திரைப்படம் பற்றிய செய்திகள் என்றாலே பலருக்கு பிடிக்கும். குமுதம் விகடன் குங்குமம் போன்ற பத்திரிக்கைகளில் கூட பிரதானமாக இந்த செய்திகளே இடம் பிடிக்கும், மக்களும் இது பற்றி படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நானும் திரைச்செய்திகள் என்றால் அதிகம் விரும்பி படிப்பேன். தினமலர் வாரமலரில் வரும் எலீசா சொல்வதை கேளுங்க! கறுப்பு பூனை சொல்வதை கேளுங்க போன்றவற்றையும் அதில் அவர்கள் தரும் கிசுகிசு போன்றவை தான் அதிகம் பார்ப்பேன்.. விளங்கிடும் என்று சொல்றீங்களா! அப்படி எல்லாம் சொல்லப்படாது!
அந்த அளவிற்கு ஆர்வம்.
நான் இணையம் பற்றிய செய்திகள் என்று இடுகைகளை எழுதி வருவது என் தளத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரிந்து இருக்கும். இதற்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது, பலர் நன்றாக இருப்பதாக கூறி இருந்தார்கள். நான் எப்போதும் ஒரே மாதிரியான பதிவுகளை எழுதுவதில்லை அது எனக்கு பிடிப்பதுமில்லை. எல்லாமே கலந்து இருந்தால் தான் ஒரு ஜனரஞ்சகமாக இருக்கும் என்று தொடக்கத்தில் இருந்தே அரசியல் ஆன்மிகம் விளையாட்டு திரைப்படம் பயணம் விமர்சனம் செய்திகள் என்று எல்லாமே கலந்து எழுதி வருகிறேன். அந்த வகையில் சமீபமாக தொழில்நுட்ப பதிவுகள் அதிகம் (என்றால் என் ரேஞ்சுக்கு) எழுதி விட்டேன்.
சரி இணையம் பற்றிய செய்திகள் போல திரைத்துறை பற்றிய செய்திகளையும் அவ்வப்போது எழுதுவோம் என்று முடிவு செய்துள்ளேன் (வழக்கமான நகைச்சுவையுடன்). என்னுடைய திரைப்படம் பற்றிய இடுகைகளை படிக்கவும் ஒருசிலர் இருக்கிறார்கள் அவர்களுக்காக இது. இதைப்போல உலகச்செய்திகளையும் தரவேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது, ஆனால் நான் அடிக்கடி எழுதுவதில்லை, சேர்த்து வைத்து எழுதினால் அது பழைய செய்தியாகி விடும் [சென்ற வாரம் உலகம் மாதிரி சென்ற மாத உலகம் என்று வைத்துக்கொள்ளலாமா!
]. அதனால் பிறகு நேரம் இருக்கும் போது இதை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். இப்ப சினி மசாலா மிக்ஸ்க்கு போவோம்
முதலில் தலைவர்ல இருந்து துவங்குவோம்…
எந்திரன் படம் புலி வருது கதையா இருக்கு. ஷங்கர் எப்போதுமே தாமதமாக தான் படங்களை வெளியிடுவார். அதுவும் இந்தப்படம் அவரது கனவுப்படம் என்பதாலும் தலைவரும் குசேலனில் பல்ப் வாங்கியதாலும் இந்தப்படத்தை சிறப்பாக தரவேண்டும் என்று பார்த்து பார்த்து எடுத்துட்டு இருக்காங்க. ஷங்கர், எந்திரன் படம் கண்டிப்பாக இன்னும் சில மாதங்களில் இந்த வருடத்திற்குள் (இது தாங்க முக்கியம்) வரும் என்று உறுதிபடுத்தி இருக்கிறார். லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக வாங்கப்பா!
தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்த கௌபாய் படத்திற்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து வந்துள்ள படம் தான் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். பலரும் நன்றாக உள்ளதாக கூறி உள்ளனர் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. நான் இன்னும் பார்க்கவில்லை. இப்பெல்லாம் படம் வெளியாகி மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதினாலே ரொம்ப தாமதம் என்று கூறுகிறார்கள், முதல் நாளே லேப்டாப்போட போய் குத்த வைத்து உட்கார்ந்துக்கனும் போல இருக்கே! என்ன கொடுமை சார்.
நான் கடவுள் படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கி வரும் படம் அவன் இவன். முந்தைய படங்களைப்போல அல்லாமல் இதை விரைவாக எடுத்து விடுவேன் என்று கூறி பலரின் வயிற்றில் பீரை வார்த்தார். தற்போது வழக்கம் போல படப்பிடிப்பு ஆமை வேகத்தில் போய்க்கொண்டு இருக்கிறதாம், பல கதாநாயகிகளை மாற்றி விட்டாராம் திருப்தி இல்லை என்று. இந்தப்படத்தை ரொம்ப நம்பி இருக்கும் விஷால் தான் டரியல் ஆகி இருக்கிறார். நான் கடவுளையே அசால்ட்டாக தாண்டி விட்டதால் அனுபவஸ்தர் ஆர்யா எந்த சிணுங்கலும் இல்லாமல் இருக்கிறார்.
சுறா படத்தில் நாய் காணாமல் போனதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போவார் தமன்னா! ஆனால் நம்ம இளைய தளபதி பாய்ந்து காப்பாற்றி விடுவார் என்று வைங்க! சரி அதுக்கென்ன இப்ப என்று கேட்கறீங்களா! விஷயம் இருக்குங்க.. தமன்னா ஒரு பேட்டியில் நான் படத்தில் தான் அப்படி! நிஜத்தில் நான் ரொம்ப தைரியமான பொண்ணு என்று கூறி இருக்கிறார். அதோட எனக்கு வரும் படத்தை எல்லாம் என்ன கதாப்பாத்திரம் என்றெல்லாம் பார்த்து தேர்வு செய்யமுடியாது, அதே போல முடிந்த படத்தை பற்றி எல்லாம் யோசிக்கவே மாட்டேன் என்று கூறி உள்ளார். பொழைக்க தெரிந்தவங்க!
ரவுடிகளின் இருட்டு வாழ்க்கையை படமாக எடுத்து கலக்குபவரான இயக்குனர் ராம்கோபால் வர்மா அடுத்து வெளியிட இருக்கும் படம் ரத்த சரித்திரம் (பேரே ரணகளமா இருக்கே!) இது தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று மூன்று மொழிகளில் வருகிறது. இது ஆந்திராவில் உள்ள இரு ரவுடிகளின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாம், இதற்காக பலரை சந்தித்து ஆரய்ச்சி எல்லாம் செய்து இருக்கிறாராம். இதில் விவேக் ஓபராய் மற்றும் நம்ம சிங்கம் சூர்யா நடித்து இருக்கிறார்கள். இவங்க வெளியிட்ட ட்ரைலரை பார்த்தே பல நிருபர்கள் பீதி ஆகிட்டாங்களாம் அந்த அளவிற்கு ரத்தமாம் படத்தில். நான் ராம்கோபால் வர்மா படங்களின் ரசிகன் என்பதால் இந்தப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எந்திரன் மாதிரி பரபரப்பா இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் படம் மணிரத்தனம் இயக்கத்தில் வரும் ராவணன் (ஹிந்தில ராவண்). இதில் ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன், விக்ரம், ப்ரியாமணி, பிருத்விராஜ் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு வித்யாசமான முறையில் மார்க்கெட்டிங் செய்து விளம்பரப்படுத்த மணிரத்னம் முடிவு செய்து இருக்கிறார். படத்தில் நடித்தவர்களை எல்லாம் ரசிகர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்யப்போகிறாராம். சன் டிவி டெக்னிக்கை பின்பற்றுகிறார் போல இருக்கே! அவங்க மாதிரி ட்ரைலரை போட்டு கொல்லாமல் இருந்தால் சரி
ஜூன் மாதம் வருவதாக இருந்த சிங்கம் படத்தை சன் பிக்சர்ஸ் இந்த மாதமே வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஜூன் மாதம் பள்ளி துவங்கினால் வசூல் பாதிக்கும் என்று காரணம் கூறி இருக்கிறார்கள். கணக்குபிள்ளை சன் டிவி இது கூடவா தெரியாமல் முன்னர் தேதி அறிவித்து இருப்பார்கள் காரணம் உண்மையில் சுறா எதிர்பார்த்த அளவு போகாததே என்று கூறுகிறார்கள். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நெருக்குதலை சமாளிக்க இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்காம். இளையதளபதி எல்லோரும் எப்படி கிண்டல் செய்தாலும் அசராம ஒரே மாதிரியே படம் நடிக்கிறாரே அது எப்பூடி!
தல தனது 50 வது படம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடப்போகிறாராம். அசல் சரியாகப் போகாததால் அவரது ரசிகர்கள் இந்தப்படத்தை சிறப்பாக தரவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அஜித் சமீபத்தில் கார் பந்தயத்தில் விபத்தை சந்தித்ததால் மருத்துவர்கள் அவரை இனி ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்கள் அதில்லாமல் ஏற்கனவே அவருக்கு பல பிரச்சனைகள். அஜித்தின் அடுத்த படத்தை இதுவரை கவுதம் மேனன் இயக்கலாம் என்று கூறி வருகின்றனர் அறிவிப்பு வந்தால் தான் தெரியும். அஜித் ஒரு மெகா ஹிட் கொடுக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்கள் விருப்பம். தல நீங்க ஃபீனிக்ஸ் பறவை தான் அதற்காக அதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டுமா! ஒரு ஹிட் படத்தை கொடுத்து நொந்து போய் இருக்கும் ரசிகர்களை குளிர வைங்க.
தற்போதைய திரை மற்றும் அரசியல் டாக் குஷ்பூ தான். கற்பு பிரச்சனையில் மீண்டு வந்ததோடு அதிரடியாக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். மும்பையில் இருந்த போதே காங்கிரசில் எனக்கு விருப்பம் என் குடும்பத்தினர் கூட காங்கிரசார் தான் எனக்கு பல தலைவர்களை தெரியும்! என்னுடைய படுக்கை அறையில் ராஜீவ் படங்களை தான் வைத்து இருந்தேன்!! (ரொம்ப முக்கியம்) என்று கூறியவுடன் காங்கிரஸ்காரங்க உடனே எங்க கட்சிக்கு வாங்கோ! வாங்கோ!! என்று அழைத்துக்கொண்டுள்ளனர். எச்சுமி குஷ்பூ! நீங்க தமிழ் குடிதாங்கி ராமதாசு ஐயா மற்றும் சிறுத்தை திருமா கட்சியில் இணைவீர்களா!
தலைவி மாளவிகா விரைவில் புதுப்பொலிவுடன் தமிழ் திரையுலகை கலக்க வரப்போகிறாராம். இதனால் அவரை வைத்து படமெடுக்க பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் மாளவிகா வீட்டு வாசலை விட்டு நகரவே மாட்டேன் என்று அங்கேயே உட்கார்ந்து இருக்கிறார்களாம். இதனால் மாளவிகா என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டு இருக்கிறாராம். என்னடா இது! இது பற்றி எங்கேயுமே படிக்கவில்லையே என்று யோசிக்கறீங்களா! ஹி ஹி ஹி மாளவிகாவை ஒரு பய கண்டுகொள்ள(மதிக்க)வில்லை என்பதால் அவருக்கு இருக்கும் ஒரே ஒரு ரசிகனான நானே உருவாக்கிய!! செய்தி இது! அதனால யாரும் டென்ஷன் ஆவாதீங்கோ
சரி! நம்ம சினி மசாலா மிக்ஸ் எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க! தொடரலாமா இல்ல வேண்டாமா என்று! நீங்க வேண்டாம் என்று கூறினாலும் நாங்க தொடருவோம்ல… அப்புறம் எதுக்குயா கேட்டே! என்று நீங்க கேட்க நினைப்பது புரிகிறது… ஹி ஹி ஒரு விளம்பரம்ம்ம்மம்ம்ம்ம்
No related posts.


{ 17 comments… read them below or add one }
நிச்சயமா தொடரலாம் தல நல்ல தான் இருக்கு இந்த பதிவு.
//அடுத்த இடுகை உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்////
பாப்கார்ன் நல்ல சுவை !!!!தொடருங்கள் ..
///சன் டிவி டெக்னிக்கை பின்பற்றுகிறார் போல இருக்கே! அவங்க மாதிரி ட்ரைலரை போட்டு கொல்லாமல் இருந்தால் சரி//
நினைச்சு பார்கவே பயமாஇருகுது
))))
///மாளவிகாவை ஒரு பய கண்டுகொள்ள(மதிக்க)வில்லை என்பதால் அவருக்கு இருக்கும் ஒரே ஒரு ரசிகனான நானே///
அப்போ நாங்களெல்லாம் ,!!!!:)
எஸ் ப்ளீஸ்
//சன் பிக்சர்ஸ் மாளவிகா வீட்டு வாசலை விட்டு நகரவே மாட்டேன் என்று அங்கேயே உட்கார்ந்து இருக்கிறார்களாம்.//
அப்படியே நம்ம ப்ரியாமணி, ரீமா சென், சிநேஹா பற்றியும் ஒரு paragraph வெளியிட்டால் உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும்…
கலக்குறிங்க. அப்படியே செய்திக்கு தொடர்புடைய நடிகர்/நடிகைகளோட போட்டோவ போட்டிங்கன்னா இன்னும் நல்லா இருக்கும். ஹி ஹி!
///மாளவிகாவை ஒரு பய கண்டுகொள்ள(மதிக்க)வில்லை என்பதால் அவருக்கு இருக்கும் ஒரே ஒரு ரசிகனான நானே///
நான் மாளவிகா ரசிகர் மன்றத்தின்(அந்தியூர் கிளை) தலைவர். இப்படி எல்லாம் பொசுக்குனு கழட்டிவிட கூடாது.
அசத்தல் கிரி நல்லா இருக்கு இதை தொடர்ந்து எழுதுங்க
மாளவிகா பற்றி எழுதியிருந்தீங்க ரசிச்சு படிச்சேன் சிரிச்சேன்
வெற்றிக்கொடி கட்டு படத்தில் வரும் மாளவிகா எனக்கு பிடித்தவர் தான்
சுறா படத்தில் நாய் காணாமல் போனதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போவார் தமன்னா! ஆனால் நம்ம இளைய தளபதி பாய்ந்து காப்பாற்றி விடுவார் என்று வைங்க!
அதுக்கென்ன இப்ப என்று கேட்கறீங்களா!…
அந்த நாய் மேலே இருந்த அக்கறை விஜய் ய்க்கு நம்ம மேல இல்ல பார்த்தீங்களா..
ராவணன் – பாடல்கள் கேடீர்களா?
Popcorn image – அசத்தல்
எந்திரன் படம் – ரொம்ப நல்ல படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு — நம்ம ஏக்கம் சங்கருக்கு புரிஞ்ச சரி.
நீங்க ஏன் மாளவிகாவுக்கு ரசிகர இருக்கீங்கன்னு எனக்க்கு தெரியுமே
…
//Arun
நிச்சயமா தொடரலாம் தல நல்ல தான் இருக்கு இந்த பதிவு.//
நல்லா இருக்கா! இல்ல நல்லாத்தான் இருக்கா!
=========================================================
//Shankar
அப்போ நாங்களெல்லாம் ,!!!!://
ஓகே அப்ப சங்கத்துக்கு ஆளு இருக்கு
=========================================================
//Logan
அப்படியே நம்ம ப்ரியாமணி, ரீமா சென், சிநேஹா பற்றியும் ஒரு paragraph வெளியிட்டால் உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும்…//
கண்டிப்பா எழுதிடுவோம்
=========================================================
//Muthukumar
கலக்குறிங்க. அப்படியே செய்திக்கு தொடர்புடைய நடிகர்/நடிகைகளோட போட்டோவ போட்டிங்கன்னா இன்னும் நல்லா இருக்கும். ஹி ஹி!//
நல்லாத்தான் இருக்கும்.. படங்களே பாதி இடத்தை அடைத்துட்டு இருக்கும்.. முயற்சி செய்கிறேன்.
=========================================================
//Kumar
///மாளவிகாவை ஒரு பய கண்டுகொள்ள(மதிக்க)வில்லை என்பதால் அவருக்கு இருக்கும் ஒரே ஒரு ரசிகனான நானே///
நான் மாளவிகா ரசிகர் மன்றத்தின்(அந்தியூர் கிளை) தலைவர். இப்படி எல்லாம் பொசுக்குனு கழட்டிவிட கூடாது.//
ஆஹா! இங்க பார்ரா .. நம்ம தலைவிக்கு ஆதரவு குவியுது
நான் உங்க ஊர் பக்கத்துக்கு ஊர் கோபி தாங்கோ!
=========================================================
//r.v.saravanan
வெற்றிக்கொடி கட்டு படத்தில் வரும் மாளவிகா எனக்கு பிடித்தவர் தான்//
அப்ப மற்றதெல்லாம் சரி இல்லையா!
திருட்டுப்பயலே படத்துல கிளுகிளுப்பா இருப்பாங்க!
=========================================================
//SaDhA
//அந்த நாய் மேலே இருந்த அக்கறை விஜய் ய்க்கு நம்ம மேல இல்ல பார்த்தீங்களா..//
//ராவணன் – பாடல்கள் கேடீர்களா?//
கேட்டேன் ஓகே வா இருக்கு. இன்னும் கொஞ்சம் முறை கேட்கணும் என்று நினைக்கிறேன்
//எந்திரன் படம் – ரொம்ப நல்ல படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு — நம்ம ஏக்கம் சங்கருக்கு புரிஞ்ச சரி.//
எனக்கு அது தான் வயிற்றை கலக்குது. ஆர்வக்கோளாருல சொதப்பாம இருந்தா சரி!
=========================================================
//Tamil May 12, 2010 at 11:31 PM [edit]
நீங்க ஏன் மாளவிகாவுக்கு ரசிகர இருக்கீங்கன்னு எனக்க்கு தெரியுமே …//
ஆஹா! இதென்னடா வம்பா இருக்கு! தமிழ் அதெல்லாம் ரகசியம்! எங்களுக்கு மட்டும் தான் தெரியும்
kalakkurunga giri
சினிமா செய்தியும் நல்லா தான் இருக்கு. தொடர்ந்து எழுதவும்.
//தல நீங்க ஃபீனிக்ஸ் பறவை தான் அதற்காக அதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டுமா! //
)))
நம்ம கேப்டன பற்றி ஏதாவது இரண்டு வார்த்தை எழுதிருக்கலாம்.
இருந்தாலும் பாப்-கார்ன் செம காரம்.
விஜய் வாசுகி சதீஷ் கண்ணன் வருகைக்கு நன்றி
@சதீஷ் கண்ணன் – கேப்டனை பற்றி அரசியல் பதிவுல தான் எழுத முடியும் போல இருக்கு.. திரைத்துறையில அவர் சத்தமே காணோம்!
கண்டிப்பா தொடருங்க கிரி…
வாழ்க உங்கள் கலை பணி…..
//சென்ற வாரம் உலகம் மாதிரி சென்ற மாத உலகம் என்று வைத்துக்கொள்ளலாமா! //
.
சூப்பர் கிரி கலக்குங்க.
ஆனா விளம்பர இடைவேளை விடாம இருந்தா சரிதான்
@ பாலாஜி உங்கள் உள்குத்திற்கு நன்றி
@ சிங்கக்குட்டி