facebook Security
facebook தற்போது பலரும் அதிகம் பயன்படுத்தும் .ஒரு சமூகத்தளம். பலரும் பயன்படுத்தும் தளம் என்றாலே அதை ஹேக் செய்ய பலரும் தயாராக இருப்பார்கள் எனவே தற்போது facebook கணக்கையும் பலர் ஹேக் செய்து வருகிறார்கள். ஜிமெயில் செய்துள்ள வசதியைப்போல facebook ம் பாதுகாப்பு வசதியை கொண்டு வந்துள்ளது.
அதாவது நீங்கள் நண்பரின் மொபைலில் facebook ஐ பயன்படுத்துகிறீர்கள் ஆனால் அதை logout செய்ய மறந்து விடுகிறீர்கள், பிரவுசிங் சென்டர் செல்கிறீர்கள் இதே போல logout செய்ய மறந்து வந்து விடுகிறீர்கள்.. இதைப்போல நிலையை சமாளிக்க facebook இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதைப்போல மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களா அல்லது அப்படி பயன்படுத்தினால் அதை எப்படி தடுப்பது என்று அதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த வசதியை நீங்கள் Account –> Account Settings –>Account Security யில் சென்று மாற்றி அமைக்கலாம். இந்த வசதியை facebook பயன்படுத்தும் அனைவரும் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறேன். இது பற்றி மேலும் விரிவான விளக்கத்தை இங்கே சென்று காணலாம்.
Intel McAfee
Intel நிறுவனம் McAfee Antivirus நிறுவனத்தை $7.68 பில்லியனுக்கு விலைக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் Intel பெரிய வியாபார போட்டியாளர்களில் ஒரு நிறுவனமாக உயர்ந்துள்ளது. McAffe நிறுவனம் சமீபமாக நல்ல முன்னேற்றம் கண்டுவரும் வேளையில் Intel நிறுவனம் இதை வாங்கியது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
Google Linux Chat
நீண்ட காலமாக லினக்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த Google Linux Chat வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது (ஒரு வழியாக). இதற்கு இரண்டு ஆண்டு காலம் ஆகியது குறிப்பிடத்தக்கது. லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக இருந்தால் சரி!
Undo send in gmail
இந்த வசதி பற்றி ஏற்கனவே இந்தப்பதிவில் விரிவாக விளக்கி இருக்கிறேன். கூகுள் தற்போது இந்த நேரத்தை பயனாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க 30 நொடிகளாக உயர்த்தியுள்ளது. நிஜமாவே பயனாளர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் நிறுவனம். நம்ம ஊர் அரசியல்வாதிகள் சொல்வது போல மக்களின் வேண்டுகோளுக்கிணங்க (யார் வேண்டுனாங்கன்னு யாருக்கும் தெரியாது) இவங்க கூட கூட்டணி வைத்துக்கொள்கிறேன் என்று சொல்வதைப்போல அல்ல.
Google Docs search in gmail
Google Docs தற்போது வெளிநாடுகளில் பெரும்பாலனவர்களாலும் நமது பகுதியில் குறைவான அளவிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இது பயனுள்ள தகவல். ஜிமெயில் லில் நமக்கு தேவையான மின்னஞ்சல்களை எளிதாக தேட Google mail search இருப்பதுபோல இதில் Google Docs ல் தகவல்களையும் இதன் மூலம் தேட வசதி ஏற்படுத்தியுள்ளது. இதை Google labs சென்று “Apps Search” வசதியை இணைப்பதன் மூலம் இதைப்பெறலாம்.
கூடுதல் தகவல்
Google Docs ல் நீங்கள் Document என்றல்ல எதை வேண்டும் என்றாலும் சேமிக்கலாம். Exe, MP3, Doc என்று இதில் நீங்கள் 1 GB அளவிற்கு உங்கள் தகவல்களை சேமிக்கலாம். அதிகளவில் இடம் வேண்டுமென்றால் பணம் கட்டி நமக்கு தேவையான அளவில் இடம் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதி நமது முக்கியமான தகவல்களை சேமிக்க பெரிதும் உதவும். Google Docs பற்றி மேலும் விரிவாக காணொளியுடன் தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கே செல்லவும்.
இணைய ஆப்பு
இணையம் ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து அத்தியாவசியம் என்ற நிலைக்கு எப்போதோ மாறி விட்டது. தற்போது நமது இணைய நடவடிக்கைகளை கூட பலரும் கவனித்து வருகிறார்கள். குறிப்பாக இப்போதெல்லாம் ஒரு நிறுவனத்திற்கு நமது Resume அனுப்புகிறோம் என்றால் அவர்கள் நமது பெயரை வைத்துத்தேடி நாம் எப்படிப்பட்டவர் என்று சோதிக்கிறார்கள். வலைப்பதிவு, facebook போன்ற சமூக தளங்களை நாம் பயன்படுத்தினால் அதில் நாம் எப்படி! என்று கவனிக்கிறார்கள்.
Yahoo! நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர் அங்கே இருந்து ராஜினாமா செய்து விட்டு Skype நிறுவனத்தில் சேர்ந்தார். இது பற்றிய செய்தியை ஒரு செய்தி நிறுவனம் தனது தளத்தில் பதிவு செய்து இருந்தது. இதில் பின்னூட்ட (comment) பகுதியில் நம்ம அனானி கமெண்ட் மாதிரி போட்டு அவரை நொக்கி எடுத்துட்டாங்க.. அந்த ஆளு ஒரு மொக்கை! வேலை செய்யவே மாட்டான்! ஒழுங்க யாரையும் நடத்த மாட்டான்..இவன் போனதுனால Yahoo! க்கு நன்மை தான் என்கிற ரேஞ்சுக்கு போட்டு கும்மிட்டாங்க அதே போல அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்து கூறி இருக்கிறார்கள். இதை கவனித்த Skype நிறுவனம் இவரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. இது எப்படி இருக்கு!
அது பற்றிய பதிவையும் அதற்கு கருத்துக்கூறி தாளித்ததையும் நீங்கள் பார்க்க விரும்பினால் இங்கே செல்லுங்கள். எனவே மக்களே! உண்மையான பெயரில் எழுதுபவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். உங்களுக்கு ஆப்பு எப்படி வரும் என்று தெரியாது!
கொசுறு
127 Hours
Slum Dog Millionaire படம் எடுத்த Danny Boyle மறுபடியும் அடுத்தப்படத்திற்கு பட்டயக்கிளப்ப தயாராகிட்டார் நம்ம ரகுமானோட. இணையத்தில் இந்த படத்தோட முன்னோட்டம் சக்கை போடு போடுது. இசை நம்ம ரகுமான் கலக்கி இருக்கிறார்.. ஆங்கில இசையும் நம்ம இசையும் கலந்து கட்டி அடித்து இருக்கிறார், கேமரா தூள் கிளப்புது. இது ஒரு த்ரில்லர் படமாகும். படம் எடுக்கப்பட்டு இருக்கும் விதமும் அதில் வரும் இடங்களும் நம்ம ரகுமான் இசையும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கின்றன. Rahman You Rock!
Related posts:


{ 13 comments… read them below or add one }
நல்ல தகவல்கள்.
ஆப்ப்ப்பு சிந்திக்க வைக்கும்.
கொசுறு கிளப்புது தூளு:)!
இணைய ஆப்பு – இதுதான் முக்கியம்.
மற்ற தகவல்களுக்கு நன்றி
நல்ல பகிர்வு கிரி.
McAfee அதிக மெம்மரி எடுப்பதற்கு இனி இன்டெல் மூலம் ஒரு வழி கிடைத்து விடும்,
//இணைய ஆப்பு//
இலவச தகவல் பகிர்வு தளங்கள், வலை பதிவுகள் வளர ஆரமிக்கும் போதே இதை நான் நினைத்தேன், எப்படியோ என் தனிப்பட்ட நண்பர்களை தவிர அலுவலகம் சார்ந்த யாருக்கும் என்னை என் வலைபதிவு பெயரில் தெரியாது
கொசுறு நான் முன்பே பார்த்து விட்டேன் பிரமாண்டம்
நான்றி!.
ஓஹ்! இண்டல் + மெக்கஃபி – ஆஹா! சிப்புலையே ஆண்டிவைரஸ் வச்சாலும் வைக்கலாம்
இணைய ஆப்பு – நிஜமாகவே சூப்பர் ஆப்பாகவே இருக்கு.
சூப்பர் தகவல்கள். நன்றி.
Good info Giri. I am waiting for some Unix related articles
@ராமலக்ஷ்மி லோகன் சிங்கக்குட்டி ஜமால் வடுவூர் குமார் ஷிர்டி சாய்தாசன் மற்றும் தமிழ் வருகைக்கு நன்றி
@ஜமால்
ரசித்தேன்
@தமிழ் விரைவில் யுனிக்ஸ் பற்றிய ஒரு (Basic) இடுகையை எழுதுகிறேன்
இணைய செய்திகள் பயனுள்ளதாக இருந்தது. அப்புறம்
அப்பு… (மரியாதையுடன் அடுக்கு மொழிக்காக)
இணைய ஆப்பு
செம டாப்பு…!!!
படம் வாய்பே இல்ல போங்க
கேமரா செமையா இருக்குங்க
நல்ல தகவல்
Nalla தகவல்…நன்றி நண்பா
வணக்கம் கிரி அவர்களே,
நான் இணையத்திற்கு புதியவன் ஆதலால் உங்களுடைய பதிவுகள் எனக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கின்றன.இது போல் இன்னும் பல தகவல்கள் உங்கள் மூலம் கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன்.
நன்றி
அன்புடன்
இளவரசன்