facebook ஐ தாக்க வருகிறது Google +

by கிரி on June 30, 2011

Google Plus facebook ஐ தாக்க வருகிறது Google +ணைய ஜாம்பவனாக கூகுள் தளம் விளங்கி வருகிறது. கூகுள் பற்றிய முன்னுரை உங்களுக்கு அவசியமில்லை அதன் சிறப்பு நீங்கள் அனைவரும் அறிந்தது. எவ்வளோ பெரிய வல்லவனாக இருந்தாலும் அவனுக்கும் வல்லவன் வையகத்துள் உண்டு என்பது என்பது பழமொழி அதை மெய்பிக்கும் வகையில் கூகுள் வளர்ச்சியை தனது ஒரே சேவையின் மூலம் ஆட்டம் காண வைத்து விட்டது facebook. கூகுள் பல்வேறு தளங்கள் வசதிகள் வைத்து முன்னணிக்கு வருவதை ஒரே ஒரு சமூகத்தளமான facebook என்ற ஒன்றை வைத்தே கூகுள் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வருகிறது.

நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் facebook வளர்ச்சியைக் கண்டு கூகுள் மிரண்டு போய் நிற்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் மண்டை காய்ந்து போய் உள்ளது. facebook க்கை சமூகத்தளத்தின் மூலம் தான் சமாளிக்க முடியும் என்று Google Buzz என்ற வசதியைக் கொண்டு வந்தது ஆனால் அவசரத்தில் செய்வது எதுவும் உருப்படியாக இருக்காது என்பதற்கு உதாரணமாக ஆகி விட்டது. தங்கள் அனுமதி இல்லாமலே தங்களுடைய தொடர்புகளை மற்றவர்கள் பார்க்கும் படி செய்து விட்டது இதனால் கடும் அதிருப்தி அடைந்த பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தன் தவறை தாமதமாக உணர்ந்த கூகுள் அதை சரி செய்தது. இருப்பினும் முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விட்டது அதன் பிறகு என்னனென்னவோ மாற்றங்கள் செய்தும் அது வரவேற்ப்பை பெறவில்லை.

இன்னொரு பிரச்சனை பயனாளர்கள் இது மின்னஞ்சலுடன் இணைந்து இருப்பதை விரும்பவில்லை தனித்தளமாக இருப்பதையே விரும்பினார்கள். Google Buzz ஜிமெயில் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதைப்போல ஆகி விட்டது. இது உண்மையிலேயே ரொம்ப மோசமான யோசனை இதை கூகுள் நிறுவனம் எப்படி அறியாமல் போனது என்று இன்னும் எனக்கு இருக்கும் ஒரு சந்தேகம்.

ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்தால் மட்டுமே இதைப்பயன்படுத்த முடியும் என்பதைப்போல இருந்தால் இதை எப்படி மற்ற மின்னஞ்சல் பயனாளர்கள் விரும்புவார்கள். ஒரு சிலருக்கு யாஹூ அல்லது ஹாட்மெயில் மட்டுமே பயன்படுத்த பிடிக்கும் அவர்களைப் போய் “நீ ஜிமெயில் ல் நுழைந்தால் தான் Google Buzz பயன்படுத்த முடியும் என்றால்.. போயா நீயும் உன் Google Buzz ம்” னுட்டு போய்டுவாங்க. கூகுள் பல்வேறு சிறப்பான வசதிகளை தந்தாலும் ஜிமெயில் சேவையை விரும்பாமல் மற்ற மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துபவர்கள் மில்லியன் கணக்கில் இருக்கிறார்கள்.

தற்போது Google Buzz குறைந்த அளவு பயனாளர்களால் மட்டும் பயன்படுத்தப்படுகிறது அதிலும் குறிப்பாக தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே தங்கள் விவாதங்களை இதில் நடத்தி வருகிறார்கள் மற்றபடி யாரும் இதைப் பெருமளவில் பயன்படுத்துவதில்லை. எனவே கூகுள்க்கு தோல்வி அடைந்த தனது தயாரிப்புகளில் ஒன்றாக மாறி விட்டது. இது கூகுள்க்கு பலத்த அடியாகும்.

அவசரப்பட்டு இப்படி சொதப்பி விட்டோமே! என்று கவலையடைந்த கூகுள் தனது முயற்சியில் சற்றும் தளராது facebook போட்டியாக மாற்று சமூகத்தளத்தை ரகசியமாக உருவாக்கி வருவதாக செய்திகளில் வந்து கொண்டு இருந்தது அதற்க்கு Google Me என்ற பெயரும் உள்ளதாக இணையம் முழுவதும் பேசப்பட்டு வந்தது. இதில் பெயரில் மட்டும் மாற்றம் மற்றபடி புதிய சமூகத்தளத்தை உருவாக்கி வருவது உண்மை தான் பெயர் Google Me அல்ல Google + ஆகும். தற்போது அதிகாரப்பூர்வமாக இதை கூகுள் அறிவித்து இருக்கிறது.

Circle

இதில் Circle எனப்படும் வசதி சிறப்பாக உள்ளது அதாவது facebook ல் குழு என்ற வசதி இதைப்போலவே இருந்தாலும் அதை விட இதில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய வசதிக்கு ஏற்ப நமது நண்பர்களை Drag and Drop முறையில் எளிதாக மாற்றி அமைக்க முடியும். இதனால் நமது Staus Message பிரித்துக்காட்ட முடியும்.

எடுத்துக்காட்டாக facebook ல் நாம் ஒரு செய்தியை போடுகிறோம் அதை நம்முடன் இணைந்துள்ள அனைவருமே பார்க்க முடியும் குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்க அதற்க்கு குழு (Group) உருவாக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு முறையும் தேவைப்படும் நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் Circle என்ற முறையில் நண்பர்களை பிரித்து இருப்பதால் நாம் status message அப்டேட் செய்யும் போதே யார் யார் பார்க்கலாம் என்று முடிவு செய்ய முடியும். இதன் மூலம் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. இது facebook போல இருந்தாலும் அதை விட சிறப்பாக புதிய வசதிகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

Hangouts and Photos

க்ரூப் வீடியோ சாட் தான் Hangouts என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இரு மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் குழுவாக பேசிக்கொள்ள முடியும். இதன் சிறப்பு யார் தற்போது பேசிக்கொண்டு இருக்கிறார்களோ அவரது முகம் முன்னிலைப்படுத்தப்படும் இதனால் அவர் பேசுவதை நாம் தடங்கல் இல்லாமல் பார்க்க முடியும்.

இது வழக்கமான கூகுள் பிக்காசா பட வசதி போன்றது தான் இதில் நமது படங்களை எடிட் செய்ய முடியும். நமது விருப்பப்படி படங்களை பிரித்து வரிசைப்படுத்தலாம்.

Stream and Sparks

இது கிட்டத்தட்ட Google Buzz வசதிபோலத்தான். நண்பர்களிடையே எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ள உதவும் ஒரு வசதி.

Mobile

இதில் Huddle, Location, Instant Upload என்ற வசதிகள் உள்ளது. இதில் பெரும்பாலான வசதிகள் facebook லேயே இருப்பதால் இதில் உள்ள வசதிகள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. இதை கூகுள் கொஞ்சம் மேம்படுத்திக் கொடுக்கிறது. இது கூகுள் Android மற்றும் iPhone க்கு ஏற்றவாறு மென்பொருளையும் (Apps) வடிவமைத்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பெரிய வருமானமே விளம்பரங்கள் தான். facebook வந்த பிறகு இதன் வருமானத்தில் பாதிப்பு ஏற்ப்பட்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக கடந்த மே மாத நிலவரப்படி கூகுள் தளங்களுக்கு 180 மில்லியன் மக்கள் வந்து சென்று இருக்கிறார்கள் இதில் YouTube தளமும் சேர்த்து. facebook தளத்தை 157.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டு இருக்கிறார்கள். facebook தளத்தில் 103 பில்லியன் பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன சராசரியாக 375 நிமிடங்கள் இதே கூகுள் விசயத்தில் 46.3 பில்லியன் பக்கங்கள் சராசரி நேரம் 231 நிமிடங்கள் மட்டுமே. இதனால் விளம்பரதாரர்கள் பார்வை facebook பக்கம் திரும்பி இருக்கிறது. எப்போதுமே ஒரு தளத்தில் Page Views ரொம்ப முக்கியம். இப்போ புரியுதா ஏன் கூகுள் facebook ஐ பார்த்து பயப்படுகிறது என்று icon smile facebook ஐ தாக்க வருகிறது Google +

கூகுள்க்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இது தான். இதிலும் தோல்வி அடைந்தால் சமூகத்தளத்தில் முன்னணிக்கு வரும் ஆசையை மூட்டைக்கட்டி வைத்து விட்டு தனது மற்ற தளங்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டியது தான். இதை நம்மை விட கூகுள் நன்கு உணர்ந்து இருக்கும் அதனால் உஷாராக இருக்கும். Google Buzz வெளியிட்ட போது கூகுள் நிறுவன ஊழியர்கள் மட்டுமே இதை சோதனை செய்து வெளியிட்டார்கள் அதனால் பல பிரச்சனைகளை கூகுள் சந்திக்க நேரிட்டது.

இந்த முறை பயனாளர்கள் சிலருக்கும் இதை பயன்படுத்த அனுமதி அளித்து அவர்களின் நிறை குறைகளைக் கேட்டு மாற்றம் செய்து பின்னரே வெளியிடும். தற்போது இந்த வசதி சோதனை அடிப்படையிலேயே இருக்கிறது முழுப்பயன்பாட்டிற்க்கு வர நீண்ட நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன் காரணம் முன்பு வாங்கிய அடி பலமானது. இதை நீங்கள் பயன்படுத்தி பார்க்க விரும்பினால் வழக்கம் போல கூகுள் அழைப்பிதல் முறையில் அனுமதிக்கிறது அதாவது ஏற்கனவே அனுமதி பெற்ற ஒருவர் உங்களுக்கு இதைப் பயன்படுத்த அழைப்பிதல் அனுப்பினால் முயற்சிக்கலாம் இல்லை என்றால் https://plus.google.com/ தளம் சென்று உங்களுக்கு அழைப்பு அனுப்பக்கூறி உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யலாம் ஆனால் இதன் மூலம் கிடைப்பது மிக மிகக் கடினம். இலவசம் தானே அதனால் சும்மா போட்டு வைங்க! icon smile facebook ஐ தாக்க வருகிறது Google +

கூகுள் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்று சந்தேகமாக இருக்கிறது. ஏதாகினும் கூகுளின் பரம ரசிகன் என்ற முறையில் Google + வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கொசுறு 1

நேற்று அஞ்சலி படம் தொலைக்காட்சியில் பார்த்தேன். ரொம்பக் குறும்பு பண்ணாத என் பையனை சமாளிப்பதே சில நேரங்களில் சிரமமாய் இருக்கிறது. எப்படி மணிரத்னம் இந்தப்படத்தில் அத்தனை குழந்தைகளை வைத்து எடுத்தார் என்று மலைப்பாக இருக்கிறது icon smile facebook ஐ தாக்க வருகிறது Google + வி.கே. ராமசாமி அவர்களிடம் இந்த பசங்க கேட்கிற கேள்விகளும் அதற்க்கு அவர் கொடுக்கும் முகபாவனைகளும் கலக்கல் ரகம். பூர்ணம் விஸ்வநாதன் அவர்களிடம் அவர் போடும் சண்டை ரசிக்கும்படி இருக்கும். ஷாமிலியை அவர் நடிக்க வைத்து இருக்கும் விதத்தை பார்த்தால் ரொம்ப வியப்பாக இருக்கிறது. இந்தப்படம் பார்க்கும் போதெல்லாம் இவை ஒவ்வொருமுறையும் தோன்றும். இளையராஜாவிற்கு இது 500 வது படம் என்று நினைக்கிறேன்.

கொசுறு 2

கிருஷ்ணலீலை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் செல்வன் மீதி கொஞ்சம் முடித்தால் தான் படம் வெளியிட முடியுமாம் ஆனால் தயாரிப்பாளர் கவிதாலயா ஏற்கனவே முந்தைய படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தால் தொடர முடியவில்லையாம். இதன் இன்னொரு தயாரிப்பாளர் ஐங்கரன் நிறுவனத்தார் இதனால் இருவரிடமும் சுற்றிக்கொண்டு இருக்கிறாராம். மற்றவர்களும் இந்தப்படம் வெளிவந்த பிறகு வாய்ப்பு தருகிறேன் என்று கூறுவதால் பொறுமை இழந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். போற போக்கைப்பார்த்தால் ராஜபக்சே கூட “என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள்” என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார் போல இருக்கு.

கொசுறு 3

நடிகர் சங்கத்துல ஜெ க்கு பாராட்டு விழா (இவங்க அடங்கவே மாட்டாங்களா) எடுக்க அனுமதி கேட்டதற்கு ஜெ மறுத்து விட்டாராம் இப்போதைக்கு வேண்டாம் என்று கூறி விட்டாராம்… ஒருவேளை அப்புறமா பெரிய விழாவா ஜெ எதிர்பார்க்கிறாங்களோ! icon wink facebook ஐ தாக்க வருகிறது Google + தமிழ் ல பெயர் வைத்தால் வரி விலக்குன்னு ஒரு உருப்படாத சட்டத்தை வைத்து அரசுக்கு நஷ்டம் ஆவதைத்தவிர வேறு எந்த நல்ல விஷயம் நடந்ததா தெரியவில்லை. இதை முதல்ல தூக்குனா புண்ணியமாப் போகும். உருப்படியான படமாக வந்தாலும் பரவாயில்லை படம் பாக்கிறவனை டென்ஷன் பண்ணுறதுக்கு இவங்களுக்கு வரிச்சலுகையா! நியாயமா மொக்கைப் படங்களை பார்க்கிற நமக்குத்தான் அரசு சலுகை தரனும் icon smile facebook ஐ தாக்க வருகிறது Google + என்ன சொல்றீங்க! icon biggrin facebook ஐ தாக்க வருகிறது Google +

கொசுறு 4

நேற்றோடு (29-06-2011) 25 பைசா நாணயப் பயன்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது. இனி இந்தக் காசை வங்கிகளில் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்கனவே இதை நிறைய வைத்துள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் கூறுங்கள். ஏற்கனவே 5, 10 பைசாக்கள் நிறுத்தப்பட்டு இருப்பது நாம் அனைவரும் அறிந்தது இனி 50 பைசா தான் குறைந்த பட்ச மதிப்பு கொண்டதாகும்.

 

Subscribe to கிரி Blog by Email

feed icon16x16 facebook ஐ தாக்க வருகிறது Google + Subscribe in a reader

கிரி Blog facebook Fan page ல் இணைய

Related posts:

  1. “Priority Inbox” ஜிமெயிலின் புதிய வசதி!
  2. facebook பாதுகாப்பு வசதி!
  3. facebook Scam எச்சரிக்கை மற்றும் சில சுவாரசியங்கள்
  4. facebook 1000+ மற்றும் சில அனுபவங்கள்
  5. ரணகளமாக்க வருகிறது “SAW 3D”

{ 24 comments… read them below or add one }

Mohamed Yasin June 30, 2011 at 5:47 PM

Hai Giri, Nice article. Please try to visit this web page (http://www.amuttu.net) i hope u will like this page. I personally feels you both are writing styles is same, both are very interesting and i like both you u but he is professional writer, you are not like that but your wording anyone can easily understand tht’s is the special of GIRI…. Thanks for posting

Reply

மாணவன் June 30, 2011 at 5:48 PM

தொழிநுட்ப தகவல்களை தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படி பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்கண்ணே

Reply

ilavarasan June 30, 2011 at 6:47 PM

வணக்கம் கிரி அவர்களே
அனைத்து தகவல்களுமே அருமை. தகவலுக்கு நன்றி.

Reply

☼ வெயிலான் June 30, 2011 at 7:04 PM

எதிர்பார்த்தேன் கிரி! ஆனால் இவ்வளவு சீக்கிரம் அல்ல….. :) நல்ல பதிவு. நன்றி!

Reply

maya June 30, 2011 at 7:32 PM

ஹாய் கிரி பதிவுகள் வழக்கம் போல் கலக்கல்.
அந்த hide பண்ண சேனல் தின மலர்

Reply

Suresh Kumar June 30, 2011 at 9:01 PM

google wave ஏற்கனவே இதே போல் மிக பெரிய எதிர்பார்ப்போடு வந்தது ஆனால் வந்த பின்னர் அந்த அளவிற்கு பிரபலம் ஆகவும் இல்லை அதே போல் செயல் பாடுகளும் இல்லை. இதையும் வந்த பின்னர் பாப்போம் பயனுடையதாக இருந்தால் பயன் படுத்துவோம். தகவலுக்கு நன்றி நானும் என் மின்னஞ்சலை பதிவு செய்து வைக்கிறேன் . நன்றி

Reply

Mohan June 30, 2011 at 9:40 PM

30-06-2011 தேதியுடன் 25 பைசா நாணயங்கள் செல்லாது எனவும், எனவே அதை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து மாற்றிகொள்ளுமாறு 4, 5 மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது. எனவே இதை வைத்திருப்பவர்கள் இந்நேரம் மாற்றி இருக்க வேண்டும். மாற்றி இருக்காவிட்டால் ரிசர்வ் வங்கி பொறுப்பேற்காது. அதை குறை சொல்லி பயனில்லை.
வாழ்க வளமுடன்!

Reply

விஜய் June 30, 2011 at 10:07 PM

Google vs Facebook – இந்த சண்டை நல்லாத்தான் இருக்கு.

ஒரு முப்பது நாள் கழித்து பார்ப்போம். ஒரு முடிவு தெரிஞ்சுடும்.

இந்த 25 பைசா மேட்டர் சூப்பர். – எனக்கு இது புதிது.

Reply

எப்பூடி.... June 30, 2011 at 11:18 PM

//ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்தால் மட்டுமே இதைப்பயன்படுத்த முடியும் என்பதைப்போல இருந்தால் இதை எப்படி மற்ற மின்னஞ்சல் பயனாளர்கள் விரும்புவார்கள். //

பிளாக்கர் இலும் கமன்ட் போடுவதில் இதே பிரச்சனை உள்ளது.

Reply

ஷீ-நிசி July 1, 2011 at 6:38 AM

நேற்றுதான் கூகுள் ப்ளஸ் தொடங்க ஒரு இன்விடேஷன் வந்தது… என்னடா இது புதுசா இருக்கேன்னு பார்த்தேன்… உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது

Reply

கிரி July 1, 2011 at 9:00 AM

முகமது யாசின், மாணவன், இளவரசன், வெயிலான், மாயா, சுரேஷ் குமார், மோகன், விஜய், ஜீவதர்ஷன் மற்றும் ஷீ-நிசி வருகைக்கு நன்றி

@முகமது யாசின்

நான் கூட நீங்க சொல்வதைப்பார்த்து அவர் ஒரு பதிவர் என்று நினைத்து விட்டேன். அவர் ஒரு எழுத்தாளர் பல புத்தங்கள் எழுதி இருக்கிறார் மலைக்கு மடுவுக்கும் உள்ள வித்யாசம் :-) இருப்பினும் உங்கள் அன்பிற்கு நன்றி. நான் கூடுமானவரை சிரமமான வார்த்தைகளைப் போட்டு படிப்பவர்களை கடுப்படிக்கக் கூடாது என்பதில் முன்பு இருந்தே உறுதியாக இருக்கிறேன் அதைவிட எனக்கு இப்படி தான் எழுத வரும்.. இதற்காக நான் எதுவும் சிரமம் எடுத்துக்கொள்ளவில்லை இயல்பாகவே என்னுடைய எழுத்து இப்படித்தான்.

@வெயிலான் ரொம்ப நாளைக்கு பிறகு உங்களை என் தளத்திற்கு எட்டிப்பார்க்க வைத்து இருக்கிறது நானும் எதிர்பார்க்கவில்லை ;-)

@மாயா நன்றி :-)

@சுரேஷ் குமார் Wave மெகா ஃப்ளாப் ஆகி விட்டது.

@மோகன் இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்தால் இது பற்றி தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கும். ஊடகங்கள் இதை மக்களுக்கு சரியான அளவில் கொண்டு செல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

@ஜீவதர்ஷன்

இது இல்லாமலும் கமெண்ட் போட முடியும் ஆனால் அதற்கு அந்த தளத்தில் வசதி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது கூகுள் கொடுத்து இருக்கிறது தளத்தை நிர்வகிப்பவர்கள் அதை தடுக்காமல் கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால் நமது கடவுச்சொல்லை கொடுக்காமலே கமெண்ட் போட முடியும். எடுத்துக்காட்டு Anonymus

Reply

Breeze July 1, 2011 at 2:46 PM

As usual Giri rocks

Reply

ராமலக்ஷ்மி July 1, 2011 at 6:55 PM

கூகுள் ப்ளஸ் விரிவான விளக்கம். கதை மாதிரி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். சரி உங்களுக்கு கணக்கு கிடைத்ததா? கிடைத்தவுடன் ஒரு இன்விடேஷன் அனுப்பவும்:)!

அஞ்சலி படம். ஆம் பசங்க வைத்து எடுப்பது அத்தனை ஈசி இல்லை. ஒவ்வொரு நாள் படபிடிப்பின் போது ஏகப்பட்ட கேட்பரீஸ் சாக்லேட் வாங்கி வைத்திருப்பாராம்:)! ஏதோ பத்திரிகையில் அப்போ வாசித்த நினைவு.

அதிகார பூர்வமாக 25 பைசா இப்போதுதான் நிறுத்தப் படுகிறது என்றாலும் 3 வருடங்களாகவே பெங்களூரில் யாரும் 25, 50 பைசாக்களை வாங்கிக் கொள்வதில்லை தெரியுமோ:)? ஏதேனும் மீதி கொடுக்கணுமென்றாலும் சாக்லேட்தான் கொடுப்பார்கள் கடையில்கூட.

Reply

Devarajan July 1, 2011 at 7:43 PM

அழைப்பிதழ் வந்திருந்தது.என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன்.விளக்கம் அளித்தமைக்கு நன்றி..!! :)

Reply

nethaji July 1, 2011 at 7:50 PM

புதிய தொழில்நுட்பங்கலை அறிய மிகவும் பயன் உள்ளதாக அமைகிறது

நன்றி

Reply

vijay July 2, 2011 at 4:07 AM

முக்கியமாக குரூப் வீடியோ சாட் பண்லாம் , அதனால facebook மட்டும் இல்ல skype கும் ஆப்புதான் ..

கூகுள் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்….

Reply

அப்துல் பாஸித் July 2, 2011 at 10:35 AM

விரிவாகவும், விளக்கமாகவும் கூறியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி நண்பா! டெமோ பார்க்கும் பொழுது நன்றாக வரும் என்றே கருதுகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.

Reply

yohannayalini July 2, 2011 at 4:02 PM

கூகுள் ப்ளஸ் விரிவான விளக்கம். கதை மாதிரி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது
நன்றிகள் பலகோடி

Reply

yohannayalini July 2, 2011 at 4:02 PM

கூகுள் ப்ளஸ் விரிவான விளக்கம். கதை மாதிரி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது
நன்றிகள் பலகோடி

Reply

நட்புடன் ஜமால் July 3, 2011 at 12:54 AM

உங்க பதிவத்தான் எதிர்ப்பார்த்திருந்தேன் கிரி கூகிள் மேட்டர் என்றாலே உங்களிடம் தெரிந்து கொள்வதில் ஒரு அலாதி ப்ரியம் தான்,

ப்ரைவசி செட்டிங்ஸையும் கொஞ்சம் டீட்டெய்டாலா சொல்லிடுங்களேன்

Reply

கிரி July 4, 2011 at 7:57 AM

Breeze, ராமலக்ஷ்மி, தேவா, நேதாஜி, விஜய், அப்துல் பாஸித், Yohannayalini மற்றும் ஜமால் வருகைக்கு நன்றி

@ராமலக்ஷ்மி அழைப்பிதல் இருக்கு ஆனால் கூகுள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டது.

இப்ப சாக்லேட் தான் கொடுக்கறாங்க நிறைய இடத்துல நீங்க சொன்ன மாதிரி :-) அதே நாம கொடுத்தா வாங்கிக்க மாட்டேங்குறாங்க ;-)

@ஜமால் ப்ரைவசி இன்னும் விரிவா தெரிந்து கொள்ள முடியல..இன்னும் என்னால பயன்படுத்த ஆரம்பிக்க முடியல. பின்னர் விரிவாக கூறுகிறேன்.

Reply

K. Jayadev Das July 5, 2011 at 10:43 AM

ஆரம்பத்தில் இருந்தே Facebook பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை, இருப்பினும் தகவல்கள் சுராச்யமாக இருக்கின்றன. பெங்களூருவில் சில வருடங்களுக்கு முன்பாக இருந்தே ஐம்பது பைசா நாணயங்களை யாரும் பெறுவதே இல்லை!!

Reply

K. Jayadev Das July 5, 2011 at 10:44 AM

ஆரம்பத்தில் இருந்தே Facebook பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை, இருப்பினும் தகவல்கள் சுவராஸ்யமாக இருக்கின்றன. பெங்களூருவில் சில வருடங்களுக்கு முன்பாக இருந்தே ஐம்பது பைசா நாணயங்களை யாரும் பெறுவதே இல்லை!!

Reply

saleem July 5, 2011 at 9:24 PM

சுவாரசியமான Google + செய்திகள்,

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed