தீவிரமாகும் இணையப் போட்டிகள்!

by கிரி on November 18, 2010

facebook email தீவிரமாகும் இணையப் போட்டிகள்!கூகுளை ஒரு வழியாக்க அனைத்து நிறுவனங்களும் தயாராகி விட்டன அதில் facebook மிகத் தீவிரமாக தன்னுடைய வியூகங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே facebook கூகிள் சண்டைப் பற்றி இந்தப்பதிவில் கூறி இருந்தேன். தற்போது இந்தப்பிரச்சனை பெரும் போராக வெடித்துள்ளது.

கூகிள் முதலில் facebook போட்டியை சமாளிக்க Google Buzz என்ற சமூகத்தளத்தை உருவாக்கியது ஆனால் அதில் அவசரத்தில் பயனாளர்களின் தகவல்களை அனுமதியில்லாமல் வெளியிட்டு அனைவரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டது. பின்னர் அந்தப்பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து வெளியிட்டாலும் முதல்க் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு முறை சொதப்பியதால் தொடர்ந்து பயனாளர்களை கவர முடியாமல் போனது. அதோடு தனித்தளமாக இல்லாமல் கூகிள் மின்னஞ்சலில் இணைந்து வருவது பலருக்குப் பிடிக்கவில்லை. தற்போது பதிவர்கள் சண்டைப்போட மட்டுமே இது உதவிக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன் icon biggrin தீவிரமாகும் இணையப் போட்டிகள்!

சரி அவசரப்பட்டு முதல் முறை சொதப்பி விட்டோம்! அடுத்த முறை இந்த மாதிரி நடக்கக்கூடாது என்று facebook போட்டியாக Google Me என்ற சமூகத்தளத்தை ரகசியமாக! உருவாக்கி வருகிறது என்று செய்திகள் உலவுகின்றன. காரணம் அனைத்திலும் ராஜாவாக இருக்கும் கூகிள் இந்த சமூகத்தளங்களான facebook மற்றும் Twitter முன்பு போட்டி போட முடியவில்லை எனவே இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் படி ஒரு சமூகதளத்தை உருவாக்க வேண்டும் என்று முயன்று வருகிறது.

facebook தன்னை வைத்து பெரிய ஆள் ஆக விடக்கூடாது என்று முதல் கட்டமாக தன்னுடைய தளத்தில் இருந்து முகவரிகளை பயன்படுத்தும் வசதியை கூகிள் தடை செய்தது ஆனால் உடனே facebook அதற்கு முகவரி இம்போர்ட் வசதி செய்து பயனாளர்கள் திரும்ப கூகிள் முகவரிகளை பயன்படுத்த வசதி செய்து கொடுத்து கூகிள்க்கு பல்பு கொடுத்து விட்டது. கூகிள் செம கடுப்பாகி இருக்கும் icon smile தீவிரமாகும் இணையப் போட்டிகள்!

Email தீவிரமாகும் இணையப் போட்டிகள்!தற்போது அடுத்த அஸ்திரமாக மின்னஞ்சல் சேவையை துவங்கப்போவதாக அறிவித்து கூகிள்க்கு மட்டுமல்லாமல் மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூவிற்கும் எனிமா கொடுத்து இருக்கிறது. ஏற்கனவே கூகிள் மின்னஞ்சல் வருகையால் ஹாட்மெயில் மற்றும் யாஹூ வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. இருப்பினும் உலகில் மின்னஞ்சல் சேவையில் ஹாட்மெயில் முதல் இடத்திலும் யாஹூ இரண்டாம் இடத்திலும் உள்ளது ஆனால் வளர்ச்சியில் ஜிமெயில் முதல் இடத்தில் உள்ளது. இப்படி இருக்க facebook அறிவிப்பு கூகுளை தூங்க விடாமல் செய்து இருக்கிறது. facebook க்கிற்கு உலகம் முழுவதும் 500 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://mail.facebook.com என்ற முகவரிக்குச் சென்றால் உங்களால் facebook மின்னஞ்சல் வசதியைக் காண முடியும்.

கடந்த திங்கள் (15-11-2010) இதை அதிகாரப்பூர்வமாக facebook அறிவிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் மின்னஞ்சல் சேவை எல்லாம் நேரம் எடுக்கும் விஷயம் அதற்கு பதிலாக Messaging Service [Email, IM, SMS] என்ற வசதியை தரப்போவதாக கூறி இருக்கிறது. இது மின்னஞ்சலை போன்றது ஆனால் இல்லை. வரும் ஆனால் வராது மாதிரி தான். இதைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். இதை பயன்படுத்த அழைப்பிதழ் பெற இங்கே செல்லுங்கள்.

மின்னஞ்சலுக்கு சமூகத் தளங்களால் வரவேற்பு குறைந்து வருகிறது. பேச வேண்டிய கலந்துரையாட வேண்டிய அனைத்தையும் சமூகத் தளங்களிலேயே அனைவரும் செய்து விடுவதால் மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களின் ஆர்வம் குறைவதாக ஒரு ஆய்வு கூறியுள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்தே facebook இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.

விளையாட்டுபோல ஆரம்பித்தது facebook இன்னைக்குப்பாருங்க பல பில்லியன் மதிப்புள்ள நிறுவனமாக விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளது. கூகிள் facebook போட்டியை சமாளிக்க பல புதிய வசதிகளை நமக்கு அளிக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஏற்கனவே ஒரு நாளைக்கு ஒரு வசதியை கூகிள் கொடுத்து வருகிறது இனி மணிக்கு ஒன்று வரும்போல இருக்கே!

நண்பர் தமிழ் கூறியது போல ஒரு காலத்தில் Myspace என்ற சமூகத்தளம் பட்டையை கிளப்பிக்கொண்டு இருந்தது தற்போது ஆட்டம் கண்டு விட்டது அது போல facebook க்கும் ஆகலாம் யார் கண்டது! icon smile தீவிரமாகும் இணையப் போட்டிகள்!

facebook மின்னஞ்சல் giriblog@facebook.com என்று வரப்போகிறது. என்னதான் கூகிள் தற்போது மின்னஞ்சலில் அசத்திக்கொண்டு இருந்தாலும் facebook மின்னஞ்சல் அறிமுகப்படுத்தினால் அதன் பயனாளர்களில் பாதிப்பேர் பயன்படுத்தினாலே குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து விடும். என்ன ஆகப்போகிறது என்பதை பார்க்கத்தானே போகிறோம். நமக்கெல்லாம் இவங்க சண்டையால் ஜாலி தான் icon wink தீவிரமாகும் இணையப் போட்டிகள்! இன்னும் அதிக வசதிகளை நாம் பெற முடியும்.

கிரி Blog தள செய்திகளை பதிவுகளை அறிய facebook fan page

Blekko Search Engine

Blekko தீவிரமாகும் இணையப் போட்டிகள்!கூகிள்க்கு மின்னஞ்சலுக்கு தான் பிரச்சனை என்றால் தேடுதல் சேவைக்கும் போட்டி கடுமையாகிறது. தற்போது http://blekko.com என்ற தளம் தேடுதல் சேவையில் குறிப்பிடத்தக்க அளவில் பாராட்டைப் பெற்று வருகிறது. கூகிள் ல் இல்லாத வசதிகள் இதில் உள்ளதாக இதை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர். கூகிள் க்கு போட்டியாக இது வரை பல தேடுதல் தளங்கள் வந்தாலும் எந்த தளத்தாலும் கூகிள்க்கு சவாலாக இருக்க முடியவில்லை இன்னும் கூறப்போனால் பலருக்கு இந்தத்தளங்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. இதைப்போல Blekko இருக்காது என்று பலர் நம்புகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

Rockmelt Browser

Rockmelt தீவிரமாகும் இணையப் போட்டிகள்!கூகிள்க்கு சனி திசை நடக்கும் போல இருக்கு ஹா ஹா ஹா ஆளாளாக்கு ஒன்றாக சேர்ந்து ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். இந்த Rockmelt கொடுக்கும் தலைவலி உலவி வழியில் ஆகும். Rockmelt கூகிளின் குரோமியம் மென்பொருளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தளத்திற்கு உள்ள வரவேற்பை புரிந்து கொண்டு அதையொட்டி வடிவமைத்துள்ளார்கள். facebook, Twitter போன்ற தளங்களுக்குச் செல்லாமலே அதன் வசதியை பயன்படுத்த வடிவமைத்துள்ளார்கள். இவர்கள் தளத்தை பிரபலப்படுத்த கூகிள் வழியையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

எப்படி என்றால்! முன்பு கூகிள் மின்னஞ்சலை அறிமுகப்படுத்திய போது அனைவருக்கும் உடனே கொடுக்கவில்லை அழைப்பிதல் ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்து அவர்கள் மூலமாக அழைப்பிதல் இருந்தால் மட்டுமே கணக்கு துவங்க முடியும் என்று அறிமுகப்படுத்தினார்கள். எப்போதுமே எதுவும் உடனே கிடைத்தால் ஒரு கிக் இருக்காது ஃபிகர் உட்பட. கொஞ்சம் ஏங்கவைத்து அப்புறம் கொடுத்ததன் மூலம் அந்த மின்னஞ்சலுக்கு ஒரு மதிப்பை கொடுத்தது. அதற்குத் தகுந்த மாதிரி கூகிள் மின்னஞ்சல் சேவையும் சிறப்பாக இருக்க மாபெரும் வெற்றி பெற்றது இல்லை என்றால் படம் பப்படம் ஆகி இருக்கும்.

தற்போது Rockmelt உலவியும் அதே வழிமுறையை பின்பற்றுகிறது ஆனா மொக்கைத்தனமான முறையில் செய்கிறது. அதாவது facebook கணக்கு இருந்தால் மட்டுமே நீங்கள் அழைப்பிதழை பெற முடியும். facebook பெரிய நிறுவனம் தான் ஆனால் கூகிள் பற்றியே தெரியாதவங்க இருக்கிற நேரத்துல facebook பற்றி எத்தனை பேர் தெரிந்து இருப்பார்கள் அதில் எத்தனை பேர் கணக்கு வைத்து இருக்கப்போகிறார்கள். சரி இதைத்தான் போனாப்போகுது என்று விட்டால் கிட்டத்தட்ட 8 நாட்களுக்குப் பிறகு தான் அழைப்பிதல் அனுப்பினார்கள். இந்த ரேஞ்சுல இருந்தால் அவனவன் கடுப்பாவான மாட்டானா! அதுவும் உலவிக்கு. காக்க வைத்து கொடுப்பது ஒரு ஐடியா என்றால் பொறுமையை சோதிப்பது எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும்.

இந்த உலவி இந்தியர் உருவாக்கிய Epic உலவியை போன்றும் க்ரோம் உலவியை போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது அதுவும் க்ரோமை அப்படியே காபி அடித்து இருக்கிறார்கள் 95% அப்படியே க்ரோமை போல உள்ளது. facebook Twitter பயனாளர்களுக்கு இது வசதியாக இருக்கும் இவை இல்லாமலும் பயன்படுத்த முடியும். பார்ப்போம் Rockmelt பாறையாக நிற்குமா இல்லை பனியாக உருகி விடுமா என்று!

கொசுறு

கூகிள் நிறுவனம் லினக்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கி வரும் குரோமியம் OS இந்த ஆண்டு இறுதியில் வரும் என்று கூறி இருக்கிறார்கள். இது நெட்புக் (Net Book) என்ற சிறிய மடிக்கணினியை குறிவைத்து உருவாக்கி இருக்கிறார்கள்.

ஏற்கனவே சில நிறுவனங்களுக்கு கூகிளிடம் இருந்து ஆர்டர் சென்று விட்டதாம் தற்போது மடிக்கணினியை வாங்குபவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் இது சுதந்திர மென்பொருளாக (Open Source) இருப்பதால் விரைவில் தரவிறக்கம் செய்து அனைவரும் பயன்படுத்தும் படி வந்து விடும் என்று கூறுகிறார்கள். Apple நிறுவனம் ஏற்கனவே iPad என்ற கணினியை பிரபலப்படுத்தி நெட் புக் என்ற சிறிய மடிக்கணினி மார்க்கெட்டை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டது. இந்நிலையில் கூகிள் குரோமியம் OS நெட் புக்குடன் வெற்றி பெறுமா! மக்களை கவருமா! என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Subscribe to கிரி Blog by Email

feed icon16x16 தீவிரமாகும் இணையப் போட்டிகள்! Subscribe in a reader

Related posts:

  1. இணையம் பற்றிய செய்திகள் [05-10-2010]
  2. “Priority Inbox” ஜிமெயிலின் புதிய வசதி!
  3. இணையம் பற்றிய செய்திகள் [11-11-2010]
  4. க்ரோம் உலவியின் பயனுள்ள நீட்சிகள்
  5. இணையம் பற்றிய செய்திகள் [20-09-2010]

{ 25 comments… read them below or add one }

எப்பூடி November 18, 2010 at 8:37 AM

இந்த சண்டையில யாரு ஜெயிச்சாலும் தோற்றாலும் லாபம் எங்களுக்குத்தான் என்பதால் எங்களுக்கு அதிகூடிய வசதிகள் ஓசியிலேயே கிடைக்கப்போகுது:-)

Reply

பிரவின்குமார் November 18, 2010 at 10:21 AM

மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் கிரி சார். நிறைய இணைய தகவல்கள்களை தங்களால் அறிய முடிகிறது. பகிர்வுக்கு நன்றி.

Reply

எப்பூடி November 18, 2010 at 10:28 AM

ப்ரோபைல் பிக்சர் வந்திட்டுதெல்ல :-) தகவலுக்கு மிக்க நன்றி.

Reply

Dinesh November 18, 2010 at 10:40 AM

கூகிள் அளவுக்கு இவங்க பொறுப்பு எடுத்து பண்ணுவாங்கண்ணு எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் எடுக்கும் ஒரு தடவை பாக்கலாம்…

Reply

சீனு November 18, 2010 at 12:14 PM

https://mail.facebook.com இல்லை. http மட்டுமே.

Reply

எஸ். கே November 18, 2010 at 3:04 PM

அவங்க சண்டை போட்டாலும் நமக்கு பயனுள்ளதாக இருந்தா சரி!

Reply

Raj November 18, 2010 at 4:00 PM

அண்ணே .. நல்லா இருக்கு …ஆமா என்ன பிகர் மேட்டர் ? சகோதரி கிட்டே போட்டு விடவா ?

Reply

நாஞ்சில் பிரதாப் November 18, 2010 at 4:52 PM

//பேச வேண்டிய கலந்துரையாட வேண்டிய அனைத்தையும் சமூகத் தளங்களிலேயே அனைவரும் செய்து விடுவதால் //

ஈமெயில் வசதிகள் வந்தபோது கடித போக்குவரத்து குறைந்தது. இப்போ ஈமெயிலுக்கே ஆப்பு வந்துடுச்சு… தொழில்நுட்பம் எத்தனைவேகமாக வளர்கிறது… அதுவும் இந்த பத்து வருடங்களில்…

Reply

பிரபு November 18, 2010 at 10:04 PM

ஆஹா! ஓஹோ!!

Reply

NIZAMUDEEN November 18, 2010 at 11:11 PM

அனைத்து செய்திகளும் ‘பலே’ போட வைக்கின்றன.

Reply

கிரி November 19, 2010 at 7:20 AM

ஜீவதர்ஷன் பிரவின் தினேஷ் சீனு எஸ் கே ராஜ் நாஞ்சில் பிரதாப் பிரபு மற்றும் நிஜாமுதீன் வருகைக்கு நன்றி

@சீனு ஏங்க! இவ்வளோ கஷ்டப்பட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் அதுல உங்களுக்கு இந்த “S” தான் தெரிந்ததா! :-)

“S” எதுக்கு என்றால் உங்கள தகவல்களை என்க்ரிப்ட் செய்து பாதுகாப்பான முறையில் அனுப்பும் வசதியாகும். நீங்கள் http என்று அடித்தாலும் அதில் “S” சேர்ந்து கொள்ளும் ஓகே வா! :-) “S” இல்லாமல் மின்னஞ்சலையோ அல்லது வங்கிக் கணக்கையோ பயன்படுத்தாதீர்கள்.

@ராஜ் தண்ணீர் தெளித்து விட்டாச்சு! ;-) கூறிப்பயனில்லை.

@நாஞ்சில் பிரதாப் இன்னும் கொஞ்ச வருடம் சென்றால் சமூகத்தளங்களுக்கு மாற்றாக வேறு வந்து விடும் :-)

Reply

சீனு November 19, 2010 at 10:33 AM

//@சீனு ஏங்க! இவ்வளோ கஷ்டப்பட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் அதுல உங்களுக்கு இந்த “S” தான் தெரிந்ததா!//

நீங்க கொடுத்த சுட்டிய கிளிக்கினப்போ எனக்கு ஏற்றோர் வந்தது. மத்தவங்களுக்கும் இதே வருமேனு கரெக்ட் பன்னிக்கோங்கனு சொன்னேன். இது தப்பா? :(

Reply

கிரி November 19, 2010 at 10:57 AM

அப்படியா! எனக்கு எதுவும் வரலை வரக்கூடாது. சரி! வந்தால் நீங்கள் கூறியுள்ளபடி இனி மாற்றிக்கொள்வார்கள். நன்றி சீனு. தவறா நினைத்துக்காதீங்க நான் சும்மா ஜாலியா தான் கூறினேன் நோ சீரியஸ் :-)

Reply

Dhinesh Kumar (முகிலன்) November 19, 2010 at 11:23 AM

கிரி சார்,

கூகுள் டிவி பத்தியும் எழுதுங்க..

Reply

jmms November 20, 2010 at 1:08 PM

மிக விபரமான அலசல்.. உப்யோகமாயும் கூட..

வாழ்த்துகள்..

Reply

ந.ர.செ. ராஜ்குமார் November 20, 2010 at 10:03 PM

நிறைய நடப்புகளை அறிந்து கொண்டேன். // …கொஞ்சம் ஏங்கவைத்து அப்புறம் கொடுத்ததன் மூலம் அந்த மின்னஞ்சலுக்கு ஒரு மதிப்பை கொடுத்தது. நூற்றுக்கு நூறு உண்மை.

Reply

r.v.saravanan November 21, 2010 at 1:09 PM

தகவலுக்கு நன்றி கிரி

Reply

TV Specs November 21, 2010 at 11:15 PM

It’s all for good.

Reply

சிங்கக்குட்டி November 23, 2010 at 7:59 AM

சபாஸ் சரியான போட்டி …ஹ ஹா ஹ!

எப்படியோ நமக்கு இனி குசிதான் :-) , நல்ல பகிர்வுக்கு நன்றி கிரி.

Reply

chitra solomon November 23, 2010 at 8:11 PM

சுவாரசியமான தகவல்கள். ம்ம்ம்…..

Reply

priya November 24, 2010 at 3:07 PM

நல்ல தகவல்கள் கிரி, நன்றி.

ஒரு சிறு ஆலோசனை, உங்கள் ப்ளாக்கில் உள்ள ட்விட்டர், பாசெபூக் பட்டன்களை இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்துக்கு மற்றுங்களேன். படிக்கும் போது வார்த்தைகளை மறைகிறது…

Reply

sanmugakumar November 25, 2010 at 11:17 PM

நல்ல தகவல்கள்

Reply

கிரி November 28, 2010 at 8:55 PM

தினேஷ் Jmms ராஜ்குமார் சரவணன் TVSpecs சிங்கக்குட்டி சித்ரா ப்ரியா சண்முககுமார் வருகைக்கு நன்றி

@தினேஷ் கூகிள் டிவி பற்றி எழுத கொஞ்சம் படிக்கணும் :-)

@ப்ரியா மாற்றி விட்டேன். இது நீங்கள் 1024*768 Pixel வைத்து இருப்பதால் இவ்வாறு தெரிகிறது. நிறைய பேர் கூறுவதால் இதை தற்போது வலது புறம் மாற்றி விட்டேன்.

Reply

எம்.கே.முருகானந்தன் December 1, 2010 at 8:08 AM

சுவார்ஸமான தகவல்கள் நன்றி.

Reply

Nona Mills December 23, 2010 at 2:13 AM

நல்ல தகவல்கள்

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed