கூகுளை பாராட்டி எனக்கு சலித்து விட்டதால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன்
கூகுள் ஏறக்குறைய தினமும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தபோகும் புதிய வசதி “Priority Inbox” அதாவது நமது ஜிமெயிலில் உள்ள Inbox அருகில் (Buzz போல) “Priority Inbox” என்ற வசதி இருக்கும். இதன் மூலம் மிக முக்கியமான மின்னஞ்சல்களை (வங்கி, அலுவலகம் போல) இந்த முறையிலும் வழக்கமான மின்னஞ்சல்களை வழக்கமான Inbox லும் பார்க்கலாம்.
இது எவ்வாறு செயல்படுகிறது?
Filter
கூகுள் மின்னஞ்சலில் filter என்ற வசதி உள்ளது இதன் மூலம் நமக்கு வரும் மின்னஞ்சல்களை நமது வசதிக்கு ஏற்ப அதற்கு பெயர் கொடுத்து பிரிக்க முடியும். எடுத்துக்காட்டாக HDFC அல்லது ICICI மின்னஞ்சல் நமக்கு வருகிறது என்றால் அந்த மின்னஞ்சலுக்கு வங்கியின் பெயரில் filter தயார் செய்து விட்டால் புது மின்னஞ்சல் இந்த முகவரியில் இருந்து வந்தால் நாம் குறிப்பிட்டு இருக்கும் filter பெயர் சேர்ந்து விடும். நாம் இந்த filter பெயரை (நமது மின்னஞ்சலின் இடது புறம் இருக்கும்) க்ளிக் செய்தால் இந்த முகவரியில் இருந்து வந்துள்ள அனைத்து மின்னஞ்சல்களை(மட்டும்)யும் எளிதாக பார்க்க முடியும், வழக்கமான முறையில் பார்க்கலாம் ஆனால் இது நமக்கு புரிந்து கொள்ள எளிதாக வரிசையாக இருக்கும்.
இது பெரும்பாலனவர்களுக்கு தெரிந்து இருக்கும், நான் விளக்கியது இது பற்றி தெரியாதவர்களுக்காக.
இதே முறையில் தான் ஜிமெயிலின் புதிய வசதியான “Priority Inbox” ம் செயல்படுகிறது. நமக்கு தேவையான மின்னஞ்சல்களை முக்கியமானது என்று குறிப்பிடவும் முடியும் அதே போல குறிப்பிட்ட மின்னஞ்சல்களை நேரடியாக இதற்கு வரவைக்கவும் முடியும். இதன் மூலம் முக்கியமான மின்னஞ்சல்களை நாம் தவறவிடாமல் இருக்கலாம். ஒரு சிலர் குழும மின்னஞ்சல் (Group mail) பயன்படுத்துவார்கள் அவர்களுக்கு ஒருநாளைக்கு ஏகப்பட்ட மின்னஞ்சல் வரும். இவர்களைப்போன்று அதிக மின்னஞ்சல் பெறுபவர்களுக்கு இது கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வசதி விரைவில் (அடுத்த வாரம் வரலாம்) நமக்கு வரவுள்ளது. இதை பயன்படுத்திய பிறகு தேவையிருந்தால் இது பற்றி மறுபடியும் விளக்குகிறேன்.
இந்த வசதி உங்களுக்கு தேவையில்லை என்றால் இதை மறையவைக்கவும் வசதி உண்டு Buzz போல.
இது பற்றி மேலும் விரிவான தகவல்கள் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.
ஜிமெயில் தனது இணைய தொலைபேசி சேவையை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் உலகில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு மற்றும் மற்றவர்களுக்கு அவர்களின் தொலைபேசிக்கே அழைக்கலாம். இதைப்போல சேவையை ஏற்கனவே Skype என்ற நிறுவனம் பல வருடமாக வழங்கி வருகிறது.
இது கட்டண சேவை ஆகும் ஆனால் தற்போது கனடா மற்றும் அமெரிக்க நாட்டிற்கு நீங்கள் இலவசமாக உலகின் எந்த மூலையில் இருந்தும் உங்கள் நண்பர்களை குடும்பத்தினரை அழைத்து பேசலாம். நான் அமெரிக்காவில் உள்ள நண்பருக்கு இதன் மூலம் தொடர்பு கொண்டு சோதனை செய்து பார்த்தேன் சிறப்பாக உள்ளது.
இந்த வசதி உங்களின் chat பகுதியில் இருக்கும் இதன் மூலம் அவர்கள் எண்ணை அழைத்து பேசலாம். கூகுள் இந்த வசதி ஆரம்பித்த 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் முறைக்கும் மேலாக அழைக்கப்பட்டுள்ளது அல்லது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.
Related posts:



{ 21 comments… read them below or add one }
மிக உபயோகமான பகிர்வு. நன்றி கிரி.
நல்லா இருக்கு பதிவு கிரி
Enthiran பதிவுக்கு waiting கொஞ்சும் மனசு வைங்க
பகிர்வுக்கு நன்றி கிரி.
//கூகுளை பாராட்டி எனக்கு சலித்து விட்டதால்//
நான் கூட இதே நினைத்தேன், உங்களுக்கு புது வேலை கிடைத்ததாக சொன்னீர்கள் ஆனால் அது கூகுளில் என்று சொல்லவே இல்லையே என்று கேட்க நினைத்தேன்…:-)
ராமலக்ஷ்மி அருண் சிங்கக்குட்டி வருகைக்கு நன்றி
@அருண் எந்திரன் பாடல் வெளிவந்து ரொம்ப நாளேச்சே அருண்! இதன் பிறகு நான் எழுத என்ன இருக்கிறது? ஏற்கனவே பலர் எழுதி விட்டார்களே!
@சிங்கக்குட்டி நல்ல வேளை நினைத்தீர்கள்! முடிவே பண்ணாம இருந்தீங்களே!
உபயோகமான தகவல்கள்
நன்றி கிரி
“Priority Inbox” பற்றி தெரியும் , ஆனால் Google Voice to Telephone இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன்….
கிரி, முதல் முறை சில சென்ட்-கள் இலவசம்.. அத யூஸ் பண்ணி டெஸ்ட் பண்ணி பாக்கலாம்.
“இதன் பிறகு நான் எழுத என்ன இருக்கிறது?”
எத்தனையோ எழுத்தாளர் இருந்தாலும் சுஜாதா சார் எழுதுறது மாதிரி இருக்குமா?
அந்த மாதிரி தான் கொஞ்சும் மனசு வெச்சு எழுதுங்க
இந்த வசதி இந்தியாவில் இன்னும் அறிமுக படுத்த படவில்லை.
Google Voice is not available in your country.
Thanks for visiting Google Voice. We’re not yet open for users outside the US, but are planning to expand our service to additional countries in the future.
அருமையான தகவல்கள் ,வழக்கம் போலவே …,எப்படி சொல்றதுன்னு தெரியலை ஆனா சொல்லி தான் ஆகணும் போல ”நல்ல பதிவு ,நன்றி கிரி ”
கிரி
ஹி ஹி ஹி ஹி …,ஒரு பதிவு போட்டிருகேன் சும்மா வந்து பாருங்களேன் …ஹி ஹி ..,
http://muttalpaiyannan.blogspot.com/2010/09/blog-post.html#comments
ஜீவதர்ஷன், புதுவை சிவா, தமிழ், சோம்ஸ், சோமசுந்தரம் மற்றும் சங்கர் வருகைக்கு நன்றி.
@தமிழ் மாற்றி சொல்றீங்களா
@சோம்ஸ் ஆமாம் அதுல பத்து சென்ட் இருக்கு
@சோமசுந்தரம் இந்தியாவில் இருந்து அழைக்க முடியவில்லை என்று கூறுகிறீர்களா! சிங்கப்பூர் ல் இருந்து என்னால் அழைத்து பேச முடிந்தது.
@சங்கர் வலைப்பதிவு ஆரம்பித்தது பற்றி சொல்லவே இல்லையே! இவ்வளோ தாமதமா சொல்றீங்க.. ரைட்டு
@அருண் சரி அருண்! உங்களுக்காகவும் மற்றும் சிலருக்காகவும் எழுதுகிறேன் (அடுத்த வாரம்)
ஹாய் கிரி,
கூகுளே ப்ரயொரிட்டி இன்பாக்ஸ் வந்துடுச்சு
//@தமிழ் மாற்றி சொல்றீங்களா
இல்லீங்க கிரி, Google Voice Chat தெரியும், Google Voice to Telephone பற்றி தெரியாது.
@குழந்தை எனக்கும்
@தமிழ் நீங்க முதல்ல “Priority Inbox” பற்றி தெரியும் , ஆனால் Google Voice to Telephone இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்” என்று சொன்னீங்களா! அதான் கேட்டேன். ஏன் என்றால் இரண்டுமே புதிய வசதி
அருமையாக எழுதி உள்ளீர்கள்… VOIP technology மூலம் அனைத்து நாடுகளுக்கும் இன்டர்நெட்ல் இலவசமாக பேசலாம். நான் கடந்த 5 வருடங்களாக voipraider (www.voipraider.com )உபயோகித்துக் கொண்டுள்ளேன். ஆனால் இந்த வசதி இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளுக்கு இல்லை
கிரி,
Vikatan crap letter ku oru pathivu podunga Giri.. unga style la adithadi pathiva padichu romba naal aachu… Rombaa naala “Poo Pathai”la than unga pathivu iruku ore oru “SINGA PATHIVU” venum.. plssssssss
@ஜாவா நன்றி
@அருண் நீங்கள் கூறுவது உண்மை தான். காரணம் முன்பெல்லாம் இவர்கள் கூறுவதற்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு இருப்பேன். ஒவ்வொருவருக்கும் சென்று கமெண்ட் போட்டு சண்டை போட்டுக்கொண்டு இருப்பேன். தற்போதெல்லாம் இவர்களை மதிப்பதுமில்லை அப்படி செய்வதால் ஒரு பயனுமில்லை என்று புரிந்து கொண்டேன்.
தேவை வரும் போது மட்டும் பதிவை போட்டு நொக்கி விடலாம் என்று இருக்கிறேன். இந்தப்பிரச்சனை மேலும் தொடர்ந்தால் இது பற்றி கண்டிப்பாக எழுதுகிறேன்.
பயனுள்ள கட்டுரை கிரி சார். தங்களது பயனுள்ள இதுபோன்ற சேவை எங்களைப் போன்றவர்களுககு அவசியம் தேவை.