Mail RSS Feed

இணையம் பற்றிய செய்திகள் [11-02-2011]

Google docs video

Google Docs பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதில் ஆன்லைனில் Word, Excel, PDF என்று பல ஃபைல்களை நாம் பயன்படுத்த முடியும். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு Docs மட்டுமல்லாது எந்த ஃபைலை வேண்டும் என்றாலும் சேமிக்கலாம் என்ற வசதியை கொண்டு வந்தது. இதன் மூலம் Exe, MP3, Movie ஃபைல்ஸ் என்று அனைத்தையும் சேமிக்க முடிந்தது. இந்த வசதி உண்மையிலேயே ரொம்ப பயனுள்ளதாக இருந்தது.

தற்போது இவ்வாறு சேமிக்கும் Movie ஃபைலை ஆன்லைனில் எளிமையாக பார்க்கும் வசதியை தந்துள்ளது. இதன் மூலம் நம்மிடம் உள்ள Movie ஃபைலை தரவிறக்கம் (Download) செய்யாமலே பார்க்க முடியும். நமக்கு தெரிவது YouTube ல் இருந்து தெரிவது போல் இருக்கும். தற்போது MP3 க்கு இது போல வசதி கொண்டு வரப்போவதாக பேச்சு அடிபடுகிறது வந்தால் நம் பாடலை ஆன்லைனில் கேட்பது எளிதாகி விடும்.

Google Calendar

கூகிள் காலண்டர் ஒரு அற்புதமான வசதி. இதை பயன்படுத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு இதன் அருமை புரியும் இதில் Reminder ஏற்படுத்தி வைத்து இருப்பது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் இதன் மூலம் நமது நண்பர்கள் குடும்பத்தினர் பிறந்த நாட்கள் மற்றும் பல முக்கியமான நாட்களை இதில் நாம் அமைத்து விட்டால் சரியான நேரத்தில் நமக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் (SMS) மூலம் கூகிள் தெரிவித்து விடும். இதன் மூலம் நாம் எந்த முக்கியமான நாளையும் தவறவிட வேண்டியதில்லை. இதில் குறுந்தகவல் அனுப்ப எந்த கட்டணமும் கிடையாது.

இது சரியாக வேலை செய்யவில்லை என்றால் Calendar Settings பகுதியில் Notifications சென்று ஒரு முறை Alert ஐ நீக்கி திரும்ப சேர்த்தால் இந்த பிரச்சனை சரி ஆகி விடும்.

fb.com

grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011]facebook மின்னஞ்சல் (மாதிரியான) சேவையை தொடங்கியதை அறிந்து இருப்பீர்கள். அதனுடைய மின்னஞ்சல் சேவைக்காக fb.com தளத்தை கையகப்படுத்தியுள்ளது. மின்னஞ்சலை fb.com என்று தருவதற்காக எடுத்துக்காட்டாக giriblog@fb.com. இதற்காக facebook கொடுத்த விலை என்ன தெரியுமா அதிகமில்லை $8.5 மில்லியன் grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011] பேசாம நான் giriblog.com என்று வைத்ததற்கு fb.com ன்னு வைத்து இருந்தால் எங்கேயோ போய் இருப்பேன் grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011] நம்ம பேரும் வரலாறுல வந்து இருக்கும் LOL

Apple Store

ஆப்பிள் நிறுவனம் Apple Store அறிமுகப்படுத்தியதும் அது மிகப்பெரிய வெற்றியடைந்ததும் நம்மில் சிலர் அறிந்தது பலர் அறியாதது. சும்மா இல்லைங்க 10 பில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை செய்துள்ளது. இதில் 10 வது பில்லியனை யாரு தரவிறக்கம் செய்கிறார்களோ அவருக்கு $10,000 தருவதாக கூறி தரவிறக்கம் செய்த அதிர்ஷ்டசாலி பெண்ணுக்கு கொடுத்தும் விட்டது இதில் என்ன காமெடி என்றால் அந்த பெண் தரவிறக்கம் செய்தது கட்டண மென் பொருள் கூட இல்லை இலவச மென்பொருளாகும். அதிர்ஷ்டம் வந்தால் தாறுமாறாக வரும் என்பது இது தானோ! grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011]

Apple iPad

grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011]ஆப்பிள் iPad அறிமுகப்படுத்திய போது ஆப்பிள் நிறுவனர் Steve Jobs கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார் இந்த அளவிற்கு காட்டுத்தனமான வெற்றி பெரும் என்று. iPad வெளியிட்ட போது இதை எல்லாம் யார் வாங்கப்போகிறார்கள் என்று நினைத்தவர்கள் அதிகம் அப்படி நினைத்தவர்களின் நினைப்பில் மண்ணை அல்ல இடியை இறக்கி விட்டது இதன் மாபெரும் வெற்றி. கடந்த கிறிஸ்துமஸ் அன்று US ல் அதிகம் பேருக்கு பரிசளிக்கப்பட்ட பொருள் iPad என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தின் கடைசி நான்கு மாதங்களில் 7.3 மில்லியன் iPad விற்பனை ஆகியுள்ளது. தற்போது இங்கு சிங்கப்பூர் ல் பலர் இதனோடு தான் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இங்கேயே இப்படின்னா US எல்லாம் நினைத்தால்…

Firefox Setup 4.0 Beta 11

உலவியில் (Browser) முக்கிய உலவியான ஃபயர்பாக்ஸ் தனது அடுத்த பீட்டா வெளியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

Password

உலகிலேயே மிகவும் மொக்கையான கடவுச்சொல்லாக வைக்கப்படுவது “123456” என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீங்க இதை வைத்து இருந்தால் உடனடியாக மாற்றவும் இல்லை என்றால் விரைவில் உங்கள் கணக்கிற்கு சங்கு ஊதப்படும் grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011]

Nokia

நோக்கியா நிறுவனம் செல் ஃபோன் தயாரிப்பில் புகழ்பெற்றது அனைவரும் அறிந்தது. இந்தியாவில் அசைக்க முடியாத விற்பனையை கொண்டு இருந்தது ஆனால் தற்போது போட்டிகள் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் வருகை போன்றவற்றால் உலகளவில் லாபத்தின் அளவில் 2009 ஐ விட 2010 ல் அளவு குறைந்துள்ளது. தற்போது மேலும் ஒரு சோக செய்தியாக நோக்கியாவின் செல் ஃபோன் மென்பொருளான சிம்பியானை ஆன்ட்ராய்டு மென்பொருள் பயன்பாட்டில் விஞ்சியுள்ளது.

Google Ads

கூகிள் விளம்பரம் மிகவும் புகழ் பெற்றது கண்ணை உறுத்தாமல் படிப்பவர்களை வெறுப்பேற்றாமல் இருக்கும். தற்போது வண்ண விளம்பரங்களை அறிமுகப்படுத்தபோவதாக செய்திகள் அடிபடுகின்றன. அப்படி வந்தால் பலரின் வெறுப்பை சம்பாதிக்கக் கூடும்.

Google Releases Chrome 9 stable

grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011]உலவியில் சக்கைப் போடு போடும் க்ரோம் தற்போது தனது அடுத்த நிலையான வெளியீடான பதிப்பு 9 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். நாங்க தீவிர க்ரோம் ரசிகர் grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011]

facebook 7th anniversary

இணையத்தை தற்போது கலக்கி வரும் facebook தனது 7 வது பிறந்த நாளை கடந்த 4-2-2011 அன்று கொண்டாடியது. 2004 ம் ஆண்டு விளையாட்டாக தொடங்கப்பட்ட facebook தற்போது 550 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு உலகத்தையே கலக்கி வருகிறது. இணைய ஜாம்பவானாகிய கூகுளே கலங்கி இருப்பதே இதன் வளர்ச்சியைக் கூறும். தற்போது 50 பில்லியன் சொத்துக்களை பெற்று இருக்கிறது. பல இணைய நிறுவனங்கள் facebook உடன் இணைவதை பெருமையாக கருதுகின்றன. 2004 ல் 1 மில்லியன் பயனாளர்கள் தற்போது 550 மில்லியன் grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011]

என்னுடைய தளத்திற்கு facebook fan page வைத்த போது யார் இதில் இணைவார்கள் என்று நினைத்து கொஞ்ச நாள் வைத்து பிறகு நீக்கி விட்டேன். என் தளத்தை பதிவர்களை விட பதிவுலகிற்கு சம்பந்தம் இல்லாதவர்களே அதிகம் படிப்பதாக நான் உணர்ந்த போது மறுபடியும் இணைத்தேன். தற்போது நான் கற்பனையில் கூட நினைத்து இராத அளவிற்கு இதில் பலர் இணைந்து உள்ளார்கள்.  இன்று 1000 எண்ணிக்கையை எட்டிவிடுவேன் என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்து தமிழ் ப்ளாகர்ஸ் தனி நபர் வலைப்பூவில் (Blog) முதல் முறையாக 1000 பின்தொடர்பவர்களைப் பெறுவது நான் என்று நினைக்கிறேன் (தனி நபர் தமிழ் வலைப்பூவில் (குழு அல்ல) வேறு யாரும் இதை எட்டி இருந்தால் தெரிவிக்கவும்). இது பற்றியும் என் சில அனுபவங்களையும் பின்னர் ஒரு இடுகையில் (Post) தெரிவிக்கிறேன். இதை எட்ட உதவிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கொசுறு 1

ஊருக்கு சென்று இருந்த போது பண்ணாரி கோவிலுக்கு சென்று இருந்தேன் எங்கள் வீட்டில் இருந்து காரில் சென்றால் அதிகபட்சம் 30 நிமிடம் தான். நீண்ட நாட்களுக்கு பிறகு செல்கிறேன் கோவில் பிரகாரம் கட்டிக்கொண்டு இருந்தார்கள் மேலும் விரிவுபடுத்தப்போவதாக கூறினார்கள். இதன் வழியே செல்லும் கனரக வாகனங்கள் அல்லாது பெரும்பாலான வாகனங்கள் இங்கே நிறுத்தி பண்ணாரி அம்மனை வணங்கி விட்டே செல்கின்றனர். இங்கே இருந்து தான் வனப்பகுதி ஆரம்பிக்கிறது. கோவிலில் உட்கார்ந்து சாலையை ரசிப்பதே ஒரு தனி சுகம்.

எந்த வித அலங்காரமும் புதுமையும் இல்லாத வெறுமையான சாலை சுற்றிலும் மரங்கள் (கோவில் அருகே மரங்களே இல்லை) அதில் லோடு ஏற்றி மலை மீது திக்கித் திணறி ஏறத்தயாராகும் வாகனங்கள்.. நெற்றியில் திருநீறு சந்தனம் குங்குமம் கையில் தின் பண்டங்கள் என்று வைத்துக்கொண்டு எந்தவித பரபரப்புமில்லாமல் அளவளாவிக்கொண்டு இருக்கும் வெகுளியான மக்கள். லாரிக்கு அடியே அடித்துபோட்டதைப்போல படுத்துறங்கும் ஓட்டுனர்கள் விளையாட்டுக் காட்டும் குரங்குகள் ம்ம்ம் ரசிக்க ரொம்ப நல்ல இடம் grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011] பண்ணாரி எங்கள் பகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் பாசாங்கு இல்லாத எளிமையான இடம்.

கொசுறு 2

நான் எழுதிய ரஜினி கமல் இடுகையில் ஒருவர் “பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல பயந்துகிட்டு இணையம் பற்றிய செய்திகள், கணையம் பற்றிய செய்திகள் னு வேகமா அடுத்த வேஸ்ட் பதிவு போட்டு வழக்கம் போலே ஓடிருங்க… ” என்று கூறி (திட்டி) இருந்தார் grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011]  இந்த இடுகை எழுதியவுடன் எனக்கு அவர் நினைவு தான் வந்தது. எனக்கு சிரிப்பு தாங்கல.. grey இணையம் பற்றிய செய்திகள் [11 02 2011]

{ 10 comments… add one }

 • Chitra Solomon February 11, 2011, 10:39 AM

  நல்ல தொகுப்பு! பயனுள்ளவையும் கூட.. பகிர்வுக்கு நன்றிங்க.

 • manimuthu.s February 11, 2011, 4:33 PM

  பயனுள்ள தளம்.வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி.பயனடைவோர் சார்பாக பாராட்டுக்கள்.

 • மாணவன் February 11, 2011, 5:22 PM

  அண்ணே, அசத்தல் பதிவு.. மிகவும் பயனுள்ள தகவல்கள்
  இணையம்பற்றி இவ்வளவு விசயங்கள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க சூப்பர்.. உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்… :)

  பகிர்வுக்கு நன்றி

 • Logan February 11, 2011, 6:47 PM

  பயனுள்ள தகவல்கள் கிரி

  //”giriblog.com என்று வைத்ததற்கு fb.com ன்னு வைத்து இருந்தால் எங்கேயோ போய் இருப்பேன்”// :)

  // facebook fan பேஜ் // வாழ்த்துக்கள் கிரி

 • Devarajan February 11, 2011, 7:36 PM

  தெரிந்த மற்றும் தெரியாத சிறு விஷயங்களாக இருந்தாலும் படிப்பதற்கு சுவாரசியமான நடையில் எழுதுகிறீர்கள்.தொடரட்டும் உங்கள் பதிவுலக பணி. :)

 • Arun February 12, 2011, 12:44 AM

  நல்லா இருக்கு கிரி. இப்ப தான் உடம்பு கொஞ்சும் சரி ஆச்சு. உங்க எல்லா பதிவும் படிச்சுட்டேன் ரொம்ப நல்லா இருக்கு தல

  – அருண்

 • Rajinikanth Videos February 13, 2011, 1:50 PM

  Good Info… Thanks for posting…….

 • வால்பையன் February 14, 2011, 9:08 AM

  அண்ணே ஆயிரம் பாலோயர்ஸ்னு சொன்னிங்க அதுக்கு வாழ்த்துக்கள்!

  அது எங்கண்ணே, ப்ளாக்குலயா இல்ல ஃபேஸ்புக்குலயா!?

 • கிரி February 14, 2011, 10:10 AM

  சித்ரா மணிமுத்து மாணவன் லோகன் தேவராஜன் அருண் ரஜினிகாந்த் வீடியோ மற்றும் அருண் வருகைக்கு நன்றி

  @அருண் உடம்பை கவனிங்க… அப்புறம் மெயில் பண்றேன்.

  @அருண் :-) ப்ளாக் ல இருக்குற facebook ல ஹி ஹி இது எப்பூடி! அருண் இது எப்படின்னா நம்முடைய facebook கணக்கு மாதிரி நம்ம Blog க்கும் ஒரு பேஜ் உருவாக்கிக்கொள்ளலாம் லைக் Google Friend Connect அதனால இதற்கும் நம்முடைய வழக்கமான facebook கணக்கிற்கும் சம்பந்தமில்லை.

  நம்முடைய facebook கணக்கில் நண்பர்களாக இல்லாதவர்கள் கூட இதில் பின்தொடர்பவராக இணைந்து கொள்ளலாம். இது முழுக்க முழுக்க நம்முடைய தளத்திற்காக மட்டுமே. இதை நீங்கள் ஒரு செலிபிரிட்டி என்றால் உங்களுக்கு கூட இதை வைத்துக்கொள்ளலாம். யார் வேண்டும் என்றாலும் இதை அமைக்கலாம் சரியான கேட்டகிரியில் :-) ஓகே வா!

  உங்களுக்கு சுருக்க சொல்றதுன்னா தமிழச்சி முன்பு வைத்து இருந்தது facebook கணக்கு தற்போது வைத்து இருப்பது facebook fan page. இதில் எந்த வரைமுறையும் கிடையாது facebook கணக்கில் 5000 நண்பர்கள் வரை மட்டுமே இருக்க முடியும்.. ஆனால் facebook fan page ல் எந்த வரைமுறையும் இல்லை.

  ஸ்ஸ்ஸ் ஒரு சோடா குடுங்க :-)

 • manikandan.A March 1, 2011, 9:39 AM

  தலைவா சூப்பர், அருமையான செய்திகளை சொளுரிங்க எங்களுக்கு பயனுள்ளதாக இருக்குது.

Leave a Comment