உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக தற்போது நடந்து கொண்டுள்ளது. கிரிக்கெட் போலவே கால்பந்து போட்டியிலும் பலரும் எதிர்பார்த்த பிரபல அணிகள் மண்ணை கவ்வி விட்டன. பிரேசிலும் அர்ஜென்டினாவும் பரிதாபமாக தோல்வி அடைந்து விட்டன. அதிலும் அர்ஜென்டினா ஜெர்மனியிடம் மரண அடி வாங்கி விட்டது.
இந்த பிரபல அணிகள் தோற்றால் கூட கவலைப்படாத பல கால்பந்து ரசிகர்கள் பராகுவே நாடு தோற்றத்துக்கு விசும்பி விசும்பி அழுகிறார்களாம் ஹி ஹி அட! என்னய்யா இது ஒன்றும் புரியலையே என்று சொல்கிறீர்களா!
கால்பந்து நட்சத்திர வீரர்களை விட தற்போது சூடு கிளப்பிக்கொண்டு இருப்பவர் யார் தெரியுமா! பராகுவே நாட்டை ஆதரிக்கும் அந்த நாட்டின் ஒரு பெண் ரசிகை தான். கால்பந்து போட்டிகள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த முறை அது Larissa Riquelme என்ற பெண் வடிவில் வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு இந்தப்பெண்ணை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை அப்படி தெரியவில்லை என்றால் என்னத்தை போட்டிகளை பார்த்தார்களோ!
சரிப்பா அப்படி என்னதான் அந்த பொண்ணு பண்ணிச்சுன்னு கேட்கறீங்களா! இந்தப்பொண்ணு கிளுகிளுப்பா உடை அணிந்து கொண்டு செல் ஃபோனை அவருடைய மார்புக்கு இடையில் வைத்துக்கொண்டு அவர் இருந்த ஏரியாவையே கலக்கி கொண்டு இருந்தார். இதை ஊடகங்கள் சும்மா விடுவார்களா! ஆளாளுக்கு இணையத்திலும் செய்திதாள்களிலும் இந்தப்பெண்ணின் படத்தை போட்டு பிரபலமாக்க…. அதன் பின்னர் ரசிகர்கள் போட்டியை பார்க்கிறார்களோ இல்லையோ இந்தப்பெண்ணை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சிங்கப்பூர் பண்பலை வானொலி அறிவிப்பாளர் எல்லாம் பராகுவே வெற்றி பெற ஜொள்ளிக்கொண்டு இருந்தார். உலகம் முழுவதும் உள்ள செய்திதாள்களிலும் இணைய தளங்களிலும் இவரைப்பற்றி செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
இப்படி இருக்கும் போது தான் அந்தப்பெண் அதிரடியாக ஒரு செய்தியை வெளியிட்டார் அதாவது பராகுவே அணி செமி பைனல் சென்றால் நிர்வாணமாக அர்ஜென்டினா தொலைக்காட்சி முன்னால் தோன்றுவது தான்.. உடல் முழுவதும் பராகுவே நாட்டின் தேசிய கொடியின் வண்ணத்தை பூசிக்கொண்டு என்ற நிபந்தனையுடன் என்பதாகும். அவ்வளவு தான்! நம்ம மக்கள்ஸ் பராகுவே வெற்றி பெற வேண்டும் என்று தீ மிதிக்காத குறையாக வேண்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் அனைவரின் நினைப்பிலும் பராகுவே அணி ஸ்பெயின் அணியுடன் தோற்று மண்ணை போட்டுவிட்டது கிர்ர்ர்ரர்ர்ர்ர்
அணி தோற்றாலும் Larissa Riquelme ஏதாவது தள்ளுபடி தருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களாம் LoL
இந்தப்பெண் பராகுவே நாட்டில் உள்ளாடை மாடலாக இருக்கிறார், இந்த திடீர் பிரபலத்தால் டாப் கியரில் ஸ்பீடா மீட்டர் பறக்கிறதாம். இதைத்தான் எதிர்பாராதது என்பதா! விளையாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் (ரசிகர் என்பதை தவிர) இப்படி ஒரு மாதத்தில் உலக பிரபலம் ஆக முடியும் என்பதற்கு இவர் ஒருவரே சாட்சி!
உங்களுக்கு மேலும் இவரை பற்றிய படம் வேண்டும் என்றால்!
www.images.google.com தளத்தில் சென்று Larissa Riquelme தேடினால் உங்கள் கண்ணை கட்டும்படி படங்கள் வரும். இதயம் பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், படங்கள் விவகாரமாக இருப்பதால் வேறு படங்களை இங்கே இணைக்கவில்லை. சேம்பிளுக்கு இங்குள்ள காணொளியை பார்க்கவும். இதைபார்த்து டென்ஷன் ஆனால் அதற்க்கு நான் பொறுப்பல்ல குறிப்பாக பெண்கள்
அதனால் பெண்கள் பார்க்க வேண்டாம், அப்புறம் உங்க இஷ்டம்.
