ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

by கிரி on February 17, 2011

ணைய உலகில் ஜாம்பவானான கூகுள் எத்தனை வளர்ச்சி பெற்றாலும் தன்னுடைய புதிய முயற்சிகளை என்றும் கை விடுவதில்லை தொடர்ந்து புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. போதும் என்று என்றும் நினைப்பதில்லை இதன் காரணமாகவே நீண்ட காலமாக நிலைத்து இருக்கிறது. இந்த போட்டி மிகுந்த உலகத்தில் இவ்வளவு காலம் தொடர்ந்து முன்னணியில் இருப்பது என்பது சாதாரண விசயமில்லை.

தொழில்நுட்ப பதிவுகளை எழுதும் போது கூகுளை பாராட்டி எனக்கு சலிப்பே வந்து விட்டது எத்தனை முறை தான் பாராட்டுவது என்று icon smile ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி! இது எப்படி இருக்கு என்றால் ஒரு சிலர் எது எழுதினாலும் ரொம்ப நல்லா எழுதுவாங்க அவர்களை நாம் எத்தனை முறை தான் நன்றாக எழுதறீங்க என்று பாராட்டுவது அது மாதிரி தான்.

சரி விசயத்திற்கு வருகிறேன்! கூகுள் பாதுகாப்பு விசயத்தில் எப்போதும் முன்னணியில் இருக்கிறது. அது தன்னுடைய மின்னஞ்சல் சேவையான ஜிமெயில்க்கு ஏற்கனவே பல பாதுகாப்பு வசதிகளை வழங்கி வருகிறது அதில் குறிப்பிடத்தக்கது https வசதி. தற்போது இதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி ஒரு வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அது இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

ஜிமெயில் உள்ளே நுழையும் போது நாம் கடவுச்சொல் (Password) கொடுப்பது வழக்கமான ஒரு விஷயம் ஆனால் இதை எல்லாம் எளிதாக உடைத்து நமது கணக்கை ஹேக் செய்து முடக்கி விடுகிறார்கள். இதனால் மின்னஞ்சல் சேவை மட்டுமல்ல பல கணக்குகளை இழந்து விடுகிறோம் காரணம் கூகுள் Single Sign on முறையில் இயங்குகிறது அதாவது Docs, Analytics, Blogger, Search, Mail, Picasa, Calendar, You Tube, Feed Burner, Reader, Chat, Orkut என்று அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு விடும். ஒரு கடவுச்சொல் ஆனால் நாம் இழப்பது எத்தனை பாருங்கள் icon sad ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

ஹேக்கிங் பற்றிய நான் எழுதிய “ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?” இடுகையை (Post) படிக்கவும்.

இதனால் கூகுள் கணக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதை கூகுள் ம் நன்கு புரிந்துள்ளது எனவே தான் அடிக்கடி தனது பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்து வருகிறது தற்போது செய்து இருப்பது அட்டகாசமான சேவை ஆகும். எப்படி கடவுச்சொல்லை வைத்தாலும் நம்ம ஆளுங்க ஆட்டையை போட்டு விடுவதால் தற்போது அடுத்ததாக மொபைல் கடவுச்சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் வழக்கமாக கொடுக்கும் கடவுச்சொல்லை கொடுத்த பிறகு உங்களுக்கு SMS ல் இன்னொரு code வரும் அதையும் கொடுத்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். இதன் மூலம் மற்றவர்கள் நுழைவது தடுக்கப்படும். சுருக்கமாக கூறினால் வங்கிக் கணக்கில் நுழைவதற்கு ஒரு சில வங்கிகள் இதைப்போல முறையை பயன்படுத்துகின்றன.

இது கட்டாயமா?

இல்லை. விருப்பமானவர்கள் வைத்துக்கொள்ளலாம் வேண்டாம் என்பவர்கள் பழைய முறையையே தொடரலாம்.

இதை எப்படி செயல்படுத்துவது?

உங்களுடைய கூகுள் கணக்கின் Account Settings ல் சென்றால் பின்வரும் படத்தில் உள்ளது போல இதை செயல்படுத்த வசதி இருக்கும் அதை க்ளிக் செய்து இதை ஏக்டிவேட் செய்து கொள்ளலாம்.

Gmail account settings ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

என்னுடைய கணக்கில் இன்னும் இது வரவில்லையே என்ன செய்வது?

கூகுள் ஒவ்வொரு பகுதியாக இதை upgrade செய்து வருகிறது. எனவே உங்களுக்கு இந்த வசதி இல்லை என்றால் விரைவில் வரும் எனவே பொறுமையாக இருக்கவும்.

ஒருவேளை என்னுடைய மொபைல் தொலைந்து விட்டால் என்ன செய்வது?

இதற்காகவே கூகுள் Backup mobile வசதி கொடுத்துள்ளது. நீங்கள் உங்களுடைய இன்னொரு மொபைல் எண்ணை அல்லது உங்களது நம்பகமான நபரின் மொபைல் எண்ணை இதில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். இது மிகவும் சிறப்பான வசதியாகும். ஒரு மொபைல் போனாலும் இன்னொரு மொபைல் மூலம் நாம் code பெற முடியும்.

இதை செயல்படுத்த எவ்வளவு நேரமாகும்?

அதிகபட்சம் 15 நிமிடம் ஆகலாம்.

நான் ஒரு நாளைக்கு பல முறை லாகின் செய்வேன் அதனால் ஒவ்வொரு முறையும் இதைப்போல SMS மூலம் code பெற்று நுழைய வேண்டுமா?

தேவையில்லை. நீங்கள் பயன்படுத்தும் கணிப்பொறியில் 30 நாட்களுக்கு இதைப்போல கேட்க வேண்டாம் என்று அதில் சேமிக்க முடியும். எனவே அடிக்கடி இதைப்போல செய்ய வேண்டுமே என்று கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த வசதியை கூகுள் முதலில் Google Apps பயனாளர்களுக்கு மட்டும் கொடுத்து இருந்தது தற்போது இதை அனைவருக்கும் விரிவு படுத்தியிருக்கிறது. எனவே ஏற்கனவே இது பலரால் பயன்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது அதன் காரணமாகவே இதை கூகுள் அனைவருக்கும் விரிவு படுத்தியிருக்கிறது. எனவே நீங்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

இந்த வசதியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்

Gmail and Chat Notifications

கூகுள் தரும் அடுத்த வசதி இது. இதை நாம் செயல்படுத்தினால் நமக்கு மின்னஞ்சல் (மற்றும் chat message) வந்தால் நமக்கு Pop Up முறையில் நமக்கு வந்துள்ள மின்னஞ்சலை தெரிவிக்கும் இதன் மூலம் நாம் அடிக்கடி உலவியை திறந்து பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதை நான் பயன்படுத்தி வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இதை எப்படி செயல்படுத்துவது?

Gmail Settings –> General –> Desktop Notifications

Notifications ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

கொசுறு

நடு நிசி நாய்கள்

Nadu Nisi Naigal ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!தற்போது தான் யுத்தம் செய் த்ரில்லர் படம் பார்த்தேன் அந்த படத்தின் சூடே குறையவில்லை அதற்குள் அடுத்த த்ரில்லர் படமும் கவுதம் மேனனின் குறைந்த பட்ஜெட் படமான “நடு நிசி நாய்கள்” வருகிறது. எனக்கு எப்போதும் கவுதம் மேனன் படம் ரொம்ப பிடிக்கும் (பச்சைக் கிளி முத்துச்சரம் என்ற அட்டக் காப்பியை தவிர) ரொம்ப ரசனையாக எடுப்பார் பாடல்கள் எல்லாம் இவரது படங்களில் ரசனையாக படமாக்கப்பட்டு இருக்கும். இவரை பிடிக்காதாவர்கள் நிறைய உண்டு icon smile ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

இந்தப்படத்தின் ஹீரோ அவரது உதவியாளர் ஆவார். படம் எப்படி இருக்கிறது என்பதை அறிய சிலருக்கு இதை போட்டுக்காட்டினாராம் படம் பார்த்த அனைவரும் படத்தின் ஹீரோவை பார்க்கவே பயப்படுகிறார்களாம். அந்த அளவிற்கு மிரட்டி இருக்கிறார்களாம். இந்தப்படத்தின் கரு ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவருடைய பேஷன்ட் ஒருவரை பற்றி கூறிய போது உருவாகியதாம். இது ஒரு உண்மைக்கதை படத்துக்காக சில மாற்றங்களுடன்.

ட்ரைலர் எல்லாம் பார்த்தால் ரணகளமாக இருக்கிறது. கண்டிப்பாக கவுதம் மேனன் மொக்கையாக எடுக்காமல் வித்யாசமாக நிஜமாகவே ஒரு நல்ல த்ரில்லர் படமாக எடுத்து இருப்பார் என்று நம்பலாம். தமிழில் மாடர்ன் த்ரில்லர் படங்கள் வந்ததில்லை (முன்பு பாரதிராஜா இயக்கி கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்தை கூறலாம்) அதை “நடு நிசி நாய்கள்” நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.

நாளை இந்தப்படம் வெளியாகிறது. சைக்கோ படம் வன்முறைப் படம் என்ற குறுகிய வட்டத்தில் படத்தை காலி பண்ணிடாதீங்க மக்களே! icon smile ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி! வித்யாசமான முயற்சிகளை ஆதரியுங்கள் (ஹாலிவுட் ல இருந்து காட்சிகளை சுட்டு இருக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக). எத்தனை நாளைக்கு தான் குத்து பாடல்களையும் பன்ச் வசனங்களையும் சென்டிமென்ட்டையுமே பார்த்துக்கொண்டிருப்பது.

Subscribe to கிரி Blog by Email

feed icon16x16 ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி! Subscribe in a reader

கிரி Blog facebook Fan page ல் இணைய

Related posts:

  1. “Priority Inbox” ஜிமெயிலின் புதிய வசதி!
  2. facebook பாதுகாப்பு வசதி!
  3. இணையம் பற்றிய செய்திகள் [09-09-2010]
  4. இணையம் பற்றிய செய்திகள் [20-09-2010]
  5. இணையம் பற்றிய செய்திகள் [05-10-2010]

{ 15 comments… read them below or add one }

Chitra Solomon February 17, 2011 at 10:48 AM

ஜிமெயில் நியூஸ் – தேவையான ஒன்று….
தமிழ் படங்கள் பார்க்கும் வரை…. எதிர்பார்ப்பு வச்சுக்கிறதில்லை…. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி….

Reply

மாணவன் February 17, 2011 at 11:54 AM

புதுமையான பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணே :)

Reply

breeze February 17, 2011 at 1:09 PM

Thanks giri for sharing useful information. After watching VTV, I’ve become die hard fan of Gowtham. Let’s see how’s directed NNN. Hope it won’t be பதேடிக்.

Reply

breeze February 17, 2011 at 1:10 PM

Thanks giri for sharing useful information. After watching VTV, I’ve become die hard fan of Gowtham. Let’s see how’s directed NNN. Hope it won’t be pathetic.

Reply

maduraisaravanan February 17, 2011 at 11:02 PM

//தொழில்நுட்ப பதிவுகளை எழுதும் போது கூகுளை பாராட்டி எனக்கு சலிப்பே வந்து விட்டது எத்தனை முறை தான் பாராட்டுவது என்று இது எப்படி இருக்கு என்றால் ஒரு சிலர் எது எழுதினாலும் ரொம்ப நல்லா எழுதுவாங்க அவர்களை நாம் எத்தனை முறை தான் நன்றாக எழுதறீங்க என்று பாராட்டுவது அது மாதிரி தான்.//

unamai .. ungkal itukai arumai. vaalththukkal

Reply

Arun February 18, 2011 at 2:00 AM

நல்ல பகிர்வு கிரி நன்றி

Reply

Logan February 18, 2011 at 9:52 AM

பயனுள்ள தகவல்கள், நன்றி கிரி

Reply

நட்புடன் ஜமால் February 18, 2011 at 12:01 PM

ஏற்கனவே செய்து விட்டேன் என்றாலும் நீங்கள் சொல்லியிருக்கும் விதம் ரொம்ப எளிதாக இருக்கு கிரி

Reply

கிரி February 19, 2011 at 1:49 PM

சித்ரா, மாணவன், Breeze, மதுரை சரவணன், அருண், லோகன் மற்றும் ஜமால் வருகைக்கு நன்றி

@சித்ரா :-) உஷாரா சொல்லிட்டீங்க! எல்லோரும் நடுநிசி நாய்கள் படத்தை போட்டு காய்ச்சி எடுத்துட்டு இருக்காங்க. ஹி ஹி நாங்க சிங்கம்ல கண்டிப்பா பார்ப்போம்.

@Breeze நீங்க VTV நினைப்புல இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் ;-) எல்லோரும் கண்டபடி திட்டிட்டு இருக்காங்க. உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல.. நான் இன்று செல்கிறேன்.

@ஜமால் நானும் செய்து விட்டேன்.. கொஞ்ச நாள் பயன்படுத்திய பிறகு தான் எப்படி இருக்கிறது என்று கூற முடியும்.

Reply

raaj February 20, 2011 at 2:04 PM

//எல்லோரும் நடுநிசி நாய்கள் படத்தை போட்டு காய்ச்சி எடுத்துட்டு இருக்காங்க. // ஆமா இவங்க தான் சினிமாவ கண்டுபிடிச்ச மாதிரி !!! நீங்க பாத்துட்டு எழுதுங்கண்ணே !!!

Reply

shirdi.saidasan February 20, 2011 at 4:35 PM

ஃபேஸ்புக் லைக் பட்டன் வலைப்பூவில் எப்படி சேர்ப்பது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

Reply

கிரி February 20, 2011 at 7:13 PM

@ராஜ் நாளைக்கு எழுதறேன் “விளக்கமா” :-)

@பிரபு இந்த சுட்டில போய் பாருங்க. http://www.bloggerplugins.org/2010/04/facebook-like-button-for-blogger.html

Reply

Dinesh February 25, 2011 at 9:18 PM

ரொம்ப நாள் கழிச்சு உங்க ப்ளாக் பக்கம் வர்றேன். வழக்கம் போல பதிவு அருமை.

இப்புடியே எழுதிகிட்டே இருந்தா… அப்புறம் கூகுல் நிலைமை தான் உங்களுக்கும்.

அப்போ அப்போ கொஞ்சம் மொக்கை பதிவும் போடுங்கள்… குறைந்த பட்சம் அஞ்சு மைனஸ் ஒட்டு விழுற மாதிரி…

Reply

sivasailan February 27, 2011 at 2:02 AM

கிரி அண்ணே …உங்களுடய ரெட்டை அடுக்கு பாதுகாப்பு பற்றி படித்தேன் ரொம்ப அருமை… நடுநிசி நாயகன் பாக்குரங்குவளுக்கு இந்த பாதுகாப்பு கெடைக்குமா…ப்ளீஸ் கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள்…..அன்பு தம்பி சிவா

Reply

கிரி March 1, 2011 at 8:05 AM

@தினேஷ் நன்றி :-)

@சிவா டேய்! அது நடுநிசி நாய்கள் டா நாயகன் இல்லை.. உன்னை முதல்ல இந்த நாயை விட்டு கடிக்க விடனும்.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed