இணையம் பற்றிய செய்திகள் [15-06-2010]

June 15, 2010

Google Buzz Reshare

grey இணையம் பற்றிய செய்திகள் [15 06 2010]Google Buzz தற்போது பரவலாக அனைவரும் பயன்படுத்தும் வசதி குறிப்பாக பதிவர்கள். இதை அதிகமா பயன்படுத்த ஆரம்பித்து பதிவு எழுதுவதையே ஒரு சிலர் குறைத்து விட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! grey இணையம் பற்றிய செய்திகள் [15 06 2010] இதில் கூகிள் வழக்கம் போல பல வசதிகளை ஏற்படுத்தி வருகிறது அதில் தற்போது மற்றவர்கள் பகிர்ந்த செய்திகளை நாம் பகிர்ந்து கொள்ள Reshare என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Gmail Drag and Drop

கூகிள் மின்னஞ்சலில் attachment செய்வதை Drag and Drop முறையில் செய்யலாம் என்று அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து தற்போது படங்களையும் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் Drag and Drop முறையில் இணைக்கலாம் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளோட கடமையுணர்ச்சிக்கு ஒரு வரைமுறையே இல்லாம போச்சு! ஏதாவது செய்துட்டே இருக்காங்கப்பா! தற்போது இந்த வசதி க்ரோம் உலவியில் மட்டுமே வேலை செய்யும், விரைவில் அனைத்து உலவிக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

Twitter

grey இணையம் பற்றிய செய்திகள் [15 06 2010]ட்விட்டர் தற்போது எல்லோரையும் குறிப்பாக பிரபலங்களை ஆட்டி படைத்துக்கொண்டு உள்ளது. புதிது புதிதாக பலர் இணைந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் தமிழ் திரை உலக நட்சத்திரங்களான தனுஷ் நமீதாவும் இதில் இணைந்துள்ளனர் இதில் ஏற்கனவே பலர் இணைந்துள்ளனர். உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை பெற்று தற்போதைய நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் கலக்கிக்கொண்டுள்ளார். நமது அமிதாப் உலகளவில் பிரபலமாக இருந்தாலும் அவரை விட ஷாருக் கானுக்கு தான் அதிக பின் தொடர்பவர்கள் உள்ளார்கள், இது குறித்து அவருக்கு அமிதாப் வாழ்த்து தெரிவித்து பெருமூச்சு விட்டுக்கொண்டார். பதிவுலகில் தான் பின்தொடர்பவர்களை பெறுவதில் அடித்துக்கொள்கிறார்கள் என்றால் பிரபலங்கள் கூட இதே போல தானா!  பிரபலம் என்றாலே பிரச்சனை தான் போல grey இணையம் பற்றிய செய்திகள் [15 06 2010]

Chrome Stable Release

க்ரோம் உலவி தற்போது அனைவரின் மதிப்பையும் பெற்று வருவதை பலர் அறிந்து இருப்பீர்கள். உலவி சந்தையில் வேகமாக தனது ஆதிக்கத்தை விரிவாக்கி வருகிறது. க்ரோம் stable வெளியீட்டை தரவிறக்கம் செய்ய பின் வரும் சுட்டிகளை சொடுக்கவும். Windows Mac Linux. நீங்கள் ஏற்கனவே க்ரோம் பயன்படுத்திக்கொண்டு இருந்தால் அதுவே தானியங்கியாக புதுப்பித்து விடும்.

Skype Group Video Chat

grey இணையம் பற்றிய செய்திகள் [15 06 2010]Skype உரையாடி (Chat) ல் பலர் குழுவாக உரையாடலாம் (Group Chat) என்பது பலருக்கு தெரிந்து இருக்கும் அதே போல குழுவாக வீடியோ மூலமாக உரையாட வசதியை ஏற்படுத்தியுள்ளது. பலர் ஏற்கனவே இதை பயன்படுத்திக்கொண்டு இருக்கலாம், அறியாதவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

iPhone 4G

Apple iPhone தற்போது உலகையே கலக்கி வருகிறது என்றால் மிகையில்லை. நாளுக்குநாள் அதற்கு ரசிகர் வட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.   அதற்கு முக்கிய காரணம் அதன் வடிவமைப்பு எளிமை புதிய வசதிகள் மற்றும் செயல்திறன். இந்த மாதம் தனது அடுத்த வெளியீடான 4G தொலைபேசியை அறிமுகப்படுத்துகிறது. இதற்கு இந்தியாவில் வரவேற்பு இருந்தாலும் வெளிநாடுகளை ஒப்பிடும் போது இது ஒன்றுமேயில்லை. வெளிநாடுகளை குறிப்பாக ஐரோப்பா அமெரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பலர் பைத்தியமாக இருக்கிறார்கள் அதன் வெளியீட்டை எதிர்பார்த்து. iPhone 4G பற்றி தமிழில் விரிவாக “ஒருவார்த்தை” என்ற தளத்தில் எழுதப்பட்டுள்ளது. கண்டிப்பாக படித்துப் பாருங்கள் சிறப்பாக உள்ளது. இதை வாங்கப்போவதில்லை என்று நீங்கள் நினைத்தாலும் அப்படி என்ன தான் அதில் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் தவறில்லையே!

YouTube

YouTube பலரை கவர்ந்துள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது. சமீபத்தில் தான் தனது 5 வருட நிறைவு கொண்டாட்டத்தை விமர்சையாக கொண்டாடியது. தற்போது அதற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை 2 பில்லியனை கடந்து சாதனை செய்துள்ளது. என்னுடைய YouTube சப்ஸ்க்ரைப் செய்ய இங்கே செல்லவும்.

Hotmail

ஜிமெயில் பலரது விருப்ப தேர்வாக இருந்தாலும் ஹாட்மெயில் உடன் ஒப்பிடும் போது அதை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதில் பாதி தான். இன்னமும் ஹாட்மெயில் தான் முன்னணியில் உள்ளது. ஜிமெயிலின் வளர்ச்சி அதற்கு பீதியை ஏற்படுத்தி இருப்பது உண்மை தான் அதனால் தன்னுடைய இடத்தை தக்க வைக்க பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஹாட்மெயில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகளை பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

Top 1000 Sites

grey இணையம் பற்றிய செய்திகள் [15 06 2010]கூகிள் நிறுவனமான doubleclick ad planner Top 1000 இணையதளங்களை பட்டியலிட்டுள்ளது. இதை கூகிள் நடத்தியதால் ஜிமெயில் கூகிள் தேடல் போன்ற தனது சில தளங்களை இதில் சேர்க்கவில்லை. இதில் சில கட்டுப்பாடுகளும் உண்டு ஆபாச தளங்கள், மறைக்கப்பட்ட தளங்கள், விளம்பர தளங்கள் மற்றும் மிக மெதுவாக திறக்கும் தளங்கள் (அதிக பார்வையாளர்களை கொண்டு இருந்தாலும்) போன்றவை இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இந்த வரிசையில் facebook அதிக வருகையாளர்களை பெற்று முதலிடத்திலும் அடுத்ததாக Yahoo! தளமும் மூன்றாவது இடத்தைப் Live ம் முறையே பெற்றுள்ளன. உங்களது விருப்ப தளங்கள் எந்தெந்த இடத்தைப் பெற்றுள்ளன என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்

facebook Privacy Issue

grey இணையம் பற்றிய செய்திகள் [15 06 2010]உலகளவில் அதிக பார்வையாளர்களை facebook சமூக தளம் பெற்றுள்ளது (கூகிள் கருத்துகணிப்பை நடத்தியதால் தன்னை இதில் இணைத்துக்கொள்ளவில்லை இல்லை என்றால் அது தான் முதலிடத்தில் இருக்கும்). தற்போது facebook பயனாளர்களின் தனிப்பட்ட (Privacy)தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது என்று இதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால் பலர் இதில் இருந்து தங்கள் கணக்கை துண்டித்துக்கொண்டுள்ளனர்.

இது பற்றி என் தளத்தை படிக்கும் ஜாவா அவர்கள் கூறியதால் இது பற்றி தெரிந்துகொள்ள தேடிய போது இது உண்மை தான் என்று தெரிய வந்தது. இதற்காகவே ஒரு தளம் உருவாக்கி வைத்துள்ளார்கள் எத்தனை பேர் இவ்வாறு தங்கள் கணக்கை முடித்துக்கொள்கின்றனர் என்று. அது பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் http://www.quitfacebookday.com/ செல்லவும். facebook ல் உள்ள மொத்த பயனாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது கணக்கை முடித்துக்கொண்டவர்கள் மிகக்குறைவு என்றாலும் facebook தன் தவறை சரி செய்து கொள்ளவில்லை என்றால் பின்னாளில் இது அதிகரிக்கலாம்.

Google Doodle

grey இணையம் பற்றிய செய்திகள் [15 06 2010]உலகம் முழுவதும் உலகக்கோப்பை கால்பந்து கொண்டாடத்தில் இருக்கும் போது கூகிள் மட்டும் சும்மா இருக்குமா! தன்னுடைய தேடலில் World Cup என்று யார் தேடினாலும் படத்தில் உள்ளது போல வரும்படி வடிவமைத்துள்ளது. இது எப்படி இருக்கு! grey இணையம் பற்றிய செய்திகள் [15 06 2010]

 

என்னுடைய பழைய ரீடர் முகவரியை பயன்படுத்துபவர்கள் புதிய முகவரியான http://feeds.feedburner.com/girirajnet ஐ சிரமம் பார்க்காமல் புதுப்பித்துக்கொள்ளவும்.

{ 12 comments… read them below or add one }

தேவன்மாயம் June 15, 2010 at 9:11 AM

புதுச் செய்திகள் எனக்கு கிரி!

Reply

தேவன்மாயம் June 15, 2010 at 9:12 AM

பீட் பர்னர் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!!

Reply

நட்புடன் ஜமால் June 15, 2010 at 3:53 PM

லேட்டஸ்ட் அப்டேட்டுகளை லேட்டாக்காமல் தந்து விடுகின்றீர்கள் கிரி :)

Reply

Logan June 15, 2010 at 4:07 PM

தகவலுக்கு நன்றி கிரி

Reply

shirdi.saidasan June 15, 2010 at 8:13 PM

சூடு சூடோ சூடு. லேட்டஸ்ட் நியூஸை தாங்கி வரும் உங்கள் பதிவுகளை சொன்னேன். நன்றி.

Reply

eppoodi June 15, 2010 at 11:07 PM

//உலகம் முழுவதும் உலகக்கோப்பை கால்பந்து கொண்டாடத்தில் இருக்கும் போது கூகிள் மட்டும் சும்மா இருக்குமா! தன்னுடைய தேடலில் World Cup என்று யார் தேடினாலும் படத்தில் உள்ளது போல வரும்படி வடிவமைத்துள்ளது. இது எப்படி இருக்கு! //

சூப்பரா இருக்கு

Reply

சிங்கக்குட்டி June 16, 2010 at 6:38 AM

//புதிது புதிதாக பலர் இணைந்து கொண்டுள்ளனர்//

ஹி ஹி ஹி நான் “ட்விட்டர்” துவங்கியது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா :-)

சும்மா :-)

“iPhone 4G” அடுத்த வாரம் இங்கு வெளிவருகிறது.

அருமையான தகவல்களுக்கு நன்றி கிரி.

Reply

jawa June 16, 2010 at 6:42 AM

Since 1998, நானும் hotmail (for very offical purpose) உபயோகிப்பவன் தான்!! ( same old fashion)… மாறவும் விருப்பமில்லை!!! GMail- லில் எனக்கு account இருந்தாலும் fancy ஆகத்தான் தெரிகிறது!! “Linkedin” பற்றியும் எழுதுங்கள்!

Reply

Jawa June 16, 2010 at 9:42 AM

நல்ல தகவல்கள் !!! நன்றி !!

Reply

shankar June 17, 2010 at 1:30 AM

கிரி ,

நல்ல தகவல் நன்றி கிரி :))

Reply

Arun June 18, 2010 at 4:17 AM

தல,
ரெண்டு விஷயம்;
1 எந்திரன் updates ஒரு பதிவா வேணும் ப்ளீஸ்
2 FIFA எந்த 4 டீம் semifinals வரும் நு உங்க opinion + எந்த டீம் உங்க view ல finals வின் பண்ணும்

நன்றி,
அருண்

Reply

கிரி June 19, 2010 at 12:26 PM

தேவா ஜமால் லோகன் ஷிர்டி சாய்தாசன் ஜீவதர்ஷன் சிங்கக்குட்டி ஜாவா ஷங்கர் மற்றும் அருண் வருகைக்கு நன்றி

@தேவா விரைவில் எழுதுகிறேன்

@ ஷங்கர் நப நப மாதிரியா! :-) ஆளை விடுங்க…

@ அருண் எந்திரன் பற்றி கண்டிப்பா எழுதறேன். ஏற்கனவே எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் தற்போது வேலை அதிகம் மற்றும் லினக்ஸ் நிறுவிக்கொண்டு இருக்கிறேன். அதில் கொஞ்சம் பிரச்சனை அதனால் என் கவனம் முழுவதும் அதில் உள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் கண்டிப்பாக பக்காவான தலைவர் இடுகையுடன் சந்திக்கிறேன் :-)

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed