Gmail Migration
உலகம் முழுவதும் மின்னஞ்சல் சேவையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. எனக்கு நினைவு தெரிந்து நான் ஹாட்மெயில் கணக்கில் 2 MB முதல் பயன்படுத்தி வருகின்றேன். தற்போது கால மாற்றத்தில் நடந்துள்ள மாற்றங்களைக் கண்டால் மலைப்பாக இருக்கிறது. யாஹூ மின்னஞ்சல் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தேன் பின் ஜிமெயில் தரும் சேவையின் காரணமாகவும் அதன் எளிமை காரணமாகவும் இதற்கு மாறினேன் மாறிய பிறகு ஜிமெயில் சேவையில் மிகவும் மன நிறைவாக இருக்கிறேன்.
ஒரு சிலர் தங்கள் மின்னஞ்சலை மாற்ற நினைத்தாலும் அதில் உள்ள தங்கள் பழைய மின்னஞ்சல்களை இழக்க நேரிடும் அல்லது இரண்டு கணக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நடைமுறை சிக்கல் காரணமாக மாறாமல் உள்ளனர் ஆனால் ஜிமெயில் கணக்கு நீங்கள் மாற வேண்டும் என்றால் எடுத்துக்காட்டாக யாஹூ வில் இருந்தோ அல்லது ஹாட்மெயில் கணக்கில் இருந்தோ என்றால் அதற்கு மிக எளிதான வழி இருக்கிறது. இதற்காகவே ஜிமெயில் இந்த வசதி ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் உங்கள் பழைய மின்னஞ்சல் கணக்கின் அனைத்து மின்னஞ்சல்களையும் எதுவும் மாறாமல் அப்படியே உங்கள் புதிய ஜிமெயில் கணக்கில் பெற முடியும். இந்த வசதி ஏற்கனவே இருந்தாலும் தற்போது மேலும் பல புதிய மின்னஞ்சல் தளங்களை யாஹூ இணைத்துள்ளது.
நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்கை யாஹூ, ஹாட்மெயில் போன்ற தளங்களில் இருந்து ஜிமெயில் க்கு மாற்ற விரும்பினால் இங்கே சென்று செய்து கொள்ளலாம். மிக மிக எளிதான ஒன்றாகும்.
Gmail contacts auto save
ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் ஒரு பிரச்னையை சந்தித்து இருக்கலாம் அதாவது நாம் யாருக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் அது தானியங்கியாக அந்த முகவரியை நமது கணக்கில் சேர்த்து விடும். நாம் ஒரு சிலருக்கு அல்லது ஏதாவது நிறுவனங்களுக்கு ஒரு முறை அனுப்பி இருப்போம் ஆனால் அவர்களை நாம் மேலும் தொடர்பு கொள்ள மாட்டோம் இதனால் தேவையில்லாமல் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி நம்மிடம் இருக்கும். இதனால் அதிகளவு சேமிக்கப்படுவதால் இது யார் என்ற குழப்பம் வரும். இதை தவிர்க்க தற்போது ஜிமெயில் இதை விருப்பப்பட்டால் வைத்துக்கொள்ளும்படி மாற்றி உள்ளது. இதை நீங்கள் Settings –> General சென்று செயல்படுத்தலாம். இந்த வசதி யாஹூவில் முன்பே இருப்பது குறிப்பிடத்தக்கது.
Google “+1″
facebook உடைய Like பட்டன் மிக பிரபலமான ஒன்று. இதை தங்கள் தளங்களில் பலர் இணைத்து வைத்துள்ளனர். இதன் மூலம் facebook பிரபலமாவதோடு அதிக வருகையாளர்களையும் பெறுகிறது. இதைப்போன்ற சமூகத் தளங்களின் பலத்தை உணர்ந்த கூகுள் இதற்குப் போட்டியாக இதே போல ஒரு வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது தேடுதலுக்குண்டான ஒரு வசதியாகும். இனி கூகுள் தேடுதல்களில் வரும் சுட்டிகளுக்கு (Link) இதைப்போல ஒரு +1 சிம்பல் இருக்கும். இனி வரும் காலங்களில் இந்த பட்டனை நீங்கள் அதிக தளங்களில் காண முடியும் facebook போல. இதில் கூகுள் வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதை பரிசோதனை செய்ய விரும்பினால் இங்கே செல்லவும். விரைவில் இந்த வசதியை அனைவருக்கும் கூகுள் கொடுக்கும்.
Opera Mail
பிரபலமான ஒபரா உலவி (browser) தற்போது மின்னஞ்சல் சேவையில் இறங்கியுள்ளது. நீங்கள் இதைப் பயன்படுத்திப் பார்க்க விரும்பினால் இங்கே செல்லுங்கள்.
IE Power save
உலவியில் ஃபயர்பாக்ஸ் மற்றும் க்ரோம் முன்னணியில் இருந்தாலும் அதற்கு ஈடு கொடுக்க IE கடுமையாக முயன்று வருகிறது இருப்பினும் அதனால் இவர்களை பிடிப்பது சிரமமாகவே உள்ளது. தற்போது IE ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் அளிக்கும் சேதியாக IE குறைந்த சக்தியை பயன்படுத்தும் ஒரு உலவியாக அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது மற்ற உலவிகளை பயன்படுத்தும் போது அதிக சக்தி தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Android
மொபைல் இயங்குதளத்தில் (OS) தற்போது Android சக்கைப்போடு போட்டு வருகிறது. இதன் எளிமை மற்றும் வசதிகள் காரணமாக தற்போது இதனுடைய பயனாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் சென்றால் 2015 ல் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.
இது ஒரு சுதந்திர மென்பொருள் (Open source) என்பதும் இது மிக பிரபலமானதிற்கு முக்கிய காரணமாகும். இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் இன்று வரை தமிழ் மொழியை புறக்கணித்தே வருகிறது. பலர் இது குறித்து குற்றம் சாட்டியும் இன்னும் தமிழை படிக்க வசதி ஏற்படுத்தாமல் இருப்பது பல Android தமிழ் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. வேறு வழியில் தமிழை படிக்க முடியும் என்றாலும் அது நிறைவானதாக இல்லை ஆப்பிள் உடன் ஒப்பிடும் போது. விரைவில் இந்த வசதியை தரும் என்று நம்புவோமாக.
XXX Domain
அடல்ட் தளங்களுக்கான .XXX டொமைன் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவீர்கள் இது பற்றி தெரியவில்லை என்றால் இங்கே செல்லவும். இதை செயல்படுத்த ஆரம்பித்தவுடன் இந்தத்தளங்களை தடை செய்யப்போகும் முதல் நாடாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவை பின்பற்றி பல நாடுகள் இதை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
facebook Vs Adult sites
UK ல் அடல்ட் தளங்களையே facebook பார்வையாளார்களின் எண்ணிக்கை மிஞ்சியுள்ளது. இது எப்படி இருக்கு!
உலகில் அதிகம் பார்க்கப்படும் தளங்களாக அடல்ட் தளங்களே உள்ளன அதோடு அதிகளவு பணம் புரளும் தொழிலாகவுமுள்ளது. தற்போது facebook அடல்ட் தளங்களை விட அதிகளவு இணையப்போக்குவரத்தை (Web Traffic) UK ல் பெற்று சாதனை படைத்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். பார்த்துக்குங்க அப்ப மக்கள் எந்தளவு facebook மீது ஆர்வமாக இருக்கிறார்கள் என்று.
கொசுறு 1
facebook தற்போது சரவெடியாக கலக்கி வருகிறது. இதைப்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூகுளே கலக்கம் அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் பள்ளிகளிலே குழந்தைகளுக்கு வீட்டுப்பாடமே facebook ல் தருகிறார்களாம். என்னுடன் பணி புரியும் ஒருவர் கூறினார் தன்னுடைய குழந்தையை facebook பார்க்கக் கூடாது என்று கூறினால் “நான் எப்படி வீட்டுப்பாடம் செய்வது?” என்று கேட்கிறார்களாம். என்னங்க இது அநியாயமா இருக்கு என்றார். சரிதானே!
கொசுறு 2
என்னுடைய பையனை நர்சரியில் சேர்க்க சென்று இருந்தேன். அங்கே சைனீஸ், தமிழ், மலாய் மற்றும் பல நாட்டு குழந்தைகளும் ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுப்பதை கள்ளங்கபடமில்லாமல் கேட்டுக்கொண்டு இருப்பதை பார்க்கவே சந்தோசமாக இருந்தது. ஒவ்வொரு குழந்தையும் பொம்மை மாதிரி இருக்குது. எனக்கு குழந்தை பிறந்த பிறகு குழந்தைகள் பற்றியே எண்ணமே மாறி விட்டது. குழந்தைகளுடன் இருப்பது என்றால் மிக சந்தோசமாக இருக்கிறது. அதுவும் ஒரே இடத்தில் இவ்வளவு குழந்தைகளை பார்த்தவுடன் மிக சந்தோசமாக இருந்தேன் அதோடு நீண்ட வருடத்திற்குப் பிறகு என்னுடைய பள்ளிப்படிப்பிற்கு பிறகு தற்போது தான் ஒரு பள்ளிக்கு செல்கிறேன். என் பள்ளிப்படிப்பை ஒருமுறை நினைவுப்படுத்தி சென்றது. எந்த வித பொறுப்புமில்லாத ஜாலியான வாழ்க்கை.
என் பையனை பற்றி கூறியதும் ஒரு காமெடி நினைவுக்கு வருகிறது. என் குடும்பமும் என் நண்பர் குடும்பமும் மிருகக்காட்சி சாலைக்கு சென்று இருந்தோம் அங்கே மூன்று சிங்கங்கள் நின்று கொண்டு இருந்தன. இவனும் அதைப்பார்த்துட்டு அப்பா சிங்கம்! சிங்கம்!! னு சொல்லிட்டு இருந்தான். என் நண்பர் “வினய் (என் பையன் பெயர்) அங்கே எத்தனை சிங்கம் இருக்குது?” என்று கேட்டவுடன் உடனே மூணு சிங்கம் என்று கூறினான். என் நண்பருக்கோ பயங்கர ஆச்சர்யம்! எப்படிங்க சரியா சொன்னான். செம அறிவுங்க என்றார்.. ஹலோ ஹலோ! இருங்க அவன் முப்பது சிங்கம் நின்றாலும் மூன்று என்று தான் சொல்லுவான் இது ஒரு கோ இன்சிடன்ஸ்ங்க என்று கூறியதும் அவருக்கு செம சிரிப்பு
கொசுறு 3
பலவித சர்ச்சைகளோடு நேற்று பிரச்சாரம் முடிவடைந்து விட்டது. நாளை காலை வாக்கு அளிக்க தயாராகுங்கள். தற்போது வாக்களிப்பதில் படித்தவர்களிடையே!!!! நல்ல விழிப்புணர்வு வந்துள்ளது (என்ன கொடுமை சார்). எனவே இந்த முறை அதிகளவில் வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த முறை எந்த மாவட்டம் அல்லது தொகுதி அதிக வாக்கு சதவீதத்தை பெறப்போகிறது என்று தெரியவில்லை.. ஆர்வமாக உள்ளது. நான் கடந்த முறை தேர்தலுக்காக எழுதிய இடுகை இவர்களை பார்த்த பிறகாவது ஓட்டு போடுங்க!
Subscribe to கிரி Blog by Email
கிரி Blog facebook Fan page ல் இணைய
Related posts:


{ 6 comments… read them below or add one }
கலக்கல்… வினய் – சமத்து!
//Gmail மிக்ராதியன்//
இது தெரிந்ததே.. ஆனால் ஜிமெயில் – ஜிமெயில் அட்ரஸ் மாத்துவது எப்படி என சொல்ல முடியுமா? (ஜிமெயிலிலிருந்து யாகூவுக்கு மாற்றி, பின் யாகூவிலிருந்து ஜிமெயிலுக்கு மாற்றுவதை விட இலகுவான வழி)
//facebook Vs Adult sites//
facebookலயும் அதானே அதிகமா இருக்கு.
–நன்றி
–> UK ல் அடல்ட் தளங்களையே facebook பார்வையாளார்களின் எண்ணிக்கை மிஞ்சியுள்ளது.
அப்படின்னா, UK-ல fecebook அத்தன பாப்புலரா? இல்ல அடல்ட் சைட்ட பாக்குறவங்க அவ்ளோ கம்மியா?
–> நாளை காலை வாக்கு அளிக்க தயாராகுங்கள்.
அட போங்க கிரி… எனக்கு தேர்தலே வெறுத்து போச்சு. நேத்து எங்க ஊர்ல ஓட்டுக்கு 100 ரூபாய் பாமக குடுத்தாங்களாம். எங்க பக்கத்து தொகுதி சங்ககிரி-ல ஓட்டுக்கு 1000 ரூபாய் திமுக குடுத்தாங்களாம். ஒரு மாசமா எலக்ஷன் கமிஷன் கடுமையா இருந்தும் இவங்களால இவ்ளோ பணம் மக்களுக்கு எந்தவித கஷ்டமும் இல்லாம குடுக்க முடியும்னா, என்னால கற்பனையே பண்ண முடியல. தமிழ்நாடு ஊழல்ல மூழ்கிடுச்சு, இனி மேல் அவ்வளவுதாங்க.
வினய்க்கு வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி சித்ரா அபரஜித்தன் முத்து மற்றும் சரவணன்
@அபரஜித்தன்
நீங்கள் கேட்ட ஜிமெயில் விஷயம் எனக்கு தெரியாது.. தெரிந்தால் கூறுகிறேன்.
facebook ல் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் பொறுத்தே அமையும். எனக்கு நீங்கள் கூறுவதை போல எதுவுமில்லை.
@முத்து அப்படி எல்லாம் மனசை விடாதீங்க
இந்த முறை 80% வாக்குப்பதிவு நடந்துள்ளது. கள்ள ஓட்டே புகாரே கிடையாது. இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும். பார்ப்போம் என்ன ஆகிறது என்று!
கொசுறு 2 ரொம்ப நல்லா இருக்கு கிரி
வினய் – பேரு நல்லா இருக்கு தல என்ன அர்த்தம் ?