Related posts:


{ 16 comments… read them below or add one }
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
வாழ்க உங்கள் தொண்டு
மாடலுக்கு வேண்டிய தகுதி எப்பவோ வந்திருக்கும் போல் இருக்கு ஆனா இப்ப தான் கண்டுகிறாங்களா? ரொம்ப லேட்.
கிரி ,
தகவலுக்கு நன்றி …,
////அதாவது பராகுவே அணி செமி பைனல் சென்றால் நிர்வாணமாக அர்ஜென்டினா தொலைக்காட்சி முன்னால் தோன்றுவது தான்..////
ஸ்பெயின் அணியின் டேவிட் வில்லாவுக்கு எனது கண்டனகளை தெரிவித்து கொள்கிறேன்
luckily argentina has lost
fifa வுக்கு ஒரு வேண்டுகோள் …,ஸ்பெயின் அடித்த கோல் OFFSIDE என அறிவிக்க வேண்டி Larissa ரிகுல்மே ரசிகர் பேரவை சார்பில் தெரிவிக்க படுகிறது ..,;))))
////உங்களுக்கு மேலும் இவரை பற்றிய படம் வேண்டும் என்றால்! http://www.images.google.com தளத்தில் சென்று Larissa Riquelme தேடினால் உங்கள் கண்ணை கட்டும்படி படங்கள் வரும்.////
ஐயையோ படத்தை பார்த்தேன் ,அதிர்ந்தேன் ..,தயை கூர்ந்து பதிவர்கள் அலுவலகத்தில் பார்க்காதீர்கள் …,,
அப்புறம் நான் படத்தை பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்தேன் ..,ஹி ஹி ஹி ஹி
நீங்களுமா? சொல்லவே இல்ல
எல்லாம் சரி கிரி,(கவித)
மொபைல எதுக்கு அங்குனக்குள்ள வச்சிருக்காங்க? அத சொல்லாம விட்டா எப்டி?
சார்ஜ் ethurathuku தான் நண்பா
ஓ…… அங்க மின்சாரம் உற்பத்தி ஆகுதாதாதாதா…..? அப்ப கலைஞர்ட்ட சொல்லி அந்த பொண்ண தூக்கிற வேண்டியதுதான்.
இன்னும் அந்த பொண்ண தூக்ல நெனச்சுட்டு இருக்கீங்களா…அது எப்பவோ என்னோட அந்தபுரதுகு வந்தாச்சு ஹிஹிஹிஹி….இந்த உலகம் எப்ப தான் என்னா புரிசுஞ்சுகுவான்களோ….
கிரி!எப்படி இருக்கீங்க?
//உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு இந்தப்பெண்ணை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை அப்படி தெரியவில்லை என்றால் என்னத்தை போட்டிகளை பார்த்தார்களோ!
//
பதிவுல கால்பந்து அடிச்சு விளையாடும் ஒரே ஆள் நான் தான்.எனக்குத் தெரியாம எப்படி?கண்ணுல மண்ணை வாரித் தூவின அல்ஜசிரா ஒழிக:)
மாணிக்கம் வடுவூர் குமார் சங்கர் ராம்ஜி ஜீவதர்ஷன் காத்தவராயன் ராஜநடராஜன் ரசிகன் மற்றும் வீராசாமி வருகைக்கு நன்றி
@சங்கர்
@ காத்தவராயன் அப்ப தான் நீங்க இப்படி எல்லாம் யோசிப்பீங்கன்னு
@ ராஜநடராஜன் நான் ஒரு போட்டி கூட பார்க்கலை, இதை மட்டும் செய்தில பார்த்து விட்டேன் ஹி ஹி
@ ஆற்காடு வீராசாமி நல்ல வேளை இதோடு நிறுத்தினீங்களே!
இந்த கமெண்ட்ஸ் பார்த்துட்டு ரொம்ப நாளுக்கு அப்புறம் அதிகமா சிரிச்சேன். நன்றி கிரி.
எல்லாம் சரி கிரி,(கவித)
மொபைல எதுக்கு அங்குனக்குள்ள வச்சிருக்காங்க? அத சொல்லாம விட்டா எப்டி?
—- சார்ஜ் ethurathuku தான் நண்பா
———-ஓ…… அங்க மின்சாரம் உற்பத்தி ஆகுதாதாதாதா…..? அப்ப கலைஞர்ட்ட சொல்லி அந்த பொண்ண தூக்கிற வேண்டியதுதான்.
—————–11 கலைஞர் July 7, 2010 at 3:01 PM
—————–இன்னும் அந்த பொண்ண தூக்ல நெனச்சுட்டு இருக்கீங்களா…அது எப்பவோ என்னோட அந்தபுரதுகு வந்தாச்சு ஹிஹிஹிஹி….இந்த உலகம் எப்ப தான் என்னா -புரிசுஞ்சுகுவான்களோ….
நன்றி கிரி & செந்தில், என்னோட கமெண்ட்ஸ் போட்டதுக்கு கிரி நன்றி சொல்லிக்குறேன். செந்தில் நன்றி, நான் போட்ட கமெண்ட்ஸ் பார்த்து அதுவும் ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சதா சொல்லி இருக்கீங்க… இது மாத்ரி கமெண்ட்ஸ் போடுவோம், சிரிப்போம்….