ரஜினியின் பெருந்தன்மை நிச்சயம் கமலுக்கு இல்லை!

December 28, 2010

ஜினி என்ற நடிகனை விட அவருடைய தன்னடக்கம் பெருந்தன்மை எளிமை அனைவரிடமும் பந்தா இல்லாமல் பழகும் குணம் போன்றவற்றிக்கு ரசிகர்கள் அதிகம். இதை அவர் இதற்காக செய்ய வேண்டும் என்று செய்வதில்லை அவருடைய இயல்பே அது தான். ரஜினியைப்போல அமைதியாக இருக்க ஒரு சிலர் முயற்சித்தாலும் அல்லது அவரைப்போல நடக்க முயற்சித்தாலும் அது நடிப்பாகவே தெரிவதால் மக்களிடம் அவர்களால் ரஜினியைப்போல நன்மதிப்பை பெற முடிவதில்லை.

மற்றவர்களின் படங்களைப்பாராட்டி அவர்களுக்கு ஊக்கம் தருவதில் ரஜினியை மிஞ்ச யாருமே இல்லை இதைக்கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமுமில்லை. கலைஞரோட பெண் சிங்கம், தனுஷ் படங்கள் உட்பட பல மொக்கைப்படங்களை ரஜினி வேறு வழி இல்லாததால் பாராட்ட வேண்டி வரும் ஆனால் அவை எல்லாம் தவிர்க்க முடியாத விஷயங்கள். படம் பார்த்து வருபவர்களிடம் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படம் எடுத்தவர்கள் மனம் வருத்தப்படக்கூடாது என்று சம்பிரதாயமாக கூறும் வார்த்தைகள்.

ரஜினி உண்மையிலேயே அது சிறந்த படமாக இருந்தால் அந்தப்படக்குழுவினரை தனியாக அழைத்து பாராட்டி கவுரவிப்பார் அந்தப்படத்தைப் பற்றி தனது எண்ணங்களைக் கடிதமாக அனுப்பி வைப்பார். இது தான் சம்பிரதாய பாராட்டிற்கும் உண்மையான பாராட்டிற்கும் உள்ள வித்யாசம். எடுத்துக்காட்டாக நான் கடவுள், வெண்ணிலா கபடிக்குழு சமீபத்திய மைனா வரை பல நல்ல படங்களைக் கூறலாம். அதிலும் குறிப்பாக மைனாவை கூறலாம் தனது மருமகன் படம் உடன் வெளியாகி இருந்தும் மைனாவை மனம் திறந்து பாராட்டி எழுதியது குறிப்பிடத்தக்கது.

விசயத்திற்கு வருகிறேன்..

grey ரஜினியின் பெருந்தன்மை நிச்சயம் கமலுக்கு இல்லை!ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தொழில்முறையில் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் தங்களின் கருத்து வேறுபாடுகளை என்றும் தங்களுடைய நட்பில் போட்டுக்குழப்பிக் கொள்வதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கமலின் திரையுலகம் 50 ஐ குறிப்பிடலாம். இதில் இருவருமே பேசிய பேச்சுகள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு விஷயம்.

ஆனால் ரஜினி எப்போதுமே கமலை விட ஒருபடி உயர்வாக தன்னுடைய நட்பை வெளிப்படுத்தி வருகிறார். அது திரைப்படமாக இருக்கட்டும் பொது வாழ்க்கை ஆகட்டும் எப்போதும் கமலை விட்டுக்கொடுத்ததில்லை. ஒரு உண்மையான நல்ல நட்பிற்கு இலக்கணமாக திகழ்கிறார். திரைப்படம் என்றால் பல படங்களைக் கூறினாலும் எடுத்துக்காட்டாக சிவாஜியில் முல்த்தானி மெட்டியில் குளித்து விட்டு “கமலஹாசன் மாதிரி வரப்போகிறேன்” என்று கூறுவதும் சமீபத்திய எந்திரன் படத்தில் கமலுடைய தொலைபேசி எண்ணை ரோபோ சொல்லும் போது அது அனைவருக்கும் தெரியும் என்று கூறுவதிலும் எப்போதும் கமலை இணைத்தே வந்து இருக்கிறார்.

இவை எல்லாம் இயக்குனர் வைத்தக்காட்சி என்று ஒரு சிலர் கூறினாலும் அதை ரஜினி அனுமதிக்கவில்லை என்றால் வர வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ரஜினியின் விருப்பமில்லாமல் இன்னொரு நடிகரைப்பற்றி வசனம் வர வாய்ப்பில்லை இது ரஜினி என்றில்லை அனைத்து பிரபல நடிகர்களுக்கும் பொருந்தும். இதைப்போல கமலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை அப்படி எதிர்பார்ப்பதும் ஒரு அர்த்தமற்ற செயல். ஏனென்றால் ஒவ்வொருவொருவருக்கும் ஒவ்வொரு கோட்பாடுகள் இருக்கும் அதன் படி நடப்பார்கள் அதில் நாம் ரஜினி வைக்கும் போது கமல் ஏன் வைக்கக்கூடாது என்று கேட்பது நியாமான ஒன்றில்லை.

கமல் படம் என்று வெளியானாலும் ஆர்வமாக சென்று பார்த்து அதைப் பாராட்டி அது நன்றாக உள்ளதோ இல்லையோ அவருக்கு ஒரு உற்சாகமான வார்த்தையைக் கூறி அவரை பாராட்டுவார். தனக்கு நெருக்கமில்லாத அறிமுகமில்லாத இயக்குனர் படங்கள் வெளிவந்தாலே அதைப்பாராட்டுபவர் அப்படி இருக்கும் போது தன்னுடைய நெருங்கிய நண்பன் படம் வரும்போது பாராட்டாமல் இருப்பாரா! அதை இது வரை தவறவிடாமல் பாராட்டி வருகிறார். பாராட்டி வருகிறார் என்பது பொய் என்று சிலர் நினைத்தாலும் கமலுக்கு உற்சாகம் கொடுக்கிறார் என்ற வாதத்தை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் கமல் இன்று வரை ரஜினியின் எந்திரன் படத்தை பாராட்டவில்லை படம் வெளிவந்து நீண்ட நாட்களுக்குப்பிறகு அவரிடம் எடுத்த பேட்டியில் பின்வருமாறு கூறி இருக்கிறார். தமிழ்படுத்தினால் அர்த்தம் மாறலாம் என்று அப்படியே கொடுத்து இருக்கிறேன்.

Robot” is successful not because of the content, but due to the marketing strategy and of course, Rajini is a saleable star. Huge-budget films are good as long as they have solid content Link

கமல் உங்களுக்கு எப்படி இதைப்போல கூற முடிந்தது! விளம்பரத்தால் ஒரு படம் வெற்றி பெற முடியும் என்றால் அடிக்கடி விளம்பரப்படுத்தப்பட்ட சன் பிக்சர்சின் “வேட்டைக்காரன்” “சுறா” போன்ற படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை? கண்டிப்பாக படம் என்றில்லை எதற்கும் ஒரு விளம்பரம் அவசியமே ஆனால் அது மட்டும் ஒருவருக்கு வெற்றியைத் தந்து விடாது என்பது நிரூபிக்க எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும். ஒருபடத்தின் கதையும் திரைக்கதையும் சரியாக அமைந்தால் மட்டும் ஒரு படம் வெற்றி பெற முடியும்.

உங்களின் மன்மதன் அம்பு படத்திற்குக் கூட இந்தியாவில் இருந்து பலரை மலேசியா அழைத்து வந்து அங்கே இருந்து சிங்கப்பூருக்கு சொகுசு கப்பலில் அழைத்து வந்து பிரம்மாண்டமாக பாடல் வெளியீட்டு விழா நடத்தினீர்கள். தமிழகத்தில் எப்படியோ இங்கே சிங்கப்பூர் உள்ளூர் தொலைக்காட்சியில் வார இறுதியில் உங்கள் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியைத் தான் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தார்கள். இது இல்லாமல் விஜய் டிவி யில் சிறிது நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் வந்து படத்தைப் பற்றிக் கூறிக்கொண்டு இருந்தீர்கள். எந்திரன் அளவிற்கு இல்லை என்றாலும் அதற்கு போட்டியாக விளம்பரம் செய்து கொண்டு இருந்தீர்கள். இந்த அளவிற்கு விளம்பரம் செய்யப்பட்ட உங்கள் பாணியில் கூற வேண்டுமென்றால் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட உங்கள் மன்மதன் அம்பு படம் எப்படிப் போகிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் உங்கள் படத்தை வாங்கிய ஜெமினி பிலிம் நிறுவனத்தை கேட்டுப்பாருங்கள் விளக்கமாக கூறுவார்கள்.

ரஜினி ஒரு விற்பனை மதிப்புள்ள நபர் தான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அப்படி நீங்கள் நினைக்கும் ரஜினி நடித்த பாபா மற்றும் குசேலன் படம் ஏன் வெற்றி பெறவில்லை? உங்களை விட உங்கள் நண்பர் ரஜினி இதை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார் அதனால் தான் குசேலன் படத்தின் ஒரு காட்சியில் “யார் நடித்தாலும் படம் சரி இல்லை என்றால் மக்கள் படத்தை புறக்கணித்து விடுவார்கள்” என்று கூறி இருப்பார். எனவே யாராக இருந்தாலும் கதையும் திரைக்கதையும் இல்லை என்றால் படம் பப்படம் தான்.

ரஜினி கமலின் மன்மதன் அம்பு படத்தை விருப்பமாக கேட்டுப் படம் வெளியான நாளுக்கு ஒரு நாள் முன்பு பார்த்து அவரை உற்சாகப்படுத்தினார். கமல் ரஜினியின் அனைத்து படங்களையும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமான ஒன்று. ஒரு குசேலன் படத்தையோ பாபா படத்தையோ அல்லது பக்கா மசலாப்படமான சிவாஜி படத்தையோ பாராட்டக் கூறி எதிர்பார்க்கவில்லை ஆனால் எந்திரன் படம் அப்படி அல்ல.

கஷ்டப்பட்டு நடிக்கும் நடிகருக்கு எடுத்துக்காட்டாக கமலைத்தான் கூறுவார்கள் தற்போது சூர்யா போன்று ஒரு சில இளம் நடிகர்களும் வந்து விட்டாலும் இன்றும் பலரின் நினைவிற்கு வருவது கமல் தான். மிகவும் கஷ்டப்பட்டு பல மணி நேர மேக்கப் போட்டு மிகவும் சிரத்தையாக நடிப்பார் அதைப்பற்றி பேட்டியும் கொடுத்து இருப்பார். எனக்கு இன்று வரை கமலின் மேக்கப் என்றால் நினைவிற்கு வருவது அன்பே சிவம் படம் தான் பல கோடி செலவழித்து எடுக்கப்பட்ட தசாவதாரம் படத்தின் மேக்கப்பை விட 100 மடங்கு சிறந்த ஒன்றாகும்.

grey ரஜினியின் பெருந்தன்மை நிச்சயம் கமலுக்கு இல்லை!ரஜினி மேக்கப் போட சிரமம் எல்லாம் எடுப்பதில்லை அதற்கு காரணம் ரஜினி தேர்ந்தெடுக்கும் கதைகள் அப்படி. இதைப்போல ரஜினியின் படத்திற்கு எந்திரன் படத்தைக் கூறலாம். பல மணிநேரம் மேக்கப் போட எடுத்துக்கொண்டார். சன் டிவி பேட்டியில் கூட “இரண்டு மணி நேரத்துல பானு மேக்கப் போட்டுடுவாங்க” என்று கூறிய போது நான் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. இரண்டு மணி நேரம் என்பது என்ன இரண்டு நிமிஷமா! எளிதாகக்கூற. தான் கஷ்டப்படுவதை பட்டதை என்றுமே பெருமையாக கூறிக்கொண்டதில்லை அதனால் தான் என்னவோ 7 மணி நேரம் அசையாமல் ரோபோ கதாப்பாத்திரத்திற்க்காக போட்ட மேக்கப்பைக்கூட கூறியதில்லை. மேக்கிங் ஆஃப் எந்திரன் மட்டும் சன் டிவி வெளியிடவில்லை என்றால் ரஜினி பட்ட சிரமம் எவருக்குமே தெரிந்து இருக்காது.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பெண்கள் பலர் இவர் எதுக்கு எவ்வளோ கஷ்டப்படனும் என்று தான் நினைத்தார்கள். ரசிகர்கள் எல்லாம் வாயடைத்து விட்டார்கள் எவருமே ரஜினி இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் மட்டுமல்ல ரசிகர்கள் அல்லாதவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்வார்கள். இவ்வளவு சிரமப்பட்டு ரஜினி நடித்த படத்தை இந்திய அளவில் ஒரு தமிழ் படத்தை உயர்த்திய, வசூலில் இந்தியாவில் தற்போதைய நிலவரத்திற்கு முதல் இடத்தில் உள்ள ஒரு தகுதியான படத்தை குறைந்த பட்சம் கூட பாராட்டாமல் கூறியதைக் கூட ஏனோ தானோவென்று கமல் கூறியதை என்னவென்று கூறுவது!

ரஜினி ஏன் எப்போதும் மக்களால் ரசிக்கப்படுகிறார்! அனைவராலும் புகழப்படுகிறார் என்பதற்கு காரணம் அவரின் பெருந்தன்மையும் ஒன்றாகும் கமல் தனிப்பட்ட முறையில் ஒருவேளை ரஜினியைப் பாராட்டி இருக்கலாம் ஆனால் ஒருவரை இதைப்போல விசயங்களில் அனைவர் முன்பும் பாராட்டுவதே சிறப்பாகும். நம்முடைய அலுவலகத்தில் கூட நம்மை தனியாக அழைத்துப் பாராட்டுவது எப்படி அனைவர் முன்பும் பாராட்டுவது எப்படி! இதை எல்லாம் ரஜினி என்றும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அவரைப்போல அவரது ரசிகர்களும் இருப்பதில்லை.

நண்பேன்டா! என்ற வார்த்தைக்கு முழுத்தகுதியானவர் ரஜினி மட்டுமே! கமல் சிறந்த நடிகராக இருக்கலாம் நல்ல மனசு, நட்பு என்று வந்தால் அங்கே சந்தேகமில்லாமல் ரஜினியே அனைவரின் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.

கொசுறு 1

எப்போதுமே ஒருவரே ஆட்சி செய்ய முடியாது என்பது ஆஸ்திரேலியா இங்கிலாந்திடம் ஆஷஸ் தொடரில் வாங்கும் அடியை பார்த்தால் உறுதியாகிறது. நீண்ட வருடங்களுக்குப்பிறகு 98 க்கு முதல் இன்னிங்க்சில் காலியாகி இருக்கிறார்கள். சனி திசை பலமாக இருக்கு grey ரஜினியின் பெருந்தன்மை நிச்சயம் கமலுக்கு இல்லை! வார்னே மெக்ராத் ஓய்விற்க்குப்பிறகு ஆஸி தர்ம அடி வாங்கி வருகிறது. ரொம்ப வலிக்குது வாங்க வார்னே மறுபடியும்! என்று அழைத்துப்பார்த்தால் ம்ஹீம் முடியவே முடியாது நானே ஏற்கனவே குடும்ப சிக்கல்ல இருக்கேன் என்று கையை விரித்து விட்டார். ஆஸி அணி தற்போது கையை பிசைந்துகொண்டுள்ளது. எனக்கு கொண்டாட்டமாக உள்ளது.. என்ன பேச்சு பேசுனாங்கடா யப்பா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா! grey ரஜினியின் பெருந்தன்மை நிச்சயம் கமலுக்கு இல்லை!

கொசுறு 2

இந்த மொன்னை சன் டிவி பாலச்சந்தர் ரஜினி பேட்டியை சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி விளம்பரம் செய்துவிட்டு கடைசி வரை போடவே இல்லை. சனிக்கிழமை எப்படியும் போட மாட்டார்கள் என்று தெரியும் ஆனால் இந்த வெண்ணை வெட்டிக ஞாயிற்றுக்கிழமையும் போடாம கடுப்படிச்சு விட்டுட்டானுக… கிர்ர்ர்ர்

கொசுறு 3

அலுவலகத்தில் பொறுப்பு கூடுதல் ஆகி விட்டதால் செம டென்ஷன் ஆக உள்ளது. அனைத்து பக்கமும் இருந்தும் இடி வாங்கிக்கொண்டு இருக்கிறேன் தினம் தினம் ரணகளமாக இருக்கிறது. திங்கள் அலுவலகம் போவதென்றால் எதோ பள்ளிக்கு போகிற மாதிரி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மாலையானால் என் மனைவி நாளை திங்கள் என்று நினைவுபடுத்தி நக்கல் அடித்துக்கொண்டுள்ளார் அந்த அளவிற்கு நொந்து போய் உள்ளேன். இதனால் பதிவு எழுத நேரமே இல்லை இருந்தாலும் இருக்கிற கடுப்பில் இதை வேற எவன்டா எழுதுவது என்று தான் தோன்றுகிறது. இன்னும் ஐந்தாறு மாதத்திற்கு இதே போல ஆப்பு எனக்கு தொடரும். என்ன கொடுமை சார்!

கொசுறு 4

இவர்களுக்கு முருகன் மேல என்ன கோபமோ! பாருங்க பார்த்துட்டு நீங்க சொல்லுவீங்க என்ன கொடுமை முருகா! என்று அவ்வ்வ்வ்

{ 134 comments… read them below or add one }

keerthivasan March 8, 2012 at 9:36 AM

கமல்ஹாசன் என்றுமே காமம் மண் (common man ) பற்றி கவலை படுவதில்லை. நீங்கள் ஷ்யாம் பெனேகல் , சத்யஜித் ரே இவர்கள் படங்களை பாமரன், பாலாஜி கணேஷ், மற்றும் கமல் வெறியர்களே, நீங்கள் அனைவரும் ஒரு தடவை பாருங்கள். இவர்கள் படங்கள் என்றுமே common man problem பற்றி தான் பேசும். அவர்கள் சண்டை, மற்றும் பாடல் இல்லாத படங்கள் தான் edukirargal , அவர்கள் படங்கள் calcutta வில் வெற்றி adaiyuim . உங்கள் கமல் படங்கள் அதை பார்க்கும் பொது வெறும் pappandangal தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கமல் அறிவு ஜீவி இல்லை என்பதை உங்கள் மறை மண்டைக்கு எப்படி புரிய வைப்பது என்றே புரியவில்லை. ரஜினி கட் அவுட் வைக்க சொல்லவில்லை, அவர் படங்கள் common man problem பற்றி தான் சொல்கிறது, என்ன, மசாலா vishaynagal கொஞ்சம் அதிகம், அதை அவர் சரி செய்தாலே போதும். அவருக்கு MGR ரசிகர்கள் அதிகம், அதனால் அவர் ரிஸ்க் எடுபதில்லை. அனால் உங்கள் கமல் என்றுமே மக்கள் பற்றி கவலை பட்டதில்லை. அவர் தான் ரசிக கண்மணிகளை பற்றி மட்டும் தான் கவலை படுவார், ஏனென்றால், நீங்கள் தானே அவருடைய தீவிர வெறியர்கள், உங்களை பயன் படுத்தி தன் வயிறு வளர்க்கும் முறை.

Reply

பாமரன் March 8, 2012 at 11:30 AM

அண்ணே கீர்த்தி, விடலாம்னு பார்த்தா விட மாட்டீங்களே. சரி, கமல், ரஜினி விவாதம் என்னைக்குமே அலுக்காத ஜாலி சண்டை தான். நீங்க என்னைய போல ‘மர மண்டைய’ வேற இழுத்துட்டதால, உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ‘கடமை’ எனக்கு இருக்கு.

நீங்க சொல்றத பார்த்தா கமல் ஏதோ எல்லா படத்துலேயும் அம்பானி, பிர்லா வீட்டு பையனா நடிச்சிருக்கறத போல தான் சொல்றீங்க. தசாவதாரத்துல, மணல் பிரச்சினை, அன்பே சிவத்துல தொழிலாளர் ஊதிய பிரச்சினை, உ போ ஒ வில் தீவிரவாதம், தேவர் மகன், விருமாண்டியில் கிராமத்து பங்காளிகள் சண்டை, மகாநதியில் ஒரு குடும்ப தலைவனின் துயரம், சலங்கை ஒலியில் நாட்டிய திறமை உள்ள ஒரு சாமானியனின் அவலம் ….இன்னும் கமல் நடித்த காமன் மேன் கதைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

எனக்கு தெரிந்து ரஜினி காமன் மேன் பிரச்சினையை முன் வைத்து நடித்தது ‘ஆ அ வரை, எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை என விரல் விட்டு எண்ணி விடக்கூடிய அளவுக்குள்ள படங்களே. மற்றபடி ரஜினி நடித்த எல்லா படங்களும் எம் ஜி ஆர் நடித்த படங்களின் டிங்கரிங் செய்த ரீமேக் தானே. எம் ஜி ஆர் சொல்லாத எந்த காமன் மேன் பிரச்சினையை ரஜினி புதுசாக சொல்லி விட்டார்?

அப்புறம் இந்த கட்-அவுட், வயிறு வளர்க்கும் முறை பற்றியெல்லாம் ‘ரஜினி ரசிகரான’ நீங்க சொல்றது, ராஜ பக்ஷே நான் அஹிம்சாவாதின்னு சொல்றதை போல காமெடி தான்.

Reply

keerthivasan March 9, 2012 at 9:29 AM

அய்யா, பாமரன் நீங்கள் புத்தி சாலி போல நான் முட்டாள் போல் பேசுகிறிகளே, நான் சொல்ல வந்தது கதை பற்றி இல்லை, அவர்கள் அதை செய்யும் முறை பற்றி தான் பேசுகிறேன். MGr கமல் இவர்கள் செய்யவில்லை என்று சொல்லவில்லை, அவர்கள் அதை நாடக தனம் கலந்து தான் சொல்லியிருகிறார்கள். கமல் போல் காதல் வந்து விட்டாலே பொண்ணுக்கு kiss அடிக்க முடியுமா? MGr வேட்டைக்காரன் படத்தில் சாவித்திரி உடம்பை kasikkinare , இதெல்லாம் சினிமா தனங்கள் thanne ? கமல் கிணறு மேல் ஏறி நின்று டான்ஸ் ஆடுகிறாள் சலங்கை ஒலி படத்தில். மேலும் எதற்காக ayugirome என்றே தெரியாமல் mgr கமல் இருவரும் செயற்கையாக ஆயுவர்கள். மஹா நதி படத்தில் அவர் thaanudaya பெண்ணை bengal போஒய் மீக்கும் காட்சி அபத்தம். மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீ தேவிக்கு பைத்தியம் thelyuum இவருக்கு பிடிக்குமாம், யார் காதில் பூ sutrugiragal இந்த mgr கமல் இருவரும், இவர்கள் நாடக தன்மை மிகுந்த நடிகர்கள், ஆனால் ரஜினி முடிந்த வரை தலையில் பூ சுற்றாமல் நடிக்க முயற்சி செய்யறது எனக்கு மிகவும் பிடிக்கும்.

Reply

பாமரன் March 10, 2012 at 2:38 PM

கீர்த்தி
//நான் சொல்ல வந்தது கதை பற்றி இல்லை, அவர்கள் அதை செய்யும் முறை பற்றி தான் பேசுகிறேன்.//

இதையும் சொல்றீங்க… அப்புறம்..

//மஹா நதி படத்தில் அவர் thaanudaya பெண்ணை bengal போஒய் மீக்கும் காட்சி அபத்தம். மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீ தேவிக்கு பைத்தியம் thelyuum இவருக்கு பிடிக்குமாம், யார் காதில் பூ சுற்றுகிரகள்//

இப்படியும் சொல்றீங்க. “ஒரிஜினல் ரஜினி ரசிகன்” அவார்ட் உங்களுக்கு தான்.

//ரஜினி முடிந்த வரை தலையில் பூ சுற்றாமல் நடிக்க முயற்சி செய்யறது எனக்கு மிகவும் பிடிக்கும்.//

அமெரிக்காவில 20 வருஷம் Software ‘வேலை’ செஞ்சே(?) 200 கோடி சம்பாதிச்சி(???) , 40 வயசுல திரும்பி வந்து, 200 கோடி ப்ராஜக்ட்டை செயல்படுத்த, கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் படாத பாடுபடும், Managing Director அந்தஸ்த்தில் உள்ள ஒருத்தர், ஒரு 20 வயசு சாதாரண Counter Sales Girl பின்னாடி ‘பழகலாம் வாங்கன்னு’ ஒரு (மாமா) அல்லக்கையோட நாய் மாதிரி சுத்திக்கிட்டு ஜொள்ளு விடற மாதிரி திரியிற கதை தான், உங்களுக்கு பிடிச்ச காதுல, தலையில, பூ சுத்தாம கதை சொல்றதுன்னா… உங்களை பொறுத்த வரைக்கும் கமல் எல்லாம் ஒரு நடிகனா, இல்ல அவருது எல்லாம் ஒரு படமா என்ன?…

போங்க, அம்மா கூப்புடுறாங்க, போய் பால் குடிச்சிட்டு, அப்புறம் வந்து விளையாடலாம்…

Reply

காயத்ரிநாகா March 10, 2012 at 5:18 PM

அய்யா சாமி முடியல நிறுத்தறீங்களா?

Reply

keerthivasan March 11, 2012 at 9:05 AM

பாமரன், இப்ப கூட ரஜினி நடிப்பில் தவறு சின்ன தாக இருந்தாலும் சிவாஜி படம் ஒரு commercial படம் enbatahi உங்கள் மர மண்டைக்கு புரிய வெய்க்க என்னால் முடியவில்லை. சிவாஜியில் எவ்வளவோ நல்ல காட்சிகள் இருக்க ஒரு பெண் பின்னல் suturvathai பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். ஏனென்றால் எல்லோருக்குமே பெண்களை சைட் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பு தான். சாப்ட்வேர் engineer லவ் பண்ண கூடாது என்ற சட்டமா என்ன? உங்கள் கமல் போல் இல்லாமல் காதல் ஒரு மென்மையான உறவாக தான் சிவாஜியில் காட்ட படும். புன்னகை மன்னனில் சாகும்போது கூட பொண்ணை முத்தம் கொடுத்துட்டு தான் இந்த கமல் சவனம். மேலிருந்து கீழே vizhyum பொது அந்த பெண் இறந்து விடுவாள். உங்கள் kadha நாயகன் உளறல் நாயகன் கமல் pizhahthu விடுவானாம். இதில் herosim இல்லையா? லாஜிக் யோசித்து எழுதுங்கள் பாமரன் அவர்களே.

Reply

பாமரன் March 11, 2012 at 7:12 PM

கிரி, இந்த கீர்த்தி மாதிரி புள்ளைங்களுக்காக, தனியா ஒரு Kids Section ஆரம்பிக்கலாமே?

நான் இத்தோட அப்பீட்டு. காயத்ரிநாகா சொன்ன மாதிரி, என்னாலையும் ‘முடியல’.

Reply

கிரி March 12, 2012 at 10:58 AM

மறுபடியுமா!… போதும் போதும்!

Reply

subash August 28, 2012 at 2:49 PM

enda keerthi nee urupada matteda

Reply

Nazraf April 14, 2014 at 8:37 PM

ரோபோவை செயலிழக்கச் செய்வதற்கு கோடாரியால் வெட்டுவார் ரஜினி
அவருடைய லேபில் இரண்டு கொமடியனை வைத்து ரோபோ செய்வார்

இப்படி நிறைய

இப்படி ஒரு படத்தை கமல் பாராட்டாதது தப்புத்தான்

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed