இணையத்தில் நாளுக்கு நாள் புது புது செய்திகள் வந்து கொண்டே உள்ளது. இன்று ஒரு அப்டேட் வருகிறது என்றால் சரி! இதை ஒரு வாரம் கழித்து பார்ப்போம் என்றால் அதற்குள் அடுத்த அப்டேட் வந்து இது பழையதாகி விடுகிறது. இணைய செய்திகளை நான் தொடர்ந்து எழுதி வருகிறேன் இது பற்றிய இடுகைகளுக்கு நன்கு வரவேற்பு உள்ளது. நான் மொத்தமாக சேர்த்து எழுதும் போது பல செய்திகள் பழையதாகி விடுகிறது. எனவே எனக்கு முக்கியம் என்று படும் செய்திகளை உடனுக்குடன் அல்லது சிறிது தாமதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன் சேர்த்து வைத்து எழுதாமல் அதனால் செய்திகள் குறைந்து காணப்படலாம்.
IE 9
உலவிகளில் (Browser) கடும் போட்டி தற்போது நிலவி வருகிறது அதுவும் க்ரோம் வந்த பிறகு போட்டி கடுமையானதாகி விட்டது. பயர் ஃபாக்ஸ், க்ரோம் உலவிகள் இணையத்தில் பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டாலும் இன்னமும் மைக்ரோ சாஃப்ட் உலவி IE தான் மொத்த பயன்பாட்டில் முன்னிலை வைக்கிறது. இதற்க்கு ஒரு முக்கிய காரணம் பெரும்பாலான நிறுவனங்களில் IE மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது. இதுவே இதன் எண்ணிக்கையை கூடுதலாக காட்ட உதவுகிறது.
மற்ற உலவிகளின் போட்டியை சமாளிக்க தற்போது மைக்ரோ சாஃப்ட் நிறுவனமும் தன்னுடைய உலவியான IE யை புதுப்பித்து வருகிறது. தற்போது தனது அடுத்த வெளியீடான IE 9 சோதனை பதிப்பை வெளியிட்டுள்ளது. க்ரோம் போல தேவையற்ற இடங்களை நீக்கியுள்ளது மற்றும் அதைப்போல வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. நான் பயன்படுத்தி பார்த்த வரை சிறப்பாகவும் அதே சமயம் வேகமாகவும் உள்ளது. இதை நீங்கள் தரவிறக்கம் செய்து நிறுவ இங்கே செல்லுங்கள். இன்னமும் உலவியை பொறுத்தவரை என்னுடைய பரிந்துரை க்ரோம் தான்.
Epic Browser
இந்தியர் ஒருவரால் மற்ற உலவிகளுக்கு சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது நண்பர்கள் பலர் இந்த உலவியை பயன்படுத்தி நன்கு வேகமாகவும் எளிதாகவும் உள்ளதாக கூறினர். நானும் பயன்படுத்தி பார்த்த வரையில் வேகம் சிறப்பாக உள்ளது. இவர்கள் இன்னும் தேவையற்ற பகுதிகளை நாம் விரும்பினால் நீக்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். சமூக தளங்கள் மற்றும் சில பிரபலமான தளங்களை நாம் எளிதாக பயன்படுத்த வசதியாக அமைத்துள்ளார்கள். இந்த உலவி ஒரு ஒரு ஃப்ரொபஷனல் பார்வை தரவில்லை என்பது என் குறையாக தெரிகிறது. விரைவில் இன்னும் பல மாற்றங்களை செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். தரவிறக்கம் செய்ய இங்கே செல்லுங்கள்.
Google Instant மற்றும் Youtube Instant
தேடுதல் இயந்திரத்தில் முன்னணியில் வகிக்கும் கூகுள் நிறுவனம் தனது சோதனை முயற்சியை புதிய வசதிகளை தருவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே உள்ளது. இதுவே கூகுள் இன்னும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும்.
தற்போது தனது அடுத்த முயற்சியான உடனடி விடை! என்ற முயற்சியில் புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையான தகவல்களை, Youtube காணொளிகளை காண வசதி ஏற்படுத்தியுள்ளது. இதை நீங்கள் பயன்படுத்தி பார்க்க விரும்பினால் கீழ் கண்ட தளங்களில் சென்று முயற்சித்து பார்க்கலாம்
http://www.google.com/instant/ மற்றும் http://ytinstant.com/
குறிப்பு: இவை இரண்டும் இன்னும் பரிசோதனை அளவிலே இருக்கின்றன. முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை.
Google Video Chat Enhancements
கூகுள் காணொளி உரையாடி பலரும் பயன்படுத்தும் ஒரு வசதி. வெளிநாட்டில் உள்ள நம் நண்பர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் என்று பலரை நெருக்கமாக காண இந்த வசதியை பயன்படுத்தி வருகிறோம். கூகுள் தற்போது இந்த வசதியை இன்னும் சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளது. அதாவது நீங்கள் காணொளியில் காணும் நண்பரை தற்போது காண்பதை விட தெளிவாகவும் அளவில் பெரியதாகவும் காண முடியும். இந்த வசதி உங்களுக்கு தேவை என்றால் உங்கள் கூகுள் மின்னஞ்சல் கணக்கில் Lab பகுதியில் சென்று Video chat enhancements என்ற வசதியை நீங்கள் Enable செய்ய வேண்டும்.
Chrome Plain Text copy
இது கூகுள் க்ரோமின் அற்புதமான வசதி. அதாவது நீங்கள் ஒரு மின்னஞ்சல் எழுதுகிறீர்கள் வேறு ஒரு இடத்தில் இருந்து ஒரு வரியை காபி செய்ய வேண்டியது இருக்கிறது ஆனால் அதை பேஸ்ட் செய்த பிறகு பார்த்தால் அது வேறு பார்மட்டில் இருப்பதால் அதன் பிறகு தட்டச்சு செய்யும் எழுத்துக்கள் வேறு மாதிரி வரும் பிறகு நாம் மறுபடியும் ஃபார்மட் மாற்ற வேண்டும். இதற்கு க்ரோம் கொடுத்துள்ள வசதி Ctrl+shift+V. இந்த முறையில் நீங்கள் காபி செய்ததை பேஸ்ட் செய்தால் புதிய ஃபார்மட் வந்து உங்களை கடுப்படிக்காமல் Plain Text வந்து ஒரே மாதிரியான தோற்றத்தை தரும். உங்களுக்கு இந்த வசதி தேவையில்லை என்றால் வழக்கமான Ctrl+V முறையையே பயன்படுத்தி பேஸ்ட் செய்யலாம்.
கொசுறு
பாஸ் (எ) பாஸ்கரன்
படம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீங்க..நல்லா இருக்குனு. நானும் ஒருமுறை சொல்லிக்குறேன் நல்லா இருக்கு
லாஜிக் எல்லாம் பார்த்து போக வேண்டாம். படம் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம். ஆர்யா சந்தானம் காமெடியில் திரையரங்கம் முழுவதும் சிரிப்பலைகள். சந்தானம் தற்போது தனக்கு என்று ஒரு இடத்தை வெகு வேகமாக பிடித்து வருகிறார். ஆர்யாவும் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். தானைத்தலைவி நயன்தாராவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஹிட் படம்
ஆர்யாவும் சந்தானமும் நண்பேன்டா! என்று கூறிக்கொள்ளும் வசனம் தற்போது இளசுகளிடையே நன்கு பிரபலமாகி விட்டது. படத்தில் பல திரைப்படங்களை நன்றாக வாரி இருக்கிறார்கள்.
Subscribe to கிரி Blog by Email
Subscribe to கிரி Blog by Google Reader
Related posts:


{ 17 comments… read them below or add one }
உங்கள் பதிவில் பார்த்த பிறகே க்ரோமுக்கு மாறினேன். சிறப்பாக உள்ளது அதன் செயல்பாடு.
பாஸ் படம் பார்த்து விட்டேன் கிரி ரொம்ப ரசித்து சிரித்தேன்
நண்பேன்டா!
ஆமாம்.. Crome நன்றாக இருக்கிறது.. ரொம்ப வேகமாக உள்ளது அதன் பயன்பாடு…
செய்திகளுக்கு மிக்க நன்றி…
தமிழில் தொழில்நுட்ப விசயங்களை எளிமையாக எழுதுவது மிகவும் குறைவு. உங்கள் சேவை அளப்பரியது. வாரத்திற்கு இது போன்று இரண்டு முறையாவது எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.
வாழ்த்துக்கள்.
நல்ல உபயோகமான பதிவு.
பயனுல்ல தகவலுக்கு நன்றி
கிரி, ரஜினி எந்த படத்தில் “நண்பேன்டா” என்ற வார்தையைபயன்படுத்துவார்?
/// Epic ப்ரௌசெர் //
தல
chrome க்கு அப்புறம் இத தாம் இப்போ use பண்றேன் …செம்ம சூப்பரா இருக்குது ….,
////கிரி, ரஜினி எந்த படத்தில் “நண்பேன்டா” என்ற வார்தையைபயன்படுத்துவார்?/////
தளபதி !!!!!!!
பதிலுக்கு நன்றி சங்கர்
நான் எபிக் உலாவியைப் பற்றி வருந்திய விஷயத்தில் இதுவும் ஒன்று. என் கருத்தை அப்டியே பிரதிபலித்து உள்ளீர்கள்… இதை முழு திரைக்கு திறந்து வைத்துக் கொண்டு என்னால் அழுவலகத்தில் வேலை செய்ய முடிவதில்லை.
மேம்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. பார்ப்போம்…
கிரி… எபிக் பிரவுசர் பற்றி எழுதியமைக்கு நன்றி. இன்னும் பல புதிய அப்டேட் தகவல்களை எதிர்பார்க்கிறோம். கூகுள் வீடியோ சாட் பற்றிய தகவல் எனக்கு ரொம்பவே உதவிகரமாக இருக்கிறது.
கிரியார்
நானும் chrome தான் உபயோக படுத்துகிறேன் , firefox,i.e ,opera விட வசதியா இருக்கு
பாஸ் நல்ல நகைச்சுவை திரைப்படம் , சந்தானம் சம கலாய்:)
தகவலுக்கு நன்றி கிரி
ராமலக்ஷ்மி, சரவணன், செந்தில்குமார், அர்விந்த், DrPKandaswamyPhD, புதுவை சிவா, சங்கர், தினேஷ், செந்தில், சுனில் மற்றும் லோகன் வருகைக்கு நன்றி
@ராமலக்ஷ்மி உங்களை க்ரோம் நிச்சயம் ஏமாற்றாது
@ அர்விந்த் நன்றி. எழுத முயற்சிக்கிறேன்.
@புதுவை சிவா நான் சொல்வதற்குள் சங்கர் சொல்லிட்டாரு…
நான் கூறி இருந்தாலும் இதே பதில் தான்.
@சங்கர் எபிக் தீவிர ரசிகர் ஆகிட்டீங்க போல
@செந்தில் இப்ப ஓகே வா!
நாங்கெல்லாம் சொன்னா செய்வோம்ல.
நல்ல பகிர்வு, பகிர்வுக்கு நன்றி சொல்ல மாட்டேன்…!
நண்பேன்டா
.
இணைய செய்திகள் வழக்கம் போல் அருமை..! பாஸ் கொசுறு சூப்பர். படம் பார்த்துவிட்டு படித்த முதல் சுருக்க திரைவிமர்சனம் இதுதான். இரண்டரை மணி நேர காமெடியை இரண்டு நிமிடங்களில் சொல்லியிருப்பது நீங்க திரை விமர்சனத்தில் ஜாம்பவான் என்பதை நிருபிக்கிறது. நீ என் நண்பேண்டா….!! என்பதை படத்தின் பல இடங்களில் சொல்வதை பச்சக்குனு பதியும்படி சொல்லிட்டீங்க…!
நன்றி தோழா ….