக்கிறது. நிஜமாகவே ரஜினி சச்சின் பேசியது போலவே இருந்தது. நீங்களும் படித்துப்பாருங்க உங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்
சூப்பர் ஸ்டார் – சச்சின் அதிரடி சந்திப்பு
Related posts:

{ 11 comments… read them below or add one }
சூப்பர்!
மீ தி கூகிள்
எளிமை என்றால் கூகிள் தான்
as usuall nice கிரி
யாஹூ இஸ் தி பெஸ்ட் போர் மீ. இ டான்’த லைக் ஜிமெயில்.
Yes giri. India still not performing well in this series. We always having problems with fast bowlers we didn’t produce good fast bowlers especially swing bowlers. Our bowlers can’t able to perform in English conditions.
But I am having 200% confidence India will bounce back and they will draw the test series and India will win the ODI series also.
I am personally thinking the defect of Indian side is coaching also may be one of the cause. I don’t know how fletcher will help to India. After won a first test in West Indies fletcher told to media for the next 10 years no one can’t beat India like tht.. But just see now.. wht happened.. but GARY always very silent.. Fletcher may be next Greg chapel.. I hope next winning match highlights u will watch…….
வணக்கம் கிரி அவர்களே
தகவல்களுக்கு நன்றி.
காலைல எங்க ப்ளாக் செக் பண்ணும் பொது தினத்தை விட இன்னைக்கு அதிகமா டிராபிக் இருந்துச்சு. அப்போவே நினைச்சேன் நீங்க தான் ஏதோ எழுதி இருக்கீங்கன்னு. நன்றி கிரி. பாஸ் அநியாயத்துக்கு நியூஸ் kudukkureenga. நன்றி
காலை வணக்கம்!
Gmail பரவாயில்லை… Save from Outdated Email சேவையை நம் விருப்பத்திற்கு விட்டிருக்கிறார்கள்.. இதுவே மைக்ரோசொப்ட் என்றால் நமது ஹாட்மெயில் மெயில்களுக்கு அடியில் நம்மைக் கேட்காமலே சேர்த்து அனுப்பி உயிரை வாங்கியிருப்பார்கள்..
என்ன இருந்தாலும் மைக்ராசொப்ட்- இன் targeted ad அநாகரீகமான செயல். ஒரு போட்டி நிறுவனத்தை பொதுவில் இவ்வாறு சுட்டிக்காட்டித்தான் தனது ஆபீஸ் 365 -க்கு ஆட்சேர்க்க வேண்டிய பரிதாபகமான நிலை… அந்த வீடியோவில் சொன்னபடி மெயில்கலைப் படிக்கும் செயலை இன்று எல்லா நிறுவனங்களும் (மைக்ராசொப்ட் உட்பட) பல்வேறு காரணங்களுக்காக செய்கின்றன.. இந்த வீடியோவைப்பார்த்து தற்கால இணையவாசிகள் தங்கள் பக்கம் சாய்வார்கள் என நம்புவது அவர்களது மடத்தனம்..
இதிலிருந்து இந்த வீடியோவைப்பார்த்து ஏமாறும் அளவுக்கு மைக்ரோசொப்ட் எங்களை வடிகட்டின முட்டாள்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறது.. பாவம்..
எப்படியோ யார் சண்டை போட்டாலும் நமக்கு லாபம் தான்… மைக்ராசொப்ட் போட்டிக்கு இப்படி கேனத்தனமா ஏதாவது செய்யும்.. கூகுளோ நமக்கு உதவியாக புதிய வசதிகளை தரும்… பொறுத்திருந்து பார்ப்போம்… கூகுள் வாழ்க..
நடக்கற போட்டிய பார்த்த, இன்னும் கொஞ்சம் காலத்தில் ஈமெயில் account open பண்ணின எதாவது இலவசமாக கொடுப்பாங்க போல. ஆஹா இது வேற மாதிரி போகுதே. அப்பறம் நம்ம ஆளுக மைக்ரோசாப்ட் கிட்ட ப்ரீ வாங்கிட்டு ஜிமெயில் account open பண்ணுவாங்க.
என்ன தான் இருந்தாலும் கூகுள் மாதிரி வருமா . கூகுள் உண்மையிலே சுப்பர் .
அனைவரின் வருகைக்கும் நன்றி
@யாசின் உங்க எண்ணம் நிறைவேறாது போல இருக்கு மூன்றாவது டெஸ்டிலும் மிக மோசமாக விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்
@அபரஜித்தன் நீங்க சொன்ன மாதிரி மைக்ரோசாப்ட் நாம் அனுப்பும் மின்னஞ்சலிலேயே செய்து இருப்பார்கள்
@Breeze