த்ரில்லர் படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை அதற்கு நம் மக்களின் ஆர்வமின்மையே காரணம். நம் மக்களுக்கு காமெடி சண்டை மசாலா படங்களே அதிகம் பிடிக்கின்றன அதனால் த்ரில்லர் பேய் வன்முறை விஞ்ஞானம் போன்ற படங்களுக்கு அவ்வளவா ஆதரவு இருப்பதில்லை. இருப்பினும் அதைப்போல ஒரு சில படங்கள் வந்து வெற்றி பெறுகின்றன பல தோல்வி அடைந்து விடுகின்றன. யுத்தம் செய் எப்படிப்போகிறது என்று தெரியவில்லை ஆனால் நிச்சயம் சிறப்பாக எடுக்கப்பட்ட த்ரில்லர் படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
நகரில் பெண்கள் காணாமல் போகிறார்கள் அதே போல பொது இடங்களில் வெட்டப்பட்ட கைகள் ஒரு பெட்டியில் அடிக்கடி வைக்கப்படுகின்றன இதை யார் செய்தது எனத் தெரியாமல் காவல் துறை திக்கித் திணறுகிறது. இதைக்கண்டு பிடிக்கும் பொறுப்பு CBCID அதிகாரி சேரன் வசம் வருகிறது. இந்தக் குற்றங்களை சேரன் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.
தமிழில் வந்த பெஸ்ட் த்ரில்லர் படம் என்று நிச்சயம் இதைக்கூறலாம். எந்த வித சமரசமும் (ஒரு குத்துப்பாட்டைத்தவிர) இல்லாமல் எடுக்கப்பட்ட க்ளீன் தமிழ் த்ரில்லர். சும்மா சொல்லக்கூடாதுங்க! க்ரைம் நாவல் மாதிரி விறுவிறுப்பாக படம் செல்கிறது. இதைப்போல எடுப்பதற்கு மிஸ்கின் போல ஒரு சிலராவது இருக்கிறார்களே என்று சிறு அல்ப சந்தோசம்.
ஒரு சில காட்சிகளை விவரித்தால் கதையின் ட்விஸ்ட்களையும் கூற வேண்டி இருப்பதால் அதை கூறாமல் தவிர்க்கிறேன். அஞ்சாதே படம் போல இதிலும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். இதில் வரும் பல காட்சிகள் “ஹாஸ்டல்” படத்தை நினைவுபடுத்துகிறது. அதிலும் குறிப்பாக கைகளை அறுக்கும் காட்சிகள் மற்றும் பெண்களை அலங்காரம் செய்யும் காட்சிகள். மிஸ்கின் என்றாலே சர்ச்சை தான் போல இருக்கு
குலை நடுங்க வைத்த “Hostel” – திரைவிமர்சனம்
மிஸ்கின் படம் என்றால் ஒரு சில காட்சிகளைப் பார்த்தால் போதும் என்கிற அளவிற்கு அவருடைய டச் தெரிகிறது. குறிப்பாக இசை, கேமரா கோணம், இருட்டு, சில நடிகர்களின் மேனரிசம் என்று பல விசயங்களைக் கூறலாம். இதிலும் பல காட்சிகளை அவ்வாறு கூறலாம். சேரனின் பங்கு பற்றி கூற வேண்டும் என்றால் பல காட்சிகளைக் கூறலாம் குறிப்பாக கூற வேண்டும் என்றால் இடைவேளை சண்டைக்காட்சியை கூறலாம். மிக சிறப்பாக வித்யாசமாக அமைக்கப்பட்ட சண்டைக்காட்சி.
சேரனின் உதவியாளராக வரும் பெண் பார்த்தால் பச்சை மண்ணாக இருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெச்சூர்டான பெண்ணை இந்த கதாப்பாத்திரத்திற்கு போட்டு இருக்கலாம். அனுபவமுள்ள இன்னொரு உதவியாளராக வருபவர் நடிப்பு நன்றாக உள்ளது. ஒரு சில காட்சிகளில் நீண்ட நாள் பணியின் அனுபவத்தால் அவர் ஒரு சிலரிடம் பேசும் முறை சினிமாத்தனம் இல்லாமல் இருக்கிறது.
இடைவேளைக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கும் விவரிக்கும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தி இருக்கலாம் காரணம் அவர்கள் கூறும் பல விசாரணை குறிப்புகளை புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது யார் யாரை சொல்கிறார்கள் என்பது புரிய கடினமாக உள்ளது. திருட்டுப்பயலே படத்தில் விவேக் கள்ள ஜோடிகளை பிடித்து ப்ளாக் மெயில் செய்யப்போவார். அதில் சீரியல் கதையை ஒருவர் விளக்குவதைக்கேட்டு விவேக் கிறுகிறுத்து விடுவார் அது மாதிரி சில காட்சிகள் உள்ளன.
படத்தில் பின்னணி இசையைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும் படத்திற்கு என்னைப்பொறுத்தவரை பின்னணி இசை பெரிய பலத்தை கொடுத்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதில் மிஷ்கினின் பங்கு உள்ளது என்பது “அஞ்சாதே” படத்தின் பின்னணி இசையை கேட்டு இருந்தால் உங்களுக்கு புரியும். இரண்டு படத்திலும் இசையமைப்பாளர்கள் வேறு என்றாலும் பின்னணி இசை ஏறக்குறைய அந்த பேஸ் ஒரே மாதிரி தான் இருக்கும்.
ஒரே ஒரு குத்துப்பாடல் அது அவசியமில்லை என்று கூறவில்லை ஆனால் அது இல்லாமல் இருந்தாலும் ஒன்றும் பெரிய இழப்பில்லை. நான் கூட குருதிப்புனல் மாதிரி பாடலே இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். “கத்தாழை கண்ணாலே” போல ஒரு பாடல் ஆனால் அது போல இதில் எடுபடவில்லை. நடனமும் ஏறக்குறைய அந்தப்பாடலைப்போலவே இருந்தது. கேமரா பற்றி குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு சில இடங்களில் தெளிவாக இல்லாமல் இருந்தது அது ஜூம் இன் ஜூம் அவுட் செய்வதாலா என்று தெரியவில்லை ஆனால் கோணம் சரியாக இருந்தது.
இந்தக்கொலைகளை செய்பவர்கள் செயல் சில நம்பமுடியாத அல்லது நடைமுறையில் சாத்தியமில்லாததாக உள்ளது. அதை யார் செய்கிறார்கள் என்பதைக்கூறினால் படத்தின் சுவாராசியம் போய் விடும் என்பதால் கூறாமல் விடுகிறேன். இயல்பாக படம் எடுப்பவர்கள் ஏன் இதைப்போல விசயங்களில் கோட்டை விடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஏன் என்றால் எனக்கு இதில் பல எப்படிக்கள்? உள்ளது. இதை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால் நிச்சயம் சிறந்த த்ரில்லர் படம்.
பொதுவாக எனக்கு வன்முறைப்படங்கள் பிடிக்கும் அதனால் இதில் வரும் காட்சிகள் என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அதே போல எப்போதும் தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை. பெண்கள் குழந்தைகள் விசயத்தில் எப்போதும் எனக்கு கோபம் அதிகம் தான். இவர்களுக்கு எதிரான குற்றங்களில் குறிப்பாக பாலியல் குற்றங்களில் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது என் ஆதங்கம். அதை நிஜத்தில் எதிர்பார்க்க முடிவதில்லை அதனால் இதைப்போல திரைப்படங்களில் பார்த்து மன ஆறுதல் பட வேண்டியதாக உள்ளது. இந்தப்படம் பார்த்த போது தவறு செய்தவர்களை நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதை மிஸ்கின் செய்து விட்டார்
அதனால் எனக்கு மனநிறைவை தந்தது.
இந்தப்படம் குழந்தைகளுடன் பார்க்க ஏற்ற படமல்ல கணவன் மனைவி செல்லலாம் அதிலும் பெண்களை கவருமா என்று தெரியவில்லை. நீங்கள் த்ரில்லர் படங்களை ரசிப்பவர் என்றால் கண்டிப்பாக தவிர்க்கக் கூடாத படம் யுத்தம் செய்.
தண்டனைகள் பற்றி முன்பு நான் கொலை வெறிக் கோபத்துடன் எழுதிய இடுகையை நீங்கள் இதுவரை படித்தது இல்லை என்றால் நேரம் அனுமதித்தால் படித்துப்பாருங்கள் “ஒரு காட்டுமிராண்டியின் உள்ளக்குமுறல்!“
கொசுறு 1
படம் பார்க்கும் போது என் பின் அமர்ந்து இருந்த இரு பெண்கள் பேசியே சாவடித்தார்கள். ஏன் இந்த மாதிரி படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது பேசிக்கொண்டே இருக்கிறார்களோ! வருகிற ஆத்திரத்தில் படத்தில் வருகிற மாதிரி லொட லொட னு பேசுற நாக்கை பிடுங்கி எறிந்து விடலாம் போல இருக்கிறது. த்ரில்லர் படம் என்பதால் படம் விறுவிறுப்பாக செல்கிறது இதில் இவர்கள் பேசி சிரித்துக்கொண்டு இருந்ததால் பல வசனங்கள் புரியவே இல்லை. இடைவேளைக்கு பிறகு வேறு இடம் மாறி உட்கார்ந்தேன்.
கொசுறு 2
இந்தவாரம் சிங்கப்பூர் உள்ளூர் தொலைக்காட்சியில் “சிவா மனசுல சக்தி” படம் போட்டார்கள். ஏற்கனவே பார்த்த படம் என்றாலும் மீண்டும் ஒரு முறை பார்க்க கூடியதே. நல்ல காமெடி மற்றும் ஜாலியான படம் (முடிவைத்தவிர படம் ஓகே) ஜீவா சந்தானம் இருவரும் கலக்கி இருப்பார்கள். ஜீவா சென்னை பாசையில் வெளுத்து வாங்கி இருப்பார்
அதுவும் அவர் சரக்க போட்டுட்டு பண்ணுற அலப்பறை செம ரகளையாக இருக்கும். எனக்கு அந்தப்படத்துல வரும் “ஒரு கல் ஒரு கண்ணாடி” பாடல் ரொம்ப பிடிக்கும் நல்ல ஒரு ரொமான்டிக்கான பாடல்.
Oru Kal Oru Kannadi by giriblog
Subscribe to கிரி Blog by Email
கிரி Blog facebook Fan page ல் இணைய
Related posts:


{ 11 comments… read them below or add one }
மிகவும் அழகாக எழுதப்பட்ட ஒரு விமர்சனம்.
//வருகிற ஆத்திரத்தில் படத்தில் வருகிற மாதிரி லொட லொட னு பேசுற நாக்கை பிடுங்கி எறிந்து விடலாம் போல இருக்கிறது.//
கிரி….
ஹா…ஹா…ஹா… யுத்தம் செய் படத்தோட எஃபெக்ட் நல்ல வேளை தியேட்டர்ல கிடைச்சு இருக்க வேண்டியது….
அவர்கள் தப்பித்தார்கள்….!!
கிரி ,
யுத்தம் செய் ஒரு மிக சிறந்த த்ரிலர் ,” M ”,THE MAN ESCAPED ,போன்ற படத்திற்கு இணையானது இப்படம் ..,என்னளவில் மிஷ்கின் ஒரு மிக சிறந்த படைப்பாளியாகவே கருதுகிறேன் .,நந்தலாலா வை தவிர .,
விமர்சனம் நல்லா இருக்குங்க சார்.
//வருகிற ஆத்திரத்தில்
படத்தில் வருகிற மாதிரி லொட லொட
னு பேசுற
நாக்கை பிடுங்கி எறிந்து விடலாம்
போல இருக்கிறது .//
ஆஹா…. வன்முறை படங்கள் பிடிக்கும்னு சொல்றீங்கன்னு பார்த்தா வன்முறையே ரொம்ப பிடிக்கும் போலிருக்கே…! இடைவேளை வந்ததுதான் அந்த பெண்களின் நல்லவேளை போலிருக்கு
விமர்சனம் அருமையான ரசனையுடன் எழுதியிருக்கீங்க அண்ணே , சூப்பர்
பகிர்வுக்கு நன்றி
)
யுத்தம் செய் பார்க்கலாம்
nice giri…
இன்னும் பார்க்கவில்லை. ஆனால், கேள்விப்பட்டவரை, “HOSTEL ” மற்றும் “SAW ” படங்களின் தாக்கம் அதிகம் உள்ளதுபோல் தெரிகிறது.
கிங் விஷ்வா, கோபி, சங்கர், Mrs கிருஷ்ணன், தமிழ், மாணவன், பிரபு மற்றும் அழகன் வருகைக்கு நன்றி
@கோபி & Mrs. கிருஷ்ணன்
@சங்கர் என்னென்னமோ படம் சொல்றீங்களே! கலக்குறீங்க போங்க.. உலகப்படமா பார்க்க ஆரம்பித்துட்டீங்க போல
@அழகன் ஹாஸ்டல் உண்டு சா இல்லை.
படம் பார்க்கும் போது என் பின் அமர்ந்து இருந்த இரு பெண்கள் பேசியே சாவடித்தார்கள். ஏன் இந்த மாதிரி படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது பேசிக்கொண்டே இருக்கிறார்களோ!
adhey dhan Giri enakkum aachu, pakathula moonu pasanga, ellathukkum comment adikaranga.. anegama kuthu padam nu nenachivandhutanga pola.. idhula pathadhadhukku phone vera vandhuchu oruthanukku, pesikittey irundhan…
Padam superb, ellarum kettadhu yaarupa adhu music director nalla potrukaaney nu
“Observers are observed” – Ipadi anga anga Mysskin touch irundhuchu