அழகர்சாமியின் குதிரை

by கிரி on May 23, 2011

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல வெற்றிப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் அழகர்சாமியின் குதிரை. எந்தவித ஆடம்பரமும் அலங்காரமும் இல்லாமல் இயல்பாக எடுக்கப்பட்ட படம். எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்கள் எழுதிய கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

Azhagarsamiyin Kudhirai அழகர்சாமியின் குதிரை தேனி மல்லையாபுரம் கிராமம் வறட்சியால் கஷ்டப்படுகிறது இதனால் அங்குள்ள அழகர்சாமி கடவுளுக்கு விழா எடுத்து வேண்ட நினைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் அழகர்சாமியின் குதிரைச் சிலை திருட்டுப்போகிறது இதனால் திருவிழா தடைபடும் நிலையில் உயிருள்ள ஒரு குதிரை கிடைக்கிறது. இதைக் கடவுளே அனுப்பி வைத்ததாக அனைவரும் நம்புகிறார்கள் இந்நிலையில் இக்குதிரையை சொந்தம் கொண்டாடி அப்புக்குட்டி என்பவர் வருகிறார் ஆனால் கிராம மக்கள் குதிரையைக் கொடுக்க மறுக்கிறார்கள். இறுதியில் விழா நடந்ததா? அப்புகுட்டிக்குக் குதிரை திரும்பக் கிடைத்ததா! என்பதே கதை.

கிராம வாழ்க்கையை எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே கொடுத்து இருக்கிறார்கள். நானும் கிராமத்தில் இருந்து வந்தவன் தான் என்பதால் கிராம மக்களுடைய உணர்வுகளை நன்றாக உணர முடிந்தது. அதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கிராம மக்களின் பேச்சுக்களை செய்கைகளை அப்படியே படம் பிடித்துக்காட்டியது.

விழா நடத்த கிராமப்பெரியவர்கள் வசூல் செய்யப்போகும் போது நடக்கும் நிகழ்வுகள் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது அதிலும் ஒரு பாட்டி காது கேட்காதது போல நடித்து எஸ்கேப் ஆகப் பார்ப்பது நல்ல நகைச்சுவை.

குதிரைச் சிலை காணாமல் போனதால் ஊர்ப்பெரியவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சி கொஞ்சம் சலிப்பை வரவழைத்தது. தற்போதெல்லாம் மக்களுக்குக் காட்சிகளை நீட்டி முழக்காமல் சுருக்கமாகக் கூறினால் மட்டுமே ரசிப்பார்கள் ஆனால் இதில் சீக்கிரம் யாராவது குதிரையைப் பற்றி விளக்கமா சொல்லுங்கப்பா! என்று நினைக்கும் அளவிற்கு காட்சியை இழுத்து விட்டார்கள். இதில் காவல் துறை அதிகாரியாக நடித்து இருந்தவரின் நடிப்பு நன்றாக இருந்தது.

கோவில்களில் குறி சொல்பவராக வரும் கோடங்கி போன்றவர்கள் செய்யும் ஏமாற்று வேலையை நன்கு காட்டியிருக்கிறார்கள். அவர் தன்னுடைய சுயலாபத்திற்க்காக கடவுளை பயன்படுத்துவதை பார்த்தாவது மக்கள் திருந்தினால் சரி.

அப்புக்குட்டியாக வெண்ணிலா கபடிக்குழுவில் ஐம்பது புரோட்டாவா! என்று ஆச்சர்யப்படுவாரே அவர் நடித்துள்ளார் இவருடைய பெயரும் அழகர்சாமி. அப்புக்குட்டிக்கு தன்னுடைய குதிரை கிடைத்தால் மட்டுமே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறும் என்ற நிலை. காணாமல் போனக் குதிரையை இக்கிராமத்தினர் பிடித்து வைத்து இருப்பதைக்கண்டு அழைத்துச் செல்ல நினைக்கும் போது ஊர்க்காரர்கள் அதை அனுமதிக்க மறுக்க இதனால் இவருக்கும் அவர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. இவர் அடிக்கும் காட்சியும் அடி வாங்கும் காட்சியும் சிறப்பாகக் காட்சியமைக்கப்பட்டுள்ளது. நிஜமாகவே அடி விழுந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

கேரளா மாந்திரீக நபராக வரும் முருகன் காட்சிகள் ரசிக்கும்படி இல்லை பழைய படங்களைப் பார்ப்பது போல இருந்தது. அதே போல வேவு பார்ப்பவராக வரும் காவலர் பின் கோடங்கி போலச் செய்யும் காட்சிகளும் கடுப்பையே தந்தது. கிராமம் என்றால் ஒரு மைனர் என்பது போல இதிலும் ஒருவர் வருகிறார்.

குதிரையைக் கொன்று அதன் மூலம் ஒரு கும்பல் திருவிழாவை நிறுத்த நினைக்கும் போது குதிரை “பன்ச்” கல்யாணி ஆகி icon smile அழகர்சாமியின் குதிரை அனைவரையும் விரட்டு விரட்டென்று விரட்டும் போது படமும் வேகம் எடுக்கிறது. இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்ததைப் பற்றி சிலாகித்துக் கூறி இருந்தார் ஆனால் அவர் குறிப்பிடும் அளவிற்கு பாடல்களும் பின்னணி இசையும் என்னைக்கவரவில்லை. ஒருவேளை எனக்கு ரசனை இல்லையோ!

வழக்கமான மசாலப்படங்களில் இருந்து வித்யாசப்படுத்தி இதைப்போல படத்தை எடுக்க துணிந்த இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு என் பாராட்டுகள் உடன் இதைத் தயாரித்த க்ளவுட் நைன் நிறுவனத்திற்கும்.

இயல்பாகப் படத்தை எடுத்து இருந்தாலும் எதோ ஒன்று குறைகிறது. இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாமோ! என்ற எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.

Directed by Suseenthiran
Produced by P. Madhan
Written by Bhaskar Sakthi
Screenplay by Suseenthiran
Based on Azhagarsamiyin Kudhirai by Bhaskar Sakthi
Starring : Appukutty, Saranya Mohan
Music by Ilaiyaraaja
Cinematography: Theni Eashwar
Editing by Kasi Viswanathan
Studio Escape Artists Motion Pictures
Distributed by Cloud Nine Movies
Release date(s) May 12, 2011

கொசுறு 1

Avan Ivan2 அழகர்சாமியின் குதிரை இயக்குனர் பாலாவின் அடுத்த படமான ஆர்யா மற்றும் விஷால் நடித்த “அவன் இவன்” மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் எப்போதும் பாலா படத்தின் தீவிர ரசிகன். அவருடைய இயல்பான காட்சியமைப்புகளுக்கும் அதிரடியான சண்டைக் காட்சிகளையும் ரொம்ப ரசித்துப் பார்ப்பேன். இதில் விஷால் மாறு கண் பிரச்சனை உள்ளவராக நடித்து இருக்கிறாராம். நான் இது வரை யாரும் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்ததாகக் கேள்விப்பட்டதில்லை.

வழக்கம் போல இருவரையும் பாலா பெண்டு எடுத்து விட்டாராம் அதிலும் விஷால் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார் போல இருக்கு அவருடைய பேட்டியைப் பார்க்கும் போது தெரிகிறது.

கொசுறு 2

ஆடுகளம் படம் தேசிய விருதிற்க்குபிறகு திரும்ப ஒரு முறை பார்த்தேன். கலக்கல் படங்க! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது போல. இந்தப்படத்தின் விமர்சனத்தை (Spoiler) விரைவில் எழுதுகிறேன் முன்னரே கூறியபடி என்னுடைய திருப்திக்காக. கொஞ்சம் பெரியதாகத்தான் இருக்கும் பொறுமை இருக்கிறவங்க படிங்க icon smile அழகர்சாமியின் குதிரை

கொசுறு 3

கனிமொழி கைது விவகாரத்தையும் அவருக்கு சிறையில் கொடுக்கப்படும் உணவுகள், அறை நிலைமை ராசாத்தி அம்மாள் கண்ணீர் (பலருக்கு பல அப்பாவிகள் விட்ட கண்ணீர் ஏனோ பெரிதாகத்தெரிவதில்லை… கண்ணீரிலும் கூட VIP கண்ணீருக்குத்தான் மரியாதை) எல்லாவற்றையும் ரொம்ப விளக்கி அனுதாப அலையை உண்டாக்காமல் விட மாட்டார்கள் போல இருக்கு. தமிழக மக்கள் அனுதாபத்திற்க்குப் பெயர் போனவர்கள் icon smile அழகர்சாமியின் குதிரை

கொசுறு 4

Buried அழகர்சாமியின் குதிரை Buried என்ற த்ரில்லர் படம் பார்த்தேன். இதை எப்படி எடுத்தாங்கன்னு சொன்னா உங்களால் நம்ப ரொம்ப சிரமமா இருக்கும். மொத்த படமும் ஒரு சவப்பெட்டிக்குள் தான். அட! நிஜமாவே மொத்த படமும் இதற்குள் தாங்க. படம் துவங்கும் போதே இருட்டாக இருந்தது, எழுத்து முடிந்து ஒரு நிமிடம் ஆகியும் இருட்டாகவே இருந்தது. நான் கூட படம் சரியாக காப்பி ஆகவில்லை என்று நினைத்து சரி பார்வர்ட் செய்து பார்க்கலாம் என்று நினைத்த போது படம் தொடங்கியது.

ஒரு சவப்பெட்டிக்குள் ஒருவர் அடைபட்டு இருப்பார் யாரோ அவரை உள்ளே வைத்து பூட்டி மண்ணிற்குள் புதைத்து வைத்து இருப்பார்கள். உள்ளே லைட்டர், ஒரு மொபைல் ஃபோன் இருக்கும். அதன் பிறகு என்ன ஆவது என்பது தான் கதை. இப்படி ஒரு படத்தை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. பின்ன என்னங்க! படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை கேமரா அந்தப் பெட்டிக்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது. படம் பார்த்த எனக்கே எழுந்து நிற்க வேண்டும் போல ஆகி விட்டது icon smile அழகர்சாமியின் குதிரை உள்ளே இருந்த ஆளுக்கு எப்படி இருக்கும். எப்படி எல்லாம் யோசித்து படம் எடுக்கறாங்கப்பா. ஒருவேளை உலகத்துலேயே குறைந்த பட்ஜெட் படமாக இது இருக்குமோ! icon wink அழகர்சாமியின் குதிரை குறுகிய இடத்தில் எடுக்கப்பட்ட படமும் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

 

Subscribe to கிரி Blog by Email

feed icon16x16 அழகர்சாமியின் குதிரை Subscribe in a reader

கிரி Blog facebook Fan page ல் இணைய

Related posts:

  1. இயக்குனர் விக்ரமன் பட “லாலா” இசை மற்றும் The Karate Kid
  2. விக்ரம் – திரைப்பார்வை
  3. நான் மகான் அல்ல – திரைவிமர்சனம்
  4. கோ – GO
  5. ரணகளமாக்க வருகிறது “SAW 3D”

{ 15 comments… read them below or add one }

s.rajagopal May 23, 2011 at 9:55 AM

//நான் எப்போதும் பாலா படத்தின் தீவிர ரசிகன்.//

அட நீங்களுமா உங்களுக்கு பலா பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த புக் யூஸ் புல்லா இருக்கும்

இவன் தான் பாலா
http://gundusbooks.blogspot.com/2011/02/blog-post_2554.html

Reply

s.rajagopal May 23, 2011 at 10:15 AM

பலா படங்களை மீண்டும் ரசிக்க

http://gundusmoves.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE

Reply

எப்பூடி May 23, 2011 at 10:38 AM

நந்தலாலா க்கு அப்புறம் இன்னமும் திரையரங்க பக்கம் செல்லவில்லை :-( , குள்ள நரி கூட்டம் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று ஞாபகத்தில் இருக்கும் ஒரே திரைப்படம், ஒரிஜினல் dvd க்காக வெய்ட்டிங்.

அழகர்சாமி குதிரை இங்கு எங்கும் திரை இடப்படவில்லை, இருந்தாலும் பார்க்கவேண்டுமேன்ரும் தோன்றவில்லை.

எந்திரனுக்கப்புரம் அதிகமாக நான் எதிர்பார்க்கும் திரைப்படம் ‘அவன் இவன்’ தான், என்ன பாலாவை விமர்சிக்கிறேன் என்கிற பேர்வழி படத்தை ஒரு வழி பண்ணாவிட்டால் சரி.

என்னதான் ஆடுகளம் சிறந்த திரைப்படமாக இருந்தாலும் 6 விருது என்னும்போது சம்திங் ராங்:-) (பாலு மகேந்திரா or சன் பிச்சர் # டவுட்டு :-) )

அப்புறம் வைரமுத்து பெயருக்கு கூட தேசிய விருது குடுப்பாங்களா? :-)

கனிமொழி விடயத்தில் அவர் உண்மையிலேயே தப்பு செய்யாமல் சிறை சென்றிருந்தால் நான் இன்னமும் மகிழ்வேன்.

Reply

Chitra Solomon May 23, 2011 at 11:39 AM

Buried …. படம் விரைவில் காண வேண்டும் போல இருக்கிறது.

Reply

gayathrinaga May 23, 2011 at 11:55 AM

ஹாய் கிரி, தி மு க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டம் ஆரோக்கியமான ஒன்று தானா? இதை அ தி மு க அரசு நிறுத்தி வைப்பது சரிதானா? ஒன்று மட்டும் நிச்சயம் அவர்கள் கொண்டு வந்த எந்த திட்டமும் இவர்களால் கிடப்பில்தான் போடப்படும் என்று தெரிகிறது.. ஆனால் சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்களும் உண்டு ,குரல் கொடுப்போர்கள் உண்டு .. நான் கூட சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவிப்பவன்தான்… தமிழத்தின் மிக முக்கியமான பிரச்சனையான இதை பற்றி உங்கள் ஆழமான பதிவு அலசலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்…additional , I am working as a BT assistant in Mathematics in a matriculation school …

Reply

ஜோதிஜி May 23, 2011 at 3:34 PM

வாழ்ந்து கெட்டவர்கள் படும் பாட்டை விட அந்த ரூமுக்குள் இருந்த கக்கூஸ் தான் இவர்களுக்கு பல பாடங்களை உணர்த்தும் போல.

உண்வதும் போவதும் ஒரே இடத்தில்?

எப்படி வாழ்க்கை மாறியுள்ளது பாத்தீயளா?

Reply

ANaND May 23, 2011 at 5:03 PM

தேர்தலுக்கு முன் …

செம்மொழியான தமிழ் மொழியாம்

தேர்தலுக்கு பின் …

கம்பிக்கு பின்னே கனிமொழியாம்.

Reply

காயத்ரிநாகா May 24, 2011 at 12:23 AM

க்த்ப்கட்ப்க்

Reply

Arun May 24, 2011 at 4:19 AM

நல்லா இருக்கு கிரி

“ஆடுகளம் உங்க விமர்சனம் படிக்க ஆர்வமா இருக்கு
நீங்க எவ்வளவு பெருசா எழுதினாலும் ரொம்ப ரசிச்சு தான் படிப்போம்.. அது நீங்க வாங்கி வந்த வரம் தல”

- அருண்

Reply

கிரி May 24, 2011 at 10:55 AM

@ராஜகோபால் மிக்க நன்றி. இதை ஏற்கனவே படித்து இருக்கிறேன்.

@சித்ரா பாருங்க! ஆனால் சிலருக்கு படம் ஒரே இடத்தில் இருப்பதால் போர் அடிக்கலாம் உங்களுக்கு எப்படின்னு தெரியல.

@ஜீவதர்ஷன்

நான் கூட குள்ளநரிக்கூட்டம் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இங்கு வரவில்லை.

பாலா என்றாலே இப்பிரச்சனை வராமல் இருக்குமா! :-)

ஆடுகளத்திற்கு ஆறு விருது என்பது ரொம்ப ஓவராக தான் இருக்கிறது. மைனா அங்காடித்தெரு மதராசப்பட்டினம் ஆகியவையும் சிறந்த படங்களே.

வைரமுத்து விருது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. என்னவோ போங்க!
கனிமொழி :-) தான் செய்த பாவம் பிள்ளைகளை தாக்கும் என்பது எவ்வளவு உண்மை. கனிமொழி தவறு செய்து இருந்தாலும் அவரை விட சீனியர்கள் பலர் மாட்டாமல் உள்ளார்கள். ஒருவேளை சிறைக்கு வந்ததால் பக்கா அரசியல்வாதி ஆனதுக்கு தகுதி பெற்று விட்டாரோ!

@காயத்ரிநாகா சமச்சீர் கல்வி பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. மேலோட்டமாகத்தான் படித்து இருக்கிறேன் இன்னும் அதில் உள்ள சாதக பாதகங்கள் முழுதாகத் தெரியாது. தெரியாத ஒன்றை நான் விமர்சிப்பது இல்லை. நன்றாக புரிந்து கொண்ட பிறகு வாய்ப்புகிடைத்தால் கண்டிப்பாக எழுதுகிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி. இது பற்றி http://savukku.net/home/869-2011-05-22-16-04-48.html இங்கே விவாதித்துள்ளார்கள் சென்று பார்க்கவும்.

@ஜோதிஜி இது பற்றி கூற ஏகப்பட்ட விஷயம் இருக்கும்.. சுருக்கமா பலரின் சாபம் சும்மா விடாது என்பார்கள் அது கலைஞரை விட அவரது பிள்ளையை தாக்குகிறது அதை கண்டு கண்ணீர் வடிக்க வேண்டும் என்பது அவரது விதி. கர்ம வினைகளை ஒருவன் அனுபவித்தே ஆக வேண்டும்.. அதில் இருந்து தப்பிக்கவே முடியாது. இதை நான் அனுபப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.

@ஆனந்த் இதை facebook ல பார்த்தேன் :-)

@அருண் அப்படி உங்களுக்கு மட்டும் தான் தோன்றுகிறது போல.. உங்களைத்தவிர வேற யாரும் சொன்னதா தெரியல (தினேஷ் சொன்னாரு) :-)

Reply

காயத்ரிநாகா May 24, 2011 at 7:56 PM

ya ! certainly Giri .. thanks ..!!

Reply

ANaND May 25, 2011 at 1:06 PM

நானும் அதை அங்கிருந்துதான் சுட்டேன் ..ஹா..ஹா..

Reply

Panama corporation May 25, 2011 at 9:10 AM

…Suseenthiran after the success of his Naan Mahan Alla is going back to his forte rural themes with Azhagarsamiyin Kudhirai.. Suseenthiran who lived his early life in a village near Palani understands the customs rituals and sports in rural Tamil Nadu as proved by Vennila Kabadi Kuzhu.

Reply

kirubanandhini June 1, 2011 at 6:51 PM

அழகர்சாமியின் குதிரை கதையை ஆனந்தவிகடன் பத்திரிகையில் படித்த ஞாபகம். சினிமாவுக்காக என்னென்ன மாத்தியிருக்காங்களோ, நா இன்னும் படம் பாக்கலை! அப்புறம், நீங்க ‘பரீட்’ படம் பத்திக் கொடுத்த டிரெயிலர், அந்தப் படத்தை உடனே பார்க்கணும்கிற ஆர்வ்த்தை ஏற்படுத்திச்சு. அது பத்தின மேல் விவரம் ஏதாவது இருந்தா தர முடியுமா?

Reply

கிரி June 1, 2011 at 8:45 PM

வணக்கம் நந்தினி எப்படி இருக்கீங்க? உங்கள் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது? சிகிச்சை முடிந்து விட்டதா? உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.

இந்தப்படம் உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. கொஞ்சம் பொறுமை வேண்டும்.. படம் பார்க்கும் போது இடையில் சலிப்பு தட்டியது இருப்பினும் முழுப்படமும் பார்த்து விட்டேன் :-) நீங்கள் படத்தை பார்க்க விரும்பினால் http://stagevu.com/video/edprblowiyhg செல்லுங்கள். நான் கொடுத்த விக்கி லின்க்கில் முழு விவரமும் உள்ளது.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed