உலகம் முழுவதும் உள்ள மக்களால் பல உலவிகள் (Browser) பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தற்போது அதிகம் பேரால் விரும்பப்படுவது ஃபயர் பாஃக்ஸ் தான். இதனுடன் வருவது Opera உலவியும் தான். உலகின் அதிவேக உலவியாக தனது 10.51 பதிப்பில் அறிவித்தது (ஆனால் எனக்கு இது வேகமாக இருப்பதாக தோன்றவில்லை). IE உலவியும் உலகில் பலரால் பயன்படுத்தப்படுகிறது ஆனால் இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளினால் பலரின் நன்மதிப்பை பெறத் தவறிவிட்டது.
இந்த இடைவெளியில் தற்போது கலக்கிக்கொண்டு இருப்பது சந்தேகமில்லாமல் கூகிள் க்ரோம் தான். இது தற்போது தனது அடுத்த சோதனை (Beta) பதிப்பை வெளியிட்டுள்ளது. உண்மையிலேயே நன்கு வேகமாக உள்ளது.
க்ரோம் உலவியின் சிறப்பு
கூகுளின் தாரக மந்திரமே எளிமை பாதுகாப்பு வேகம். இதையொட்டியே தனது தயாரிப்புகளை அமைக்கும்
அதற்கு க்ரோம் உலவியும் விதிவிலக்கல்ல. க்ரோம் உலவியில் தேவையற்ற பகுதி என்று எதுவுமே இருக்காது. நமக்கு தேவையான பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டே அவசியமில்லாமல் நாம் படிக்கும் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும் பகுதிகளை நீக்கியதே இதன் முதல் சிறப்பு. இதில் ஒரு ஒரு முகவரி பகுதி (Address bar) மட்டுமே இருக்கும். இதன் மூலம் நாம் அடிக்கடி பக்கங்களை ஸ்க்ரால் செய்யாமல் படிக்க முடியும். தேவையற்ற எதுவுமே இல்லாததால் கிளிக் செய்த அடுத்த நொடி அல்லது அதற்கடுத்த நொடி க்ரோம் உலவி திறக்கும். இதுவே நமக்கு இதை பயன்படுத்த உற்சாகத்தை கொடுக்கும்.
இது சுதந்திர மென்பொருள் (Open source) என்பதால் இதற்கு நீட்சிகளை (Extensions) பலர் வடிவமைத்து வருகிறார்கள். இதில் பல நீட்சிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, குறிப்பாக கூற வேண்டும் என்றால் எனக்கு எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியவில்லை. இது பற்றிய விரிவான விளக்கங்களை தனிப்பதிவாக வெளியிடுகிறேன்.
இந்த உலவியை நீங்கள் திறக்கும் போதே இதில் கனமில்லாமல் ஸ்லிம்மாக இருப்பதைப்போல உணர்வீர்கள், அந்தளவிற்கு இதன் வடிவமைப்புள்ளது. மிகைப்படுத்தி கூறவில்லை.
புதிய க்ரோம் உலவியில் என்ன சிறப்பு?
வேகம்
இதில் வேகம் தான் முக்கிய சிறப்பு, இதன் வேகத்தை தாறுமாறாக உயர்த்தி இருக்கிறார்கள். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் க்ரோம் வெளியிட்ட போது இருந்த வேகத்தை விட படிப்படியாக ஒவ்வொரு பதிப்பின் போதும் அதிகரித்து 213% மற்றும் 305% முறையே தற்போதைய பதிப்பில் அதிகரித்துள்ளார்கள் (பார்க்க படங்கள், படங்கள் நன்றி கூகிள்)
Html5 தான் தற்போது கலக்கி வருகிறது. தற்போதைய Apple – Adobe சண்டையில் ஆப்பிள் நிறுவனம் ஃப்ளாஷ் க்கு பதிலாக இனி Html5 ஐ தான் பயன்படுத்தப்போவதாக அறிவித்து இணையத்தையே பரபரப்புக்குள்ளாக்கி வருகிறது. அந்த அளவிற்கு html5 முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் சில சிறப்புகளை இந்தப்பதிப்பில் இணைத்துள்ளதாக கூகிள் கூறியுள்ளது.
Adobe Flash
நான் முந்தையை பதிவில் விரைவில் க்ரோம் தன்னுடைய உலவி உடன் Adobe Flash ஐ இணைத்து தரப்போகிறது என்று கூறி இருந்தேன். அதை தற்போது இந்தப்பதிப்பில் நிறைவேற்றியுள்ளது. இனி இந்தப்பதிப்பை நீங்கள் நிறுவினாலே Adobe Flash ம் உடன் வந்து விடும். புதிய பதிப்புகள் ஏதாவது வந்தால் க்ரோம் உலவியே தானியங்கியாக அப்டேட் செய்து விடும்.
Sync
நீங்கள் ஏற்கனவே க்ரோம் உலவி பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கு Sync பற்றி தெரிந்து இருக்கும். க்ரோம் Sync என்பது உங்கள் க்ரோம் உலவியில் நீங்கள் வைத்துள்ள புக்மார்க்குகளை உங்கள் கூகிள் கணக்குடன் Sync செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் புக்மார்க்குகளை எங்கு இருந்து வேண்டும் என்றாலும் எளிதாக பயன்படுத்தலாம் க்ரோம் உலவியுடன். இதையே க்ரோம் தற்போது இன்னும் மேம்படுத்தியுள்ளது.
இனி புக்மார்க்குடன் க்ரோம் முகப்பு பக்கம், Theme, Startup settings, Web content settings மற்றும் உங்கள் மொழி ஆகியவற்றையும் Sync செய்து கொள்ள முடியும். இது ஒரு அட்டகாசமான சேவை. எங்கே சென்றாலும் நம்முடைய settings ஐ பயன்படுத்தலாம்.
Incognito Mode
உலவியில் மிகச்சிறப்பான பகுதி இது. நாம் தற்போது ஒரு சில இணைய தளங்களை ரகசியமாக பார்க்க வேண்டும் என்றால் அதாவது தடையம் இல்லாமல் அதற்கு இந்த வசதி பேருதவி செய்கிறது. இந்த வசதியை பயன்படுத்தும் போது இது எந்த ஒரு அடையாளத்தையும் விட்டுச்செல்லாது (History மற்றும் Cookies). எனவே வங்கி மற்றும் Adult தளங்களை பார்வையிட இந்த வசதியை பயன்படுத்தலாம் குறிப்பாக. பெரும்பாலனவர்கள் Adult தளங்களை பார்வையிடுகிறார்கள் அவர்களுக்கு இது ரொம்ப உதவியாக இருக்கும். இதில் முந்தைய பதிப்பில் நீட்சிகளை பயன்படுத்த முடியாது, இது தற்போதைய பதிப்பில் சரி செய்யப்பட்டுள்ளது. இனி நீட்சிகளை இதில் பயன்படுத்தலாம் Enable செய்வதன் மூலம்.
இந்த வசதியை உங்கள் அனைவருக்கும் நீங்கள் வெளி இடங்களில், நண்பர்கள் வீட்டில், பொது இடங்களில் குறிப்பாக Browsing Center ல் இணையத்தை பயன்படுத்தும் போது இந்த முறையை கையாளும்படி பரிந்துரைக்கிறேன். இதன் மூலம் உங்கள் கடவுச்சொல் (Password) மற்றும் உங்களை பற்றிய தகவல்கள் நீங்கள் ஏமாந்து விட்டுச்சென்ற தகவல்கள் சேமிக்கப்படாது. இதை க்ரோம் உலவியில் ctrl+shift+N அழுத்துவதன் மூலம் இந்த வசதியை எளிதாக அடையலாம்.
இந்த வேகமான பதிப்பை தரவிறக்கம் (Download) செய்ய இங்கே செல்லவும்.
கொசுறு
உண்மையில் இன்று, நேற்று பார்த்த சுறா படத்தை பற்றிய விமர்சனத்தை எழுதலாம் என்று தான் இருந்தேன். ஆனால் படத்தை சீரியஸ் ஆக எழுதுவது என்பது சிரமமாக இருப்பதால் அந்த எண்ணத்தை கை விட்டுவிட்டேன்.
No related posts.


{ 15 comments… read them below or add one }
நல்ல பதிவு. Google Chrome வந்த நாள் முதல் நான் பயன்படுத்தி வருகிறேன். கிளிக் செய்த அடுத்த நொடி அல்லது அதற்கடுத்த நொடி க்ரோம் உலவி திறக்கும், இதுவும் ஒரு காரணம் நான் க்ரோம் பயன்படுத்துவதற்கு. Opera 10.51-ல் அதன் தரவிறக்க வேகம் வியக்க வைக்கிறது. அதிவேகமாக கோப்புகளை தரவிரக்கம் செய்கிறது.
இணையம் இருந்தால் தான் இதை இன்ஸ்டால் செய்ய முடியுமா?
இப்போ வரை நெருப்பு நரி. இப்பதிவைப் பார்த்ததும் க்ரோம் தாவ ஆசை:)! நல்ல தகவல்கள். Sync interesting. நாம் வெளியூர் போகையிலோ வேறு கம்ப்யூட்டர் பயன்படுத்துகையிலோ ரொம்பக் கைகொடுக்கும்.
கொசுறே அருமையான விமர்சனமாய் அமைந்து விட்டது போலிருக்கிறதே:)!
மணி நீங்கள் சொல்வது சரி தான். Opera வில் தரவிறக்கம் சிறப்பாக இருக்கும் ஆனால் நான் FDM தான் பயன்படுத்துகிறேன்.
அருண் நீங்கள் http://www.google.com/chrome/eula.html?standalone=1 இங்கே சென்று முழுவதுமாக தரவிறக்கம் செய்து தேவைப்படும் போது நிறுவிக்கொள்ளலாம். நீங்கள் இதைத்தான் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இதில் சோதனை பதிப்புகள் இருக்காது. Stable release மட்டுமே இருக்கும்.
ராமலக்ஷ்மி க்ரோம் நீங்கள் பயன்படுத்த ஆரம்பித்தீர்கள் என்றால் மற்ற உலவிக்கு செல்லவே மாட்டீர்கள். அவ்வளவு சிறப்பாக உள்ளது. சுறா
கிரி ,
நான் ஆரம்பத்தில் இருந்தே chrome தான் உபயோகித்து வருகிறேன் மற்ற ப்ரௌசெர் விட மிகவும் சிறப்பாகவும் வேகமாகவும் உள்ளது …,
///க்ரோம் நீங்கள் பயன்படுத்த ஆரம்பித்தீர்கள் என்றால் மற்ற உலவிக்கு செல்லவே மாட்டீர்கள். அவ்வளவு சிறப்பாக உள்ளது.//
உண்மை தான் என்னிடம் AVANT BROWSER ,NETSCAPE NAVIGATOR ,MOZZILLA ,OPERA போன்றவைகள் இருந்தாலும் இதுவே சிறப்பாக உள்ளது
///உண்மையில் இன்று, நேற்று பார்த்த சுறா படத்தை பற்றிய விமர்சனத்தை எழுதலாம் என்று தான் இருந்தேன். ///
ஐயையோ ,ஐயையோ
வேண்டாம் வேண்டாம்
))
//ஆனால் படத்தை சீரியஸ் ஆக எழுதுவது என்பது சிரமமாக இருப்பதால் அந்த எண்ணத்தை கை விட்டுவிட்டேன்.//
நன்றிகள் பல கோடி:)))
Nalla thagaval Giri, nandri!!
Chrome ku 5 comments than neenga Sura va pottu iruntha 25 thandee irukum:)
“நான் ஆரம்பத்தில் இருந்தே chrome தான் உபயோகித்து வருகிறேன் மற்ற ப்ரௌசெர் விட மிகவும் சிறப்பாகவும் வேகமாகவும் உள்ளது ”
உண்மை தான் ஷங்கர்
“நன்றிகள் பல கோடி:))”
அருண் நான் கூடுமானவரை கிண்டல் செய்யாமல் ஓரளவு நேர்மையாக திரைவிமர்சனம் எழுத வேண்டும் என்று நினைப்பேன். இதில் அப்படி எழுதினால் என்னை காமெடியன் ஆக்கி விடுவார்கள் என்று பயந்து தான் எழுதாமல் விட்டு விட்டேன். டேய்! கிரி ரொம்ம்ம்ப நல்லவர்டான்னு
படம் வழக்கமான மசாலா தான் என்றாலும் விஜய் பில்டப் இதில் ரொம்ப அதிகம்.
சரியான பகிர்வு கிரி .
யாஹூ முதல் இப்போது வரும் அனைத்து இலவச மென் பொருளை நிறுவமுயலும் போது இதையும் சேர்த்து கொடுப்பது ஒரு நல்ல மக்கள் பயன் பாட்டு வியாபார யுக்தி
.
நான் இன்னும் பயன் படுத்தவில்லை, உங்கள் இடுகையை படித்ததும் விரைவில் முயற்சிக்கும் ஆசை வருகிறது.
அண்ணா வணக்கம்…
நீண்ட.. இடைவெளிக்கு பின் உலவ வந்துள்ளேன்.. இடைவெளிக்கு வருந்துகிறேன்..
அற்புதமான பதிவு..
எனக்கு பிடித்த நீட்சி Display web pages using IE in a tab.
Chrome-இன் வேகத்தை எப்படி விளக்குவது என்று யோசித்துபார்தேன், வடிவேலுவின் வாமா… மின்னல்.. காமெடி தான் நினைவிற்கு வருகிறது..
G Chrome is rocking….. but it’s not a developer friendly browser. Even, it has no support for Google Toolbar & many more addons…
நானும் குரோமுக்கு மாறி ரொம்ப காலம் ஆச்சு தல.
Incognito மோடி – எனக்குப் புதுசு. இனி வங்கிக் கணக்குகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிங்கக்குட்டி கார்த்திக் ராகுல் ராஜ் ரோஸ்விக் வருகைக்கு நன்றி
@கார்த்திக்
கார்த்திக் நீ சொல்வது போல உண்மையாகவே அந்த நீட்சி அருமை தான். இது ஒன்றிக்காகத்தான் IE பயனப்டுத்தவேண்டியதாக இருந்தது, இனி அதற்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.
@பால்ராஜ்
கூகிள் டூல் பார் தரும் பெரும்பாலான வசதிகளை கூகிள் நீட்சிகள்(Extensions) செய்கின்றன. எனவே அது தேவையில்லை..அவை இடத்தை அடைக்கும் என்றே அதை தவிர்த்து இருக்கிறார்கள். மற்றபடி பெரும்பாலான வசதிகள் உள்ளது. என்ன தேவை என்று கூறினால் தெளிவு படுத்த முயற்சிப்பேன்.
//@பால்ராஜ்
கூகிள் டூல் பார் தரும் பெரும்பாலான வசதிகளை கூகிள் நீட்சிகள்(Extensions) செய்கின்றன. எனவே அது தேவையில்லை..அவை இடத்தை அடைக்கும் என்றே அதை தவிர்த்து இருக்கிறார்கள். மற்றபடி பெரும்பாலான வசதிகள் உள்ளது. என்ன தேவை என்று கூறினால் தெளிவு படுத்த முயற்சிப்பேன்.//
hmm… many things (https://addons.mozilla.org/en-US/firefox/)… I am using “seoquake” & “firebug” with firefox. (I think “seoquake” is available for Chrome with some limited features now). Particularly the JS console is missing or not good in Chrome when comparing to FF.
PS: It’s “Pragulraj” not “Paulraj”
நீங்க சொல்வது போல சில வசதிகள் க்ரோம் ல் இல்லை ஆனால் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம். பல வசதிகளை இணைத்து வருகிறார்கள்.
நான் உங்களை ராகுல்ராஜ் என்று குறிப்பிட நினைத்து பின் பால்ராஜ் என்று கூறி விட்டேன், மன்னிக்க pragulraj