“உதை”ப்போட்டி கோலாகலம் !

by கிரி on June 12, 2010

fifa உதைப்போட்டி கோலாகலம் ! லக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “உதை” ப்போட்டி கோலாகலமாக தொடங்கி விட்டது. அனைத்து நாடுகளிலும் குறிப்பாக ஐரோப்பாவில் கால்பந்து ஜூரம் அனைவரையும் பிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எப்படி கிரிக்கெட்டிற்கு தாறுமாறான ரசிகர்கள் இருக்கிறார்களோ அதை விட பல மடங்கு வெறித்தனமான கால்பந்து ரசிகர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள்.

பல பில்லியன் பணம் புழங்கும் இந்த விளையாட்டு இன்னும் ஒரு மாதத்திற்கு கால்பந்து ரசிகர்களை உற்சாகத்தில் வைக்க போவது நிஜம். ஒவ்வொரு முறை நடக்கும் போட்டியின் போதும் எதிர்பாராத சுவாராசியமான நிகழ்வுகள் நடக்கும். இந்த முறை என்ன நடக்கும் என்பது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

FIFA 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த முறை தென் ஆப்ரிக்காவில் நடைபெறுகிறது. நாடே சந்தோசத்தில் திளைத்துக்கொண்டுள்ளது, துவக்க விழா நிகழ்ச்சிகள் அவர்கள் பாரம்பரிய முறைப்படி ஆடி அசத்தி இருக்கிறார்கள். பல நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டின் வெற்றிக்காக கடுமையாக போராடப்போகிறார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் இப்போட்டிக்காக அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்படும் இந்த உலகக்கோப்பைக்காக இடுப்பாட்ட புகழ் ஷகிரா வக்கா வக்கா (Waka Waka) என்ற பாடலைப்பாடி ஆடியுள்ளார்.. பாடலைப்பாருங்கள் ங்கொக்க மக்காவாக இருக்கிறது. அடி தூள்! இந்தப்பாடல் ஜூன் 4 YouTube ல்வெளியானது ஆனால் இந்தப்பாடல் எவ்வளவு முறை YouTube ல் பார்க்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டால் கால்பந்து ஜூரம் மற்றும் ஷகிரா பவர் பற்றி தெரிந்துகொள்ளலாம் icon wink உதைப்போட்டி கோலாகலம் !

No related posts.

{ 10 comments… read them below or add one }

Jawa June 12, 2010 at 7:45 PM

சக்க பாட்டு …. கெட்ட ஆட்டம் போங்க !!!
தீம் சாங்கும் சூப்பர் … ரஹ்மான் ஸ்டைலில் உள்ளது… url : http://www.youtube.com/watch?v=xhM-cpSwrmM

Reply

eppoodi June 13, 2010 at 1:01 AM

ஷகீரா எல்லாம் எனக்கு முக்கியமில்ல, ஜெர்மனி வென்றாகணும் அதுதான் முக்கியம் :-)

Reply

எப்பூடி June 13, 2010 at 1:04 AM

ஷகீரா எல்லாம் எனக்கு முக்கியமில்ல ஜெர்மனி வென்றாகணும் அதுதான் முக்கியம் :-)

Reply

எப்பூடி June 13, 2010 at 1:03 AM

ஷகீரா எல்லாம் எனக்கு முக்கியமில்ல, ஜெர்மனி வென்றாகணும் அதுதான் முக்கியம் :-)

Reply

shankar June 13, 2010 at 10:49 PM

கிரி ,

என்னக்கு argentina வென்றாகணும் :)

கிரி இந்த பாட்ட download பண்ணனும் நானும் காலையில் இருந்து ட்ரை பண்றேன் …,சுட்டி இருந்தால் கொடுக்கவும் ,you tube ல டவுன்லோட் ஆகமட்டேன்து …,இதை பின்னோட்டம் அல்லாது தந்தி போல் பாவித்து பதில் தரவும் …டான்ஸ் ல கலக்குறாங்க அம்மணி ….,:)))

இப்படிக்கு ,
ஷகிரா பேரவை
தமிழ் நாடு -சென்னை

Reply

கிரி June 14, 2010 at 5:56 AM

@ஜாவா ஒன்றும் சொல்வதற்கில்லை ;-)

@ஜீவதர்ஷன் நீங்க ஜெர்மனி “தீவிர” ரசிகரா! இத்தனை முறை சொல்லிட்டீங்க! :-)

@ஷங்கர் என்னுடைய இந்த (http://www.giriblog.com/2010/04/internet-news-29-04-2010.html) பதிவில் உள்ளபடி YouTube ல் தரவிறக்கம் செய்து பாருங்கள் இல்லை என்றால் வேறு எங்காவது கிடைத்தால் உங்களுக்கு மின்ன்னஞ்சல் செய்கிறேன் :-)

Reply

Kumar June 14, 2010 at 2:20 PM

எனக்கு அர்ஜென்டினா!.

அந்தியூர் மாளவிகா ரசிகர் மன்றம்.

Reply

வருண் June 14, 2010 at 10:17 PM

பாட்டுப்பத்தி எதுவ்ம் தெரியாது, கிரி. ஆனால் இங்கே , க்ரிக்கட் போலில்லாமல், கால்ப்பந்து என்பதால் எல்லா மேட்ச் களையும் பார்க்க முடியுது! இ எஸ் பி என் மற்றும் எ பி சி யில்! ஆனால் பகல் நேரங்களில்தான் லைவ் பார்க்க வேண்டும்! வேலை நேரம்! :( அதனால் வீக் எண்ட்தான் பார்க்கிறேன். However I am keeping track of it :)

Reply

shankar June 16, 2010 at 5:04 AM

கிரி ,

டவுன்லோட் பண்ணியாச்சி thanks

shankar

Reply

கிரி June 19, 2010 at 12:28 PM

@வருண் அமெரிக்கா போட்டியில பஜ்ஜி ஆகிடுச்சு போல இருக்கே! ;-) இப்ப போட்டிய பார்த்துட்டு இருப்பீங்க :-) Happy Weekend!

@ஷங்கர் அது ;-)

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed