ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம்!

ழலை எதிர்த்து நாமெல்லாம் இதைப்போல எழுதி விட்டும் பேசி விட்டும் அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிடுகிறோம் ஆனால் அன்னா ஹஸாரே என்ற 72 வயதானவர் (இவர் ஒரு சமூக ஆர்வலர் ஆவார் இதற்கு முன்பே பல போராட்டங்களை ஊழலுக்கு எதிராக நடத்தி இருக்கிறார்.

மகாத்மா காந்தி மீது பெரு மதிப்பு வைத்து இருப்பவர்) ஊழலுக்கு எதிராக சட்ட மசோதா கொண்டு வரக்கூறி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி இருக்கிறார்.

இதற்கு கிரண் பேடி உட்பட பலர் ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்து உள்ளார்கள் இதற்கு மேலும் ஆதரவு கூடும் என்று நம்புகிறேன்.

நான் கூட இது பற்றி NDTV.com ல் பார்த்த போது அவருடைய படத்தை மட்டும் பார்த்து விட்டு அதில் கூறியுள்ளதை படிக்காமல் சரி! எதோ ஒரு தாத்தா பொழுது போகாம எதோ போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார் போல என்று நினைத்து விட்டேன்.

நாம் தான் பூனம் பாண்டே எப்போது நிர்வாணமாக கூறியபடி ஓடுவார், அடுத்ததாக என்ன திரைப்பட செய்தி உள்ளது வேறு என்ன சுவாராசியமாக கவர்ச்சியான செய்தி உள்ளது என்று தேடும் நபராச்சே! இதை எல்லாம் நாம்(ன்) எதற்கு படிக்கப்போகிறோம்(றேன்).

எனக்கு இதைக்கூற கேவலமாக இருக்கிறது. என் மீதே எனக்கே ஆத்திரமாக வருகிறது அந்த செய்தியை ஸ்கிப் செய்து போனது. சரி விடுங்க! விஷயம் அதுவல்ல.

ஊழல் இந்தியாவை வேகமாக அழித்து வரும் ஒரு கொடிய நோயாக படு வேகமாக வளர்ந்து வருகிறது. அதுவும் சமீபமாக இதன் போக்கை பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது.

தினமும் அந்த அரசியல்வாதி இவ்வளோ கோடி கொள்ளை அடித்தார் இவர் இவ்வளோ கையாடல் செய்தார் என்று வருவதைப் பார்த்தால் வருகிற ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல.

தற்போது ஆயிரத்தில் எல்லாம் ஊழல் செய்வது கீழ் நிலை ஊழியர் மட்டும் தான் தற்போதெல்லாம் லட்சம் கோடி (ஸ்பெக்ட்ரமை விடுங்க அது இல்லாமையே பல கோடி கொள்ளைகள் வந்து விட்டது.. ) கொள்ளைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.

Read: ஊழல்! ஊழல்!! ஊழல்!!!

இதை தேர்தல் கமிசன் போல தன்னிச்சையாக அரசின் கட்டுப்பாடில்லாமல் செயல்படும் ஒரு அமைப்பின் மூலம் தான் சரி செய்ய முடியும் என்று ஜன் லோக்பால் என்ற அமைப்பை செயல்படுத்தக்கூறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இருக்கிறார்.

இதன் மூலம் இந்த அமைப்பு ஊழல் செய்த அனைவரையும் விசாரிக்க முடியும் எந்த வித கட்டுப்பாடுமில்லாமல். இதில் மாநில அரசோ அல்லது மற்றவர்களோ இதில் தலையிட முடியாது அதாவது யோவ்! அவன் நம்ம ஆளுயா! இந்த விஷயத்தை கண்டுக்காதே! என்று கூற முடியாது.

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் தற்போது தமிழகத்தில் தேர்தல் கமிசன் அனைவரையும் சுளுக்கு எடுத்து வருவதைப்போல ஊழல் செய்யும் அனைவரையும் பெண்டு எடுக்க முடியும்.

ஜன் லோக்பால் மூலம் என்ன செய்ய முடியும் (Source: http://idlyvadai.blogspot.com)

மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா அமைப்பும் நிறுவப்படும்.

உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ இருக்காது.

மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு, அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.

ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை தண்டனைக்காலத்தில் மீட்கப்படும்.

பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக் கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும்.

ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம்.

இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி தண்டனை பெறுவார்.

லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள். நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம் இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள் தவிர்க்கப்படும்.

ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்படுவர்.

புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

நினைத்துப்பாருங்க இது போல சட்டம் வந்து ஊழல் குறைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நம்ம நாட்டில் ஊழல் மட்டும் இல்லை என்றால் ஒரு பய நம்மை எதுவும் செய்ய முடியாது.

பட்டாசாக நம் நாடு முன்னேறும் ஆனால், பாருங்க இவற்றை எல்லாம் இப்படி நடந்தால்! என்று நினைத்துப்பார்த்து சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியை நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

எதுவும் நிஜமாக மாட்டேங்குது. நம்ம நாட்டில் இருக்கும் வளத்திற்கும் நம்மவர்கள் இடையே இருக்கும் திறமைக்கும் அமெரிக்கா எல்லாம் ஒன்றுமே இல்லைங்க.

நம்மிடமும் ஊழல் இல்லாமையும் ஒழுக்கமும் இருந்தாலே போதும் அடி தூள் கிளப்பலாம் ஆனால் இவை அனைத்தும் நம்மால் செய்யக்கூடிய செயல் என்றாலும் செய்யாமல் இருக்கிறோம்.

நாம் எழுதி எல்லாம் ஒன்றும் நடக்கப்போவதில்லை இதை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறேன். நான் இதற்காக என்ன செய்தேன்.. ஒரு துரும்பு கூட என்னளவில் இதற்காக நான் செய்யவில்லை. எனக்கே வெட்கமாக இருக்கிறது.

ஒரு வெங்காயமும் செய்யவில்லை! இதைப்போல எழுதுவதை தவிர. சும்மா இங்கே உட்கார்ந்துட்டு ஊழல், அராஜகம், இந்தியா அழியப்போகிறது.. நாடு கெட்டு விட்டது.. பூமா தேவி வாய பொளக்கப்போறா எல்லோரும் உள்ளே போகப்போறோம் ஐயோ அம்மா! என்று வசனம் பேசுவதில் என்ன அர்த்தம்.

இதைப்போல பேசுவதை பார்த்தால் இப்போதெல்லாம் எனக்கே காமெடியாக இருக்கிறது.

இவை எல்லாம் கூட உங்களுக்கு இதை பகிர மட்டுமே நான் ஒன்றும் செய்யப்போவதில்லை.. வெளிநாட்டில் இருக்கிறேன் குறைந்த பட்சம் என்னால் செய்யக்கூடிய ஒட்டுரிமையைக் கூட என்னால் பயன்படுத்த முடியாது.

பின்ன இது பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? ஒன்றுமே செய்வதில்லை ஆனால் நாடு முன்னேறனுமாம்! இதை கேட்டால் உங்களுக்கே சிரிப்பு வரலை…

ஆனால் நம்மைப்போல ஹசாரே நினைக்கவில்லை. அதற்கான முயற்சியை எடுத்து இருக்கிறார் அவரளவில். இது வெற்றி பெறுமா அல்லது வழக்கம்போல புஸ்ஸுன்னு போய் விடுமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

சரி! ஒரு நல்ல விஷயம் செய்து இருக்கிறார் அவரை பாராட்டனும் என்று தோன்றியது எழுதினேன். கிரிக்கெட் சினிமா பற்றி எழுதறோம் இந்த தாத்தா பற்றி எழுதினால் என்ன குறைந்தா போய் விடப்போகிறேன்.

இங்கேயும் ஒரு பெரியவர் கலைஞர் இருக்கிறார் தேர்தல் கமிசன் நடவடிக்கைகளை, மக்களுக்கு எதிராக கமிசன் நடக்கிறது என்று முழங்கி “எமெர்ஜென்சி” என்று பெரிய வார்த்தைகளை எல்லாம் கூறி மக்களது (வணிகர்கள்) பார்வையை தேர்தல் கமிசனுக்கு எதிராக திருப்பி விட்டுக்கொண்டு இருக்கிறார்.

தேர்தல் கமிசன் நடவடிக்கைகளுக்கே இதைப்போல கூறினால் ஜன் லோக்பால் போன்றவை எல்லாம் (ஒருவேளை… ஒருவேளை தான்) வந்தால் ஐயோ அம்மா கொல்றாங்களே! என்று கூறுவாரோ!

Read: கட்சிகளை அலற வைக்கும் தேர்தல் கமிஷன்

நேற்றுக்கூட கூட 5 கோடி ஒரே சமயத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு என்ன கூறப்போகிறார்கள்? நேர்மையாக நடப்பவன் எவனாவது ஆம்னி பஸ் டாப்ல ஐந்து கோடியை கொண்டு செல்வானா!

பிடிபட்டது ஐந்து கோடி பிடிபடாதது….. பாருங்க எவ்வளவு அநியாயம் நடக்கிறது என்று.

தற்போது ஊழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஓரளவு பரவி வருகிறது. இதற்காக ஏதாவது செய்யணும் என்று நினைக்கிறார்கள் அதை எப்படி சரியாக துவங்குவது என்று தெரியாமல் விழிக்கிறார்கள் அல்லது யார் முன்னெடுப்பது என்ற பிரச்சனையில் குழம்புகிறார்கள்.

இதோ! அன்னா ஹஸாரே ஆரம்பித்து வைத்து இருக்கிறார் இது வெற்றி பெறுமோ இல்லையோ அது வேறு விஷயம் இதை நாம் மற்றவர்களிடம் கூறுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லையே.

நம்மால் எதுவும் நடக்கவில்லை என்றாலும் யாராவது இதற்காக முயற்சிக்காமலா போய் விடப்போகிறார்கள்!

ஊடகங்கள் கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் இதற்கு பாதி கொடுத்தால் கூட புண்ணியமாகப்போகும்.

ஜன் லோக்பால் மேலும் தெரிந்து கொள்ள http://indiaagainstcorruption.org/ செல்லுங்கள்

{ 16 comments… add one }
 • ANaND April 6, 2011, 2:18 PM

  வணக்கம் கிரி ….
  ஜன் லோக்பால்கு அனுமதி அளிப்பவர்களே உழலின் பிடியில்தான் இருக்கிறார்கள்.. அனுமதி கொடுத்தால் மாட்டும் முதல் ஆல் அவர்கள் தான் னு நினைக்கிறான் ..

  பட்டிமன்றம் நடத்துற ராஜா ஒருவாட்டி சொன்னார்… நம்ம நாட்ல ஊழல் ரொம்ம்ப ஆழமா போயிடுச்சி அதை சட்டம் போட்டு தடுக்க முடியாது …குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும் ஊழல் வேண்டாம். பேராசை பட வேண்டாம் அப்படி செஞ்ச தான் அடுத்த தலைமுறை யாவது ஊழல் இல்லாம இருக்கும் னு சொல்லிருகாரு ..

  தாத்தாவ கண்டிப்பா பாராட்டியே தீரனும்… அவருக்காக கண்டிப்பா குரல் கொடுக்கணும்

 • Mohamed Yasin April 6, 2011, 5:52 PM

  Hi.. Giri,

  We must appreciate this old man, I have tried this webpage but it’s not working. Thanks for posting the issue..

  Many Regards
  Mohamed Yasin

 • Dinesh April 6, 2011, 6:11 PM

  சரியான நேரத்தில் சரியான பதிவு கிரி. வாழ்த்துக்கள்…

 • ஜோதிஜி April 6, 2011, 6:47 PM

  நீங்கள் சொல்லும் இந்த விமர்சனம் கூட பெரிய்யய ………… வேறு வழியில்லை. சற்று நேரம் கிடைத்துள்ளது. உங்கள் ஒவ்வொரு பதிவையும் மின் அஞ்சல் வாயிலாக வாசித்துக் கொண்டிருந்தாலும் நம்ம டச்சு இதில் வந்துள்ளது. அப்புறம் ஆனந்த் விமர்சனம் ரொம்பவே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இருங்க ஒவ்வொன்றாக பேசலாம்.

 • ஜோதிஜி April 6, 2011, 6:53 PM

  நம்ம நாட்ல ஊழல் ரொம்ம்ப ஆழமா போயிடுச்சி அதை சட்டம் போட்டு தடுக்க முடியாது …குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும் ஊழல் வேண்டாம். பேராசை பட வேண்டாம் அப்படி செஞ்ச தான் அடுத்த தலைமுறை யாவது ஊழல் இல்லாம இருக்கும்

  நாம் இப்போது எல்லாவற்றையும் உடனே எதிர்பார்க்கின்றோம். இல்லாவிட்டால் சட்டென்று வெதும்பி வெம்பி தளர்ந்து போய்விடுகின்றோம். ஒரு மின்சார வாரிய அதிகாரி ஒரு லட்சம் லஞ்சம் கேட்ட போது எனக்கு ஆச்சரியமாக தெரியவில்லை. ஆனால் அதற்காக நாங்கள் இத்தனை பேர்கள் இருக்கின்றோம். அதற்காகத்தான் இந்தத் தொகை என்று கேட்ட போது தான் வியப்பாக இருந்தது. அவர் சொன்ன ஒவ்வொரு அதிகாரியும் குறைந்தபட்சம் நாற்பது ஆயிரம் முதல் அதிகபட்சம் அறுபது ஆயிரம் வரைக்கும் வாங்கும் உயர் பதவி மக்கள். ஆனால் மேன்மக்களா? எனக்கான வாழ்க்கைப் பாடுகளைவிட அரசாங்க அலுவலகத்தில் படிக்காத மக்களும் விபரம் தெரியாத மக்களை இவர்கள் படுத்துகிற பாடு சொல்லி மாளமுடியாது. ஆனால் ஒரு துளி கூட மனதில் ஈரம் இல்லாத அளவிற்கு எல்லாவற்றையும் இயல்பாகவே எடுத்துக் கொண்டு வாழ பழகிவிட்டனர். சற்று வருத்தப்படும் அளவிற்கு யாராவது பேசி விட்டாலே ராத்திரி தூக்கம் வரமாட்டுது. ஆனால் இவர்களைப் பார்க்கும் போது?

 • ஜோதிஜி April 6, 2011, 7:00 PM

  ஆனந்த சொன்ன ராஜா குறிப்பிட்ட மாதிரி ஒவ்வொருவரும் தனது மாற்றங்களை தங்களது வீட்டில் இருந்து தொடங்க முடியும் என்பதையே பலரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். நம்மால் முடியாது? நாம் என்ன செய்ய முடியும்? பிழைக்கத் தெரியாதவன்? ஊரோடு ஒத்து வாழ முடியாவிட்டால் நம்மை எப்படி இந்த சமூகம் பார்க்கும்? இது போன்ற பல கேள்விக்ள. ஆனால் இது போன்ற கொள்கைகள் லட்சியங்கள் உள்ள தனி மனிதர்கள் எப்போது தோற்றுப் போகிறார்கள் தெரியுமா?

  நான் சொன்ன மின்சார வாரிய அதிகாரி மகள் சேலத்தில் உள்ள மருத்தவ கல்லூரியில் நாற்பது லட்சம் கொடுத்து சீட்டு வாங்கி படித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நடவடிக்கைகள் அத்தனையும் ஹிப்பி கலாச்சாரம். இவர் இங்கே சேர்த்துக் கொண்டிருக்க அத்தனையும் அங்கே தானும் அழிந்து அடுத்த தலைமுறையு அழிந்து………… இதுவொரு சுழற்சி. முடிவு.? இந்த அதிகாரி கடைசி காலத்தில் பார்க்கும் வாழ்க்கை நாஸ்தியாகி…………….. பலரையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். மனசாட்சி. என் அனுபவத்தில் இது தான் மிகப் பெரிய தெய்வம். ஏமாற்றிவிடலாம் என்று எத்தனை புத்திசாலித்தனமான காரியங்கள் செய்தாலும் நிச்சயம் ஆழ்மன அழுக்குகள் ஒன்று சேர்ந்து ஒரு நாள் ஊர்வலம் நடத்தும். அப்போது சம்மந்தப்பட்டவர்களின் சவஊர்வலம் எப்படியிருக்கும் என்பதை இறந்தவர் பார்க்க மாட்டார். ஆனால் சுற்றியுள்ளவர்கள் பார்த்து மனதிற்குள் குறித்துக் கொள்வார்கள்.

  இத்தனை தெரிந்தாலும் எவராவது திருந்துவார்கள் என்றா நம்புகிறீர்கள்?

  காரணம் ஆசை என்பது அத்தனையையும் விட மேலானது. உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரைக்கும் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் சாத்தான் அது.

 • Chitra Solomon April 6, 2011, 8:06 PM

  நினைத்துப்பாருங்க இது போல சட்டம் வந்து ஊழல் குறைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நம்ம நாட்டில் ஊழல் மட்டும் இல்லை என்றால் ஒரு பய நம்மை எதுவும் செய்ய முடியாது.. பட்டாசாக நம் நாடு முன்னேறும் ஆனால் பாருங்க இவற்றை எல்லாம் இப்படி நடந்தால்! என்று நினைத்துப்பார்த்து சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியை நிலையில் தான் நாம் இருக்கிறோம். எதுவும் நிஜமாக மாட்டேங்குது. நம்ம நாட்டில் இருக்கும் வளத்திற்கும் நம்மவர்கள் இடையே இருக்கும் திறமைக்கும் அமெரிக்கா எல்லாம் ஒன்றுமே இல்லைங்க. நம்மிடமும் ஊழல் இல்லாமையும் ஒழுக்கமும் இருந்தாலே போதும் அடி தூள் கிளப்பலாம் ஆனால் இவை அனைத்தும் நம்மால் செய்யக்கூடிய செயல் என்றாலும் செய்யாமல் இருக்கிறோம்.

  ….. true !!!!

 • மாறும் இந்நிலை ஒரு நாள் மாறும் என்று நம் மக்கள் படிப்பையும் உழைப்பையும் மட்டும் நம்பி சுய முடிவு எடுக்கும் போது இந்த நிலை மாறும் :-).

  மற்ற படி நாமே அரசை அமைத்து விட்டு அந்த அரசை மட்டும் குறை காட்டுவது நம் முட்டாள் தனம் மட்டுமே :-(.

  நன்றி கிரி.

 • Arun April 7, 2011, 11:37 AM

  தேங்க்ஸ் கிரி
  நான் ஒரு 30 பேருக்கு fwd பண்ணிட்டேன்

  – அருண்

 • ராமலக்ஷ்மி April 7, 2011, 3:25 PM

  பகிர்வுக்கு நன்றி கிரி.

 • Prabhu Sivaraman(Dare Enough...) April 8, 2011, 4:06 PM

  அனைவருக்கும் என் இனிய மதிய வணக்கம்,

  முதலில் யார் பூனைக்கு மணி கட்டுவது என்று யோசிக்கும் இந்தியாவில் , தாதா வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். இவர் போன்ற காந்திய வaதிகலவது முயற்சி செய்தல் ஊழல் 1 நாள் ஒடுக்க படும். நானும் பொருது பார்கிறேன் சரி வரவில்லை என்ன்றால் என் இந்தியத் தலைவன் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் தமிழ் தலைவன் மேதகு திரு பிரபாகரன் வழியில் தன இர்வகளுக்கு நான் பாடம் சொல்வேன்.

  அன்று சுடும் இவர்களுக்கு, (கொஞ்சம் ஓவர தான் ஆடிட்டமோன்னு )…..

  பொருத்தது போதும் தமிழா. பொங்கி எழு. …

 • Prabhu Sivaraman(Dare Enough...) April 8, 2011, 4:54 PM

  வணக்கம் சிங்க குட்டியரே ,(இந்தியாவில் சிங்கம் என்றல் perumai, எம் மண்ணில் அதற்கு பெயர் வேறு…., (வேங்கை என்று மாற்றிக்கொள்ளுங்கள், நடிகர் விசை இந்த உண்மை அறிந்த பிறகு, தன் படங்களில் சிங்கம் என்ற வார்த்தையை பயன் படுத்துவது கிடையாது. அதற்கு பதில் வேங்கை, வரி புலி என்று பயன்படுத்துகிறார்.) )

  நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் நியாயம் என்றாலும், ஏன் தவறான ஒரு தலைவரை therndedukka ஒத்துழைகிரீர்கள்.

  நீங்கள் ஒட்டு கேட்டு வரும் அரசியல் வாதியிடம் , எங்கள் தேவை இது இது என்று சொல்லி , அவை சரி செய்யா விடில் என்ன நடவடிக்கை உங்கள் மீது நாங்கள் எடுப்பது என்றும் , நான் எந்த தவறும் , ஊழலும் இல்லாமல் ஆட்சி செய்வேன் என்றும் உறுதி மொழி வாங்க thuninthathu உண்டா ?.

  இப்போது ஒருவர் நான் அதை கிழிப்பேன் இதை கிழிப்பேன் என்று பிதற்றிக்கொண்டு ஒட்டு சேகரிக்க முயல்கிறார், இன்றைய பொழுதில் அவர் என்ன கிளப்பார் என்று ஜோசியம் சொல்ல யாரால் முடியும், நாம் நம்பி வாக்களிக்கிறோம், அவர்கள் ematrugirargal, ithu அவர்கள் thavaruthane ஒழிய, மக்களை எப்படி குற்றம் கூற முடியும்.

  தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள், கிராம மக்கள், avargalukku thiraippadathil எப்படி நடிகர்கள் நல்லவர்களாக வளம் வருகிறார்களோ, அப்படியே அரசியலிலும் இருப்பார்கள் என்று தப்பு கணக்கு போட்டு ஏமாந்து விடுகிறார்கள். பொதுப்படையாக பேசி, நழுவதீர்கள், தீர்க்கமாக சொல்லுங்கள்.

  இதே கேள்வி எனக்கும் பொருந்தும் தான். நான் தி மு கலகங்கள் எதற்கும் இன்று வரை ஒட்டு போட்டது கிடையாது. நான் வாக்களித்த நல்லவர் எங்கள் ஊரில் பல நன்மைகள் செய்திருக்கிறார். எளிமை, பொதுப்பணி, மக்கள் சேவை, இவை தான் அந்த கட்சியின் கொள்கைகள், இதில் அவர்கள் ஒருபோதும் பிழை பட நடந்தது கிடையாது.

 • bhuvana April 8, 2011, 9:42 PM

  மனசு வலிக்குதுங்க ……….. தாங்க முடியல ……
  கடவுள் இருந்தால் பார்த்துக்கட்டும்…..

 • prabhavathy April 9, 2011, 3:07 PM

  dear giri …awareness about against corruption is really a wonderful and an exciting current issue ..hats off to that grandpa fighting for our Indians …we all Indians should join hands to get victory over this and pray almighty to give strength and healthy life to Anna Hasaray ….

  Jai hind !

 • Tpmanand April 15, 2011, 2:52 PM

  Excellent Giri,
  Tamil Anbargal My brothers And Sisters And Giri you Visit my Blog
  Tpm,Anand Kavithaigal, View Anna Hazare Next is What?
  http://www.tpmanand.mywapblog.com/

 • sriram April 30, 2011, 3:56 PM

  வெள் said ,வாட் ஆல் i பெல்ட் இட்ஸ் தேர் இன் யுவர் மெசேஜ் ,
  வி ஹவே டு form எ association டு மேக் இட் மோர் successful
  i அம் ரெடி,திந்க் அபௌட் இட்

Leave a Comment